Sunday, December 16, 2012

சேரியைக் கரிக்கும் சின்மயி

தமது தந்தை காலத்திலேயே, அதாவது அவர்களின் 62 வயதை வைத்துக் கணக்குப்போட்டால் 1950களிலேயே, வேலைக்காரர்களாயிருந்த பள்ளக்குடிகளைப் பார்த்து, அண்ணா அக்கா ஐய்யா என்று மரியாதையுடன் அழைக்கக் கற்றுக்கொடுத்துப் பிள்ளைகளை வளர்த்து, பரமக்குடியிலிருந்த தமது ஐயங்கார் வீட்டில் சகஜமாக பள்ளர்களை வளையவர அனுமதித்த பாரம்பரியம் மிக்க குடும்பம் தமது என்கிறார் தாய். தம் அப்பாவைக் கொண்டு அப்படியே வளர்ந்திருக்கிறாள் தம் மகள். ஆகவே தம் மகள் தலை சிறந்த மனிதாபிமானி என்று சான்றிதழ் வழங்குகிறார். போதாக்குறைக்கு கார் நிறுத்தும் இடத்தில் இருக்கும் கடைநிலைப் பணியாளர்களுக்கும் முதுகை வளைத்துப் பணிவுடன் பணம் கொடுத்து டோக்கன் வாங்கிகொள்ளும் அளவுக்குப் பணிவின் தலைக்காவிரியே சின்மயிதான் என்கிறார் அவரது அம்மா ப்த்மாசினி.

இப்படியெல்லாம் வலிந்து தம் மகளை பணிவின் சிகரமாகக் காட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் ஏன் வருகிறது? யதார்த்தத்தில் கூந்தல் குட்டையாக இருப்பவருக்குதானே பட்டுக் குஞ்சல நீள ஜடையலங்காரம் தேவை..

இவர்களது அரதப்பழைய பிராமண மதிப்பீடுகளை இணைய வெளியெங்கும்  வாந்தியாய் எடுத்துத் த்ள்ளுவார்கள். என்ன இது பொது வெளியை இப்படி மாசு படுத்துகிறீர்களே என்று கேள்வி கேட்டால், அது இந்த ஆதரவற்ற ஐயங்கார் குடும்பத்துக்கு எதிரான தாக்குதலாகிவிடும். வன்ம டையில் உங்கள் பெயர் பதியப்படும். நீங்கள் மட்டுமல்ல, வழக்கமாக நீங்கள் தேனீர் அருந்தும் டீக்கடை குஞ்ஞுண்ணி நாயரும் இந்த கூட்டுச் சதியில் ஒருவராக உங்கள் தலைமையில் மெம்பராக்கப்படுவார். வன்ம ரேடாரின் எல்லைக்குள் நீங்களும் உங்களிடம் பேசுபவர்கள்,சந்திக்கும் நபர்கள் என்று ஒவ்வொருவரும் வந்துவிடுவீர்கள். இந்த சமூகத்தில் சந்திக்கும் அன்றாட கறுப்புத் தமிழர்கள் எல்லோரும் ’கும்பல்’ என முத்திரை குத்தப்படுவீர்கள். இந்த கும்பலை தலைமை ஏற்று நடத்துவது நீங்கள்தான் என்றும் தமிழ் ட்விட்டர் பிளகர் ஃபேஸ்புக்காரர் என எல்லோரையும் அணி திரட்டி அவர்களுக்கு எதிராய் தாக்கத் தூண்டுகிறீர்கள்  என்று அம்மாவும் பெண்ணும் நம்பத்தொடங்குவார்கள்.அவர்கள் நம்ப தலைப்பட்டாலே உங்களுக்கு நாசகாலம் ஆரம்பித்துவிட்டது என்றுதான் பொருள். அடிமனதில் தக்க தருணம் நோக்கி வன்மம் ஊறல் போடப்பட்டுக் காத்துக்கொண்டிருக்கும். என்றாவது எங்காவது எவராவது தளர்ந்த நிலையில் சற்றே சறுக்க நேர்ந்தால் அவரோடு உங்களை முடிச்சு போட்டு அவரை நீங்கள்தான் தூண்டியதாய் A1 ஆக்கப்படுவீர்கள். இதுதான் ராஜனுக்கு நேர்ந்தது.

ராஜனுடன் எந்த சம்பந்தமும் இல்லாது, ஷரண்கே சுயேட்சையாய் சின்மயியின் பொது வெளி வாந்தியைக் கண்டித்த போதே அவர் கண்காணிப்புக்கு ஆளாகிவிட்டார். அம்மா பெண்ணின் வன்மப் பார்வையில் பட்டுவிட்டார். அவர் சற்றே சறுக்கி யதேச்சையாய் பேசப்போக, தக்க தருணம் பார்த்து நீறுபூத்த நெருப்பாய் ஒன்றேகால் வருடம் உள்ளூர பதுங்கி இருந்த ராஜனுடனான முன்பகை தருணம் பார்த்து ஷரண்கேவையும் சேர்த்துப் பொசுக்கிவிட்டது

04 அக்டோபர் 2012க்கு ஒன்றேகால் வருடம் முன் என்னதான் நடந்தது?

17 ஜுன் 2011 அன்று காலை சின்மயி ஸ்ரீபாதா அவர்கள் இந்து பேப்பரைப் புரட்டிக் கொண்டிருந்தார். அப்போது அவர் கண்ணில் இந்த செய்தி பட்டது.
இது சொல்லும் கருத்து என்ன?

மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நடக்கும் விரிவு படுத்தல் பணிகளுக்காக, சலுகை விலையில் மின்சாரம் வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் அதை சில காண்ட்டிராக்டர்கள், வர்த்தக ரீதியிலான கட்டிடம் கட்டவும் பயன்படுத்திக்கொண்டனர். இது முறைகேடு. சலுகை விலைக்கும் வர்த்தக விலைக்கும் இடைப்பட்ட தொகை மின்வாரியத்துக்கு இழப்பு.அந்த  இழப்பீடு உடனடியாகக் கட்டப்பட வேண்டும் என்று நோட்டீஸ் அனுபபட்டு இருக்கிறது. இது சொல்வதோ பெரிய பெரிய காண்ட்ராக்டர்களைப் பற்றி. அவர்கள் செய்யும் மோசடி பற்றி. அதனால் EBக்கு ஏற்படும் இழப்பைப் பற்றி.

1940-50களில் காலை வாக் போய்விட்டு காலார நடந்து வருகையில், பரமக்குடி பள்ளர் குடிசையில் போய் கஞ்சி குடிப்பாராம் ஒரு ஐயங்கார். அவரது குணத்தை அப்படியே உரித்து வைத்த பேத்தி, 2011ல் அதற்குப் பிராயச்சித்தமாய், இப்படி ஒரு ட்விட் போட்டார்.

ஒரு நண்பன் டாடா ஸ்கை டிஷ்ஷை குடிசையில் பார்த்தானாம். அதை போட்டோ எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். (இதுகளுக்கெல்லாம்) மின்சாரமும் டாடா ஸ்கையும் வாங்குவதற்கான பணமும் எங்கிருந்து வருகிறது என்று கேட்கிறார்.

பத்திரிகை சொல்லிய செய்தி என்ன? அதிலிருந்து உங்களுக்கு எழும் கேள்வி என்ன? 

சின்மயி! உண்மையான கலைஞன் என்பவன் யார்? கண்ணில் பட்ட சின்ன விஷயத்திலிருந்து உலகளாவிய பெரிய விஷயத்துக்குத் தாவுபவன் இல்லையா? உங்களையே எடுத்துக்கொள்வோம்.

மையா மையா பாடலுக்கு முன்னால் ஏ.ஆர்.ரஹ்மான் உங்களிடம் என்ன சொன்னார். இந்தப் பாட்டை மொதல்ல இப்படி ஆரம்பி, அப்பறம் கற்பனையில அந்த மூடுக்குள்ள போயி நீயா பாத்துக்கோ.  இது அரபிக் சாங்குகளோட ஸ்டைல்ல இருக்கணும் இதை மனசுல வெச்சிகிட்டு  ஃப்ரீயா பாடிக்கோ என்றார். இதை வைத்து அவர்போட்ட அடிப்படை இசையிலிருந்து நானாகவே மனோரீதியில் பாடிய பாடல் அது  என்கிற அர்த்தத்தில் நீங்கள் தொலைகாட்சியில் சொன்னதைக் கேட்டபோது, சத்யஜித் ரேயின் Patol Babu Filmstar என்கிற கதை நினைவுக்கு வர நெஞ்சு விம்மிற்று. கிடைத்ததை வைத்துக் கூடு பாய்வதே கலைஞனின் காரியம். இதனால்தான், மண்ணில் பிறந்த மானிடர் அனைவரும் பிறப்பிலிருந்து இறப்புக்குச் செல்கையில் கலைஞன் மட்டும் இறவாமைக்குச் செல்கிறான்.

இந்து பேப்பரில் படிக்க நேர்ந்த விமான நிலைய மின் வருவாய் ஏய்ப்பு, உங்களை சேரியிலும் இது போலத்தான் நடக்கிறதோ என எண்ண வைத்தது. ஏழர சொல்லியது போல, அப்பர் மிடில் கிளாஸ்காரகளான நம்மிடம் இருக்கும் அதே டாடா ஸ்கை டிஷ் குடிசையில் எப்படி இருக்கப்போச்சு என்று சிந்திக்க வைக்கிறது.

உங்கள் வீட்டில் இருக்கும் அதே டாடா ஸ்கைதான் கமல் ரஜினி முதல்வர் பிரதமர் சோனியா ஜனாதிபதி ரத்தன் டாட்டா என எல்லார் வீட்டிலும் இருக்கிறது. ஒருவரை ஒருவர் ஒப்பிட்டால் மற்றவர் கீழே என்பதால் டாடா ஸ்கைக்காரன் அலுமினியம் பித்தளை சிலவர் கோல்டு பிளாடினம் என்றா தயாரித்துக் கொடுக்கிறான்.

மனிதராய்ப் பிறந்த அனைவருக்கும் ஒரே வழியாகத்தான் உள்ளே போவதும் வெளியேறுவதும் நடக்கிறது. 

உங்களது குருவான அம்மா ட்விட்லாங்கரிலும் பிளாகிலும் மூச்சுக்கு மூச்சு சொல்லிக் கொள்வதைப்போல ஊருக்கெல்லாம் யோகம் யாகம் நிஷ்ட்டை தியானம் என்று சொல்லிகொடுப்பதை உங்களுக்கு போதிப்பதில்லையா? 

