Friday, December 21, 2012

திரிச்சுட்டாரா உரிச்சுட்டாரா

சின்மயி ஸ்ரீபதா அவர்கள் FRIDAY, OCTOBER 26, 2012 Facing abuse and a backlash of rumours என்கிற தலைப்பில் தமது பிளாகில் என்னைப் பற்றி கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்.

On the 28th January @maamallan (after reading all my tweets on 26th and 27th January) said "Beti tum meen khata hai..." and I responded "There is nothing I can do but tweet. Or blog. Please channel your energies in writing to the authorties also" "naanga uyirgala kolradhum illa, thunburutharavanga illa (torture by keeping them in an aquarium) PETA Supporter."  I have not even said "meen" (fish) in this tweet.

However Maamallan seemed to have told a few people, right after I lodged a complaint earlier this month and Cartoonist Bala (I am told) was the first mouthpiece to spread this story amongst his readers. This spread like wildfire. With a lot of people threatening me with dire consequences. 

We had expected this to happen.

Now he made fun of me being a vegetarian. I get a lot of that on Twitter or real life. I replied in a similar vein. Here is the tweet flow.
  However it was twisted and presented as though "Naan uyirgala thunburutharavanga.." was the response for Save Tamilnadu Fisherman. 


*************
பொதுவாகவே பிரபலங்களுக்கு, எல்லோரும் தன்னையே பார்க்கிறார்கள் தன்னைப்பற்றியே பேசுகிறார்கள் என்பதில் அற்பப் பெருமையும் அப்படி எல்லோரும் தம்மைப் பார்க்க வேண்டும் என்கிற லஜ்ஜையற்ற ஆசையும் பார்க்க வைப்பதற்கான கூச்சநாச்சமற்ற யத்தத்தனங்களும் இருப்பது இயல்பு. பாரம்பரிய குடும்பத்தில் உதித்து வந்திருக்கும் நீங்களும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதையே நிரூபிக்கிறீர்கள் சின்மயி.

அம்மா தாயே உங்களது அட்டு பிட்டான ட்விட்டுகளை எல்லாம் தேடிப் பிடித்துப் படித்துக் கொண்டிருப்பதுதான் என் வேலை என்று நினைத்தீர்களா? இப்போது செய்துகொண்டிருப்பது, காலத்தின் கட்டாயம். 

முகமற்றவர்களுக்கு முகமாகவும் குரலற்றவர்களுக்குக் குரலாகவும் ஆன்மா மறுக்கப்பட்டவர்களுக்கு ஆன்மாவாகவும் இருப்பவனே எழுத்தாளன்.

பலமற்றவர்கள் மீது விளைந்த காழ்ப்பினால், நமது முகம் நாலு பேருக்குத் தெரியுமளவுக்குப் பிரபலம் என்கிற ஆணவத்தினால், அறம் என்கிற போர்வையைப் போர்த்தி சட்டத்தை மூச்சுத்திணற வைத்து இருவரைக் காராக்கிரகத்திற்கு நீங்கள் அனுப்பியதை உலகத்தின் முன் உரித்துக் காட்டாவிட்டால், எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்ளவே லாயக்கற்றவன் என்றே என்னைக் கருதுவேன்.

பெண் என்கிற ஒரே காரணத்துக்காக, தமிழ்ச் சமூகத்தின் மீது நீங்கள் காறிக்காறித் துப்பியவற்றை எல்லாம், பெண் மீதான தனிமனித ஆபாசத் தாக்குதல் என்கிற போர்வையில் மறைத்துவிடப் பார்க்கிறீர்கள் என்பதால் நீங்கள் எழுதியவற்றையெல்லாம் தேடித்தேடிப்படிக்க வேண்டிய தலையெழுத்து எனக்கு நேர்ந்திருக்கிறது. உங்களை வாழவைக்கும் இந்தத் தமிழ்ச் சமூகத்தின் மீது நீங்கள் கொட்டிய ஆபாசங்களைத் தோண்டியெடுத்து உங்களது பொய்முகத்தை அம்பலப்படுத்துவது எனது கடமைகளில் ஒன்றாக இப்போது ஆகிவிட்டது.

அதே சமயம் இதை சாக்காகப் பயன்படுத்தி, உங்களைத் தனிப்பட ஆபாசமாக தாக்கவோ ஜாடைமாடையாக ஏசவோ, என்னை வாலிவதை மரமாக எண்ணி மறைந்து தாக்கவரும் ‘ராமன்’களுக்கு ஒருபோதும் நிழல் தரவும் மாட்டேன். திட்டவட்டமாகத் திட்டித் துரத்தி அடித்தும் இருக்கிறேன்.

என்றுமே நான் தனியன். எப்போதும் எந்த கும்பலோடும் என்னை இணைத்துக்கொண்டவனில்லை. #tnfisherman TAG போட்டவர்களுடன் நீங்கள் எப்படி அடையாளப்படுத்திக்கொள்வதைத் தவிர்த்தீர்களோ அப்படித்தான் இதுவரை இலக்கிய உலகில் எந்த TAGகும் என்மீது விழுந்துவிடலாகாது என்பதில் கண்ணும் கருத்துமாய் இருப்பவன்.

ஆனால் #tnfisherman TAGகில் இருந்தவர்களெல்லாம் தலைவர்களைத் திட்டினார்கள் என்று நீங்கள் சொல்வது அபாண்டம். அந்த டேகில் இருந்த சிலரின் ஆவேச ஆபாச தூற்றுதலுக்கு எப்படி எல்லோரும் பொறுப்பேற்க முடியும். நீங்கள் இணைத்துக்கொள்ள மறுத்தது உங்களது உரிமை. அதில் தவறு ஒன்றுமில்லை. அதேசமயம், இரண்டாண்டுகள் கழித்து, என்ன நடந்தது என்று எவனுக்குத் தெரியப்போகிறது என்கிற மமதையில் இன்று #tnfisherman TAG போட்ட அனைவரும் பொறுக்கிகள் என்று சேறு பூசப்பார்ப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

#tnfisherman TAG எதையுமே சாதிக்கவில்லை என்று நீங்கள் சொல்வது உங்களது அறியாமை, அல்லது ராஜன்மீதான உங்களது வன்மம்.இப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான சுஷ்மா ஸ்வராஜ் அவர்களைப் பாராளுமன்றத்தில் பேச வைத்தது #tnfisherman TAG தான். உண்மையில் பார்த்தால் #tnfisherman TAG போட்டு ட்விட்டிய பல்லாயிரம் பேர்களில் ராஜனும் ஒருவர் அவ்வளவுதான். 


#tnfisherman TAG  தொடங்கப்பட்டது ஜனவரி 24 2011 அன்று. 
நான் #டேகுடன் ட்விட் போடத்தொடங்கியது என்று எனக்கு துல்லியமாக நினைவில்லை. ஆனால் உடனே அல்லா என்று மட்டும் நினைவு இருக்கிறது.

நீங்களோ உங்கள் தாயாரோ ராஜன் லீக்ஸை பிளாக் பண்ணியது எப்போது  என்று சொல்லவியலுமா? நீங்கள்தான் இரண்டாயிரம் மூவாயிரம் ஸ்கிரீன்ஷாட் ஆதாரங்களை வைத்திருப்பவர்கள் ஆயிற்றே. உங்களை ராஜன் லீக்ஸ் அவமதித்த அல்லது ஆபாசமாய்த் தாக்குதல் நடத்திய முதல் ட்விட்டை வெளியிட முடியுமா? அதுதான் உங்கள் இருவருக்குள் பிரச்சனை ஏன் எப்படித்தொடங்கியது என்பதைத் தெரிந்துகொள்வதற்கான அடிப்படை ஆதாரம்.

The #TNFisherman hashtag mostly contained abuse about politicians,

நீங்கள் எத்துனை ட்விட்டுகளைப் பார்த்திருப்பீர்கள் சின்மயி. பெரும்பாலானவை தலைவர்களைத் திட்டி மட்டுமே எழுதப்பட்டவையா? மீனவனுக்காகப் பேசிய எல்லோர் மீதும் எவ்வளவு சாமர்த்தியமாய் சாணி அடிக்கிறீர்கள். தலைவர்களைத் திட்டிய என்னுடைய ஒரு ட்விட்டைக் காட்டுங்கள் பார்ப்போம். எவரையும் தனிப்படத் தாக்காதவர்கள் என்னைப்போல் ஏகப்பட்டவர்கள் இருந்தார்கள் என்பதுதான் உண்மை. ஒரு சிலரை வைத்து ஊரையே கொளுத்துகிறீர்கள்.
எந்த இடத்துக்குப் போனாலும் ஜனங்களோடு  ஜனங்களாய் இருப்பவர்கள் ஹலோ சொன்னால் கண்டுகொள்ளாததுபோலத் தாண்டிப்போ.தனி கேபினில் உட்கார்ந்திருந்திருப்போரிடம் மட்டுமே காரியார்த்த மரியாதையுடன் ஸ்பெஷல் கவனம் செலுத்து என்பதெல்லாம் சினிமாத்துறையில் இருக்கும் எல்லா பிரபலங்களுக்கும் பாலோடு சேர்த்து தாய்மார்கள் புகட்டும் போதனை. கோச்சிங் செண்டருக்குப் போகாமலே குழந்தைப் பருவத்திலிருந்து இயல்பாய் படிந்துவிடும் குணம்.

<because perhaps they ran out of ways to make the topic trend and they wanted the national media to take note of this serious issue.>

ஆமாம், தமிழ்நாட்டிலேயே நீங்களும் உங்கள் அம்மாவுக்கும் மட்டும்தான் அறிவுக் கொழுந்துகள். அநாமதேயங்களான சாதாரண குடிமக்கள் எவருக்கும் அறிவே கிடையாது. மீனவர்கள் கொல்லப்பட்ட அந்த சமயத்தில் ஒட்டுமொத்தத் தமிழகமும் அநியாயம் என்று மனதார கொந்தளித்து. என்ன செய்வதென்று புரியாது கையறு நிலையில் தத்தளித்தபோது, என்னிடம் இருப்பது இதுதான் என்று  ஈர்க்குசியை எடுத்துப் போருக்குப் புறப்படுபவன் பரிகாசத்துக்கு உரியவனில்லை சின்மயி.
பக்கம் 7 Flight to Arras By Antoine de Saint-Exupery

இதுதான் அன்றைய நிலை. ஒட்டுமொத்த பிரான்சுக்கும் 52 உளவுப் பைலட்டுகளை வைத்துக்கொண்டு சில கிளாஸ் தண்ணீர்போல் போர் நெருப்புக்கு பலியாக்கும் அபத்தத்தை எழுதுகிறார் எக்ஸுபரி. இணையத்தில் இருந்த தமிழர்களின் நிலையோ, இரண்டு அரசாங்கங்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்ப என்ன செய்வது என்கிற அவதியில் தன்னிச்சையாய்ப் பிறந்ததுதான் இந்த #TNfisherman ட்விட்டர் பிரச்சாரம்.

சங்கீதக்காராளண்டை சங்கீதத்தைத் தவுத்து எல்லாமே மட்டம். அவாளுக்கு தங்களத் தவுத்து ஒலகத்துல எதப்பத்தியும் கவலையில்லேன்னு சொல்றது  எத்துனை உண்மை.

சரி அப்படிப் பொறுக்கித்தனமாய் மட்டுமே பேசியிருந்தால், 24ல் தொடங்கிய இயக்கத்துக்கு ஜனவரி 28லேயே, விகடன் செய்தி வெளியிட்டிருக்குமா?
விகடனும் பொறுக்கி எனவேதான் பொறுக்கிகளுக்கு பொறுக்கிகளுக்குப் பொறுக்கி பத்திரிகை #tnfisherman TAG பற்றி ஆதரவு தெரிவித்தது என்று சொல்லமாட்டீர்கள்தானே.

Many were agitated that national media was not reporting the death of fishermen. Starting a topic like this and making it trend would mean it would be covered by national media, they thought.

