Saturday, December 8, 2012

இம்சை அரசி

இணைய குற்றங்களைத் தடுப்பதற்கான சைபர் கிரைம் என்கிற காவல்துறையில் புகார் கொடுத்துவிட்டு வந்தபிறகு, தாம் ஏன் புகார் கொடுக்க நேர்ந்தது என்பதற்கான சுய விளக்கமாக, நீல யாணை நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான சின்மயி ஸ்ரீபாதா அவர்கள், ஒரு வாரம் கழித்து, தமது வலைத்தளத்தில் தமக்கு விடப்பட்ட கொலை மிரட்டல் குறித்து எழுதியுள்ள பகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அந்த ஸ்கிரீன்ஷாட்டை சிரிக்காது படிக்குமாறு வாசகர்கள் சிறப்பாகக் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

இந்த ஒரே ஒரு ஸ்கிரீன்ஷாட்டின் பின்னால் இருக்கிறது ஒட்டுமொத்த வன்மமும் வக்கீலாய்த்தேடிக் கண்டுபிடித்த முற்போக்கு வண்டுமுருகனின் கையாலாகாத்தனங்களும். இவை என்னென்ன எப்படியெப்படி என்று பார்ப்பதே இந்த கட்டுரையின் நோக்கம். வக்கீல் வண்டுமுருகனுக்கு தனிக்கட்டுரையில் தகுந்த மரியாதை செய்யப்படும்.

சின்மயி தமது பிளாக்கில 26.10.2012ல் எழுதியிருக்கும் மேற்குறிப்பிட்டப் பகுதியின் தமிழாக்கம்:

<முதலில் நாங்கள் மார்ச் மாதம் சைபர் கிரைமுக்குச் சென்றோம்.> 

ஏன்?

<கச்சேரி ஒன்றுக்காக நான் கோயம்பத்தூருக்கு வருவதாக ட்விட் செய்தேன்>

@VG_S Vijayayagopalswami சின்னாத்தா 18ம் தேதி கோயம்முத்தூருக்கு பாட வருதாம்டோவ். சங்கு சேகண்டி தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கட்டும். ம்ம்ம் கெளப்புங்கள்.

*சின்னாத்தா என்பது எனக்குக் (இவர்களால்) கொடுக்கப்பட்ட பட்டப்பெயர்

<இதிலிருந்து (இவர்களின்) உரையாடல் ”இவள் இனி எப்போதும் எங்கேயும் பாடக்கூடாது” என்பதாகத் தொடர்ந்தது.>

இவ்வளவு வன்மத்துடன் உங்கள் தொழிலுக்கே உலை வைக்கும் இந்த வார்த்தைகளைப் பேசியவன் யார்? அந்த ட்விட்டின் ஸ்கிரீன்ஷாட் எங்கே? தேடமுடியவில்லையா? அல்லது கிடைக்கவில்லையா? இல்லை,அப்படியொரு ஸ்கிரீன்ஷாட் இல்லவே இல்லையா? இல்லையெனில் ஆன்மீகமும் வன்மமும் கட்டுரையில் விவாதிக்கப்பட்டதுபோல, சின்மயி நீங்கள் கட்டுக்கோப்பில் இல்லை என்று சதீஷ்குமார் சொன்னால், அதோடுகூட சொந்தமாக நீங்களாக சேர்த்துக்கொண்ட “சைக்கோ” என்று என்னைச் சொன்னாய் போல இதுவும் உங்களது சொந்த சாகித்தியமா? அல்லது “ஒருவன் சொல்கிறான் எங்கம்மாவை யூஸ் பண்ணிக்கோ என்று. இன்னொருவன் சொல்கிறான் ஆசிட் ஊற்றுவேன் என்று” என நீங்களாக சேர்த்துக்கொண்டதைப் போன்றதா? கையாலாகாத பெண்கள் கண்ணைக் கசக்குவார்கள். என்ன இருந்தாலும் நீங்கள் ஒரு கம்பெனிக்கு சிஇஓ இல்லையா அடுத்தவர்கள் கண்களை உங்கள் பொய்க்குட்டையால் கட்டி விடுகிறீர்கள்.

<இது போன்ற ஒரு ட்விட்டைப் பார்த்தபிறகு, இவர்கள் பேச்சு விளையாட்டா இல்லை விபரீதமா என்று எங்களுக்குத் தெரியவில்லை.>

அடடே உங்களுக்கு சந்தேகமெல்லாம் கூட வருமோ. தமிழ் ட்விட்டர்கள் பிளாகர்கள் ஃபேஸ்புக்காரர்கள் எல்லோருமே உங்களுக்கு எதிரிகள்  பொறுக்கிகள் என்றல்லவா தவறாக எண்ணி விட்டோம்! மன்னிக்கவும் மகமாயி..

