Tuesday, December 25, 2012

ஒரு சொல்

ட்விட்டர் என்பது என்ன?

அர்த்தநாரி தமிழ் எழுதும் சின்மயிக்கும் அசல் தமிழில் அசால்ட்டாய் எழுதும் ராஜனுக்கும் இடையில் இரண்டு வருடங்களாய் நடந்து கொண்டிருந்த மோதல்கள், போலிப் புகார் காரணமாய் ஜோடனை வழக்காகி வெடிக்கும் முன்னால், இணையவெளிக்கு வெளியிலிருக்கும் தமிழர்களில் பலருக்கும் இப்படி ட்விட்டர் என்கிற ஒன்று இருப்பதே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவர்களது சண்டைக் களத்தின் பெயர்தான் ட்விட்டர்.

இவர்களுக்குள் பெரிய போரே நடந்துகொண்டு இருக்கிறது என்பது எனக்கேகூட பிற்பாடு கிடைத்த தகவல்தான். ராஜனுக்கு சின்மயி பொறி வைத்திருக்கிறார் என்பது தெரியாததால்தான் செந்திலிடம் யதேச்சையாய் ஜோக்கடிக்கப்போய் ஷரண்கே மாட்டிக்கொண்டார் என்கையில் எழுத்தாளப் பெருந்தகைகளுக்கு இவையெல்லாம் தெரியாதிருப்பதில் தவறில்லை. இணையத்தில் இருந்தாலும் ட்விட்டரில் நடந்தது என்ன என்று இந்துத்வா ஜெயமோகனே சந்துத்வா தினமலர் படித்துதான் தெரிந்துகொண்டிருக்கிறார் என்பதே நமக்கெல்லாம் இப்போதுதானே தெரிய வந்தது.

ட்விட்டர் என்பது பொதுவெளிதான் என்றாலும் இண்ட்டர்நெட் இணைப்பு இருந்தால் எந்த இணைய தளத்தையும் படிக்கலாம் என்பது போல, ட்விட்டரில் எழுதப்படுவது என்ன என்று எல்லோரும் படிக்க இயலாது. ஒருவர் என்ன எழுதுகிறார் என்று அதிகாரபூர்வமாய் தெரிந்துகொள்ள நீங்கள்  அவரைத் தொடர வேண்டும். இல்லையேல் அவர் பெயர் போட்டுத்தேடிப் படிக்க வேண்டும். ஒருவர் உங்களைத் தொடர்ந்து வந்து உங்களை வம்புக்கு இழுத்து தொல்லை கொடுக்கிறார் எனில் அவர் உங்களைத் தொடரமுடியாது செய்ய எளியவழி அவரைத் தடை செய்வதுதான். அப்படித் தடை செய்யப்பட்டவர் என்ன பேசுகிறார் என்று பார்க்க வேண்டுமானால் கள்ளத்தனமாய் எட்டிப் பார்ப்பதுதான் ஒரே வழி. அப்படி எட்டிப் பார்கையில் , அவர் நமக்கு வேண்டாதவர் என்பதால், அவர் இயல்பாக நமக்கு சம்மந்தமே இல்லாத எதைப்பற்றியோ பேசுவதுகூட  நம்மைப் பற்றிப் பேசுவதாகவே படுவது மனித இயல்பு. அப்படிக் கள்ளத்தனமாய் எட்டிப் பார்ப்போர் சின்மயி & பத்மாசினியாக இருந்தால், இருவருமே சந்தேகப்பிராணிகள் என்பதால்  உங்களுக்கு எலிப்பொறி வைக்கப்பட்டு நீங்கள் பிரியாணி ஆக்கப்படுவது உறுதி.

ஏன் சார் சின்மயியை ட்விட்டரை வெச்சுத் தாக்கிட்டாங்களாமே என்றுதான் எங்கள் அலுவலக ஊழியர்கள், குறிப்பாகப் பெண்கள் ஆரம்பத்தில் கேட்டனர். இவர்கள் ஜெயமோகனின் இணைய புரிதலுக்கு ஒரு படி மேல் என்பதால் நக்கலாக, ஆமாம் சின்மயியும் பத்மாசினியும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்று கூறினேன். என்ன சார் ஒரேடியா ஓட்டறீங்க என்கிற அளவில் மட்டுமே புரிதலில் இருந்தவர்கள், விளக்கத் தொடங்கியபின், பார்ரா பிள்ளைப் பூச்சியாட்டம் இருந்துகிட்டு  இவ்ளோ செஞ்சிருக்கா இது என்கிற நிலையை அடைந்தார்கள். இவற்றைப் புத்தகமாக்க வேண்டும் என்கிற உந்துதலை எனக்குள் எழுப்பிய பல முக்கியமான காரணிகளில் இதுவும் ஒன்று.

சுருக்கமாகச் சொன்னால் பத்திருபது சொற்களைத்தட்டி இலவசமாய் தந்தி கொடுப்பதைப் போன்றது ட்விட்டர் என்றும் சொல்லலாம்.

ட்விட்டர் என்பது இணையத்துக்குள் இருப்பவற்றில் உண்மையிலேயே மிக கூர்மையான ஆயுதம்தான்.குறிப்பாக பிரபலங்களுக்கு.ட்விட்டரில் இருக்கும் தமிழின் ஓரிரு பிரபலங்களைப் பார்ப்போம்.
தந்தி வடிவில் உரையாடும் அவரது திரை மாந்தர்களைப் படைப்பவரும் அப்படியே. வாய்மூடா ஜெயமோகன் கடலில் கலக்கியிருக்கிறாரா இல்லை கரைந்துபோய்விட்டாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

நாயகன் உச்ச காட்சியில் வேலு நாயக்கரும் பேரனும் பேசிக்கொள்வதான உரையாடலை பாலகுமாரன் இரண்டு பக்கங்களுக்கு எழுதிக் கொண்டு வந்தாராம். அதிலிருந்து மணிரத்தினம் பயன்படுத்திக் கொண்டவை கீழே இருப்பவை.

நீங்க நல்லவரா கெட்டவரா

தெரியலியேப்பா

ட்விட்டரில் மட்டும் அவர் எப்படி வேறாக இருப்பார். தாம் யார் எனச் சொல்லிக்கொள்ள கொடுத்த இடத்தில் தம் பெயரை மட்டும் சொல்லி இருக்கிறார் பாருங்கள். ட்விட்டரில் அவர் இதுவரை கொடுத்த தந்திகளே 64. அவர் தொடரும் இரண்டு பேர் யார் எனப்பார்க்க ஆசையா? இந்தப் புத்தகம் அம்மா மகள் பற்றியது என்பதைப்போல மணிரத்தினத்தின் இருவர் அப்பா மகன்.
இவர் கடைசியாக எழுதிய ட்விட்டு 11 செப்டெம்பர் 2010. இது நமக்கு வேலைக்காகாது என்று 64லேயே வெஇயேறிவிட்டார் போலும்.
இப்போதைக்கு இவரைத் தொடர்வோரின் எண்ணிக்கை, 17,59,311 இவர் தொடர்வது எல்லாம் எல்லாம் இறைவனுக்கே. இவரும் சில வார்த்தைகளுக்கே சொந்தக்காரர்.

பெரிய பிரபலங்கள் இப்படி என்றால் குட்டி பிரபலங்கள் மார்க்கெட்டு போன மாஜி பிரபலங்கள் என பலரும் தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்ள ட்விட்டர் பேருதவியாக இருக்கிறது.

மகாராஜாக்கள் மகாராணிகள் தவிர்த்த மக்களைப் பொறுத்தவரை ட்விட்டர் என்பது போதை தரும் ATM இயந்திரம். பெட்ரோல் பங்க்கில் வேலைக்குச் சேருவோரால், கொஞ்சகாலத்துக்குப் பிறகு பெட்ரோல் வாடை இல்லாமல் இருக்கவே முடியாது. அதைப்போல இந்த ட்விட்டரும் ஒருவித போதை. இந்த உலகுக்குள் நுழைந்தோர் இதன் வசீகரித்திலிருந்து விடுபடுவது கடினம். ட்விட்டரை கைபேசியில் இருந்தபடியேவும் பயன்படுத்தலாம் என்கிற வசதி இருப்பதால், அப்படி என்னதான் கொட்டிக்கெடக்குதோ தெரியலை. எப்பப் பார்த்தாலும் ட்விட்டர் என்று பல குடும்பங்களில், அம்மாமார்களும் மனைவிமார்களும் சலித்துக்கொள்ளும் அளவுக்கு ட்விட்டலேயே குடும்பம் நடத்துவோர் பலர் உண்டு.

