Monday, December 31, 2012

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்

March 10 2012 saw Mr Mahesh Murthy publish this article

சின்மயி, இவை உங்களது சொற்கள். அப்படியே எடுத்தாள்கிறேன். திரிச்சுட்டார் பிரிச்சுட்டார் என்றெல்லாம் தயவு செய்து சொல்லாதீர்கள்.

After this description about me "Chinmayi who, you’ll ask, and Chinmayi Sripada would be the equally puzzling answer

இதிலென்ன புதிர்? சினி இசைக்கு வந்து 12 வருடங்களாகியும் நீங்கள் இன்னும் சுசீலா ஜானகி சித்ரா அளவுக்குத் தமிழ்நாட்டுக்கேத் தெரியும் என்று ஆகவில்லைதானே. போகவும் நாம் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறோமோ அச்சு அசலாய் அது அப்படியே பத்திரிகையில் வரவேண்டும் என்றால் உங்கள் அம்மா பத்மாசினிதான் அடுத்த கோயங்காவாக இருக்க வேண்டும். 

பிராமணப் பெண் பாடகி என்று சொல்லாவிட்டாலும் பரவாயில்லை, நம்மை கறிக்கடை பாயம்மா என்று சொல்லிவிட்டர்களே என்று புலம்பவைக்கும் நிலையில்தான், தென்னகத்தைப் பொறுத்தவரை வடநாட்டு ஆங்கில பத்திரிகைகள் இருக்கின்றன சின்மயி. மணிரத்தின் தந்தை ஜீவி என்று ஏதோ ஒரு ஆங்கில பத்திரிகையில் அந்த காலத்தில் படித்ததாக நினைவு.

 This babe from south of the Vindhyas is less known for her playback singing and more for her meticulously updated online diary of every single thought she’s ever had", 

பத்திரிகை என்றாலே இப்பிடித்தான் என்னத்தையாவது சொல்லுவார்கள். ஆபாச புகைப்படங்களை வலையேற்றினார்கள் என்று நானும் எங்க அம்மாவும் சொல்லவில்லை என்றீர்கள். ஆனால் நிறைய பத்திரிகைகள் வெளியிட்டன. உண்மையில்லை என்றாலும் அது மட்டும் இனித்தது அல்லவா. ஏனெனில், மக்களிடம் அது உங்களுக்கான பச்சாதாப பப்ளிசிடியைக் கொடுத்தது என்பதால் அல்லவா?

”அம்மா ரெண்டு கண்ணில்லைம்மா, புள்ளகுட்டி இருக்குது தாயே” என்பது போல அப்பா இல்லாத பெண் என்கிற பிம்பத்தையே எல்லா தொலைக்காட்சி பேட்டிகளிலும் திரும்பத்திரும்பக் கூறி அனுதாபம் தேடுவதைப் போல ஆபாச புகைப்படச் செய்தியும் உங்களுக்கு பயன்பட்டது எனவே அமைதி காத்தீர்கள் இல்லையா? 

கண் இல்லாத எல்லோரும் தட்டு தூக்குவதில்லை. மேலும் உங்கள் தந்தைவழிப் பாட்டியைப் போல உங்களுக்கிருந்த கனத்த டபுள் பேஸ் குரலை இரண்டரை வயதிலேயே வாய்ஸ்கல்ச்சர் செய்து அப்போதே உங்களை குயிலாக  தயார் செய்துவிட்டாரே உங்கள் தாயார். (இனி குரல் திறக்கும் கட்டுரை 09.12.2001 தினமணி கதிர் பக்க எண் 44 ) அப்புறம் ஏன், ஏதாவுது பாத்து செய்ங்க ஐய்யா என்கிற தீனக்குரல்? ஒவ்வொரு பாட்டையும் ஒவ்வொரு குரலில் பாடும் திறமை இருந்தும் ஏன் ஒரேகுரலில் இந்த ஒப்பாரி?

he had also made a pretty insulting description about Shreya Ghoshal, which was subsequently removed after she tweeted to him openly too. The comments section will reveal that a lot of her fans were plain irritated with the way she was written about. 

