Wednesday, December 12, 2012

மிரட்டலும் பாராட்டும்

மனுஷ்ய புத்திரனிடம் இருந்து அழைப்பு வருவதை அருகிலிருந்த கைபேசி அறிவித்தது.

நீங்க எழுதியிருந்த விவகாரங்களும் விகாரங்களும் படிச்சேன். ரொம்பப் பிடிச்சி இருந்துது. ரொம்ப ஒழச்சி எழுதி இருக்கீங்க. கடந்த ஐந்தாறு வருடங்கள்ல நடந்தது அதுல இருக்கு. 

சங்கர்ராம சுப்ரமண்யத்துக்கு மகஇககாரங்க செஞ்ச அநியாயத்துக்குக் கண்டணம் தெரிவிச்சி வெளி ரங்கராஜன் கூட்டம் ஏற்பாடு செஞ்சிருந்தாரு. பத்திருபது பேரு வந்திருந்தாங்க. சில மகஇககாரங்களும் கூட்டத்துக்கு வந்திருந்தாங்க. 

நான் பேசும்போது சொன்னேன், சங்கரராம சுப்ரமண்யம் போலவே நான் கூட வாடகை வீட்டுலதான் குடியிருக்கேன். என் வீட்டுக்கு வந்து பாருங்களேன். வாயில்லா பூச்சி, எந்த பின்னணியும் இல்லதவன்னா என்ன வேணா செய்வீங்களான்னு கேட்டேன்.

கூட்டம் முடிஞ்சதும் நாளைக்குக் காலைல வரோம்னு சொன்னாங்க. கண்டிப்பா வாங்க பாப்போம்னு சொன்னேன். மறுநாள் காத்திருந்ததுதான் மிச்சம். வருவாங்கன்னு நான் என்னென்ன ஏற்பாடுகள் செஞ்சிருப்பேன்னு அவங்களுக்குத் தெரியாதா என்ன? அந்த ஏரியா பக்கமே வரலை.

பத்திருபது வருஷத்துக்கு முன்னால இவங்களோடதான் இருந்தேன். என்னுடைய ஆரம்பகால படைப்புகள் மனஓசைலதான் வந்துருக்கு. 

ஒரு தடவை சூரிய தீபன் என்கிற பா.செயப்பிரகாசம், தோழர் நீங்க ஏன் காதல் கவிதைகளா எழுதறீங்கன்னாரு. தோணுது எழுதறேன்னேன். ஒரு புரட்சியாளன், புரட்சிக்கு அப்புறம் காதல் கவிதை எழுதறதுதான் சரின்னாரு.

யப்பா உங்க புரட்சி அரசாங்கத்தைவிட கொடுங்கோலன்கிட்டயே வாழ்ந்துடலாம்யான்னு விட்டுட்டு ஓடியாந்துட்டேன்.

அதே மாதிரி உங்க கட்டுரைல பெண்ணியத்தைப் பத்தி எழுதியிருந்தீங்க. பெண் கவிஞர்கள்தான் பெண்ணியம் பேசி கலக்குறாங்கன்னா, பெண்ணியத்துக்கு ஆதரவுன்னு இந்த எழுத்தாளர்கள் பண்ற கொடுமை தாங்க முடியில. 

நான் பொதுவா திருடன். ஆனா தண்ணி அடிச்சிட்டா ரொம்ப உண்மையா இருப்பேன்னு சொல்லிட்டு, மதுரையில சந்திக்க நேர்ந்த நெருங்கிய நண்பரான எழுத்தாளர்கிட்ட பேசிக்கிட்டு இருக்கும்போது, நீங்க ஏங்க விமர்சனமே எழுதறதிலைனு கேட்டேன். அவுருக்கு சட்டுனு நான் என்ன கேக்கறேன்னு புரியலை. இல்லியே இப்பக்கூட ஒரு கட்டுரை எழுதி இருக்கேனேன்னு சொன்னாரு. அதாங்க கேட்டேன்னேன். ஏங்க நான் முப்பதுகிட்ட கவிதைத்தொகுதி போட்டுருக்கேன். இதுவரிக்கும் நல்லதாவோ கெட்டதாவோ எதாவது விமர்சனம் எழுதி இருக்கீங்களா? ஒரு பெண் கவிஞருக்கு ஏழெட்டுப் பக்கம் கட்டுரை எழுதியிருக்கீங்களேன்னேன். கிட்டத்தட்ட சண்டையே வந்துடுச்சி.

