Thursday, December 6, 2012

ஆன்மீகமும் வன்மமும்

1942: “My final word of advice to you is educate, agitate, and organize. Have faith in yourself. With justice on our side, I do not see how we can lose our battle. The battle to me is a matter of joy. The battle is in the fullest sense spiritual. There is nothing material or social in it. For ours is a battle not for wealth or for power. It is a battle for freedom. It is a battle for the reclamation of the human personality.”  
- B.R.Ambedkar (from a speech made at the All-India Depressed Classes Conference)

1942: உங்களுக்கு எனது இறுதி அறிவுரை என்னவென்றால் கற்பி, கலகம் செய், ஒன்றிணை என்பதே. உங்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். நியாயம் நம் பக்கம் இருக்கையில், நமது போராட்டம் எப்படி தோற்க முடியும். போராட்டம் என்பது எனக்கு மகிழ்ச்சியளிப்பதாகும். போராட்டம் என்பது அதன் முழுமையான பொருளில் ஆன்மீக உணர்வு. ஆன்மீகத்தில் லோகாதயமோ சமூக-கெளரவமோ இல்லை. காரணம் நமது போர் சொத்துக்கானதோ அதிகாரத்துக்கானதோ இல்லை. இது சுதந்திரத்துக்கான போர். இது மனிதத்தை மீட்டெடுப்பதற்கான போர். 
- பி.ஆர்.அம்பேத்கர் (அனைத்திந்திய தாழ்த்தப்பட்டோர் மாநாட்டு உரையிலிருந்து)

கடந்த இரண்டு வருடங்களாய் இணையப் பொதுவெளியில்  அரங்கேறிக் கொண்டிருப்பது தமிழ் வளர்த்த பாரம்பரியமிக்கக் கலைக் குடும்பத்தின் ஆங்கில தமிழுக்கும் Vs முகமற்ற தமிழர்களின் வெகுஜன தமிழுக்கும் இடையிலான நீயா நானா சமூகக் கயிறிழுப்புப் போட்டி. விளையாட்டு வன்மமாகி இரண்டுபேர் கைதில் முடிந்த கதையில் முக்கியமான ஆட்டக்காரர்கள் பாடகி சின்மயி மற்றும் அவரது தாயார் பத்மாசினி அவர்களும் ஆவர்.

ராமனாதபுர ஜமீன் பரம்பரையைச் சேர்ந்த இவர்களுக்கு ஏராளமான நிலம் பூர்வீக பூமியான பரமக்குடிக்கு அருகிலிருக்கும் திருவரங்கத்தில் இருந்ததென்று வில்லுப்பாட்டைத் தொடங்கிகிறார் சின்மயியின் தாயார் எனகிற தனிச்சிறப்பு பெற்ற பத்மாசினி அவர்கள். இதெல்லாம் இவர்களது தனிப்பட்ட விஷயங்கள். தமது அருமை பெருமைகளைச் சொல்லிக்கொள்ளும் உரிமை எவருக்கும் உண்டு. ஆனால் இவர்களிடம் த்னித்துவமான பிரச்சனை என்னவென்றால், சொந்த விஷயம் பேசி அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வதே போல, பொது விஷயங்களுக்குத் தாவி பூசனிக்காயை சோற்றில் மறைத்து விடுவதுதான்.

இந்த மறைப்புக் கலை புரட்டல் கலையில் மகளைவிட அம்மா கைதேர்ந்தவர். என்ன இருந்தாலும் வாய்க்கு வாய், தேவி ஆன்மீகம் சக்தி அடுத்தவரைத் தம் பிரேயரின் மூலம் குணப்படுத்துதல் அனைவருக்கும் அமைதி வழங்குதல் அன்பு நேயம் போதித்தல் என தமிழ் இளைஞர்களுக்கு ட்விட்லாங்கரில், ஜெயமோகனுக்கு அடுத்து இணையத்தில் ஆன்மீக மடத்தின் குருவாகத் திகழ்பவர், சின்மயியின் அம்மா பத்மாசினி அவர்களே ஆவார்.

தமிழ் இணையத்துப் பொறுக்கிகளை உய்விக்க தேவியால் அனுப்பப்பட்ட தமிழ் இணைய மாதா அமிர்தானந்த மயி என்றே அவர் தம்மை நம்பத்தொடங்கி ஒவ்வொரு ட்விட்லாங்கரிலும் ஒரு ‘செய்தி’ அருளியவாறே இருப்பவர்.

அவர் 25 நவம்பர் 2011ல் அருளிய செய்தி அன்பு செய்தல். 

’செய்தி’யை வழங்குவதென்று முடிவாகிவிட்டது. அதைத் தொடக்கம் முதலே புகட்டுவதுதானே சரி.இப்படியான மேட்டுக்குடியில் பிறந்த நாங்கள் மட்டுமன்றி நாங்கள் அவதரித்த திருக்ஷேத்திரமான ராமனாதபுரத்திலேயும்கூட எல்லா உயிர்களிடத்தும் அன்னியோண்யம் இன்றுகூட நிலவுகிறது என்று சந்தடி சாக்கில் கூறிச்செல்ல முயல்கிறார். ஆனால் சரித்திரம் ஏன் வேறு விதமாகச் சொல்கிறது? சரித்திரம் பற்றி அவருக்கென்ன கவலை. அவர்கள் பரம்பரை பரம்பரையாக அந்தப் பக்கம் இந்தப் பக்கம் பார்க்காமல் அன்பை மட்டுமே போதிப்பவர்கள். அவருக்கு அதுவே போதும் தாம் பிறந்த பூமியே அப்படித்தான் என்று நம்பி,  அடுத்தவருக்கு போதிக்க.

ராமனாதபுரம் பார்க்காத சாதிக் கலவரங்களா? ஆனால் பத்மாசினி அம்மையார் அவர்கள் கூறுகிறார்.

Ramanathapuram district even now can be proudly called a place of pride in the sense that all religions and all castes take life as a process of harmonious co-existence. I come from a land where even a child is respectfully addressed or referred.

நாங்கள்ளாம் ரொம்ப ஒஸ்தி ஜாதில பொறந்தவா. சும்மா சாதரண பிராமணாள்னு நெனச்சுடாதேள்.

A sort of jamindars on one side and we belong to a vaishnavite famiy which is a special one called svayamacharyas, which means the eldest member of the family becomes the guru for the family clan.

அடுத்து நான் மட்டுமில்லை என் அப்பாவும் ரொம்பப் பெரிய ஆளாக்கும் என்று அவரது அருமை பெருமைகள்.

கரெக்ட்டம்மா இப்படியெல்லாம் 1930களிலேயே My father was a garrison engineer in the British Army என்றெல்லாம் சொல்லிக்கொள்ள இணையத்தில் இருக்கும் எந்த பெரும்பான்மையான சூத்திரர்களுக்கும் வக்கில்லை அம்மா. காரணம் பெரியாரே 1925ல்தானே சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்குகிறார்.  இணையத்தில் திரியும் எங்களைப் போன்ற பிச்சைக்காரப் பயல்களில் பலர் அவர்களின் பரம்பரைக்கே முதல் பட்டதாரிகள். நான் அதுவுமிலை என்பது வேறு விஷயம். 

வரங்களனைத்தையும் பிராமணர்களே வைத்துக்கொண்டு மற்றையோருக்கு, சாபங்களை  மட்டுமே விநியோகித்துக் கொண்டிருந்த காலமல்லவா அது. இப்படி உண்மையை உடைத்துச் சொன்னால் ஜெயமோகன் வசைப்பது போல நாமெல்லோரும் வெறுப்பால் ஆன நெருப்புக் குஞ்சுகள் என்று பத்மசினி இசைக்கத்தொடங்கிவிடுவார்.

He was a very pious, compassionate man very loving and very caring but could never tolerate nonsense or idiocy.

நீங்கள் பூர்வ ஜென்மத்தில் நர்சாக இருந்திருக்கிறீர்களோ? அடிப்படையில் நானும் என் மகளும் ஜான்சி ராணி என சொல்லப்போகிற கதைக்கு புள்ளி வைத்துக் கோலம் போட ஆரம்பிக்கிறீர்கள் என்பதை அடடா but could never tolerate nonsense or idiocy. என்கிற கொண்டை காட்டிக்கொடுத்து விட்டதே.

நீங்கள் சொல்வது சத்தியம் என்று எப்படி அம்மா எடுத்துக்கொள்வது? நீங்கள் மனமறிய கூசாமல் பொய் சொல்பவர் என்பது ஐயம்திரிபர பிராமணர்களா வாமனர்களாவிலேயே நீரூபிக்கப்பட்டாயிற்றே அம்மா. நீங்கள் சென்றவருடம் பேசினாலும் இந்த வருடம் பேசினாலும் இனி எதிர்காலத்தில் பேசினாலும் மறந்தும் உண்மையை மட்டும் பேசிவிடக்கூடாது என்கிற கொள்கையில் உறுதியாக இருப்பவர் என்பது உறுதியாகிவிட்டதே அம்மா.

வெள்ளிக்கிழமையும் அதுவுமாக Friday 25th November 2011 நீங்கள் இந்த ட்விட்லாங்கரில், எங்கள் ராம்னாட் இப்பகூட சாதிபேதமே பார்க்காத பூமி என்கிறீர்கள். 

ஆனால் அதற்கு இரண்டு மாதம் முன்பாகதான் Three killed in police firing in caste-sensitive south Tamil Nadu Sep 11, 2011, 03.30pm IST என்று டைம்ஸ் ஆஃப் இண்டியாக்காரன் பொய்சொல்கிறான்.

போதாக்குறைக்குப் பாருங்கள் இந்த Frontline நம்பளவாக் கடங்காரன் Caste-based mobilisation and violence Vol. 15 :: No. 22 :: Oct. 24 - Nov. 06, 1998 Violence in Ramanathapuram district in southern Tamil Nadu on October 4, sparked by a confrontationist, caste-based mobilisation with a communal orientation, claims 11 lives. என்று அண்டப்புளுகு புளுகுகிறான்.

உபாசிக்கும் தேவி உள்ளேயிருந்து  உந்துகையில் உண்மைக்குப் புறம்பாக உளறுவதும்கூட ஆன்மீகம் ஆகிவிடும். ஆனால் உங்களைப் பின்னாலேயே தொடரும் ஏராளமான அடிமைகளில், யதார்த்தம் இது இல்லை என்று ஒருத்தர் கூடவா சொல்லவில்லை. சொன்னவனெல்லாம் சினிமா தமிழில் வெகுஜன மொழியில் உங்களுக்குப் புரியாத நக்கலில் சொல்லி ஆபாசக்காரர்களாகிவிட்டான்கள்.

He was a rebel among Brahmins, என்பதற்கு என்னம்மா ஆதாரம்?

அடுத்து உங்கள் தந்தை கேவுரு கஞ்சி குடித்த கதை.

as he used to drink the kelvaragu kanji given by our kudi pallan family.

கபில் சிபல் போல ஏதோ rebel என்றீர்களே என்று பெரிதாக எதிர்பார்த்தேன். கடைசியில் கஞ்சி குடித்ததே புரட்சிதான் என்பதுபோல சொல்லிவிட்டீர்கள். அதுவே அந்த காலத்தில் பெரிய கலகம் என்கிறீர்கள். 

இதன் மூலமாக மகாராஷ்டிரத்தில் அம்பேத்கர் என்கிற தலித்தும் தமிழகத்தில் பெரியார் என்கிற சூத்திரனும் நடத்திய கடும் சமூகப் போராட்டங்களுக்கான   நியாயங்களுக்கு வாக்குமூலம் கொடுத்துவிட்டீர்கள். நாம் வணங்கும் தேவி நம்மையும் அறியாமல் சமயத்தில் கோல் போஸ்ட்டைக் கண்ணிலிருந்து மறைத்து இப்படி சேம் சைடு கோல் அடிக்க வைத்துவிடுவாள்.

உங்கள் அப்பா காலத்தில் குடி பள்ளன் என்பார்களோ? பரவாயில்லை அந்த காலத்தில் நல்ல கெளரவமான பெயராகத்தான் இருந்திருக்கிறது. இப்போதுதான் இது பள்ளக்குடிப் பயல்கள் என்றாகிவிட்டது போலும்.

ஆனால் இந்தக் காலத்தில் நீங்களும் உங்கள் மகளும் உதிர்க்கும் முத்துக்களை ஒப்பிட்டால், அந்தக் காலத்தில் பள்ளர் குடிசையில் கஞ்சி குடித்த உங்கள் தந்தை  மகானுபாவர்தாம் சந்தேகமே இல்லை.

But then in Ramnad district you will find that the huts are kept very clean and hygienically maintained.

