Monday, December 10, 2012

தொழுதகை யுள்ளும் படையொடுங்கும்


"ஒட்டு மொத்த தமிழர்களுக்கு எதிரானவள், ஒரு குறிப்பிட்ட சாதித் திமிர், மீனவர்கள் குறித்து தரக்குறைவாகப் பேசினேன் என்று பலரும் தங்களுக்குத் தோன்றிய வகையில் மனம் போன போக்கில் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார்கள்."

பாய்ண்ட நம்பர் 2 ”ஒரு குறிப்பிட்ட சாதித் திமிர்” 
ஆதாரத்துடனான பதில்: நாம் பிராமணர் என்கிற திமிர்

பாய்ண்ட் நம்பர் 3: "மீனவர்கள் குறித்து தரக்குறைவாகப் பேசினேன்"

ராஜன் பேசினதை நான் பேசினதா சொல்லிட்டானுதானே சொல்ல வறே! சரி அதையும் என்னன்னு பாக்கலாம்.

தும்மினாக்கூட டபுள் மீனிங் வராமாதிரிதான் பாக்யராஜ் தும்மறார்.

எஸ்.ராஜம் டாக்குமெண்டரி வெளியீட்டு விழால, கிரேஸி மோகன், பேஷரச்சே, இவர் ராஜம் இல்லை ரேர் ஜெம் அப்பிடின்னு சொன்னதைக் கேட்டு நேக்கு மின்னேடி செவப்பு சேர்ல செவப்பு டீஷர்ட்டோட  ஒக்காந்துண்டு இருந்த அகண்டாகாரப் புள்ளையாண்டான் புல்லரிச்சுப் போய்ட்டான். உச்சு கொண்டிண்டே ஐபேடை எடுத்து, Rajam - Rare jem னு சேங்காலிபுரம் தீட்சதர் சொன்ன அபூர்வ ஸ்லோகம் மாதிரி எழுதிண்டன். 

இதையே டி.ராஜேந்தர் சொல்லி இருந்தா இவனே ஹிஹிஹி கரடின்னு சொல்லியிருக்க மாட்டானோ? எல்லாம் நம்பளவான்னா நாப்பதெட்டு மூலிகை வாசனை மணக்கும். பெறத்தியான் சொன்னா பீ நாத்தம் அடிக்கும். எவ்ளோ சென்ஸிடிவ் மூக்கு நம்பளோடது!

விளையாட்டா ஆரம்பிச்சுதான் எவனும் விற்பண்ணன் ஆகறான். அதே சமயம் அதுவே அடிக்ட்டாவும் ஆயிடறது. நக்கலாவும் வெகண்டையாவுமே பாக்க மட்டுமே ட்ரெயின் ஆன பிரெய்ன் ராஜனோடது.

நாங்க உயிர்களைத் துன்புறுத்தறவங்க இல்லை வெட்டி சாப்படறவங்க இல்லைனு திருக்குறளாட்டம் கொழந்தை  சொல்லித்து. குதர்க்க மஹாராஜன் குறுக்கேத்தமா உரை எழுதிட்டான்.
இதுக்கு, நீ கம்ளெய்ண்ட்ல, இப்புடி ட்ரான்ஸ்லேட் பண்ணிட்டு,
பாய்ண்ட் நம்பர் 1: ராஜன் சொன்னதை ராஜன் & கோ சொல்லிட்டானு வலையை விரிச்சு ஏழு பேரையும் கும்பலாக்கி, எஃபைஆர்ல என்ன சொல்றே?
Potentially false information that could pit groups against me, thereby endangering my life, has also been put out by trouble makers. 

தொந்திரவு செய்பவர்கள், என் நல்வாழ்வுக்கு ஊறு விளைவிக்கும் விதத்தில் பொய்ச் செய்தியைப் பரப்பி, கும்பல்களை எனக்கு எதிராய்த் தூண்டிவிட்டனர்.