இந்த விஷயம் உடபட நல்லா எழுதியிருந்தீங்க. அதைச் சொல்லத்தான் உங்குளுக்கு ஃபோன் பண்ணினேன் என்றார்.

இதற்கிடையில் பாரட்டப்படுவதன் மகிழ்ச்சிக் கூச்சத்தோடு,ஆமாமா, கண்டிப்பா, அதான போன்ற மானே தேனேக்களை இடையிடையே தூவிக்கொண்டு இருந்தேன்.

அவரது பேச்சை ஆரம்பத்திலிருந்தே நான் ரெக்கார்ட் செய்திருந்தால் நேரடியாக, நீங்கள் ஆதாரபூர்வமாய் இதை அவர் குரலிலேயே கேட்டு மகிழ்ந்து இருக்கலாம்.

இந்த உரையாடல் இரண்டு நபர்களுக்குள் நிகழ்ந்தது. நான் சற்றுமுன் குறிப்பிட்ட சொல்லை எத்துனை பேர் கவனித்தீர்களோ தெரியாது. விளக்க வேண்டியது என் கடமை.

சென்ற பத்தியில் ரெக்கார்ட் என்கிற வார்த்தையை பயன்படுத்தி உள்ளேன். 

நாங்கள் இருவரும் பேசுவதை சின்மயி அவர்களின் தாயாரான பத்மாசினி அம்மா அவர்கள் ரெக்கார்ட் செய்திருந்தால் அதற்கு பெயர் ரெக்கார்டிங்க அன்று Phone Tapping. 

என்னடா இவன் இருந்தாற்போலிருந்து பத்மாசினி அம்மாவை ஏன் இடையில் கொண்டு வருகிறான் என்று நினைக்கிறீர்களா? அநாவசியமாக அம்மாவை இழுத்தால் அவதூறு வழக்காகி விடாதா? அத்துனை அறிவுகெட்டவனா நான். இந்த 52 வயதில், பொருளாதாரக் குற்றங்களை ஆய்வுசெய்யும் மத்திய அரசுத்துறையில்,30 வருட செர்வீசில், பன்னிரண்டு வருடங்களாக ஆய்வாளனாக இருப்பவன், அவ்வளவு மடத்தனமாய் அத்துமீறல் செய்துவிடுவேனா?

எதிரில் இருப்பதாலேயே எவரும் எதிரியுமல்லர். சட்டத்தை அமல் படுத்தும் கடமை அளிக்கப் பட்டிருப்பதாலேயே அதிகாரி கனவானும் அல்லன்.

மேசைக்கு அந்தப்புறம் இருப்பவன் உண்மையிலேயே சட்டத்தை மீறியிருந்தால் மட்டுமே எதிரி. கடமையைச் செய்யக் கிடைத்த அதிகாரத்தை சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக துஷ்பிரயோகம் செய்யாமல் நடந்துகொண்டால் மட்டுமே இவன் கனவான். இல்லையெனில் அரசு வேலையில் சேரும்போது, I will do right to all manner of people in accordance with the Constitution and the law, without fear or favour, affection or ill will என்று எடுத்துக்கொண்ட சத்தியப் பிரமாணத்துக்கு என்ன பொருளிருக்கிறது.

எழுதுவதற்குக் கடப்பாடு கொண்டமையால் டெய்லி மூன்று வேளை எழுதியே கழிப்பவர்களும் சிந்திக்கக் கடன் வாங்கிவிட்டதால் வட்டியும் முதலுமாய் சிந்தித்துக் கொண்டே திரிபவர்களும் போலி ஐடிகளில் திரிவதையே மார்க்சிய லெனினிய பங்கர்களில் வாழ்வதாய் எண்ணி புரட்சிக் காரர்களைப் புடம் போட துருத்தியோடு அலைபவர்களும் மலிந்து கிடக்கும் இணையத்தில் புதிதாய் தோன்றியுள்ள சகலகலா வல்லுனர்தான் பத்மாசினி அம்மா அவர்கள்.

ராடியாவும் டாட்டாவும் பேசுவதை மூன்றாம் நபர் கேட்பதுதான் ஒட்டு கேட்டல். அவர்களது தனி உலகிற்குள் அவர்களது அனுமதியின்றி, அவர்களறியாமல் பிரவேசிப்பதுதான் குற்றம். அதற்குப் பெயர்தான் Phone Tapping. 