அவர் பாவம் பக்கெட்டும் கையுமாக, நீங்கள் எடுத்துக்கொண்டே போகும் இது போன்ற வாந்திகளை எல்லாம், அவர் பாவம் பக்கெட்டும் கையுமாக பின்னால்வந்தபடியே சால்ஜாப்பு கந்தையால் துடைப்பது போன்ற பாவனையில் என் கொழந்தை எடுத்திருப்பதன் டிசைன் இதுவல்ல, மற்றவர்கள்தான் இதையெல்லாம் வக்கிரமாய் தலைகீழாய்ப் பார்க்கிறார்கள் என்று, 62 வயதில் உங்கள் அம்பாசிடராக அல்லாடிக்கொண்டிருக்கிறார். ஓவராய் எடுத்துவிடும் வாந்தியால் உங்களது உடலில் நீரளவு குறைந்து நீங்கள் சோர்ந்து போகும் போது, அவர் உங்கள் அக்கவுண்டில் புகுந்து ட்விட்லாங்கராய் போட்டு ஆங்கிலத்தில் அந்தக் காலத்துல நாங்க என்று ஆலாப்பாய் அள்ளி வீசுவார்.

உங்களுக்கும் உங்கள் தாயாருக்கும் எனக்கும் கூடையில் என்ன பூ குஷ்பு என்பதைப்போல குடிசையில் என்னபூ டிஷ்பு என்று அதிக பட்சம் இது ஒரு அசட்டுக் கேள்வியாகத்தான் படும். ஒரு போதும் ஆசிட் வீச்சாகப் படாது.

காரணம், எவ்வளவுதான் தீவிரமாக சிந்தித்தாலும் பறையராகவோ பள்ளராகவோ நாம் இருந்ததில்லை நம் முன்னோரும் இருந்ததில்லை. பொருளாதார ரீதியில் நாம் ஏழை பிராமணர்களாய் இருந்திருக்கலாம், ஆனால் ஜாதீய ரீதியில் மனிதனாகவே இல்லாது இருந்த சந்ததி அனுபவித்த வலிக்கு அது ஒப்பாகுமா?
Edgar Thurston (1855-1935) Castes and tribes of southern India (1909)
இந்தப்படம் கற்பனையில்லை செட்டு போட்ட செட்டப்பும் இல்லை. ஆதியனாதி காலமும் இல்லை. பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை என்று பாடிய பாரதி வாழ்ந்த காலத்தில் நடைமுறையில் இவர்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என விதிக்கப்பட்டிருந்த கொடுமைதான் இது,

பாரதி பாடியதன் உண்மையான அர்த்தம் நமது குறுத்தெலும்பில் போய் என்றாவது குத்தி இருக்கிறதா? மனிதரில் ஒரு பகுதியினர் பறையராகவும் தீய புலையராகவும் மனிதருக்கும் கீழாக நடத்தப்பட்டனர் என்கிற அன்றைய யதார்த்தைச் சுட்டிதானே அவர்களுக்கும் விடுதலை என்று. கவிஞனாக அவன் ஆவணப்படுத்தினான்.

வரலாறு தெரிந்த எந்த சேரிக்காரருக்கும் பள்ளருக்கும் பறையருக்கும் சின்மயி எழுதிய ட்விட்டு அவர்கள் முகத்தில் வீசப்பட்ட அமிலமாய் இருக்காதா?
இது மகளின் அக்கவுண்டிலிருந்து அம்மா எழுதிய ட்விட்லாங்கர். அவரது கோவிந்தா கோவிந்தோ கோ-விந்தோக்களின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்துக்கும் குறைவு. மகளுடையதோ லட்சத்துக்கும் மேல். அதிக எண்ணிக்கையில் பாரம்பரியப் பணிவு விற்பனை.

எங்களது அப்பா, அந்த காலத்தில் சுத்தமாக இருந்த பள்ளர்களின் குடிசைகளில் போய் கேழ்வரகு கஞ்சி குடித்தார் என்று உங்களது அம்மா ட்விட்லாங்கர் எழுதினார். நீங்கள் என்னடாவென்றால் தாத்தா கஞ்சி குடித்து 70-80 வருடம் கழிந்து சொல்கிறீர்கள் சேரிக்காரனுக்கெல்லாம் கஞ்சி குடிக்கவே ததிகிங்கிணத்தோம், இதில் எப்பிடி இவர்கள் டாடா ஸ்கை வைத்துக்கொள்ள முடியும்? கரண்டு பில் கட்ட முடியும் என்று?

ஆனால் உங்களைப் பார்த்து உங்கள் விசிறிகளில் ஒருவர் யதார்த்தமாய் கேட்கிறார். ஒரு பாட்டுக்கு எவ்வளவு ரேட்டு என்று. உங்கள் பதில் என்ன சின்மயி? “நோ” இல்லையா? ஏன்?
அவர் அப்படிக் கேட்க நேர்வதற்குக் காரணம் அதிலேயே இருக்கிறது. நீங்கள் ஜிம்பக ஜிம்பா என்று ஏதோ சத்திய சந்தர் போல முதலில் சொன்னதற்கு, சொல்லொன்று செயலொன்று இல்லாதவர் போலும் என்று எண்ணி அப்பாவியாய்க் கேட்டுவிட்டார்..

உங்களது உண்மையான சம்பளத்தை என்னவென்று சொல்ல மாட்டீர்கள். காரணம் அதையும் பேலன்ஸ் ஷீட்டையும் குத்துமதிப்பாய்க் கணக்கிட்டு இவ்வளவு வரும்போல இருக்கிறதே இவ்வளவுதானே காட்டுகிறார் என்று யாரேனும் வருமான வரி துறைக்குப் போட்டுக்கொடுத்து விடுவார்களோ என்கிற பயம் இல்லையா சின்மயி? இருக்கட்டும் இருக்கட்டும் நீங்களெல்லாம் பிஸ்கோத்து. உங்களையெல்லாம் பார்க்க வருமான வரி துறை இறங்கினால் ஏரியாவுக்கு ஒரு ஆயகர் பவன் கட்டவேண்டியதாய் ஆகிவிடும்.

எவரும் எவரிடமும் என்ன சம்பளம் என்று கேட்பது அநாகரிகம்தான். அதேசமயம்  குடிசையில் எப்படி டாடா ஸ்கை டிஷ் இருக்கப்போச்சு என்பது எதில் சேர்த்தி? டிஷ்ஷுக்கும் கரண்டுக்கும் மாத சந்தாவுக்கும் இந்தச் சேரிக்காரனுக்கு ஏது காசு என்பது அநாகரிகமோ ஆபாசமோ இல்லையா? இந்த ஆபாசத் தாக்குதகுக்காக எந்த செக்‌ஷனைக் காட்டி பத்துப் பதினைந்து நாள் புழல் தீர்த்தயாத்திரைக்கு உங்களை புக் பண்ணுவது எப்படி என்று சஞ்சய் பிண்டோவிடமோ சைபர் கிரைமிடமோ கேட்கலாமா?

He was a very pious, compassionate man very loving and very caring but could never tolerate nonsense or idiocy. Much to my surprise, the element of my father is seen in Chinmayi. 

அது எப்படி சின்மயி எங்கள் வீட்டில் எல்லாம் இல்லாத அதிசய அபூர்வ தாத்தா உங்க்ளுக்கு மட்டும் வாய்த்தார். பிரபலத்திற்கு வர்த்தகக் கட்டாயம் எனவே பில்டப்பு செட்டப்பு எல்லாம் ஓகே. பிரபலத்தின் தாத்தாவுக்குமா பில்டப்பு என்று எவனும் சிரிக்கக்கூடாது என்று சீக்கிரம் ஒரு இடைக்காலத் தடை வாங்கி விடுங்கள். உங்கள் அம்மா அவரது தந்தையின் குணம் அப்படியே உங்களிடம் இருப்பதாய் சிலிர்த்துகொண்டார். எங்களுக்கு உங்கள் தாத்தாவை நேரடியாகத் தெரியாது. ஆனால் உங்கள் குணமோ ட்விட்டு மேல் ட்விட்டாய் பல்லிளிக்கிறது. எனவே உங்கள் தாத்தாவின் குணம் அவரையே உரித்து வைத்து இருக்கும் பேத்தியைப் போலவே நான்சென்ஸ், உங்களது அம்மாதான் ஓவராய் பிலிம் காட்டுகிறார்  என்று நாங்கள் எடுத்துக்கொள்ளலாமா?

உங்களைப்பற்றி, உங்கள் அம்மா அவரது பிளாகில் காட்டுகிற இன்னொரு பிலிம். உங்களுக்கு ’சின்மயி’ என பெயரிட நேர்ந்த காரணத்தை , ஆன்மீக கோமிய மணம் பொங்க விளக்குகிறார் உங்கள் தாயார்.

சின் முத்திரை என்றால் என்ன? கடவுளர்கள் அருள் பாலிக்கும் யாமிருக்க பயமேன் தோற்றம். கட்டைவிரலையும் சுட்டுவிரலையும் வளையமாக்கி மற்ற மூன்று விரல்களையும் நீட்டமாக வைத்துக்கொண்டிருக்கும் புனிதத் தோற்றம். தியானம் செய்ய பத்மாசனமிட்டு உட்கார்ந்த நிலையில் முட்டிமேல் கைகள் இருக்கும் போஸ். இந்த பதம ஆசனம்தான் பத்மாசினி என்கிற அவரது பெயருக்கும் காரணமோ. நல்லதொரு குடும்பம் கொல்கலைக் கழகம்.
தொடர்ந்து குழந்தைகள் தக்காமல் தவறிக்கொண்டே இருந்த குடும்பத்தில், பிறந்திருக்கும் இது, மண்ணு கட்டியாக இருந்தாலும் பரவாலில்லை, பிழைத்துக் கிடக்கட்டும் என்று எளிய மக்கள் மண்ணாங்கட்டி என பெயர் வைப்பதும் உண்டு.

உங்கள் தந்தை வழி பாட்டனார்,  சின்மையானந்தாவின் அத்யந்த சிஷ்யர் அதனால்தான் உங்களுக்கு சின்மயி என்கிற பெயர் வைத்திருக்கக்கூடும் என்று ஊகிப்பதற்கு எங்களுக்கெல்லாம் ஐன்ஸ்டீன் மூளையா தேவை?
உங்கள் குடும்பத்துத் தனிப்பட்ட சிக்கலுக்குள் மூக்கை நுழைப்பது என் நோக்கமல்ல. அதேசமயம், எவர் மீதும் புனித பிம்பம் பொய்யாகப் போர்த்தப்படுவதை பார்த்துக்கொண்டு கள்ள மெளனம் காக்காமல் அம்பலப்படுத்துவதும் எழுத்தாளனாக என் கடமை. சின்மயி என்கிற பெயர் இப்படித்தான் வந்தது என்று நான் கூறவரவில்லை. இப்படியும் வந்திருக்கலாம் என்கிற சாத்தியத்தைப் பொதுவெளியில் வைத்து கடந்து செல்வதே என் காரியம்.