குறைந்த சொற்களில் நிறைய சொல்லியாக வேண்டிய நிர்பந்தத்தின் காரணமாக, ட்விட்டர் உங்களது மொழித்திறனுக்கு சவால் விடுகிறது. இங்கு உட்கார்ந்து விஸ்தார கதா காலட்சேபம் செய்ய் வாய்ப்பில்லை என்பதால் எழுத்தாளர்கள் இதைத் தாங்கள் இணையத்தில் இன்னது எழுதி இருக்கிறோம் என்பதை அறிவிக்க சுட்டி கொடுக்கவே பயன்படுத்துகின்றனர். இணையத்தில், சுட்டி என்பது  படித்துக்கொண்டு இருக்கிற ஜோக்கை பக்கத்திருப்போரிடம் பகிர்வதில்லையா அது போல, படித்துக் கொண்டு இருக்கும் பக்கத்த்தை எஙெங்கோ இருப்போரும் படிக்கும் படியாகப் பொதுவெளியில் கொடுப்பது.  உலகின் மறுகோடியில் இருப்பவரிடம் நாம் படித்த பக்கத்தை ஒரே சொடுக்கில் கொண்டு போய் ஒப்படைத்துவிடும் வசதி.

இது சாதாரணர்களின் சந்தை. ஒற்றைக் காசு செலவில்லாமல் விண்டோ ஷாப்பிங் போல எதை வேண்டுமானாலும் பார்க்கவும் பேசிக்கொள்ளவுமான திண்ணை. ட்விட்டரின் இந்த அடிப்படை இயல்பே, அதன் மீது கறாரான வரம்பை நிர்ணயிப்பதில் மிகுந்த சிக்கல்களையும் உருவாக்குகிறது. நீங்கள் கூறும் எது வேண்டுமானாலும் என் மனதைப் புண்படுத்திவிட்டது என்று எவர் வேண்டுமானாலும் சுலபமாய்க் குற்றம் சாட்டிவிட முடியும்.

நடுத்தெருவில் நின்று கொண்டு இந்தக் கேனைக்கும் அந்தக் கோனைக்கும் நெம்ப நாளா கனெக்சனாமே என்று வடிவேலுக்களாய் உங்களை உருவகித்துக் கொண்டு எதைப் பற்றியும் நக்கலடிக்கத் தூண்டும் ஜாடைமாடையாய்ப் பேச தூண்டும் கூறு இதன் அடிப்படையிலேயே உள்ளது. மொத்தத்தில் இது ஒரு அரட்டைத் திண்ணை, வெட்டி மடம் என்றும் சொல்லிவிட முடியாது. ஏனெனில் உலகின் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் ஒன்றை வெட்டி என்று அவ்வலவு சுலபமாகச் சொல்லுவதில் உள்ள தயக்கம்தான்.

பல விஷயங்களைத் தமிழில் பேசினால் ஆபாசமாகவும் அதையே ஆங்கிலத்தில் சொன்னால் சாதாரணமாகவும் தோன்றுவதும் தமிழனிடம் உள்ள தாழ்வு மனப்பான்மை அல்லது ஆங்கிலத்தை அது ஆங்கிலம் என்பதற்காகவே ஆராதிக்கும் மூட குணம். ஆங்கிலத்தில் நல்ல தேர்ச்சி பெற்றோர் இதைச் சொல்வதில்லை என்பதால், தமிழனின் தாழ்வு மனப்பான்மை என்றே இளக்காரமாய் பார்க்கப்படுகிறது. தமிழில் பேசுவதைத் தாழ்வாய்க் கருதும் தமிழன் தமிழுக்கு இழைக்கும் பல இழிவுகளில் பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவும் ஒன்றாய் இருந்துவிட்டுப் போகட்டும்.

சாதரணர்களுக்கே இந்த மனோபாவம் இருக்கையில் பிரபலங்களுக்கு இருக்காதா? சின்மயி அவர் தாயார் பத்மாசினி ஆகியோர் ஆங்கிலத்தில் மட்டுமே ட்விட்டுவார்கள். தமிழில் ட்விட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் abcd யில் thamil eluthuvaarkal. என்றுதான் எழுதுவார்கள். கேட்டால் naan tamililthaan ezuthukiren என்பார்கள்.

பிரபலம் என்பதால் எப்படி முன்னுரிமைகளும் சலுகைகளும் கிடைக்கின்றனவோ அதே போல், ஆபத்து வந்தாலும் அலையலையாய்தான் வரும். குறிப்பாக அந்த பிரபலம் ஆணாகவும் இருந்தால்.

சஷி தரூர் சமீபத்தில் மத்திய அமைச்சராகி இருக்கிறார். ட்விட்டர் தொடங்கப்பட்ட உடன் தொபுகடீர் என குதித்த பிரபலங்களில் இவரும் ஒருவர். பெரிய கெட்டிக்காரர் என்பதால் பெருங்கூட்டம் இவரைப் பின்தொடரத்தொடங்கிற்று. குத்தல் நக்கல் நையாண்டிகளுக்கேயான ட்விட்டர் அவற்றையே தம் ஜீவ அணுக்களில் கொண்டிருக்கும் மலையாளியிடம் அகப்பட்டால் என்ன கதியாகும்.

நாட்டின் நிதி நிலவரம் கலவரமாக இருந்தது என்பதனால், காங்கிரசைச் சேர்ந்த மந்திரிமார்கள் சிக்கன நடவடிக்கையைக் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அப்போது ஆங்கிலத்தில் சஷி தரூரிடம் இதே ட்விட்டரில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் கூறிய தெனாவட்டான பதிலில் அவரது மந்திரிப் பதிவியையே இழக்க நேர்ந்தது.

விமான பயணத்தில் வசதியானவர்கள் பயணிப்பது பிசினஸ் கிளாஸ். இக்கானமி கிளாஸ் என்பது வசதியான ஏழைகள் பயணிப்பது. இவர்கள் ஆங்கிலமும் தெரிந்த ஏழைகளும் கூட என்பதனால், தரூர் கிண்டலாய்க் கூறிய, கால்நடைகளுக்கான கிளாஸ் என்பதை, காஞ்சன் குப்தா, ஒரண்டை இழுத்து, அடுத்த முறை கேரளா செல்கையில், கால்நடை வகுப்பில்தான் போகப்போகிறீர்களா மந்திரியாரே எனக் கேட்கிறார்.

சோகால்டு தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொன்ன சின்மயியிடம், ஏழர கேட்கவில்லையா ரேசிஸம் பத்தி என்ன நினைக்கிறீங்க என்று? அது போல, 
அதற்கு சஷி தரூரின் பதில்: கண்டிப்பாக கால்நடை வகுப்பில்தான் போயாக வேண்டும். அனைத்துப் புனிதப் பசுக்களுடனும் ஓரணியில் இருந்தாக வேண்டுமே.

உண்மையில் பார்க்கப்போனால் இவருக்குப் பிரச்சனை உண்டானதற்குக் காரணம், விமான ஏழைகளை தரூர் ”கால்நடைகள்” என்று கூறியதால் அன்று. ”அனைத்துப் புனிதப் பசுக்களுடனான ஒற்றுமை”யைக் காட்டும் முகமாய் என்று ஆங்கில அள்ளிவிடல்தான் உண்மையான காரணம். புனிதப்பசுக்கள் என்று கூறியது, சிக்கணத்தைக் கடைபிடிக்கச் சொன்ன சோனியா, பிரதமர் முதலானோரையல்லவா குறிக்கிறது. 

ஆங்கிலத்தில் ட்விட்டுவது எல்லா நேரமும் உங்களை இந்திர லோகத்தில் வைத்திருக்கும் என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை. பிரபலமாக இருந்தாலும் பெண்ணாக இருப்பதால், அதிலும் அழகான அம்மிணியாய் இருப்பதால் பெரிய சிராய்ப்புகள்கூட இல்லாது தப்பினார் குஷ்பு.