என்ன சொல்கிறீர்கள் தாயே? அந்தக் காலத்தில் குடிசையில் வாழ்ந்த குடி பள்ளர்கள் பள்ளர்களேயானாலும் அட்லீஸ்ட் சுத்தமாகவாவது  தங்கள் குடிசையை வைத்துக்கொண்டிருந்தார்கள். இந்தக்காலத்தில் இந்தப் பள்ளக்குடிப் பயல்கள் தங்களை மட்டுமல்ல குடிசையைக் கூட சுத்தமாக வைத்துக்கொள்வதில்லை என்று சொல்லாமல் சொல்கிறீர்களா? ஆக சுத்தம்  சுகாதாரம்தான் பிரச்சனையே தவிர பள்ளர் பறையர்களை சரிசமமாக நடத்துவதில் உங்கள் பரம்பரைக்கே பிரச்சனை இல்லை என்கிறீர்கள். 

அம்மா நகரத்திலிருக்கும் நமது அடுக்கு மாடிகளின் குளிர்விக்கப்பட்ட அறைகளே புழுதிபடிந்து கிடக்கையில்,கூவத்தோரம் ரயில்வே தண்டவாளங்களின் ஓரம் என வேலிக்கத்தாழைகளாய்க் கிடக்கும் குடிசைகள் சுத்தபத்தமாய் வாஸ்துசாஸ்திரப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது அறிவார்த்தமா? 

பச்சையப்பன் கல்லூரியில் நான் தமிழ் பி.ஏ படித்துக்கொண்டிருக்கையில் எம்.ஏ படிக்கவந்து நண்பரானவர் இப்போது இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவராக இருக்கும் செ.கு.தமிழரசன் எம்.எல்.ஏ. ஆவார்.
தருமபுரி வன்முறை: பாமக மீது செ.கு.தமிழரசன் குற்றச்சாட்டு - தினமணி

அந்த காலத்தில் செ.கு.த என் தோள்மீது ஒரு கையைப் போட்டுக்கொண்டு மறு கையால் வேட்டி நுணியைப் பிடித்து பச்சையப்பன் மாடி வராண்டாவில் நடந்தபடி, நர்சிம்மா இப்ப எவனாச்சியும் நம்பள போட்டோ எடுத்தானா பிளாக் அண்ட் ஒயிட் ஃபிலிம் மாதிரியே இருக்கும் இல்லையா என்று சொன்ன சுய எள்ளல்காரர். 97 வாக்கில் என்று நினைவு. நான் எல்.டி பிளேயர் வாங்கியிருந்த சமயம். மால்கம்X படத்தை அவருக்குப் போட்டுக்காட்டினேன். படம் முடிகையில் விம்மாத குறையாக ஏதும் பேசாமல் எழுந்து சென்றவர். இரண்டு நாள் கழித்து சே. என்னப்பா இது ரெண்டு நாளா மனசை என்னவோ பண்ணிகிட்டு இருக்குப்பா. ஏதோ நாட்டுல எங்கக் கதையைப் பாக்கறா மாதிரியே இருக்குதேப்பா என்று நா தடுமாறினார்.

கல்லூரி நாட்களில் அவர் சொன்ன குட்டிக்கதையொன்று நினைவுக்கு வருகிறது. 

உங்களைப்போன்ற உயர்ந்த உள்ளம் கொண்ட, பொழுதுபோகாமல் சும்மா வீட்டில் உட்கார்ந்திருப்பதற்கு பதில் ஏதாவது சமூக சேவை செய்து நம்மை உய்வித்துக்கொள்வது உபயோகமான காரியம் என்று எண்ணிய வசதியான பெண்மணி ஒருவர் தம் வீட்டுக்கு அருகிலிருந்த சேரிக்குச் சென்றாராம். தமிழ் இணைய இளைஞர்களுக்கெல்லாம் என்னென்ன செய்ய வேண்டும் என்று பொழுது விடிந்து பொழுதுபோனால் நீங்கள் ட்விட்லாங்கரில் லெக்ச்சர் கொடுப்பதில்லையா அதுபோல அந்தம்மாள் சேரியில் போய்,

நீங்கள்ளாம் உங்கள் குடிசைகளை சுத்தபத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளை நன்றாகக் குளிப்பாட்டி தலைவாரிப் பூச்சூடி பள்ளிக்கு அனுப்பி வைக்கவேண்டும் அடுக்களையைப் பாருங்கள் எவ்வளவு அழுக்காக இருக்கிறது. உங்கள் பாத்திரங்கள் எல்லாம் எவ்வளவு அழுக்காக உள்ளன அதையெல்லாம்....

கேட்டுக்கொண்டிருந்த சேரிப்பெண் ஒருத்திக்கு, இணையத்துத் தமிழ் பொறுக்கிகளைப் போல பொறுமை போய்விட்டது. அவள் எழுந்து சொன்னாளாம்,

யம்மா இதெல்லா எங்குளுக்குந் தெரியு. நீ எதோ புச்சா கண்டுபுட்ச்சாப்புல சொல்லிகினி போவுற. நீ சொல்ற அத்தினி வேலையும் காலீலேந்து ராவிக்கு வரிக்கும் டெய்லி உங்களமேரி இருக்குற பங்களாக்காரங்க ஊட்ல, செய்யிறது நாங்கதான? அப்பால இத்தயெல்லாம் எங்கூட்ல செய்ய எங்குளுக்கேது டைமு? நாங்க உங்கூட்ல வந்து வேல செஞ்சிகினு இருக்கசொல்லோ, வேண்ணா நீ எங்கூட்டுக்கு வந்து, இத்தயெல்லாம் செஞ்சிகுட்தீனா நாங்களும் உங்களைமேரி நாகரிகமா சுத்தபத்தமா இருந்துட்டுப் போவமாட்டமா?

இப்படி ஏடாகூடமாகத்தான் இணையத்துத் தமிழ்ப் பொறுக்கிகள் அவர்களுத்தெரிந்த மொழியில் கொஞ்சம் மானே தேனே கலந்து கடுப்படியாகப் பேசிவிட்டார்கள். அது எல்லை மீறி உங்கள் மகளான சின்மயி அவர்களை ஆபாசமாகப் பேசுவதாக ஆனது கட்டாயம் கண்டிக்கப்பட வேண்டியதுதான். ஷரண்கே பேச்சு பற்றி தனியாக விவாதிக்கலாம்.

நீங்கள் ரொம்ப ஒஸ்தியாக நினைத்துப் பேசிக்கொண்டே போகும் ட்விட்லாங்கர் பிரசங்கமெல்லாம் இணையத்தின் பெரும்பான்மைக்கு பெரிய பிற்போக்கு ’போர்’ என்பது உங்களுக்குத்தெரியுமா? உங்களது அரதப்பழைய கிழிசல் மதிப்பீடுகளைக் கொண்டுவந்து எங்கள் மீது போர்த்தி எவ்வளவு அழகு என்று சொல்வது எங்கள் மீது நிகழ்த்தப்படும் பெரிய வன்முறை என்பதை எப்படி உங்களுக்குப் புரிய வைப்பது? இந்தத் தடுமாற்றத்தில்தான் காமெடி செய்வதாய் இளைய கூட்டம் எதிர்த்தாக்குதல் நிகழ்த்திற்று.

ஆனால் அதற்கு ராஜன் மீது ஏன் நடவடிக்கை? அவன் உங்களையோ அல்லது சின்மயியையோ ஆபாசமாகப் பேசிய ஒரு ட்விட்டைக்கூட ஏன் உங்களால் இன்னமும் காட்டமுடியவில்லை? 

இவ்வளவு ஆன்மீகம் பேசும் நீங்களும் உங்கள் மகளும் இதற்குமுன் ராஜன் மீது நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவே இல்லையா? ராஜன் மீது மட்டுமான புகாருடன் சென்றபோது இதை வைத்தெல்லாம் யார் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது என்று காவல்துறையால் சின்மயி திருப்பி அனுப்பபடவேயில்லையா? இதையெல்லாம் எங்களிடம் ட்விட்லாங்கராகச் சொல்ல வேண்டாம். உங்கள் மனசாட்சியைத் தொட்டு நீங்கள் வணங்கும் தேவியின்முன் ஆதம சுத்தியுடன் நீங்களாகவே கேட்டுக்கொள்ளப் பாருங்கள்.

ஆனால் ஒன்றை கவனித்தீர்களா? உங்கள் அப்பா காலத்திலும் பள்ளனுக்கும் பறையனுக்கும் குடிசைதான் உங்கள் மகளுடைய தலைமுறையிலும் அவர்களுக்குக் குடிசைதான் என்பதை நீங்களே சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள் பார்த்தீர்களா? யதார்த்தம் இப்படி இருக்கையில் அவனிடம்போய் அன்பு செய் வெறுப்பு கூடாது என்பது நியாயமா? அன்பு செய்ய அவன் தயாராகத்தான் இருக்கிறான் ஆனால் ஒருத்தன் அன்பு செய்தால் முன்னூறு வீடுகள் அல்லவா நாசப்படுத்தப்படுகின்றன. அவனிடம்தான் யாரும் அன்பு செய்யத் தயாராய் இல்லை என்பதுதான் உண்மை.

ஆமாம் பரம்பரை பரம்பரையாக உங்கள் குடும்பம் பள்ளர்கள் குடிசைக்குப்போய் கஞ்சிகுடித்துக் கொஞ்சிக்குலாவிய குடும்பம் என்று சென்ற வருடம் ஏன் இவ்வளவு மெனக்கெட்டீர்கள்?

சின்மயி அவர்கள் 04 ஜனவரி 2011ல் ஸோகால்டு ”தாழ்த்தப்பட்டவர்கள்” என்று முத்துதிர்த்து இட ஒதுக்கீட்டுக்கு எதிராக என்னென்ன சொன்னார் என பார்க்கலாமா?
தமிழக அரசின் G.O No.205 school Education Department 31.07.2000 ஆணையைக் குறிப்பிட்டுச் சொல்கிறார். அந்த ஆணை என்னவென்று பார்ப்போமா?
’ஓய் இதெல்லாம் ச்சும்மா ஐவாஷ், பேருக்குதான். ஆனா ப்ராக்டீஸ் வேறை’னு குழூஉக்குறியாக அக்கம்பக்கம் பாத்துட்டு நம்பளவா நம்புளுக்குள்ள சகஜமாப் பேசிக்கறது இதைத்தான். இல்லேன்னு சொல்லலை.

இணையம் நம்பாத்து ஹாலில்லை. இதப் பாத்துண்டு இருக்கறவா யார் யார்னு யாருக்குத் தெரியும்? தலித்தா இருக்கலாம். ஷூத்ராளா இருக்கலாம். ஏழர மாதிரி இந்நாள் கம்யூனிஸ்ட்டா இருக்கலாம். தியாகு1973 மாதிரி கட்சியிலேந்து வெளியப்போயிட்ட கம்யூனிஸ்ட்டா இருக்கலாம். தீப்பொறி ஆறுமுகம் ஸ்டைல் பெரியாரிஸ்ட் மாதிரி பேசற ராஜன் லீக்ஸா இருக்கலாம். வெள்ளைத் தொப்புள் மோகி திராவிட லக்கியா இருக்கலாம் இவ்ளோ வெவ்வேற முகத்தோட இருக்கறவா ஒன்றிணைந்து நிக்கிற ஒரே முகம் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட தமிழர் நலன். இதுல கைய வெச்சா என்ன சொல்லவரோம்னு காதுகுடுத்துக் கேக்காமயே எல்லாரும் காண்டாயிடுவா? 

ஸ்ரீரங்கம் கோவில் கர்ப்பக்ரஹத்துல நொழஞ்சு பெரியார் அம்பேத்கர் படத்தை வெச்ச ம.க.இ.க போராட்டத்தை அது வெறும் அதிர்ச்சி மதிப்பீட்டுக்கானது. வழக்கு தொடுக்கறதுதான் நிரந்தரத் தீர்வுன்னு சொன்னதுக்கு என்னைப் பார்ப்பணப் பாதந்தாங்கின்னு சொல்லிட்டார் சின்மயியோட ரேஸிஸம் பத்தி விவாதிச்ச ஏழர.

நிஜத்தில் நடந்த சம்பவத்தை அடிப்படையா வெச்சு சப்டெக்ஸ்டோட எல்லா தரப்பு உள் மனசையும் தோலுரிச்சு எழுதினதை மேலோட்டமாப் புரிஞ்சிண்டு  நிறம் கதைக்காக யுவகிருஷ்ணாவும் அதிஷாவும் தலித்துகளுக்கு எதிரா எழுதினேன்னு என் உசுரை எடுத்தா. சமாளிக்க முடியாம கொஞ்ச நாளைக்கு இவாளை பிளாக் பண்ணவேண்டியதா ஆயிடுத்து. 

வி.பி.சிங் மண்டலை அறிவிச்சது சந்தர்பவாதம்னு சொன்னதுதான் கவிராஜன் ஷரண்கேலேந்து ஸ்பைன்சர்ஜன் புருனோலேந்து எல்லாரும் ஒண்ணா சேந்து என்னை ர்ர்ர்ர்ர்ரவுண்டு கட்டிட்டா. 

கவிராஜன் ஷரண்கே ராஜா ஆராதகர்கள். புருனோ ரஹ்மான் உபாசகர். அவர் பெருசா இவர் பெருசான்னு அடிச்சிக்க ஆரம்பிச்சான்னா புள்ளிவிவரத்தோட அதும்பாட்டுக்கும் நாள் கணக்குல ஓடிண்டே இருக்கும். 