உங்கள் நிகழ்ச்சிகளைக் கவர் பண்ணுவதற்காக கவர் கொடுப்பது இல்லையா?  எந்த சினிமா பூஜை டிபன் காபி கொடுக்காமல் நடக்கிறது. உங்களைப் போன்ற பிரபலங்கள் உங்களது சொந்த லாபத்துக்காக எப்படியும் விளம்பரப்படுத்திக் கொள்ளலாம்  தமிழக மீனவனுக்காக கவன ஈர்ப்பை உண்டாக்க முயற்சிப்பது அவ்வளவு பெரிய குற்றமா? மன்னிக்கவும் சின்மயி உங்களது <they thought>டில் இளிப்பது உங்களது பிராமணத் திமிர்தான் அன்றி வேறில்லை.

உங்களுக்காக இன்று ஆதரவு நிலை எடுத்தோரில் பெரும்பாலோர் #tnfisherman போட்டவர்கள். உங்களையும் உங்கள் அம்மாவையும் சினிமா பிரபலங்களையும் தவிர ஒட்டுமொத்த உலகமே உங்களுக்கு மந்தையாய்த் தெரிகிறாதோ.

When I opened the topic, I saw tweets by the very people I blocked.

இதற்காகத்தான் முதலிலேயே கேட்டேன். ஜனவரி 4ன்கில் நன்றாகப் பேசிக்கொண்டு இருந்த கான்வெண்ட் சின்மயி - கார்ப்பரேஷன்  ராஜன் என்கிற குழந்தைகளுக்குள் ஜனவரி  24அம் தேதிக்குள் நீங்கள் பிளாக் பண்ணும் அளவுக்கு அப்படி என்ன பலத்த சண்டை வந்தது.

இல்லை மீனவனுக்குக் குரல் கொடுக்கச் சொல்லி அவர்கள் உங்களைத் ”துன்புறுத்தியதால்” அவர்களை பிளாக் பண்ணிவிட்டு இப்போது பிளேட்ட்டைத் திருப்புகிறீர்களா?

அப்படி இல்லை அவர்கள் என்னை ஏற்கெனவே ஆபாசமாகப் பேசினார்கள் எனவேதான் பிளாக் செய்தேன். இந்த பிளாக் செய்யப்பட்டவர்கள் இருந்ததால்தான் நான் #tnfishermanல் இணைய மறுத்தேன் என்பதுதான் உங்கள் தரப்பு என்றால், ஜனவரி 24க்கு முன்பாக அவர்கள் உங்களுடன் உங்களது சாதீயக் கருத்துகளுக்கு சண்டை போட்டனரா இல்லை பாலியல் ரீதியாக உங்களைத் துன்புறுத்தினரா என்பதைக்கூற வேண்டிய பொறுப்பு உங்களையே சார்ந்தது. தற்கான ஆதாரத்தை தயவுசெய்து வெளியிடுங்கள். 

அவை வெளியிடப்படாதவரை நீங்கள் ஜனவரி 4ல் தெரிவித்த சோக்கால்டு “தாழ்த்தப்பட்டவர்கள்” போன்ற ஜாதீய கருத்துகளுக்காகவும் குறிப்பாக மீனவனுக்கு எதிரான கருத்துடையவர் என்பதாகவே உங்கள் தோற்றம் இருக்கும். அதில் எந்த மாற்றமும் கிடையாது.

மீனவர் பிரச்சனைக்கான இணைய இயக்கம் தொடங்கும் முன் இந்த சில்லுண்டிப் பசங்கள் பிரபலமான பெண் என்று உங்களிடம் இளிக்கத்தான் காரணம் இருக்கிறதேயன்றி உங்களைத் தாக்க என்ன முகாந்திரம் இருக்க முடியும் என்று நானும் மண்டையைக் குடைந்து கொள்கிறேன் ஒன்றுகூட தட்டுப்பட மாட்டேன் என்கிறது. ஓரிரு காரணங்களைக் காட்டி கொஞ்சம் உதவி செய்யுங்களேன்.

I didn't want my tweet to figure under a tweet which referred to a political leader in vulgar terms.

இதைச் சொல்லுங்கள் உங்கள் கூற்றை முற்றாக ஏற்கிறேன். ஆனால் அதில் ஒரு பிரச்சனை என்னவென்றால் சர்வ கெட்ட குணங்களுக்கும் அதிபதியான வில்லனாக உங்களால் சித்தரிக்கப்படும் ராஜன்லீக்ஸ் மட்டுமே தலைவர்களை அவமதித்தவனா என்பதுதான் கேள்வி. நீங்கள் சொல்வீர்கள் அவன் மட்டுமில்லை அவனது கும்பல் என்று. ராஜனோ தி.க கோஷ்ட்டி. சரி கீழ்க்காணும் சில ட்விட்டுகளைப் பார்த்துவிட்டு இவர் யாருடைய கோஷ்டி எனச் சொல்லுங்கள் பார்ப்போம்.
இதில் மஞ்சள் துண்டு என்பது யாரைக் குறிக்கிறது? குறிப்பிடும் நபர் யார்? #tnfisherman போடப்பட்டிருக்கிறதா இல்லையா? தமிழகத்தின் முதல்வராக இருந்த 80 வயதைத் தாண்டியவரை ஏகவசனத்தில் பேசுவதை ஏற்கிறதா உங்கள் தாயார் உங்களை வளர்த்த வளர்ப்பு?
அடுத்த அர்ச்சனை அடடே ‘ஈன’ லெவலுக்கே போய்விட்டது. உயர்குடி பிராமணரான உங்களுக்கு ஆதரவாக தூண்போல் நிற்கும் பிராமணகுலம் காக்கவந்த சிங்கம் என்பதால் இவர் தலைவர்களைக் கேவலமாகப் பேசினால் பரவாயில்லையா சின்மயி?
அம்மாடியோவ். ஸ்டேட்டைவிட்டு செண்ட்ரலுக்கே சென்றுவிட்டார் உங்கள் மாயவரத்தான் என்கிற ரமேஷ் அண்ணா. உங்களை இழுத்தால் ஒரண்டை. அதற்காக 66Aவை ஏவி விடுவீர்கள்.சோனியா காந்தி அவர்களை இழுத்த இவனது தாயார் இதைப் பார்த்தால், நம்மாத்துலல்லாம் அம்மாக்கள் சொல்றாப்பல, பெத்த வயத்துல பெரண்டையதான் வெச்சி கட்டிக்கணும் என்று சொல்ல மாட்டார்களா? உங்கள் தாயாரிடம் விசாரித்துப் பாருங்கள் இந்தப் பழமொழி உண்டா என்று. சல்லி நயாபைசாவிலிருந்து தேவதாசிகள்வரை விளக்கமாக ட்விட்லாங்கர் எழுதுபவரான உங்கள் அம்மாவுக்குத் தெரியாதத விஷயம் என்று ஒன்று உண்டுமா இந்த பூலோகத்தில். 
இதைப் பார்த்தீர்களா இன்னொரு பிரண்டை ட்விட்டு. மீன் கறி தின்னும் பிராமணரல்லாத ஒட்டுமொத்த அரசியல் வாதிகளையே கேவலமாய்த் திட்டியபடியே #tnfiserman போட்டிருக்கிறாரே இவரை அப்பயே பிளாக் பண்ணிட்டேளோ? அப்பறம் உங்க ஆதரவாளரா ஆனப்பறம் பிளாக்கை எடுத்து ரிலீஸ் பண்ணிட்டேளா? மட்டமா ட்விட்டறதுன்னு வந்தா நெட்டுல எல்லா நாயும் ஒண்ணுதான். ஆனா இது நம்பாத்து நாய்ங்கறதால ஓஸ்தி. மத்ததுல்லாம் பிராமண நாய்களில்லேங்கறதால் தெருநாய் இல்லாட்டா சொறிநாய் என்கிற மனநிலையுடன் ஜாதீய பாரபட்சம் பார்க்கும் உங்களை ஏன் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் எதிரானவர் என்று சொல்லக்கூடாது சின்மயி?

ராஜன் பெயில்ல வரதுக்கு மின்னடிக்கூட, கோயமுத்தூர்லேந்து ஃப்ளெய்ட்ல வந்து அமெரிக்கால இருக்கறவா ரெண்டு பேரோட அட்ரசைக் கமிசனர் ஆபீஸ்ல குடுத்துட்டுப் போச்சே இந்த பிராமண நாய். டூ அண்ட் ஃப்ரோ ஃப்ளெய்ட் டிக்கட் நீங்க எடுத்தேளா இல்ல அதுவே போட்டுண்டுத்தா? எவன்குடியாவுது கெட்டா சரி யார் செலவழிச்சா என்ன உங்காசு எங்காசுன்னு இந்த மாதிரி நல்லாகாரியத்துல பேதம் பாக்கலாமோ? நீயே போட்டுண்டா மொத்த புண்ணியமும் நோக்கேதான்னு சொல்லுட்டேளா. நம்புளுக்குல்லாம் வாய் வாழப்பழம் கை கர்ணக்கெழங்குன்னா.

Nevertheless I had already posted a tweet sending out prayers.

இதை நீங்க எப்படி சொன்னேள்னு நிதானமா பாக்கலாம். அதான் உங்க ஸ்கிரீன்ஷாட்டுகளே இருக்கே.

சிறு வயதுமுதலே நான் சினிமா பிரபலங்களை எல்லாம் பொருட்டாகவே கருதியதில்லை. என் இயல்பு அப்படி. எனக்கு இசை பிடிக்கும். இசை என்று இல்லை. எந்த துறை சாதனையாளர்கள் மீதும் பெருத்த மரியாதை உண்டு என்பதற்காக நான் எவருக்கும் விசிறி அல்லன். யார் ஒருவருக்கும் உலக நடைமுறைப்படி ‘விசிறி’யாக இருப்பதைக் கேவலமாக எண்ணுகிறவன். 

ஆகவே ஜனவரி 2011ல்தான் முதன்முதலாக நீங்கள் இணையத்தில் இருப்பதே எனகுத் தெரியும். ஏனென்றால் நான் இணையத்துக்கு வந்தே நான்கைந்து மாதங்களே ஆகியிருந்தன அப்போது.

#tnfisherman TAG ஒரு முக்கிய நிகழ்வாகப் பட்டது. சமூகம் பற்றி ஓயாது சிந்திப்பதாக வாய்க்குவாய் பீற்றிக்கொள்ளும் ஜெயமோகன் சாரு போன்ற எழுத்தாளர்கள் கூட #tnfisherman TAGகில் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. இணையத்திலேயே தங்கள் பஜனையை நடத்திக் கொண்டிருந்தும் இவர்கள் இதனுடன் தங்களை அடையாளப் படுத்திக் கொள்ளாதமைக்குக் காரணம்  உங்களைப்போலவே இணையத்தில் இருப்பவர்கள் மீதான் இளக்காரம் மற்றும் ஊதி பலூனாய் உப்பியிருக்கும் அவர்களது ஈகோதான் என்பது என் கருத்து.
பக்கம் 119 Flight to Arras By Antoine de Saint-Exupery

எல்லோரும் என்னவோ தமிழ்ப் பாடகி சினம்யியைப் போய் மீனவர் படுகொலைக்காகக் குரல் கொடு என்கிறார்களே நாமும் கேட்டுப்பார்த்தால் என்ன என்றுதான் உங்களிடம் பேச வந்தேன். மற்றபடி நீங்களாகக் கற்பித்துக்கொண்டு படம் காட்ட முனைவதைப்போல் ஒன்றும் அது நடக்கவில்லை.

On the 28th January @maamallan (after reading all my tweets on 26th and 27th January)

என்று எழுதுகிறீர்கள் என்னைப் பற்றி. 