மத்தவர்களெல்லாம் பெத்துப்போட்டார்கள். சின்மயி மட்டும் அவதரித்தார் என்பதுபோல எழுதிக்கொள்ளுங்கள் தவறில்லை. வர்த்தக உலகில் விளம்பரம் செய்துகொள்ளாதவன் வீணன். ஆனால் பொதுவெளியில் அடுத்தவர் மீது காறிக்காறித்துப்புகிற குழந்தை, அவதாரமே என்றாலும் கண்டிக்கப்பட வேண்டியது அவசியம் என்பதையும் ஒப்புக்கொள்ளுங்கள்.

பத்மாசினி அம்மா! பிறக்கும் போதும் வளரும் போதும் நம் குழந்தை சின் முத்திரையோடும் சேரிக்காரன் குழந்தை கத்திக் கபடாவோடும் இருப்பதில்லை இரண்டுக்கும் மூக்கொழுகும். இரண்டுமே மூத்திரக் குண்டிதான். இரண்டுக்கும் அடுத்தவர்தான் பீ துடைத்தாக வேண்டும்.

நான் பார்க்கும் டாடா ஸ்கையை எனக்கு இணையாக இந்தச் சேரிப் பயல்களும் வைத்திருப்பதா என்கிற பிராமண மேட்டுக்குடி  மனப்பான்மையன்றி இது சின் முத்திரை காட்டும் கடவுளின் காருண்ய அம்சமா? சேரிக்காரர்களுக்கு இந்த பெயர்க் காரண பில்டப் எல்லாம் எவரும் கொடுப்பதில்லை. அதற்கு அவசியமும் இல்லை. தங்களை தெய்வீகக் குழந்தை என்று விற்றுக்கொள்ள வேண்டிய மார்க்கெட்டிங் நிர்பந்தம் உங்களைப்போல் அவர்களுக்கு இல்லயே.

உங்கள் வீட்டுக் காப்பவுண்டுக்கு வெளியில், காலை முதல் மாலை வரை இஸ்திரிப் பெட்டியை எடுத்தெடுத்து வைத்துத் தேய்த்துக்கொண்டு இருக்கிறாரே அவர் ஒரு நாளைக்கு எவ்வளவு தேய்க்கிறார் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்று உங்களுக்குத் தெரியுமா சின்மயி? அவர், ஹாடோஸ் ரோட் பாஷ் அபார்ட்மெண்டில் குடியிருக்க முடியாது என்பதால் கேவலம் ஒரு டாடா ஸ்கை வைத்துக்கொள்ளக்கூடவா அவரால் முடியாது?

குடிசைகளில் கொடுக்கப்பட்டு இருக்கும் மின்சார இணைப்புகளெல்லாம் திருட்டுத்தனமாய் இழுத்தவையா? அவர்களிடம் மின்னட்டை உண்டா இல்லையா என்று உங்களுக்குத் தெரியுமா? அவர்களுக்கு ஓட்டு உண்டு. ஓட்டர் அடையாள அட்டையும் உண்டு. அது வேண்டுமென்றால் அதற்கு அடிப்படைத் தேவையான ரேஷன் கார்டும் உண்டு. சென்னையில், கிராமப்புறம் போல அவ்வளவு சுலபமாய்  கம்பி போட்டு எல்லாம் கரண்டு இழுக்க முடியாது, எது ஒன்றுக்கும் EB பெட்டிக்குத்தான் போயாக வேண்டும்.

முட்டாளுக்கு மூணு இடத்துல என்பது கிட்டத்தட்ட சேரி பழமொழி. 

தெருவில் நடந்து போய்க்கொண்டு இருந்தவன், எதையோ மிதித்துவிட்டான். ஓரமாய்ப் போய் காலைத் தேய்த்துக் கழுவிக்கொள்வதை விட்டு, தான் மிதித்தது  என்ன என்று குனிந்து பார்த்து கையால் அதை எடுத்தானாம். பார்க்க சந்தனம் போல் இருந்ததாம். சந்தனம்தானா என்று தீர்மானமாய்த் தெரிந்தால்தான் ஆச்சு என்று மூக்கருகில்கொண்டு போய் நெருக்கத்தில் வைத்து முகர்ந்துவேறு பார்த்தானாம். அப்போதுதான் தெரிந்ததாம் அது, ’அது’ என்று. அதுவரை காலிலும் கையிலும் மட்டுமே பட்டிருந்த ’அது’ இப்போது மூக்கிலும் ஒட்டிக்கொண்டதாம். கார்ப்பரேஷன் பள்ளியில் படித்தால்தான் இது போன்ற பட்டறிவுத் தத்துவக் கதைகளெல்லாம் தெரியவர வாய்ப்பு உண்டு. தரை லெவல் பரஹம்சர் கதைபோல இல்லயா இது?

முதலில் போட்ட ட்விட்டோடு அடங்கவில்லை உங்களது அறச்சீற்றம். சில மணி நேரம் கழித்து திரும்பிவந்து விட்ட இடத்திலிருநது ஆலாப்பைத் தொடர்கிறீர்கள்.காலில் பட்டதை உடம்பெல்லாம் பூசிக்கொண்டே தீருவது என உறுதியாய் இருக்கிறீர்கள்.

எங்கள் வீட்டுப்பக்கத்தில் இருக்கும் சேரி என்று இந்து பேப்பருக்கு சுட்டி கொடுக்கையில் நீங்கள் கூறியதற்கு ஆதாரம் கிடைக்கவில்லையே, ஐயோ ஆதாரமின்றி பேச நேர்கிறதே என்று வெகுவாக வருத்தப்பட்டேன். இது ஒன்றே போதும்.

எனக்கொரு உண்ம தெரிஞ்சாவணும் ஞ்சாமீ! வறுமையில் வாழும் சமூகத்தால்  எவ்வளவு கரண்டு திருடப்படுது. அதனால EBக்கு இழப்பு எவ்வளவு?

ஈபிக்கு இழப்பு, ஏஜி சொன்ன 2ஜி மேரி மூணு மடங்கு இருக்கலாம்னு வெச்சுக்குங்களேன். அப்பிடின்னு கவிராஜன் @kavi_rt நக்கலாய் ஒரு ட்விட்டு போட்டு, கடந்து சொல்லலாம். ஆனால் எல்லாரும் அப்படித்தான்  சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. எல்லா பந்தையும் எல்lOரும் சிக்ஸர் தூக்கிவிடுகிறார்களா?

இதுவரை பொறுமையாய் இருந்த ஷரண்கே பொறுக்க முடியாது வருகிறார். கடுப்பாய் பதிலடி கொடுக்கிறார். ”தோடா அறிவுஜீவி வாந்தி, சீக்கு பீடித்த மனதிலிருந்துதான் இப்படியான கருத்து வரமுடியும்”. என்கிறார்.

ராஜனை நீக்கச்சொல்லி, மகேஷ் மூர்த்தியிடம் அசிங்கப்பட்டதைப் போல, சேரியைப் பற்றி எதுவுமே தெரியாமல் உளறிக்கொட்டி, ஷரண்கேவிடமும் அசிங்கப்படுகிறார் சின்மயி. இதுதான் சின்மயிக்கும் ஷரண்கேவுக்கும் விழுந்த முதல் சிடுக்கு. 

ஷேவ் பண்ணிக்கும் போது ஒரு நரை முடி வந்துருக்கறதை தசரதன் கண்ணாடியில் பாத்தானாம். யாரும் பாக்கலையானு அக்கம்பக்கம் பாட்துட்டு படக்குனு அந்த ஒத்த முடியைப் புடுங்கினானாம். இவன் இங்க புடுங்கினா, அங்க இலங்கைல ராவணனோட கீரிடம் ஆடிச்சாம். கீரன் சொல்வாரு. வயசாயிடுச்சிங்கற நெனப்பு தசரதனுக்கு வர, பட்டாபிஷேகத்துக்கு ப்ரொப்போசல் போட, கூனி தன் பழைய வன்மத்தோட கைகேயிகிட்ட தூபம் போட, கைகேயி வரம் கேக்க, ராமன் சீதையோட காட்டுக்குப் போக, ராவணன் சீதைய டாவடிக்க, ராமன் அவனைக் காயடிக்கிறதா முடியிது ராமாயணக் கதை.

அது மாதிரிதான் அறிவுஜீவி வாந்தின்னு சின்மயியைப் பாத்து சொன்னபோதே,  ஷரண்கேவை எக்மூர் கமிஷ்ணர் ஆபீஸ்ல வெச்சி படம் எடுக்க NDTV கேமராமேன் லென்சைத் தொடைக்க ஆரம்பிச்சுட்டார். 

04 அக்டோபர் 2012ல் நடந்த யதேச்சையான செந்தில் - ஷரண்கே உரையாடலுக்கு,  உன்னைக் கோர்ட்டு கோர்ட்டாய் அலைய விடுவேன் என்று சின்மயி சொல்லும் வரை, இந்த உரையாடல் பெரிய பிரச்சனையாகும் வரை, ராஜனுக்கும் ஷரண்கேவுக்கும் இடையில் மெய்ல் பரிமாற்றம் தொலைபேசி  உரையாடல்க்ள் என எந்த உறவும் இல்லை. சைபர் கிரைம் போலீஸ் விசாரணையில் இதை கணக்கில் எடுத்துக்கொண்டதா? தரவுகளைப் பரிசீலித்துதான் இவர்களை ஒரே ’கேங்’ என்கிற முடிவுக்கு வந்தனரா? கனம் கோர்ட்டார் அவர்களே ராஜன் ஷரண்கே இருவரின் இயங்கு தளங்களுமே வெவ்வேறானவை.

ராஜனுக்கும் செந்திலுக்கும் பொறி வைத்திருக்கிறார்கள் என்பதே ஷரண்கேவுக்குத் தெரியாது. இதுதான் சத்தியம்.

ராஜன் போட்ட #அசிங்கப்பட்டாள் சின்மயி TAGகில் ஷரண்கே பங்கு பெற்றதற்கான தரவுகளை மனுதாரர் கொடுக்கட்டும்.

அவர்கள் தரப்பு, கனம் கோர்ட்டார் அவர்கள் இதைச் சொல்வதற்காக மன்னிக்க வேண்டும். சின்மயி தரப்பு,மாயவரத்தான் செல்வேந்திரன் என்கிற அரைகுறைககளாலும் பொய்யர்களாலும் ஆனது.ராஜனுக்கும் ஷரண்கேவுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்கிற, அவர்களுக்குத் தெரிந்த உண்மையை, சின்மயிக்கும் அவரது தாயாருக்கும் விளக்காமல், இதை வைத்து நாடகமாடி உள்ளார்கள். வேண்டுமென்றால் இதை தங்கள் சேம்பரில் தனியாக விளக்குகிறேன். தேவைப்பட்டால் தனி பதிவாகவும் எழுதி சமர்ப்பிக்கிறேன் மைலார்ட்.
ஷரண்கே மீது சின்மயி கொடுத்த புகாரில் இரண்டாவது அய்ட்டம், கேஸ்ட்டிட்டு ரிமார்க் சொன்னார் என்பது. பாப்பாத்தி என்பது ’கேஸ்ட்டிட்டு ரிமார்க்கா?’ புரட்டு நாடகத்தின் முக்கிய அங்கம் இது.