இந்த இணையத்துச் சண்டைகள் அவ்ளோத்துலையும், சமயத்துல வார்த்தை தடிக்கலாம் சமயத்துல தனிநபர் தாக்குதலாகி தரக்குறைவாகவும் எறங்கலாம். ஆனா இது எவன் குடும்பத்துக்கும் ஒட்டுமொத்தமா கொள்ளிவெச்சிட்டுதான் மறு காரியம் பாக்கறதுங்கற தீராத வன்மமா ஒருபோதும் ஆனதில்லை. உங்களுக்கு தேவி எனக்கு ஆஞ்சநேயர்னு இஷ்ட தெய்வம் இருக்கறாப்பல இணையத்துல இருக்கற பலபேருக்கு, தெய்வ பக்தியே கெடையாது. ஆனா அவா மனசுல வன்மம் இல்லே.

இந்த விவகாரத்தின் தலைக்காவிரி எங்கே ஆரம்பித்ததென்று பார்ப்போம். இது பற்றி சின்மயி என்ன சொல்கிறார்,
04 ஜனவரி 2011 அன்று யாரோ ஒரு பெண் கிட்டத்தட்ட 100% வாங்கியும் தான் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்கிற அடையாளம் இருப்பதால் தன்னால் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. பொருளாதார ரீதியில் தான் பிந்தங்கி இருப்பது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்றார். அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் பிரச்சனையுடன் அடையாளம் கண்டுகொள்வதென்பது ஒன்றும் சட்டத்துக்குப் புறம்பானதன்று. நான் அவருக்காகப் பேசியது என்மீதான பிராமண எதிர்ப்புத் தாக்குதலைத் தொடங்கிற்று.

இந்த பிராமணப் பெண் யாராக இருக்கும் என்று எண்ணுகிறீர்கள்? இது சின்மயியின் மனம் கழிவிரக்கத்தால் உண்டாக்கிக்கொண்ட கற்பனைப் பெண் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. அந்தப் பெண்ணே நேரில் வந்து இதோ நான் பேசிய ட்விட்டு இதுதான் என்று கொடுக்காதவரை நாம் இதைத்தான் நம்ப வேண்டி இருக்கும்.

லாஓசி @_santhu என்கிற சூட்டிகையான இளைஞர் தாம் சேகரித்து இன்னமும் வெளியிடாத தரவுகளை என்னிடம் கொடுத்தார். அவற்றைப் பார்த்துவிட்டு நீங்களே முடிவு செய்யுங்கள். ஒவ்வொன்றையும் விரித்தால் மற்றவர்கள் பேசியதும் இவற்றில் வெளிப்படும். நடைமுறைக்கு அது சாத்தியமன்று.

இன்று ஒரு சிந்தனை போல சின்மயியின் ட்விட்டர் உரை
இதிலிருந்து தொடர்ந்து சென்று மேற்குறிப்பிட்ட தமிழக அரசின் கல்வித்துறை அரசாணைக்குப் போய் சின்மயி ஸோ-கால்ட் தாழ்த்தப்பட்டவர்கள் என்று திருவாய் மலர்ந்து அருள பூகம்பமாய் வெடிக்கிறது. அது எப்படி என்றும் பார்க்கலாம்

அது சரி இந்த ஆர்த்திஆன்ஏர் என்பவர் எங்கே இருக்கிறார்? கூவத்தின் கரையோரம் இருக்கும் சேரிக் குடிசையிலா? அவர் வசிப்பது இங்கிலாந்தில். தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அவர்களுக்குக் கொடுப்பதில், ப்வுண்டில் சம்பாதித்து வசதியாக வாழும் இந்த அம்மாளுக்கு ஏன் இவர்கள் வீட்டு சொத்து கொள்ளையடிக்கப்பட்டது போல் இவ்வளவு ஒப்பாரி?

இப்போது திரும்பவும் சின்மயி தான் ஏதோ புள்ளி மான் போலவும் வனவிலங்குகளாய் பலர் சூழ்ந்து தாக்கியது போலவும் கூறுவதெல்லாம்  முழு பொய். ஏழெட்டு பேராய் சேர்ந்து உங்கள் பெண்ணிடம் கேள்விமேல் கேள்வியாய்க் கேட்டுத் துளைத்தார்கள். எவரும் இவரை கண்ணியக் குறைவாய் பேசவே இல்லை.
அவரை எந்த கல்லூரிக்குள்ளும் நுழையவிடமாட்டோம் என்றோ அவர் வாங்கிய மதிப்பெண்கள் செல்லாது என்றோ தமிழக அரசு கூறிவிடவில்லை. தமிழகத்தில் இருந்து கொண்டு தமிழை இரண்டாம் பாடமாக எடுத்தவர்க்கே தமிழக ‘முதல்’ என்கிற மரியாதை அவ்வளவே. இது எல்லா மாநிலங்களிலும் உள்ளதுதான். பவித்ரா,பவித்ரமாக சமஸ்கிருதத்தை எடுக்காமல் ஸ்வதந்திரமான ஃப்ரெஞ்சை எடுத்திருந்தாலும் இதேதான் அவரது நிலை. அப்போதும் அவருக்காக ட்விட்டுவார்களா? இவ்விரண்டு மொழிகளிலும் 100/100 வாங்குவது நெம்ப சுலபம் என்பதே ’புத்திசாலி’ மாணவர்கள் இவற்றைப் பாடமாக எடுக்கக் காரணமே தவிர இம் மொழிகளின் மீதுள்ள பக்தியோ காதலோ அல்ல.  மாணவர்கள் இவற்றைப் பாடமாக எடுக்காவிட்டால் ஒரு ஆசிரியர் மட்டுமே இருக்கும் இந்தத் துறைகள் இழுத்து மூடப்படும் என்பதே ’இந்த’ ஆசிரியர்கள தேர்வுத்தாள் திருத்துகையில் நெம்ப ’தாராளமாக’ இருப்பதற்குக் காரணம். மாநில முதன்மைக்கு பவித்ராக்கள் பரிசீலிக்கப்படாமைக்கு இதுவும் ஒரு காரணம் சின்ன மை அவர்களே.

ஒவ்வொருத்தருக்கும் தனித்தனி விருப்புவெறுப்புகள் கருத்துச் சார்புகள் உண்டு. ஏன்னா எல்லாரும் தனித்தனி மனுஷா. இவா எல்லாரையும் ஒரே கும்பலாப் பாக்கறது நம்பாத்துக் கொழந்தையோட மடத்தனம். மட்டுமில்லே நம்பளவா அப்பறம் நம்புளுக்கு சாதகமா பேசறாவா தவிர மித்த எல்லாரையும் ஒட்டுமொத்தமா ஒரே கும்பல்னு பிராண்ட் பண்றது, சமஸ்கிருதம் மனுஸ்ம்ருதினு காதுல கேட்டதுமே கன்னத்துல போட்டுக்கற நம்ப பிராமணா புத்தியைத்தான் காட்டும்.

உங்காத்து பிராமணப்பொண்ணும் அசலாத்து பிராமணப்பொண்ணும் இட ஒதுக்கீடு கூடாதுன்னு சொல்லி இங்க இருக்கற ஏழை பாழைகள் வயித்துல எப்பிடி அடிக்கலாம்னு எவனாச்சியும் கேட்டான்னா, கருத்துச் சுதந்திரக் கத்தரிக்காய் தலையை நீட்டும். இதை எதுத்துக் கேக்க வந்தவனை கும்பலா தாக்க வந்தானுங்கன்னு கண்ணைக் கசக்குவேள். என்ன நியாயம்மா இது?

சரிய்யா ஆளைவிடு உன் செண்டிமெண்டைப் புண்படுத்திவிட்டேனா சாரி என்று சொல்லுகிற நேர்மையாவது நம்பாத்துப் பொண்ணண்டை இருக்கா?

நாம்பள்ளாம் படிச்சவா பிராமண பிரபலங்கள். ஆகையினால் சோ கால்ட் தாழ்த்தப்பட்டவன்னா என்ன இப்ப அவன் குடியா முழுகிப்போச்சு? 


ரெண்டு வருஷம் கழிச்சு இப்படி ரெண்டு இங்கிலீஷ்ல கிறுக்கிப்போட்டாப் போதாதா? மெனக்கெட்டு தமிழக அரசு ஜீ.ஓவை எடுத்துக்காட்டிப் பேசினதையெல்லாம் எவன் கேள்வி கேக்கப்போறான் என்கிற தெனாவட்டு இல்லாமல் இது வேறு என்ன?

இப்படியெல்லாம் அம்பேத்கர் தொடர்ந்து கேள்வி கேட்டதால்தான் இந்திய அரசியல்வாதிகளின் ஆன்மாவை அசைக்க முடிந்தது. இட ஒதுக்கீட்டை அரசியல் சட்டத்திற்குள் கொண்டுபோய் நிறுத்த முடிந்தது. இப்படியெல்லாம் பெரியார் கேள்வி கேட்டதனால்தான் சமூகத்தின் பெரும்பான்மையாய் திகழும் சூத்திரர்களுக்கு விடிவுகாலம் பிறந்தது. 

கூழுக்குச் செத்தவனைப் பார்த்து,வசதியாக வாழும் நீங்கள் குய்யோமுறையோ என்று கூவுவது ஆபாசம் இல்லை. எங்கே இந்தப்பேச்சை வளரவிட்டால் கடும் போராட்டங்களுக்குப்பின் வாராது வந்த மாமணியை இதுகளிடம் தோற்போமோ என்கிற பயத்தில் உங்களைப் பார்த்து என்ன எழவுடா இந்த சனியன் என்று சொன்னால் பாலியல் தாக்குதல் ஆபாசம் இல்லையா? நன்றாக இருக்கிறது உங்கள் நியாயம்.

இந்தத் துக்கிரிப்பேச்சுதான் நல்ல பாடகி என்று மட்டுமே தெரிய வந்திருந்த  உங்கள் மகளது பிம்பத்தை உளறல் வாய் அதிலும் கொஞ்சம் விட்டால் தமிழ்ச் சமூகத்துக்கே ஊறு விளைவிக்கும் வாய் என்கிற கெட்ட பிம்பம் உருவாக வித்திட்டது. தயவுசெய்து ஹ்ருதய சுத்தியோடு நிஷ்ட்டையில் அமர்ந்து தேவி! என் அம்மா! இந்தப் பன்னாடை பிராம்மணன் ஏதேதோ சொல்கிறானே அதெல்லாம் ஒரு வேளை உண்மையாய் இருக்குமோ என்று ஆதம சுத்தியுடன் விசாரித்துப் பாருங்கள். தேவி கனவில் வந்து என்ன சொல்கிறாள் என்று பார்ப்போம்.

மாட்டுச் சாணம் என்று உங்கள் மகள் சின்மயியால் இழித்துரைக்கப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களுக்கான தலைவர்களில் ஒருவரான செ.கு.தமிழரசன் சொன்ன கதையில் வரும் சேரிப் பெண்ணைப் போல, இணையத்துக் கறுப்புப் ப்யல்கள் உங்கள் மகளை ‘துன்புறுத்தத் தொடங்கினார்கள்.’ அந்தக் கேள்விக்கணைகளின் துன்புறுத்தல் தாங்காமல் 20 நவம்பர் 2011ல் எவ்வளவு மெனக்கெட்டு ட்விட்லாங்கர் போடவேண்டி இருக்கிறது பாருங்கள். 

நிஜமாகவே நாம் நல்லவர்களாக இருந்தால் நம் பேச்சிலும் எழுத்திலும் செயலிலும் நமது ’நல்லத்தனம்’ தன்னால் வெளிப்படும். இப்படி நாம் நல்லவர் என்கிற நம் ஃப்ளெக்ஸ்போர்டை நாமே தூக்கிக்கொண்டு திரியவேண்டிய அவசியமில்லை. 

திரும்ப தங்களின் பிரசங்கத்திற்கே வருவோம்.

A Pallar or the home maids or anyone for that matter, we, the children of the house had to address them all with respect and a relationship like akka, anna, ayya etc. They in turn will address us as chinnachamy, periyachamy, china thangam, mootha thangam etc.

உங்கள்  சிறுவயதில் இருந்ததைவிட இந்த செர்வெண்டு மெய்டுகளின் வாழ்க்கைத் தரம் இப்போது மிகப்பெரிய அளவில் முன்னேறிவிட்டதம்மா. அந்தக்காலத்தில் கொல்லைப்புறமிருந்துதான்  chinnachamy, periyachamy, china thangam, mootha thangam etc. என்று குரல் கொடுக்க வேண்டியிருந்தது. இப்போதெல்லாம் வீட்டுக்குள்ளேயே வளைய வர ஆரம்பித்துவிட்டார்கள். ஏனென்றால் நகரத்து அடுக்குவீடுகளில் கொட்டிக்கொள்ளும் இடத்திற்கு எதிரிலோ அருகிலோதானே கொல்லையும் இருக்கிறது. அதனால் வேறுவழியின்றி நாமெல்லாம் மகத்தான மனிதாபிமானிகளாய் மாறி தலித்துகளையும் சூத்திரத்திகளையும் நம் வீட்டுக்குள் வளையவர அனுமதிக்கிறோம். தேவையின் நிர்ப்பந்தம் காரணமாய்த்தான் என்றாலும் இதையெல்லாம் கூட  மனிதாபிமானத்தில் சேர்த்துக்கொள்ளலாம்தானே. ஆனால் பாருங்கள்  எப்போதுமே அவர்கள் நம் வேலைக்காரிகள்தான். 