தேசிய ஒருமைப்பாட்டை இளைஞர்களிடையே வலியுறுத்தி கன்யாகுமரியிலிருந்து கஷ்மீருக்கு 1985-86ல் பாபா ஆம்தேவால் மேற்கொள்ளப்பட்ட நான்குமாத சைக்கிள் பயணத்தில் மெட்ராசில் இருந்து பங்கெடுத்த ஒரே ஆளாக நான் இருந்தேன். இன்னும் சிலர் செங்கல்பட்டு அருகிலிருந்த கிராமம் ஒன்றிலிருந்து வந்திருந்த்னர்.

ஒவ்வொரு நாளும், சராசரியாக 50-60 கிலோமீட்டர் சைக்கிள் மிதித்த பயணத்தில் அன்றைய தங்கல் என ஏற்பாடாகி இருந்தது ஒரு பள்ளி. அது மகாராஷ்டிர சிற்றூர் ஒன்றின் மாநகராட்சிப் பள்ளி. சரியான வெயில். வந்த களைப்பில் ஒரு வகுப்பறையின் அழுக்குச் சுவரில் நானும் சுதீர் என்கிற மராத்திய நண்பனும் முதுகு சாய்த்தோம்.

திடுப்பென்று, ஆப் கஹான் சே ஆரஹே ஹோ என்கிற சிறுவனின் குரல் கேட்டது.

உள்ளதைச் சொல்லிவிடுகிறேன்.இப்போதும் கூட இவ்வளவு ஹிந்தி எனக்குத்தெரியாது. அப்புறம் எப்படி இதை எழுதினேன் என்கிறீர்களா?இக்கடேச் ச்சூடு

Where are you coming from?         Aap / tum kahan se aa rahe ho ?


பெத்த ஆத்தாளைத் தவிர எல்லாம் கிடைக்குமிடம் இண்ட்டர் நெட்டு. இப்போது நிலவும் கடுமையான பவர் கட்டு காரணமாய் தமிழ்நாட்டில் நிறைய இடங்களில் இண்டர்நெட் கிடைக்காமல்,இணைய போதைக்கு அடிமையானோரில் பலருக்கும் நட்டு கழன்றுகொண்டிருக்கிறது என்கிறது ஒரு செய்தி.

இப்படியாக மராத்திச் சிறுவனின் ஹிந்தி குறுக்கீட்டால் நாங்களிருவரும் கண்களைத் திறந்தோம். ஹிந்தி தெரியாது என்பதால் பொதுவாக மூடாத என் வாய் மூடியே இருந்தது.

மும்பைசே. என்று தொடங்கி, இவர் தமில்நாடுவிலிருந்து வருகிறார் என்று முழுசாக சொல்லி முடிப்பதற்குள் அந்த சிறுவன் முகம் பூரிக்க,

அப்லா மானுஸ் என்று கூவினான். அது என்னை எரிச்சலூட்டிற்று. அதற்குக் காரணம் அவன் நம்ப ஆளு என்று சுதீரைப் பார்த்து மராத்தியில் கூறினான் என்று எனக்குப் புரிந்ததுதான்.

வாட் அப்லா மானுஸ்? தென் ஹூ ஐயாம்? என்றேன் (25 வயசுல ஹூ ஆம் ஐலாம் சொல்லத்தெரியாது சார். சாரி இஸ்கூல்ல தமிழ் மீடியம் காலேஜ்ல  தமிழ் இலக்கியம் படிச்சதா பேர் பண்ணின தறுதலை சார்.நானும் மராத்திக்காரனே தவிர எங்கள் மராத்தி தில்லகேணி மூத்திர சந்துக்ளுக்குள் முடங்கிப்போன மராத்தி. புனே மராத்தியும் இந்தத் தில்லகேணி மராத்தியும் மராத்தி என்கிற பெயரில் அழைக்கப்படுபவை என்பதைத்தவிர இரண்டுக்கும் வேறு எந்த ஒற்றுமையும் கிடையாது. இமயமலையில் இருப்பதையும் பெஸண்ட் நகர் வேளாங்கன்னி திருவிழாவில் சீவி உதிர்க்கப்பட்டு குச்சியில் சொருகப்படுவதையும் ஐஸ் என்றுதானே குறிப்பிடுகிறோம். அந்த அளவுக்கு நானும் மராத்திக்காரனே)

அந்த சிறுவனுக்கு ஆங்கிலத்தில் நான் கூறியது புரிந்ததோ இல்லையோ, ஆனால் தான் எதோ தவறிழைத்துவிட்டோம் என்று நினைத்திருக்க வேண்டும், பூரித்திருந்த அவன் முகம் என் வெம்மையில் குழைந்த அனிச்சமாக ஆயிற்று. வெள்ளைச் சட்டை காக்கி டவுசர் செருப்பற்ற காலுடன் ஒடிசலாய் பள்ளிக் காலத்தில் நான் எப்படி இருந்தேனோ அதே  தோற்றத்தில், தென் தமிழகத்துப் பையன் போல கறுகறுவென இருந்தான். அவனது கையைப் பிடித்திழுத்து பக்கத்தில் அமர்த்திக்கொண்டு அவன் தோளில் கைபோட்டபடி, சுதீர் என்னிடம் கூறினான்.

இவன் மீது ஏன் எரிச்சல் படுகிறாய்? உண்மையில் நான்தான் உன் எரிச்சலுக்குக் காரணமாய் இருக்க வேண்டியவன். நான் மட்டும் இவனிடம் பாம்பேவிலிருந்து வருகிறேன் என்று கூறியிருந்தால் இவன் வேற்றாள் போல ஹிந்தியிலேயே உரையாடலைத் தொடர்ந்திருப்பான். ஆனால் ஒரு மராத்திப் பையனைப் பார்த்ததும் என்னால் எப்படி பாம்பே என்று சொல்ல முடியும்? அதுதான் மும்பை என்று கூறினேன் என்றான்.

அந்தச் சிறுவனிடம், நாங்கள் எல்லோரும் வெவ்வேறு மொழி பேசும் மாநிலங்களில் இருந்து வந்து சேர்ந்து இருக்கிறோம். இவர் தமில் நாடு. உனக்குத் தமில் தெரியுமா? என்று அவனிடம் மராத்தியில் கேட்டான். சுதீர் ரவுத்தின் அரவணைப்பில் இயல்புக்குத் திரும்பிக்கொண்டிருந்த சிறுவன் அறியாமையின் குறுநகையுடன் குறுக்குமறுக்காய்த் தலையசைத்தான். நான் வெட்கித் தலைகுனிந்தேன்.

என்னைத் தமிழன்தான் ஆளவேண்டும் என்று தமிழ்நாடு ஒருபோதும் அடம்பிடித்ததே இல்லை. அதே போல தமிழகத்தை ஆளவந்த திராவிட தலைவர்கள் எவரும் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாய் விளைந்த தந்திரோபாய சறுக்கல்களைத் தவிர்த்து, பெரும்பாலும் தமிழர் நலனை முன்னிறுத்தியே ஆண்டிருக்கிறார்கள். இதுவே காங்கிரஸ் பேரியக்கம் தமிழ்நாட்டில் மட்டும் பேருக்கு இயக்கமாகிப் போக நேர்ந்ததுக்கு முக்கிய காரணம்.

சென்னையை மெட்ராஸ் என்று எப்படிச் சொல்லப்போச்சு? அண்னாசாலையை எப்படி இன்னமும் மவுண்ட் ரோடு என்கிறாய்? என்றெல்லாம் ரகளை செய்யும் சிவனின் சேனைகள் இங்கில்லை. எனினும் தமிழை, தமிழாய் எழுது என்று தமிழகத்தில் கேட்பது எப்போது இருந்தப்பா தமிழ் வெறியாக ஆனது?