கம்ப்ளெய்ண்ட்டுனு வந்தா உம் பிரச்சனையை பேசும்மா? எதுக்கு ஊராமுட்டானையெல்லாம் ஆட்டையில சேத்துக்குற? அப்ப உன் கேசு என்ன அவ்ளோ வீக்கா? என்று அடையார் ஆலமரத்தடி நாட்டாமை கேட்கிறார் சின்மயி.

Now I tweeted to Mr Mahesh Murthy asking on what basis he wrote that I am less known as a singer and more as a blogger. 

உங்க அப்பாதாத்தா ஸ்ரீபாதா பினாகபாணிதானே சாக்ரடீஸ் இல்லியே?

அவர் பாவம் பெரிய பாடகராக இருந்தாலும், அந்த காலத்துல பாடினவாள்ளாம் படிக்காதவாங்கறதலயும் உங்க அப்பாதாத்தா அந்த காலத்து மருத்துவ டாக்டர் என்பதாலையும் ஆங்கிலத்தில் சங்கீதம் பற்றி எழுதப்போய் அவரை ஆய்வாளராக முத்திரை குத்திவிட்டது சாஸ்திரீய இசையுலகம். ஆனாலும் அதை சிரித்துக்கொண்டே சொல்கிறாரேயன்றி இந்த 100வது வயதிலும் இதற்காக மூக்கு சிந்தவில்லை. அப்பேர்ப்பட்டவரின் மகன் காமேஸ்வர ராவ் அவர்களின் மகள்தானே நீங்கள்? ஓகே யூ கண்ட்டினியூ

Yes I could have mailed him. 

இதின்னாதிது? எதோ கப்பைஸ்கிரீமுக்கு பதிலா கோன் ஐஸ்கிரீம் சாப்ட்ருக்கலாம்கறா மேரி ஜாதாரணமா சொல்ட்டு போய்கினேக்குற ?அப்பிடிகண்டி நீ செஞ்சிருந்தீனா உன்னை யாரு வந்து கொடசல் குடுத்துருக்கப் போறாய்ங்க? டைரக்ட்டருங்க கிட்ட பாட்டு சான்ஸ் கேக்கவோ கமிஷனர் கிட்ட கம்ப்ளெய்ண்ட் குடுக்கவோ இப்பிடித்தான் ட்விட்டு போடுவியா? அதையெல்லாம் காதுங்காதும் வெச்சாப்புலதான் செய்யணும் இல்லியா? திட்டிகூட இண்டியா டுடேல விமர்சனம் எழுது பரவால்லன்னு என்கிட்ட மிஸ்டர் சாரு சொன்னாமேரி, உனக்கு வேண்டிதும் நெகடிவ் பப்ளிசிடி அம்புட்டுதான்.

But I also asked, of all people he had to include rajanleaks in this huge line-up as the sole representative of the Virtual Tamil World? His timeline was filled with profanity about most public personalities and how, in God's name was he more influential than the veteran Tamil poets and writers on Twitter. I stated there was Kavingar Vairamuthu on Twitter and so was his son Madhan Karky, 

இவுங்க ரெண்டு பேர்தான் தமிழ் இலக்கியமா? அவிங்க கவிஞர்களா சினிமா பாடலாசிரியர்களா? வைகரை மேகங்களை எட்த்து பட்ச்சி பாருமா. பல்லெல்லாம் உதுந்து வாய் பொக்கையாயிடும். அதனாலதான் காலேஜ் சீனியர்னாலும் அப்பவே அவரை முரடன் முத்துன்னுதான் அன்பா குறிப்பிடுவோம்.

வளைய நிலா பிழிகிறதே
பழைய பலா சொறிகிறதே
கலாப் போகும் வேகம்
குணாக் காணுமே குஜால் ஆகுமே மானமே

whose tweets were read by at least 10 times more people than Rajan on a daily basis and how did Rajan become a person of huge influence? 

