Friday, December 28, 2012

செஞ்சு பெத்தாய்ங்களா இல்லே ஆடர் குடுத்து செஞ்சாய்ங்களா?

The Code of Criminal Procedure, 1973 (CrPc) http://www.vakilno1.com/bareacts/CrPc/s207.htm

207. Supply to the accused of copy of police report and other documents.

In any case where the proceeding has been instituted on a police report, the Magistrate shall without delay furnish to the accused, free of cost, a copy of each of the following.

(i) The police report;

(ii) The first information report recorded under section 154

(iii) The statements recorded under sub-section (3) of section 161 of all persons whom the prosecution proposes to examine as its witnesses, excluding there from any part in regard to which a request for such exclusion has been made by the police officer under sub- section (6) of section 173.

(iv) The confessions and statements, if any, recorded under section 164;

(v) Any other document or relevant extract thereof forwarded to the Magistrate with the police report under sub-section (5) of section 173.

Provided that the Magistrate may, after perusing any such part of a statement as is referred to in clause (iii) and considering the reasons given by the police officer for the request, direct that a copy of that part of the statement or of such portion thereof as the Magistrate thinks proper, shall be furnished to the accused:

Provided further that if the Magistrate is satisfied that any document referred to in Clause (v) is Voluminous, he shall, instead of furnishing the accused with a copy thereof', direct that he will only be allowed to inspect it either personally or through pleader in court.

குற்றம்சாட்டப்பட்டவருக்கு வழங்கப்பட்ட சின்மயி புகாரின் நகல் கீழே பிரசுரிக்கப்படுகிறது. இரு தரப்பாரின் தனி நபர் ரகசியங்கள் உரிய மரியாதையுடன் காக்கப்படவேண்டியவை என்பதால் முகவரிகளை நீக்கியுள்ளேன்.

சின்மயி சைபர் கிரைம் அலுவலகத்தில் 18.10.2012 அன்று கொடுத்த புகாரின் நகல்.
சட்டரீதியாக இப்படிக் கொடுக்கப்பட்ட புகார், முதற்கட்ட விசாரணையில், கூறப்படும் குற்றம் நடந்திருப்பதாக காவல் துறை நினைக்கிற பட்சத்தில், முதல் தகவல் அறிக்கையாக பதியப்படுகிறது. அப்படிப் பதியப்பட்டதன் நகல் கீழே கொடுக்கப்படுகிறது. இதிலும் முகவரிகளை நீக்குவது தார்மீகக் க்டமை.
புகாரிலும் முதல் தகவல் அறிக்கையிலும் கண்களைச் சுருக்கி உற்று நோக்காமலே தெரியவருவது என்ன? நீக்கப்பட்டு இருப்பவை மூன்று முகவரிகள் மட்டுமே. அவற்றில் ஒன்று சின்மயியுடையது. அது போக,  இரண்டு முகவரிகள் மட்டுமே சின்மயியால் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஒன்று ராஜனுடையது மற்றது ஷரண்கேவுடையது. இவர்கள் இருவரில் தற்காலிகக் குறி ஷரண்கே. வன்மம் தோய்ந்த அம்புக்குத் தெரிவது ராஜன் மட்டுமே 

வாதங்கள் அனைத்தையும் முந்தைய கட்டுரைகளில் பல முறை வைத்தாயிற்று என்பதால் அதைத் தவிர்த்து பத்திரிகைகள் இதை எப்படிக் கையாண்டன என்பதைப் பார்ப்போம். 

குற்றம் பதிவு செய்யப்பட்டபின் பத்திரிகைகளுக்குக் காவல் துறை செய்தி கொடுப்பது நடைமுறை. அதில் அவர்கள் குறிப்பிட்டு இருப்பது. 

“விசாரனையில் மேற்படி ஆபாச மற்றும் மிரட்டல் வாசகங்களில் சிலவற்றை *** என்ற புனைப்பெயரில் *** (முகவரி/வேலை பார்க்கும்/முகவரியில் வசிக்கும்) என்பவர் பதிந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது”

இவ்வளவுதான் பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் காவல் துறையால்  22.10.2012ல் அதிகாரபூர்வமாய் அனுப்பப்பட்ட தகவல். 

சின்மயி 18.10.2012ல் கமிஷணர் அலுவலக வளாகத்திலிருந்து பத்திரிகையாளர் மற்றும் ஊடகங்களிடம் பேசி, நாம் பார்த்ததும் கேட்டதும் இவையேதான்.

ஆனால் தேசிய தொலைக்காட்சியான ஆங்கில NDTV Reported by J Sam Daniel Stalin, Edited by Abhinav Bhatt | Updated: October 23, 2012 20:23 IST அன்று Another person arrested for posting vulgar tweets about singer Chinmayi என்கிற தலைப்பில் என்ன எழுதுகிறது? Ms Sripada alleged that since January last year, "a few individuals have threatened to kill, rape and assault me on Twitter". 

இதே வார்த்தைகள் FIRல் இருப்பதை கவனியுங்கள். ஆனால் இவை கமிஷ்னர் அலுவலக வளாகத்தில் சின்மயியால் சொல்லப்படவில்லை என்பதையும் கூடவே நினைவு கொள்ளுங்கள். கூடவே சஞ்சய் பிண்டோ சின்மயியின் வழக்கறிஞர் என்பதையும் அவர் சில மாதங்கள் முன்பாக NDTVயில் வேலை பார்த்தார் என்பதையும் நினைவுகூர்ந்தால் வக்கீலாக அவர் என்ன வேலை பார்த்திருக்கிறார் என்பது தெரியவரும். 

வீடியோ எடுத்து ஒளிபரப்பத் தெரிந்த ஊடகத்துக்கு, உங்கள் தரப்பு என்ன என்று கேட்க ஏன் வாய் இல்லாது போயிற்று?

மெய் உலகில் ரேப் செய்தவர்களின் முகத்தை மூடி காட்டுவார்கள், ரேப் செய்வேன் என்று சொன்னதாக பொய்யாய் புகார் கொடுக்கப்பட்டவர்களின் முகத்தை முழுமையாய் ஒளிபரப்புவார்கள். ராஜனோ ஷரண்கேவோ ரேப் செய்வேன் என்று மிரட்டினார்கள் என்பதற்கான ஆதாரம் என்ன? மூவாயிரம் ஸ்கிரீன்ஷாட் வைத்திருப்போரிடம் இது மட்டும் எப்படி இல்லாமற் போகும்?

சின்மயி பாடகி மட்டுமல்ல சிறந்த நடிகையும் கூட. FRIDAY, OCTOBER 26, 2012

There is also a compilation of the tweets on one blog. Carefully edited, tweets posted out of context as replies and this was the same conversation that contained "You need to be raped.." . I m not surprised that this particular tweet along with others were Rajan repeated "naan madha/jaadhi veriyan" throughout the 140 characters are also missing. 

இது உண்மையிலேயே இருந்திருந்தால் இவர்களா ஸ்கிரீன்ஷாட் எடுக்காமல் விட்டிருப்பார்கள். ஆனால் புகார் கொடுத்தபின் நான்கு நாட்கள் கழித்து, இவர்களது வன்மத்துக்கு எதிரான வெம்மை வெளித்தெரிய வரவும் இப்படியான நாடகத்தை அறங்கேற்றுகிறார். இதற்கு முன் இதை எங்காவது இவர் பதிவு செய்திருக்கிறாரா?

ஷரண்கே தேடிப்பிடித்த வக்கீல் சுந்தர் ராஜன் சின்மயியே தேவலாம் என்கிற அளவுக்கு இவர்களுக்கு ஒண்ணாம் நம்பர் எதிரி. அவர் 66A பற்றி கூட்டங்களில் பேசும் அளவுக்கு போலீசிலோ கோர்ட்டிலோ அதை எதிர்கொள்ளத் தெரியாத வாய்க்கீல்.  