இப்புடி கம்ளெய்ண்ட்ல சிசுபாலனாட்டம் விஷமா கக்கிட்டு சுய விளக்க ட்விட்லாங்கர்ல ”மீனவர்கள் குறித்து தரக்குறைவாகப் பேசினேன் என்று”ன்னு எவ்ளோ சாத்வீகமா ஒன்னுமே தெரியாத சிசுவாட்டம் எழுதறே, 

இதுவே ராஜன் கத்தியத் தூக்கிண்டு, கொலை செஞ்சிடுவேன்னு உன்னை நேர்ல வந்து மெரட்டினான்னு சொல்லு, நானே குண்டுகட்டா அவனைத் தூக்கிண்டு போய் கமிஷ்னர் ஆபீஸ்ல போட்டுட்றேன். 

இந்த ட்விட்டுல ராஜன் சொல்றது பொய்யிங்கறது உன் வாதம். சரி ஒரு பேச்சுக்கு இதைப் பொய்யின்னே வெச்சுப்போம். இது என்ன தினத்தந்திலையா வந்துடுத்து? அவன் எழுதினது இண்டர்நெட்டுக்குள்ள மட்டும்தானே இருந்துண்டு இருக்கறது. அதை எல்லாரும் பாகறாப்பல போஸ்டர் அடிச்சு, மீனவா குப்பம் மினவா குப்பமா ஒட்டினாளா ராஜன் & கோ? 

ராஜன் எழுதினதைப் பாத்து ஒருத்தன் பூஜை பண்ணனும்னா என்னென்ன சாமக்கிரியைகள் வேண்டியிருக்கு? இண்டர்நெட் வேணும். கம்ப்யூட்டர் வேணும் கரண்டு வேணும் எல்லாத்துக்கும் மேல ட்விட்டர்னா என்னன்னு தெரிஞ்சிருக்கணும். ட்விட்டர்ங்கறது என்ன?அது எப்படி வேலை செய்யறாதுங்கற விஷயமெல்லாம் எத்தனை வக்கீல் ஜட்ஜு எழுத்தாளர்களுக்கே தெரியும்கறது சந்தேகம். இவ்ளோவும் இருந்தாதான் அந்த ட்விட்டையே ஒருத்தன் பாக்கப் போறான். அப்படியே அவன் ஐயர் ஐயங்காரா முதலியாரா மீனவனைத்தவிர வேற யாரா இருந்தாலும் அவனுக்கு மீனவனைப் பத்தி என்ன கவலை? அந்த ட்விட்டைப் பாத்துட்டு ஒதட்டோரம் கோணிட்டு ஓடிண்டே இருக்கப்போறான் தன் வாழ்க்கையைப் பிடிக்க.

இந்த ட்விட்டை அயோத்தி குப்பம் டூமிங் குப்பம் ஊரூர் குப்பம்னு மெட்ராஸ்ல இருக்கற மீனவாள்ளாம் அவா அவா ஆத்து கம்பூட்டர் லேப்டாப் ஐபேட் ஐஃபோன்ல எல்லாம் பாத்துட்டு கும்பலா சேந்து உங்காத்துக்கு வந்துட்டாளாம்மா? 

ஒரு வேளை வந்துடுவாளோன்னு நீ பயந்தேன்னாக் கூட அதுல ஒரு நியாயம் இருக்கு. 

குட்டிம்மா ராஜன் அந்த ட்விட்டைப் போட்டது எப்போ? 14 மார்ச்சு 2012. நீ கம்ப்ளெய்ண்ட் குடுத்தது எப்போ 18 அக்டோபர் 2012 ட்விட்டு போட்ட மார்ச்சு மாசம் வராத மீனவாள்ளாம் வேளாங்கன்னி திருவிழாவுக்குப் போறாப்பல உங்காத்துக்கு ஏழு மாசம் கழிச்சு தெரண்டு வந்துட்டாளா? உண்மையைச் சொன்னா மீனவாளைப் பாத்தெல்லாம் நீங்க கவலைப்படலை. அந்த ட்விட்ல #அசிங்கப்பட்டாள் சின்மயின்னு இருந்ததைப் பாத்துதான்  நீயும் உங்கம்மாவும் கடுப்பானேள். இதுதான் நெஜம். வன்மத்தோட உள்ளூர தகிச்சேள்ங்கறதைத் தாண்டி ஒரு ஆபத்தும் உங்களுக்கு நடந்துடலைங்கறாதுதான் உண்மை.

83. கூடாநட்பு

குறள் 828 தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து.