சின்மயியும் அவரது தாயார் பத்மாசினியும் தங்களது தவறுகள் என்று எதாவது ஓரிரண்டேனும் இருக்குமா என்கிற சுய பரிசோதனைக்கே உட்படுத்திக் கொள்ளாதவர்கள். அவர்கள் எப்போதும் வெளுப்பு. அடுத்தவன் எப்போதும் கறுப்பு. இவை மயங்குமிடமோ முயங்குமிடமோ பற்றி அவர்களுக்கு என்ன கவலை. அவர்கள் பிரபலங்கள். அம்மா பெண் இருவரைத் தவிர இந்த உலகமே அவர்களுக்கு எதிராய் உள்ளது. இதுவரை எதிர்பட்டோர் எல்லோரும் அவர்களை வஞ்சிக்க மட்டுமே செய்திருக்கிறார்கள். இந்தமட்டுக்கும் அவர்கள் வந்திருப்பதற்குக் காரணம், அவர்களது கடவுளின் கிருபை மட்டுமே என்று வாய்க்குவாய் சொல்லிக்கொள்வது மட்டுமில்லை உள்ளூர நம்புகிறார்கள். விரல்காட்டி, மிரட்டல் தமிழ் பேசும் நாத்திகர் வைரமுத்துவின் கிருபை இல்லாமல் ஆஸ்கார் தமிழனிடம் சென்றிருக்க முடியுமா?

திறமை, தெருக்கற்களாய் வழியெங்கும் கொட்டிக்கிடக்கிறது. வாய்ப்பெனும் இன்னொரு கல்லோடு உரசினால்தானே உள்ளிருக்கும் பொறி வெளிப்பட்டு தீயாக முதிர முடியும். அலைந்தலைந்தே உள்ளிருக்கும் உதிரம் சுண்டி உருக்குல்லைந்த ஜல்லிக்கற்களின் சரித்திரம் எந்த ஏட்டிலும் பதியப் படாமல், போகிற காரணத்தால்தானே இடதுபுற வாய்கோண, ’ரேண்டம் பீப்பிள்’ என்று இவரால் பரிகாசத்துடன் தூற்ற முடிகிறது. 

I have realized one thing. I can just sit in one place, not say a thing. But even then I could be in the eye of a new storm. I also do wish the underlying motive behind all this would be brought to the fore. Why would random people make up stories like this?

I pray with all my heart for justice.

http://www.chinmayisripada.com/2012/10/facing-abuse-and-backlash-of-rumours.html

இரண்டு பேரை காவுகொண்டோமே என்கிற வருத்தமில்லை. அப்போதும் தனக்கான சோக சிம்மினிதான் இந்த சுய இரக்க மின்மினி.

யாரும் கதைகட்டவில்லை. ஆதாரமின்றி இந்தப் புத்தகத்தில் எதுவும் பேசப்படவில்லை. நீங்கள் பேசியவை மறுக்கமுடியாத ஆதாரத்துடன் பதிவு செய்திருக்கிறேன். ரேண்டம் பீப்பிள் என்று நீங்கள் குறிப்பிடுவோரில் ஒருவனான எனக்கு, ”அவார்டு குடுக்கணும் தீயா செயல்பட்டு :)” என்று என்னை கிண்டலாய் மிரட்டாவிட்டிருந்தால் இவ்வளவு தூரம் இதில் இறங்கி இருப்பேனா என்பது ஐயமே. விநாச காலே விபரீத புத்தி.

உங்கள் வீட்டுத்தோட்டத்தில் மட்டுமே பாகற்காயை யாரோ கொண்டு வந்து விதைத்துவிட்டது போல போகுமிடமெல்லாம் கழிவிரக்கக் கடைவிரித்து பசப்புவது, ஒரு போதும் தன்மானச் சிங்கம் என்று தம்மைக் காட்டிக்கொள்வோர் செய்கின்ற காரியமன்று. நீங்கள் என்ன சிக்னலிலா நிற்கீர்கள்? உங்களுக்குப் பச்சை விளக்கு விழுந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன?

மொழியினால் உண்டாகும் அந்நியோன்னியம் சகோதரத்துவம் வெறியன்று. அதுதான் இயல்பு. மராத்திக்காரன் மராத்தியில் பேசுவதும் தமிழனாய் இருப்பவன் தமிழில் பேசுவதும்தான் இயல்பு. தமிழர்களாய் இருந்துகொண்டு ஆங்கிலத்தில் எழுதினால் யார் கேட்கப்போகிறார்கள்?ஆங்கில எழுத்துக்களில்தான் தமிழ் எழுதுவேன் என்று அடமாய் இருப்பவர்களைப் பார்த்து அந்தப் பள்ளிச் சிறுவனைப் போன்ற கறுப்புத் தமிழர்கள் இவர்களை அந்நியராகவும் தமிழை வேண்டுமென்றே அவமானப் படுத்துகிறவர்கள் என்றும் நினைத்தால் அது தவறா? ஆ அது துவேஷம் பாராட்டுவது என்று இரட்டைக் குழல் துப்பாக்கிகள், போதிக்க வேறு தொடங்கினால் தமிழர்களுக்குப் பற்றிக்கொண்டு வராதா? தலித்துகளைத் தரக்குறைவாய் சோக்கால்டு “தாழ்த்தப்பட்டவர்கள்” என்று பேசினார் என்பது தீயாய்ச் சுட ஆரம்பிக்கையில், சருமம் கருகாதிருக்க மறவர் சீமை என்கிற அதிகாரப் போர்வை தேவைப்படுகிறதா? அதுவரை அழுக்குத் துணிக்கூடையில் கிடந்த தமிழ் வளர்த்த கொள்ளுத்தாத்தாவைக் கசக்கி அம்மாவும் மகளும் அப்போதுதான் கட்டிக் கொள்வீர்களா?

அண்ணா நகர் வருவாய்த்துறை குடியிருப்பில் இருந்த சமயம். பொங்கல் தீபாவளி போல  எதோ நிகழ்ச்சியொன்று, வளாகத்துத் திறந்தவெளி அரங்கில் ஏற்பாடாகி இருந்தது. என்றும் குழந்தையாகத் தோற்றமளிக்கும் நடிகை வருகிறார் என்கிற கிளர்ச்சியுடன் பெண்களெல்லாம் சென்றனர். எதிர் வீட்டில் இருந்த பெண்மணி திர்வானைக்காவல் பக்க கிராமத்தைச் சேர்ந்தவர்.கணவரின் வேலைகாரனமாய் சென்னை வந்தவர். அவர் வலுக்கட்டாயமாய் அழைக்கவே, என் மனைவியும் சென்றிருந்தாள். விழா முடிந்து திரும்பி வருகையில் அந்தப் பட்டிக்காட்டுப் பெண்மணிக்கும் என் மனைவிக்கும் நிகழ்ந்த உரையாடல்.

என்னாங்க இது? இவ்ளாம் பெரிய நடிகையாச்சேனு போயிப்பாத்தா இப்புடிப் புசுக்குனு போயிடுச்சி. 

ஏங்க நல்லாதான இருக்காங்க.

என்னத்த இருந்தாங்க போங்க.

ஏன் என்னாச்சு

சினிமாவுலப் பாக்கும்போது, டான்ஸ் ஆடும்போதுலாம் எத்தா பெருசா இருக்குது. நேர்ல பாத்தா நம்ப அளவுக்குக்கூட இல்ல. இதுக்கேவா இதுங்க இந்த ஆட்டம் போடுதுங்க?

இன்றைக்கும் தொலைக்காட்சியில் ஓளிபரப்பாகும் பாடல்கட்சிகளில் மேரு மலைகள் கிட்டத்தில் காட்டப்படுகையில் நானும் மனைவியும் அந்தப் பெண்மணியை நினைத்துக் கொண்டு சிரிக்க தவறுவதே இல்லை.

இது பிரபலங்களின் மூளைக்கும் பொருந்தக் கூடியதுதான்.

அரசியல்வாதிகள் சினிமாக்காரர்கள் எல்லாம் படங்களில் தோன்றும் பிம்பங்கள். பத்திரிகைகளில் மட்டுமே தொட்டுப் பார்க்கக்கூடியவர்கள். இண்ட்டர்நெட் காலத்துக்கு முன்னால் நம் கனவில் மட்டுமே அவர்களை சந்திக்க முடியும்.

காட்சிக்கு மறைவாய் இருந்து நம் கற்பணைக்கு அதிகம் வேலை கொடுத்ததன் காரணமாகவே அவர்கள் அதீத புத்திசாலிகளாகவும் அதீத அழகாகவும் தோற்றமளித்துக்கொண்டு இருந்தனர்.