நல்ல வழக்கறிஞர் என்பவர், தன் கட்சிக்காரரின் தரப்பைக் கேட்டபின், அதன் தீவிரத்தை கணித்து, அதற்கேற்ப அறிவுரைப்பவர். ஆனால் பூவுலகின் நண்பரான சுந்தர் ராஜனோ, கட்சிக்காரருக்கு விரோதி. 4ஆம் தேதியிலிருந்தே சின்மயியின் வார்த்தையில் தொனித்த வன்மத்தையும் ராஜனைக் கவிழ்க்க திறக்கப்பட்டிருந்த பொறியைப் பற்றியும் நண்பர்கள் சுட்டிக்காட்டியபின், வெளியில் சவடாலாய் பேசிக்கொண்டு இருந்தாலும் ’எதற்கும் ஏண்டிசிபேட்டரி பெய்ல் எடுத்துவிடு’ என்று சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறது அவரது உள்ளுணர்வு. எனவே பலமுறை ஷரண்கே கேட்டும் ’அதெல்லாம் ஒண்ணும் அவசியமில்லை’ என்று தட்டிக் கழித்துக்கொண்டே இருந்தார், ஒரு AB இதில் அவசியமா இல்லையா என்பதைக் கூட கணிக்க முடியாத பூலோக ரம்பம்.

சரி மாஜிஸ்திரேட்டின் முன் ஷரண்கேவை அழைத்துப்போய் நிற்க வைக்கையில் வக்கீல் என்பவர், முதன்முறையாக எக்மூர் கோர்ட் எப்படி இருக்கும் என்று வேடிக்கை பார்க்க வந்தவரைப்போல, அங்கு நடப்பதை வாய்பிளந்தா பார்த்துக்கொண்டு நிற்பார்? குறைந்த பட்சம், குற்றம்சாட்டப்பட்டவர் அரசுப் பணியில் இருப்பவர், அடுத்து விடுமுறை வருகிறது, 48 மணிநேரத்துக்கு மேல் ரிமண்டில் இருக்க நேர்ந்தால் அவருக்குப் பணி நீக்க பாதிப்பு ஏற்படும், அவருக்கு குழந்தை இருக்கிறது. வீட்டில் யாரோ படுத்த படுக்கையாக இருக்கிறார்கள். இல்லையில்லை யாருக்கோ எதோ ஆகிவிட்டது. இழுக்கப் பறிக்க இருக்கிறார்கள் இவர் இல்லை என்றால் அவர் உயிர் போய்விடும் என்று எதாவது பொய் சொல்லியேனும் பெயில் கேட்டு மன்றாடி இருக்கவேண்டாமா? பெயிலுக்கான ஹியரிங் இன்னும் நான்குநாள் கழித்து 26ஆம் தேதி என்பதை மாஜிஸ்திரேட் அறிவிக்கையில், வேறு எதோ வழக்குக்குச் சொல்கிறார் என்பது போல கேட்டுக்கொண்டிருக்க வக்கீல் எதற்கு? 

எல்லோரையும் நான் வேண்டிக் கேட்டுக் கொள்வது இதுதான். அருகிலிருக்கும் காவல் நிலையத்துக்கு சும்மாவாகிலும் எதாவது நொள்ளை காரணத்தை வைத்துக்கொண்டேனும் போய் பேசிவிட்டு வாருங்கள். அவர்கள் சகஜமாக, அட நீங்க வேற எங்க பொழப்பே நாய் பொழப்பு என்று உங்களிடம் வாஞ்சையோடு மனம்விட்டுப் பேசுவதைக் கேட்டால் உண்மையிலேயே அவர்களுக்கு இருக்கும் அழுத்தத்தை ஒப்பிட்டால் நீங்கள் சொர்க்கபுரியில் வாழ்கிறீர்கள் என்பது தெரியவரும். விவிஐபிக்கள் வருகையின் போது கால்கடுக்க மணிக்கணக்கில் நிற்கும் போலீஸ்காரரிடம் என்றேனும் நின்று ஓரிரு சொற்களேனும் பேசி இருப்போமா? நாளையே சந்திக்க நேரும்  போக்குவரத்து காவலரிடம் கூட சும்மா இரண்டு வார்த்தை பேசிப்பாருங்களேன் நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரியவரும்.  போலீஸ்  பற்றிய கற்பனை பயம் குறையும். அதற்காக மாதக் கடைசி தினத்தைத் தேர்ந்தெடுத்துப் பேசப்போய் என்னிடம் வந்து இழப்பீடு கேட்டு நிற்காதீர்கள்.  

தலைக்கு மேல் ஆபத்து வருகையில் முதன்முறையாக நீங்கள் காவல் நிலையத்துக்குள் நுழைய நேர்ந்தால் கையும் ஓடாது காலும் ஓடாது. பாவம் அப்படித்தான் ஷரண்கேவின் வக்கீல் சார் எக்மூர் கோர்ட்டுக்குப் போக நேர்ந்தது போலும்.

சரி அதுதான் போய்த்தொலைந்தது என்றால், ஊடகங்கள் முன் நிறுத்தப் போகிறார்கள் என்று தெரிய வந்ததும் என் தரப்பை அவர்கள் முன் கூறட்டுமா என்றார் ஷர்ண்கே. அப்போதும் வக்கீலாய் வந்து வாய்த்த  விதூஷகர், அதெல்லாம் ஒன்றும் பேசாதீர்கள் என்கிறார். குறைந்த பட்சம் ஓரிரு வார்த்தை சொல்லப்போய் காவல்துறையால் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தால் , அரசியல்வாதிகள் போலீஸ் வண்டியில் ஏற முரண்டு பிடிக்கையில் தள்ளுமுள்ளு நடந்து, வண்டியில் ஏறியபின்னும் அவர்கள் கோஷமிடுவதைப் பார்க்கிறோமே அப்படி ஏதேனும் நடந்திருந்தால்கூட மனசாட்சியுள்ள ஒன்றிரண்டு பத்திரிகையாளர்களேனும் இதில் வேறு ஏதோ இருக்கிறது. வித்தியாசமான செய்தியைக் கொடுத்து பேர் வாங்கலாமே என்கிற சுய நலத்திலாவது என்ன ஏது என்று விசாரித்திருக்க வாய்ப்புண்டு. கொலைக் குற்றவாளியைப்போல தொலைக்காட்சியில் காட்டப்பட்டது எதோ படு பயங்கரமான குற்றத்தை சின்மயிக்கு எதிராய் செய்துவிட்டது போன்ற தோற்றத்தை அல்லவா கொடுத்து விட்டது. அதன் ஒட்டுமொத்த பாவத்திற்கும் முழு காப்புரிமை வக்கீல் சுந்தர்ராஜன் அவர்களையே சாரும்.

வழக்கின் ஜெயிப்பு தோற்பு என்பது இலக்கியம் போலத்தான். எடுத்துக்கொண்ட கருவிலேயே 50% பலம் இருக்கிறது. 25% எழுத்தாளனின் திறமை இன்னொரு 25% வாசகனிடம் இருக்கிறது என்பது போல, கூடக் குறைய விகிதாச்சாரங்கள் மாறினாலும் வழக்கு என்பது, வக்கீல், நீதிபதி என பலரைச் சார்ந்தது. ஆனால் எந்த வக்கீலும் வழக்கை எடுத்துக்கொண்டு விட்டால் சரியோ தப்போ ஜெயிப்போ தோற்போ முட்டி மோதி முயலாமல் விட மாட்டார்கள். உங்களுக்கு எதிராக சின்மயி மட்டுமல்ல விதியே சதிசெய்தால்தான் இது போன்ற பூவுலக நண்பர் உங்களுக்கு வக்கீலாய் வந்து வாய்ப்பார்.

வக்கீல்தான் அப்படி என்றால் NDTVயும் அப்படித்தான். ஆள் தெரிந்திருந்தால் போதும் மறு பக்கத்தை விசாரிக்காமலே புலிகளைக் காப்பாற்றி எலிகளைக் கொன்றுவிடுவார் ப்ர்னோ ராய். தமிழ் பத்திரிகைகள் பற்றி என்ன சொல்ல இருக்கிறது. அவர்கள் கவர் பண்ணிய லட்சணம் வேறு எப்படி இருக்கும். 

நக்கீரன் காமராஜ் போட்ட வழக்கில் சஞ்சய் பிண்டோ தரப்பு, வைத்த வாதங்களை, ஆங்கிலத்தில் இருக்கின்றன என்பதால் பலர் அசிரத்தையாய் தாண்டிப் போயிருந்தால் இழப்பு எனக்கில்லை. அதில் இருக்கிறது இங்கு நடந்துள்ளதன் சூட்சுமம். 

அதில் ஒரு இடத்தில் அபிபுல்லா பாட்ஷா கூறுவார். 

