Monday, November 26, 2012

விவகாரங்களும் விகாரங்களும்

போலி மனிதாபிமான முற்போக்கு எழுத்தாளனை ஜேஜே எப்படி டாராக வகுந்து காட்டுகிறான் என்று பாருங்கள்

“ஆனால் முல்லைக்கல் மாதவன் நாயர் தன் அனுபவங்களைச் சார்ந்து எழுதும்போது, ஒரு பகுதியைப்பற்றிச் சொல்வான். மற்றொரு பகுதியைச் சொல்ல மாட்டான். சொல்லாமல் விடப்படும் பகுதிகள், உண்மையைத் தொகுக்க முன்னும் கலை மனத்தின் ஆவேசத்தில் கழிந்துபோனவை என்றால் குறைசொல்ல எதுவுமில்லை. கலை உண்மையை ஸ்பரிசிக்க, கொள்ள வேண்டியவற்றைக் கொள்ளும். தள்ள வேண்டியவற்றைத் தள்ளும். ஆனால் அவன் சொல்லாமல் விடும் பகுதி தந்திரபூர்வமானது. வாசகத் திருப்திக்குப் போடும் தூண்டில் அது.

இப்படிச் செய்கிறோம் என்பது முல்லைக்கல்லுக்கும் தெரியும். அவன் திருவனந்தபுரம் பஸ் நிலையத்தில் டிரங்குப்பெட்டியைக் கூலிச்சிறுவன் தலையில் தூக்கி விட்டுவிட்டு, மேம்பாலம் தாண்டி, மணக்காட்டுக்குப் போகும்போது, கூட்டத்தில் நுழைந்து வேகமாகச் செல்லும் கூலிப்பையனைப் பின்தொடர்ந்து தன் பெரிய தொந்தியைத் தூக்கிக்கொண்டு பரக்கப் பரக்கப் பாய்வான். கூலிச்சிறுவணிடமிருந்து தன் பார்வையை அவனால் ஒரு கணம்கூட அகற்ற முடியாது. தாண்டி வரும் கூட்டம் அந்தச் சிறுவனைச் சில நொடிகள் மறைத்துவிட்டால் அவன் மனம் பதறும். மீண்டும் அவன் முதுகின் ஒரு பக்கமோ முண்டாசு விளிம்போ தெரியும்போது அவன் மனம் நிம்மதியுறும். மணக்காடிலிருக்கும் அவனுடைய வைப்பாட்டி வீட்டுக்கு அந்தச் சிறுவன் சென்று, வாசல் படியில் டிரங்குப் பெட்டியை வைத்துவிட்டு, இவன் வந்து சேரும் பொருட்டு, பூவரச மரத்தைப் பார்த்துக்கொண்டு நிற்பான். அவன் முகம் அப்புராணியாக இருக்கும். ‘இவனையா இப்படிச் சந்தேகப்பட்டோம்’ என்று எண்ணிக் குற்றவுணர்வு கொள்ளும்படியோ, வருந்தும்படியோ இருக்கும். ஆனால் முல்லைக்கல் மாதவன் நாயர் இவ்விதமான உணர்வுகளுக்கு ஆளானதே இல்லை. இந்த அனுபவத்தை அடிப்படையாக வைத்து அவன் கதை எழுதும்போது, பின் தொடர்ந்து ஓடிய தொந்தி, கதையில் பணக்காரனாகி விடுவான். மிகவும் அப்புராணியாகத் தெரிந்த கூலிச்சிறுவன், நிஜவாழ்வில், இவன் நியாயமாகக் கொடுத்த கூலியைக் கூட ஏற்க மறுத்து, இவனைக் கீழ்த்தரமாகத் திட்டிவிட்டு - இவனது திருவனந்தபுர யாத்திரையின் நோக்கத்தை ஒற்றை வார்த்தையில் கூறும் வசைதான் அது - சென்றிருக்க, கதையில் பணக்காரன் கூலியைக் குறைத்துக் கொடுத்ததற்குச் சிறுவன் அழுதுகொண்டு போனதாக முடிப்பான்.”

 - ஜேஜே சில குறிப்புகள் (பக்கம் 80-81)

பின் நவீனத்துவம் பேசும் தற்காலத்து முல்லைக்கல் மாதவன் நாயர்தான் சாரு நிவேதிதா எப்படி என்று பார்ப்பதுதான் இந்த கட்டுரை.

<அதாவது, கடந்த 15 ஆண்டுகளாக நாகார்ச்சுனன் என்ற மொழி விஞ்ஞானி லண்டனில் ஒரு பெப்ஸி உமாவாக வாழ்ந்திருக்கிறார். இதே நிலையில் நான் இருந்திருந்தால் இந்த வீழ்ச்சியை - என்னுடைய அவலத்தை - ஒரு நாவலாக மாற்றியிருப்பேன்.> 

PDF பக்கம் 9/16 மம்மி ரிடர்ன்ஸ் 1சாரு நிவேதிதா.

நிஜத்தில் தான் வாழும் இழிந்த வாழ்க்கையை அடுத்தவனின் இழிவாக நாவலில் சித்தரித்து தன்னை வெளிப்படையாக செக்ஸ் பேசும்   புனிதனாக்கிக் கொள்வதுதான் சாரு கண்டடைந்த பின் நவீனத்துவ எழுத்து. மொள்ளமாரித்தனத்துக்கு இலக்கிய முலாம். எக்ஸைல் அதன் சமீபத்திய எடுத்துக்காட்டு.

போலி முற்போக்கு இலக்கியத்தை 80களின் வாசகர்கள் சுலபமாகத் தாண்டிவந்தனர். இன்றைய இணைய வாசகர்களுக்கு உண்மையான சவாலாய் இருப்பது, போலி எழுத்தைத் தாண்டி வருவதுதான்.