டாட்டாவும் ராடியாவும் பேசியதும் நானும் மனுஷ்ய புத்திரனும் பேசியதும் யாருடனோ பத்மாசினி அம்மா கத்தி க்ருஷ்ஷின் தாத்தா பாட்டியைக் குறிப்பிட்டு மிரட்டியதுமான உரையாடல்களில் யரேனும் ஒருவர் இல்லாவிட்டால் அது உரையாடலே இல்லை. தெவச மந்திரம் என்று வேண்டுமானால் சொல்லலாம். அதுதான் யாருக்காக முணுமுணுக்கப்படுகிறது என்பதைப் பற்றிய கவலையே இல்லாமல் கடனெழவே என முணுமுணூக்கப்படும். இருவருக்குள்ளான உரையாடலில் பங்குபெற்ற இருவருக்கும் உரிமை உண்டு. தானும் பேசிய ஒரு உரையாடலை அதில் பங்குபெற்ற மற்றொருவர் ரெக்கார்ட் செய்தால் அது எப்படி ஒட்டு கேட்பதாக ஆகும்? 

அம்மாவுக்கும் பெண்ணுக்கும் தெரிந்த ஒரே சட்டமேதை ரமேஷ் என்கிற மாயவரத்தான்தான். அவனைப் பார்த்து இது எப்படிப்பட்ட குற்றம் என்றால், பெயிலபுளா நான் பெயிலபிளா என்று அர்த்தம் போலும். ர்ர்ர்ர்ர்ர்வுண்டப் பண்ணுவதுதானே அவர்கள் குறி. சங்கர்ராம சுப்ரமண்யத்தை மகஇக செய்ததைப் போல. முன்னவர்கள் கட்சியில்லா கமிசார்கள். பின்னவர்கள் கமிசார்கள் இல்லாத மக்கள் கட்சி எனக் காட்டிக் கொள்பவர்கள்.

இது ஃபோன் டேப்பிங்கா என்றால், சஞ்சய் பிண்டோ இப்போது லாயராய் இருப்பதால் ஒருவேளை ஆம் என்று சொன்னாலும் சொல்லக்கூடும். ஏனென்றால் 2011ல் அவர் மீடியாக்காரர். இப்போது அவர் வக்கீல். அதுவும் உங்களது வக்கீல்.
மீடியாக்காரராய் இருந்த சஞ்சய் பிண்டோ 2011ல் கேடையமா வாளா என்று கேட்டு மீடியாக்காரர்களுக்காக அறச்சீற்றத்துடன் குரல் கொடுக்கிறார் Mylaw.net என்கிற பிளாகில். நம்மைப்போலத்தான் அவரும் ஒரு பிளாக் எழுத்தாளர். சென்னைக்காரராய் வேறு ஆகிவிட்டார். நீலம் புயலை எல்லாம் நிதானமாக வேடிக்கை பார்க்குமளவுக்கு ஃப்ரீயாக இருக்கிறார். பனகல் பார்க்கில் அடுத்த கூட்டம் வைத்தால் அவரையும் மறக்காமல் அழையுங்கள். தமிழில் எழுதாவிட்டால் என்ன தமிழ் கிளெயண்டுகளுக்கு நல்ல வக்கீல் கிடைக்கூடும் அல்லவா?


Of course, no one in their senses will deny the prevalence of yellow journalism and those who use the medium to settle personal scores with slander or to even blackmail others for a quick buck. But let’s not indulge in broad brushing. Let each journalist’s reputation speak for itself. Let aggrieved parties pay court fees and file civil suits for damages. Criminal Defamation, that allows persecution of credible journalists, is an unreasonable restriction on freedom of speech. Its rightful place is in the archive of legal history. Let defamation law be only a shield, not a sword.

Sanjay Pinto is a legally qualified national television journalist and the Editorial Director of Media Intelligence.

மீடியாக்காரராய் இருக்கையில் கருத்துச் சுதந்திரம் வேண்டும். மீடியாக்காரர்கள் மீது கிரிமினல் டிஃபமேஷன் கேஸ் போடக்கூடாது. வேண்டுமானால் கோர்ட் ஃபீஸ் கட்டி மானநட்ட வழக்கு போட்டுக்கொள்ளட்டும் என்று எழுதுவார்.

அதே மனிதர் சின்மயி அவர்களின் வக்கீலாய் ஆன பிறகு இந்து நாளிதழில் இப்படி எழுதுகிறார்.

Chennai Police Commissioner S. George has rightly indicated: ‘if you torment innocent people, we'll get you’.