8............. The learned counsel for the accused has also drawn the attention of this court to the particulars furnished in the typed set of papers in volume-II, to show that the websites of other newspapers within and outside India carried the same news item, on the same day and on the next day and no action is till date initiated against those newspapers for similar act and the complaint is filed only against the editors and correspondent of NDTV channel and the same is with malafide and malicious intention with ulterior motive with vengeance due to personnel grudge and the same amounts to abuse of process of law.

ராஜன் ஷரண்கே, வழக்கை வென்றாலும் எதோ ஒரு பத்திரிகை மட்டுமே செய்தி வெளியிட்டால் புத்திசாலி வக்கீல் சின்மயிக்கும் அந்த பத்திரிகைக்கும் எதாவது காரணம் காட்டி கோர்த்து அவதூறு வழக்கு போட்டுவிடுவார். இதற்காகவே, அன்றும் மறு நாளும் எல்லா பத்திரிகைகளிலும் இது செய்தியாக வர வேண்டும் என்று கொல்லைப்புறக் காரியங்கள் புகார் கொடுத்த 18.10.2012 முதலாகவே தீவிரமாய் நடந்தேறத் தொடங்கின.

அக்டோபர் 18,2012 தினமலர் : தாய் உள்ளிட்டோருக்கு மிரட்டலும் வந்துள்ளது. மேலும், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக போராட, பொதுக்கூட்டம் நடத்த, போஸ்டர் ஒட்ட பணம் கேட்டு மிரட்டுகின்றனர்

இது சின்மயி சொல்லாமல் கற்பனை செய்வது கூட பத்திரிகைளுக்கு எப்படி சாத்தியம்?

சின்மயி பணம் திரட்டினார்கள் என்று சொன்னது, ஈழத்துக்காகவா மீனவர்களுக்காகவா? எதுவாய் இருந்தால் என்ன இரண்டும் கடலில் இருப்பவைதானே!  அது என்னா ஆச்சு என்று அக்கவுண்டண்ட் ஜெனரல் போல அல்லவா கேட்டார்? http://www.twitlonger.com/show/jnansa கரண்டையே சேரிக்காரன் திருடிவிட்டான் என்றவர். கடலையே மீனவர்களுக்காக ராஜன் களவடிவிட்டான் என்று சொல்லாதது ஒன்றுதான் குறை. இவ்வளவு பேசும் சின்மயி, தன்னை யாரும் பணம் கேட்டு மிரட்டியதாக மேற்குறிப்பிட்ட ட்விட்லாங்கரில் கூட வரவில்லையே. ஆனால் பத்திரிகையில் மட்டும் எப்படி வருகிறது?
இதே ட்விட்லாங்கரில்  மாலைமலர் சொல்வது போல ஆபாசப் படங்களை வலையேற்றினார்கள என்று தாம் கூறவில்லை, மறுப்பும் தெரிவித்தோம் என்று 20.10.2012 அன்று சின்மயி சொல்கிறார்.
”நடந்தது என்ன” என்று இந்த ட்விட்லாங்கருக்கு கட்டியம் கூறும் மாயவரத்தான் போலவே நாமும் கேட்டாக வேண்டும். சின்மயி மறுப்பு தெரிவித்தது உண்மையானால், நடந்தது என்ன? 22.10.2012 அன்று சின்மயியின் புளூ எலிஃபெண்டுலேந்து கவர் வாங்கினேன் என்று குறியீடாக படம் போட்டு சொல்கிறதோ மாலைமலர்.
மறுத்த பின்பும் இப்படி என் மானத்தையும் சேர்த்து வாங்குகிறது மாலை மலர் என்று கமிஷணர் ஆபீசில் புகார் செய்யவில்லையா சின்மயி? அதுவும் செய்தோம் ஆனால் எக்மூரில் ஆக்‌ஷன் எடுக்கவில்லை என்று சாமர்த்தியமாய் உங்கள் அம்மாவை @kalyanasc க்கு ட்விட்லாங்கர் போடச் சொல்லுங்கள்.
அடடே இதிலும் ஆபாச மார்ஃபிங் சொல்லப்படுகிறதே. NO OTHER NEWSPAPER has said anything about morphed pictures. ஓ இது டிவியா? போதாக்குறைக்கு சல்மாவின் டார்ச்சர் வேறு உபரியாய்.

பேச்சுப்போட்டிக்கு அப்போதுதான் தலைப்பு கொடுத்து பள்ளிச் சிறுமியைப்  பேசச்சொன்னது போல பொத்தாம் பொதுவாக மூச்சுவிடாமல் திவச மந்திரமாய் சொல்லி முடிக்கிறார் சல்மா. ராஜ் டிவியில் இருந்த எடிட்டிங் கலைஞர் கைவண்னத்தால் அது வெட்டி வெட்டி பல இடங்களில் காட்டப்பட்டதால் ரொம்ப யோசித்து பேசுவது போன்ற பிரமையைக் கொடுக்கிறது.

2012-10-29 தினமலர்: செக்ஸ் தொல்லைகள் மற்றும் ஆபாசப்படங்கள். மாலை மலர் மட்டும் அல்ல தினமலரும் அதையேதான் சொல்கிறது. இத்துனை பத்திரிகைகள் கூறியபின் இல்லாமல் இருக்குமா என்று ஊரே அந்தப் படங்களைத்தான் தேடிக்கொண்டு இருக்கிறதாக விடலைகளிடமிருந்து தகவல். NO OTHER NEWSPAPER has said anything about morphed pictures. இது தினமலருக்குப் பொருந்தாதா?

அக்டோபர் 27,2012 தினமலர்:
இனிப்பு கிராண்ட் ஸ்வீட்டா ஸ்ரீகிருஷ்ணாவா? இது பற்றிய படமோ அல்லது அந்த மாணவிகளிடம் பேட்டியோ எடுத்து வெளியிட்டு இருக்கலாமே. 22 அக்டோபர்ல கைது செய்யப்பட்டதாக தொலைக்காட்சிகளிலேயே செய்தி வந்தாயிற்று. 27ஆம் தேதிதான் மாணவிகளுக்கு செய்தி தெரிகிறதாமோ? தினமலர் தினமலம் என்று தமிழர்களால் சுட்டப்படுவதில் என்ன தவறு இருக்க முடியும்?
ஏதாவது பேசினா, இணையத்தில் இருக்கும் ராஜன் (லீக்ஸ்) லிப்ஸ் ’உன் குடும்பத்தைப் பத்தி அசிங்க அசிங்கமா இண்ட்டர்நெட்ல போடுவேன்’னு மிரட்டுகிறார்.

உங்கள் புகாரிலும் FIRஇலும் இதைப்பற்றிய மூச்சே காணோமே ஏன்? ராஜன் அப்படிக்கூறினார் என்று நிரூபிக்க உங்களிடம் ஆதாரபூர்வமாக எதுவுமே இல்லை. ஏனென்றால் ராஜன் அப்படி உங்கள் குடும்பத்தை மிரட்டவே இல்லை என்பதுதானே உணமை. ஜூவி சார்பாக உங்களிடம் பேசியவர் தாமாகவே கற்பனை செய்து  எழுதிவிட்டார் என்கிறீர்களா?

மீனவா மானவா கோனவா தேனவா என்று ஒரு ட்விட்டைக் கொடுத்து மீனவர்களை எனக்கு எதிராய் திருப்புகிறார் என்று கமிஷ்னர் அலுவலகத்துக்குள் புகார் கொடுத்துவிட்டு வெளியில் வந்து இப்படி மனமறிந்து பொய் சொல்கிறீர்களே சின்மயி! நீங்கள் சோறுதானே சாப்பிடுகிறீர்கள்? உங்கள் வீட்டு தளிகையில் உப்பு போடுவது உண்டுதானே?