நிஜ வாழ்வில் சிறு பெண்ணுடன் சாரு செய்த அபாச சாட்டை இணையம் அப்போது எப்படிப் பார்த்தது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த கூகுள் பஸ். ஆரம்பத்தில் இருந்த ஆவேசக் கொந்தளிப்பு, இதைத் தான் செய்யவே இல்லை என்று, சாரு மறுப்பு வெளியிட்டதும் இறுதியில் எப்படி கையறு நிலையாய் போய் முடிகிறது. 

சாருவின் பிரதான அடிப்பொடிகளே அவருக்கு எதிராய் திரும்பி கோஷ்டிகானமாய் கண்டித்த சமயம் அது. 

சாரு கோடைகாலத்து நடுப்பகல் நாய்தான், ஆனால் அந்த நாய்க்குப் பாவாடை சுற்றிப் பல்லிளிக்கவைக்க பொறியில் வைக்கப்பட்டு இருந்தது ஆணா பெண்ணா என்று அப்போதே ஆணித்தரமாகக் கேட்டேன். சாருவின் ஆபாசத்தை ஆதரித்து அல்ல, நடந்தது என்ன என்பதை நியாயமாகப் பார்க்க வேண்டும் என்பதுதான் என் நிலை. சாரு செய்தது ஆபாசம் இல்லை என்று நான் எங்குமே சொல்லவில்லை. 

வாழ்வின் கொடூர முகத்தைக் காட்டுவதான பம்மாத்தில், ஆழ்மன வக்கிரத்தை எழுதி அரிப்பைத் தீர்த்துக்கொள்ளும் புத்திசாலித்தனமான ஆன்மீக ஆபாசம் ஜெயமோகன் போல எல்லோருக்கும் எளிய விஷயமன்று. மூடரான சாருவுக்கு அடுத்த ஜென்மத்திலும் அது சாத்தியமா என்பது சந்தேகமே. இருவருமே சர்வசாதாரணமாய் தத்தமது வக்கிரங்களிலிருந்து தப்பித்து வருவதற்கு, இருவரும் கட்டிக்கொண்டிருக்கும் ஒற்றைக்  கிழிசல் துணிதான் இலக்கியம் என்கிற பெயரில் உதவுகிறது. 


பெரியார் என்கிற ஆளுமையை ’வசைபாடி’ என்கிற ஒற்றைச் சொல்லாய்க் குறுக்கி பக்கம் பக்கமாய் வசைபாடிவிட்டு அவரைப் பார்த்தால் காலில் சாஷ்ட்டாங்கமாய் விழுவேன் அப்புறம் எந்திரிச்சு விவாதிப்பேன் என்பதைவிட ஆபாசம் வேறு ஏதாவது இருக்க முடியுமா? எஸ்விஆரை, அவர் சற்றே சறுக்கியதும் என் குழந்தையை இழுத்தார் குடும்பத்தை இழுத்தார் என்று தூற்றிவிட்டு ஆனாலும் நான் அவரை சந்திக்க நேர்ந்தால் கையைப் பிடித்துக் கொண்டு ஏன் இப்படிக் கீழிறங்கிவிட்டீர்கள் என்று சொல்வேன் என்று தன்னைப் பெருந்தன்மையாளனாய் முகத்துக்கு வேஷம் பூசிக்கொண்டு குண்டி தெரிய இணையத்தில் நிற்பதை விட பெரிய ஆபாசம் எது? இதைப் பார்த்து உலகமே கண்ணீர் உகுப்பதாய் கடிதக் குப்பைகளை மாலையாய் அணிந்துகொள்வதைவிட ஆபாசம் எது? சுண்ணி சூத்து கூதி புண்டை என்று எழுதுவது மட்டுமே ஆபாசம் என்றால், சொல்பவனைப் பார்த்து ஆண்டவனே அடிவயிற்றிலிருந்து சபிப்பான். ஆனால் இணைய அறிவுக் கபோதிகளுக்கு ஜெயமோகன் செய்கிற இந்த ஆபாச மெலோட்ராமாதான் ஆன்மீகத்தின் உச்சம்.

நமது நாட்டில் பெண் சம்பந்தப்பட்டால் மட்டுமே ஆபாசம். இது பெண்ணே ஆபாசம் என்கிற ஆழ் மன ஆபாசத்திலிருது பிறக்கிறதா என்று சற்று சிந்தித்துப் பாருங்கள் என்றால்,விளக்குமாற்றை எடுத்துக்கொண்டு பெருங்கூட்டம் ஓடிவரும். கூட்டத்தில் ஓடிவரும் எத்துனை ஆண்கள் சைடில் உரச ஒரு வாய்ப்பு என ஓடிவருகிறான் என்பது கடவுளுக்கே வெளிச்சம்.

எத்துனைபேர் நட்ட குழி எத்துனைபேர் தொட்டமுலை 
எத்துனைபேர் பற்றி இழுத்த இதழ் - நித்தநித்தம்
பொய்யடா பேசும் இப்புவி மாதரைவிட்டு 
உய்யடா உய்யடா உய்

நட்டதும் தொட்டதும் பற்றி இழுத்ததும் என்று அத்தனையும் பண்ணிவிட்டு அவளைப் பொய் பேசுபவள் என்று இறுதி முடிவாக வந்தடைந்த ஞானம் அல்லவா இது. இது ஒரு கோடி என்றால் இதற்கு நேரெதிர் கோடி, பெண்ணை தெய்வீகமாய்ப் பாராட்டி அம்மா தேவி பராசக்தி படுக்க வாடி என்றழைக்கும் பஜனை கோஷ்ட்டி.


பெண்களை சரிசமமாக நடத்தி அவர்களுடன் சரிக்கு சரியாய் சண்டைபோடுவது அதையும் பொதுவெளியில் செய்வதென்பது கனவான்களின் காரியமில்லை.