இதைப் பேசும் இருவரிடமும் #அசிங்கப்பட்டாள் சின்மயி என்கிற TAG இருப்பதால் சின்மயிக்கும் சின்மயி அம்மா பத்மாசினி அவர்களுக்கும் இவர்களும் ராஜன் ‘கும்பல்’ என்கிற எண்ணம் ஏற்பட்டு இருக்கலாம். காரணம் அம்மாவும் பெண்ணும் முனுக் என்றாலே ஏவுகணையின் பொத்தானை அழுத்திவிடும் அபாயகரர்கள். குறைந்த பட்சம் ஏவுகணை தம் எதிரியை நோக்கி இருக்கிறதா தம்மை நோக்கி இருக்கிறதா என்று கூடப் பார்க்கிற பொறுமையற்றவர்கள்.

இந்த ஏழர என்பவர் கம்யூனிஸ்ட்டு. அவர் பெண்களை நிச்சயம் இழிவு படுத்த மாட்டார். அப்படி இழிவுபடுத்தி எழுதி இருந்தால் அதை ஏன் கமிஷ்ணரிடம் சமர்ப்பிக்கவில்லை? இந்த ட்விட்டில் அவர் சொல்வது என்ன?

“அந்தம்மா ஒரு சராசரி அப்பர் மிடில் கிளாஸ் பாப்பாத்தி மெனக்கெட்டு எதிர்த்தெழுகிட்டிருப்பது வெட்டி வேலை. நிறுத்துங்கப்பா #AsingappattalChinmayi"

”நிறுத்துங்கப்பா” என்பது TAG போட்டு எழுதுவோரை கண்டிக்கும் செயலா இல்லையா?

இந்த பிரச்சனையில் சின்மயிக்கு ஆதரவு நிலை எடுத்திருக்கும், முற்போக்காளர்களும் பெண்ணியப் பெரும்பிடுகுகளுமான லீனா மணிமேகலையும் ஷோபா சக்தியும்   ”அந்தம்மா ஒரு சராசரி அப்பர் மிடில் கிளாஸ் பாப்பாத்தி” என்கிற இதே கருத்தைத்தானே சொல்கிறார்கள். இல்லை என்று மறுக்கச்  சொல்லுங்கள் பார்ப்போம். பிராமணத்தி என்று கலாயம் பூசி சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம்.

பிராமணத்தி என்று சொல்லாமல் பாப்பாத்தி என்று சொன்னால், ஜாதிவெறி தாக்குதலா? அப்புறம் குடியிருப்புகளைக் கொளுத்துவதை எதில் கொண்டு சேர்ப்பது? சின்மயியை அவரளவில் சேரிக்காரனின் டாடா டிஷ் வயிறெரிய வைக்கிறது. இதே கருத்தாக்கம்தானே தர்மபுரியில் தந்திரமாய்க் கொள்ளையடித்துவிட்டுக் கொளுத்தச் செய்கிறது. வன்முறை செயலில் இருப்பதைக் காட்டிலும் ஆபத்தானது கருத்தில் இருப்பது. செயல் ஒரு நாளில் முடியக்கூடியது. கருத்து உள்ளே கனன்று கனன்று, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வன்மமாய் தலையை நீட்டும். வெளிதோறும் விஷம் விதைத்தபடியே இருக்கும்.

என் கட்சிக்காரரான ஷரண்கே, ஏழர சொல்லியதற்கும் ஒரு படி மேலே போய், தான் கேள்விப்பட்ட தகவலை சரியென நம்பி, அதைச் சொன்னாலாவது இந்தப் பசங்கள் சின்மயியை சும்மா விடுவார்களா என்று, அந்தம்மா பாப்பாத்தியே இல்லையாமே நாயுடுன்னு யாரோ சொன்னாங்க என்கிறார்.

மேலும், ஏழர மற்றும் ஷரண்கே இருவருமே ’பாப்பாத்தி’ என்கிற வார்த்தையைப் பயன்படுத்தி இருக்கையில் ஏன் ஷரண்கே மீது மட்டும் ’கேஸ்டிட்டு ரிமார்க்’ என்கிற புகார் கொடுக்கப்படுகிறது? Article 14 . Equality before law. சஞ்சய் பிண்டோ கேசில் அவர் சார்பாக வைக்கப்பட்ட வாதங்க்ளில் ஒன்று, எல்லா தொலைக் காட்சிகளும் காமராஜ் வீட்டு ரெய்டை ஒள்பரப்பி இருக்கையில் NDTV மீது மட்டும் ஏன் வழக்கு என்று கேட்கப்பட்டதல்லவா? அதே போல ஷரண்கே மீது மட்டும் ஏன் கேஸ்டிஸ்ட்டு புகார்? இதில் இருப்பது உள்நோக்கம் இல்லாமல் வேறு என்ன? அவர்கள் தரப்பு வக்கீலான சஞ்சய் பிண்டோ இந்த புகாரைக் கொடுக்க எப்படி ஒப்பினார்?

9.16kdm ஐயங்காரான தம்மைப்போய் நாயுடு என்று சொன்னதே தமக்கு அவமானம் என்று சின்மயி கோஷ்டி நினைக்கிறது என்றால் அதற்கு ஷரண்கே பொறுப்பில்லை. சின்மயியின் பரம்பரையும் அவரது அம்மாவும்தான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

ஏழரயும் சரி ஷரண்கேவும் சரி அந்தம்மா என்றே மரியாதையாக அழைப்பதை கனம் கோர்ட்டார் அடிக்கோடிடும்படி வேண்டுகிறேன்.

இருவருமே  #AsingappattalChinmayi TAG போட்டது சின்மயியை அசிங்கபட வைக்க அல்ல. அந்த TAG போட்டால்தான் சம்பந்தப்பட்ட # TAG காரர்களை அது சென்றடையும் என்பதால்தான்.

நண்பன் யார் எதிரி யார் என்பதே தெரியாமல், குதிரையில் விரலை வைத்ததே போதும் என்று துப்பாக்கியைத் தலைகீழாய்ப் பிடித்துக்கொண்டு தம் கால் விரல்களுக்கே குறி வைத்துக்கொண்டிருக்கும் சின்மயி கும்பலிடம் பேசப்போவதே வீண் என்பதால்தான் கனம் நீதிபதி அவர்களே இந்த ஆட்டைக்குள்ளாகவே மாமல்லன் நுழையவில்லை.

எவ்வளவு நேரம்தான் ஜட்ஜிடமே பேசிக்கொண்டு இருப்பது. என் தலையையே பார்த்துகொண்டிருக்க, பாவம் அவருக்கும் சலிப்பாக இருக்குமில்லையா. 
காரில் போகும் போது, நீங்கள் பார்க்க நேரிடும் தெருவோர பஜ்ஜி போண்டா தள்ளுவண்டி கடைகளில் தொங்கும் குழல் விளக்குகளுக்கான மின்சாரம், தலைக்குமேல் இருக்கும் மின் கம்பிகள் மீது, ஒயரால் கல்லாங்கோல் போட்டுத் திருடித்தான் எடுக்கப்படுகிறது என்கிற எண்ணத்தில்தான் இருக்கிறீர்களா சின்ன அம்மாயி?
வாணலி அடியில அடுப்பு, அடுப்புல நெருப்பு. நெருப்புக்கு முன்னால இட்லிக்குண்டான். இட்லிக்குண்டானுக்கு முன்னாடி மஞ்சா கலர்ல இருக்கு பாத்தியாம்மா அதுக்குப் பேர்தான் பேட்டரியாம். உங்க கார்ல இருக்கில்ல, அதே மாதிரி, ஆனா சின்ன சைசு பேட்டரி. அதை தெனம் தெனம் கொண்டுபோய் சார்ஜ் பண்ணி கொண்டாந்துதான் இவ்ளோ பளிச்சுனு வெளிச்சம் அதுலதான் நடக்குது அவங்க வியாபாரம். உங்க அம்மா, அவங்க அப்பா வீட்டு சீதனமா கொண்டாந்த கரண்டை இங்க யாரும் களவாண்டுடலையம்மா.

வடை போண்டா சமோசான்னு எதை எடுத்தாலும் ஒரு ரூவானு இருந்துது இந்த போட்டா எடுத்தப்ப. கட்டுப்படியாகலைனு இப்பத்தான் ரெண்டு ரூவாயா வெலையை ஏத்தி விக்கிறான். நம்பளவா கிட்டேந்து எதையும் திருட்டுத்தனமா அவன் எடுத்துடறதில்லை தாயி. வண்டிக்குள்ள கைதவறி விழுந்துட்டதைக்கூட ஊதிட்டு நைஸா பொட்டலத்துலகூட கட்டமாட்டான். நாய்க்கு போட்டுடுவான். பவுடர் பூசி ஆர்க் லைட்டுல பொய் முகத்தைக் காட்டிகிட்டுத் திரியாம, நம்பளைவிட நியாயமா, பேட்டரில கிடைக்கிற வெளிச்சமே போதும்னு தன்னையும் தன் குடும்பத்தையும்  கவுருதையா காப்பாத்திகிட்டு நல்லாவே வாழறான் இந்த பாய் பையன்.

ஷரண்கே உங்களை அறிவுஜீ வாந்தி என்றதும் உங்கள் மறுமொழி என்ன?
ஆமாம் சின்மயி. நீங்கள் சொல்வது சரிதான். பரமக்குடி அக்கிரகாரமும் பள்ளர்கள் சேரியும் எந்த காலத்தில்  ஒரே மொழியைப் பேசின? எந்த காலத்தில்  ஒரே மாதிரி இருந்தன? நம்பளவாளைத்தவிர எல்லோருமே நமக்கு பஞ்சமர்களும் சூத்திரர்களும்தானே.

”மறவன் சீமை வளர்த்த தமிழ் புலவர்கள்” என்றால் மறவர்களின் ஆதரவில் தமிழ் வளர்த்தவர்கள் என்று பொருள்படும்.

”தமிழ் வளர்த்த மறவன் சீமைப் புலவர்கள்” என்றால் தமிழ் வளர்த்த மறவர் சீமையைச் சேர்ந்த புலவர்கள் என்று பொருள்படும்.

அழுத்தத்தை எங்கே கொடுக்க விரும்புகிறீர்கள் சின்மயி? மறவர்களுக்கா? தமிழ் வளர்த்த உங்கள் தாத்தாக்களுக்கா? இல்லை சமய சந்தர்பத்துக்குத் தகுந்தார்ப்போல என்கிறீர்களா?