”அவரிடம் பேசினோம்” என்றுதானே எம்.குணா என்பவர் பெயரில் வெளியாகியுள்ள செய்தி கூறுகிறது. குறைந்தபட்சம் இதற்கு மறுப்பாவது தெரிவித்தீர்களா? ஆனால் ட்விட்டரில் கிடுக்கிப்பிடி போட்டு கேள்வி கேட்கையில் என்னமாய் விளம்புகிறீர்கள். தினமலருக்கு எழுதிய கடிதத்தைப் பிரசுரித்து இருக்கலாமே. குறைந்தது தினமலருக்கு உங்கள் அலைபேசியிலிருந்து இன்ன நேரத்துக்குப் பேசினீர்கள் என்பதற்கு ருசுவாக ஸ்கிரீன்ஷாட்டாவது எடுத்துப் போட்டிருக்கலாமே. நமக்கு எப்போதும் அடுத்தவனுடைய ஸ்கிரீன்ஷாட்டை எடுத்துதானே பழக்கம் இல்லையா சின்மயி?
அடுத்த வாரம் சின்மயியின் தாயார் பத்மாசினி தயாரிப்பில் ரெடியான தளிகை
அடடே இவ்வளவு ஸ்ட்ராங்கான கேவலமான ட்விட்டுகள் கைவசம்  இருக்கையில் ஏன் தாயே இதை கண்ணிலேயே காட்ட மாட்டேன் என்கிறீர்கள்? கமிஷணர் சாரிடம்தான் இதைக் காட்டவில்லை. வழக்கு கோர்ட்டுக்கு வருவதற்குள்ளாவது எடுபிடிகளை வைத்து இந்த ட்விட்டை திவச தளிகையாய் சீக்கிரம் தயாரியுங்கள்.யூ ஆல்ஸோ ஈட் ரைஸ் னா? வித் ஆர் வித்தவுட் ஸால்ட்?

எவ்ளோ பொய் சொன்னாலும் எவ்ளோ சூது பண்ணினாலும் என் தேவி இருக்கா காப்பாத்த என்கிற தெகிரியம் இல்லையா பத்மாசினி! நீங்கள் கும்பிடும் சூனியக்காரி எந்த ஊர் கோவிலில் குடியிருக்கிறாள்? அல்லது கண்ணாடி தரிசனத்தில் மட்டுமே உங்கள் முன் பிரத்யட்சம் ஆகிறாளா?

இப்போது சொல்லுங்கள் இந்த அண்டப்புளுகு மாமி, லால்குடி ஜெயராமனின் டேப்புகளை வைத்துக் கொண்டே காணாமல் போனதாய் பொய் சொல்லக்கூடியவர்தானா இல்லையா?

நிஜத்தில் நடக்காத ஒன்றான ஆபாசப் படங்களை வலையேற்றியதாய் பொய் சொல்லி ராஜனைப் பழி தீர்த்துக்கொள்ள வேண்டும். அந்த அபாசப்படங்கள் எப்படி இருக்கும் என்று மனத்தால் எவனெவனோ ஆபாசமாய் வக்கிரமாய் கற்பனை செய்துகொண்டாலும் பரவாயில்லை.

மகன் செத்தாலும் பரவாயில்லை மருமக தாலி அறுந்தா சரி.

அடுத்து பக்கவாத்திய கோஷ்டிகளைப் பார்ப்போம்.

மாயவரத்தான்.
இணையத்தின் பிராமணகுல க்ஷத்திரியர்
கோவை மாயூரம் தாய்லாந்து என்று பறந்துகொண்டிருக்கும் தொழிலதிபர்.
23,000/- இல் இங்கிருந்தபடியே சகலகலா ஏற்பாடுகளையும் பட்டாயாவில் செய்து கொடுக்கும் திறமைசாலி. ஐந்தடி மனிதர். அதில் பாதிக்கும் அதிகமான நீளத்தில் வாய். இது அதீதமில்லை என்பது இவரது twitter ID @mayavarathaan ஐப் பார்த்தாலே தெரியும்.

பிராமணப் பெண் என்பதால், சின்மயியின் சார்பாகக் கொதித்தெழுந்தார்.

பட்டாயாவின் இயற்கையை ஷாட் எடுக்க உதவும் தொழில் ரீதியான முன் அனுபவம், எவனெவன் எங்கெங்கே குசு விட்டான் என்பது முதற்கொண்டு, இணையத்தில் ஸ்கிரீன்ஷாட் எடுக்க உதவிற்று. நான் சிங்களவனைக் கெட்ட வார்த்தையில் திட்டியது உடபட அனைத்தையும் தனது ட்விட்டரில் போட்டுக்கொண்டு பிலிம் காட்டினார். இந்த கட்டுரைகள் அவரது நிஜாரை உருவத் தலைப்பட்டதும், என் சம்பந்தமான அத்துனை படங்களும் மாயமாகிவிட்டன. ஆனால் பாவம் அவற்றை பத்மாசினி அம்மா அவர்கள் ரீட்விட் செய்தது மட்டும் என்னிடம் அப்படியே சாட்சியங்களாய் இருக்கின்றன.

பத்மாசினிக்குத் தெரியாத ஆங்கிலமில்லை. ஆங்கிலப் பழமொழிகளும் இல்லை. உன் நண்பனைக் காட்டு நீ யார் எனச் சொல்கிறேன் என்பதை மட்டும் நினைவில் இருத்துங்கள் எப்போதும் என்று மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

பிரச்சனை தொடங்கியதாக சின்மயி கூறிய 04 ஜனவரி 2011ல் மாயவரத்தான் எங்கே இருந்தார்? இதே ட்விட்டரில்தான்.  கண்டித்து ஒரு வார்த்தை. ம்ஹூம். தாமுண்டு தம் பட்டாயா பிசினஸுண்டு கிளையண்ட்டுண்டு கஸ்டமர்களின் திருப்தியுண்டு என்று இருந்தார்.

அடுத்த இருபது தினங்களில் 24ல் மீனவர் பிரச்சனைக்காக #TNFisherman போட்டு எல்லோரும் ட்விட்டியபோது, சின்மயி சேரமாட்டேன் என்று மறுத்த அதே தருணத்தில் இவர் என்ன செய்துகொண்டு இருந்தார்? RSS BJP TAMBRAS ஆதரவாள பிராமண சிங்கமான இது #TNFisherman #TAGகை முகமூடியாய் வைத்துக்கொண்டு மெயின் பிஸினசான ஆத்தும சரீர சுகமளிக்கும் பட்டாயா போக, சைடு பிஸினஸாய் கருணாநிதி, சோனியா காந்தி போன்ற தலைவர்களை சாதுர்யமாகத் தாக்கி பிராமண இந்துத்துவம் காக்க ட்விட் போட்டுக் கொண்டு இருந்தார்.

சரி. மீனவர் பிரச்சனையில் சின்மயி தாக்குதலுக்கு உள்ளான ஜனவரி 2011ன் போதும் 2012 மார்ச்சில் #அசிங்கப்பட்டாள் சின்மயி #சின்னாத்தா டேகுகள் போட்டு சின்மயி தாக்குதலுக்கு ஆளானபோதும் மாயூர அக்கிரகாரத்து மாமா  மாயவரத்தான் எங்கே இருந்தார்? அதை கண்டித்தாரா? எதிர்த்து எழுதினாரா? பொதுவாக ராஜன் வால்பையன் போன்றோர் இணையத்தில் நாத்திகம் பேசுகிறோம் என்பதன் பேரால் அனைத்துமத ஆத்திகத்தையும் வசை பாடும் போது மாயவரத்தான் இந்துமதத்துக்காவும் பிராமணர்களுக்காகவும் பேசியிருக்கலாமே தவிர சின்மயிக்கு எதிராக நடந்தவற்றைக் கண்டித்தாரா?

04 அக்டோபர் 2012லிருந்து சின்மயி கோவிலின் சீனியர் துவார பாலகர் இவர்தான்.

ஓடாத ஜீப்பை எல்லோருமாக சேர்ந்து தள்ளுவார்கள். அந்த கும்பலில் சில கறுப்பு ஆடுகள் தாமும் தள்ளுவதைப் போல பாவ்லா செய்துகொண்டிருக்கும். ஆனால் வண்டி ஓடத்தொடங்கியதும் முதலில் ஏறி குதிப்பவை அவைதான்.

ஜெயமோகனின் தண்டத்தைத் தூக்கிப்பிடித்துக் கொண்டு  பராக் பராக் என கூவியபடி முன்னால் ஓடும் தடகள வீரர்.
பேருக்கு ஒரு பிளாகு வைத்துக்கொண்டு அவ்வப்போது சர்வம் ஜெயமோகனம் மீதிநேரம் டபுள் மீனிங் ஜொள்ளு பேரழகன் என்பதால் பெண்கள் தொந்தரவு செய்வதான பில்டப்பு மொக்கைகள் தவிர இவருக்கென்று தனி முகம் என்ன? ஆனால் சின்மயி விவகாரம் பற்றி இதுவும் ஒரு ஆள் என்று எழுதுகிற தோரணையைப் பாருங்கள்.