வைரமுத்து என்பவர் தமிழ் சினிமாப் பாட்டுத்துறையில் பெருமான்மை கொண்டாடும் பெரிய ஆளுமை. ஊர் பேர் தெரியாத எனக்கு அவர் ஒரு மண்ணும் இல்லை. இலக்கியம் என்று வந்து என்னைப் பட்டியல் போடச்சொன்னால் அவர் பெயரே இருக்காது. 84ல் போட்ட எனது புத்தகங்களை இலவசமாய் யாராவது கேட்பார்களா என்று காசு செலவழித்து விளம்பரம் கொடுக்க வேண்டிய நிலையில் இருப்பவன் நான். ஆனால் வைரமுத்துவிடமோ அறிவுமதியிடமோ நா. முத்துகுமாரிடமோ தனிப்பேச்சில் கேட்டுப்பார் மாமல்லன் எப்படி? அவன் கதைகள் எப்படி என்று?

Mozart: Forgive me, Majesty. I am a vulgar man! But I assure you, my music is not. - Amadeus (1984)

தரத்தை பிரபலம் தீர்மானிப்பதில்லை.

He definitely said it was a personal opinion. 

அப்பறம் ஏன் சண்டை சச்சரவு? 

The article also expressly states that. 

இன்னும் என்ன கேடு? வாயை ஜிப் போட்டு மூடிகிட்டு இருந்திருக்கலாமே சின்மயி?

And then he finally said "I am not journalist from paid media owned by you (Parthiv) or Chinmayi to do your bidding about @rajanleaks or other issues". Insinuating this "paid media" with regard to me, in my opinion was very wrong, but we left it at that. 

ராஜன் பேர் எப்பிடி வரலாம்னு கேக்கறியே, நான் என்ன உன் கைக்கூலியானு கேட்டாரு. நாக்கைப் புடிங்கிக்கலாம்போல இருந்துது. அதோட விட்டியாம்மா? நான் மட்டும் எப்படி உங்களை இத்தோட விட்டுற முடியும்?

Parthiv was one of the fans of Shreya Ghoshal and I who argued with him asking him to substantiate how he came up with these numbers/data.

இளைய நிலாவை நான்கூடத்தான் இப்பிடி கலாட்டா பண்ணியிருக்கேன். அதுக்காக, கலைஞரைப் பார்த்து, கோலிகுண்டு விளையாடும் பருவத்திலேயே நீ  குறி தவறாதவன், இளைய ராஜாவைப் பார்த்து, நீ சுவாசித்து விட்ட கார்பன் டை ஆக்ஸைடை நான் சுவாசிக்கிறேன் என்கிற லெவலில் பேருரை ஆத்தற ரேஞ்சுல இருக்கற வைரமுத்து, மதன் கார்க்கியைக் காரை எடுக்கச்சொல்லி  நேரா பெஸண்ட் நகர் வந்து, எந்த அடிப்படையில் நீர் என் பாடலைப் பழித்தீர்னு விரலை ஆட்டிகிட்டே என்னை மெரட்டினா நல்லாவா இருக்கும்?

I don't regret this conversation with Mr Murthy though. 

நம்புளுக்கு மானம் ரோசம் சூடு சொரணைலாம் ஏது? நம்பளே தப்பு பண்ணி இருந்தாலும் அடுத்தவன் மேலதான கோவப்படுவோம். அதான அம்மாவூட்டு சீதனம். நீ எதுக்கு கண்ணு வருத்தப்படணும்? இந்த விசயத்தால உனக்கு உண்டான வன்மத்தால ரெண்டு குடும்பமில்லே எழவு வீடாட்டம் இருக்கு. இதே போல தமிழ்நாட்டுல இருக்கற ஒவ்வொரு குடும்பத்துக்கா உலையணைப்பு விழா நடத்தி நீ நல்லா இரு தாயி!

I wanted to ask him why he came with this article the way he did. 

நீ ஏன் ஐங்காராத்துப் பொண்ணா லட்சணமா பின்னி ஜடை போட்டுக்காம, விரிச்சி போட்டுண்டு மனதோடு மனோல வறே? ஒரு ரப்பர் பேண்டாவுது போட்டுண்டு வரமாட்டாளோ? த்ரோபதியாட்டம் பொம்பளை தலைய விரிச்சி போட்டுண்டா குடும்பம் என்னத்துக்கு ஆகும்னு பெருமாள் கோவிலாண்ட ஒரு பாட்டி கேட்டுண்டுருந்தா!

This irritated the people who were already up in arms against me, to no end. 