“தமிழ் வளர்த்த குடும்பம்” என்பது இவ்விரண்டு வாக்கியங்களில் எதனுடன் பொருந்துகிறது என்று சீர்தூக்கி வாக்கியத்தை அமையுங்கள் தமிழ் புலவர் குடும்பத்து அம்மணி. 1900களில் பஞ்சைப் பராரிகளாய் இருந்து சமூக விழிப்புணர்வின் காரணமாய் கல்வி கற்று,பரம்பரைக்கே முதல் பட்டதாரிகளாய்  ஆகியிருக்கும் பெரும்பாலானோரை அப்புறம் வக்கணை பேசலாம்.

தேவர் மகன் படத்தின் கதைக் களம் எது? கதை நடக்கும் நிலம் எது?

இஞ்சி இடுப்பளகா மஞ்சச் செவப்பளகா என்கிற பாடலை ஜானகிக்கு பதிலாக நீங்கள் பாடி இருந்தால், இஞ்சி இடுப்பழகா மஞ்சச் செவப்பழகா என்றுதான் பாடி இருப்பீர்களா?

கமலோ ராஜாவோ இதை அனுமதித்து இருப்பார்களா? மாட்டாகள் எனில் ஏன்?

இவனுங்களுக்கெல்லாம் ’ழ’ வே சரியா ஷொல்ல வராதுன்னு மறவர் சீமை பரமக்குடி பஸ் டேண்டுல போயி ஹிஹினு சொல்லிப் பாருங்களேன். செவிள் என்ன ஆகுதுனு பார்ப்போம்.

நீங்கள் வாந்தியெடுத்தாலும் அதை மற்றவர்கள் பஞ்சாமிர்தமாய் ஏற்கவேண்டும். ஆனால் உங்களது சமூகவிரோத உளறலுக்கு எதிர்த்து காட்டமாய்ப் பேசினால், அவர்களைப் பரதேசி என்று நாசூக்காய் சொல்வீர்கள் இல்லையா? இதன் பின்னே இருக்கும் தந்திரம், நான் அப்படி சொல்லவே இல்லை என்று அம்புட்டுக்கொள்ளும் போது தப்பித்துக்கொள்ளத்தானே அம்மிணி.

சின்மயி நீங்கள் சினிமாத்துறையில் இருப்பவரில்லையா? மிகப்பழைய புகைப்படங்கள் இரண்டை நான் அனுப்பி வைக்கிறேன். இரண்டு படங்களில் இருக்கும் பெண்களும் கிட்டத்தட்ட ஒரே வயதில் ஒரே சாயலில்தான் இருக்கிறார்கள். ஒரு படத்தில் மணப்பெண் அணிந்திருக்கும் உடைகளையும் அலங்காரங்களையும் அணிகலன்களையும் இன்னொரு படத்தில் திறந்த மேனியாய் இருக்கும் பெண்ணுக்கு ஃபோட்டாஷாப் உத்தி மூலம் அணிவித்து பார்த்துச் சொல்லுங்கள், இருவருக்குள்ளும் எதாவது வேறுபாடு தெரிகிறதா என்று?
இந்தியா இலங்கை என்கிற வித்தியாசம் இல்லாமல் தலித்துகள் இப்படி மட்டுமே நடத்தப்பட்டனர் என்பதுதான் வரலாறு. 

பிராமணர் உடைகளையும் அணிகலன்களையும் அவர்களுக்கு ஃபோட்டோஷாப்பில் போட்டாலே இருவருக்குள்ளும் பெரிய வித்தியாசம் இல்லை, இருவருக்குமே பாந்தமாகப் பொருந்துகிறது. உடைக்கே இப்படி என்றால், மகாபாரத காலத்தில் இருந்தே நம் மூதாதையர்களுக்கு பிதுரார்ஜிதமாக அளிக்கப்பட்டிருந்த அனைத்து அறிவையும் வசதிகளையும் ஆதிவாசிகளுக்கும் பறையர் பள்ளருக்கும் அளித்துப் பாருங்கள் சின்மயி. யார் கண்டார் நிஜமாகவே நாம் பரதேசிகளாய் ஆக நேர்ந்தாலும் நேரலாம். நாஸாவில் டாலரில் சம்பாதித்துக் கொண்டு இருக்கும் பரதேசியாக அல்ல அரபு நாடுகளில் பொது பொந்துகளில் ஒடுங்கிக் கிடக்கும் பரதேசிகளாக.

அப்படி அவர்களுக்கு அனைத்தையும் அளிக்கவும் அதை அவர்கள் எடுத்துக்கொள்ளவும் அனைத்திலும் நமக்கு சமதையாக வரவும் எவ்வளவு காலம் ஆகக்கூடும் சின்மயி? அதுவரை இட ஒதுக்கீடு அவசியமில்லையா? இவர்களுக்கு 60 ஆண்டுகளாகக் கொடுத்த 22.5% ஒதுக்கீட்டுக்கே நாம் இவ்வளவு குதிக்கிறோமே. காலாகாலமாய் நாம் அனுபவித்துக்கொண்டிருந்த 100% ஒதுக்கீட்டுக்கு எங்கே போய் முகத்தைக் கவிழ்த்துக் கொள்வது?

பிறப்பால் எல்லோரும் சமம் என்பதை புத்தர் குரலில் கூறினாலும் அதில் தொனிப்பதென்னவோ இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கயமைதான் சின்மயி! இல்லவே இல்லை என்று மறுப்பீர்களேயானால் இது என்ன? எவனோ சிறு பிள்ளைத்தனமாக, லோக்பால் வந்தால் இட ஒதுக்கீடு இருக்காது என்பதை ஆங்கிலத்தில் கொணஷ்ட்டையாக எழுதுகிறான். உடனே ஜிங்கு ஜிங்கு என்று குதித்துக்கொண்டு சூப்பர் என்று ரீட்விட் செய்கிறீர்கள்.

சின்மயி தாயே நீங்களும் உங்கள் அம்மாவும் சேர்ந்து 26 அக்டோபர் 2012ல் புளுகியது உங்கள் பிளாகிலேயே உள்ளது. அது ஸோ-கால்டு தாழ்த்தப்பட்டவர்கள் என்று 04 ஜனவரி 2011 அன்று நீண்ட உரையாடலை நீங்கள் ஜி.ஓ.எண் 205ஐக் காட்டி துவக்கி வைத்ததைத்தான் http://twitoaster.com/country-in/chinmayi/exists-but-not-in-pratise-why/ தாழ்ந்த தாழ்த்தப்பட்ட மீ நோ தமிழ், மீ கான்வண்ட். தமிழ் ஆத்தா நஹி என்றெல்லாம் யாரோ ஒரு பெண்ணுக்காகக் கூறியது என்று நீக்குப் போக்கு சால்ஜாப்பு சொல்லி சமாளித்ததுதான் அது. என்ன சொல்கிறேன் என பிடிபடவில்லையா? இந்தா பிடித்துக்கொள்ளுங்கள் அம்மாவும் பெண்ணும் படித்துக்கொள்ளுங்கள்.
ஆனால் மாமிகளே மேலே உள்ள ரீட்விட்டு எப்போது? கொஞ்சம் கண்ணைக் கழுவிக்கொண்டு பார்த்துச் சொல்லுங்கள். அப்படியும் சரியாகத் தெரியவில்லை என்றால் மாயவரத்தான் செல்வேந்திரன் என்கிற தீவட்டித் தடியன்கள் இருவரையும் நன்றாக வெளிச்சம் விழும்படி நெருங்கி வந்து பிடிக்கச் சொல்லுங்கள். மேலே இருப்பது 22 டிசம்பர் 2011. இங்கே நீங்கள் சைடு வாங்கி சைக்கிள் கேப்பில் # RT is not endorsement என்றெல்லாம் பஜனை பாட வழியில்லை. சூப்பர் என்று சொல்லி அதற்கு இரண்டு ஆச்சரியக்குறிகள் வேறு போட்டு மாட்டிக்கொண்டிருக்கிறீர்கள்.

சின்மயி உங்களுக்கு RTயில்தான் கண்டம். மனுஸ்ம்ருதி தீண்டத்தகாதவர்களை ஒட்டுண்ணிகள் என்கிறது என்பதையும் RT போட்டுதான் மாட்டிக் கொண்டீர்கள். இப்போது இதற்கும் RT போட்டுதான் மாட்டிக்கொண்டு இருக்கிறீர்கள். எல்லாம் வெவ்வேறு மாதங்கள் தினங்கள். 04 ஜனவரி 2011லும் தாழ்த்தப்பட்டோரின் இட ஒதுக்கீடுக்கு எதிராகத்தான் இருந்தீர்கள் 22 டிசம்பர் 2011லும் மேற்படி ட்விட்டில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராய்தான் இருந்தீர்கள். 04 அக்டோபர் 2012 அன்று தீண்டத்தகாதவர்களை ஒட்டுண்ணி என்பதைத்தான் RT செய்தீர்கள். அது கைதவறி நான் பண்ணியது என்று உங்கள் ஆத்தா வந்து சப்பைக்கட்டு கட்டினார்கள். இப்போது கிடைத்திருக்கும் இதை என்ன உங்கள் ஆயா வந்து அது சின்மயி லேது மனதே  என்று காதில் பூ வைக்க ஏற்பாடு செய்யப் போகிறாரா உங்களைப் பெத்த அம்மாயி!

ஏன் இந்தக் கேவலமான பிழைப்பு சின்ன அம்மாயி!

எதைச் சொல்லும் முன்பாகவும் நன்றாக யோசித்துச் சொல்லுங்கள். சொல்லிவிட்டால் ஆமாம் நான்தான் சொன்னேன் அது என் கருத்து என்று நாணயமாக நில்லுங்கள். குறைந்தபட்சம் நேர்மையான பிற்போக்காளர் என்றேனும் மிச்சமிருப்பீர்கள். அப்படி நின்றால் தொழிலில் நிற்க முடியாது என்கிற பயம்.  அதே சமயத்தில் ஏழை பாழைகளை ஜாதியில் தாழ்த்தப்பட்டவர்களைப் பார்த்தால் அடிமனத்திலிருந்து பீறிடும் அசூயை.  நீங்கள் பாடும் பாட்டுக்கு தட்டில் விழும் காசுகளில் தலித்துகளுடையவையும் இருக்கின்றன என்பதை ஒரு போதும் மறவாதேயுங்கள்.

பெத்த அம்மாயி பத்மாசினிகாரு இப்போது சொல்லுங்கள் என் குழந்தை இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவள் இல்லை என்று.

கூப்பிடுங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஸ்டார் அட்ரேக்‌ஷன் குஷ்பு அவர்களை, ஆதரிக்கிறாரா சின்மயியின் இந்த அக்ரஹார மனோபாவத்தை என்று கேளுங்கள். தலித்துகளுக்கு எதிரான, இட ஒதுக்கீட்டுக்கு எதிரான, இந்த ஆசிட் வீச்சுகளை ஆதரிக்கிறாரா என்று கேளுங்கள். இல்லை என்றால் முன்னால் வந்து முதலில் கண்டிக்கச் சொல்லுங்கள்.