ஜனவரி 26, 27 2011ல், பெஸண்ட் நகரிலிருந்து எனது முகப்பேர் அலுவலகத்துக்கு முதுகுடைய 23 + 23 கிலோமீட்டர் பைக் ஓட்டி போய் வந்து என்னென்ன எழுதி இருக்கிறேன் என்று பார்த்துவிட்டுப் பேசுங்கள் சின்மயி. 

கவிதை கட்டுரை ஸ்கேனு சண்டை என்று நான் எவ்வளவு பிசியாக இருந்திருக்கிறேன் என்பதை maamallan.comல் போய் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். 

எழுத்தாளனாக என் உலகில் செய்ய வேண்டிய காரியங்களாகக் கிடப்பவையே எனக்கு ஏராளம். அள்ள அள்ள அபத்தங்களை சளைக்காது வழங்கும் சாரு ஜெமோ எஸ்.ராக்களை லூஸில் விட்டுவிட்டு நான் ஏன் உங்களது டிவிட்டுகளைத் தேடிப்படிக்க வேண்டும்?

புயல்வீசும் கடலாய் மனம் பீறிட்டுக்கொண்டிருந்தாலும் வெளியில் அறுபத்துமூவர் திருவிழாவாய் ஜனக்கடல் அலைமோதிக்கொண்டிருந்தாலும் தெருவோரத் திண்ணையில் உட்கார்ந்து கால்மடக்கி சொறிந்து கொள்ளும் சுதந்திரத்தை வரமாய்ப் பெற்றவர்கள் என் போன்ற எழுத்தாளர்கள்.

உங்களைப்போன்ற சினிமா பிரபலங்கள்தான் ட்விட்டரில், ஃபேஸ்புக்கில் என்று நான் இப்ப நிக்கிறேன் இப்ப ஒக்காந்துருக்கேன் இங்க திங்கிறேன் என்று அப்டேட் கொடுத்துக்கொண்டே எப்போதும் வெளிச்சத்தில் இருந்தாக வேண்டிய அவஸ்தையுடன் வாழ சபிக்கப்பட்டவர்கள். 

அது போன்ற உங்களது அப்டேட் ஒன்றுதான் தற்செயலாய் அப்போது என் கண்ணில் பட்டது. நீங்களாக உங்களுக்கு பெரிய முக்கியத்துவம் கொடுத்துக் கொள்கிறீர்களேயன்றி, இரண்டு நாட்கள் உங்கள் ட்விட்டுகளையெல்லாம் தேடிப்படித்துக் கொண்டெல்லாம் நான் இருக்கவில்லை. அது தங்களை மையப்படுத்தியே இவ்வுலகம் சுழல்வதான கற்பனையில் வாழும் உப்பிப் பெருத்த ஈகோவினால் உருவாகும் உங்களது megalomaniac பிரச்சனை.

இந்தப் புத்தகத்தின் முதல் கட்டுரை எழுதப்பட்டது, சின்மயியால் இருவர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டிருந்த பதட்டமான தருணம். அதில் கொடுக்கப்பட்டிருக்கும் ஸ்கிரீன்ஷாட் எதோ ஒரு மென்பொருளைக் கொண்டு சின்மயி தரப்பால் எடுக்கப்பட்டு, தேதி மாறியிருப்பது எதோ நான் செய்த மோசடிபோல் மாயவரத்தான்களால் கூவப்பட்டுக்கொண்டிருந்த தருணம். சும்மா எட்டு பத்து ஸ்கிரீன்ஷாட்டுகளைக் காட்டி, அதுவும் ஒரு பக்கத்து ஸ்கிரீன்ஷாட்டுகளை மட்டுமே காட்டி காவல் துறையின் கண்களுக்குப் பட்டை கட்டப்பட்டிருந்த தருணம். அந்த பதட்டமான சூழலில் சின்மயி தரப்பால் அளிக்கப்பட்டதை வைத்தே அவர்களது தரப்பை மறுத்து எழுதிய கட்டுரை அது. அன்றும் சரி இன்று வரையிலும் சரி அசல் ஸ்கிரீன்ஷாட்டுகளை அவர்கள் அளிக்கவே இல்லை.

எது ஒன்றைக் கண்டாலும் அஞ்சி நடுங்கி ஓடிப்போவது என் குருதியிலேயே கிடையாது. எழுந்தோ விழுந்தோ புரண்டோ புழுதியாக்கிக்கொண்டோ அதை கற்று வசப்படுத்தி திருப்பிக் கொடுப்பதே என் இயல்பு. பொய்யில்லை என்பதால் புலம்பவேண்டிய அவசியமோ எதையும் மறைக்க வேண்டிய அவசியமோ எனக்கு இல்லை.

தேடிக்கண்டடைந்த அசல் ஸ்கிரீன்ஷாட்டுகள் இவைதாம். தேவை என்றால் அனைத்துக்கும் எண்களோடு சைபர் கிரைம் முன் சமர்ப்பிக்கத் தயாராய் இருக்கிறேன்.

On the 28th January @maamallan (after reading all my tweets on 26th and 27th January)

இந்தப் புண்ணாக்குக் கட்டுக்க்தை போல ஒன்றும் நிஜத்தில் நிகழவில்லை. எல்லாமே தற்செயல் தன்னிச்சையாக நடந்ததுதான்.

சின்மயி, சென்னையிலிருக்கும் எதோ  மெக்சிகன் உணவகத்தில் உண்ண வந்ததாகவும் அங்கே அவரது பாடல்கள் இந்தியில் இசைக்கப்படுவதாகவும் ட்விட் போடுகிறார். நான் அவரைத் தொடராவிடினும் அவரைத் தொடர்பவரை நான் அப்போது தொடர்ந்ததாலோ என்னவோ அது என் கண்ணில் படுகிறது. எனக்கும் அவருக்கும் நிகழ்ந்த உரையாடலை கால வரிசைக் கிரமாமக் கொடுக்கிறேன்.
அதைப் பார்த்த நான் மெக்சிகன் ரெஸ்டாரண்டு ஹிந்தி என்கிற இரண்டையும் கலந்து சின்மயி பிராமணப் பெண் என்பதால் கிண்டலாய் இந்த ட்விட்டைப் போடுகிறேன்.
140 தட்டச்சுக்குள் நக்கலாய் அனைத்தையும் உள்ளடக்கி குட்டிப் பிரசங்கமே நடத்திவிடுகிறேன். இவ்விரண்டு ட்விட்டுகளுக்குமான இடைவெளி நான்கே நிமிடங்கள்தாம். சின்மயி சொல்வது போல முதைய இரண்டு தினத்தில் அவர் எழுதியவறையெல்லாம் படித்து கடம் அடித்துக்கொண்டு எல்லாம் வரவில்லை என்று புரிகிறதா?
நான் கிண்டலடித்து ஏறக்குறைய ஒரு மணிநேரம் கழித்து - அநேகமாய் அந்த சமயத்தில் உணவு உண்டுகொண்டு இருந்திருக்க வேண்டும் -  சின்மயி பதிலிறுக்கிறார். அதைப் பார்த்ததும் நாம் சும்மா கிண்டலடித்ததை இந்தப் பெண் தப்பாக எடுத்துக்கொண்டு விட்டதோ என நான் அமைதியாகிவிடுகிறேன். அவருடன் அதற்குமேல் பேசவில்லை.
பத்து நிமிடங்கள் கழித்து, கொஞ்சம் சூடாகப் பேசிவிட்டோமோ என அவரும் நினைத்தாரோ என்னவோ கிண்டலாக மேற்படி ட்விட்டைப் போடுகிறார். 

சின்மயி அவர்களின் இரண்டு ட்விட்டுகளுமே எனது மீனவன் ட்விட்டுகளுக்கான பதில்கள்தாம் என்பதில் எவருக்கும் அவருக்கும் ஐயமிருக்காது என்றே நினைக்கிறேன். 

கடைசியாக அவர் கூறியதைக்கூட, நாம் நக்கலடித்தோம் அவர் பதில் நக்கல் அடிக்கிறார் என்று நான் சாதாரணமாகத்தான் எடுத்துக் கொண்டு பதிலேதும் சொல்லாமல் இருந்திருக்கிறேன். இதுவரை அனைத்து ட்விட்டுகளும் 28ஆம் தேதியைச் சேர்ந்தவை. 

மறுநாள் அவரிடமிருந்து பதிலில்லை என்றதும், முதலில் கொஞ்சம் கோபமாகப் பேசினாலும் இறுதியாக ஸ்மைலி போட்டுத்தானே பேசியிருக்கிறார், இறுதியில் நட்பாகத்தானே பேசிவிட்டுச் சென்றார், சின்மயி என்கிற தைரியத்தில், ஸ்மைலி எல்லாம் கூடப் போட்டாரே என்று துணிவை வரவழைத்துக்கொண்டு, என்ன இருந்தாலும் சின்னப் பெண்தானே என்று அடுத்து இந்த அஸ்திரத்தை அனுப்புகிறேன். விட்டகுறை தொட்டகுறையாய் நாங்க உயிர்களைத் துன்புறுத்தவங்க இல்லை என்பதற்கு பதிலாய், அன்பாகவும் சற்றுக் கடுமையாகவும் இதைச் சொல்கிறேன்.
சின்மயியிடமிருந்து பதிலில்லை. இதற்குள் தம் வாயாலேயே அவர் சூனியம் வைத்துக்கொள்ளத் தொடங்கினாரோ என்னவோ சிறுமி ஆயிற்றே என்று அன்பாகக் கூறுகிறேன்.
என்ன இருந்தாலும் பெண் இல்லையா, இதை அவர் எங்கே தவறாக எடுத்துக்கொண்டுவிடப் போகிறாரோ, பதில் வேறு இல்லையே என்கிற உள்ளூர இருந்த சிறு உதைப்பு. எனவே கொஞ்சம் பாராட்டு.
அதற்கடுத்து, இப்படி ஒரு விண்ணப்பம் சுற்றத்தொடங்குகிறது.சின்மயியிடமிருந்து எந்த பதிலும் இல்லை என்பதால் எந்த கட்டாயப்படுத்தலோ வற்புறுத்தலோ இன்றி, அக்கர்றையுள்ளோர் கையொப்பமிடவும் என்று மட்டும் கூறி அனுப்பி வைக்கிறேன்.
இவை தவிர 2011லிருந்து 22 அக்டோபர் 2012 வரை சின்மயி பெயரை எங்கேனும் குறிப்பிட்டதற்கான ஆதார ஸ்கிரீன்ஷாட்டை மாயவரத்தானோ செல்வேந்திரனோ காட்டினால், திருப்பதியில் அவர்கள் முடியிறக்க ஆகும் செலவை, அதற்கான டோக்கனோ கூப்பனோ அதன் செலவை மட்டும் நான் ஏற்கிறேன். பட்டாயாவுக்கு அனுப்பிவைக்கும் அளவுக்கு எனக்கு வசதியும் இல்லை. நான் மாமாவும் இல்லை.

இப்போது கிடைத்திருக்கும் ஸ்டேடஸ் எண்கள் அக்டோபர் 23ல் என்னிடமும் இல்லை உங்களிடமும் இல்லை. ஒரு ஸ்கிரீன்ஷாட்டும் அதன் நோய்க்கூறுகளும் கட்டுரையைக்கூட நீக்கிவிட நான் தயார். ஆனால் கைவசம் இருப்பதை வைத்து முடிந்தவரை உண்மையாய் பேசி இருக்கிறேன் என்பதைக் காட்டவே அதன் சொதப்பல்களோடு அதையும் இந்த புத்தகத்தில் சேர்த்திருக்கிறேன்.

இப்போதுள்ள அசலான அசைக்க முடியா தரவுகளின்படியே பார்த்தாலும் நீங்கள் எப்படி மீனவ நண்பி ஆகிவிடுகிறீர்கள் என்பதுதான் எனக்குப் புரியவில்லை. மீனவனுக்கான பெட்டிஷனுக்கு நீங்கள் பதிலே கூறவில்லை என்பதால் என்ன பெரிய மாறுதல் ஏற்பட்டுவிட்டது?