இந்து பத்திரிகையில் எழுதும் P. Sainath என்கிற Palagummi Sainath அவர்களே தம்மை எளிமையாக an Indian journalist. He calls himself a 'rural reporter' or simply a 'reporter', and photojournalist focusing on social problems, rural affairs, poverty and the aftermaths of globalization in India. என்று குறிப்பிட்டுக் கொள்கிறார். இந்த வாண்டு எழுதிக்கொள்ளும் பந்தாவைப் பாருங்கள். இதுதான் இணையத்தின் பெரும்பான்மை. சைக்கிள் கேப்பில் சொந்தமாகக் கட்டவுட் வைத்துக் கொண்டு தானும் ஒரு ஆள் என்று காட்டிக்கொள்ளும் அநாமதேயர்களுக்குப் பஞ்சமேயில்லை.

//இந்த விவகாரத்தை ஆரம்பத்தில் இருந்தே கவனித்து வருபவன் என்கிற முறையில்//

The Observer

//இணையத்தில் சின்மயி எவ்வளவு தூரம் ஒடுக்கப்பட்டார் என்பதை அறிவேன்//

அரிஞ்சி அப்சர்வ் பண்ணிகிட்டே இவ்வளவு காலமும் ஊறிகிட்டு இருந்தீகளோ? என்ற பேச்சுடே இது?

//அந்தந்தத் தருணங்களில் இந்த சல்லித்தனத்தைக் கண்டித்தும் வந்திருக்கிறேன்.//

சின்மயி FIRல் சொல்வது என்ன? ராஜன் முதலானோர் என்னை ரேப் பண்ணி மர்டர் பண்ணி அசால்ட் பண்ணுவதாய் மிரட்டினர்.

ஆனால் இந்தப் பிரச்சனையை ஆரம்பத்திலிருந்தே, கவனித்து வருபவரான செல்வேந்திரன் சொல்கிறார் சல்லித்தனம் என்று.

நட்ட நடு செண்ட்டரில் இருக்கும் செல்வேதிரனே, ராஜன்  செய்ததை சல்லித்தனம் என்கிறார் எனவே சின்மயி FIRல், படிக்காதவன் விவேக் வசனம் போல ரேப் பண்ணி மர்டர் பண்ணி அசால்ட் பண்ணுவதாய் மிரட்டியதாகக் கூறியவை பொய் என்பது செல்வேந்திரனின் வாக்குமூலத்தால் நிரூபணமாகிறது என்பதை கனம் கோர்ட்டார் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அந்தந்தத் தருணங்களில் இவர் கண்டித்த ட்விட்டுகளை வெளியிடலாமே? இது பற்றி 04 அக்டோபர் 2012க்கு முன் பிளாகில் ஏதும் எழுதி உள்ளாரா?

தடுக்கி விழுந்தது போல தோன்றியதும் விழுந்தவர் பெண் போல தோன்றியதும் எங்கெங்கிருந்தோ மனிதாபிமான ஹீரோக்கள் தோன்றுவதில்லையா அது போலத்தான் இவர். இந்த சின்மயி கோவிலின் ஜூனியர் துவார பாலகர்.

பத்மாசினியின் பாஷையில் சொன்னால் இந்த செல்வேந்திரன் ஒரு ஷுண்டக்காய். இதன் குருநாதர் வெண்டக்காய் ஜெயமோகன் இந்தப் பிரச்சனையை எப்படி எதிர்கொண்டார் என்று பார்க்கலாம்.

04 அக்டோபர் 2012ல் ஷரண்கே கடலை போடத்தான் என்று சொல்லி எப்படி அதற்கு சின்மயி சுனாமியாய் எழுந்தார் என்பதெல்லாம் பதினெட்டாம் தேதி NDTV பார்த்துதான் எனக்கு எப்படித் தெரியுமோ அது போலவேதான் ஜெயமோகனுக்கும் தெரியும். 22ஆம் தேதி கைது நடக்கையிலும் 23ஆம் தேதியும் ’அவர்லி’ புல்லட்டினாக பதிவு போடும் ஜெயமோகன் தளத்தில் பேச்சு மூச்சே இல்லை. 18ஆம் தேதியிலிருந்து சின்மயி விவகாரம் பற்றிப் பேசுவதுவரை ஜெயமோகன் எழுதியவற்றின் பட்டியல் இது.

என்பிலதனை வெயில்காயும் இலக்கியம், October 18, 2012
மிகையாகப் போற்றப்படுகிறாரா இளையராஜா? October 18, 2012
அன்னிய முதலீடு -எதிர்வினைக October 19, 2012
சக்கரவர்த்தி உலா October 19, 2012
அன்னிய முதலீடு- கடிதங்கள் October 20, 2012
தமிழ்த்திரையும் இசையும் October 20, 2012
இயற்கை வேளாண்மை – நிதி உதவி October 20, 2012
முரளியின் மகன் ஆளுமை October 21, 2012
வெண்மைப்புரட்சி எங்கே? October 21, 2012
எழுத்தின் வழிகள்-கடிதம் October 22, 2012
கூடங்குளம் இடிந்தகரைக்குச் சென்றோம் October 22, 2012
சரகர் October 23, 2012
ஏடுதொடங்கல் October 23, 2012
காந்தியின் பலிபீடம் October 23, 2012
ஈரோட்டில் பேசுகிறேன் October 24, 2012
எனது கல்லூரி October 24, 201
காசி October 25, 2012
அணையாவிளக்கு October 25, 2012

இவ்வளவு எழுதிக்கொண்டு இருப்பதினூடாக சின்மயி விவகாரத்தை விரிவாக உற்று நோக்கிக் கொண்டு இருக்கிறார் போலும் என்கிற அனுமான பலனை அவருக்குக் கொடுப்போம்.

அட நீங்க வேற, அந்தாளை 24ஆம்தேதி விஜதசுமியன்னிக்கி திருபூர்ல பேசக் கூப்புட்டு இருக்காய்ங்க, அங்க பொங்கிபொங்கி பேசி பொங்க வெக்க மேட்டர் வேணாவா அதான் அந்த முகூர்த்தத்துக்காக வெயிட்டிங்..

அங்கு பேசிய பேச்சிலாவது பிரச்சனையின் பரிமாணங்கள் வெளிப்பட்டனவா? இணையத்தைப் பற்றியோ ட்விட்டரைப் பற்றியோ ஒரு மண்ணும் தெரியாமல் பத்திரிகையில் வந்த செய்தி மற்றும் தான் நம்புபவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தப்பும் தவறுமாய் உளற ஏன் இத்துனை நாட்கள்?

நானும் தலைப்பாடாய் அடித்துக் கொள்கிறேன் இந்தாளுக்கு தன்னைத் தவிர தான் பெரிய ஆள் என்கிற பிம்பத்தைக் கட்டி நிறுத்திக் கொள்வதைத் தவிர  எதைப் பற்றியும் எந்த அக்கறையும் கிடையாது என்று. இவரை உற்று நோக்குங்கள் இது ஒரு வெற்றுக்குடம் என்பது தெரியவரும்.

அன்றைய பேச்சுக்கு மேட்டர் வேண்டும் அதற்காக 18ஆம் தேதியிலிருந்து அடை காத்தாயிற்று அவ்வளவுதான் இந்த எழுத்தாளரின் சமூக அக்கறை.

அங்கு அவர் பேசியதைப் பார்ப்போம். http://www.jeyamohan.in/?p=31402 இனி எனக்குபதிலாய் நகைச்சுவை நடிகர் செந்தில் அவர்கள் இந்த ஜெயமோகனை சமாளிப்பார்.

//சமீபத்தில் பிரபலமான பாடகி ஒருவர் இணையதளத்தில் பொதுத்தொடர்புக்கு வந்தபோது//

அணே அந்தம்மா இணையத்துல பொதுத்தொடர்புக்கு வந்தது எப்போனு அவங்களே சொல்றாங்க பாருங்கனே

SATURDAY, MAY 07, 2005 http://www.chinmayisripada.com/2005/05/my-first-blog.html
My First Blog
Well, I finally enter the world of blogging. The blog section on my website has been under permanent construction for a long time, hence here.