கடவுளைப் பராமரித்துக் கொண்டிருந்த பட்டர், சற்றே கவனமற்று கண்ணயர்ந்த தருணத்தில்  இறைவனின் அம்சம் வெளியேறிவிட்டது போல, அரசியலில் அம்பேத்கரும் இசையில் இளையராஜவும் அவதரித்துவிட்டால் போதுமா? இவர்களுக்கு யார் ஒதுக்கீடு கொடுத்தார்கள் அவர்களாகவே முன்னேறி வரவில்லையா என்று கேட்டு அதி புத்திசாலிகளாய் முதுகில் ஷொட்டிக் கொள்ளுகிறார்கள் நம்மவர்கள். மேதைகளை உதாரணம் காட்டி மிச்சமீதிகளாய் இருப்போருக்கு வாழ்வாதாரத்தையே மறுக்கப் பார்ப்பது கயவாளித்தனம் இல்லையா சின்மயி? 

உங்கள் கொள்ளுத் தாத்தா ரா.ராகவையங்கார் தமிழ் வரலாறு எழுதினார். உங்களிடமோ தமிழும் இல்லை வரலாற்று அறிவும் இல்லை. அதற்காக உங்களை ஆதரிக்காமல் போயிற்றா தமிழகம்? அல்லது அப்பா வழி உனக்கு ஸ்ரீகாகுளம்தானே என்று ஆந்திராவுக்குக் கைகாட்டிற்றா தமிழ்நாடு?
தமிழகத்தின் தஞ்சாவூர் பாணி கர்நாடக சங்கீதத்தை இங்கு வந்து கற்றுக்கொண்டு, அதை ஆந்திராவில் பரவலாக்கிய, கடந்த 03 ஆகஸ்ட்டு 2012ல் நூறாவது வயதில் நுழைந்திருக்கும் அப்பா வழி தாத்தா பத்ம பூஷன் (மருத்துவ) டாக்டர் ஸ்ரீபாதா பிணாகபானி அவர்களின் தூரத்து வாசனை கொஞ்சமேனும் மிச்சமிருந்தால் தமிழகத்தையும் தமிழர்களையும் தூற்றாதிருக்க முயலுங்கள் சின்மயி.

முந்தின ஓவரின் கடைசி பந்தில் ஸிக்ஸர் தூக்கிய ஷரண்கே, சின்மயி போட்ட அடுத்த பந்தைத் தூக்கி அடித்ததில் பந்து மைதானத்தை விட்டுக் காணாமலே போய்விட்டது.
அதனால்தான் இப்படியான மறை கழண்ட உளறல்கள் எல்லாம் உங்களிடமிருந்து வருகின்றன. இதை குணப்படுத்திக்கொள்ள ஒரே வழி எமது மொழியை கற்பதுதான்.

இதற்கிடையில் ஒரு செறிந்த கருத்துள்ள முக்கியமான ட்விட்டைப் போடுகிறார் சின்மயி. அது ஏதோ வெட்டை என்பதுபோல கவனியாது கடந்து விடுகிறார் ஷரண்கே.
(சேரிக்காரர்கள் டாடா ஸ்கை டிஷ் போட்டு கரண்டு திருடுவதால்தான்) இருக்கவேண்டும் என்று எண்ணுகிறேன், நாங்கள் பயணத்தில் இருந்தபோது எங்கள் வீட்டு மின்சாரக் கட்டணம் 2,000 வந்தது. எவ்வளவு சுவாரசியமான விஷயம்.

ஹஹ்ஹா கலாய்ச்சுட்டாங்களாம் சிரிச்சுக்கோங்கப்பா!

யம்மா தாயீ ஆட்டுக்குக்கூட மூளையை தலைல வெச்சவன் உனுக்கு எங்க வெச்சிருக்கான்னுதான் தேடிகினு இருக்குறேன். 

ஏம்மா உனுகு எங்க ஸ்டே? தனி பங்களாவா? ஏதோ ஊட்ட மாத்தினே பூட்ட மாத்தினேன்னு பராபரியா கேய்விப்பட்டனே. வாடக அபார்ட்மெண்டா? எப்பையார்லகூட ஊட்டு அட்ரஸ்ஸு எதோ Bனு இர்ந்துதுனு தோஸ்த்து சொன்னான். 

அவெனவெ ஒரு மாசம் ரெண்டு மாசம் ட்ராவல்ல இர்ந்தா ஊடே காணாமப் பூட்துனு நூஸ் வர்து. ரெண்டாயிர ரூவா கரண்ட்டு பில்லு உனுக்குல்லாம் பிசாத்து காசு. அது வந்ததுக்கு இம்மாத்தரம் பீல் பண்ற! பச்ச புள்ளபா! உள்ள ஒண்ணியுமில்ல. எல்லாத்தியும் கொடகொடன்னு கொட்டிபுட்ற. ஃப்ரீயா பீல் பண்ண நா சரக்கடிக்கிறேன் நீ ட்விட்டடிக்கிறே.

எதுனா ஒன்ன அட்ச்சாதான் ஆயா இருக்கும். எனுக்காவுது கட்டிங் போட காசு அவுத்தாவணும் உனுகு ட்விட்டிங் போட ஒத்த பைசாகூட செலவில்லியாமே. சோக்குதாம்மா உன் ட்விட்டிங். நா கூட கட்டிங்லேந்து ட்விட்டிங்க்கு மாறிடலாமான்னு ரோசிக்கிறேன். ட்விட்டிங்ல ஓவர் மப்பாயிட்சினா, ஆப் பாயில்லாம் கூட அங்கியே எட்துகலாமாமே? நீதா ஆப்பாயில் போட்றதுல பெசலிஸ்டுனு கேவிப்பட்டேன். யாரும் ஒண்ணியும் கேக்க மாட்டாங்களாமே. எவனோ ஒரு சல்பேட்டா சவுண்டு உட்டான்னு நேரா எக்மூர்ல கோத்து உட்டியாமே. கரீட்டுதான். போற எட்த்துலல்லாம் ஆப் பாயில் போட்றது நம்பொ சொதந்திரம். பல்லிருக்குறவன் பகோடா துன்றான்.   பொக்க வாய்க்காரன்களுகு ஏன் பொச்செரிச்சல்?

உன்கிட்ட eggகிருக்குது நீ ஆப்பாயில் போட்ற அதை கேக்க இவுன்க யாரு? நாங்கூடதா அரமண்நேரமோ ஒரு மண்நேரமோ ஐ டோன் கேர்னு லெப்ட்டுக்கும் ரைட்டுமா போய்க்கினும் வந்துகினுங்குறேன். வண்டி பாட்டுக்கும் போவுது நாம் பாட்டுக்கும் போவுறேன். எவன் என்னைக் கேக்குறது. பி ல டி பக்கர்ஸ்.

நீ ட்ராவல்ல இர்ந்தப்போ நா உங்கூட்ல பூந்து கரண்டு திர்ட்னேனு சொன்னியாமே. இல்லியா ஐஐஐ நம்பகிட்டியே டபாயிற பாத்தியா. மாமா தில் பக்கிரி. அல்லா நம்ப கம்பூட்டர்ல  ரெக்காடாயிருகும். மப்புலதான இருக்கான்னு தப்பா எட போடாத. உன்ன சொல்ல அவன சொல்லன்னுலாம் சொல்லி எங்கிட்ட எஸ்கேப்பு ஆவ மிடியாது. ஏய் சட்டப். லிஜன் டு மி. மீ டாக் யூ நோ டாக். 

இந்த ஏரியாவில எவனத் திருடன்னு சொன்னீனாலும் அது மாமன சொன்னா மேரிதான். அண்டர்ஷ்டேண்ட். அண்டராயர் கழலுதா நோ பிராபலம். நா இங்க அவ்லோ பிரபலம். ஃபுல் போதையில இருந்தாலும் நாங்க யாரும் ஈபி பாக்ஸ மட்டும் நோ டச்சிங். அவ்ளோ டேஞ்சர் அது. கையப் பிஷ்டேன்னு தப்பா நெனக்காத ஐயாம் சாரி சிஸ்டர். ஐயாம் நோ டீஜண்ட். பட் நோ லேடி பேட் டச்சிங். நீ ஒரு போன் போட்டா டிஜிபி நட்ராஜ் சாரே ஐஏஎஸ் அப்ளிகேசனோட நேரா வந்து என்னை எட்டி ஒதப்பாரு. ஐ நோ ஆல் திங்ஸ். பாஸ்ட் ப்ரஜண்ட் பூச்சர்.

எவ்ளாம் பெரிய அப்பாட்மெண்ட் உனுது. ஆனா நோ ஈபி பாக்சு. ஒன்லி டான்ஸ்பாமர். குட்சிகிலாம் நோ டான்ஸ்பாமர் ஈபி பாக்சு ஒன்லி. இத்தப்பாரு. இதான் ஈபி பாக்சு. பாக்ஸ் இருக்குற எட்மே தெப்பாதான் தெர்து பாத்தியா? நோ கரண்ட். ஒன்லி பாக்ஸ். இதுல கைய உட்டு கரண்டு திர்ட்னா பாடமேல நாமளா கவுந்துர வேண்டீத்தா. உன் அப்பாடக்கர் அப்பாட்மெண்ட்டுக்கு வாட்ச்மேன் இல்லியா?

அந்த டோமர எங்குள மேரி அல்லக்கைங்குளொ உள்ள உடுவானா? அப்பால எப்டி நா உங் கரண்டத் திர்ட்னேன்னு சொல்ற. ம். சொல்லு. உங்கூட்டு மீட்ரு இன்னா போறவர பீட்ரு பாக்குறாப்புல ஓப்பன்லியாக்குது? சேப்டியா ரூம்புகட்டி பூட்டி உள்ள வெச்சிருக்க இல்ல. அப்பால எப்டி நா உங்கூட்டுக் கரண்டத் திர்ட்னேன்னு சொன்ன? நான்சென்ஸ் பதில் சொல்லு. நீ லேடீசாப் பூட்ட. இதுவே கண்டி  ஜெண்ட்டா இர்ந்தானா இந்த வார்த்த சொன்ந்துகு அப்பவே ராவிட்ட்ருப்பேன். 