@chinmayi பேட்டி தும் மீன் காத்தா ஹை! மீனவன் உசுர்க்கா கொஞ்சம் ஸோச்ச்சோ! # மீ வெஜிடேரியன் # ஓ வாஸ்து மீன் தொட்டி இருக்கா #tnfisherman

இதுதானே என் கேள்வி? இது ஏன் எழுகிறது? நீங்கள் மெக்ஸிகன் ரெஸ்டாரண்டில் துன்னுகிட்டு இருக்கேன் என்றதால்தானே? என்னடா நம்பாத்து சாத்தமுது கோஷ்ட்டிக்கு ஃபிஷ்ஷுக்குப் பேர்போன மெக்ஸிகோ ரெஸ்டாரண்டுல என்ன வேலை என்று தோன்றுவது சகஜமா இல்லையா?

சின்மயி, இப்போது எனக்கு 52 உங்களுக்கு 28. நீங்கள் பிறந்த 10 செப்டம்பர் 1984ல் என்னுடைய முதல் கதைத் தொகுப்பே வெளியாகி ஒன்பது மாதங்கள் ஆகிவிட்டிருந்தன. அது போகட்டும். நீங்கள் எல்கேஜி படிக்கிற குழந்தையாய் உங்களை பாவித்துக்கொள்ளுங்கள். 19 ஜூன் 1960 நான் பிறந்தவன் என்பதால் அப்போதும் நமக்குள் 23 வயது வித்தியாசம் இருக்குமல்லவா?

இந்த அங்கிள் உங்களிடம் கேட்கிறார் : வாட் ஈஸ் யுவர் நேம்?

எல்கேஜி படிக்கும் நீங்கள் எப்படி பதில் சொல்வீர்கள்? : மை நேம் ஈஸ் இன்மயி ஈபாதா

இப்போது உங்களுக்கு 28 வயது.

உங்களை எனக்கு முன்னபின்ன தெரியாது முதல் சந்திப்பு. எனக்கோ இன்னும் எல்கேஜி இங்லீஷ்தான் தெரியும் என்பதால் நான் கேட்கிறேன் : வாட் ஈஸ் யுவர் நேம்?

28 வயது இங்கிலீஸ் பிளாக் எழுத்தாளரான நீங்கள் இப்போதும் எல்கேஜி சிசு போலவே மை நேம் ஈஸ் இன்மயி ஈபாதா என்பீர்களா இல்லை ஸ்ட்ரெய்ட்டாக மேட்டருக்கு வந்து சின்மயி என்பீர்களா?

அப்படித்தான் என் ட்விட்டுக்கான உங்கள் பதிலும்.

மீன் தின்பியா? மீனவன் உசுருக்காகவும் கொஞ்சம் யோசி. (மெக்சிகன் ரெஸ்ட்டாராண்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்தாலும்)மீ வெஜிடேரியன் (என்கிறாயா) ஓ வஸ்து மீன் தொட்டி இருக்கா #tnfisherman என்பதற்கு 

நாங்க உயிர்களத் துன்புறுத்தறவங்க இல்லை வெட்டி சாபிடறவங்களும் இல்லை சப்போர்ட்டர்ஸ் ஆஃப் பெட்டா என்றால் என்ன பொருள்?

அது எப்படி என்னுடைய ட்விட்டில் இருக்கும் எல்லா விஷயங்களையும் விட்டுவிட்டு மீன்தொட்டிக்கு மட்டுமே சொன்ன பதிலாக மட்டுமே ஆகும்?

அப்படி என்றால் வெறும் சப்போர்ட்டர்ஸ் ஆஃப் பெட்டா மட்டும் போதுமே. 

Para 6: if the intent was to attract punishment for harassment at any and every place, section 4 simply could have read as follows : '4. Penalty for harassment of woman. -- Whoever commits or participates in or abets harassment of woman in any place shall be punished ...........

Madras High Court Gouresh Mehra vs The State Rep. By Tr on 25 October, 2010 DATED: 25.10.2010 
CORAM
THE HONOURABLE MR.JUSTICE C.T.SELVAM

அங்கு ஏன் ”நாங்க உயிர்களத் துன்புறுத்தறவங்க இல்லை வெட்டி சாப்பிடறவங்களும் இல்லை” என்கிற பேச்சு வரவேண்டும்? 

Para 7: But where the context and the object and mischief of the enactment do not require such restricted meaning to be attached to words of general import, it becomes necessary to give a plain and ordinary meaning.

Same judgment mentioned above.

அதற்கான பதில் மீன் தொட்டிக்கானது மட்டுமே இல்லை என்பதை நீங்களே அடுத்து எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை என்று சொல்லிவிடுகிறீர்கள் பாருங்கள். உங்களுக்காக கரசேவை செய்தவர்களை இப்படி கவிழ்த்து விட்டீர்களே சின்மயி.

Now he made fun of me being a vegetarian.

ஆக இது மீ வெஜிடேரியன் என்கிற கிண்டலுக்கு எதிர்வினையாய் ”நாங்க உயிர்களத் துன்புறுத்தறவங்க இல்லை வெட்டி சாப்பிடறவங்களும் இல்லை” என்று நீங்களே ஒப்புக்கொள்கிறீர்கள். எனில் மீனவன் உயிர் பற்றி கவலைகொள் என்று இறைஞ்சிக்கொண்டு இருப்பவனிடம் வந்து,

நாங்க.... என்று நீட்டி முழக்கினால் அதற்கு என்ன அர்த்தம்? 

உங்களை மாதிரி, நீங்க ஆதரிக்கச் சொல்ற மீனவனை மாதிரி ”நாங்க உயிர்களத் துன்புறுத்தறவங்க இல்லை வெட்டி சாப்பிடறவங்களும் இல்லை” என்னால் எதுவும் செய்ய இயலாது. ட்விட் போட முடியும் பிளாக் எழுத முடியும் உங்கள் சக்தியினைத் திரட்டி ஒருமுகப்படுத்தி அதிகார மையத்திடம் முறையிடுங்கள் என்று சொன்னால், அதுவும் ஆவேசப் போர்க்களத்தில் வந்து சொன்னால், பொதுவெளியில் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு இது எப்படிப் போய்ச்சேரும்?

அதிபுத்திசாலித்தன்மாய்ப் பேசுவதாய் எண்ணி, இழவு வீட்டில் போய் டெம்ப்ளேட் ஆறுதலாய் அம்மா செத்த வீட்டில் சொல்வதை அப்படியே பொண்டாட்டி செத்த வீட்டிலும் போய், உங்க பொண்டாட்டி உங்குளுக்கு மட்டுமா பொண்டாட்டியா இருந்தாங்க  இந்த ஊருக்கேயில்ல பொண்டாட்டியா இருந்தாங்க என்று அசட்டு பிசட்டாய் செந்தில் உளறி அடிவாங்குகிற காமெடியாய் ஆகாதா? நன்றாக சிந்தித்துப் பாருங்கள். 

ஆகவேதான் இது நீங்கள் மீனவனுக்கு எதிராய் பேசியதாய் பொருள் கொள்ளப்படுகிறது.

பொதுவெளியில் உளறும் பாக்கியம் பிரபலங்களுக்கு இல்லை சின்மயி. இந்த எளிய உண்மையை ஏன் ஏற்க மறுகிறீர்கள். உங்களை ஒப்பிட்டால் ஊர்பேர் தெரியாத ராஜன் என்கிற அநாமதேயத்துக்கு எதிராய் பொதுவெளியில் மகேஷ் மூர்த்தியிடம் சரிக்கு சரியாய் சண்டை போடலாமா நீங்கள்? அதில் தோற்றுப்போனால் உங்கள் கதி என்ன? அது உங்களுக்கு எவ்வளவு பெரிய அசிங்கம் என்பதை கொஞ்சமாவது யோசித்துப் பார்த்திருக்க வேண்டாமா? நம்முடைய பிரபலத்தை ஒப்பிட்டால் இந்த மாமல்லன் யார் இவனை யாருக்குத் தெரியும் என்று, ஜெயமோகனுக்கும் எஸ்.ராமகிருஷ்ணனுக்கும் இருக்கிற முதிர்ச்சியும் பக்குவமும் அவர்களைவிட பலமடங்கு பாப்புலரான அதுவும் பெண்ணாகவும் இருந்து நல்ல கலராகவும் இருப்பதால் பப்ளிக்கிடம் எண்ட்டர்டெய்னராகவும் இருக்கும் உங்களுக்கு இருக்க வேண்டாமா?

நாயகன் வெளியாகியிருந்த சமயம். பலப்பம் போலிருந்த நாசருடன் சஃபையர் சப்வே பக்கத்திலிருக்கும் டீக்கடையில் நின்று நண்பர்கள் பேசிக்கொண்டு இருந்தோம். என் சைக்கிள் மீது சாய்ந்தபடி பேசிக்கொண்டிருந்தார் நாசர். ஊரிலிருந்து வந்துசேர்ந்திருந்த பச்சைமணம் மாறா இரண்டு பையன்கள் நேர் எதிரில் நின்று அவரை ஆவெனப் பார்த்துக்கொண்டே இருந்தனர். சிரிக்கவும் இல்லை பேசவும் இல்லை. நாசருக்கே பொறுக்காமல் எதாவது பேச்சு கொடுத்து அனுப்பி வைக்கலாம் என்று என்னப்பா எந்த ஊரு என்றார். அதற்கும் அவர்கள் பதில் சொல்லவில்லை. எல்லோருக்குமே டார்ச்சராய் இருந்தது.

யாராவது நம்மை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்களா என்று பிரபலங்கள் ஏங்குவதும் நிகழ்ந்ததுண்டு.

ஐய்ய்யோ நீங்க எவ்ளோ அழக்க்க்கா இருக்கீங்க என்று பெண்கள் எல்லோரும் தொலைபேசியில் ஜொள்ளும்படியாக சில வருடங்களுக்குமுன் குளிர்பாண நிகழ்ச்சிக்கு  பிருமாண்டமாய் ஒருவர் வருவாரே அவரை மயிலை ரெக்ஸ் ஃபேஷனில்  சில மாதங்கள்முன் பார்த்ததும் பிறவி ஜொள்ளன், குறிப்பாகக் குன்றில் நிற்கும் குமரனைக் கும்பிடுபவன் என்பதால் உடனே அடையாளம் கண்டுகொண்டு விட்டேன். எங்கோ பார்த்தது போல இருக்கிறதே என்று திணறிக்கொண்டு இருந்தாள்  என் மனைவி. இத்துனைக்கும் அவர் கணவர் குழந்தைகளோடு வந்திருந்தார். திரையில் தெரிந்த அதே அர்த்தமற்ற ஹிஹிஹி ஆனால் சீந்தத்தான் ஆளில்லை. தேவையே இல்லாமல் எல்லோரையும் பார்த்து இன்னும்கூடத் தன் பற்கள் ஆரோக்கியமாய் இருப்பதாக விளம்பரித்துகொண்டு இருந்தார்.

அவரிடம் யாருக்கென்ன வேலை. உங்களிடமாவது சொல்லிக்கொள்ள நாலு பாடல்கள் இருக்கின்றன. இன்னும் வருடங்கள் கழித்து நீங்களும் தசாபுத்தி காரணமாய் ஒருவேளை அவர் போலவே ஆனாலும் உங்கள் இசை உங்களை உய்வித்துக்கொண்டு இருக்கும். 

இந்த சில்லுண்டிப்பயல்கள் எதிரில், மகேஷ்மூர்த்தியிடம் போய், ரஜினி பெயரைத் தூக்கு என்று சண்டை போட்டுத் தோற்றால் சிங்கத்திடம் சிறு நரி தோற்றதுபோல உங்களுக்குப் பெருமை.