சஞ்சய் பிண்டோ அண்ணே ஒன்றைச் சொல்லி மற்றதை மறைப்பது அறம் அல்ல அண்ணே! நீங்கள் குறிப்பிடும் அதே கமிஷனர் சார்தான் ஜூனியர் விகடனில் இப்படியும் கூறினார்.
கமிஷ்ணர் சார் கூறியதுபோலத்தான் தமது மறு பக்கத்தை மறைக்காமல் உண்மையாகப் புகார் அளித்தாரா சின்மயி? ஏற்கெனவே தலைக்குமேல் கிடக்கும் ஆன்லைன் கொள்ளை ஏடிஎம் கொள்ளை போன்ற கொடுங்குற்றங்களைத் தடுக்கவே ஆள் பற்றாக்குறையில் தவிக்கிறது போலீஸ் துறை.

போலீசுக்கு உதவியாய் இருக்குமே என்றுதான் ஆபீசுக்கு லீவ் போட்டுவிட்டு இந்தப் புலனாய்வில் இரவும் பகலுமாய் ஈடுபட்டிருக்கிறேன். இணையக் கடலில் தொபுகடீர் என குதித்து சைபர் கிரைமுக்கு உதவிசெய்யும் முகமாய், கமிஷணர் அவர்களின் சொல்லை சிரமேற்கொண்டு இந்தக் கட்டுரைகளை எழுதுவதோடு மட்டும் நில்லாது இதைப் புத்தகமாகவும் வெளிக்கொண்டு வர பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன். புத்தகம் வெளிவந்தால் மறைக்கப்பட்ட நீக்கப்பட்ட பல பக்கங்கள் தெரியவரும் சஞ்சய் பிண்டோ அண்ணேன். தமிழில் எழுதுபவன் எல்லாம் தரங்கெட்டவன் என்று இளப்பமாய் எண்ணிவிட்டீர்களோ?

The social media is most definitely a great embodiment of freedom of expression. But it obviously cannot be unbridled, offering a carte blanche to users to let loose, enter any discussion and vitiate the atmosphere.

vitiate the atmosphere இதே எழவைத்தானே சின்மயியும் அவரது அம்மா பத்மாசினி அம்மாவும் செய்தார்கள். அதுதானே இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம்.இதைத்தானே நானும் கட்டுரை அடுத்து கட்டுரையாகத் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டு இருக்கிறேன்!

தாழ்த்தப்பட்டவர்களைப் பற்றி, தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர்களைப் பற்றி தாறுமாறாக என்னவெல்லாம் பேசி இருக்கிறார்.

கைதானவர்கள் செய்தது ஆபாசம் என்றால் சின்மயி செய்தது ஆபாசம் இல்லையா என்றுதானே மனுஷ்ய புத்திரன் புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதத்தில் கேட்டார். அதே நிகழ்ச்சியில், ஆபாசப்பாடல்களைப் பாடுவதன் மூலம் நீங்களும் பங்களிக்கீறீர்கள் இல்லையா என்று நிர்மலா கொற்றவை கூறினார். இதை நிகழ்ச்சியையே பார்க்காத குஷ்பு எப்படி எதிர் கொள்கிறார் என்று பாருங்கள்.

எப்போதும்போல தனக்குத்தானே  “ஆ அந்த காலத்துல நான் ரேடியோ ஜாக்கியா இருந்த போது, இரண்டு டம்ளர் முறையைப் பத்தி ரேடியோல பேசி அது உலக நாடுகள்ல எதிரொலிச்சி பெரிய சமூக சேவை செஞ்சேனே என்னையப்போயி ஜாதீயவாதீன்னுட்டாங்களே” என்று கழிவிரக்கத்துடன் மோட்டு வளையைப் பார்த்தபடி புலம்பிக்கொள்கிறார். உடனே ஏகப்பட்ட விசிறிகள் ஓடிவருவார்கள இல்லையா அதற்காக.

குழந்தையின் விம்மலைக் கேட்டு, இம்முறை அஜ்ஜிபுஜ்ஜு நிகழ்ச்சி எப்பிடிம்மா போச்சு என்று வருகிறார் குஷ்பு.
நிர்மலா கொற்றவையை அந்த “முட்டாள் பெண்மணி” என்கிறார். அவர் என்ன பேசினார் என்பதை யார் மூலமோ கேள்விப்பட்டிருக்கிறார் போலும் குஷ்பு. சினிமாவில் ஆபாசம் என்று பேசினால் பின்னே குஷ்புவுக்கு பெரிய கோபம் வருவது இயற்கைதானே.கோவில் கட்டி கொண்டாடப்பட்ட குஷ்பு மணியம்மையாக நடித்தது நல்ல விஷயம். கவர்ச்சியால் நம்மை சொக்க வைத்த குஷ்புவுக்கு தமிழ்ச் சமூகத்தைப் பற்றி கொஞ்சமேனும் உள்ளே போயிருக்கும் என்று எண்ணியது வீண். பெரியார் படம் என்பது இன்னொரு படம் மட்டுமே போலும்.