பொருள்
பகைவர் வணங்கித் தொழுத கையினுள்ளும் கொலைக் கருவி மறைந்திருக்கும்; பகைவர் அழுது சொரிந்த கண்ணீரும் அத்தன்மையானதே.  

வள்ளுவன் சொன்னாப்பல பவ்வியமா பதுங்கி எப்படா சமயம் கெடைக்கும், ஆம்புஷ் பண்ணலாம்னு பாத்துண்டே இருந்தேள்.

அக்கடா துக்கடான்னு ஷரண்கே பேசினதுதான் சாக்குன்னு ஏழு மராமரங்களை ஒரே பாணத்துல அம்மாவும் பொண்ணுமா தொளைச்சுட்டேள். இதுல நாலு மரங்கள் கணக்குலையே சேரலை (தார தப்பட்டைக்கு எஃபைஆர் பவிஷு கூட கொடுக்கலை) ஒவ்வொருத்தரா யார்யார் என்னென்ன சங்கதின்னு பாப்போம்

FIRல இருக்கறது A1 ராஜன்லீக்ஸ், A2 செந்தில்chn, A3 தளபதி_8787, A4 ஷரண்கே, A5 லாஸேஞ்சலீஸ்ராம், A6 விவாஜி, A7 தயிர்வடை (தார தப்பட்டை புகழ் விஜயகோபால்சாமி புகாரோட சரி எஃபைஆர்ல பேரே கிடையாது)

இருக்கறதுலையே நம்ப தயிர்வடைதான் சமத்து. கடைய மூடிட்டு நடையக் கட்டிட்டான். சூட்டிகையான பையன் இங்கதான் எங்கையாச்சும் புது ஐடில சுத்திண்ட்ருப்பான். சைபர் கிரைமுக்கு ஆன் டெபுடேஷன் பேசிஸ்ல நானும் போமுடியது ஏன்னா அது ஸ்டேட் கவர்மெண்டு. ம். தயிர்வடை ஜாதகம் யாரண்டையாச்சும் இருதா குடுங்கோ ஸ்டடி பண்ணனும்.

லாஸேஞ்சலீஸ்ராமும் விவாஜியும் அமெரிக்காலேந்து எல்லா மீனவா குப்பங்களுக்கும் உங்காம்  எங்க இருக்கு, எப்பப் போயி, எப்படித் தாக்கணும்னு டைரக்ஷன் குடுத்தாளா? இல்லை, எல்லாரும் ஒரே மாதிரி ஷூத்ராளா இருந்தா, விஷயம் பிராமணா Vs ஷூத்ரானு ஆயிடுத்துனா என்ன பண்றதுன்னு, மாயவரத்தான் செல்வேந்திரனோட அம்மாவும் பொண்ணுமா சேந்து நால்வரணியா மந்திராலோசனை தந்திராலோசனைலாம் நடத்தி, ஒப்புக்கு சப்பாணியா தொட்டுக்க ஊறுகாயா ஐயரோ ஐயங்காரோ அட்லீஸ்ட் ஒரு பிராமணன் பேர் இருந்தே ஆகணும்னு  லாஸேஞ்சலீஸ்ராமை மத்தவாளோட சேத்து கோந்தாட்டம் ஒட்டிட்டேள் இல்லியா? 

பிராமணனாவும் இருக்கணும் அதே சமயம் அவன் உள்ளூர்க்காரனாவும் இருக்கப்பிடாது. போலீஸ் போய் அவாத்துல நிண்ணு ஒரு சுக்கும் இல்லேன்னு சொன்னா கமிஷ்ணரே கடுப்பாயிடுவர். இதை அவாய்ட் பண்ன அந்த பிராமணன் அமெரிக்கவாசியா இருந்தா பெட்டர்னு சதியாலோசனை செயற்குழு முடிவு பண்ணித்தா? ஒவ்வொருத்தருக்கும் ஊசிப்போன பட்டாணிய இவன் போட்டான் அவன் போட்டான்னு ஸ்கிரீன்ஷாட் காட்டினேளே லாஸேஞ்சலீஸ் ராம் போட்ட ட்விட்டை அஃபன்சிவ் ட்விட்டை ஏன் இன்னும் காட்டலை? இப்பதான் தயாராயிண்டு இருக்கா? இல்லை இன்னும் ரெண்டு கொதி வந்தாதான் கீழ எறக்க சரியா இருக்கும்னு ஒன்ற மாசமா அடுப்பை ஸிம்முல வெச்சுருக்கேளா? 