எந்த அலுவலகத்திலும் அதிகாரிகளுக்கான அறை மட்டும் ஏன் விஸ்தாரமாக அமைக்கப்படுகிறது? இந்த இந்த அளவில் இருக்கவேண்டும் என்று படிநிலைகளுக்குத் தக அளவீடுகள் அரசு அலுவலகங்களில் இருப்பது ஏன்? அதிகாரிகளுக்குப் பெரிய மேசை கொடுக்கப்படுவது, கைநீட்டி எவரும் எட்டி அடித்துவிடக்கூடாது என்கிற யதார்த்த பயத்தால் அன்று. இக்கினியூண்டு உருவமுடையவர்கூட பெரிய மேசைக்குப் பின்னால் உட்கார்ந்து இருக்கையில், அறைக்குள்  நுழைபவர் மனதில் அவரது அதிகார பிம்பம் விரவி நிறுவி உள்ளே நுழைந்தவர் மனதைக் கட்டுப்படுத்துகிறது.

இணையமும் ட்விட்டரும் ஃபேஸ்புக்கும் சராசரிக்கும் ஜாம்பவான்களுக்குமான உயர நீள பிம்ப இடைவெளியை துப்புறவாய் நீக்கிவிட்டன.

உங்கள் மனதில் போடப்பட்டிருந்த அவர்களது கவசங்கள் நீங்கிவிட, இவங்களுக்குள்ளாம் மூளை எத்தனாம் பெருசு என்று எண்னிய காலம் போய் அட இதுங்க வாயத் திறந்தா நம்ப சைசுக்குக் கூட வராதுங்க போல இருக்கே என்று, அருகாமை அவர்களை நமக்கு இணையாக ஆக்கிவிட்டது. சமயங்களில் அவர்களது திருவாய் மலர்ந்தருளல்களால் அவர்களது உண்மையான அளவைக் காட்டி, அடங்க இதுங்க இவ்வளவுதானா என்கிற இளக்காரத்தை ’ரேண்டம் பீப்பிளி’டம் உண்டாக்கிவிடுகின்றன. 

மனதிற்குள் இந்த இளக்காரத்துடன் நீங்கள் எவரை அணுகினாலும் அதிகாரத்துக்கும் உங்களுக்கும் இடையிலான மேசையின் இடைவெளி மாயமாய்க் காணாமற் போய்விடும். இணையத்தில் இருவரும் சமம் என்கிற தைரியம் சாதாரணரான உங்களுக்குள் உண்டாக்கும் தன்னம்பிக்கை காரணமாய் உங்கள் திறமை அணைத்தையும் ஒருமுகப்படுத்தி பிரபலங்களின் வாயைப் பிடுங்குகிறீர்கள். அவர்களுக்கு இருக்கும் ஆயிரம் வேலைகள் அல்லது பிடுங்கல்களிலிருந்து இளைப்பாரலாய் ஓய்ந்த நேரத்தில் உங்களிடம் ஓசியில் சாமரம் வீசிக்கொள்ளவே அவர்கள் இணையத்துக்கு வருகிறார்கள். சமயத்தில் ஜாதக விசேஷம் காரணமாகவோ கூஜாவின் பிடி கெட்டியாய் இருந்ததன் காரனமாகவோ அடித்த காற்றில் மேலே போனதன் காரணமாகவோ மட்டுமே அவர் பிரபலம் ஆனவராகக் கூட இருக்க வாய்ப்பிருக்கிறது.

சாரு ஜெமோ எஸ்.ரா போன்றவர்கள் இணையத்திலேயே இருந்தும் ட்விட்டருக்கு வராதிருப்பதற்குக் காரணம் நேரமின்மை மட்டுமல்ல.

என் திருமணத்தின்போது, டெல்லியிலேயே பிறந்து வளர்ந்த சிறுமியொன்று திருமண மண்டபத்தில் துறுதுறுவென திரிந்துகொண்டு இருந்தது. அதன் தாய்மாமன் முயல்குட்டிபோல அதைத் தூக்கிக்கொண்டு என்னிடம் வந்தார்.

பாவா, இதரத்திலி அம்ம ஹேங்க இராளுந்த கேள்றி (பாவா இவளிடத்தில் இவளது அம்மா எப்படி இருப்பாளென்று கேளுங்களேன்)

முந்தையதினம் சோளிங்கர் சத்திரத்துக்குள் கால்வைத்ததுமே, தனது தங்கை எனக்கூறி எனக்கு அறிமுகப்படுத்தி வைத்திருந்ததே இவர்தான். எனவே இது எதோ விளையாட்டு என்று புரிந்து போயிற்று. ஹேங்க இராரு என்று கேட்டு வைத்தேன்.

கொஷ்க்குமொஷ்க்குந்த குண்டக்க கெம்பக்க குஷ்புவாங்க இராளு அம்மா என்று சொல்லிற்று.

இன்று அதற்கு நினைவிருக்குமா என்பது சந்தேகம்தான். இப்போது போல 94கில் சினிமா பாடல்களுக்கென்றே 24 மணிநேர சேனல்கள் எல்லாம் ஏது? அதுவும் டெல்லியில் அவர்கள் இருந்தது தமிழர் பகுதியும் அல்ல. கவர்ச்சி காட்டியே முன்னேறியவர் எனினும்  குஷ்புவிடம் இருந்ததும் ரிடையரான பிறகும் இன்னமும் அவரிடம் இருக்கக்கூடியதுமான வசீகரம் ஒட்டுமொத்த குடும்பத்தையும் ஈர்க்கக்கூடியது. திமுக இவருக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு முக்கிய காரணம், தனது முரட்டு பிம்பத்தை இளக்கி தேசிய அளவில் மென்மைப் படுத்திக் கொள்வதற்காகதான்.

நடிகைகளை விரும்பாதவர்கள் என்று யாரும் இருப்பார்களா? ஒவ்வொரு ஆணும் உள்ளூர பெண்ணின் அருமையை விரும்புகிறான். பாலியல் ரீதியான மன வடிகாலுக்கு எந்த குற்றவுணர்வையும் ஏற்படுத்தாத பொது நபராக நடிகையே இருக்கிறாள். ஏங்க வைப்பவளாகவும் எளிதில் கிட்டாத காரணத்தாலும் அவள்மீதான மோகம் கூடுகிறது. எட்டாத உயரத்தில் இருப்பவளை, இவ அப்படித்தானே அப்பறம் என்ன என்று ஒன்றுக்குப் பத்தாய் மனத்ற்குள் அவளைப் பொதுமைப்படுத்திக் கற்பித்துக்கொள்வதில் மனம் ஆசுவாசப்படுகிறது. நடிகைகளைப் பற்றிப் பொதுவெளியில் மோசமாகப் பேசி உள்ளூர ரொங்கிக் கிடப்பதற்கு இந்த மனநிலையே காரணம்.

இதே இரட்டைத் தன்மையின் இன்னொரு வெளிப்பாடே, நடிகைகள் அரசியலுக்கு வருவதை இளக்காரமாகப் பேசுவதிலும் வெளிப்படுகிறது. பொதுவெளியில் வந்து அரசியல் பேசும் நடிகை, ஷபானா ஆஸ்மியாக  இருக்கிற பட்சத்தில் இப்படி பேசமுடியாது மரியாதையுடன் பார்க்கப்படுவது ஏன்? சினிமா உலகின் முன்னணி நடிகைகள் கனவிலும் நடிக்கத் தயங்கும் ஓரிணச் சேர்க்கையாளராகவும் நிர்வாணக் கோலத்திலும் நடித்தவர் அவர். ஆனால் பிரமிளா திரையில் தோன்றினாலே யக்கா குளிக்க போக்கா என்று கூக்குரலிடுவதே இன்றைய தலைமுறைக்கும் மோட்சமாக இருக்கிறது. டூப் நெகடிவில் எத்துனை முறை குளித்தாலும் ஜலதோஷம் பிடிப்பதில்லை. என்பதற்காக அவரை பாத்ரூமிலேயே அடைத்து விடுகிறார்கள். ஏழெட்டு ஆண்டுகளைத் தாண்டிய  படைப்புகள் எப்படி இலக்கியத்தில் கிளாசிக்குகளாய் ஆகிவிடுகின்றனவோ அது போலவே இவரது சினிமாக்களும் பாலியல் கிளாசிக்குகள் ஆகிவிட்டன.