சின்மயியைக் கேள்வி கேட்டாலே சிறை என்றிருந்த 22 அக்டோபர் 2012ஐ ஒட்டிய நாட்களிலும் நிர்மலா கொற்றவைக்கும் குரல் கொடுக்க ட்விட்டர் பொதுவெளியில் ஆட்கள் இருந்தார்கள் என்பதுதான் ஆறுதல். பேச்சு தொடர்வதையும் பாருங்கள்.
புதிய பெண்ணுரிமைப் போராளி. இன்னுமொரு பிரபலத்தின் திமிர் இளிக்கிறது.

சின்மயி தமிழ்நாட்டுக்கு செய்த இந்த இரண்டு டம்ளர் தொண்டுக்காக சீக்கிரம் எதாவது விருது வழங்காவிட்டால் தமிநாட்டுக்கு தலைவலிதான். டெய்லி இரண்டு முறை சொல்லிவிடுகிறார் பாவம்.

சஞ்சய் பிண்டோ அவர்களே! நேர்மையாகப் பாருங்கள் மீனவர் பிரச்சனை ஆரம்பிப்பதற்கு 20 நாட்கள் முன்பாகவே, ட்விட்டர் உலகில் அமைதி தவழ்ந்து கொஞ்சிக் கொண்டிருந்த போது, தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டைத் தவறு என நக்கல் நையாண்டியுடன், கனகாரியமாய்  31.07.2000த்தில் வெளியிட்ட தமிழக அரசின் ஆணையைத் தேடிப்பிடித்து 04.01.2011ல் காட்டி, (சாதி குறிப்பிடத் தேவையில்லைனு ) இருக்கு ஆனா நடைமுறையில் வேலைக்காவாது என்கிற ரீதியில் சின்மயி இழிவு படுத்தியது யாரைங்கண்ணா? தமிழக அரசை இல்லையா?

கட்சிகள் வரும் போகும் மக்கள் நலன் பேணும் அரசுகளும் அரசு ஆணைகளும் முக்கியம். அவை சரியாக இயங்கவில்லை என்றால் அவற்றைக் குறிப்பிட்டு கேள்விகேட்டு  நெறிப்படுத்துவது என்ன உங்களைப் போன்ற மாஜி பத்திரிகையாளருக்கும் வக்கீல்களுக்கும் மட்டுமே அரசியல் நிர்ணயச் சட்டம் அளித்த ஏகபோக உரிமையா? இல்லை அதை எங்களைப் போன்ற மக்கள் செய்தால் இவன்கள் யார் நமக்கு சமதையாய்ப் போட்டி போட என்று உங்களுக்கு உங்கள் தொழிலே ஆட்டம் கண்டுவிடுமோ என்கிற நடுக்கமா?

அரசையே தனிமனிதன் கேள்விகேட்கலாம் எனில் சின்மயி என்பவர் யார்? டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டு உளறுவது ஸ்டூடியோ என்றால் டைரக்டர் புரொட்யூசருக்குக் கவலை. பொதுவெளியில் உளறினால் அது atmosphere ஐ vitiate செய்வதாக ஆகாதா? இங்கே கவலைப்பட வேண்டியது, உங்கள் மொழியில் சொல்வதென்றால் காமன் மேன்களான நாங்கள்தானே. அதைத்தானே இந்தத் தமிழ் அறைகுறைகள் செய்தார்கள்?

Article 14 in The Constitution Of India 1949
14. Equality before law The State shall not deny to any person equality before the law or the equal protection of the laws within the territory of India Prohibition of discrimination on grounds of religion, race, caste, sex or place of birth

பத்திரிகையாளனுக்கு ஒரு சட்டம் படிக்கவே தெரியாதவனுக்கு ஒரு சட்டம் எழுத்தாளனுக்கு ஒரு சட்டம் எத்தத் தெரிந்தவனுக்கு ஒரு சட்டமா? எல்லோருக்கும் இது ஒன்றுதான் சட்டம். 