நாயே நான் யார் பெண்சிங்கம். இந்த ராஜன்லீக்ஸ் என்கிற எலிக்குட்டியும் நானும் ஒன்றா? இந்த ஊரில் எப்படி எலிக்குட்டியைக் கவுரவிக்கப் போயிற்று என்று மேடையிலேயே வைத்து சண்டைபோடுவது சிறுபிள்ளைத் தனமா இல்லையா? இன்னும் சின்னப்பொண்ணா நீ என்றல்லா உங்களுக்கு சர்வமும் ஆகிய உங்களது அம்மா உங்களைக் கண்டித்திருக்க வேண்டும். அதை விட்டு எலிக்குட்டியைப் போய் பட்டா படுவா ராஸ்கல் என்று தாய் சிங்கமும் சேர்ந்து கர்ஜித்தால் கூட்டம் என்ன செய்யும்? இதுங்குளுக்கு ஏன்யா இந்த சின்ன புத்தி என்று கெக்கெலி கொட்டி சிரிக்காதா?

அதுவேதான் நடந்தது. மகேஷ் மூர்த்தி ராஜன் பெயரை நீக்க முடியாது என்றதும் அவருடன் மல்லுகட்டுகிறீர்கள். ஒரு தருணத்தில் நீ முடிந்ததைச் செய் என முறித்துக்கொண்டு போகிறார்.

பொதுவெளியில் உங்கள் வேண்டுகோளை பெண்ணெண்றோ பிரபலம் என்றோ பாராது பரிசீலிக்காது அவமானப்படுத்திய மகேஷ்மூர்த்தியை உங்கள் ஈகோவால் என்ன செய்ய முடிந்தது? ராஜனின் கைது சமயத்தில் திரும்பவும் அவரிடம் போய் திரும்பவும் பொதுவெளியில் மோதி திரும்பவும் அசிங்கப்பட்டுக் கொண்டது என்னிடமே ஸ்கிரீன்ஷாட்டாய் இருக்கிறது. இது உங்களுக்குத் தேவையா?

இப்படி நீங்கள் சின்னப் பிள்ளைபோல் சண்டையிட்டு அசிங்கப்படுவதை அசிங்கப்பட்டாய் என்று ஒருவர் சொன்னால் அது அவதூறா என்று தயவுசெய்து சஞ்சய் பிண்டோவிடம் கேளுங்கள்.

இவர்கள் செய்த தவறு என்னவென்றால், வீட்டில் எல்லோரும் எப்படி நடந்துகொள்கிறோமோ இல்லையோ பொதுவெளியில் பெண்களை மதிப்போடு நடத்த வேண்டும். அசிங்கப்பட்டாள் சின்மயி என்று எழுதாமல் அசிங்கப்பட்டார் சின்மயி என்று எழுதி பொதுவெளி நாகரிகத்தைக் கட்டாயம் கடைபிடித்திருக்க வேண்டும். அதுவும் அவர்களில் பலர் உங்களைவிட சிறுவர்கள் என்பதில் வயது வித்தியாச மரியாதையைக் கடைபிடிக்காதது கட்டாயம் தவறுதான். 

அசிங்கப்பட்டாள் சுன்மயி என்று டேக் போட்டது நிச்சயமாய் பெரிய தவறு. அதனால்தான் வேறு எப்படியும் மாட்டவைக்க முடியாத ராஜனை, அவன்தான் இந்த கும்பலின் தலைவன் என்று நீங்கள் சொல்ல இடம் கொடுத்துவிட்டது. சின்மயி உங்களுக்கும் சேர்த்தே சொல்கிறேன் ஒரு போதும் கும்பல் சேர்க்காதீர்கள் கும்பல் செய்கிற தப்பெல்லாம் நம் தலையில்தான் வந்து விடியும். இப்பொது ராஜன் தலையில் எல்லார் செய்த தப்புகளையும் இருமுடிபோல் இறக்கிவைக்க முடியாதபடி நீங்கள் எளிதாகக் கட்டிவிட்டீர்களல்லவா அது போல.

ராஜன் @chinmayi என்று போட்டு உங்களை ஆபாசமாகப் பேசிய பாலியல் ரீதியாய் உங்களைத் தாக்கிய ட்விட்டுகளின் ஸ்கிரீன்ஷாட்டுகள் இருந்தால் எடுத்துப் போடுங்களேன் கொதிக்கும் ஊர்வாயை மூடிவிடலாம். 

அப்படி எதுவும் ஆதாரமாய்க் கொடுக்க முடியாத பட்சத்தில் நீங்கள் செய்திருப்பது அவதூறு இல்லையா சின்மயி?

உங்கள் தாயார் செய்த தவறுக்கு நீங்கள் ஒரே குடும்பம் என்பதைக் காரணம் காட்டி உங்கள் மீது எப்படிப் பழிசுமத்துவது சொல்லுங்கள் பார்ப்போம்?

அசிங்கப்பட்டாள் சின்மயி என்று #tag ஆரம்பித்தது தவறுதான் ஆனால் அதில் வந்து பேசிய அநாமதேயங்களுக்கெல்லாம் ராஜன் எப்படி தண்டனை அனுபவிக்க முடியும்?

எட்டு பத்து பத்திரிகைகளுக்கு அரெஸ்ட்டுக்கு முன்பாகவே கடிதம் எழுதி இல்லாததும் பொல்லாததுமான அவதூறுகளை அள்ளித் தெளித்து விட்டாயிற்று. எல்லோரும் கண்டமேணிக்கு எழுதுவதை வேடிக்கை பார்த்தாயிற்று.

அதைக் கிடுக்கிப் பிடி போட்டு யாராவது இப்படிக் கேட்டால் இருக்கவே இருக்கிறது ரெடிமேட் பதில்.
ஆஹா இவர்கள்தான் அரிச்சந்திரன் விட்டுக்கு அடுத்தவீட்டுக்காரர்கள் ஆயிற்றே. இதை இணையத்தார்கள் நம்ப வேண்டும். இந்தப் பிரச்சனை இண்ட்டர் நெட்டில் நடந்ததுதானே. நேர்மையாளர் என்றால் என்ன செய்திருப்பார்? நான் சாட்டிய குற்றம் இவைதான். அதோடு அவரவர் கறபனையைக் கலந்து பத்திரிகைகள் எழுதுவதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதுதான் நாங்கள் பத்திரிகைகளுக்கு அனுப்பிய மறுப்புக் கடிதம் என்று அப்போதே உங்கள் தளத்தில் வெளியிட்டு இருக்கலாமே. ஆணோ பெண்ணோ தைரியமாக நேர்மையாக செய்திருக்க வேண்டிய காரியம் இதுதான்.

கண்ணீரை வெளியில் கொட்டி, கரவை உள்ளே தேக்கியவர்கள்  துருப்பிடித்த இரும்பு மூளையால் மட்டுமே செயல்படுவர்.

தமிழில் பாடிப்பிழைக்கும் நீங்கள் தமிழ் பேசும் உலகையே #tag போட்டு தமிழ் கும்பல் என்பதாகவே பார்க்கிறீர்கள் சின்மயி. அதுதான் உங்கள் அடிப்படைக் கோளாறு. 

However Maamallan seemed to have told a few people,

இதற்கு என்ன ஆதாரம் சின்மயி? என்னதான் நீங்கள் முன்னணி டப்பிங் ஆர்ட்டிஸ் என்றாலும் எல்லோர் வாயசைப்புக்குமா உங்கள் குரலைக் கொண்டுபோய் ஒட்ட முடியும்? 

இது வடிகட்டின முட்டாள்தனம் இல்லையா சின்மயி. இணையம் என்பது பொதுவெளி. இதில் நான் என்ன சொன்னாலும் எல்லோருக்கும் தெரியும்.  எவனோ சிங்களவனுக்கு நான் சொன்ன ட்விட்டை எவரெவரோ பார்க்க முடியும். அதை எவரெவரோ எடுத்தாளவும் முடியும். இதற்கு எப்படி நான் பொறுப்பாக முடியும் எனவே நான் சிலருக்கு சொல்லியிருக்கலாம் என்று அனுமானமாக சொல்லி வைக்கிறீர்கள். அது என்ன seemed? சீமந்தமூடு? 

ஆனால் நீங்கள் சொல்லாம். நான் உங்களுக்கு எதிராக சதிசெய்திருக்கலாம். உங்கள் வீட்டுக்கு குண்டு வைக்க நினைத்திருக்கலாம் இப்படி எதை வேண்டுமானாலும் மனம் போன போக்கில் நீங்கள் சொல்லலாம். என்று சீமுடு சீமுடு என்று மூக்கு சிந்திக்கொண்டே குஷ்புவிடம் சொன்னால் அவரும் நிர்மலா கொற்றவை சொன்னதைப் பார்க்காமலும் கேட்காமலும் அவரை ’டம்ப் கேள்’ என்று சொன்னதைப் போல என்னையும் ஏதாவது சொல்லலாம். காரணம் நீங்கள் பெண்கள். அபலைகள். அதுவும் பிரபல அபலைகள். உங்கள் சொல் எந்த படியும் ஏறும் எந்தப் படியும் ஏறும் எந்த தப்படி வைத்தும் ஏறும் சத்தியத்தை மிதித்தபடி. 

உண்மையை உடைத்துச் சொல்லப்போனால் நான் ஆணாதிக்கவாதி ஆகிவிடுவேன் இல்லையா?

right after I lodged a complaint earlier this month and Cartoonist Bala (I am told) was the first mouthpiece to spread this story amongst his readers.

என்னுடைய தொலைபேசி அலைபேசி மெய்ல் மற்றும் கார்ட்டூனிஸ்ட் பாலாவின் தொலைபேசி அலைபேசி மெய்ல் ஆகியவற்றைத் தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்துங்கள் எனக்கும் அவருக்கும் என்ன தொடர்பு? நாங்கள் இருவரும் கருத்து பரிமாறிக்கொண்டோமா எனக் கேட்பேன் என்று உங்களுக்குத் தெரியும் அதனால்தான் சீமுடு  டு ஹேவ் டோல்ட் சம் பீப்பிள். அந்த சம்பீப்புள் வழியாக பாலாவுக்குப் போயிருக்கலாம் என்று எழுதுகிறீர்கள்.

நீங்களும் உங்கள் அம்மாவும் மட்டுமே இப்படியெல்லாம் யோசிப்பீர்களென்றால் டப்பிங்குக்கும் பாடுவதற்கும் தயவுசெய்து முழுக்கு போடுங்கள். சினிமாவே தெரியாத எழுத்தாளர்களின் கொட்டத்தை அடக்க நீங்கள் இருவர்தான் சரியான தேர்வு. திரைக்கதைதான் உங்கள் துறை. எவ்வளவு நேக்காக எனக்கும் கார்ட்டூனிஸ்ட் பாலாவுக்கும் முடிச்சு போட்டு கதையை ஜோடித்து கிளைமாக்ஸைப் புழலுக்குக் கொண்டுசெல்கிறீர்கள்.

தாழ்த்தப்பட்டவர்களை ஒட்டுண்ணிகள் என்று ட்விட் செய்ததற்கான தண்டனை ராஜ்மவுலிக்குதான் உங்களுக்கில்லை. அதை ரீட்விட் செய்ததற்கு பொறுப்பு உங்களுக்குதான் ராஜ்மவுலிக்கு இல்லை. 

நான் என்றோ எவனுக்கோ சொன்னதை எவன் திரித்தானோ அவன்தான் அதற்குப் பொறுப்பு. நானில்லை. என்மேல் நீங்கள் எடுத்து வைத்திருக்கும் இந்த வாந்தியை முதலில் வழித்து, என்மீது உண்டான கறையை சுத்தம் செய்யவேண்டியது உங்கள் பொறுப்பு.

This spread like wildfire. With a lot of people threatening me with dire consequences.