உங்களது பால்ய பருவ அக்கா அண்ணா ஐய்யா பேச்செல்லாம் கொஞ்சம் கூட சின்மயிடம் ஒட்டாமல் போனது எப்படி?. அவர் என்னவெல்லாம் பேசி இருக்கிறார் என்பதைத் தனித்தனிக் கட்டுரைகளாகப் பின்னால் பார்க்கத்தானே போகிறோம்.

Even just during my teens and early twenties our house maid Anjalai was akka to us and her Son Palani was given regular extra coaching for his studies by me and my sister. He is married to an engineering graduate girl and bought his own house in Velachery 25 years back and works for an MNC. Until recently Anjalai used to come and help us occasionally. My father introduced her as his elder daughter.

பாருங்கள் நீங்களும் உங்கள் சகோதரியும் டியூசன் கொடுத்து கைதூக்கிவிட்டதால்தான் அவருக்கு என்ஜினியரிங் ’கேர்ள்’ மனைவியாக வாய்த்தாள். அதனால்தான் அவர் 1987லேயே  வேளச்சேரியில் சொந்தவீடு வாங்கினார் என்கிறீர்கள். அதற்கு நன்றிக்கடனாக உங்கள் அப்பாவீட்டு வேலைக்கார அம்மாள் சமீபகாலம்வரை அவ்வப்போது வந்து உங்களுக்குக் கூடமாட ஒத்தாசையாக வேலைசெய்து கொடுத்துக் கொண்டிருந்தார் என்று சொல்லி இருப்பதை வேறு யார் கூறினாலும் நம்பலாம். ஆனால் உங்கள் பெண் தீண்டத்தகாதவர்களை ஒட்டுண்ணிகள் என்கிற எஸ்.எஸ்.ராஜமெளலியின் ட்விட்லாங்கரை ரீட்விட் செய்ததை நீங்கள் கைதவறி செய்ததாக பசப்பிய கேவலத்தைத் தெளிவாக நிறுவியபின் இதையெல்லாம் யாராவது நம்புவார்களா?

உடனே யூஎஸ்ஸ்லிருந்து ஒரு ரைட் ஹானரபிள் சாஸ்திரிகள் வருவார்.  இந்த ட்விட்லாங்கர் சென்ற வருடம் 2011ல் எழுதப்பட்டது. தீண்டத்தகாதவர்கள் ஒட்டுண்ணிகள் என்பதை ரீட்விட் செய்தது 2012 இந்த வருடம் என்று லாபாயிண்டை எடுத்து விட்டு என்னை மடக்கிவிட்டதாய் பெயர்கூடப்போடாமல் எனது பின்புறத்தைப் பார்த்துக் கெக்கலித்துக் கொள்வார். இங்கே விஷயம் என்னவென்றால், எந்த வருடம் பேசினாலும் அது எல்பி ரெக்கார்டோ இல்லை சிடி டிவிடி புளூரே காலமோ, உங்களுடைய பேச்சு  மட்டும் அதேவிதமான மனித விரோத தேய்சலாக மட்டுமே இருக்கிறது என்பதுதான் நான் சொல்ல வருவது.

The whole India was burning red during the Hindu Muslim Riots of December 1992. I was peacefully shooting for my documentary in Ramnad and adjascent muslim areas where both muslims and hindus were contributors to my Documentation.

தாயே! எதைப் பற்றிய டாக்குமெண்ட்டரி என்றே சொல்லவில்லையே!?கர்நாடக சங்கீதம் பற்றிய ஆவணப்படமா? இல்லை கரசேவை பற்றிய ஆவணப்படமா?  மெட்ராசில் ’அயோத்தி கல்லுக்காக’பிராமண மேனேஜ்மெண்டில் இருந்த பள்ளிகளில் வலுக்கட்டாயமாக நன்கொடைப் புத்தகங்கள் பிள்ளைகளின் தலையில் கட்டப்பட்டனவென்று தெரியுமா? ஒரு ரசீதை என்னிடம் நீட்டி துட்டு கேட்ட சக ஊழியரான மறைந்த கிருஷ்ணமூர்த்தியிடம் ஏன்யா உங்குளுக்குலாம் திமுகக்காரன்னு சொல்லிக்க வெக்கமா இல்லியா என்று கேட்டேன். என்னப்பா செய்யிறது நல்ல இஸ்கூலா இருக்கேனு சேத்தேன் இப்ப பாரு நூறு ரசீதைத் தலைல கட்டிட்டானுங்க உங்காளுங்க என்றார். ஆமாய்யா அவனுக்காகக் கல்லு சொமக்கறது நானா நீயா? எங்காளுங்கங்கிறே என்று நான் கேட்க நேர்ந்தது. 

Thankfully I belong to a region where cast is not important, religion is not important; but people were important, brain and intelligence mattered, respect to fellow human beings prevailed.

ராம்னாட் பற்றி எங்களுக்கெல்லாம் ஏதுமே தெரியாது. உங்களை குருவாக ஏற்று விஜயதசமி தினத்தன்று ’ஹரி நமோத்து சிந்தம்’ சொல்லி உங்களிடம் வகுப்பெடுத்துக் கொண்டுதான் நாங்கள் வகுப்பு வாத சாக்கடையிலிருந்து உய்ய வேண்டும் என்கிறீர்கள்.

மக்கள்தான் முக்கியம்னு சொல்லிகிட்டே சத்தமே இல்லாம கபால்னு நடுவுல brain and intelligence mattered, என்று உங்கள் பெண் சின்மயி போலவே சூடான ஆவியைக் கெளப்புறீங்களே அம்மா. அதான் தாய் எட்டடி பாஞ்சா குட்டி பதினாறடி பாயிறதோ!
Much to my surprise, the element of my father is seen in Chinmayi. 

உங்க தோப்பனார் பள்ளர் குடிசைல கூழ் குடிச்சார்னு சொன்னேள். ஆனா அவரோட பேத்தி என்ன இப்படி பேத்தறது! பிராமணப் பெருமையைப் பீத்தறது! 

She is concerned about social issues. But we are not obligated to give our opinions or observations unless we feel it to be necessary or we feel we are qualified/authorized to do so.

அப்பா ஒரு வழியா பாயிண்டைப் புடிச்சேள் மாமி. வன்மத்தை உள்ள வெச்சிக்கணும் இப்படி ஓப்பனாப் போட்டு போறவழியெல்லாம் ஒடச்சிண்டு இருக்கப்படாது. இல்லாட்டி பிரபலம்ங்கறாதாலையே இப்படி பிராபலம் பண்ணிடுவான்னு பிறாத்தியாரை சமாதானப்படுத்த சொல்றேள். உங்காத்துக் கோந்தைக்கு சித்த வாய மூடு கோந்தேனு எப்பையாச்சும் உண்மையா சொல்லொயிருக்கேளா?

இதான் மாமி எல்லாப்பிராபளத்துக்கும் காரணம். நம்பாத்துல நாம்ப ஃப்ரீயா ஷூத்ரான்னு சொல்லிக்கறா மாதிரி நம்பாத்துக் கோந்தை நெட்டுலப் பேசித்து. இந்த சில்லுண்டி இளவட்டத் தமிழா இருக்காளே அதுகள் டீக்கடைல ஒக்காந்துண்டு வடிவேலு மாதிரி பண்ற லூஸ்டாக்கையெல்லாம் அப்பிடியே இண்ட்டர்நெட்ல பண்ணித்துகள். எண்டுல நம்பாத்துக் கோந்தே கண்ணைக் கசக்கித்து அதனால அரெஸ்ட் பண்ணிட்டான்னு சொன்னா ஜீரணிக்க செத்த ஸ்ரமமாதான் இருக்கும். ஆனாலும் அதான் ரியாலிட்டி.

நீங்களே கூட சகஜமா பள்ளக்குடினு சொல்லறேள் ஏதோ பெரியவாளா இருக்கேளேன்னு அவாஅவா பெரிய மனசு பண்ணி கண்டிக்காம விடறா. இவா சொன்னது எம் மனசை நோகடிச்சுடுத்துனு எவனாச்சும் போக்கிரிப்பய இதயே ஒரு இஷ்யுவா ஆக்கறான்னு வெச்சுகுங்கோ, உங்க கதி என்னாறது? உங்குளுக்கோ பிராமனாளா பெரிய குடும்பத்துலப் பொறந்துட்டு இதுகள் கிட்ட சாரி கேக்கறதான்னு ஒரு இது. ஆனா ’அப்டி’ ஒண்ணு நடந்துடுத்துனா, எவ்ளோ பெரிய எடத்துல ஆளிருந்தும் யாரும் ஒதவிக்கு வரமுடியாது பாத்துக்குங்கோ. இண்டர்நேஷனல் பறையான்னு இங்கிலீஷ்ல சொல்லி சுப்ரமண்ய சுவாமி படாதபாடு பட்டரே ஞாபகம் இருக்கோல்லியோ. 

நம்பாத்துக் கோந்தையும் வாய வெச்சுண்டு சும்மா இருக்காம அவாளை மாட்டுச்சாணின்றது.உங்காம் எங்காம் டியூஷனில்லே, கான்ஸ்ட்டிட்யூஷன்லையே கேரண்டீட் தாழ்த்தப்பட்டவாளைப் போயி ‘ஸோகால்ட் தாழ்த்தப்பட்டவர்கள்னு’ சொன்னா அது கான்ஸ்டிடியூஷனையே இன்சல்ட் பண்றாப்பலை ஆயிடாதோ. ஒளற்றதை எல்லாம் ஒளறிட்டு அப்பறம் நம்புளுக்கு சப்போர்ட்டா பேசறாவால்லாம் நம்பளவான்னு கல்யான் ராமன்டப்போயி அவ படிச்சது இங்கிலீஷ் மீடியம் அதான் தெரியாமப் பேசிடுத்துனு சொன்னா எடுபடுமோ? http://tribal.nic.in/writereaddata/linkimages/poaact989E4227472861.pdf

எப்பா ஏதோ தெரியாமப் பேசிடுத்துன்னு கோந்தையோ இல்ல அம்மாவான நீங்களோகூடஓப்பனா சாரி கேட்டுருக்கலாமே? எதோ தப்பா நடந்துடுத்துனு சமாளிஃபிகேஷனாப் போகத்தோன்றது கூட குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக்காம்பான இந்த மாமல்லன் பய செக்மேட் பண்ணினப்பறம்தான் தோன்றது இல்லையா? மன்னிப்பில்லே போலி சால்ஜாப்பு சொல்லிக்கக்கூட கல்யாண் ரானன்ங்கற பிராமணந்தான் தேவைப்படறார். ஏன் சைவப் பிள்ளைமாரான மாலன் கிட்டக்கப் போய் சொல்லி இருக்கலாமே? நம்புளுக்குக்காக ஞாநிகிட்ட லா பாயிண்டெல்லாம் கேட்டரே. நேரா ஞாநியண்டையே கேக்காம ஞாநிக்குத் தெரியவே வராத மாதிரி எடுத்து விட்ட சாதுர்யர்னா மாலன். 
ஆனா பாருங்கோ மன்னிப்பைப் பத்தி நாமதான் என்னமா லெக்ச்சர் கொடுக்கறோம்.

சின்மயி ஆபாசமான சிம்மக்கலு சிம்மக்கல்லு சிம்முரண்டா நான் பாடினது பிரச்சனையே இல்லை. அதைக்கூட நம்பாத்துக்கொழந்தை நன்னாதான் பாடி இருக்கு. 

அது என் தொழில் இது என் கருத்துன்னு நேர்மையா சொல்றதை விட்டுட்டு, நிர்மலா கொற்றவைகிட்ட, எவ்ளோ ஆபாசப் பாட்டுங்களை நான் பாடாம விட்டுருக்கேன்னு தெரியுமா? இதெல்லாத்தையும் நாங்க பெருசு பண்றதிலேன்னு சொல்லிட்டு இப்படி ஆபாசமாப் பாடி இருக்கறதை மறச்சதுதான் அல்பத்தனம். அந்த நேரத்து ஆர்க்க்யூமெண்டை ஜெயிக்கறதுக்காக, மனசறிஞ்ச ஆதாரம் இருந்தும்  எதிராளியை அடிக்கிறதுக்காக அதை மறைச்சு பண்ற மோடிமஸ்தான் வித்தை. இதுல எதுக்கு வாய்க்கு வாய் நாங்க இப்படி நாங்க அப்படின்னு சுயபுராணம் சொல்லிண்டாறது? 