பிராமணர்கள் எல்லாம் நாஸாவில் வேலை பார்த்து டாலரில் சம்பாதித்துக்கொண்டிருப்பார்கள் ஹே என்பது பிராமணரல்லாதோரை இழிவாகப் பேசியது ஆகாதா மிஸ்டர் லாயர். சின்மயியின் மறைக்கப்பட்ட இந்தப் பக்கம் கமிஷ்ணர் அவர்களுக்குக் காட்டப்பட்டதா? வாய்க்கு வந்ததை சின்மயி பேசினால் அது ஆபாசமில்லை. அவற்றை எதிர்த்துக் கேள்வி கேட்போர் எல்லோரையும் கும்பல் என்று சொல்லி குண்டுக்கட்டாகக் கட்டி தலைக்கொரு செக்‌ஷனில் ர்ர்ர்ர்ர்ர்ர்வுண்டப் பண்ணி எல்லா செக்‌ஷன்களையும் எல்லோர் மேலும் போட்டு ஜஸ்ட் இருவரை மட்டும் உள்ளே தள்ளுவீர்கள். செந்தில் ஏண்டிசிபேட்டரி பெயில் எடுத்ததே ஷரண்கே வெளியில் வந்த பிற்பாடுதான் எனில் உங்கள் கரவுப் பார்வையில் வேறு யாருமே இல்லை ராஜன் மட்டுமே குறி என்பது தெளிவாகவில்லையா?

ராஜன் ஒருவன் மீது மட்டுமே சின்மயிக்கு வன்மம். அசிங்கப்டுத்தினான் என்பதல்ல அவன் குற்றம். நீங்கள் மகேஷ் மூர்த்தியிடம் அசிங்கப்பட்டதை அவன் உட்பட பலர் பார்த்துவிட்டனர். பார்த்ததோடு சும்மா இராமல் #tag போட்டதுதான் தவறு. ட்விட்டர் என்கிற பொதுவெளியில் எவனெவனோ அதே #TAG போட்டுப் பேசியதற்கெல்லாம் எப்படி ஒருத்தனை மட்டுமே பொறுப்பாக்குவீர்கள்?

சஞ்சய் பிண்டோ அவர்களே இந்தக் கேள்வியை சின்மயி அல்லது அவரது தாயார் பத்மாசினி அம்மா அவர்களிடம் கேட்டு இருக்கிறீர்களா?

அதுகூட வேண்டாம். பேசிய இருவரில் ஒருவர் ரெக்கார்ட் பண்ணினால் அது Phone Tapping கில் வராது என்று பத்மாசினி அம்மா அவர்களிடம் சொல்லித்தான் பாருங்களேன். அப்புறம் நீங்கள் டெல்லி பாம்பே கல்கட்டா டெய்லி பஜ்ஜி திங்கட்டா என்று  வேறு ஏதாவது நகரத்தில்தான் வக்கீல் தொழில் செய்தாக வேண்டும். அவர்களது வன்மம் அப்படியானது. அதற்கு உளவியல் ரீதியான காரணங்களும் அவர்களது சந்தர்ப்ப சூழல்களும் அதற்கான நியாயங்களும் இருக்கலாம். அதற்கு நமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்க வேண்டியதும் நமது கடமை. ஆனால் அதற்காக ஊரிலிருக்கும் தமிழனெல்லாம் எழவெடுத்துக்கொள்ள வேண்டுமா? எந்த நேரத்தில் நாம் பேசும் எது அவர்களுக்கு டபுள் மீங்காய்ப் பட்டுவிடுமோ? நாம் யாரையோ குறித்து எழுதுவது அவர்களைக் குறித்ததாய் எடுத்துக்கொண்டு விடுவார்களோ? என்று  எமெர்ஜென்சி காலம் போல எல்லாரும் நடுங்கிகொண்டு இருக்க வேண்டுமா?

என்னை மொக்கை மூஞ்சி என்று சொல்லுங்கள் நான் உங்கள் மீது 66Aவைப் பாய்ச்ச மாட்டேன் என்கிறார் ஐடி துறை அமைச்சர் கபில் சிபல். ஆனால் யாரையோ சொட்டை மூஞ்சி குண்டு மாங்கா என்றால் இது அவரைச் சொன்னது இது இவரைச் சொன்னது என கிளீங் பவுடராகக் கிளம்பிவிடுகிறதே உங்கள் கும்பல். அடுத்து சென்சாரால் அனுபதிக்கப்பட்ட பாக்யராஜ் படங்கள், நாட்டியத்தில் ஜாவளி பதங்கள் எல்லாவற்றையும் தடைசெய்துவிட்டு சின்மயியை மட்டும் சிம்மக்கல்லு சிம்மக்கல்லு சிம்முரண்டா நான் பாட விடுவதான் உங்களது வியாபார உத்தியா?