மிகப்பல ஆண்களுக்கு பெண்ணியம் பேசுவது, செலவில்லாமல் ஃபிகர் மடிக்க சிறந்த வழி.  சாதாரண மனிதன், தொழில்முறையாளர்களிடம் எந்த தயக்கமுமின்றி சென்றுவந்துவிடுவான். இந்த இலக்கிய சிந்தனையாளக் கூட்டம் இருக்கிறதே இதில் பலரது பவுசைப் பற்றி பட்டியலிட்டு கொடுக்க முடியும். ஆனால் அவதூறு வழக்குகளில் சிக்கி, மிச்சமிருக்கும் ஆயுசு மொத்தத்தையும் சிறையிலேயே கழிக்க வேண்டிவரும். எனவே இதோடு மூடிக்கொள்வதே உத்தமம்.  பெண்ணியம் பேசும் கனவான்கள் வரிசையில் பெருங்கூட்டம் நாக்குதொங்க நிற்பது நம் கண்களுக்கு மட்டும் தெரிவதுதான் நம் குற்றம். 

எல்லோருமே பயனாளிகள் என்பதால், எல்லோருக்கும் தெரிந்த ஒன்றை எவருமே பேசிக்கொள்ளாமல் செய்துகொண்டு இருப்பதற்குப் பெயர்தான் பொதுவெளி நாகரிகம். 

பொதுவெளி அறச்சீற்றம் எதைவிடவும் ஆபத்தானது. அதுவும் ஆபாசம் என்று வந்துவிட்டால் அதன் ஆவேசத்துக்கு எல்லையே இல்லை. அவன் ஆபாசமாக பேசினான் எழுதினான் ஆகவே பொறுக்கி. பொறுக்கி என ஒருவனுக்கு முத்திரை குத்திவிட்டால் எலோரும் சேர்ந்து அவனைப் பொறுக்கித்தனமாகத் தாக்குவதற்குப் பெயர் நம் நாட்டில் முற்போக்கு. 

ஈராக் பற்றி ம.க.இ.க கும்பல் போராட்டம் நடத்திக்கொண்டிருந்ததால் அவர்களின் அனுமதியின்றி எவரும் ஈராக் பற்றி கவிதை எழுதலாகாது என்பது அறிவிக்கப்படாமல் அமலுக்கு வந்திருந்த நேரம். இதை அறியாமல், எங்கோ ஒரு சாக்கடைக்குப் பக்கத்தில் விக்ரமாதிதியனும் சங்கரராம சுப்ரமணியமும் சரக்கடித்துவிட்டு ஈராக் பற்றி கூட்டுக்கவிதை எழுதிவிட்டர்கள். அதற்காக, புதிதாய் திருமணமானவன் என்றுகூடப் பார்க்காமல் சங்கரராம சுப்ரமணியனின் வாடகை வீட்டில் அதிகாலையில் புகுந்து அக்கம்பக்கத்தோரிடம் கவிதையைக் காட்டி இப்படியெல்லாம் கெட்ட வார்த்தையில் எழுதினால் இலக்கியமா எனக்கேட்டு வீட்டை காலி செய்யவைத்து, மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கியது அராஜக  ம.க.இ.க.  இன்றைய வினவின் அன்றைய பொதுவெளி முகம்.

இவர்களுக்குப் புகார் இருக்கிறது என்றால் தெருவில் போய் கும்பலாய் நின்றுகொண்டு சாலையை மறித்துப் போராடுவார்கள். கூட்டத்தைக் கலைக்க போலீஸ் லத்தியைத் தூக்கினால் அராஜகம். மனித உரிமை பறிப்பு.

இதே மயிராண்டிகள் தனிமனிதன் வீட்டுக்குள் அதிகாலையில் தபதபவெனப் புகுந்து புதுமணப்பெண்ணைக் கலவரப்படுத்தினால் பாட்டாளிவர்க்க ஜனநாயகம். எட்டு பேப்பரை மடக்கிப் பின்னடித்த ஏதோ ஒரு பத்திரிகையில் வெளியான கவிதைக்கு இத்துனை ஆர்ப்பாட்டம்.

இப்பேர்க்கொத்த நக்ஸலைட்டுப் போராளிகளின் இன்றைய இணைய அவதாரமான வினவு, சாருவின் சாட் விவகாரத்தில் எப்படி நடந்துகொண்டது என்று பார்ப்போம்.


சாரு இருப்பதும் வாடகை வீடுதான் அவர் செய்தது கவிதை ஆபாசம் அல்ல, இணையத்தில் பொதுவெளியில் நிகழ்த்தப்பட்ட நிஜ ஆபாசம். ஆனால் இதற்கு இந்த பாஸிஸ்டு நக்ஸலைட்டுகள் விட்ட ஆக்‌ஷன் புருடா என்ன தெரியுமா?

<புதிதாக அறிமுகமாக ஒரு இளம் வாசகிக்கு சாரு செய்திருக்கும் பொறுக்கித்தனத்திற்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? சாருவோ அவரது கூஜாக்களோ கூறுவார்களா?

காத்திருக்கிறோம். இல்லையேல் முடிவு செய்வோம்.>


சங்கரராம சுப்ரமணியத்திடமும் பல வருடங்களாய்ப் பழகிய விக்ரமாதிதியன் நம்பிராஜனிடமும்  மனிதத்தின் பழக்க ஈரம்கூட அற்றுப்போய் கவிதைக்கு மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கி அவமானப்படுத்திய ம.க.இ.க கமிசார் வீராச்சாமியோ மருதையனோ சாரு சாட் விவகாரத்தில் ஒரு புண்ணாக்கு முடிவையும் எடுக்கவில்லை. ம.க.இ.க வினவு கும்பல் சாரு வசிக்கும் மைலாப்பூர் ஏரியாவுக்கே செல்லவில்லை என்பதுதான் இணைய நக்ஸலைட்டுகளின் வீராவேஷம். 