அட ஆமா! இது BSNLல வாங்கின சம்பளத்துக்கு ஒழுங்கா வேலை பாக்காம ஓசி போன் பேசிகிட்டு ஆபீஸ் நேரத்துல கதை கட்டுரைனு எழுதி இலக்கிய  பஜனை பண்ணிகிட்டு இருந்த காலம்ல. இதை எப்படி வெளிய சொல்றது. அதான் புரோமசனே வேணாம்ண்ட்டு சினி சான்ஸ் கெடைக்கிற வரிக்கும் அடிமட்ட குமாஸ்தாவா இருந்தோம்னு ஒரு ஷோ காட்டிகிட்டு இருக்கோம்ல அது போதும்.

//இணையத்தின் இந்த முரட்டுமூடர்கள் அந்தப்பெண்ணை வசைபாடி, அவதூறுசெய்து, மிரட்டி சிறுமைசெய்தனர்.//

அணே புகாரினுக்காக அழுத அண்ணே! தனிமனிதன் மீது அதிகாரம் செலுத்தும் அழுத்தம்னுலாம் 700 பக்கத்துக்கு ஒப்பாரி வெக்கிறீங்களே ஜனநயகத்துல தனி மனிதன் மேல எப்புடி அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்படுதுன்னு தெரிஞ்சிக்கணும்னா, இந்த ஆறு பேர் மேல அந்தம்மா குடுத்துருக்குற புகாரையும் FIRஐயும் இப்பியாச்சும் படிச்சிப் பாருங்கணே

//ஆபாசப்படங்கள் வெளியிடுவதாக மிரட்டினர்.//

அது தினமலத்து வாந்தின்னு சின்மயியே 21ஆம் தேதியே மறுத்துடுச்சிணே.. அவங்களே மறுத்தாலும் நீங்க ஏன் 24ஆம் தேதியும் அதையே நக்கிகிட்டு இருகீங்கனு எங்க சீனியர் மாமல்லன் ஏறி அடிக்கப்போறாரு பாத்துணே. செல்வேந்திரன் அணே சின்ன அம்மிணி நாயோனுக்குக் குடுத்த ட்விட்டர் நாப்கினைக் அண்ணங்கிட்டக் குடுக்காம குரு நாதரை இப்புடி உளறவெச்சி வெளக்குமாத்தாலா நாயடி பேயடி வாங்க உடறீங்களேணே இது உங்குளுக்கே நாயமா படுதாணே?

//அவரது தாயை ஆபாசமாக வசைபாடினர்.//

ஆமாணே அதைத் தப்புன்னு சொன்னவரே மன்னிப்பு கேட்டுட்டார்னே. ஆனா அவங்கதான் கேசை வாபஸ் வாங்க முடியாதுனு தார் மனமா நிக்கிறாங்கணே. இன்றைய காந்தியணே நேற்றைய காந்தியணேலேந்து மன்னிக்கறது பத்தி ரெண்டு மேட்டரை அவுத்து உடுங்கணே ஒலகத்துல த்ரித்திரம் புடிச்ச அறம் தழைச்சுட்டுப் போவட்டும்.

//பொறுமை மிஞ்சிய ஓர் எல்லையில் காவல்துறைக்குச் சென்று அந்தப்பெண் புகார் கொடுக்க நேர்ந்தது.//

அவங்க மகேஷ்மூர்த்திகிட்ட ராஜனுக்குக் குடுத்த டார்ச்சரையும் கொஞ்சம் கன்சிடர் பண்ணிப் பாருங்கணே

//ஆறுபெயர்களையும் சின்மயி குறிப்பிட்டிருக்கிறார். அவர்களை காவலர் கைதுசெய்திருக்கின்றனர்.//

ரெண்டு பேருக்கு மேல ரெண்டரை  மாசமாகியும் யாருமே கைது செய்யப்படலைங்கணே. மொதல்ல கைதானவர் பத்து நாளைக்கு மேல உள்ள இருந்துட்டு வெளிய வந்தப் பெறவுதான் கடலையைக் கண்ணுல காட்டின A2வே பெயில் வாங்கினாருணே. அதுவரைக்கும் யாருமே அவர் கையைக் கைக்குட்டையாலக்கூட கட்ட நெனைக்கலைணே.பெயிலுக்கு ஏண்டா வேஸ்டா துட்டு செலவழிச்சோம்னு நொந்து போயிருக்காருணே நம்ம பேர்கொண்ட செந்திலு. விஷ்ணுபுரம் அறக்கட்டளைலேந்து எதுனா இழப்பீடு குடுப்பீங்களானு என்னையக் கேட்டுகிட்டு இருக்காருணே. நான் கண்டிஷனாய்ட்டு சொல்லிட்டேன். 60 வயசு ஆயிட்டு வா விருதா எதுனா குடுக்க முடியுதானு அண்ணங்கிட்ட கேட்டுப் பாக்கறேன்னு. பாக்கறதுக்குத் இப்பியே தான் அறுவது வயசாட்டம்தான் இருக்கேன்னு செந்திலு அடம் புடிச்சார் போபோனு வெரட்டிட்டேணே.

அணே 60 வயசு ஆயிட்ட கோஷ்டில சின்மயி அம்மா பத்மாசினி கூட பிகராவராங்கணே.அவிங்க கூட மிஜீசியன் மீஜிகாலஜிஸ்ட்டு சீனியர் பெலோ ஆப் கல்ச்சர்னு ட்விட்ட்டர் புரொபைல்ல சொல்லிக்கிறாங்கணே. இந்த சீனியர் பெலோ சிப்பு ஆப்பு கல்ச்சரு வாங்கினவனுங்க கோடி பேருக்கு கொஞ்சம் கம்மியா இருப்பாங்கணே. அதை உட்டுட்டுப் பாத்தா அவிங்க ஊட்டைத் தவிர எங்கியும் கச்சேரி பண்ணதா தெரியிலீங்கணே. மீஜிகாலஜிஸ்ட்டுனு சொல்லிக்க 2001ல தினமணி கதிர்ல வாய்ஸ்கல்ச்சர் பத்தி ஒரு செல்ஃப் புரமோசன் ஆர்ட்டிக்கிள் எளுதி இருக்காங்கணே அதை தவிர இது வரிக்கும் புக்கு எதுவும் எளுதினாப்புல தெரியலணே. அவங்களுக்கு விஷ்ணுபுரம் இசை விருது குடுக்கணும்னு நீங்க நெனச்சிங்கனா அவங்க பேர்ல நீங்களே ஒரு புக்கெளுதித்தான் குடுக்கணும்னே நெறைய உட்டாலகடி ட்விட்லாங்கர் எளுதி இருக்காங்கணே. எங்க சீனியர் மாமல்லன் மூஞ்சில கரிய பூசுறதுக்காகவே அந்த ட்விட்லாங்கரை எல்லாம் நீங்களே ஒடுக்கு தட்டி ஒரு புக்கா போட்டா விஷ்ணுபுரம் தேவதாசி கட்டுரை விருது குடுத்துறலாம்ணே.

இடையில் ஜெயமோகனிடம் இருப்பதாக அவரது குழுமத்தாரால் நம்பப்படும் அறம் டாலடித்ததில் செந்திலின் கண்கூச அவர் குரல் மாறி அந்நியனாய் பேசத்தொடங்கிவிடுகிறார்.

புகாரின் என்கிற தனிமனிதனுக்காக ஒப்பாரி வெச்ச உங்களுக்கு, இந்த ஆறு பேரும் ஆறு பேர் சேர்ந்த கும்பலா தெரியறாங்க இல்லியாணே. ராஜனுக்கும் ஷரண்கேவுக்குமே எந்த சம்மந்தமும் இல்லைணே.

ட்விட்டர்ல இருக்கற எல்லாரும் ஒரே கும்பல் இல்லீங்கணே.

அணே உங்கள மாதிரி முக்காலமும் அரிஞ்ச முனிவர் இருக்கற அதே இணையத்துல தானே முட்டாக்கூ மாமல்லனும் கேக்கூனு சொல்லிக்கிற சாருவும் ஜோக்கு சொல்லிட்டு சர்வாங்கமும் குலுங்க தானே சிரிக்கிற எஸ்ராவும் உம்முனு சீரியஸா புக்குபுக்கா அடுக்கி புக்காலையே அடிக்கிற அறிஞ்சர் எம்டிஎம்மும் இருக்காரு எல்லாத்தையும் ஒண்ணாகட்டி எழுத்தாள கும்பல்னு சொன்னா ஏத்துபீங்களாணே

//இணையத்தில் மலினத்தைக் கொட்டும் பலநூறுபேரில் சிலர் இந்த ஆறுபேரும்.//

மலினத்தைக் கொட்றவய்ங்கனு சொல்ற அளவுக்குக்கூட நாங்க ஒர்த்தானவய்ங்க இல்லேனு அவிங்க சொல்றாய்ங்கணே. சும்மா ஜல்லியடிச்சி கமெண்ட் அடிச்சி மொக்கை போடறதெல்லாம் மலினம்னா உங்க சிசியர் செல்வேந்திரன் என்னா ட்விட்டர்ல மக்காச் சோளமா பயிரிட்டுகிட்டு இருக்காருனு கேக்கறாங்கணே.