இன்பாக்ட் நா ரோட்ல இருக்குற டான்ஸ்பாரத்துலேந்தே திருட்னேன்னு ஒரு பேச்சுக்கு வெச்சிகோ. அதி உங்கூட்டு பில்லில எப்பிடி சேரும்? ஏய் சொம்மா அண்த்தாத. நா இன்னா மகேசு மூத்தியா? இடியட் லிஜன்னு சொல்லோ. ஐயாம் டீஜண்ட் மேன். ஆன்சர் மை கொச்சன். இன்னாது டப்பிங் குடுக்கணும் டைம் ஆவுதா? இந்த மேட்டர செட்டில் பண்ட்டுப்போ. நா கரண்ட் திருட்னதாலதான் ஒனக்கு ரெண்டாயிர் ரூவா மீட்டராச்சினு சொன்னியே எப்பிடி? தப்பா! தப்பு கிப்புலாம் மப்புல இருக்கறவங்கிட்ட செல்லாது ஒன்லி டப்பு. எவ்ளவா? உங்கூட்டு கரண்டுபில்லு எம்மாத்தரமோ அம்மாத்தரந்தான். இன்னாது அநியாயமா? நீ சொன்னுது மட்டும் நாயமா? ஏம்மா இன்னா கொற்ச்சிகோ கிற்சிகோனு பேரம் பேச இது இன்னா ஆட்டோவா? நோ நெகோசிசன். நான் டெர்ரிஷ்டு நீ செண்ட்ரலா நெகொசிசன் பண்றதுகு. நீ சொன்னது தப்பு எனக்கு வேண்டிது டப்பு. ரொம்பொப் பேசினா மிஞ்சறது கப்பு.

ஓகே ஓகே சும்மா கலாஞ்சேன் எதையும் மன்சுல வெச்காத. ஆல் பெஷ்ட்டு. முட்ஞ்சா சிம்முக்கல்லு சிடிய குட்தன்ப்பு குட்சில டெக்கிருக்குது போட்டுப் பாக்குறேன். சோக்கா இர்ந்துது டமிலு. மிட்னைட்ல போட்டு கேட்டா செம ரவுசு.

கனம் கோர்ட்டார் அவர்களே! சின்மயிக்கு இருந்த முன்விரோதம் போல என் கட்சிக்காரருக்கு எந்த வன்மமும் இருந்ததில்லை என்பதற்கு ஆதாரங்களாக இவ்விரண்டு ட்விட்டுகளை சமர்ப்பிக்கிறேன். 

கடவுள் நம்பிக்கையற்ற ஷரண்கே இளையராஜாவை இசைக்கடவுளாக ஆராதிப்பவர். அதே சமயம் நன்றாக இருந்தால் எவர் இசையையும் ரசிப்பதோடு நிற்காது மனம் திறந்து பாராட்டவும் தயங்காதாவர். அதற்காக  பிரபலமானவர் அதிலும் பெண் என்பதற்காக சும்மாசும்மா போய் இளித்துக்கொண்டு நிற்பவரும் இல்லை என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

இசை ரசிக்கத்தக்கதாக இருந்தது என்கிற காரணத்தால் எப்படிப் பாராட்டுகிறார் பாருங்கள். அதே சமயம் சின்மயி தவறு செய்த போது தட்டிக்கேட்கவும் அவர் தயங்காதவர் என்பதற்கான எடுத்துக்காட்டுதான் டாடா ஸ்கை டிஷ் குறித்த இண்டலிக்ச்சுவல் ப்யூக் என்று எதிர்வினை. அது நடந்தது 17 ஜுன் 2011. இங்கே இவர் பாராட்டுவதோ அதற்கு இரண்டு மாதங்கள் முன்பாக 29 ஏப்ரல் 2011

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் 
கெடுப்பார் இலானும் கெடும்

இசை அரசி, ஏழை எளியவர்கள் மீது அறியாமையால் இம்சை அரசியாகி அவதூறு செய்து  தவறிழைக்கும்போது  ஷரண்கே போல இடித்துரைக்க ஆளில்லாத, மாயவரத்தான்கள் செல்வேந்திரன்கள் போன்ற கீகொடுக்காமலே ஓயாது தட்டும் ஜால்ராக்களை மட்டுமே நம்பி இருக்கும் சிற்றரசி பேரரசிகள் கெடுப்ப்பதற்கு என்று ஸ்பெசலாக ஆர்டர் கொடுத்து ஆள் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை தானாகவே கெட்டுப் போவார்கள் என்கிறார் திருவள்ளுவர்.
கனம் நீதிபதி அவர்களே! 17 ஜுன் 2011 கரண்டு பேச்சை மனதிற் கொள்ளாது  06 ஜூலை 2011ல் மனம் விட்டுப் பாராட்டுவதைப் பாருங்கள்.

அதற்காக சிம்மக்கல்லு சிம்மக்கல்லு சிம்முரண்டா நா போன்ற கேவலத்தை எனது கட்சிக்காரர் பாராட்டாதது, இசை குறித்த அவரது கறார் தன்மையையும் சமரசமற்ற சத்தியத்தையும் காட்டுகிறது என்பதையும் சந்தேகமற ருசுப்பிக்கிறது.

எனவே கனம் கோர்ட்டார் அவர்களே, சின்மயிக்கு ராஜன் மீது இருக்கும் முன்பகைக்காக, அவரை எப்படியாவது வழக்கு  போட்டு உள்ளே தள்ளிவிடவேண்டும் என்று நெஞ்சில் வஞ்சத்துடன் காத்திருந்த சின்மயியும் அவரது தாய் பத்மாசினி அவர்களும் சாதாரணமாக எந்த முகாந்திரமும் இல்லாது பேசிய என் கட்சிக்காரரின் லூஸ் டாக்கை வைத்து, அதில் எந்த தீய பொருளையும் தாம் குறிக்கவில்லை என்று அவர் விளக்கிய பின்னும் ஷரன்கேவை விட்டால் ராஜனை மாட்ட வைக்கவே முடியாமற் போய்விடும், காரணம் அவர் கடந்த ஆறு மாதங்களாக ரா’ஜென்’என்று தன் வாய்க்குத் தானே பூட்டு போட்டுக்கொண்டு சின்மயியின் வம்புக்கே போகாமல் இருந்தார் என்பதால், அரிதாய் கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிடுவதா என ஓவராய் அலப்பறை செய்து, சின்மயி பழிவாங்கினார்.

கனம் கோர்ட்டார் அவர்களே!
http://indiankanoon.org/doc/810217/

இந்த தீர்ப்பின் 5 முதல் 8 பத்திகள் வரை கூறப்பட்டிருப்பதைப் பாருங்கள். section 4 of  Tamil Nadu Prohibition of Harassment of Women Act வேண்டுமென்றே வலிந்து என் கட்சிகாரர் மீது போடப்பட்டு இருப்பது புலனாகும்.

பத்தி 5. At the outset, it is to be informed that the Tamil Nadu Prohibition of Harassment of Women Act would not be applicable in the present case. The Act defines harassment as follows :

“harassment means any indecent conduct or act by a man which causes or is likely to cause intimidation, fear, shame or embarrassment, including abusing or causing hurt or nuisance or assault or use of force.”

ஷரண்கே தாம் தவறான எண்ணத்தில் கூறவில்லை என்று விளக்கம் அளித்திருக்கிறார். ராஜன் சின்மயியையோ அவர்களது தாயாரையோ அப்பாசமாக எதுவும் பேசியதற்கான ஆதாரங்கள் அந்த தரப்பாரால் கொடுக்கப்படவில்லை. பொது வெளியில் சண்டை போட்டு சின்மயி அசிங்கப்பட்டார். அதை அவரது பிளாகில் இவர்களை சிறைக்கு அனுப்பிய பிறகு அவரே எழுதுகிறார்.
அசிங்கப்பட்ட உண்மை எனில் அவரை அசிங்கப்பட்டார் என்பது சட்டப்படி அவதூறோ குற்றமோ இல்லை.

பத்தி 6, responsibilities are cast upon persons in-charge of educational institutions, temple or other places of worship, cinema theatre or any other precinct and upon the crew of a public service vehicle or vessel. This Court considers it reasonable to hold that Section 4 of the Act was meant to deal with offences occurring in the places informed or in places of like nature. If not so read, the mention of the particular places in section 4 would be rendered redundant and such could not have been the legislative intent. To put it differently, if the intent was to attract punishment for harassment at any and every place, section 4 simply could have read as follows : '4. Penalty for harassment of woman. -- Whoever commits or participates in or abets harassment of woman in any place shall be punished ...........
இந்த சட்டம் இயற்றப்பட்டதன் நோக்கமே, பொது இடங்களில் பெண்களுக்கு  எதிரான பாலியல் தொந்தரவுகளைத் தடுப்பதுதான். இதையே வேறு விதமாக சொல்வதென்றால், பெண்களுக்கு எங்கு ஏற்படும் தொல்லைகளுக்கும் இது இயற்றப்பட்டதாக இருப்பின், பிரத்தியேகமாக இடங்களைக் குறிப்பிடாமல் பெண்களைத் துன்புறுத்துவதற்கான தண்டனை.... பெண்களை யார் எங்கே துன்புறுத்தினாலும் தண்டனை என்றல்லவா இருந்திருக்க வேண்டும்.

பத்தி 7. In Kochuni v. States of Madras and Kerala, AIR 1960 SC 1080, it has been explained that the rule of 'ejusdem generis' was that when general words follow particular and specific words of the same nature, the general words must be confined to the things of the same kind as those specified. It was further observed that it is clearly laid down by decided cases that the specific words must form a distinct genus or category. It is not an inviolable rule of law, but it is only permissible inference in the absence of an indication to the contrary. In Lila Vati Bai v. State of Bombay, AIR 1957 SC 521, it is informed that the rule of 'ejusdem generis' is intended to be applied where general words have been used following particular and specific words of the same nature on the established rule of construction that the legislature presumed to use the general words in a restricted sense; that is to say, as belonging to the same genus as the particular and specific words. Such a restricted meaning has to be given to words of general import only where the context of the whole scheme of legislation requires it. But where the context and the object and mischief of the enactment do not require such restricted meaning to be attached to words of general import, it becomes necessary to give a plain and ordinary meaning.

மயிர்ப்பிளக்கும் தர்க்க வியாக்கியானங்கள் தேவையற்றது. வார்த்தைகளுக்கான பொது அர்த்தத்தில் படித்தாலே போதுமானது என்கிறது.

பத்தி 8. Applying the above principles this Court finds the cognizance of offence under Section 4 of the Tamil Nadu Prohibition of Harassment of Women Act, 1998, by the lower court to be bad in law.

மேற்கூறியவற்றின் அடிப்படையில் பார்த்தால் இந்த வழக்கே சட்டத்துக்குப் புறம்பானது.

(இந்த தீர்ப்பின் சுட்டியைக் கொடுத்து விளக்கமும் அளித்துதவிய சென்னையைச் சேர்ந்த ராஜனின் இளம் வழக்கறிஞர் sidhardh muthusamyக்கு நன்றி)

அம்மாவுக்கும் பெண்ணுக்கும் ’எதிரிகள்’ மனம் திருந்துவதிலோ அல்லது அவர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பதிலோ உண்மையான அக்கறை கிடையாது. ஆறு மாதம் ஒருவன் சும்மா இருக்கிறான் என்றால் என்ன பொருள்? வருந்தித் திருந்தினான் என்று எடுத்துக் கொள்ளலாம் இல்லையா? சமீபகாலமாக வம்புக்கே வாரதவனை அவன் என்றைக்கோ வம்பு செய்ததாய் அம்மாவும் பெண்ணும் நம்பினார்கள் என்கிற ஒரே வன்மத்தால், அதுவரை பெரிய பிரச்சனையே செய்யாத, சின்மயியையோ பத்மாசினி அவர்களையோ ஒரு வார்த்தைகூட அவதூறாகப் பேசாத ஷரண்கேவை பலிகடா ஆக்கி, ராஜன் மீது புகார் கொடுக்கிறார்கள் என்றால் இதில் யார் மனித மிருகங்கள் யார் மிருக மனிதர்கள்?