இதற்குக் காரணம் என்ன? சாருவின் பின்னணி. சாருவுக்கு பின்னால் தினமலர் ரமேஷ் இருக்கிறார். நல்லதோ கெட்டதோ, பரவலாக அறியப்பட்ட எழுத்தாளர். அவரைத்தொட்டால் பத்திரிகைகள் ஒன்றுகூடி விவகாரம் பெரிதாகும். எந்த விவகாரத்தையும் சுமுகமாகத் தீர்க்காமல், பிரச்சனையைப் பெரிதாக்கி, ரெண்டு மண்டையாவது உடைந்து, களப்பலி கொடுத்தால்தான் கட்சி விரிவடையும் என்பதுதான் தாரக மந்திரம். ஆனால் சாரு விவகாரம் பெரிதாவதால் சாக்கடை நாத்தத்தைப் பரப்பியதுதான் பெரிய சாதனையாக இருக்கும். ஆதாரம் கேட்டு கமிசனர் ஆபீஸ் போனாலும் தங்களது வண்டவாள செட்டப் தண்டவாளத்தில் ஏறிவிடும் என்கிற கம்யூனிச கணக்கில்தான் புருடா வீர கோஷம் போட்டதோடு முடிந்துவிட்டது. 

ஆளைத்தூக்கி உள்ளே வைக்க ஆதாரமெல்லாம் அவசியமில்லை ஆள் தெரிந்திருந்தாலே போதும்என்பது சின்மயி விவகாரத்திற்குப் பிறகுதான் வெட்டவெளிச்சமாகி விட்டது.

சங்கரராம சுப்ரமணியனையும் விக்ரமாதித்தியனையும் அடித்தால் கேட்க நாதியில்லை எனவே நம் வீரத்தைக் காட்டலாம். இந்தக் காமெடியர்கள்தான் இந்திய இறையாண்மையைத் தூக்கியெரிந்து நக்ஸல்பாரிய மார்க்ஸிய லெனிய ஈயக் கம்பெனி நடத்தப்போகிற முதலாளிகள்.

நட்பரசியல் பதிவரசியல் என்று ஒரணா உழக்குக்குள் விண்ணுக்கும் மண்ணுக்கும் சாடிய வினவு, சின்மயி விவகாரத்தில் இன்னமும் வாய் திறக்காதிருப்பதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? சாருவுக்கு தன்னை சிக்க வைத்து அம்பலப்படுத்தியவர் என்று ராஜன் லீக்ஸ் மீது காண்டு என்றால், சாருவை அம்பலப்படுத்த உதவியவர் ராஜன் லீக்ஸ் என்கிற என்கிற வாஞ்சைதான் வினவுக்கு. 

பெண்ணிய வீர வீராங்கணைகளான ஷோபா சக்திக்கும் லீனா மணிமேகலைக்கும் அப்படி என்ன சின்மயி மேல் பயங்கர அபிமானம்? அகப்பட்டிருக்கும் ராஜன், ஷோபாவை ஆபாசமாகப் பேசிய, அவர்களுக்கு ஆகாத தமிழச்சியின் ஆள் அல்லவா? லீனாவுக்கோ தொடை மசுரு புனித கவிதைக்காக வின்வோடு ஜென்மப்பகை.

பெண்கள் பற்றி ஒரு சின்ன கமெண்ட் போட்டாலும் பறந்தோடி வரும் லீனா மணிமேகலை சந்தனமுல்லைக்கு அநீதி இழைக்கப்பட்டபோது என்ன செய்தார்? 

லீனா - வினவு பிரச்சனை எப்போது? 


சந்தனமுல்லை - நர்சிம் விவகாரம் எப்போது?


பாதிக்கப்பட்ட சந்தனமுல்லைக்கு ஆதரவாய் வினவு கொடிதூக்கியபின் லீனா எப்படி பெண்ணியப் பதாகை ஏந்தி இதைக் கண்டிக்க முடியும்? அதனால்தான் லீனா இது விஷயமாய் எதுவும் பேசிய வரலாற்றை கூகுள் தெரிவிக்க மறுக்கிறது. 

பெண்ணாகவே இருந்தால்தான் என்ன? அவர் கொடுமையாகத் தாக்கப்பட்டாலதான் என்ன? அவர் நமது நட்பு வட்டமா எதிரி வட்டமா? என்பதைப் பார்த்தல்லவா அவர் ஹீரோயினா வில்லியா என்று முடிவுசெய்ய முடியும். அதற்குப் பிறகுதானே நமது கண்டணத்தைத் தெரிவிக்க முடியும். 

எல்லா அறச்சீற்றங்களும் மேற்பார்வைக்குதான் தீவிர பொங்கல்கள். உள்ளே பார்த்தால் ஊசிப்போன உப்புமாக்கள்தான். 

லீனா x வினவு விவகாரம்

சந்தனமுல்லை x நர்சிம் விவகாரம்

தமிழச்சி x ஷோபா சக்தி விவகாரம்

சாரு x ராஜன் விவகாரம்

ராஜன் x சின்மயி விவகாரம்

இவையனைத்தும் பின்னணிகள்

இப்போது வருபவை எல்லாம் போர்க்கள கூட்டணிகள்

சந்தனமுல்லை + வினவு எனவே லீனா - சந்தனமுல்லை

ராஜன் + வினவு எனவே லீனா + சின்மயி

ராஜன் + தமிழச்சி எனவே ஷோபா சக்தி + சின்மயி

ராஜன் + வினவு  எனவே வினவு - சின்மயி

ராஜன் - சாரு எனவே சாரு + சின்மயி

அறிவுஜீவிகள் சிந்தனையாளர்களெல்லாம் ஒன்றை கண்டிக்கிறார்கள் அல்லது பாராட்டுகிறார்கள் என்றால் கண்ணைமூடிக்கொண்டு ஒருபோதும் ஆமாம் சாமி போடாதீர்கள். உண்மையைத் திறந்த மனம்கொண்டு பாருங்கள். அதற்குப் பின்னால் ஆயிரம் கணக்கு வழக்குகள் இருப்பது தெரியவரும். 