ஆ. உங்கம்மாவைப் பத்தி தப்பா பேசிட்டாங்கன்னதும் தப்பான அர்த்தத்துலே சொல்லலேன்னு ஷரண்கே சொன்ன பிறகும் கிய்யா முய்யானு  என்னா குதி குதிச்சே? தனக்கு வந்தா மட்டும்தான் தலைவலியா?

Rajanleaks started #AsingapattalChinmayi 

ராஜன் கேட்டதுல என்னம்மா தப்பு?

வெத்துப்பயல் பேரை எப்படிப் போட்டேனு சண்டைக்குப் போறே. அதுவும் அது பத்திரிகைல வெளியான பிறகு, இனி இதை நீக்க முடியாதுன்னு தெரிஞ்ச பிறகு. அசிங்கமா குழாயடிலபோயி சண்டைக்கி நிக்கிறே. மகேஷ்மூர்த்தியும் மத்தவரும் பொறும்மையா பதில் சொல்லிப் பாத்து ஒரு கட்டத்துல, அட போம்மே! உன்னால என்னா பண்ண மிடியுமே பண்ணிக்க பே!னு சொல்லி உன்னைய அசிங்கப் படுத்திட்டாய்ங்க.பொதுவெளில நீயும் அசிங்கப்பட்டுட்டே. அசிங்கப்பட்டதை அசிங்கபட்டாய்னு சொன்னா எந்த சட்டப்படி தப்புன்னு சஞ்சய் பிண்டோகிட்ட கேளும்மா!

where there were some who did go up and ask that he shouldn't tweet "Asignapattal" about a girl. And the standard response to such people would be, "Why is Chinmayi your girlfriend?"(This is just a decent way of saying it). I don't know if women dared speak to him.

கெட்டகெட்டதா பேசினவனை கேட்டவனை எல்லாம் ர்ர்ர்ர்ர்ர்ர்ர்வுண்டப் பண்ணு. க்ருஷ்ஷும் க்ருஷ்ஷோட தாத்தாவும் பாட்டியும் அசிங்கப்பட்டாள் சின்மயினு # போட்டான்ய்ங்களா? அவங்களையும் இல்லே ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்வுண்டப் பண்ணுவேன்னு கூவுது உங்க ஆத்தா?

கீழே இருப்பவை 11மார்ச்சிலிருந்து 14 மார்ச் 2012 வரை சின்மயி, மகேஷ் மூர்த்தி என்கிற பத்திரிகையாளரிடம் மல்லுகட்டி அசிங்கப்பட்ட பல ட்விட்டுகளில் கைவசப்பட்ட சில.

இந்த பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் - பூவில் 
தொட்டிலைக் கட்டிவைத்தேன்
அதில் பட்டுத் துகிலுடன் அன்னச் - சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன்

நான் ஆராரோ என்று தாலாட்ட - இன்னும் 
யாராரோ வந்து பாராட்ட

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே - பின் 
நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்ப்பதிலே

தூக்க மருந்தினை போன்றவை பெற்றவர்
போற்றும் புகழுரைகள் - நோய் 
தீர்க்கும் மருந்தினைப் போன்றவை கற்றவர்
கூறும் அறிவுரைகள்

ஆறு கரையில் அடங்கி நடந்திடில்
காடு வளம் பெறலாம் - தினம் 
நல்ல நெறி கண்டு பிள்ளை வளர்ந்திடில்

நாடும் நலம் பெறலாம்

பாதை தவறிய கால்கள் விரும்பிய
ஊர் சென்று சேர்வதில்லை - நல்ல 
பண்பு தவறிய பிள்ளையைப் பெற்றவர்
பேர் சொல்லி வாழ்வதில்லை

Movie :Needhikku Thalaivanangu

TO BUY THIS MOVIE IN DVD 
CLICK ON THE LINK BELOW
Follow Us - http://www.rajvideovision.net
Contact Us- No.703,Anna Salai,Chennai-600002.
Phone-044 -28297564,044-28297175

Director : P. Neelakandan
Starring : M. G. Ramachandran,S. Varalakshmi
Music : M. S. Viswanathan
Lyricist: Pulamaipithan ,Na. Kamarasan 
Release date : 18 March1976
Country : India
Language :Tamil