உண்மையில படு மட்டமா பேசினவன்லாம் இந்த ஆறு பேருக்கு வெளிய இருக்கான்னு உங்குளுக்கு தெரியுமாணே?

//இதுவரை இணையம் அளித்த சுதந்திரத்தில் இவர்கள் இப்படி கீழ்மையில் திளைத்தார்கள்.//

இனிமே செல்வேந்திரன் மொக்கை போட மாட்டாருனு கேரண்டி குடுக்க்றீங்களாணே

//ஒரு சாலையிலோ வணிகவளாகத்திலோ இந்த அற்பர்கள் கௌரவமான வேடத்தில்தான் உலவ முடியும். இணையத்தில் அந்த பாவனையே தேவையில்லை. ஆம், இன்றும் இதுதான் நம் இணையச்சூழல். உங்கள் வீட்டுப்பெண்ணின் படம் குமுதத்தில் வரலாம். ஆனால் இணையத்தில் வரமுடியாது. உங்கள் வீட்டுப்பெண் ஒரு பேருந்துநிலையத்தில் நள்ளிரவில் நின்றிருக்க முடியும், இணையத்தில் முடியாது.//

அண்ணே எங்கியோ இருக்கற ஈழத்தமிழரான இந்தப் புள்ள சொல்றதையும் கொஞ்சம் கேளுங்கணே. பொம்பளைக்கு ஆம்பளைங்க இல்லே சின்னப்பொண்ணுகிட்ட 62 வயசு பத்மாசினி ஆயாவே கூட இப்படி அற்பத்தனமா நடந்துக்க முடியும்ணே
Dear Chinmayi mom,

All along, i respected you for your age and stayed away from writing to you but i am sick of hearing about you asking things about me or taking about me. So here are something i have to tell you. First of all, you have stated publically that i was romancing with Rajan on twitter TL when u were standing in marina beach in support of Eezha tamizhar. U say i dont care for my people, really? do you know me that well to make that statement. You dont even get the concept of people joking on twitter, and your passing judgement that i was romancing with a married man? Here i thought u are mother so you wouldn’t talk negative of any other girl. When it comes to your own daughter, lets filter out “bad” people and defend girl but when its some other girl, lets make judgements about her?!?
Secondly, you have called someone in Toronto and ask about me. what is this, character assessment? like seriously? How would you feel if someone is doing that about your daughter. May be thats good publicity for you, but for me, no ma'am, thats an embarrassment. You have stated to those who you were inquiring that i was writing tamizh blogs and its all full of negativity of your daughter. First of all, i dont have a blog and i dont have that much time in my hand to plot against your daughter.or consider that as an important task in my life. i have better things to do. I respect your daughter as a musician and supported her many times in future, you and her have thanked me personally. And then your daughter say something, and i disagreed to her opinion, and i became her hater?!? You need to learn to take criticism properly. People who criticize are NOT your haters, they can also be well wishers!
Recently, it came to me that, i am plotting with a certain tamizh singer and i am spreading hate messages regarding your daughter. No singer asked me do that and i am sure they dont have that much free time to sit at home and plot about another person. I am sure noone will be THAT free to do all this to your hurt your daughter. I have always respected you for your age but lately, i have nothing else to say it to u beside that think about others before you go ahead and make your self-righteous statements.
I blocked you and your daughter LONG time ago, and dont even care or give attn but u guys keep on pulling me in all your problem. Quit creating drama or torturing other people. I have better things in life to focus. Please do not use my name in any of your drama anymore. I don’t want to hear my name involved. I don’t hate you or your daughter. I have compassion towards every human being, and i want to focus on positive things. Twitter is just a social network, not MY life where i plot to bring down people.
AND one more thing, you don’t even know me, so YOU HAVE NO RIGHTS TO JUDGE ME WHAT SO EVER!

http://tl.gd/jn2rsp

அதே மாதிரி, வெட்டிப்புள்ளன்னு தன்னைச் சொல்லிகிற ஆனா ரொம்ப  வெவரமான பொம்பளை இருக்காங்கணே
ட்விட்டர்லையும் பிளாக்குலையும் இருக்கற இந்த டாக்டரம்மா சொல்றதையும் கொஞ்சம் கேளுங்கணே
          Let me introduce myself first... I am a Doctor working in UK currently, mother of a 10 year old boy, daughter of a widowed mom and belong to scheduled caste. Life has never been fair but I am handling it the best I can, in raising my kid. I have been a fan of your talents for ages. I think I followed you since you participated in the talent show in Sun TV. I have the utmost respect for you and your mom & I have enjoyed all your songs, your performances, your blog, articles about you as an young entrepreneur, and of course the infamous twitter....
         I am one among the many, who came to twitter to meet people with like mind & sharp tongue & to hear the thought that reverberates from civilians with great creative minds belonging to different walks of life. I was thrilled and got sucked into it. It opened up multiple windows into people’s world. I have met great people, not so great people in this journey and I have made really good friends. We do have our difference of opinions but Twitter felt like college. You fight, you make up, you are pulled down, you laugh, you are surprised and you are ragged so on and so forth.
         In the past one year, your conversations have stirred so much of conflict, which rather reflects your basic understanding of life and your opinion about the political problems that we face. End of the day, everyone is entitled to make and have their own opinions. As far as one’s opinion and expression is not vindictive and abrasive, one can get away with everything...
        And now your name is all over the media for the past couple of weeks which has plastered & portrayed that Chinmayi is a poor victim of sexual harassment from these social sites and she is been showered with verbal abuse, derogatory comments and that your life has been endangered. For people who are not acquainted to the social media like twitter and face book, they would be just flabbergasted with these news. Since there are a few who have followed all the conversations that has flown back and forth between you and the rest of the others, you cannot really stand up and say that you are just a victim here!!! So, Please sell your story elsewhere!!!
            Are you really just a victim??? Where have your tweets disappeared? All the way through, you have said inappropriate retorts against the fisherman, people belonging to my caste but you have weaselled out big style and just deleted your tweets!!! But girl, if you are so filled with righteousness, why this conniving scheme??? You have retorted for every single tweet that came your way!! I was kinda proud of you, as you at least had the guts to stand up to what you thought was right!! But I don’t know why you had to go and delete every single one of your tweets that caused such angst and belligerence amongst people. Is it because people would get the real true picture of what actually happened, if you had had left your tweets??
            Being a woman, we are under constant scrutiny all through our life. And being in a massive field like movie industry, which is constantly under public surveillance, does put people like you under constant pressure. I totally get that and I appreciate your effort. I know that you are not answerable to me, but to a society which you are feeding false information to. NOT everything you have told them is true now, is it??
            I have known the twitter handles you have quoted to the police for the past 3 years now. Neither me nor the other so many woman who are on twitter, have had any trouble with the guys you have quoted. There have been plenty of arguments, which are meant arise when there is difference of opinions. But nothing crass, nothing boorish from anyone of these men. And top of that, you probably have the most people in the ignore list in twitter anyways and probably more ignored compared to your followers.
          I have personally known @rajanleaks for the past 2 years and he is a really sharp witted humble person, a responsible adult, a loving husband & very devoted father of baby girl, who has risen to this position through sheer hard work and no family to support him. He has fought all through his life and all he had to share to this world was his quirky sense of humour. I can vouch for him and so can many other friends (which include woman, FYI)!!! I have similar stance on all the twitter handles like @senthlchn @vivaji and many others you have shared as well. All these people are simple civilians!!!
          The only reason your paths collided was your insensitive tweets regarding Tamilnadu fishermen who were killed right left and central for no fault of theirs and similar such retorts about other issues related to caste etc. Probably your tweet meant that way, because you didn’t quite understand the gravity of the situation. I don’t blame you, because this is beyond you and not every civilian is been informed about this injustice. For some reason, our so called sincere ingenuous media have never really brought forward these sensitive issues to eyes of our society and they just make sure that all their heads are filled with junk news and incorrigible soaps.
             Now, You and everyone in twitter know that this conflict happened a year ago. You have a better social stance and financial stature than all these people put together. If this issue has really put you through so much of misery, Why act now?? Why didn’t you bring this forward when it was all fresh and hot? What is the ulterior motive behind this?? You have used angry, hostile remarks against all these people; there has been threatening phone calls from your side to these people. Yet you are the victim here.... It doesn’t tally at all. You said something and they said something and you said something back and it went on and ended by itself... Why stir the commotion now???
            I am not trying to take sides here. You were made fun of, I agree. They created a tag to rag you. But girl, these are the very same people, who sang #oppari for one other. They are the first to make fun of one other. That is the whole nature & essence of the twitter. If you think that you were beyond this, you just ignore them as you already did and get on with your life. But suddenly posing you as the sole sufferer after over a year and putting all these people’s very livelihood in jeopardy, sounds very vindictive and cheap, below the belt act for anyone.
            So let’s rewind!!! You have had stress from such remarks by these guys, so you decided to wipe out their reputations and jobs and social stance... Your stress = their lives. Don’t you think you have blown it out of proportion? Oh is it because, you can!!! Is that why? You have the back up to support you and whatever you say become the truth. SO this makes me think that this whole complaint has been well planned and presented to take these men down.
            If it is really about seeking justice, if that is the case, what about all the insensitive crude remarks you have made about these issues and the people who rambled to you because they cared about the very same. So this just brings us back to the era, where you can say whatever you want and get away with it but just want to keep the other side repressed. How is this justice, in any standard???
         If I were in your position, I would have tried better to understand in depth, what I am giving my comments and opinions about before making my point. Better yet, not comment about things that are out of one’s depth, prior to stirring events like this. I hope you have the soul satisfaction of destroying few people who dared to ask you back about the right questions. Remember, Their slangs and the way they formulated the questions & remarks would have been offish for your standard, but the questions were truthful. Hope you can look back into what you said and reflect upon yourself. Oh wait a minute!!! You cannot reflect upon what you have said coz you haven’t left your so called tweets on there!!! You clever girl!!!
          Anyhow, Hope you can sleep finally now that you have brought justice to the world because all the crude buggers are beyond the bars, lost their jobs, reputations and their families will ever suffer for their bread & butter and not to mention been tainted forever for a silly thing like standing up to what they really believed in something true and respectful. You can go ahead with your perfect life and your double standards... Wishing you all the very best!!!