நடிகை தீபா அவர்கள் காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டபின் தேசிய நடிகை தீபா என்று அழைக்கப்பட்டார். தியேட்டர்களில் அவர் முகம் தெரிந்தாலே தேசிய கோஷத்தை இளைஞர்கள் ஓங்கி ஒலித்தனர். அதிலும் அவர் கொஞ்சம் பெரிய கேளிக்கையாளர் என்பதால் பெரிய மனதுடன் நடித்த காட்சிகளில் முழக்கங்கள் விண்ணை எட்டியதில் வியப்பில்லை.

மலயாள நடிகர் சீனிவாசன், சுஹாசினியை ரிடையர்டு சுந்தரி என்று குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது. பிரபலமாகவும் இருந்து 42 வயதானாலும் இன்னும் முக வசீகரம் குறையாது சரளமாகவும் ஆங்கிலம் பேசுகிறார் என்பதால்தான் தேசிய ஆங்கில ஊடகங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் குஷ்பு அவர்களை முன்னிலைப் படுத்துகிறது. 

தாம் ஒரு அரசியல் கட்சியின் ஊடக முகமாய் இருக்கிறோம் என்பது அதீத பொறுப்புணர்வைக் கொடுப்பதற்கு பதில், தமக்குப் பின்னால் ஒரு அரசியல் கட்சி இருக்கிறது என்கிற மமதையைக் கொடுத்துவிடும் விபத்து நிகழ்ந்துவிட்டது. இல்லையென்றால் நம் பிரியத்துக்குரிய குஷ்பு இப்படிச் சொல்லக்கூடியவரல்ல என்றே எண்ண விரும்புகிறேன்.

நான் பிறந்ததே கேளிக்கை காட்ட அதனால்தான் நீங்கள் பின்தொடர்கிறீர்கள். தலகீழாய் அல்ல என்கிறார்.
இவரைத் தொடரும் 50ஆயிரம் பேருக்கும் நல்ல செருப்படி. சுயமரியாதையை நடிகைகளிடம் அடகு வைக்கும் தமிழர்களுக்கும்.

இதைக்கூட இணையத்தில்தான் சொல்லி இருக்கிறார். பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் சொல்வாரா என்பது ஐயம்தான். இணையம் பொதுவெளிதான் அதேசமயம் அவரவர்க்கு சுதந்திரமாகப் பாடிக்கொள்வதற்கான பாத்ரூமும் கூட என்கிற பாதுகாப்பையும் கொடுக்கிறது.

பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்திலிருந்துதான் இவர் பெருமையுள்ள திமுகவியர் எனச் சொல்லிக் கொள்ளும் திமுக வந்தது என்பதாவது இவருக்குத் தெரியுமா? மணியம்மையாக நடிக்காதிருந்தால் அதுகூட தெரிந்திருக்க வாய்ப்புண்டா?

கேளிக்கைப்படுத்தவே பிறவியெடுத்த இவர் கொடுத்த கேளிக்கைகளில் பல  எப்படிப்பட்டவை என்பதற்குள் நுழையப்போனால் நாம் புழலில் புழங்கவேண்டிவரும் எனவே அதைத் தவிர்ப்போம். தான் ஒரு ஷபானா ஆஸ்மியோ அல்லது ஸ்மீதா படேலோ அல்ல என்பது அவருக்கே தெரியும் அளவுக்கு அவர் புத்திசாலிதான். ஆனால் ஏனிந்த வாய்ச்சவடால்? அரசியல்வாதியானபின் போலிப்பணிவுகூட இல்லாத இந்த திமிர் ஏன்? பத்திரிகை டிவி போன்ற ஊடகங்களின் கண்களில் படாது என்கிற தைரியம்தான் இல்லையா? தேர்தல் என்று வரும்போதும் ட்விட்டர் போல மக்கள் இவரைப் பின் தொடர்ந்து வந்து ஓட்டுப் போடுவார்கள் என்று வாளாவிருக்கப் போகிறரா? NDTVயிலும் இதையே சொல்லுவாரா? சஷி தரூரை விட இவர் படித்தவரும் இல்லை புத்திசாலியுமில்லை என்பதை ஊரே ஒப்புக்கொள்ளும். அவருக்கே அந்த கதி. இதை கொஞ்சம் மனதில் நிறுத்துவது இவர் புதிதாக  இறங்கியிருக்கும் அரசியல் கேளிக்கைக்கு அல்லது கேளிக்கை அரசியலுக்கு நல்லது.

ட்விட்டர் என்பது கேளிக்கைக் களமாகவும் இருக்கலாம். வெற்று அரட்டையாகவும் இருக்கலாம். அல்லது பிரபலங்களின் அறியாமை பல்லிளிக்கும் இடமாகவும் இருக்கலாம்.

உங்களுக்கு மறைமலை அடிகளைப் பற்றித் தெரியும் அல்லவா. தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை. அதாவது, எந்த மொழியும் கலக்காது தூ்யதமிழைப் பேசுவது என்கிற கொள்கையைப் பரப்ப தொடங்கப்பட்ட இயக்கம். அவர்தான் அதன் முன்னோடி. தமிழார்வத்தால் நடராஜனாய் பிறந்தவர்கள் ஆடலரச்னாய் மறு பிறவி எடுத்ததற்கும் இவர் தந்த உத்வேகம்தான் காரணம். அந்த காலத்தில் அவர் பின்னால்  போன இளைஞர் பட்டாளம் ஏராளம்.

மறைமலையடிகள் ஒரு நாள் தம் வீட்டுக் கதவைத் திறந்து எட்டிப்பார்த்து போஸ்ட்மேன் இன்னும் வரலையா என்றாராம். எதிர்கால வாழ்க்கையே இவர்தான் என்று அவரிடம் வந்து அடைக்கலமாகி இருந்த இளைஞன் பேயைக் கண்டவன் போல அங்கிருந்து ஓடியே விட்டானாம். ஒருவரை உடைப்பதற்கும் அவர் நம்பிக்கையைக் குலைப்பதற்கும் ஒரு சொல் போதுமானது. மகாராஷ்ட்ராவின் பள்ளியில் அந்தச் சிறுவனிடம் மும்பை என்கிற ஒற்றைச் சொல் எப்படி மகிழ்வூற்றை எழுப்பிற்றோ, அதுவரை தனித்தமிழ் இயக்கத்தைக் கட்டியெழுப்பி மறைமலை அடிகளாய் இருந்தவர், போஸ்ட்மேன் என வாய்தவறிச் சொன்னதும் சாதாரண வேதாசலமாய் சரிந்துவிட்டார்.

கேளிக்கையாளராகவே அவதரித்த குஷ்பு, ட்விட்டர்களுக்கு அளித்த விருந்தை அள்ளி அள்ளிப் பருகுங்கள். திமுகழகத்தின் பிரச்சார பீரங்கியான ஹீரோயினாகவும் ஹீரோவாக எம்.எல்.ஏ ஜெ அன்பழகன் அவர்களும் நடித்து வெளியான முழுநீள சிரிப்புப்படத்தைக் கீழே கண்டு மகிழுங்க்சள்.. 

படக்கதையின் பின்னணி. 

திமுககாரர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதைக் கண்டித்து சிறை நிரப்பும் போராட்டத்தைக் கடந்த ஜூன் இறுதியில் அறிவித்தது திமுக. இதை எம்.எல்.ஏவாகிய ஜெ.அன்பழகன் அவர்கள் குஷ்புவுக்கு போராட்ட விளக்கக் கூட்டம் திருவல்லிக்கேணியில் நடப்பதாகக் கூறினார். இது அன்பழகனுக்கும் குஷ்புவுக்கும் இடையில் மட்டுமே ஒற்றைக்கு ஒற்றையாய் நடந்த உரையாடல். ஆனால் ட்விட்டர் என்பது பொதுவெளி. இங்கே ஒளிவு மறைவுக்கு இடமில்லை.