இவர்களெல்லாம் பரவலான மக்களிடம் ஒருக்காலும் போகாதிருப்பது மக்களுக்கு நல்லது. பஞ்சரான சமூகம் ஏதோ ஒடுக்கான வெறும் வீலிலாவது சுபிட்சமாக நகர்ந்துகொண்டு இருக்கிறது. இந்த கோஷ்டிகள் உலகை உய்விக்கத் தொடங்கினால் வண்டி ஒரேயடியாய் உட்கார்ந்துவிடும். அவ்வளவு அறம் கொன்ற ஆளுமைகள் ஒவ்வொன்றும்.

ஆனால் அம்புட்டுகிட்டாருடா தம்புட்டுக்கா பட்டர் என சாட்டில் வசமாக சிக்கிக்கொண்டதும் சாரு என்ன செய்கிறார்? தமது வாசகர்வட்ட விசிறி மட்டைகளை விட்டு அந்தப் பெண்ணுக்கு ஆபாச அஷ்டோத்திர சதநாமாவளி அர்ச்சனை நடத்தினார்.

சின்மயி அவர்களுக்கும் அவரது தாயார் அவர்களுக்கும் வீட்டில் பேசிக்கொள்வதைத் தவிர  பெரிதாகத் தமிழ் தெரியவில்லை, தமிழ்ச் சூழலும் புரியவில்லை, என்பதுதான் தமிழ் இணையத்தின் பெரிய சோகம். எந்தப் பெண் பாதிக்கப்பட்டாலும் எதிர்த்துப்போராட வேண்டும் என்று மைக் கிடைக்கும் இடமெல்லாம், எல்லாம் தெரிந்தவராய் உரக்கக் குரல் கொடுக்கும் சின்மயி ஸ்ரீபாதா அவர்கள், எதுவும் தெரியாமல் அப்புராணியாக, தனக்கு ஆதரவாய் இந்த ருத்திராட்சரப் பூனை மெல்ல மியாவ் என்றது என்கிற ஒரே காரணத்திற்காக, மிருக சப்போர்ட்டரான அவர், அதை Mr Charu என்று மரியாதையாக விளித்து பாராட்டுகிறார் பாவம்.

ஆனால் சாரு, தமக்கு ஆதரவாகப் பேசியதற்கு அடிப்படைக் காரணமே தமது புகாரின்பேரில் ஜெயிலுக்குப் போனவர்களில் ஒருவர் ராஜன் லீக்ஸ் என்பதுதான் என்கிற எளிய உண்மை சின்மயிக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. அப்படியே தெரிந்திருந்தாலும் அதனாலென்ன என்கிற அறிவுஜீவிகளின் அற வன்மம் அவரையும் பீடித்துவிட்டதோ என்னமோ யார் கண்டார்.

சாரு மாபெரும் பச்சோந்தி. செஞ்சோற்றுக்கடன் என்றால் என்னவென்றே தெரியாதவர் என்பதற்கு சிறு எடுத்துக்காட்டு நர்சிம் மீதான பண ‘மோசடி’ப் புகார் விவகாரம். நரசிம் x சந்தன முல்லை விவகாரம் நடந்தபோது, நர்சிம்மை கண்டித்தாரா அல்லது நக்கிகொண்டிருந்தாரா சாரு? ஆனால் நர்சிம் (பெரும் செல்வாக்கு உள்ளவராய் உதார் விட்டு காட்டிக் கொண்டதுதான் பிரச்சனை. வாங்கிய பணத்தை ரொடேஷனுக்கு விட்டுத் திருப்பியும் கொடுத்து இருக்கிறார் - காலதமதமாகவே என்றாலும்) நர்சிம் பணபிரச்சனையில் மாட்டிக்கொண்டார் என்றதும் தேகம் புத்தக விழாவுக்கும் விழாவுக்குப் பின்னர் ராக் குடி ஜல்சவுக்கும் அவர் செலவிட்டதையெல்லாம் நொடியில் மறந்து, அவருக்கும் தனக்கும் சம்மந்தமே இல்லை என்பதுபோல்  தாமும் கல்லை எடுத்து வீசினார், நர்சிம்மால் சிறு பாதிப்புக்குக்கூட ஆளாகாத சாரு. இவ்வளவு கேவலமான ஜென்மம் தமக்கு ஆதரவு தெரிவிக்கிறது என்பது சினமயிக்குத் தெரிய நியாயமில்லைதான். ஆனால் சாரு எதற்காகப் பெண்களை ’மதிக்கும்’ பெருந்தகை என்பது உலகம் அறியாததா? 

ஆபாசமானவன் என்று, இன்று எல்லோராலும் எளிதாகத் தார்பூசிவிட முடிகிற அதே ராஜன் லீக்ஸ் & கோவின் தெகல்கா டைப் ஸ்டிங் ’ஆபரேஷன் சாரு’தான் அன்று நடந்த சாட் விவகாரம். 

கதை விவாதம் திரைக்கதை வசனம் டைரக்‌ஷன் அனைத்தையும் செய்துவிட்டு,டைரக்‌ஷன் மேற்பாவையை மட்டும் தமிழச்சியிடம் கொடுத்துவிட்டு சைலண்டாக சைடில் நின்றுகொண்டது ராஜன் & கோ. பப்பரப்பே என சாட் படம் ரிலீஸானதும் பொதுச்சீற்ற பாவனையுடன் சாருவின் பேனருக்கு செருப்புமாலை போட்டனர் என்பதுதான் என் முடிபு. இதன் காப்புரிமையை அன்றிலிருந்தே ராஜனும் வால் பையனும் பொதுவெளியில் மறுக்கிறார்கள் என்பது வேறு விஷயம். நான் நம்புகிறேன். ஜெயமோகன் நம்பினால் மட்டும்தான் ஏற்பீர்களா? நம்பும் உரிமை எனக்கு மட்டும் இல்லையா என்ன?