கொஞ்சம் குரூடாகச் சொன்னால்,கூட இருந்தே குழிபறிப்பதற்குப் பெயர்தானே எக்ஸ்போஸே. ஆனால் அப்படிச் செய்வதற்குப் பின்னால் சமூகப் பொறுப்பும் பொது நன்மையும் இருந்தால் உச்சநீதிமன்றமே பாராட்டும் இல்லையா?
அப்படித்தானே பர்க்கா தத்தையும் சோனியா வர்மாவையும் பாராட்டிற்று சுப்ரீம் கோர்ட்டு.

இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிசம் இருக்கலாம். இன்வெஸ்டிகேட்டிவ் இலக்கியம் இருக்கக்கூடாதா என்ன? உச்ச நீதிமன்றத்தில் டிரையல் நடந்துகொண்டு இருக்கையில் மீடியா விசாரணை இணையாய் நடந்ததற்கே  பரவாயில்லை என்று சொல்லியிருக்கிறது சுப்ரீம் கோர்ட்டு. இங்கே இன்னும் சார்ஜ் ஷீட்டே போடப்படவில்லை. இந்த நிலையில் கமிஷ்ணரின் கண்ணிலிருந்து மறைக்கப்பட்ட மறுபக்கத்தைக் காட்டுவதில் என்ன தவறு இருக்க முடியும்?

பத்மாசினி அம்மா அவர்களின் அதி பேமசான ர்ர்ர்ர்ர்ர்ர்ர்வுண்டப் பேச்சில் வெறுமனே க்ருஷ் என்று சொன்னால் எந்த க்ருஷ் என்று புரியாது போய்விடுமோ என்று தெளிவாக ஸிங்கர் க்ருஷ் என்றே கத்தோ கத்து கத்துகிறார். அவரது தாத்தா பாட்டியை உள்ளே தள்ளுவேன் என்கிறார், இவர் எப்படியானவர் என்பதை NDTV போலவே வெளிப்படுத்தும் எக்ஸ்போஸே தானே இந்த சவுண்ட் கிளவுட் ஒலித்துண்டு.

இதை ரெக்கார்ட் பண்ணி மறைக்கப்பட்ட இவரது முகத்தின் மறு பக்கத்தை அம்பலப்படுத்துவது என்பது சுப்ரீம் கோர்ட்டால்  பாராட்டப்படத்தக்க NDTV எக்ஸ்போஸே போன்றதேதான் இல்லையா? பாராட்டுதலுக்கு உரியவரைப் போய் Phone Tapping என்று பொய்சொல்லி பயந்த சுபாவியை மிரட்டுகிறார்.

தள்ளாத வயதடைந்த க்ருஷ்ஷின் தாத்தா பாட்டியை ரவுண்டப் பண்ணி உள்ளே தள்ளிவிடுவேன் என்று மிரட்டுகிறார். இப்படியெல்லாம் பொதுவெளியில் பேசக்கூடாது அம்மா என்றால், சஞ்சய் பிண்டோ அவர்களே,  நாளை உங்களுக்கும் இது கதிதான். இப்போது நான் கேட்கிறேன், இதெல்லாம் criminal intimidation கீழ் வராதா மிஸ்டர் சஞ்சய் பிண்டோ சார்?

Section 503 in The Indian Penal Code, 1860

Central Government Act Section 503 in The Indian Penal Code, 1860 503. Criminal intimidation.-- Whoever threatens another with any injury to his person, reputation or property, or to the person or reputation of any one in whom that person is interested, with intent to cause alarm to that person, or to cause that person to do any act which he is not legally bound to do, or to omit to do any act which that person is legally entitled to do, as the means of avoiding the execution of such threat, commits criminal intimidation. Explanation.- A threat to injure the reputation of any deceased person in whom the person threatened is interested, is within this section. Illustration A, for the purpose of inducing B to resist from prosecuting a civil suit, threatens to burn B' s house. A is guilty of criminal intimidation

சரி சட்டப்படியே கூட, Phone Tapping பற்றி Indian Telegraph Act, 1885 என்ன சொல்கிறது? http://cis-india.org/telecom/telecom-knowledge-repository/indian-telegraph-act 