இண்டலெக்ச்சுவலா காட்டிக்க வேண்டிய அவஸ்தை இல்லாத ஜோதிலட்சுமி ஜெயமாலினி சிலுக்கு டிஸ்கோல்லாம் நம்பளைவிட எவ்வளவோ மேல் மாமி. தயவுசெஞ்சு புரிஞ்சிக்கொங்கோ.


CHAPTER    II 
OFFENCES OF ATROCITIES 
3. (1) Whoever, not being a member of a Scheduled Caste or a Scheduled Tribe,-

(x) intentionally insults or intimidates with intent to humiliate a member of 
a  Scheduled Caste or a Scheduled Tribe in any place within public view; 

ஆனா ஆன்மீகம் அன்பு அமைதி பிரார்த்தனைனு பிளாக் போஸ்ட்டா எழுதித்தள்ற நாம்பதான் ஈரைப் பேனாக்கிப் பேனைப் பெருமாளாக்கிட்டோம். ராஜன் வசம்மா மாட்டலைன்னு, ஜோக்கடிக்கிற நெனப்புல தத்துப்பித்தூனு ஒளறி, வந்து மாட்டின சரவணப் பெருமாளைப் பேனாக்கி ராஜனையும் சேத்து நசுக்கிட்டோம் இல்லியா? இருந்தாலும் நியாயமாப் பாத்தா, இணையத்து தலித்தெல்லாம் ஸோக்கால்டு “தாழ்த்தப்பட்டவர்கள்”னு நம்பாத்துக் கோந்தை பேசினதைப் போகட்டும்னு பெரிய மனசோட பேசாம  சும்மா விட்ருக்கா. 

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே 
நாவினாற் சுட்ட வடு?

இது உங்காத்துக்கு மட்டுந்தான் எழுதிவெச்சுட்டுப் போனானோ வள்ளுவன்?

நம்பாத்துக்கோந்த மேல பேசிவெச்சிருக்கே அதுக்கு என்ன அர்த்தம்? அது ஆரையும் சுடலேன்னு கேரண்டியா தெரியுமா? இல்லை அவனுக்கெல்லாம் சுட்றதுங்கறது பிராமணாளுக்கு சுடறதுக்கு சமமாங்கற நெனப்பா? ஒருத்தனும் இங்க தூங்கிண்டு கெடக்கலை அதை மட்டும் நெனவுல வெச்சுக்குங்கோ மாமி.

நீங்க கம்ப்ளெய்ண்ட் குடுத்தேள்னு தெரிஞ்சதும் ஏதோ சின்னப்பொண்ணு தெரியாமப் பேசிடுத்து போட்டும்னு அதுவரைக்கும் ஃப்ரீயாவிட்டவன், 5.40am - 20 May 2011ல பேசினதை ஞாபகம் வெச்சுண்ட்ருந்து  21 Oct 2012ல வந்து , ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டத்தாப்பாள்னு கேள்விக்குறிய ரெண்ட்ரெண்டா  போட்டு நன்னா நாக்கப் புடுங்கிக்கறா மாதிரி கேக்கறான் பாருங்கோ.
இண்டர்நெட்டுங்கறது பப்ளிக் ப்ளேஸ். இங்க ஒவ்வொர்த்தர் ஒவ்வொரு மாதிரி இருப்பா. நாம்ப பிரபலம் நாம்ப பொம்மணாட்டி அதனால நாம்ப என்னவும் பேசலாம். ஆனா நம்பள மட்டும் யாரும் எதுவும் பேசப்படாதுன்னு சொல்ல முடியுமோ? 

பஞ்சமஜாதிப் பசங்கள்லாம் தீண்டத்தகாதவா அவாள்ளாம் ஒட்டுண்ணினு சொன்னதை நம்பாத்துக்கோந்தே ரீட்விட் பண்ணதைப் பாக்கறவா, நம்பள மாதிரி டீசண்ட் பேக்ரவுண்ட்லேந்து வந்து நாசால வேலை செஞ்சு டாலர்ல சம்பாதிக்கறவா நமுட்டுச் சிரிபோட போய்டுவா. காரணம், நம்பாத்துப் பொண்ணு தூஷிச்சது ’அந்த’ப் பயல்களைன்னா? நம்பளமாதிரி பிராமணாளை இல்லையே.  

இதையே தெருவுல சொன்னா கேக்கறவன் தலித்தாவும் இருந்து அவனுக்கு லவலேசம் செல்ஃப் ரெஸ்பெக்ட் (நாம்ப போய் சுய மரியாதைனு எப்புடி வாய்விட்டு சொல்றது. சுய மரியாதைங்கறது, ஜெயமோகன் ரைட்டர் ’வசைபாடினு’ சொல்ற அந்த ராமசாமி நாய்க்கர் கெழம் சொன்னதாச்சே) அவனுக்கு லவலேசம் செஃப் ரெஸ்பெக்ட்டும் இருந்து அவன் நம்பாத்துக் கோந்தைய நடுத்தெருவுல வெச்சு வண்டவண்டையா திட்ட ஆரம்பிசானு வெச்சுக்குங்கோ இந்தக் கைப்புள்ளை ரைட்டர்ஸா வந்து காப்பாத்துவா?

தலித்துக்குல்லாம் போவானேன். நம்பகூடவே எல்லா எடுபிடி வேலையும் செஞ்சுண்டு ரொம்ப ஒத்தாசையா வளையவளைய வரான் நம்மாத்துப் பையன்னு ஒரு புள்ளையாண்டானைச் சொன்னேளே ஆ மாயவரத்தான். அவனையே எடுத்துக்குங்கோ கோவத்துல யாரையோ பாப்பாரக்கூனு ஷரண்கே சொன்னதுக்கு, தான் ஏதோ வாஞ்சிநாத ஐயர்ங்கற நெனப்புல சம்மனில்லாம ஆஜராகி எப்டி சுடறான் பாருங்கோ?
WHO WERE THE SHUDRAS ?
Inscribed to the Memory of
MAHATMA JOTIBA FULE (1827—1890)
 The Greatest Shudra of Modern India who made the lower classes of Hindus conscious of their slavery to the higher classes and who preached the gospel that for India social democracy was more vital than independence from foreign rule.

the Shudras were in the eyes of the Hindus the lowest of the low. This shows the nature of what might be called the problem of the Shudras. If people have no idea of the magnitude of the problem it is because they have not cared to know what the population of the Shudras is. Unfortunately, the census does not show their population separately. But there is no doubt that excluding the Untouchables the Shudras form about 75 to 80 per cent of the population of Hindus. A treatise which deals with so vast a population cannot be considered to be dealing with a trivial problem.

அம்மாவும் பொண்ணுமா இணையப்பொதுவெளியில் ஆபாசம்னு இந்த பொங்கு பொங்கறேளே. எவனோ எவனையோ சொன்னதுக்கு, உள்ள ஆயிரம் த்வேஷம் இருந்தாலும் அதை இப்பிடில்லாம் ஓப்பனாப் பேசப்படதாதுன்னு அம்மாவோ பொண்ணோ இந்த மாயவரத்தானை ஒரு வார்த்தை  ஒப்புக்காச்சும் கண்டிச்சேளோ? நமக்குக் கிடைத்தான் இலவச அடிமைனு திட்டவுட்டுட்டு வேடிக்கைனா பாத்துண்ட்ருந்தேள். நம்மாத்து ஸோரன்னு உச்சிவேற மோந்தேள் இல்லியா?
இவ்ளூண்டு பருப்புஞ்சா சாப்பட்ற நம்பாத்துப் புள்ளையாண்டானுக்கே சூத்திரக்கூனு சொல்ற அளவுக்கு இவ்ளோ குண்டிகொழுப்பு இருக்கே. கண்டதையும் திங்கற ஷரண்கே கஷ்க்கத்துக்குக் காணுவானா இந்தப்பய. யாரையோ பாப்பாரக்கூனு சொன்னதுக்கே பிராமண சுய மரியாதை பொத்துண்டு சுர்ர்னு கோபம் வற்றதே. தீண்டத்தகாதவாள்ளாம் ஒட்டுண்ணினு நான் ஈ டைரக்டர் ராஜ்மெளலி சொன்னதை நம்பாத்துக் கோந்தை ரீட்விட் பண்ணினதையும் ஸோகால்டு தாழ்த்தப்பட்டவான்னு சின்மயி 04 ஜனவரி 2011ல சொல்லி வெச்சதையும் சேத்துப் பாக்கற தலித்துக்கு எவ்ளோ கோவம் வரும்? 

மாயவரத்தான் சூத்திரக்கூனு ஷரண்கேவை சொல்லலாம். ஆனா ஸோகால்டு  தாழ்த்தப்பட்டவர்கள்னு சொன்ன நம்பாத்துக் கொழந்தைய யாரும் பாப்பாத்தினு சொல்லிட்டா ஐயையோ எல்லாரும் சேந்துண்டு எங்களைக் கொல்லவராளேனு பிலாக்கணம் வெக்கிறது சரியா? 

She is a replica of my father. Takes pains to park the car however difficult or far away it is and walks back to give a 50/- or a 100/- or even a 500/- sometimes and she gives it by holding it in her hand and bending humbly asks them to take it.

கழுகார் ஆந்தையார் மாதிரி காட்சிய தத்ரூபமா கண்முன்னால என்னமா காட்டறேள். பக்கத்துல இருந்து பாக்கறா மாதிரியேன்னா இருக்கு. ஆனா மாமி இதுக்குல்லாம் என்ன ஆதாரம்னு சூத்திர துஷ்டாள் கேப்பாளே.

நம்பாத்துக் கொழந்தையோட பவ்யத்தை இண்டஸ்ட்ரி ஓஹோன்னு புகழ்றதைக் கேட்டிருக்கேன். சாதாரணமா எல்லாரோடையும் சகஜமா பழக மாட்டா. செம கர்வினு சொல்லிக்கறாளே. ஓப்பன் ஹால்ல ஒக்கார்ரவா யாரு ஸ்பெஷல் கேபின்ல   ஒக்கார்ரவா யாருன்னு ஷ்ரூடா பாத்துண்டுதான் ஹலோவோ இல்லை தலையசைப்போவே கெடைக்குமாமே. கணக்குவழக்கோடதான் சிரிக்கவே செய்வாளாமே. இந்த ரூமருக்கும் she gives it by holding it in her hand and bending humbly asks them to take it. எங்கிறதுக்கும் என்ன பெரிய வித்தியாசம்? நீங்க விட்டது பாசிட்டிவ். நான் கேள்விப்பட்டது நெகடிவ். ஆனா ரெண்டுமே ஆதரமில்லாத புருடாதான். 

அறம் அறம்னு வாய்க்குவாய் ஜெயமோகன் அடிச்சிக்கிறதே எங்க நம்பளண்ட அறம் இல்லேங்கறது வெளிய தெரிஞ்சிடுமோங்கற குற்றவுணர்வுலதான். 

சும்மாக் கெடறா சொங்கி, எல்லார் பொவுஷும் எச்சத்தால் அறியப்படும்னு சும்மாவா சொன்னான் வள்ளுவன்.

Action speaks louder than wordsனு பாபா ஆம்தே அடிக்கடி சொல்லுவர்.

இதனாலதான் எவனைப் பத்தி எவன் சொன்னாங்கறதுக்கு நான் முக்கியத்துவம் குடுக்கறதேயில்லை.நீ யாரு உங்க முப்பாட்டன் யாருங்கறாதெல்லாம் யாருக்கு வேணும். நீ என்ன பேசினே நீ என்ன செஞ்சேங்கற ரெக்கார்டை வெச்சு மட்டும்தான் மனுஷாளை நான் ஜட்ஜ் பண்றது.

She is a very genuine girl but like her grandpa, she does not take crap or nonsense. Cast, language or region or religion as a barrier or source of verbal, mental or physical violence repels her.

தன் கண்ணுக்குத்தெரியறா மாதிரியே  தம் பொண்ணை லோகமும் பாக்கணும்னு தயானவள் ஆசைப்படறதுல தப்பேயில்லை. repels லாம் ஆகவே வேண்டாம். சும்மாவே அச்சு அசலா உங்களை மாதிரியே தையா தக்கான்னு குதிக்க ஆரம்பிச்சுடறதை எத்தனை தடவை ட்விட்டர்ல பாத்துருக்கோம். யூ வாண்ட்டு ஒன் சாம்பிளு?
எவனோ எதையோ எங்கையோ பேசிண்டு போறான்னு இருந்தாதான் மாமி பிரபலம். சினிமாக்காராளதான் சாதாரணவா தேடிப்போய் பாப்பா. ஒருத்தனைத் தடை பண்ணி எள்ளும் தண்ணியும் விட்டப்பறமும் நம்பாத்துக் கோந்தை ஏன் நம்பளப்பத்தி யார் என்ன பேசிண்ட்ருக்கான்னு தேடித்தேடிப்போய் பாக்கறது? 