தானே டைரக்ட் செய்த சாட் விவாகாரப் படத்தின் பேனருக்கு யாரோ ரசிகன்போல தானே போட்ட மாலைதான் சாரு நிவேதிதா - வக்கற்றவனின் வக்கிரம்

சின்மயி விவகாரம் என்று சாரு ஆதவுக்குரல் கொடுத்துவிட்டு அன்று பால் பாயாசம் குடித்திருந்தல் கூட ஆச்சரியமில்லை. அந்த அளவுக்கு ராஜன் அற்புதமாக சாருவை நக்கலடித்து எழுதி இருக்கிறார் அதற்கு சாட்சியமாய் இது ஒன்றே போதும்.

may be we can travel one day… October 4th, 2012 எழுத்தாளர் சாரு நிவேதிதா

Piles, Empty Bottle and Me Sunday, October 7, 2012 எழுத்தாளர் ராஜன் லீக்ஸ்

எழுத்தாளர் ஜெயமோகன் பகடி என்கிற லேபிள் போட்டுக்கொண்டு அசடு வழிந்தால்தான் அது நகைச்சுவை இலக்கியத்தில் சேருமா? ராஜன் செய்தால் அது அவதூறாகிவிடுமா? விஷ்ணுபுர குழுமத்தின் சிறப்புச் சட்டத்தின்படி ஜெயமோகன் எழுதுவதைத் தவிர இன்னபிற எதுவுமே இலக்கியமில்லை என்பது ராஜ கம்பீர அடிமைகளின் அசைக்கவியலா நம்பிக்கை. இதில் தாங்கள் சாருவின் அடிமைகளாய் இல்லாததால் பெரிய அறிவுஜீவிகள் என்பது போல் அவர்களுக்கோர் அமரிக்கை தோரணை.

பல்லை நறநறவென்று கடித்துக்கொண்டாவது பொதுவெளியில் இளிக்கும் ஜெயமோகனிடம் இருக்கும் வயிற்றில்பல் நாகரிகம், செல்ஃப் ப்ரொக்ளெய்ம்டு ட்யூப்லைட்டாக மிளுக்கிகொண்டிருக்கும் சாருவுக்கு எதிர்காலத்தில் சித்திக்கலாமோ என்னவோ. அவரும்தான் சாட்டுக்குப் பின் ஆன்மீக பகவதியாகத் தோற்றமளிக்கத் தொடங்கிவிட்டாரே.

சாட்டுலப் பேசினது பொண்ணுதானா இல்லியான்னுகூடத்தெரியாம நம்ம டவுசரை அவுக்க வெச்ச படுபாவி நாசமாப்போனான் என்கிற வன்மம்தான்  சாருவின் அறச்சீற்றத்துக்கு அடிப்படையே தவிர பெண்ணியம் பேணுவதெல்லாம் ஒரு மண்ணுமில்லை.

ஆனால் சாருவின் உண்மையான ஆதங்கம் புரியாமல் சின்மயி ட்விட் போடுகிறார். 
இதைப் பார்த்ததும் எனக்குக் காரடையான் நோன்புக்கு சாதத்தை உருட்டி மதில் மேல் வைத்து கா கா கா கா என எழுத்தார்கள் கவிஞர்களைப் பார்த்து கூவுவதுதா போன்ற காட்சி தோன்றியது. போகவும் வரவும் இலக்கியத்தில் அவனவனுக்கும் தனிப்பட்ட ஆயிரம் காரணம் இருக்கும் என்பதைக்கூட அறியாத பாலகி பாவம்.

சாருவின் இந்தக் கட்டுரையைப் படித்து சின்மயி பரவசப்பட மூல காரணமே மாயவரத்தானின் ட்விட்டல்லவா? சின்மயிதான், ஆங்கிலத்தில் லொளபுள தமிழ் எழுதும் மறவர் சீமைத் தமிழச்சி ஆயிற்றே. அவர் என்று தமிழ் இணையத்தை சீந்தி படித்திருக்கிறார்? மாயவரத்தான் 7.01க்குப்போடுகிற ட்விட்டைப் பார்த்துவிட்டு சாருவைப் படித்து தம்மை ஆதரிக்கிறார் என்று புரிந்ததும் சின்மயி 7.14க்கு ட்விட்டுகிறார்.
ஆபாசத்தின் ஹோல்சேல் உருவமான சாருவின் பேச்சை உண்மை என்று நம்பி, ட்விடியதன் மூலம், பாவம் சின்மயிக்கு உலகமே தெரியவில்லை என்பதை, இன்னொருமுறையும் நிரூபித்து இருக்கிறார்.

சின்மயியின் தாயார் அவர்களாலேயே அறிவிக்கப்பட்ட அதிகாரபூர்வ ஆதரவாளர்களான, மாயவரத்தான் மற்றும் செல்வேந்திரன் போன்றவர்களுக்குமா சாருவின் பேக்கிரவுண்டு பேஸ்மெண்டு எல்லாமே ஆபாசம்தான் என்பது தெரியாமல் போயிற்று?

ஜெயமோகனின் முன்னணித் தளபதியான செல்வேந்திரன் தனது தலைவனின் ஜென்ம விரோதியான சாரு பற்றி நல்லபடியாக இதுவரை எதுவும் ட்விட்டியிருப்பாரா என்பது ஐயமே. ஆனால் சாருவின் கட்டுரைக்கு  மாயவரத்தான் போட்ட ட்விட்டை அலேக்மாலாக ரீட்விட்டு செய்கிறார்.
இங்கே பிரச்சனை என்னவென்றால் சாரு சர்வாங்க அயோக்கியர் மற்றெல்லோரும் சவுகர்ய சந்தர்ப அயோக்கியர்கள் என்பதுதான்.