எத்தனை பெண்கள் ராஜனைத் தொடர்ந்தாங்க இப்பியும் தொடர்றாங்கன்னு உங்குளுக்குத் தெரியுமாணே?

கரெக்டுணே, நமக்கு எதுக்குணே இந்த மாதிரி வெத்து விஷயமெல்லாம். அப்படியே நாம தப்பா பொங்கிட்டாலும் என்ன ஆயிறப்போவுது? ஜெயிலுக்குப் போனவன் பெயில்ல வரப்போறான். இன்னிக்கி இல்லேனா இன்னொருநாள் வரப்போறான்.

முகமில்லாதவய்ங்க மொக்கைங்க, யூஸ் பண்ணிக்கோ கடலைப் போடத்தான்னு ஜோக்கடிச்சதுக்கு பத்துநாள் ஜெயிலு.

ஆன்மீகத்துல முக்குளிச்சி நித்ய சைதண்ய யதியோட துணிய சதா கசக்கிகிட்டு, இன்றைய காந்தியா வாழற நீங்க, துப்பாக்கியால சுட்டதால எம்.ஜி.ஆருக்குக் குரல்ல உண்டான குறையைக் கிண்டலடிச்சி எழுதினா ஆபாசம் இல்லே அது பகடி இலக்கியம். அதை விகடன்ல எடுத்து போட்டு, ஊரெல்லாம் கண்டணம் தெரிவிச்சா, மீனவ சமுதாயத்தை எனக்கு எதிரா ராஜன் திருப்பினான்னு சின்மயி நடிச்சா மாதிரி, குய்யோ முறையோன்னு கருத்து சுதந்திரம் போச்சு என் மயிருக்கு ஆபத்துன்னு ஆகாத்தியம் பண்ணி நடிப்பீங்க. அதுக்கு நாலு கேனை எழுத்தாளனுங்க கையெழுத்து வேற போடுவானுங்க. நல்ல இலக்கியம்டா உங்க நடிப்பு. ராஜனும் ஷரண்கேவும் பண்ணினது உங்க ஆபாசத்தை ஒப்பிட்டா உப்பு பெருமா ஓய்!

லைட்டா சரிஞ்சி நிக்கிற அபிலாஷை அந்த காலத்துல அவங்க அம்மா உங்கூட்டுக்குத் தூக்கிகிட்டு வந்தாங்க அவுரை நீங்கதான் நடக்கவே வெச்ச மகான்னு புழுவைவிட கேவலமா நீங்க புளுகினதை விட ஆபாசமும் அற்பத்தனமும் வேற உண்டா?

விமர்சனம் பண்றேன் பேர்வழின்னு கவிதைல கால் எப்புடி இருக்குதுனு பெரிய கண்டுபிடிப்பு நிகழ்த்தினீங்களே. கலந்துக்கற ஒவ்வொரு விழாலையும் அவுரு என்ன வேட்டியா கட்டி மறைச்சிக்கறாரு. மாடியா இருந்தாலும் பரவாயில்லேனு தனியா தவழ்ந்து ஏறுறதுலே எந்த ஊனமும் இல்லே.

மிஸ்டர் உங்க மனசுல இருக்கற ஊனம் என்னன்னா ஊனத்தைப் பாத்து விலாவாரியா விவரிச்சி ரசிச்சி எழுதி கடைசியா அதுல விஞ்ஞான அறிவற்ற நாட்டுப்புறத்தார்களுக்குக் கூட சாத்தியமே இல்லைனு நல்லா தெரிஞ்ச ஊனமும் ஊனமும் புணர்ந்தா ஊனம் பெறக்கும்னு கிளைமாக்ஸை வெக்கிறியே அதுதான்யா கலை ஊனம்.

இதைப்போயி, இலக்கியம்னா என்னன்னே தெரியாத கேடுகெட்டப்பய ஆஹா இலக்கியம்னு சொன்னா ஆமாமா இலக்கியம்னு கொண்டாடிக்கிறியே அதுதான்யா ரசனை ஊனம்.

இப்புடி ஒரு மூளை மழுங்கின கூட்டத்தை குழுமத்துல கூட்டிவெச்சி கும்மியடிக்கிறியே அதுதான்யா சுயமரியாதை ஊனம்.

இப்பிடினுலாம் எங்க சீனியர் கவுன்சில் திட்டறாப்புல உங்க மன ஊனத்தைத் தொறந்து காட்டிட்டிங்களே அணே.

அட விடுய்யா நமக்குலாம் சூடு சொரணை மானம் மரியாதை எல்லாம் இருக்கறதா மத்தவிங்க நெனச்சிகிட்டு இருந்தா அதுக்கு நாமளா பொறுப்புங்கறீங்களாணே.

கரெக்டுணே. எவனோ ஜெயிலுக்குப் போனா நமக்கு என்னாணே. புகாரின் போனா புக்காச்சி,பொறம்போக்குப் பசங்க ஜெயிலுக்குப் போனா விஜயதசமிக்கு ஒரு பேச்சாச்சு அவ்ளதான். மணிக்கணக்கா பேசினது ஒரு கட்டுரையாக்கூட தேறலையேணே

அப்பிடினு கேக்க எவன் இருக்கான்? எதுவுமே நடக்காத மாதிரி எப்பியும் போல, நாம் இருக்கிறோம் நம்முடன் நம் அறம் இருக்கிறது அப்புறம் நமக்கு வேறென்ன வேண்டும் சைதண்யானு, பாரதியாட்டம் நெஞ்ச நிமித்தி நீங்க கண்டினியூ பண்ணுங்கணே.

அணே ஒரு நிமிசம்ணே. என்னணே உங்க அறத்துல துரு புடிச்சிருக்கு?

ஐயையே இது அறம் இல்லணே இத்துப்போன அரம்.