ஒரு விஷயத்தை சமூகத்துல நாலு பேர் நாலுவிதமாதான் பாப்பன். எல்லரும் நம்பள மாதிரியே பாக்கணும்னு எல்லார் கபாலத்தையும் தெறந்து ஆப்பரேட் பண்ணிண்டா இருக்க முடியும்? மெச்சூரிட்டிங்கறது என்ன? சைடால போற சாரப்பாம்புமேலப்போய்  எகிறி குதிக்கிறதா? நம்பகிட்ட எவனாச்சும் வந்து வாலாட்டினானா போடு மண்டைலையே ஒண்ணு அதோட அவன் வாய்தெறக்கப்படாது. போதாக்கொறைக்கு எவனாச்சும் ஒன்னு பேசினா அதை ஒன்னுக்கு ரெண்டா நாலா ஊதிப் பெருக்கி ஒப்பாரி வெக்கறது நன்னாவா இருக்கு? தாரைத்தப்பட்டையை வெச்சுண்டு யாராவுது யாரையாவுது கொல்ல முடியுமோ அதைத் தனி கட்டுரையில பாப்போம்.

சதீஷ் குமார் I think u r out of control னு சொன்னா நம்பாத்துக்கொழந்தே psyco/out of control சைக்கோன்னு சுக்குமி லகுதி ப்பிலியெல்லாம் சேத்துக்கறது பாருங்கோ. அந்தப் பையன் பாவம் தொலைஞ்சான். கும்பலோட கோவிந்தாவா அவனையும் தேடி கேடி லிஸ்ட்டுல சேத்து ர்ர்ர்ர்ர்ரவுண்டப்பண்ணி சைபர் கிரைம்ல சேத்துடுவேளே.

இந்த பிராசாந்துங்கறாவரு உங்க டார்ச்சர் தாங்காமதான் அடுத்த நாளே கட்சி மாறி ராஜன் பக்கம் போயிட்டாரா? சொந்த அஜெண்டாவான சூத்திரர் எதிர்ப்பை மறைக்க புடவைத் தலைப்புக்குப் பின்னாடி மறைஞ்சிண்டு வாலிவதம் செய்ய எல்லாரும் மாயவரத்தானா இருப்பாளா என்ன? 

அதெப்படிங்க அம்மாவும் பொண்ணும் கற்பனைல பின்றீங்க. இப்பிடியே இவன் கன்னைவ் பண்ணினான் அவன் கன்னைவ் பண்ணினான்னு எந்த அதாரமும் இல்லாம சொல்லிகிட்டே போனா இருக்கற ஐபிசி செக்‌ஷன் காணுமா?. அரபு நாட்டுலேந்து புது செக்‌ஷன்களைக் கடன் வாங்கி ஊர்ல இருக்கறவன் கையைக் காலை வாங்கினாதான் அம்மாவுக்கும் பொண்ணுக்கும் அமைதி கிடைக்குமா?

யாராவுது எங்கையாவுது பதில் பேச முடியாம உங்களைக் கார்னர் பண்ணிட்டான்னா அவ்ளதான் புதுசுபுதுசா ராக்கெட் விட ஆரம்பிச்சுடுவீங்களா? உங்க மகள் விட்ட ராக்கெட்டு.
இது என்னங்க புதுசா ஆசிட் அடிப்பேன்னு சொன்னாங்கற கதை? யார் சொன்னாங்க? ஆசிட்ட காட்டுன்னு சொல்லலை. அட்லீஸ்ட் இது சொல்லப்பட்ட ஸ்கிரீன் ஷாட்டையாவுது காட்டுங்க?

இது ரொம்ப சீரியஸ் மேட்டருங்க நீங்க புகார் கொடுத்த ஆறு பேர்ல இதைச் சொன்ன கயவன் யார்? ஏழாவுது ஆளா? அப்பிடின்னா அவன் மேல ஏன் கேஸ் குடுக்கலை? கடலை போடலாம்னு சொன்னவனுக்கு பத்து நாள் சிறைவாசம். வேலை போச்சு. மானம் மரியாதை போச்சு. ஆனா ஆசிட் அடிப்பேன்னு சொன்னவன் பத்தின எந்தத் தகவலும் கிடையாது. என் பிளாகுல எழுதி இருக்கேன்னு ஒரு உளுவுளாயிதான் பதிலா. சதீஷ்குமார் சொல்லாத சைக்கோ மாதிரியே இந்த ஆசிட் மேட்டரும் கற்பனையா? அப்பிடின்னா நீங்க நெஜமாவே சைக்கோதானான்னு நீங்களே கேட்டுகிட்டா நெறைய குடும்பம் உங்க சூனியத்துலேந்து தப்பிக்கும்.

விக்குதா இல்லையாங்கறது ரெண்டாம் பட்சம். இதை புத்தகமாப் போட்டு  முதல்வருக்கு ஒரு காப்பி சைபர் கிரைம் கமிஷனருக்கு ஒரு காப்பி குடுத்தாதான் பல குடும்பங்கள் உங்களாலையும் உங்க மகளாலையும் சின்னாபின்னமாகிறதைத் தடுக்க முடியும். அதுக்காகவாவது இதைப் புத்தகமாகக் கொண்டுவருவது என் தலையாய கடமை.

யாரும் எதுவும் பேசாம உங்க ரெண்டு பேருக்கும் கோவிந்தா கோவிந்தானு சொல்லிண்டே இருந்தாதான் இண்டர்நெட்ல இருக்க முடியும்னா இது என்ன பொதுவெளியா இல்ல ஹிட்லர் நடத்தின கான்ஸண்ட்ரேஷன் கேம்ப்பா?

ஒருத்தன் எங்கையாச்சும் என்னிக்காச்சும் ஈயக் கொன்னியா டேய் கொசுவை அடிச்சியான்னு சொன்னான்னா அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வெச்சுண்டு இவன் நம்பளைத்தான் சொல்றான். இவனை ர்ர்ர்ர்ர்ரவுண்டப் பண்ணி உள்ள தள்றது எப்பிடின்னு அம்மாவும் பொண்ணுமா ரூம் போட்டு யோசிச்சிண்டே பிரார்த்தனைபண்ண ஆரம்பிச்சுடுவேள் போல இருக்கே.

அவ்ள ஏன் மாமி உங்குளுக்கு வராத கோவமா? சும்மாவே எள்ளும் கொள்ளும் வெடிக்கறா மாதிரிதான் பேசறேள்னு  நீங்க ஆரோடல்லாம் ஃபோன்ல பேசினேளோ அத்தனைபேருமே சொல்றா. யார் பேசரதையும் காதுல வாங்கிக்காம நீங்க பேசறதையே பேசிண்டு போவேளாமே?போதாக்கொறைக்கு தீப்பிழம்பா ஜ்வலிக்கற ஃபோட்டோவோட உங்க உரை ஒண்ணு இண்டர்நெட்ல சுத்தரதே கேட்டேளா?

இங்கே நான் சொல்ல வருவது உங்களுக்கும் உங்கள் மகளாருக்கும் உள்ளே எப்போதுமே இருந்துகொண்டு இருப்பது மேட்டுக்குடி பிராமண மனப்பான்மை மட்டுமே. ஊரில் உள்ளவனெல்லாம் உங்களுக்கு எடுபிடியாய் கைகட்டி வாய்பொத்தி சேவகம் செய்து கொண்டு மாயவரத்தான் போல் இருந்தால்தான் ஏற்பீர்கள். கே.எஸ்.நாகராஜன் போல தனித்துவம் உள்ள ஒருவர் இது ஏளோ தூரம் சரி என்று சிறிய ஐயத்தை எழுப்பினாலே அவன் எட்டப்பனாகிவிடுவான் இல்லையா?

பையன் என்ஜினியர் பெண்ணைக் கட்டி 25 வருடங்கள் முன்னாலேயே வேளச்சேரியில் சொந்த வீடு வாங்கி MNCயில் வேலை செய்தாலும் உங்கள் அப்பா காலத்திலிருந்து சமீபகாலம் வரை உங்கள் வீட்டு வேலைக்காரியாய் இருந்த அஞ்சலைபோல இருப்போரிடம் மட்டுமே உங்களுக்குக் கருணை சுரக்கும். இல்லையென்றால் பாடகரும் நடிகை சங்கீதா அவர்களின் கணவருமான க்ரிஷ் அவர்களைத் தாங்கள் மிரட்டியதாக அறியப்படும் பேச்சில் கொப்பளிப்பது கடுமையான வன்மமா இல்லையா?

அதைப் பேசியது நீங்கள் அல்ல என்று இதுவரை நீங்கள் எங்கும் மறுத்ததாகத் தெரியவிலை. போதாக்குறைக்கு உங்கள் மகள் சின்மயி அவர்களும் Thanks for the sound cloud ubhayam. என்று உறுதியும் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

பாடகர் க்ரிஷ் அவர்களுக்கும் இந்த ட்விட்டர் - சின்மயி விவகாரத்திற்கும் என்ன தொடர்பு என்றும் போலீஸ் விசாரணையின்போதுகூட நக்கலாக நகைத்தபடியே கேட்கப்பட்டதாக  சொல்லப்படுகிறது.

மேடம் பத்மாசினி அவர்களே! நீங்கள் பேசியதாக சொல்லப்படும் பேச்சின் ஒலிவடிவம் இணையத்தில் பல இடங்களில் காணக்கிடைத்தாலும் உங்களுக்கு அநாவசியமான தர்மசங்கடத்தைத் தரக்கூடாது என்பதனால் அதன் ஒலிவடிவம் தவிர்த்து எழுத்துவடிவம் கீழே தரப்படுகிறது. அதிலும் குறிப்பாக கிரிஷ் குறித்து ’நீங்கள்’ வெகுண்டு உச்சஸ்தாயியில் பேசுவதாக சொல்லப்படும் பகுதி மட்டுமே இந்த விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

Singer Krish Threatened by Chinmayi Mom என்று கூகுளில் தேடினால் ஓடிவருவதன் உரை வடிவம் கீழே

அதத் தூக்கல. அதத் தூக்கற அளவுக்கு வந்து நா என்ன ஏற்பாடு பண்ணனுமோ  பண்ணியாச்சு. அவள அவள அவள சும்மா விடப்போறதில்ல நானு. அந்தப் பொண்ணு அந்தப் பொண்ணு அவளோடட இருக்கற அவ வந்து க்ரிஷ்ஷுக்கு ஆடற ஆட்டம் க்ருஷ்ஷு அந்தக் கண்ணம்மா க்ருஷ்ஷோட தாத்தா க்ருஷ்ஷோடப் பாட்டி எல்லாரையும் நா கோத்தப்போட்டுத்தான் ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரவ்ண்டப் பண்ணிதான் இப்ப உள்ள போடப்போறேன். இன்க்ளூடிங் சிங்கர் க்ரிஷ். ராஜனத் தூண்டிவிட்டது பாரதி. அது எனக்குத் தெரியும். ராஜன் வந்து நான் சொல்றது அதெல்லாம் கேக்காமதான் ஆடு ஆடுனு ஆடினானா? பாரதி ஷுண்டக்கா. அவள நேராக் கொண்டுபோய் அவ அப்பாம்மாகிட்ட ஒரசி வுட்ருவ.

FRIDAY, FEBRUARY 03, 2006
Mayuri The Miracle Child or Mala the Miracle Mother? 

When Chinmayi visited Mayuri for the first time, I was on my annual observation of ten days. The second year, of the treatment of the child, Mayuri was showing definite symptoms of improvement. Mala visited the observation of mine the year after for the last three days. These ten days of my observation, I don't eat cooked food, I observe silence and do not move out of the house and even in the house within a very limited area that I move. I sleep and sit on floor on a darbha mat without pillow. I spend the time on meditation, Japa and homa. The last day as I was chanting the mantra and lying down I saw a small patch on the wall just below the ceiling. Without glasses my vision was not all that very great in a dully lighted room like the one I was using. I thought it was a wet patch because of the consecutive rains.

Mala came in the eveing. I was praying the whole day for Mala and Savitri my land lord whose son had learning disabilities. Of course Chinmayi is always my priority in prayers. I was begging my mother goddess for mercy for these two mothers and relieve them of their anxiety. As Mala sat in front of the Kalash in the puja praying in her own way quitely, I took a paper and started writing just to assure Mala that everything will be alright with the grace of Devi Ma. I wrote saying Mayuri will be just fine like a butterfly, I heard the flutter of tiny wings in the room and a butterfly came and sat on the paper! It was incredible. What I thought was a wet patch on the wall was a butterfly probably waiting the whole day to sit on the paper and endorse the statements! We both were in a state beyond expression. I thanked my Devi for so bountiful in mercy. Every time there was a test and awaiting of crucial results, Mala used to phone me up for added prayers. Mala was systematic in reporting back with the results which were always encouraging. Finally the joyous moment of declaring that Mayuri is clinically clear of the malignancy came and the child is resuming her music classes, schooling etc in Colombo and Mala back with her complete family.