சரி சாரு ஏன் அயோக்கியர் என்று பார்ப்போம்.

சாட் விவகாரம் வெடித்ததும் பம்மி இருந்த சாரு, 
தும்முவதைக்கூட பிளாகிலே தும்மும் சாரு தம் பிளாகில் ஜூன் 17க்குப் பிறகு ஜூன் 23ல் வரை ஒன்றுமே நடக்காதது போல, புக்கு கிடைக்கவில்லை என்று ஒரு புலம்பல் பதிவை மட்டுமே தும்மி வைக்கிறார்.

நல்ல முகூர்த்தமாய்ப் பார்த்து தமது வாசகர் வட்டத்தில் போய் மூன்று நாளாக தான் இந்த உலகத்திலேயே இல்லை என்பது போல மெல்ல மியாவ் என்கிறார்.
இதில் இருக்கும் லைக்குகளில் சுவாரசியமான ஒன்று Tharmi Ni யுடையது. தார்மினி அவர்கள் எழுத்தாளர் ஷோபா சக்தியின் சகோதரி என்பது அடுத்த சுவாரசியம். 

குறி சப்பச் சொன்னான் ஆன்ரணி என்று ஷோபா சக்திக்கும் தமக்கும் இடையிலான முறிந்த உறவைப் பொது வெளியில் மிக கெளரவமாகப் பேசிய கனவாட்டிதான் தமிழச்சி என்பதும் ராஜன் தயாரித்த சாரு ஆபாச சாட் படத்தை பெண்மையின் கண்ணியம் காக்க வேண்டி உலகளவில் ரிலீஸ் செய்த ஃப்ரென்ச்சு விநியோகஸ்தரும் இதே தமிழச்சிதான் என்பதும் கூடுதல் சுவாரசியம். 

பெண் ஆணை ஆபாசமாகப் ஏசலாம். ஆண்தான் பெண்ணை ஆபாசமாகப் பேசக்கூடக் கூடாது. தமிழச்சியின் பேரால் ஊரேகூடி மொத்தியபோதும் ஷோபா சக்தி கன்னியத்தைத் துளியளவும் விடாது பதிலளித்ததைக் கண்டு மிரண்டு அவரிடம் பெரு மதிப்பு கொண்டவர்களில் நானும் ஒருவன்.

சாரு தனது நிஜ இணைய வாழ்வின் ஆபாசத்தை எப்படி அயோக்கியத்தனமாக நாவலாக ஆக்குகிறார் என்று அம்பலப்படுத்தும் கட்டுரையைத் தமது தளத்தில் வெளியிட்ட மாயவரத்தானுக்கு சின்மயிக்காக எழும் சாருவின் குரல் எப்படி ஆபாசமாக இல்லாமல் போனது?

சாருவின் கட்டுரைக்கு சுட்டி கொடுத்த சின்மயி அவர்களின் பிரெண்டு கைடு பிலாசபரான மாயவரத்தானின் கட்டுரை.காமில் வெளியான எக்ஸைல் விமர்சனம் எப்படி சாருவின் யோக்கியதையைப் பறைசாற்றுகிறது பாருங்கள்.
<முதல் டிராக் -  ஃபேஸ்புக்ல ஒரு பொண்ணோட அண்ணன் லேசு பாசா சேட் பண்ணி இருந்தாரு..அதை எப்படியோ ரெகார்டு பண்ணி அண்ணனோட வண்டவாளத்தை தண்டவாளம் ஏத்தி இண்ட்டர் நெட் உலகத்தை ஒரு கலக்கு கலக்குச்சே ஒரு  யூ டியூப் வீடியோ ( யாரும் மிஸ் பண்ணிட்டமேன்னு பதட்டப்படேல்.. ஒன்லி வாசகங்கள்).. அந்த மேட்டர்ல தப்பு என் பேர்ல இல்லை.. நான் உலக மகா உத்தமன்.. எல்லா தப்பும் அந்த பொண்ணு மேல தான், எல்லாம் திட்டமிட்ட சதின்னு ஒரு தன்னிலை விளக்கம்..
( இதுல அண்ணன் கேட்கறாரு.. நானே அயோக்கியன்னு தெரியும் தானே.. அப்புறம் என்ன இதுக்கோசரம் என் கூட சேட்டுக்கு வரனும்?னு நியாயமான லாஜிக்கான கேள்வி  கேட்கறாரு… )

- சி.பி.செந்தில்குமார்

பெரிய இலக்கியக் கட்டுரையெல்லாம் இல்லை சிறுபிள்ளைக் கிறுக்கல்தான் எனினும் நிஜத்தில் நடந்ததை சாரு எப்படி படைப்பில் திரித்துத் திருப்புகிறார் என்பதை அம்பலப்படுத்திவிடவில்லையா? கட்டுரை.காமின் ஆசிரியர் மாயவரத்தான் தம் தளத்தில் வெளியிடப்படுவதையே சரியாகப் படிப்பதில்லை போலும்.

யோக்கியர்களின் கிளைக்கதைகள் இருக்கட்டும் அயோக்கியர் சாருவின் மூலக்கதைக்கு வருவோம்.

சாட் விவகாரம் வெடித்ததும் இரண்டு நாட்கள் இடைவெளி விட்டு சாரு என்ன சொன்னார்?