அட அவ்வளவுதானா? உங்களை தமிழர்கள் எல்லோரும் எப்போதுமே சும்மா மிரட்ட மாட்டார்களே. கண்ணைக் குத்தி வாயைக் கிழித்து சம்மர்சால்ட் அடித்து அசால்ட்டு பண்ணி ரேப் பண்ணி ஆசிட் ஊற்றி கொலை பண்ண வந்ததாகத்தானே நீங்கள் அலம்பல் செய்து கண்ணீர்க் கடை விரிப்பீகள்?  கர்ட்டூனிஸ்ட் பாலா பத்திரிகையாளர் என்பதால் இந்த கரிசன கன்செஷனா?

இது என்ன அநியாயம் இவ்வளவு நோய்க்கூறாகப் புரிந்துகொண்டு என்னைக் கவிழ்க்க சூனியம் வைக்கிறீர்கள். உஙளுக்கு மிரட்டல் வந்ததற்கு ஆதாரம் இருக்குமானால் எங்கிருந்து மிரட்டல்கள் வந்தன என்று போலீசில் போய் புகார் கொடுக்க வேண்டியதுதானே. அதை விட்டு சம்பந்தா சம்பந்தமில்லாதவர்களையெல்லாம் சதி என்று கேசில் இழுத்துவிடுவதுதான் உங்கள் முழுநேரத் தொழிலா?

Now he made fun of me being a vegetarian.

அய்யடா. இவுங்களை வெஜிடேரியன் என்பதற்காக கிண்டல் செய்தேனாம்? நானு ராச்சோறு துன்றதுக்காக மெக்சிகன் ரெஸ்டாரண்டுல குந்திகினு இருக்குறேன்னு சொன்னா, சொல்றவங்க ஐயங்கார்னும் தெரிஞ்சா, மெக்சிகன் ரெஸ்டாரண்டுல சாத்துமது சாப்பட்றதாகவா பக்கத்தாத்து ராவ்ஜிக்குத் தோணும். இது என்னையா நம்பாத்துக் கோந்தை மெக்சிகோல போயி மீனுகீனு திங்கறது போல இருக்கேன்னுதான நெனப்பன். 

 I get a lot of that on Twitter or real life.

தோடா சொம்மா சொன்னதுக்கு கொழந்தை எம்மாம் பெருசா நெனச்சிகிது. ஆமா அப்பதான மெய்நிகர் உலகத்துக்கு 66Aவும் மெய்யுலகத்துக்கு 506 (i)யும் தமிழாடுப் பெண்களுக்கு எதிரான தாக்குதலுக்கு எதிராய் செக்‌ஷன் 4ஐயும் கோத்து உள்ள தள்ள முடியும்.

சத்தியமா சொல்றேன் சின்மயி. ஒரு தெய்வம் தந்த பூவே பாடவெச்ச தெய்வத்துக்கே நீங்க சொல்ற பொய்கள் அடுக்குமா? ஓ அதனாலதான் அடுத்தவனுக்கு வெக்கிற பில்லிசூனியம் எல்லாம் பலிக்கணும்னு, இவ்ளோ ஆபாசமான சிம்மக்கல்லு சிம்மக்கல்லு சிம்முரண்டா நான் பாடினீங்களா?கேஸ் நடக்கும் போது ஆபாசம் கீபாசம்னு சஞ்சய் பிண்டோ அறச்சீற்றத்துலப் பொங்கிட கிங்கிடபோறாரு. லைட்டா கொதிச்சாக்கூட எதிர்தரப்புக்கு அல்வா சாப்டாப்புல ஆயிடும். சிம்மக்கல்லு பாட்டைக் கொஞ்சம் கேளுங்கனு ஜட்ஜுக்குப் போட்டுக்காட்டினா கோர்ட்டு அதுர்ந்துடும்.

I replied in a similar vein. Here is the tweet flow.

நானும் அதே நரம்புல பதில் சொன்னேன். 

நீங்க அதிர்ந்துடாதீங்க, அதாவுது நம்ப எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் மொழிபெயர்த்தாரே ten rupee note அப்பிடிங்கறதை பத்து ரூபாயும் ஒரு நோட்டுப் புத்தகமும்னு அது மேரி முழிபெயர்த்துப் பாத்தேன். உங்க ட்வீட் ஃப்லோ என்ன இங்க ஒரிஜினல் காவிரொ ஃப்லோவே குடுத்தாச்சி பாத்தீங்கல்லே.

#TNfishermanல நடந்துகிட்டு இருந்தபோது, மெக்சிகன் ரெஸ்டாரண்ட்டுல ஒக்காந்துருக்கிறியே,
சமையல்கட்டுக்குலாம் போயி பாத்தேன்ணு சொல்றியே அங்க இருந்தவங்க எல்லாரும் மலையாளிகள்னு வேற சொல்றியே. மலையாளி ஓட்டல்ல மாட்டுக்கறி நல்லா இருக்கும். எனக்குத்தெரிஞ்சே தேனாம்பேட்டை சிக்னலாணட ஒண்ணும் மியூசிக் அகாடெமி 'இன்' கேட்டுக்கு ஜஸ்ட்டு பக்கத்துலையே மாடில ஒண்ணும் இருந்துது. தேங்காய் எண்ணெய்ல செஞ்ச சூப்பரான மாட்டுக்கறி கெடைக்கும்.

அப்படியாப்பட்ட மலையாளிகள் இருக்கற எடத்துல, என்னா கீரையா ஆஞ்சிகிட்டு இருக்கான். மீனில்லே இருக்கும்.  அதான் மீனவன் உசுரப்பத்தியும் கொஞ்சம் யோசின்னு சொன்னா அதுக்கு நாங்க உயிர்கள துன்புறுத்தறாவங்க இல்லனு சொன்னா அதுல டிரைவுடு மீனிங் என்ன? நாங்க வெட்டி சாப்படறாவங்க இல்லைனா, நீயெல்லாம்தாண்டா மீனை வெட்டிதின்றவன் நான் தொட்டிலகூட மீன வெச்சி துன்புறுத்தாதவண்டா நாயேன்னுதானே அர்த்தம்?

I have not even said "meen" (fish) in this tweet.

உங்க லாயரு சொல்லிக்குடுத்த பாயிண்டாமா? இப்புடி ஹைலைட்டர்லாம் போட்டு ஏதோ சுப்ரீம் கோர்ட்டு 1952 கேஸ்லா மேரி கெட்டியா புட்சிகிணு இருக்குறே.

மொத்தமுமே மீன பத்தி பேசற ட்விட்டுக்கு பதிலா நானு மீனுங்கற வார்த்தையே சொல்லைனா மேட்ரு ஓவரா? அப்ப அங்க துன்புறுத்தறது வெட்டி சாப்படறாதுனுல்லாம் வந்தது எதைப் பத்தினு கேள்வி வராதா?

நீ சொன்ன உயிர்கள் எவை? நீயும் உங்க அம்மாவுமா? நீங்க அடுத்தவங்களைத் துன்புறுத்தற உயிர்களாச்சே. அடுத்தவன் உசுரை எடுக்கற உயிர்களாச்சே. ரெண்டும் இல்லை. அப்ப டைனசாரா இல்ல காண்டாமிருகமா?

சஞ்சய் பிண்ட்டோ கிட்டியோ இல்ல கமிசனர் சார் கிட்டியோ கேப்போம் நாங்க உயிர்களைத் துன்புறுத்தறவங்க இல்ல. வெட்டி சாப்படறாவங்க இல்ல அப்பிடினு வரதுல இருக்க்ற உயிர்கள் மீனில்ல டைனசார் இல்லாட்டி காண்டாமிருகம்தான்னு மட்டும் அவுங்க சொல்லிறட்டும், Rent குடுத்துட்டு புழல போய் வாலிண்டியரா ஒரு மண்நேரம் நானே ஒக்காந்துகினு இருந்ட்டு வறேன்.

மீன் என்கிற வார்த்தை இல்லேங்கறதால அது மீனைக் குறிக்கிலேனு சின்மயிஜி நீங்க சொல்லியிருக்கீங்க. 

ஆமாம்.

சின்மயிஜி ஆர் யூ ஷ்யூர்? 

ஷ்யூர். 

கான்ஃபிடெண்ட்?

எஸ்

லாக் பண்ணிடலாமா?

எஸ் பண்ணிடலாம்

ஒன்ஸ் லாக் பண்ணிட்டா அப்பறம் அன்லாக் பண்ணமுடியாது.

தெரியும்

பக்கா.

ஹான்ஜி

கம்புயூட்டர்ஜி லாக் கரோ. இதுதான் இந்த வழக்குல மாபெரும் கேஸ்லா. இதுலேந்து நீங்க பின்வாங்க மாட்டீங்களே.

இல்லை மாட்டேன்.

ஒன் லாஸ்ட் டைம். ஃபைனல் சான்ஸ். எண்டரை பிரஸ் பண்ணலாமா?

ஐயோ எண்டர் தட்டுங்க சார்.

ஓகே.  எண்டர் தட்டியாச்சு. லாக்டு.

...............

...............

இப்ப கொஞ்ச நேரத்துக்கு மாமல்லனுடனான ட்விட் உரையாடலில் ’மீன்’ சொல்லப்படவில்லை என்கிற சின்மயி அவர்களின் பிளாகில் எழுதியதை நல்லா ஞாபகம் வெச்சுகிட்டு, 28 ஜனவரி 2011லேந்து 04 அக்டோபர் 2012ன் மிகப்பிரபலமான ஷரண்கே கைதுக்குக் காரணமான ஸ்க்ரீன்ஷாட்டுக்கு வரலாம்.
தயவு செய்து அனைவரும், சின்மயி உட்பட உணர்ச்சிவசப்படவேண்டாம். தான் மீனவர்களைக் குறிப்பிடவே இல்லை. இன்னும் சொல்லப்போனால், மீன் என்கிற வார்த்தையைக் கூட, தான் சொல்லவில்லை என்று சொல்கிற சின்மயி அவர்களின் வாதத்தை தயவுசெய்து இங்கே பொருத்திப் பார்க்கவும்.

<I have not even said "meen" (fish) in this tweet.>

என்று சின்மயி சொல்லும் அதே தர்க்கத்தை இங்கே பொருத்தினால் என்ன வருகிறது?

<I have not even said "சின்மயியின் அம்மா" (Padmhasini.T) in this tweet.> 

என்று ஷரண்கே சொல்வதை ஏற்கிறாரா சின்மயி? அல்லது பெண்கள் மீதான பாலியல் தாக்குதல் செய்துவிட்டார் என்று ஒரே அணியாய் அவருக்குப் பின்னால் திரண்டு நிற்கும் அவரது பிராமீன் ஆணிகள் இதை ஏற்கிறார்களா?

Article 14 in The Constitution Of India 1949
14. Equality before law The State shall not deny to any person equality before the law or the equal protection of the laws within the territory of India Prohibition of discrimination on grounds of religion, race, caste, sex or place of birth
இதன்படி இருவருக்கும் சமநீதி வழங்குங்கள். ஒன்றா, சின்மயி மீன் என்கிற வார்த்தையை சொல்லவில்லை என்பதால்,  அவர் மீனவர்களுக்கு எதிராகப் பேசவில்லை என்று கூறினால், அதே தர்க்கத்தின் பலனை ஷ்ரண்கேவுக்கும் வழங்கி, சின்மயியின் அம்மா என்கிற சொற்களையே அவர் சொல்லவில்லை என்பதால் “சின்மயியின் அம்மாவை யூஸ் பண்ணிக்கோ” என்று சொல்லவில்லை என்று அவர் மீதான வழக்கை வாபஸ் வாங்குங்கள்.
இல்லையா, சின்மயியின் அம்மாவைத் தவறாகப் பேசியதாகத்தான் பேசினோர் என்பீர்களேயானால், ஜெயிலுக்குப் போய்வந்த பின்னும் நிபந்தனையற்ற மன்னிப்பைக் கேட்டிருக்கிறார் ஷரண்கே.
நாம் எல்லோரும் உயர்ந்த அறம் காக்கும் அறங்காவலர்களாக எப்போது ஆவோம்? சின்மயி முன் வைக்கும் அதே தர்க்க உரிமையை ஷரண்கேவுக்கும் வழங்கினால்தானே, பசுவின் கன்றையும் நம் மகனையும் ஒன்றாகப் பார்க்கும் சிபிச்சக்ரவர்ததிகளாய் நாம் ஆகமுடியும்? 
ஆகவே சின்மயியும் மீன் என்கிற சொல்லைச் சொல்லாவிடினும் மீனவர் படுகொலைகளுக்கு எதிரான #TNfisherman இயக்கத்துக்கு ஆதரவுதர மறுத்தார். மீனவர்களுக்கு எதிராகத்தான் பேசினார் என்பதை ஏற்றுக்கொண்டு, ட்விட்டு போடாமல் ஒரு பத்துநாள்,  ஷரண்கே ராஜன் இருந்த அதே சிறையறையில்  சின்மயியும் இருந்துவிட்டு வரட்டும்.  அவருக்கும் அம்மாவைப் பார்க்காமல் பிரிந்து இருப்பது  ஒரு வரவேற்கத்தக்க மாறுதலைக்கூட சின்மயியின் ஆளுமையில் உண்டாக்குவதாய் இருக்கக்கூடும். வெளியில் வந்தபின் மீனவர் விஷயத்தில் தான் நடந்துகொண்ட விதத்துக்காக ஷரண்கே போலவே நிபந்தனையற்ற மன்னிப்பும் கேட்கட்டும்.