ட்விட்லாங்கரில் கூறி இருக்கிறார் ஷரண்கே. அதன் உண்மைத் தன்மையைக் கொஞ்சம் பரிசீலித்துப் பாருங்கள்.
செய்யாத குற்றத்துக்கு, பொய்யாய் ஜோடிக்கப்பட்ட செக்‌ஷன்களின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்கில், அநியாயமாக ஜெயிலுக்குப்போய் வேலையும் போய் விசாரணையின்றியே பத்து நாட்கள் சிறைத் தண்டனை அனுபவித்த ஒருவர், ஜெயிலில் இருந்து திரும்பி வந்த பின் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் என்ன? அதுவும் மன்னிப்புக் கேட்கச்சொல்லி ஒரு சந்தர்பம் கூடக் கொடுக்காத நெஞ்சில் ஈரமே அற்ற தாய் சேய்களால் மொத்தமாகப் பழிவாங்கப்பட்டபின் பொதுவெளியில் மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியம் என்ன?

வழக்கு தொடரும் முன் ஏன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது? அடுத்தவன் தரப்பையும் கேள். அவன் அப்படி செய்ததற்கான காரணம் எதுவும் இருந்தால் அதையும் பரிசீலித்துப் பார்ப்பதுதான் தர்மம். உண்மையிலேயே அவன் தவறிழைத்திருப்பினும் திருந்த ஒரு வாய்ப்பைக் கொடுப்பதுதான் நீதியின் இயற்கையான நியதி என்பதால்தானே எல்லா வக்கீல் நோட்டீஸ்களும் இறுதியில் பகிரங்க மன்னிப்பைக் கேள் என்கிற வாய்ப்பை அளிக்கின்றன. அப்படி கேட்காவிடில், வேறு வழியின்றி என் கட்சிக்காரர் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்புகிற நெறிமுறை அறியாதவரா சின்மயியின் வழக்கறிஞரான சஞ்சய் பிண்டோ?

ஆனால் இங்கு சின்மயியின் நோக்கமே, தப்பித்தவறியும் ஷரண்கே மன்னிப்புக் கேட்டுவிடக்கூடாது என்பதுதான்.

ஷரண்கேவின் உண்மையான மனநிலை என்ன என்பதற்கான  சான்று போலீசிடம் இருக்கும் ஷரண்கேவின் செல்ஃபோனில் இருக்கிறது. ஒருவர் ட்விட்டரின் தனிச்செய்தியாக அவரிடம் கேட்கிறார், “இப்படிப் பேசியது தவறு என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?”என்று. அதற்கு ஷரண்கே தனிச்செய்தியிலேயே பதிலளிக்கிறார். ”இப்படி மட்டும் தன்மையாக சின்மயி கேட்டிருந்தால், நிச்சயம் மன்னிப்பு கேட்டிருப்பேன்”. கனம் கோர்ட்டார் அவர்களே! அந்த கைபேசியைப் பார்த்து இதை உறுதி செய்துகொள்ள வேண்டுகிறேன்.

மன்னிப்பு கேட்க ஷரண்கேவுக்கு அவகாசம் தந்துவிடலாகாது என்பதற்காகத்தான் சம்பவம் நடந்த 4ஆம் தேதியிலிருந்து கைதான 22ஆம் தேதிவரை அடிப்பொடிகளை விட்டு அவரை சீண்டிக்கொண்டே இருந்தனர்.

காரணம், ஷரண்கே மன்னிப்பு கேட்டுவிட்டால், ராஜனை ஒன்றும் செய்ய முடியாதே என்பதுதான் உள் வெறி. ராஜனை பொதுவெளி ஆபாசம் என்றுதான் சொல்ல முடியுமே தவிர சின்மயிக்கு எதிரான அவரது அம்மாவுக்கு எதிரான ஆபாசம் என்று சிக்க வைக்க ஆதாரம் எதுவுமே அவர்களிடம் இல்லை. ஏனென்றால் ராஜன் சின்மயி பற்றி ஆபாசமாக எதுவுமே பேசவில்லை என்பதுதான் உண்மை. கனம் நீதிபதி அவர்களே! ஆனால் சின்மயி ராஜன் மீது புகார் கொடுக்க அழுக்காறுடன் இதுவரை எத்துனை முறை முயன்றிருக்கிறார் என்பதை அவரே முன் வந்து சொல்லட்டும்.

சரி ஷரண்கேதான் ஆபாசமாகப் பேசிவிட்டார் பாலியல் தாக்குதல் நடத்திவிட்டார் என்பதனால்தான் இந்தக் கைது என்றால் அவரல்லவா A1 ஆக இருக்க வேண்டும்? FIRஇல் அவர் ஏன் A4ஆக இருக்கிறார்?

ஷரண்கேவை A1ஆகப் போடுவதில் இருக்கும் சட்ட பிரச்சனை, இவர் செய்ததாக சொல்லப்படும் குற்றம் நிகழ்ந்தது 04 அக்டோபர் 2012இல். அதற்கு இரண்டு வருடம் முன்பாக நடந்த ராஜன் செய்த குற்றமாகக் கூறப்படும் ஒன்றுடன் இப்போது நடந்ததை வைத்து எப்படிக் கோர்க்க முடியும்? எனவேதான் வாய் புகாராக ராஜந்தான் ஷரண்கேவை இப்படிப் பேசச்சொல்லித்தூண்டிவிட்டார் என்று ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாகி விட்டார்கள் இந்த ஹையங்கார்கள்.

சரி ராஜன் மீது எதிர் தரப்பு FIRஇல் முன்வைக்கும் ஆகப்பெரிய புகார் என்ன அதற்கான ஆதாரம் என்ன?
14 மார்ச் 2012 போடப்பட்ட இதுதான் 04 அக்டோபர் 2012ல் பெரிய குற்றமாக ஜோடிக்கப்படுகிறது. குற்றம் நிகழ்ந்த அன்றோ அல்லது அதற்கடுத்த சில நாட்களிலோ இதோடு சைபர் கிரைமுக்குப் போய், ஐயா என் உயிருக்கு ஆபத்து வரும் படியாக மீனவர்களைத் தூண்டிவிடுகிறார் ராஜன், எனவே அவர் மீது நடவடிக்கை எடுங்கள் என்று புகார் கொடுத்தாரா? கொடுத்தது உண்மையானால் அப்போதே ஏன் நடவடிக்கை எடுககவில்லை? முதல் பார்வையில்கூட இதில் ஏதும் கனம் கோர்ட்டாரின் மேலான பார்வைக்குக் குற்றமாகத் தெரிகிறதா? அதனால்தானே, இதெல்லாம் கேசா என்று போலீசால் திருப்பி அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது

ட்விட்டரில் வலிமையுள்ள ராஜனை வெல்லவேண்டும் என்றால் ஷரண்கே போல ஒரு ஆள் வந்து சாதாரணமாகக் கூறி விபரீத அர்த்தமாய் தொனிக்கச்செய்ய மற்றும் தனக்கு ஆகாதவர்களை எல்லாம் கோர்த்துவிட மாயவரத்தான்களும் செல்வேந்திரன்களும் வாகாய் வந்து சேரும் வாய்ப்பு அமையும்வரை இம்சை அரசியான சின்மயி பொறுமையாய் இருக்க வேண்டும்.

இதை வள்ளுவரைப் படித்துதான் அறிய வேண்டும் என்கிற அவசியம் எனக்கென்ன? இயற்கையிலேயே நான் அப்படித்தானே இருக்கிறேன் என்று மிடுக்காய்க் கூறுகிறார் சின்மயி.

சின் முத்திரை காட்டிய புனிதக் குழந்தை வளர்ந்து ஆளானதும் சேரிக்காரர்கள் மீனவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் அவர்களுக்கான இட ஒதுக்கீடு தமிழைத் தமிழாய் எழுதாமல் தமிழ் வளர்த்த பரம்பரை மறவர் சீமை தமிழச்சி என ஷோ காட்டிக் கொள்பவர் ஒட்டு மொத்தத் தமிழர்களுக்கும் எதிரானவரா இல்லையா? இவர்தான் தமிழர் வீட்டுச் செல்லப் பிள்ளையா? வேண்டுமானால் பிராமணர் வீட்டுச் செல்லப் பிள்ளை என்று சொல்லிக் கொள்ளட்டும்,. நாஸா போன்ற உயர் அறிவு தேவைப்படும் இடங்களில் இருக்கத் தகுந்தவர்கள் பிராமணர்கள் மட்டுமே என்று பேசுபவர், சிசுவாய் இருக்கையில் விரல் மடங்கி இருந்தது என்றால் அது எதன் அறிகுறி? சின் முத்திரையா இல்லை வேறு ஏதாவது சீக்கா என்றல்லவா எல்லோர் மனதிலும் ஐயம் எழும்.

எனவே இந்த முன்பகை வன்மம் குரோதம் இத்தியாதிகளுடன் தொடுக்கப்பட்ட  வழக்கிலிருந்து ராஜன் ஷரண்கே செந்தில் ஆகியோரை விடுவித்து இந்த வழக்கே அநீதியானது எனவே செல்லாது என கனம் கோர்ட்டர் அவர்களை அறிவிக்கக் கோருகிறேன்.

எதிர்காலத்தில் இது போல், மேலிடத்தில் ஆள் தெரிந்தோர், தாம் மட்டுமே உயர்ந்தவர்கள் தமது ஜாதி மதம் இனம் மட்டுமே உயர்ந்தது என்கிற ஹிட்லர் மனப்பான்மை கொண்ட மட்டமானவர்களின் புகார்களால் அப்பாவிகளான பொதுமக்கள் போலீஸால் இப்படிப் பந்தாடப்படாமல் தடுக்க, இரு தரப்பாரையும் தீர விசாரித்தபின்னரே வழக்கு பதியவேண்டும் என்று காவல் துறையைக் கண்டித்து, மேலிடத்து அழுத்தம் என்கிற காரணம் காட்டித் தப்பிக்க முடியாதபடி சம்பந்தப்பட்ட அதிகாரி, அதிகார துஷ்பிரயோகத்துக்கு தனிப்பட பொறுப்பாளியாய், சட்டத்தின்முன்  நிறுத்தப்பட்டு பதில் சொல்ல வேண்டி இருக்கும் என கடுமையுடன் அறிவுரைக்குமாறு கனம் கோர்ட்டாரைக் கேட்டுக்கொள்கிறேன்.