மூன்று தினங்களுக்குப் பிறகு ஃபேஸ்புக்கைத் திறந்தால் என் மீது ஒரே அவதூறு. ஒரே ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். யார் மீது வேண்டுமானாலும் யாரும் இப்படி ஒரு போலியான உரையாடலை உருவாக்கி நெட்டில் உலவ விட முடியும். நான் யாரோடும் எப்போதும் chat செய்வதில்லை. ஷோபா சக்தி மீது அவதூறு செய்தார்கள். இப்போது என்னைப் பிடித்திருக்கிறார்கள். அவதூறுகளுக்கு பதில் சொல்லி பதில் சொல்லி அலுப்பாக இருக்கிறதுJune 20, 2011 at 10:14pm

சாட் விவகாரத்துக்குப் பின் ஆறு மாதத்தில் வெளியான எக்ஸைல் புத்தகத்தின் 83ஆம் பக்கத்திலிருந்து 100ஆம் பக்கம் வரையிலும் இந்த சாட் விஷயம்தான் பேசப்படுகிறது? 

<நான் யாரோடும் எப்போதும் chat செய்வதில்லை.> என்று சம்பவம் நடந்ததும் கூறி நழுவியவர்,
இதை நாவல் என்று நம்புவோரும் நம்பலாம். உதை விழாதபடிக்குப் புனைவில் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம் என்று எடுத்துக்கொண்டு, சே சாரு கூட ஜெயமோகன் போலவே எவ்ளோ ஹானஸ்ட்டு என்று நம்பி சாருவிடம் விருந்து ஓம்புவோரும் ஓம்பலாம்.

எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்களின் நாவல் வாழ்க்கை அப்படி இப்படி இருந்தாலும் அவரது நிஜ வாழ்க்கை, ஃப்ரென்ஞ்சு எழுத்தாளர்களின் வாழ்க்கையைத் தூக்கியடிப்பது. நிஜ வாழ்வில் அவர் மீது அவரது முதல் மனைவி சுமத்திய குற்றச்சாட்டுகளில் முக்கியமானது எதுவென்று அநேகமாக எல்லோருக்கும் தெரியும். அதுவும் இந்த நாவலில் வருகிறது அடடா ஃப்ரென்ச்சு எழுத்தாளர் எவ்வளவு உண்மையாய் தம் இழிவைத் தம் படைப்பில் பிரதிபலிக்கிறார் என்று உச்சுகொட்டத் தொடங்கிவிட வேண்டாம்.

எழுத்தாளர் உதயாவுடன் கள்ள உறவில் இருக்கும் அஞ்சலி, தனது 13ஆவது வயதில் செக்ஸ் டார்ச்சர் கொடுக்கப்பட்டதைப் பற்றி பக்கம்பக்கமாக நிஜத்தில் நம் கண்முன் நடப்பது போலவே தத்ரூபமாய் விவரித்துக்கொண்டே போக வைக்கிறார் ஆசிரியர்.

முதல் மனைவி திடீரென ஒரு நாள் இரவில் உதயாவை வீட்டைவிட்டுப்போ என்று சொல்கிறாள் என்பது மட்டுமே நாவலில் சொல்லப்படுகிறது. ஏன் என்ற கேள்விக்கு மெளனமே வார்த்தையாய் நிற்கிறது, நிஜ வாழ்வில் சாருவின் முதல் மனைவி திடீரென ஒருநாள் இரவில் சாருவை வீட்டைவிட்டுப்போ என்று சொன்னார்கள் என்பது மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது ஏன் என்ற கேள்விக்கு மெளனமே வார்த்தையாய் நிற்பதைப்போல.

முல்லைக்கல் மாதவன் நாயர், தனது கதையில், பரபரத்த முல்லைக்கல் பணக்காரனாகிவிடுவதும் அடாவடிக் கூலிச்சிறுவன் அழுதுகொண்டு போவதுமாக வாசகர்களுக்கு விசிறிவாழையிலையில் படைத்தற்குப் பெயர் முற்போக்கு விருந்து

சாரு நிவேதிதா படைப்பது விரிக்கப்பட்ட தொடைகளுடனான பின் நவீனத்துவ விருந்து. இரண்டிலுமே நிஜ வாழ்க்கை வில்லன்களான எழுத்தாளர்கள் புத்தகத்தில் வேறு நபராகக் கூடுபாய்ந்து விடுகிறார்கள்.

என்ன இருந்தாலும் படைப்பு என்பதே கூடுபாயும் வித்தைதானே!

”ஜேஜேயின் டயரிக்குறிப்பு:

முல்லைக்கல், உன் எழுத்தை நான் மனதால் வெறுக்கிறேன். மாட்டுக்குச் சொறிந்து கொடு. அது நல்ல காரியம். ஆனால் மனிதனுக்கு ஒருபோதும் சொறிந்து கொடுக்காதே. சக மனிதனை ஏமாற்றாதே. உண்மையை உன் தடித்தனம் வருத்தி கசங்கச் செய்வதல்ல மனிதாபிமானம். லூக்கோஸின் மகள் ஏலியம்மாவின் (அவளை நான் எலிக்குட்டி என்று அழைக்கவே விரும்புகிறேன்) வீணை வாசிப்பை நான் கேட்கச் சென்றிருந்தபோது, அவளுடைய தனி அறையில் வீணையின் கம்பிகள் அதிர்ந்தன. எலிக்குட்டியோ எங்களுடன் இருந்தாள். நாங்கள் வேகமாக ஓடிக் கதவைத் திறந்து பார்த்தபோது, கம்பிகள் தானாக அதிர்ந்து கொண்டிருந்தன.  மேல்மாடி உத்தரத்தில் ஒரு தச்சன் ஒரு ஆப்பைச் சுத்தியலால்  அறைந்து கொண்டிருந்தான். இதுதான் மனிதாபிமானம். எருமைகளுக்கோ கம்பிகள் இல்லை அதிர!”

 - ஜேஜே சில குறிப்புகள் (பக்கம் 81-82)

சாகா வரம் பெற்ற இலக்கியம், காலத்துக்கும் வாழ்வது மட்டுமல்லாது போலிகளை நிம்மதியாகத் தூங்கவிடாமல் துரத்திக்கொண்டே இருக்கும் ஜேஜே போல.

தொடர்புடைய பதிவுகள்


வெட்கங்கெட்டப் பூனா