அப்போதுதான் “நாங்க மனுஷர்களைத் துன்புறுத்தரவங்க இல்ல. வெட்டி சாப்படறவங்களும் இல்ல” என்கிற வார்த்தைகள் நிஜமாகவே உண்மை ஆகும்?

சப்போர்ட்டர்ஸ் ஆஃப் பெட்டா என்று சின்மயி சொல்வதுகூட டைனசார் காண்டாமிருகம் போன்ற உயிர்களைக் குறிக்காமல் மீன் குறித்ததாகவே மீன் தொட்டியாக மட்டுமே எனக்கு மட்டுமல்ல, ’இலக்கியத்தில்’ சுஜாதாவின் விசிறியும் இந்த விவகாரத்தில் சின்மயியை ஆதரிப்பவருமான ஸ்ரீதர் நாராயணனுக்கும்  அது மீன்தொட்டியைக் குறிப்பிட்டதாகத் தெரிவதால்தானே, சின்மயி ஆதரிக்க மறுத்தது மீனவர்களுக்கான போராட்டத்தைத்தான் என்று நான் வாதிக்கும் கட்டுரைக்கான சுட்டியில் வந்து இப்படிக் கேட்கிறார்.
அவர் கொடுத்த சுட்டியை இணையத்தில் அடித்தால் வருவது டைனசார் பண்ணையா அல்லது காண்டாமிருகக் காப்பகமா? 
மீன் தொட்டி பற்றியது அல்லவா? அந்த நிறுவனத்தின் லோகோவே முயல். அது நிறைய உயிரினங்களின் பாதுகாப்பை வலியுறுத்துகிறது. ஆனால் இங்கே கொடுக்க்ப்படுவது, ஸ்ரீதர் நாராயணன் தேர்ந்தெடுத்து கொடுப்பது மீன் தொட்டி. அதாவது மீதி எந்த உயிர்களைப் பற்றியும் அல்லாது, மீனை மட்டுமே குறிப்பது.

அதாவது சப்போர்ட்டர்ஸ் ஆஃப் பெட்டா என்று என்னிடம் சின்மயி சொன்னது தொட்டியில் வைத்துக் கூட மீனை “துன்புறுத்தறவங்க இல்ல. வெட்டி சாப்படறவங்க இல்ல” என்று சொல்வது, அதையும் மீனவன் உய்ர் பாதுகாக்கும் உணர்ச்சிகரமான போராட்டத்துக்கு இடையில் வந்து சொல்வது  வேறு யாரைக் குறிக்கும்? 

பார்ப்பனர்களைப் ‘பிராமணர்கள்’ என்று நீங்கள் எழுதுவது குறித்து உங்களுக்கு சுயவிமர்சனங்கள் ஏதுமுண்டா? பெரியார் ஈவெரா “அவன் பிராமணன் என்றால் நாம் யார்? அந்த முறையில் நம்மைக் குறிப்பிடும் சொல் ‘சூத்திரன்’ என்பதைத் தவிர வேறு என்ன இருக்கிறது? ‘பார்ப்பனர்’ என்கிற தமிழ்ச் சொல்லே இருக்கும்போது, ஒருவரைப் ‘பிராமணன்’ என்கிற சொல்லால் குறிப்பிட்டால் நமக்கு மானம் இல்லை, அறிவு இல்லை; மனித உணர்ச்சி இல்லை” எனச் சொல்லியிருப்பதை நீங்கள் படித்ததுண்டா? 

என்று காலச்சுவடு கண்ணனைப் பார்த்து பெரியாரை மேற்கோள் காட்டிப் பொங்கும் ஷோபாசக்தியின் தர்க்கத்தை அப்படியே இங்கே சின்மயி சொல்லும் “நாங்க உயிர்களைக் கொல்றவங்க இல்ல வெட்டி சாபடறவங்களும் இல்ல” என்றால் மீனவனையும் மீனவனை ஆதரிப்போரையும் குறிக்குமா குறிக்காதா? நாங்கள்ளாம் கொல்றவங்க இல்லை என்றால் நீங்கள்ளாம் கொல்றவங்க என்று ஒட்டுமொத்த அசைவம் சாப்பிடும் தமிழர்களையும் கொலைகாரர்கள் என்று இழிவுபடுத்துவதாய் ஆகுமா? ஆகாதா? இந்த விவகாரத்தில் சின்மயியை ஆதரிக்கும் எழுத்தாளர்களில் மறு பக்கத்தையே செவிமடுக்க மறுக்கும் இவர் ஒரு ஈழ ஃப்ரெஞ்சு எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத்தானே ஐய்யா, மீனவாள்ளாம் மீனைக் கொல்றா நாங்கள்ளாம் உயிர்களைக் கொல்றவா இல்லே  வெட்டி சாப்படறவாளும் இல்லே எனவே மீனவன் உயிர் காக்கும் போராட்டத்தை ஆதரிக்க முடியாது என்று சின்மயி சொன்னதாக ஆனது? மீனவன் பெட்டிஷன் பற்றி சின்மயி கண்டுகொள்ளவே இல்லை. ஏற்கிறேன். அதனால் கருத்தில் என்ன மாற்றம் வந்துவிட்டது.

சின்மயிக்குள்ளே இருப்பது தாம் பிராமணர் என்கிற உயர் சாதீய மனப்பான்மை. இவாளோடல்லாம் போயி நாம்ப எப்படி சேற்றது என்கிற எண்ணம் மட்டுமே. அது அம்பலப்பட்டுவிடாமல் இருக்க, மீனவர் போராட்டத்தைத் தாம் ஆதரிக்க மறுத்ததற்கு  , #tnfisherman இணைய இயக்கம் தலைவர்களைத் திட்டியது என்கிற சப்பைக்கட்டு. இப்படி இடக்கு மடக்காகக் கேள்விகேட்டால் பிடிபடாமல் தப்பிக்க மீனவனுக்காக நானும்தான் போட்டேன் நாலு ட்விட்டு என்று ஒப்புக்கு சப்பானியாய்த் தாம் போட்டவற்றைக் காட்டுகிறார்.

சின்மயி மீனவன் உயிர்மீதான கரிசனத்தில் போட்ட ட்விட்டுகளின் லட்சணம்தான் என்னவென்று பார்த்துவிடுவோமே?

Even to those who alleged that I said something insensitive about Fishermen, I wonder which one of these can be termed insensitive.

அம்மாடி நீ போட்ட ட்விட்டு அல்லாமும் டுபாகூருதான்.
இயற்கை மரணம் அடைந்தவரின் இழவு வீட்டில் போய் உட்கார்ந்து துக்கம் விசாரிக்கிறேன் பேர்வழி என்று, ஏம்மா இவுங்க குதிச்சி செத்தது ஆத்துலையா கொளத்துலையா இல்லே கூவத்துலையா என்று கேட்டால் எப்படி இருக்கும்?

மீனவாள்ளாம் ஷேஃப்ஃப்ஃப்ஃப்ஃபா ஆத்துக்கு திரும்பி வரட்டும்னு வேண்டிக்கறேன். ஆனா அவாளை ஸ்ரீலங்காக்காரா கொல்லலைங்கரா, அப்ப அவாளைக் கொல்றது ஆரு? என்று கேட்டால், இதற்கு என்ன அர்த்தம்? என்று சொல்வது ஆதரவுக்குரலா? இல்லை குரூர கும்மாளியா? 

<Even to those who alleged that I said something insensitive about Fishermen, I wonder which one of these can be termed insensitive.>” இந்த ஒண்ணு போறுமா இல்லே ஒவ்வொண்ணா பாக்கணுமா?

திருடும்போது மாட்டிக்காம திருடறது எப்டின்னு ஆத்துல சொல்லிக் குடுத்து அனுப்பலையா? தேதிய ஓரக்கண்ணால பாத்துக்கோ உன்னோடது 26  ஜனவரி 2011இவாளோடது 25 ஜனவரி 2011
சின்மயி நீங்க சுட்டது இங்கேந்துதான். இவா ரெண்டு பேரும் மனசார போடற ட்விட்டு அதனாலதான் இதுல That is not very believable இருக்கு. ஒப்புக்குப் போட வந்த சின்ன பட்டு இது ஸ்ரீலங்காவுக்கு எதுரா போயிடுமோன்னு கப்புனு குறுக்கால வெட்டிடுத்து. அதோட அடுத்த லைன்ல இருக்கற why? யையும் எடுத்துட்டதால அதுக்குப் பின்னால இருக்கற அடிப்படை அரசியல் கேள்வியும் சேந்து காணாமப் போயிடுத்து. அதாலதான் அந்த ட்விட்டு ரொம்ப க்ரூடாவும் எதிராவும் ஆயிடுத்து. 

சரி இந்த #TNfisherman TAG போட்டவாளையெல்லாம் அரசியல் தலைவர்களை ஆபாசமா திட்டினவான்னு ஒரேடியா சேறடிச்சியே, இவா ரெண்டு பேர் ப்ரொஃபைலையும் பாத்துட்டு சொல்லு.
திருப்பதில ஷேவிக்க நிக்கறவன்ல கூடதான் நாலு பேர் அடிச்சிண்டு சட்டையைக் கிழிச்சுப்பன். அதுக்குப் பெருமாள் என்னடிம்மா பண்ணுவர்? பாவம் சின்மயி! ஆரண்டையோ கத்துண்டு பேக்கராயிட்டாய். எங்கிட்ட மாட்டிண்டு ஜோக்கராயிட்டாய்.

சரி அடுத்த இன்சென்ஸிடிவ் ட்விட்டைப் பாப்பமா?
வெல்லத்துக்குள்ள விஷம் வெச்சுக் குடுத்துட்டு நான் கூட மீனவாளுக்காக நாலு ட்விட்டு போட்டேன்னு சொல்றியே நியாயமா?

டெக்கன் ஹெரால்டுக்காரன் யாரு? கர்நாடகாக்காரன். அவனுக்கும் எங்குளுக்கும் சோத்துக்காக வந்த ஆத்துத் தகறாரு இருக்கு. தண்ணி குடுக்க மூக்கால அழுது ஆகாத்தியம் பண்ற தரித்தரேஸ்வரன் அவன். உன்னைப் போலவே அவனுக்கும் தமிழக மீனவன் இருந்தா என்ன செத்தா என்ன? கரெக்டா அவன் பத்திரிகையை எடுத்துக் குடுக்கறியே ரொம்ப சமத்துன்னு நெனப்போ?