இதை உங்கள் பிளாகில் படிக்க நேர்ந்தது. ஆன்மீகம் ஹோமம் பிரேயர் என்று உலக நன்மைக்காகப் சக உயிர்களின் நன்மைக்காக 2006ல் பாடுபட்டவரையா ராஜன் லீக்ஸ் இப்படி மாற்றிவிட்டான்? உண்மையிலேயே நீங்கள் கைபிடிக்கும் ஆன்மீகம் ஆஃப்ட்டர் ஆல் ஒரு ஆல் இன் ஆல் ராஜனால் நிலைகுலைந்துவிடக்கூடியதா? எனில் அது எவ்வளவு போலி அல்லது எவ்வளவு மேலோட்டமானது!ராஜன் என்ன இவ்வளவு பெரிய தாக்கம் செலுத்தக்கூடிய ஆளுமையா? இல்லை இது உங்களூக்கு உள்ளேயே இருக்கும் இரட்டை ஆளுமைப் பிரச்சனையா?

இந்த ஆன்மீகத்துக்கும் இந்த வன்மத்துக்கும் துளிகூட சம்மந்தமில்லையே எப்படி?

நீங்கள் மிரட்டியதாகச் சொல்லப்படும் ஒலியலையில் இருக்கும் ஸிங்கர் க்ரிஷ்ஷுக்கும் பாரதி கண்ணம்மா க்ரிஷ்ஷின் தாத்தா பாட்டி எல்லோரையும் ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரவுண்டப் பண்ணி உள்ளே போடும் அளவுக்கு அவர்கள் செய்த தவறுதான் என்ன?
பாடகர் க்ரிஷ் அவர்களின் ட்விட்டரைப் பார்த்தேன். அவர் பாவம் தேமேன்னு குட்மார்னிங் குட் நைட்டு ஓரிரு சமயம் பொன்மொழிகள் தான் பாடி ரிலீசாகப்போகும் படங்கள் இவற்றைத்தவிர எந்த வார்த்தையும் பேசுவதில்லையே!
நீங்கள் ஆவேசமாய்க் கூக்குரலிடும் பாரதியும் கண்ணம்மாவும் இரு தனித்தனிப் பெண்களா அல்லது பாரதி பாடிய பாரதி கண்ணம்மா போல ஒருவரா? இவரைப் பார்த்தால் நமது ஊர் பெண்போலவும் தெரியவில்லை. இவர் மீது உங்களுக்கு ஏன் இவ்வளவு காண்டு? இவரது இருப்பிடம் இவர்கள் தாய்தந்தையர் அட்ரஸ் எல்லாம் துப்பறிந்து கண்டுபிடித்து விட்டீர்களோ? இவரைக் கொண்டுபோய் நேரா அவா அப்பாம்மாவிடம் ஒரசி விட்டுருவேன் என்பது எப்படி சாத்தியம்? சமீபத்தில் சின்மயி, துப்பறியும் ஏஜென்சி ஏதும் தொடங்கி இருக்கிறாரா?

தன்னைப் பற்றி அந்தப் பெண்ணே சொல்லிக்கொள்வதைப் போல அவரது ட்விட்டுகளைப் படித்தால் ஓயாத வாயாடி என்பதற்கு மேல் கிரிமினலாக ஏதும் பாரதி கண்ணம்மா செய்திருப்பதாகத் தெரியவில்லையே. அவ்வப்போது சிங்கர் க்ரிஷ்ஷுடன் பேசுகிறார். கிருஷ்ஷுடனோ இல்லை ராஜனுடனோ ட்விட்டரில் யார் பேசுவதும் குற்றம் என்று தமிழக அரசு ஆணை ஏதும் வெளியிட்டு இருக்கிறதா?

மனம் என்பதும் அதில் உண்டாகும் உளைச்சல் என்பதும் உங்களுக்கும் உங்கள் மகள் சின்மயிக்கும் மட்டுமே இருப்பதா? இப்படியெல்லாம் உங்களைக் கேள்வி கேட்டால் மாமல்லன் எல்லாரோடு சேர்ந்து கன்னைவ் பண்ணுவதாக அர்த்தமா?

முகமற்றவர்களின் முகமாகவும் குரலற்றவர்களின் குரலாகவும் ஆன்மா மறுக்கப்பட்டவர்களின் ஆன்மாவாகவும் செயல்படுபவனே எழுத்தாளன். எழுத்தாளனாக சின்மயி விவகாரத்தில் வெளியுலகிற்குத் தெரியவராத மறுபக்கத்தின்  குரலாகவே நான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். இன்னுமொரு மாயவரத்தானாக இருக்கவேண்டும் என்று என்னிடம் எதிர்பார்க்கிறீர்களா?

பாடகர் க்ருஷ்ஷின் தாத்தா பாட்டி கூட ட்விட்டர் சமூக தளத்தில் இருக்கிறார்களா? அவர்களது ட்விட்டர் பெயர்கள் இருந்தால் கொடுங்களேன். உளவியல் ரீதியில் உங்களையும் உங்கள் மகள் சின்மயி அவர்களையும் ஆழ்ந்து படித்து புரிந்துகொள்ள முயல்வதைப் போல அவர்களது ட்விட்டுகளைப் படித்து அவர்களையும் மனோதத்துவ ரீதியாக அலசி ஆராய்ச்சி செய்ய உதவியாய் இருக்கும்.

உங்களுக்கும் சின்மயி க்ருஷ் குடும்பத்தாருக்கும் முடிச்சு போட்டு பல வதந்திகள் உலவுகின்றன. வதந்திகள் யாருக்குமே நல்லவையல்ல. எதுவும் பொதுவெளிக்கு வராதவரை அது அவரவர் தனிப்பட்ட குடும்பப் பிரச்சனை என்பதற்குரிய மரியாதையுடன் பொதுவில் பேசாமல் இருப்பதுதான் நாகரிகம்.

எல்லோரையும் ர்ர்ர்ர்ர்ரவுண்டப் பண்ணி சிறையில் தள்ளுவேன் என்று சிறைத்துறை அமைச்சர்கூட மிரட்டத் தயங்கும் அளவுக்கு ஓவெனக் கத்துகிறீர்கள்.ஏற்கெனவே இருவர் உங்கள் மகள் கொடுத்த புகாரின் காரணமாய் ஜெயிலில் போய் வாழ்வை இழந்து நிற்கிறார்கள் என்ற நிலையில் எழுத்தாளனாக எனக்கு பாடகர் க்ரிஷ்ஷின் வயதான தாத்தா பாட்டியின்மீதும் அவர்களது நல்வாழ்வு மீதும் காருண்யமும் மேலே விவாதிக்கப்பட்டு தெளிவாகியிருக்கும் உங்களது வன்மம் காரணமான கவலையும் பீடிப்பதால்தான் இதையெல்லாம் எழுதி நீங்கள் யார்? உங்களுக்கும் உங்கள் மகள் சின்மயிக்கும் உள்ளே இருந்து உண்மையில் ஆட்டிப்படைக்கும் ஆவி எது? என்று தமிழ்கூறு நல்லுலகிற்கு எடுத்துக்காட்ட வேண்டி இருக்கிறது.

க்ருஷ்ஷின் தாத்தா பாட்டி சின்மயியையோ அல்லது உங்களையோ எந்த விதமாகத் துன்புறுத்தினார்கள் என்று தெளிவு படுத்தவேண்டியது உங்கள் கடமை.

அப்புறம் ஆபாசத்தின் ஒட்டுமொத்த உருவமான ராஜன் ஷரண்கே என்கிற இரண்டு கொடூர வில்லன்களும் சின்மயி மற்றும் தங்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தியாகத்தானே புகார். அதற்காகத்தானே இருவருக்கும் பத்துப் பண்ணிரண்டு நாட்கள் சிறை நீராட்டுவிழா?

ஆன்மீக எழுத்தாளர் ஜெயமோகன்,
அர்க் குடி ஆரோக்கிய எழுத்தாளர் சாரு நிவேதிதா,
ஃப்ரெஞ்ச்சு பெண்ணிய எழுத்தாளர் ஷோபா சக்தி,
ஆவணப்பட ஆணி கவிஞர் லீனா மணிமேகலை,
சிந்தனையாளர் ரோஸாவஸந்த்,
சிந்திக்கவே இயலாத சாமான்யன் ரவி ஸ்ரீனிவாஸ்,
பார்ப்பன சாதியை மிக வெறுக்கும் மனிதாபிமானி அ,மார்க்ஸ் ஆகியோர் அடங்கிய உண்மை அறியும் குழு, இந்த சின்மயி விவகாரத்தில் பாரதி, கண்னம்மா அப்புறம் க்ருஷ்ஷின் பாட்டி ஆகிய பெண்கள் எப்படி உங்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தினார்கள் என்று அறிந்துகொள்வதில்,  ஆர்வமாக உள்ளது அவர்களின் அம்பாசிடர் லேம்ப்ரெட்டாவாகத்தான் நான் கீழ்க்கண்ட கேள்விகளை உங்களிடம் கேட்கிறேன்.

க்ருஷ் அவர்களை சின்மயிக்கு மணமுடிக்க நீங்கள் அவர்கள் குடும்பத்தை அணுகியதாக சொல்லப்படுவது உண்மையா?

க்ருஷ் அவர்கள் நடிகை சங்கீதா அவர்களைக் காதலிப்பதால் இது சாத்தியமில்லை என்று உங்கள் முன்னெடுப்பு நிராகரிக்கப்பட்டதாகச் சொல்லப்படுவது உண்மையா?

அதையும் மீறி க்ருஷ்ஷின் தாய் தந்தையரை சம்மதிக்க வைத்தும் க்ருஷ்ஷோ அல்லது அவரது தாத்தா பாட்டி இருவருமே இதற்கு சம்மதிக்க மறுத்ததால்தான் அவர்கள் மீது உங்களுக்கு இப்படியான கண்மண் தெரியாத வன்மம் எனக்கூறப்படுவது உண்மையா?

ஸிங்கர் க்ருஷ்ஷு க்ருஷ்ஷோட தாத்தா க்ருஷோட பாட்டி இவர்களை என்னென செக்‌ஷனில் புக்பண்ணி ஜெயில் அடைப்பதாக இருக்கிறீர்கள்? இதில் நான்-பெயில்பிள் அஃபென்ஸாக எதைச் சேர்ப்பது என்பதை உங்கள் வக்கீலுடன் விவாதித்து விட்டீர்களா? இதற்கான போதுமான ஆதாரங்களை, க்ருஷ்ஷு மற்றும் அவரது தாத்தா பாட்டி எல்லோரும் கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து ட்விட்டர் ஃபேஸ்புக் போன்ற கொலைக் கருவிகளுடன் உங்களையும் சின்மயி அவர்களையும் கொல்ல சதித்திட்டம் தீட்டிக்கொண்டிருக்கும் ஸ்கிரீன்ஷாட்டை மாயவரத்தான் எடுத்துவிட்டாரா? இதில் செல்வேந்திரனின் ஆத்மார்த்த திருப்பணிகள் என்னென்ன?

She works very hard. And she has a good ability to handle a few things simultaneously, an avadhani.

இதை இணையம் தாண்டிய தமிழகம் மொத்தத்திற்கும் தெரிய வைக்கத்தானே இரவுபகல் பாராமல் நான் இந்த பாடுபட்டுக்கொண்டிருக்கிறேன்.

Why I wrote this long story is for people who have only hatred consuming them, who do not even know why they hate a particular thing or a person. To find out whether the buds of goodwill and affection could ever blossom in their hearts. Will they care to explore the beauties of extending goodwill, prayers, well wishes, appreciations, positive thinking and such other lovely things on earth.

மவனே தமிழ்நாட்ல இருக்கற அத்தனை பேரும் செத்தீங்கடா என்கிற ரீதியில் ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரவுண்ட்டப் பண்ணி உள்ளே தள்ளறேன் பார் என்று தொண்டை வரள கத்தும் நீங்கள் அன்பு அமைதி பற்றியெல்லாம் லெக்சர் கொடுப்பது, முழுநீள நகைச்சுவப்படம் பர்த்த பூரண திருப்தியை அளிக்கிறது அம்மா.

This is one life and only one life time. Make it worth its while. Please.

வாழ்வது ஒரு முறை இதில் எத்துனைப் பேரை சாவடிக்கிறோம் என்பதுதான் சாதனை. இதுதானே அம்மா இதன் பொருள் உங்களது யோக ஹோம பிரேயர் பாஷையில்?

Since my last mention of names is getting them worried, I am not mentioning any names or ids, but I am sure they will understand whom I meant this long post for.

கட்டாயம் பாராட்டுக்குரிய பெருந்தன்மைதான் அம்மா. பெயரைக் குறிப்பிடாவிட்டால் கடைசி நிமிடத்தில்கூட FIRஐ எப்படி வேண்டுமானாலும் இறுதியாக்கொள்ள்லாம் என்பது கூடுதல் வசதி. எதையுமே அம்மாவும் மகளும் எப்படி மல்ட்டி டாஸ்க்கிங்காகச் செய்திறீர்கள் என்பது தெளிவாகப் புரிய வைத்துள்ளீர்கள் அம்மா.