காஞ்சன் குப்தா, எப்படி வலியப்போய் சஷி தரூரின் வாயைப் பிடுங்கினாரோ, அது போலவே கனவான் ட்விட்டர் @saysatheesh இருவருக்கும் இடையில் நுழைகிறார்.

செமத்தியாய் மாட்டிக்கொண்டதும் கட்சியின் கொள்கையே அறியாதவர்கள் என்று மடக்கப்பட்டதும் ஜெ.அன்பழகன் அரசியவாதியென்பதால் புத்திசாலித்தனமாக ஜகா வாங்கி எஸ்க்கேப் ஆகிவிடுகிறார்.சின்மயி போலவே, குஷ்பு விடுவதாகவே இல்லை. இன்னும் இன்னும் என புதை மணலில் இறங்கிக்கொண்டே இருக்கிறார். உளறி மேலும் உளறி அப்புறம் கிளறி என்று சின்மயிக்கு கொஞ்சமும் சளைகாத உள்றல் இது என்று காட்டியே தீருவேன் என்று கடைசிவரை முழுகுவது கண்கொள்ளா காட்சி.

கட்சியின் வரலாறு தெரியுமா தெரியாதா என்பது முக்கியமில்லை.  இங்கிலீஷில் சரளமாய்ப் பேசவருகிறதா என்பதே அதைவிட முக்கியம். அதனினும் முக்கியம் அவர் பெண்ணாகவும் இருந்து பார்க்க நன்றாகவும் இருப்பது. என்ன இருந்தாலும் ஊடக யுகம் அல்லவா இது. 

குஷ்பூ கூட பரவாயில்லை, பஞ்சாபி. திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாறை ஆங்கிலத்திலோ பஞ்சாபியிலோ இனிமேல் கூட கிடுகிடுவென படித்துவிடுவார். நடிகை என்பதால் வசனம்போல மனப்பாடமும் செய்துவிடுவார்.

ஆனால் பாவப்பட்ட ஜன்மம், ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏதான். அதைவிடப் பாவம் அவரது தந்தை பழக்கடை ஜெயராமன். இந்தி எதிர்ப்புப் போராட்டம் உட்பட பலபோராட்டங்களைக் கண்ட திமுகவின் தூண். தூணிலிருந்து வந்தவர் கொள்கைப் பிடிப்பில் துரும்பாய் இளைத்திருக்கிறார்.

திராவிட பழக்கடையும் தேசிய குஷ்பூவும் சிறை நிரப்பும் போராட்டத்தை ஜெயில்பரோ என்று குறிப்பிட்டுக் கொள்கின்றனர். இந்தி வார்த்தையை ஆங்கிலத்தில் ட்விட்டிக் கொள்கிறார்கள். அதை மடக்கிக் கிடுக்கிப்பிடி போடும் ’ரேண்டம் பீப்பிள்’ட்விட்டர்கள் என்னமாய் நக்கலடித்து களேபரப்படுத்துகிறார்கள் என்பதைப் படித்து மகிழுங்கள்.

இதை கனிமொழி அவர்களின் பார்வைக்கும் கலைஞரின் பார்வைக்கும் கொண்டுவருவதில் மிக்க மகிழ்வடைகிறேன். இந்த ட்விட்டர் உரையாடலில் குஷ்பு அவர்கள் சின்மயி ஃபாண்ட்டில் அர்த்தநாரீஸ்வர ஆங்கிலத்தில் ஓரிருமுறைதான் ட்விட்டி இருக்கிறார் என்பதில் எனக்குக் கூடுதல் வருத்தம். 

தமிழ் ட்விட்டர்கள் அன்பழகனுக்கும் குஷ்புவுக்கும் திராவிட வரலாற்றை போதிப்பதென்ன, அன்பழகன் பதிலுக்கு ஏர்டெல் விற்கும் யூனிவர்செல்லை இவர்களிடம் விற்பது என்ன, திராவிட குஷ்பு இவர்களிடம் சின்மயி அம்மா பத்மாசினி போல நாட்டைத் துண்டாகக்கூடாது பிரிவினையை உண்டாக்கக்கூடாது என்று தேசியம் போதிப்பதுதான் என்ன என்று ஒரே கும்மாளிதான் போங்கள்.

இவர்கள் இருவருக்கும் திராவிடத்தின் ஹிந்தி எதிர்ப்பு வரலாற்றை எளிதாக அறிந்து கொள்ளும் முகமாய், குறுகிய பாடமாய் இந்தக் கட்டுரையின் கடைசியில் விக்கியின் சுட்டி தரப்படுள்ளது. படித்துப் பயனடைவீர் திராவிடரே தேசியமே.

இடையில் வந்து சிந்து பாடுகிறார் @4sn. இதை குஷ்பூ அவர்கள் நீரும் நெருப்புமாய் எதிர்கொள்வதையும் பாருங்கள். இந்த ரெண்டு ட்விட்டுகளும் ட்ரெய்லர். மெய்ன் பிக்ச்சர் அப்பறம்.
டமில் என்பது ஜாதியாம்! இப்போது மெய்ன் பிக்ச்சர்.

பூம்புகார் புரொடக்‌ஷன்ஸ் சுயமரியாதையுடன் அளிக்கும்
ஜெய்ல்பரோ

(ஹிந்தியில் இவை ஜெய்ல் பரோ என்கிற இரட்டைச் சொற்கள். தேசிய நீரோட்டத்தில் கூழங்கல்லாய் உருண்டு ஒற்றைச் சொல்லாகிவிட்டது) சப் டைட்டில்.

JAnbazhagan J Anbazhagan
@khushsundar : On 30th of June der ll be a meeting scheduled for you in Triplicane regards to explanation on June 4th Jailbahro protest.

saysatheesh Šáţĥėĕŝђ Ķũмǻř
@JAnbazhagan Happy to note that there are some steps taken to explain about the Jaibahro to people. This is wt I asked last wk @khushsundar

khushsundar khushbusundar
@JAnbazhagan yes..looking forward to it..!!!

ravan181 ravanan mayil vahana
@JAnbazhagan @khushsundar தூய தமிழில் சிறை நிரப்பு போராட்டம் என்று கூறாமல் ஜெயில் பாரோ என்று ஹிந்தி வார்த்தையில் ஏன் கூறுகிறீர்கள்

khushsundar khushbusundar
@ravan181 @janbazhagan bcoz many do not understand Tamil on the social network sir..thank u though..

ravan181 ravanan mayil vahana
@khushsundar @janbazhagan It is not the question of understanding. It is the principal to use only Tamil is Imperative

JAnbazhagan J Anbazhagan
@khushsundar @ravan181 : I would its an universal word to be understood by everyone.

ravan181 ravanan mayil vahana
@JAnbazhagan @khushsundar Jail Baro protest pertain only Tamil Nadu.Universal word will have no impact

khushsundar khushbusundar
@JAnbazhagan @ravan181 exactly!! Bingo!!!

vSudhar Sudharsan
@JAnbazhagan @khushsundar @ravan181 Nobody did not understand 'பேருந்து' before DMK era. This is just e.g.Now its a common name.

psankar psankar
@JAnbazhagan @khushsundar @ravan181 @tpkd_ jailbharo isn't an universal world (like Hello). It is just a north-indian word.