ஸோக்கால்டு “தாழ்த்தப்பட்டவர்கள்னு” ஆரம்பிச்சு வெக்கறப்போ வெஷம்மா G.O.No.205 Education Departmantஐ எடுத்துக் காட்டினாப்பல, வெகுளியாட்டமா, இவா ஷொல்றா இதை எக்ஸ்ப்ளாய்ட் பண்ண சான்ஸ் உண்டாம்னு பத்திரிகையைக் காட்டறியே, இதுதான் மீனவாளை ஆதரிக்கிற லட்சணமா?


Choppy waters

''A joint Palk Bay authority is the need of the hour.''
The Sri Lankan navy has denied a hand in the killings. The Indian government has taken up the issue with Colombo and the latter has promised to probe the matter. Still the issue could turn explosive. There are any number of elements in both countries that would like to exploit the issue for narrow political gain.

உன்னைப் பாத்தா பெங்களூர்க்காரனே தேவலை. ஆதியோட அந்தமா பிரச்சனையப் பேசறான். ஆனா ஒனக்கு சொல்லணும்னு தோன்றது என்ன பாத்தியோ. எக்ஸ்பிளாய்ட் பண்ண சான்ஸ் இருக்காம்கறதுதான். இருட்டான ரூம்ல வெளக்கைக் கொண்டாந்தா ரூம்பூரா வெளிச்சம்னு சிலவாளுக்குத் தோணும். இத்துனூண்டு வெளிச்சம் மித்ததெல்லாம் இருட்டுன்னும் சிலவாளுக்குத் தோணும். மனசால பாக்க கத்துக்கோ. கள்ளத்தனம் இல்லாம சொல்ல கத்துக்கோ.

ராஜன் சொன்னான்னு சொல்லிட்டு விடாம, அது மாமல்லன் சொன்னதுன்னு சொல்லிவெச்ச முகூர்த்தம் நெனவிருக்கா? அப்பதான் பாஞ்சஜண்யம் ஊதினார் பகவான் க்ருஷ்-ணர். மூஞ்சில சோடா அடிச்சு தெளியவெச்சு  தெளியவெச்சு அடிக்கிறவன் கிட்டப்போய் வாயக்குடுக்கலாமா?

பொண்கொழந்தயாப்போயிட்ட அதாலதான் பூ ஒத்தடம். மாயவரத்தான்ங்கற  தேரோட்டிகிட்ட என்ன சொன்ன? எனக்கு அவார்டு குடுக்கப்போறியா, தீ மாதிரி செயல்பட்டு :) 

ரெண்டு பேரை கொண்டுபோய் உள்ள வெச்சுட்டோம்னதும் எவனை வேண்ணா என்ன வேண்ணா பண்ணலாம் எப்புடி வேண்ணா மெரட்டலாம்னு என்னா தலைக்கனம்! சிண்ட அவுத்துட்டா சீவாம முடியப்படாதுங்கறது என் கொள்கை.
இது ஆரைப் பத்தி சொல்லியாறது? நடுக்கடல்ல இருக்கறவாளுக்காகப் பிரேயர். ஒண்ணுவிட்ட அத்திம்பேர் ஆராவுது லக்ஸரிலைனர்ல போயிருந்தாளோ? ”கவர்மெண்ட் சேவ் தெம்”னு இங்கக் கத்திண்டு இருந்தா, அங்க ”காட் ஷேவ் தெம்”னு சொல்றதுதான் துவேஷம். 

இதப்போய் ஒரு அசடு தேவாம்ருதம்னு எடுத்து தேங்க்ஸ்னு சொல்லி RT chinmayiனு போட்டு #TNfishermanன்னு போட்டா அதுக்கு மஞ்சாக்கலர் அடிச்சு இதப்பாருங்கோ நான் தமிழாளாத்து செல்லப்பிள்ளைனு ஃப்ளெக்ஸ் போர்டு வெச்சுப்பியாமா. ரொம்ப வெவரமான கொழந்தைதான்.
வாழ்க்கைல எப்பையாச்சும் உண்மையா இருந்தாதான் சின்மயி நிம்மதியா இருக்க முடியும். இல்லேன்னா சந்தோஷமா இருக்கறதா கடைசி மூச்சு வரைக்கும் நடிச்சிண்டே கெடக்க வேண்டீதுதான்.
மேல் பார்வைக்கு எதோ பாத்ரூம் பாடகராட்டம் முடிஞ்ச வரைக்கும் பாசிடிவா முணுமுணுக்கறாப்பல தோணும். 

நான் இன்ஸ்பெக்டர் ஆகறதுக்கு மின்னாடி டேக்ஸ் அசிஸ்டெண்ட்டா ஆர்.ஏ செக்‌ஷன்ல இருந்தேன். அப்ப அங்க ஹேமான்னு ஒருத்தி இருந்தா. ரூபலதான்னு இன்னொருத்தியும் இருந்தா. எங்களுக்கு கண்ணம்மா மேடம்னு ஒருத்தர் ஏ.ஓவா இருந்தா. இந்த ரூபலதா ஆடி அசைஞ்சி வந்துட்டு ஆப்பீசரம்மா ரூமாண்ட வரப்ப வேர்க்க விறுவிறுக்க வராப்பல ஸ்பீடா நொழைவா. ஹேமாவோட ஆம் ஆபீஸ் காம்பவுண்டுக்குள்ளையே இருந்துது. அதனால சீக்கிரம் வந்துடுவா. 9.15 ஆபீசுக்கு, டெய்லி கரெக்டா ரூபலதா வர நேரம் பாத்து இந்த ஹேமா ஆபீசரா எதுர்ல போயி ஒக்காந்துக்குவா. ரூபலதா அட்டெண்டென்ஸ் ரெஜிஸ்டர்ல கையெழுத்து போட பேனா தெறக்கும் போது தவறாம டெய்லி ஹேமா சொல்ற டயலாக் ஒண்ணு உண்டு.

பாவம், ரூபலதா மேடம் சீக்கிரம் வரணும்னு எவ்ளோ ட்ரை பண்ணாலும் டெய்லி எப்பிடியோ பத்தரை ஆயிடுது.

நம்ப பக்கம் மீனுல்லாம் வத்திடுத்து. வேற வழியில்லாம நம்ப மீனவா எல்லையத் தாண்ட வேண்டீதா ஆயிட்றது. அபிப்டின்னு நான் சொல்லலை இண்டஸ்ட்ரி சோர்சஸ் சொல்றது. கடல்ல வேற எல்லையும் இல்லையா.

மீனவாள்ளாம் மீன் கெடைக்காம கடல்ல பார்டரும் தெரியாம தாண்டிட்றாளா  அவா எடத்துக்குள்ள போனதால சிங்களவா கொன்னுட்றா.

இதுதான் மீனவன் அதரவு ட்விட்டா! பேஷ்!

16 வயதினிலேல ஸ்ரீதேவி சொல்லுவளே, உன்ன யாராவுது சப்பாணின்னு சொன்னா சப்புனு அறைஞ்சிடுன்னு, அது மாதிரி சின்மயி இதச் சொன்னதும் வந்து சப்புனு அறைஞ்சி சொல்றான் பாருங்கோ இந்த புள்ளையாண்டான்.
என்னதான் இருந்தாலும் எப்படி சுடலாம்னு நேரா பேர்போட்டுக் கேக்கறான் அந்தப் புள்ளையாண்டான். சின்மயி ரொம்ப சூட்டிகை. யார் வளப்பு? சும்மாவா. சப்புனு கன்னத்துல வாங்கிண்டதை சட்டுனு சமாளிச்சிண்டு ரீட்விட் பண்ணிட்றது. கைல சின் முத்திரை புடிச்சிண்டே பொறந்த கொழந்தைனா. இந்தக் கோந்தைக்கு அபிநயம் வராட்டா வேற எந்த கோந்தை வந்துடப்போறது?
இது ஏதோ நான் திரிச்ச கதை இல்லை. உரிச்ச கதை. நான் சொன்னதை முழுசா   போட்டுடறேன்
ஆக இது தனக்குப் புடிச்சிருக்குங்றதால, தீண்டத்தகாதவர்கள் ஒட்டுண்ணிகள்னு பண்ணித்தே அது மாதிரி பண்ணின ரீட்வீட்டு இல்லே இது. வேறவழியில்லாம பண்ணினது இது. ஆனா அதையும் தன் தளத்துல ஏதோ தனக்காத்தோனி போட்டதாட்டமா இதை போட்டுண்டு இருக்கு கொழந்தை. சரி இந்த நவீன் யாரு? அதுல இருக்கு சூட்ச்சுமம்.
இந்த ரீட்விட்டு கூட மீனவனுக்காக இல்லே ‘பெரிய கை’ மாதிரி தெரியறதே இந்த நவீனுக்காகதான். நாந்தான் சொன்னேனே இந்தப் பிரபலங்கள்லாம் இங்கேந்து ஒண்ணை அங்க நகத்தி வெக்கறான்னா அதுல எதோ ஒரு லாபம் இருக்கணும். சோழியங்குடுமி சும்மா ஆடுமா? சின்மயிக்கு ஆடி போயி ஆவணி வரட்டும். அப்பறம் பாருங்கோ.
ஆதி பராசக்தி தாயே! முண்டகண்ணி மாரியாத்தா! கஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி காசி விசாலாட்சி யார் உங்களை இப்படிச் சொன்னார்கள்? சொன்னது உண்மை என்றால் FIRல் இது ஏன் இடம்பெறவில்லை? ரேப் பண்ணுவேன் என்றவனை ஏன் இன்னும் விட்டு வைத்து இருக்கிறீர்கள். இல்லை ஆசிட் வீச்சு போல இது இன்னுமொரு புருடாவா? ரேப் பண்ணுவேன் என்று ஒரு பெண்ணைப் பார்த்து சொல்வது என்ன விளையாட்டு என்று நினைத்தீர்களா? நீங்கள் போகிற வேகத்தைப் பார்த்தால், நித்யானந்தாவின் கடைசி ஆயுதத்தை ஒட்டுமொத்த தமிழ்நாடும் கடைபிடிக்கும்படி செய்துவிடுவீர்கள் போல இருக்கிறதே. என்னைய்யா இது. அம்மாவுக்கும் பெண்ணுக்கும் ஒரே டைப் மோடஸ் ஆப்பரேண்டியா? மிரட்டல் ஒண்ணு மேட்டர் வேறை.

உங்களுக்கு பயந்து, நான் ஆம்பிளையே இல்லை என சர்ட்டிபிகேட் கொடுக்கச் சொல்லி பெருங்கூட்டம் ஹாஸ்பிடல்களில் அலைமோதுகிறதாமே. எடுத்ததுக்கெல்லாம் இப்படி ரேப் ஆயுதத்தைக் கையில் எடுப்பதை முதலில் நிறுத்துங்கள். உண்மையிலேயே வன்புணர்ச்சிக்கு ஆளான பெண்களை தயவுசெய்து கேவலப்படுத்தாதீர்கள்.

நான் சொன்னது தவறு என்றால் மன்னிப்பு கேட்டு சாஷ்ட்டாங்கமாய் எவன் காலிலும் விழத் தயங்காதவன். என்னைப் போய் மாமல்லன் திரிச்சுட்டார் என்கிறாயே அம்மா! இப்போது சொல் திரிக்கவில்லை மொத்தமாக தோலை உரிச்சுட்டார் என்று.

இந்த சாரு அஷடு ஒரு காலத்தில் நெருங்கிய நண்பன் என்பதால் அசட்டு பிசட்டென்று உரிமையோடு உளறி வாங்கிக் கட்டிக்கொள்ளுகிறதே தவிர, ஜெயமோகனோ எஸ்.ராமகிருஷ்ணனோ இந்த சனியனோட சங்காத்தமே வேண்டாம் என்று என் காற்றே தம் மீது படாததுபோல ஒதுங்கி இருப்பதைப் பார்த்தும் கூடவா உனக்கு என்னோடு மோத இப்படியொரு விபரீத ஆசை வந்தது சிசுபாலி?