Among the 45 thousand followers, if ten people are different, it should not matter, if they are not people from our state. We both care for them that's why this post. They should be protective of their (tamil) family member. Instead using derogatory language, instigating others to get into a derogatory mode etc. are not good for us.

சேரிக்காராள்ளாம் எங்காத்துக் கரண்டைத் திருடறா என்று ட்விட்டு போடும் உங்காத்து கொழந்தைக்கும் இதே புத்திமதியைக் கூறினீர்களா அம்மா?

I Pray my Devi to enlighten them on the path of affection. ( I am not using the word love because I don't want the word to be manipulated)

மாமின்னு கூப்புடறேனேன்னு வித்தியாசமா நெனைக்காதேள். நான் கூட பிராமணன்தான். மாத்வ பிராமணன். காஸ்யப கோத்ரம். அஸ்வினி நட்சத்திரம் நாலாம் பாதம். அப்பாசைடு தாத்தாபேரு கடப்பா கிருஷ்ணாராவ் மராட்டிக்காரர். அம்மாசைடு தாத்தாபேரு கிட்ட (குள்ள) நாராய்ண் ராவ் கன்னடக்காரர். அப்பா  சக்ரபாணி ராவ் அம்மா சேது பாய். நான் சி.நரசிம்மன். கோஷாஸ்பித்திரில கொழந்த மாறிட்டதா என்னப் பத்தி ஒரு புரளி உண்டு. பாயம்மா பெத்தது பாயம்மா பெத்ததுன்னு சொல்லிண்டே முஸ்லீம் பாயம்மா பெத்ததை சேது பாயம்மா பெத்ததா மாத்திட்டாளாம். அதனாலதான் மரமாம்ச பட்சிணியா இருக்க வேண்டியவன் நரமாம்சப் பட்சிணியா ஆயிட்டேன்னு ஒரு ஸ்தலபுராணம் சொல்றது. பொறக்கும்போது எனக்கிருந்த ராவ் வாலை இந்த திராவிடக் கடங்காரா ராவிட்டா. 

எங்கம்மா 49 வயசுல விடோவாயிட்டா. 74 வயசு வரைக்கும் இருந்தா. கல்யாணம் ஆகி வந்த மொதல் நாள்லேந்து மொட்டச்சி முண்டசின்னு எம் பொண்டாட்டிய வாய்ல வறுத்து போட்டுண்டா. பாத்தேன் இந்த ரெளடிய திருத்தப் பாத்தா எம்  பொண்டட்டி மெண்டலாயிடுவா இல்லாட்டி மேல போயிடுவானு நேக்கு பயம் வந்துடுத்து. நீயா தனியா போறியா இல்லே  வரதட்சனை கேட்டுக் கொடுமை பண்றேன்னு போலீஸ்ல போயி கம்ப்ளெய்ண்ட் குடுக்கட்டுமான்னு சும்மா மெரட்டினேன். வீட்டைவிட்டு அம்மா வெளிய போயிட்டா. அண்ணா நகர்ல ரெண்டு தெருதள்ளிதான் ஒரு அவுட்டவுஸ்ல இருந்தா.பொதுவாவே ஒரு பொழுதுதான் சாப்புடுவா. மத்தியானம் எதோ வேலையா வராப்பல எங்காத்துப் பக்கம் வருவா. ஆத்துக்காரி அவுளுக்கு சாதம் பரிமாறிடுவா. வெளிய போனதும் மருமளைத் தூத்த ஆரம்ப்பிச்சுடுவா. மகன் நல்லவந்தான் இந்த சனியன் வந்துதான் இவனை மாத்திட்டான்னு ஊர்பூரா பிட்நோட்டீஸ் விநியோகிச்சே நாள் போயிடும். 

அந்த சமயத்துல ஆபீஸ்ல அகிலான்னு ஒரு மாமி எங்கிட்ட வந்து, என்ன நரசிம்மன் அம்மாவைத் தனியா விட்டுட்டேளாமே. வீட்டுக்கு வீடு வாசப்படி. வயசானவா கொஞ்சம் அப்டித்தான் இருப்பா.அதுக்காக அம்மாவை விட்டுற்றதா? எங்காத்துல எங்குளுக்குல்லாம் இல்லாத கஷ்டமான்னு கேட்டா. நாஞ்சொன்னேன் உங்காத்துல ஆம்பிளைனு ஒருத்தரும் இல்லே எங்காத்துல நான் ஒருத்தன் இருக்கேனே அதான் பிரச்சனேன். அன்னிக்கி மூடினவதான் அப்பறம் தண்ணிகுடிக்கத்தான் வாயத் தெறக்கறா. 

ப்ரமோஷன் வந்து திருச்சி போறச்சே வேற வழியில்லாம அம்மாவையும் கூட்டிண்டி போனேன். உண்மைல அவ வரதட்சனையெல்லாம் கேக்கலை. காசு பணம் மேல அவ்ளுக்குப் பெரிய மோகமில்லை. 

ஆனா லோகமே தனக்கும் தன் ஒரே புள்ளையாண்டானுக்கும் எதுரா இருக்குன்னு எந்த முகூர்த்தத்துல எங்கம்மா மனசுல முடிச்சு விழுந்துதோ தெரியாது. என்னென்னிக்கோ நடந்ததை யார்யாரோ அவுளுக்கு எதுரா பண்ணினதை இதுல எவ்ளோ நெஜம் எவ்ளோ இவளோட கற்பனைனு அந்த ஆண்டவனுக்குதான் தெரியும்.

வசதியான குடும்பத்துல பொறந்துட்டு, ரேஸ் கோயருக்கு வாழ்க்கப்பட்டு அவொ ஒரு சொகமும் காணலை. அந்த காலத்துல மாத்வன்னாலே பூணூல் இருக்கோ இல்லியோ கண்டிப்பா சட்ட பாக்கெட்டுலையே ரேஸ் புக் இருந்தாகணும். மொதல் ஒரு வருஷம் சந்தோஷமா இருந்தாளோ என்னவோ.  ஒரு கொழந்தை பொறந்து எட்டு மாசத்துலயே போயிடுத்து. அப்பறம் என் அவதாரம்.

பொதுவாவே அவுளுக்கு ஜனங்களைப் பிடிக்காது. அவளா போயி ஈஷிப்பா. திடீர்னு ஈஷிண்டவாளைக் கரிச்சு கொட்ட ஆரம்பிப்பொ. ஏன் ஈஷிண்டாங்கறாத்துக்கும் பெரிய காரணமில்லை. ஏன் சபிக்கறாங்கறத்துக்கும் பெரிய முகாந்திரமில்லை. நேரத்துக்குக் குளிச்சு சுத்தபத்தமா இருப்பா. இருபத்திநாலு மணிநேரமும் ஸ்வாமி நெனப்பாவே இருக்கறதால மூடிவெச்ச மோர் ஊரைத் தூக்கும். போய் தெறந்து பாத்தா புழுக்கூட்டம் குடும்பம் நடத்திண்டு இருக்கும்.  மத்தபடி மடி ஆச்சாரத்துல அஃமார்க் மாத்வாதான். நாம்பொ ஐயங்காரை விட ஒஸ்தின்னு அடிக்கடி சொல்லிப்பொ. அவொ பயித்தியமும் இல்லை. எங்காத்துல லேசா பைத்தியத்தோட ஜாடைல இருக்கறது நாந்தான். வெளியக் கெளம்பினேன்னா கண்டிப்பா குளிச்சுடுவேன். அந்த மட்டுக்கு சுத்தம். 

என்ன இருந்தாலும் அம்மா அம்மாதான் இல்லியா? அதனால எனக்கு நல்லது மட்டுமே நெனச்சவொ. எனக்கு மட்டுமே நல்லது நெனச்சவொ. 

அவளைப் பாத்து நான் கத்துண்ட ஒரு விஷயம் என்னன்னா. செத்து சுண்ணாம்பானாலும் பரவால்ல எப்பிடியான்னா  நாம்ப சந்தோஷமா இருந்துடணும். இல்லாட்டா அடுத்தவா கொஞ்சம் சந்தோஷமா இருந்துட்டாகூட நம்புளுக்குத் தாங்க முடியாது.

தேவி  கருமாரியிடம் அவள்  தன்னை முற்றாக ஒப்படைத்து வாழ்நாள் பூராவும் தெய்வங்களுக்கு கொஞ்சம்கூட ஓய்வு கொடுக்காமல் சதா உலுக்கிக் கொண்டே இருந்தாள். இதை அவள் ஆன்மீகமாக நினைத்தாள். கணவனுக்கு அவர்களுடைய தாய் தந்தையர்கள் அக்கா தங்கைகள் சூனியம் வைத்ததாக நம்பத்தொடங்கினாள். பொதுவாக ஆகாது போய்விடும் மருமகள் நாத்தனார் பிரச்சனை அவள் கண்களில் பில்லி சூனியம் தாயத்தாக பூதாகரப்பட்டிருக்க வேண்டும். பிராமண சமூகத்தில் பிறந்து மாரியாத்தா மதுரைவீரன் என்று திரிந்தவள் என் அம்மா ஒருத்தியாகத்தான் இருக்க வேண்டும். 

இதையெல்லாம் நான் வேண்டுமென்றே உங்களையும் சின்மயியையும்   விழுத்தாட்ட வேண்டும் என வக்கிரமாகவோ அல்லது என் வாதத்திற்கு வலு சேர்ப்பதற்காகவோ இதை எழுதுகிறேன் என்று தயைகூர்ந்து எண்ண வேண்டாம். மீறி நினைப்பவர்கள் தயவு செய்து 21 வயதில் நான் எழுதிய பெரியவர்கள் குறுநாவலைப் படித்துப் பார்த்துக்கொள்ளலாம்.

வயதாக ஆக மனம் எப்படி இருந்தாலும் பார்வைக்குப் பழம் போல அவள் கனிந்துகொண்டே போனாள். பார்ப்பவர்கள் எல்லாம் அவள் காலில் விழத்தொடங்கினார்கள். அவள் மெல்ல மெல்ல, திருவேற்காடு கருமாரி மாங்காடு காமாட்சி கலந்த சக்தியின் வடிவமாகவே தன்னை எண்ணிக்கொள்ளத் தொடங்கினாள்.  உலகத்தையே உய்விப்பது தனது ஆசீர்வாதம்தான் என்று நம்பத் தலைப்பட்டாள். 

தலித் மக்களுக்கான உய்வை கற்பி கலகம் செய் ஒன்றிணை என்பதிலும் அவர்களின் உய்வுக்காகப் போராடுவதை ஆன்மீக மகிழ்ச்சியாகவும் பார்த்தார் அம்பேதகர். 

ஆனால் என் அம்மாவோ தான் ’அம்மனோரு’ (மாரியம்மன்) பக்தை என்பதால் தான் மட்டுமே சரி என்றும் உலகத்தில் உள்ள அனைவருடைய வாழ்வுக்கும் தன்னிடமே தீர்வு உள்ளது என்றும் எண்ணத் தலைப்பட்டாள்.

இந்த ’ஆன்மீகம்’ அவுளுக்கு வினோதமான பழக்கத்தைக் கொடுத்தது.

காலில் விழுந்து வணங்குபவர்களை வயதில் பெரியவர்கள் ’நன்னா இரு’ என்று வாழ்த்துவார்கள் அல்லவா. அதுபோல அவளிடம் ஆசீர்வாதம் வாங்க யார் வந்து காலில் விழுந்தாலும் தவறாமல் ஒரு வாக்கியம் சொல்லுவாள்.

தேவுரு வெள்ள புத்தி கொடுலி (சாமி நல்ல புத்தியைக் கொடுக்கட்டும்)

சிக்கமன்னா என்று என் மாமா ஒருத்தன் இருந்தான். ஒரு வாழ்நாள் பரியந்தம் ஒருத்தருக்கும் தெரியாத ஒரு விஷயத்தை அவன் சர்வ சாதாரணமாகப் போட்டு உடைத்தான் பாருங்கள் அதைக்கேட்டு என் அம்மாவுக்கே சிரிப்பு வந்துவிட்டது.

தேவுரு வெள்ள புத்தி கொடுலிந்த சேது ஹேளாது நிமிகல்லா. அவுளிக கொடுலிந்த ஆவாஹாவாக ஹேளிந்தாள (சாமி நல்ல புத்தியைக் கொடுக்கட்டும் என்று சேது சொல்வது உங்களுக்கல்ல அவளுக்குக் கொடுக்கட்டும் என்று அவ்வப்போது சொல்லிக் கொள்கிறாள்)

கட்டுரையாக எழுதத்தொடங்கி சொந்தக் கதையாக முடிந்துவிட்டது.

ஆத்மார்த்தமாக எதைச்சொல்ல நினைத்தாலும் அதில் ஒவ்வொருவருக்கும் ஒரு செய்தியை கொண்டுவந்து ஆண்டவனாக வைத்துவிடுகிறான் பாருங்கள். இதுகூட  ஆன்மிகத்தின் தனிச்சிறப்புதான் இல்லையா பத்மாசினி அம்மா..