விவாஜியப் பாருங்கோ அது தம் பாட்டுக்கும்  மஞ்சள் பேக்ரவுண்டுல ஹாயா ட்ராக்டர் ஓட்டிண்டு என்னமா மொக்கை போட்டுண்டு இருக்கறது!
ஜட்ஜு சார் இதுதான் 99.99 % இணையம். பைல்ஸ் வர அளவுக்கு புட்டத்த நகத்தாம பாக்கற வேலைக்கு நடூல கொஞ்சம் கொஞ்சம் அசஞ்சு நெளிஞ்சிக்கறதில்லையா அது மாதிரி அப்பப்ப எட்டிப் பாத்துப் போடற இந்த மொக்கை கத்திகளால ஈ எறும்புக்குக் கூட எந்த சேதாரமும் எந்த காலத்துலையும் வந்துடாது. 

வந்தவன் போனவனையெல்லாம் தலையப் பொறாண்டி கமெண்ட் போட்டுண்டு இருக்கும்கள். இப்படில்லாம்கூட ஜீவன்கள் இருக்குன்னே VVIPஸ்குத் தெரியாது. கொடிமரமா ஒசந்து நிக்கிற உண்மையான விவிஐபிக்கு இந்த ஈயும் எறும்பும் நம்பளப்பத்தி என்ன கமெண்ட் பண்றான்னு பாக்கவா நேரமிருக்கு. ராஜான்னும்  ரஹ்மான்னும் மண்டை ஒடைய நெட்டுல அப்பப கோஷ்டிகள் முட்டிக்கும். நெட்டுல இப்படிலாம் நடக்குதுங்கறாதாவது அவாளுக்குத் தெரியுமோ. அட அவாளுக்குத் தெரியணும்னா இவா பண்ணிண்டு இருக்கா? இவாளுக்கு வேணும். பொழுது போகணும் அதால இவா பண்ணிடு இருக்கா அவ்ளதான்.

பொழுதன்னிக்கும் நெட்ல இருந்துண்டு, டெய்லி பிபி பில்ஸாட்டம், அம்மா ரெண்டு ட்விட்லாங்கர், பொண்ணு அம்பது அறுவது ட்விட்டுன்னு போட்டுண்டு, வெட்டி அரட்டை அடிச்சிண்டு, அவன் என்ன பேசறான் இவன் என்ன பேசறான் நம்பளைப் பத்தி யார்யாரெல்லாம் பேசறா யார்யாரெல்லாம் பேஷறதில்லை. இவாளையெல்லாம் பேச வெக்கறது எப்படின்னு யோசிக்கறாதையே யோகமா செஞ்சிண்டு இருக்கற சின்மயிக்கும் அவொ அம்மா பத்மாசினிக்கும் இந்த மொக்கைகளோட சரிக்கு சரியா சீண்டிண்டு இல்லேன்னா கையொடைஞ்சா மாதிரி ஆயிடும். 

இது ஒரு கமெண்ட்டு. இதுக்கு ஒரு புகார். சீ போ நாயேன்னு பிளாக் பண்ணிட்டு போயிண்டு இருப்பியா. 

ஏ.ஆர்.ரஹ்மான்கிட்ட அதிக பாட்டு பாடினேங்கற பெருமைக்கு ஒரு அர்த்தம் இருக்கறாமாதிரி நடந்துக்கப்பாரும்மா. அப்பதான் நீ உண்மையான விஐபி, ஆக முடியும் அப்பறம் உன் இஷ்டம்.

எல்லாருக்கும் தலையெழுத்துன்னு ஒன்னு இருக்கத்தான் செய்யறது சின்மயி. ஆனா அவா அவா தலையெழுத்தை அவா அவாளாவே தீர்மானிச்சிக்க எத்தனை ’பெயரா’ல முடியறது?

ஒன்னார் அழுதகண் ணீரும் அனைத்து.