S.21: Using unauthorized telegraphIf any person,
 • knowing or having reason to believe that
 • a telegraph has been established or is maintained or worked in contravention of this Act,

 • transmits or receives any message by such telegraph,
 • or performs any service incidental thereto, or
 • delivers any message for transmission by such telegraph or
 • accepts delivery of any message sent thereby
Fine which may extend to fifty rupees

S.30: Retaining a message delivered by mistakeIf any person
 • fraudulently retains, or
 • conceals
 • removes
 • holds without any reason any message
 • which ought to have been delivered to some other person, or,
 • being required by a telegraph officer to deliver up any such message,
 • neglects of refuses to do so
Imprisonment for a term which may extend to 2 years, or with fine, or with both.
இருவர் பேச்சில் ஒருவர் வலையேற்றினால் குற்றம் என்று எங்கே இருக்கிறது? 
abcdவழி தமிழ் எழுதும் ரா.ராகவையங்கார் மற்றும் முனா ராகவையங்கார் அவர்களின் பேத்தி குறிப்பிடும் ரைட்டர்களில் கண்டிப்பாக நான் ஒருவன் இல்லை. கவிஞர்களில் மனுஷ்ய புத்திரனும் இல்லை. நானாவது 30 கதைகளை மட்டுமே புத்தக வடிவில் உடையவன்.போதாக்குறைக்கு இவற்றை எழுதிக்கொண்டிருப்பவன் எனவே ஆட்டத்தில் நான் இலை. மனுஷ்ய புத்திரனோ 30 புத்தகங்களுக்கு மேலாய் கவிதை எழுதியவர் ஆனால் புதியதலைமுறை தொலைக்காட்சியில் சின்மயியை அரைவேக்காடு என்கிற ரீதியில் சொல்லிவிட்டார். எனவே அவரும் இல்லை. 

வீடு பத்திரமான இடம் என்ற மாலனோ இப்போதெல்லாம் கவிதையே எழுதுவதில்லை. இனி எழுதக்கூடும் என்பதும் சநந்தேகமே. அவர்தான்  சின்மயியை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கிறாரே எனவே சின்மயி குறிப்பிடும் கவிஞர் அநேகமாக செல்வேந்திரன் அண்ணாவாகத்தான் இருக்க வேண்டும். காரணம் அவர்தான் நிறைய கவிஞர்களை அறிமுகப்படுத்துகிறாரே எனவே சின்மயிக்கு அவர் பெருங்கவிக்கோவாகத் தோன்றுகிறார் போலும்.

சஞ்சய் பிண்டோவுக்கும் மாலனுக்கும் இறுதியாகவும் உறுதியாகவும் நான் அளிக்கும் அறிவுரை என்ன வென்றால் அம்மா பெண் இருவருக்கும் கனவில்போய்க்கூட புத்திமதி சொல்லிவிடாதீர்கள். சொன்னால் இந்த மாஜி தற்கொலைப் படைவீரரின் கதிதான் உங்களுக்கும். சின்மயிக்காக களம்பல கண்ட TheMidZone என்கிற இந்த வீரர், என்னைக் கரித்துக் கொட்டியவர். இருந்தாலும் ஷர்ண்கேவை சில ட்விட்டுகளில் ஆதரித்த  ஒரே காரணத்துக்காக, அந்த ட்விட்டுகளை டிலீட் பண்ணியும் தாய் சேய் இருவராலும் மன்னிக்கப்படவில்லை. அவ்வளவு எஃகு உறுதி கொண்டவர்கள் இருவரும். பாருங்கள் கிழம் மண்டியிட்டு எப்படிப் பரிதாபமாகக் கதறுகிறது என்று. 
அம்மா பெண்ணின் கால் பட்டு தனக்கு சாபவிமோசனம் கிடைத்துவிடாதா என ஏங்கும் இதற்கு, எவரோடு ர்ர்ர்ர்ர்ர்ர்வுண்டப் பண்ணப்பட்டு எப்போது மறுமைக்கு விமோசனம் கிடைக்கப்போகிறதோ, அப்போது நான் சின்மயி விவகாரம் - மறுபக்கத்தின் குரல் என்று இந்த ஜென்மத்துக்காக இரண்டாம் பாகக் கட்டுரைகளை எழுத நேரிடலாம்.

இது அச்சேரும் போது கிடைத்த தகவல் இந்த பாவப்பட்ட பெரியவர். ட்விட்டர் கணக்கையே ஊழ்த்தி மூடிக்கொண்டு சென்றுவிட்டார்.