JAnbazhagan J Anbazhagan
@psankar @khushsundar @ravan181 @tpkd_:people have to understand,twitter is an universal page where many peoples around the world would join

psankar psankar
@JAnbazhagan @khushsundar @ravan181 @tpkd_ And you think someone from Spain or Srilanka or Canada will understand jailbharo ? !

khushsundar khushbusundar
@psankar Indians all over the world understand,doesn't that suffice? @JAnbazhagan

psankar psankar
@khushsundar @JAnbazhagan No. It should be mentioned Sirainirappum poraattam or JailOccupying protest. I write wikipedia pages for 1/n

psankar psankar
@khushsundar @JAnbazhagan DMK, Suaymariyadhai iyakkam etc. You should understand our (DMK) anti-hindi stands before protesting 2/n

psankar psankar
@khushsundar @JAnbazhagan Even now instead of arguing for using jailbharo, if u just use sirai-nirappum, you will get better online presence

tsureshkumar tsuresh
@khushsundar, sorry mam, I don't understand JailBharo, I'm from TN. So, this is not for tamilians? @psankar @JAnbazhagan @khushsundar

tpkd_ கோ.அரவிந்தன்
#hindi @khushsundar Isnt this the same logic , people were asking us to learn hindi ? @psankar @JAnbazhagan

psankar psankar
@tpkd_ @khushsundar @JAnbazhagan EXACTLY. This is exactly the reason that was used to force Hindi on us in 1950s, leading to DMK formation

riyazdentist  ஸ்மைல் டிசைனர்®
@tpkd_ @khushsundar @psankar @janbazhagan and This protest is organized by DMK which is a state party not a national party

ayyanar Ayyanar Viswanath
@tpkd_ the logic may not apply to @khushsundar coz she already knew hindi :) @psankar @JAnbazhagan

tpkd_ கோ.அரவிந்தன்
@ayyanar thought it was direct tweet to @khushsundar , they said they are using hindi to reach bigger audience 1/ @psankar @JAnbazhagan

tpkd_ கோ.அரவிந்தன்
@ayyanar I doubt whether anyone outside TN will give any attention to this "Chirai Nirappum Porattam" @khushsundar @psankar @JAnbazhagan

ayyanar Ayyanar Viswanath
@tpkd_ Certainly not. for the sake of their own happiness let them name it in french, it will reach more ppl @khushsundar

khushsundar khushbusundar
@psankar u understood right?same with many..y restrict the protest only for TN?ppl from over the globe r on social network..@JAnbazhagan

karthi_1 karthi
@khushsundar Mam, Do you want TN ppl to learn hindi? @psankar @JAnbazhagan

khushsundar khushbusundar
@karthi_1 @psankar @janbazhagan don't u have Hindi as subject in schools in TN? Let's not argue for the sake of it.. :)

saysatheesh Šáţĥėĕŝђ Ķũмǻř
@khushsundar ..and its not an arguement. Wn a party which is against imposing Hindi, now asks to know Hindi, is of surprise! @janbazhagan

khushsundar khushbusundar
@saysatheesh @JAnbazhagan it's a personal choice to take up Hindi or not in school..my kids took tamil..so?they speak Hindi too :)

saysatheesh Šáţĥėĕŝђ Ķũмǻř
@khushsundar agreed! Its all their personal choice. But wn the party names its protest in hindi, do v all shd know Hindi? @JAnbazhagan

khushsundar khushbusundar
@saysatheesh @janbazhagan no,did anybody say tat bro?

saysatheesh Šáţĥėĕŝђ Ķũмǻř
@khushsundar No one told. But if a party's important personalities like u names a protest in Hindi, its indirectly say so! @janbazhagan

thedonashok Don Ashok
@saysatheesh @khushsundar @janbazhagan DMK was never against hindi, it was against imposing it! Note that It hasnt imposed tamil too!

saysatheesh Šáţĥėĕŝђ Ķũмǻř
@thedonashok I hope u won't agree with @khushsundar 's remark, that Tamil is a caste, and creating rift among Indians! @janbazhagan

thedonashok Don Ashok
@saysatheesh @khushsundar @janbazhagan Not only dat. I dont agree with termin Jailbharo a universal one! I wish kalaignar was here! :-)

saysatheesh Šáţĥėĕŝђ Ķũмǻř
@thedonashok the problem is, now a days joining a big party without knowing its policies becomes a fantasy! @khushsundar @janbazhagan

siva420 Sivashunmuga Raja.V
@saysatheesh @thedonashok @khushsundar @JAnbazhagan No issues even the party derails from many policies .

thedonashok Don Ashok
@saysatheesh @khushsundar @janbazhagan As a DMK voter for more than 3 gens now, i blame the party for this!

khushsundar khushbusundar
@saysatheesh @thedonashok @janbazhagan get it right dear! I never said tamizh is a caste..I said DMK is above caste n religion.. :) pl read.

saysatheesh Šáţĥėĕŝђ Ķũмǻř
@khushsundar if u hv not deleted this (twitter.com/khushsundar/st… ) then it is ur words mam. My respect on u goes! @thedonashok @janbazhagan

khushsundar khushbusundar
@saysatheesh exactly n I m not denying tat but pls read the other person's tweet before jumping to conclusion..it was in context 2 his text!

saysatheesh Šáţĥėĕŝђ Ķũмǻř
@khushsundar I hv fully read the debate since morning.. and I m fully watching. I can't agree with u. No more argues mam.. Hv a good day!

saysatheesh Šáţĥėĕŝђ Ķũмǻř
@khushsundar If I join a party, I will know the basic principles of the party.. damn sure! @janbazhagan

siva420 Sivashunmuga Raja.V
@saysatheesh @khushsundar @JAnbazhagan land grabbing is one of the basic principle

_thesmoke Sathish
@khushsundar What Hindi in TN Schools!? Do u know really abt TN & its schooling procedure!?Wat u know!? @karthi_1 @psankar @JAnbazhagan

senthil_idkl பொதிகைச் செல்வன்
@janbazhagan @khushsundar @ravan181 mein aapki jailbharo andholanki swahat karthaahooo..

ravan181 ravanan mayil vahana
@senthil_idkl @janbazhagan @khushsundar कि राजनीति है.मैं उस पर टिप्पणी नहीं है, मेरी चिंता की बजाय मिठाई तमिल हिंदी शब्द है

senthil_idkl பொதிகைச் செல்வன்
@khushsundar @JAnbazhagan نحن نرحب بالمشاركة في احتجاج السجن ملء அரபு நாட்டினரும் புரிந்து கொள்ள @ravan181

senthil_idkl பொதிகைச் செல்வன்
@JAnbazhagan @khushsundar আমরা জেল ভর্তি প্রতিবাদ অংশ নিতে স্বাগত জানাই @ravan181

vSudhar Sudharsan
@khushsundar @ravan181 @janbazhagan Yes u talk like Hindi heoine talking tamil, nobody will understand.
எண்ட் கார்டு போடுகையில் ஜாக்கிசான் படங்களில் NG ஷாட்டுகள் காட்டப்படும் அல்லவா அதைப்போல இது.


கரெக்ட்டு மேடம். போன்ல தமிழ் இல்லாததுபோய் ஒரு குற்றமாகுமா. தமிழ் வளர்த்த பரம்பரைனு சொல்லிக்கற சின்மயிக்கும் அவங்க அம்மா பத்மாசினிக்கும் மனசுலையே தமிழ் இல்லை. உங்குளுக்கு போன்ல இல்லாதது பெரிய குத்தமா?

என்னது வாடகையா? அடுத்து நமீதா மேரி எதோ பார்த்திபன் மாதிரி ஒரு வார்த்தை வருது. ஆனா பார்த்துவன்னா யாரு? பேசவெ குடது? ஓ பேசவே கூடாதா. பாத்திபன் பேசவே கூடாது. ஆமாமா வடிவேலுவ ரொம்பத்தான் கலாய்க்கிறரு. கரெக்ட்டு அவுரு பேசவே கூடாது. சரி அப்பறம். தப்பு நடக்கும்போது தட்டி கேக்கறவன் அப்பிடினா கட்ட பஞ்சாயத்து இப்புடி எதாவது சொல்ல வறீங்களா? ஓ அந்த வரலாறுலாம் உங்குளுக்குத் தெரியாதா ஆமா நீங்க வேற பழைய பஞ்சாபம். கேக்கறவந்தான் ஒரு சராசரி இந்தியனா? நல்லாருக்குது கூத்து. 

வேடிக்கை பாத்தவன் பேசக்கூடாது. தப்பு நடக்கும்போது தட்டிக்கேக்கறவன்தான் சராசரி இந்தியன்.

தட்டிக்கேக்கறவன்தான்  சரியான இந்தியன்னு சொல்ல வந்தீங்களா மேடம்?

சராசரி இந்தியன் ஒருத்தனா ரெண்டு பேரா? 130 கோடில அவன்தான் மெஜாரிட்டி. சராசரி இந்தியன் தட்டி கிட்டி கேக்க ஆரம்பிச்சான்னா நம்ப டப்பா டான்ஸ் ஆடிறும்.

கீழ இருப்பதைப் படித்துப் பாருங்கள். இந்தியாவுக்கு தமிழ்நாடு எடுத்த ஹிந்தி கிளாஸ்.