<ஆம், இது விளையாட்டுப் பேச்சுதான்.>

ஆகா நீங்களும்தான் எவ்வளவு நியாயஸ்தர்! 

<ஆனால் ஒருவேளை இது விபரீதப் பேச்சாக இருந்தால் என்ன செய்வது? >

நியாயமான சந்தேகம்தான்.

<நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கு ஏதேனும் தொல்லை விளைந்தால் என்ன பண்ணுவது?>

அதுவும் நியாயமான கவலைதான். 

<நாங்கள் போலீசின் உதவியை நாடினோம் அதே சமயம் யாரையும் பழிவாங்குவது எங்கள் நோக்கமல்ல என்றும் கூறினோம்.> 

புல்லரிக்கிறது சின்மயி. நீங்கள் இவ்வளவு நல்லவர் என்று தெரியாமல் போய்விட்டதே. அப்படியெனில் இது என்ன?
இது உண்மையா விளையாட்டா?

அது சரி மார்ச்சில் விளையாட்டாய்த் தோன்றிய அதே ட்விட்டு, ஏழே மாதங்களில் கடந்த அக்டோபர் 18ஆம் தேதி எப்படியம்மா கொலை வெறித் தாக்குதலாக மாறிவிட்டது? 

18ஆம் தேதி இதே ட்விட்டைதான் போலீசில் கொலை முயற்சிக்கான முகாந்திரமாய்க் கொடுத்து இருக்கிறீர்கள்.

22 அக்டோபர் இரண்டு பேர் பெயில் கிடைக்காமல் பத்துப்பன்னிரண்டு நாட்கள் உள்ளே செல்ல முக்கியக் காரணமாக இருந்ததும் இதே ட்விட்தான்.

26ஆம் தேதி உங்கள் பிளாகில் மனம் முழுக்கக் கருணை சுரப்பதுபோல மார்ச்சில் இருந்ததாய் ஏன் இந்த கபட நாடகம்?

நீங்கள் போலீசில் கொடுத்த புகாரில் இதே ட்விட்டை எப்படி ஆங்கிலத்தில் வன்மத்துடன் மொழிபெயர்த்துக் கொடுத்திருக்கிறீர்கள் என்று பார்க்கலாமா?


@VG_S Vijaygopalswami: Chimayi is coming to Coimbatore on 18th to sing in a concert. Keep the funeral instrument ready

26ஆம் தேதி உங்கள் பிளாகில் ஆங்கிலத்தில்தானே எழுதுகிறீர்கள்? போலீசில் கொடுத்த இந்த  funeral instrument வார்த்தைகளை ஏன் எழுதவில்லை சின்மயி? 

இம்சை அரசன் 23வது புலிகேசி படத்தில் வடிவேலு பேசும் இந்த வசனத்தைப்போய் போலீசில் புகாராய் கொடுத்திருக்கிறார்கள் பார் இந்தக் காமெடிப் பீசுகள் என்று ஊரே சிரிக்கும் என்பதால் இந்த funeral instrumentஐத் பிளாகில் தவிர்த்து விட்டீர்கள் சரியா சின்மயி?

ஆனால் அடுத்து பிளாகில் என்ன எழுதி இருக்கிறீர்கள்?

<இதிலிருந்து (இவர்களின்) உரையாடல் ”இவள் இனி எப்போதும் எங்கேயும் பாடக்கூடாது” என்பதாகத் தொடர்ந்தது.> 

இதை ஏன் சின்மயி போலீஸில் கொடுக்கவில்லை? ஆதாரம் காட்ட ஏதுமில்லையா? அல்லது இந்த பாவப்பட்ட VIP அல்லாத சாதாரணர்கள் இப்படி ஒன்றைச் சொல்லவே இல்லையா? 

ஆனால் மார்ச் மாதம் போலீசுக்குப் போனபோதே, 

<ஆம், இது விளையாட்டுப் பேச்சுதான்.> <ஆனால் ஒருவேளை இது விபரீதப் பேச்சாக இருந்தால் என்னா செய்வது?> <நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கு ஏதேனும் தொல்லை விளைந்தால் என்ன பண்ணுவது?> 

என்று மார்ச் மாதத்தில் சாதாரணமாக உங்களுக்கு எந்த ஊறும் நேரவாய்ப்பில்லை என்று நம்பினாலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களூக்கு ஒருவேளை இடையூறு விளைக்கக்கூடிய வார்த்தைகளாகத் தோற்றமளித்த அதே ட்விட்டு, அக்டோபரில் எப்படி சின்மயி  funeral instrument ஆகத் தோன்றுகிறது? 

ஏனென்றால் அப்போதுதானே, இபிகோ பிரிவு 506 ஐக் கொண்டுவர முடியும்! 

Section 506. Punishment for criminal intimidation http://www.vakilno1.com/bareacts/indianpenalcode/s506.htm

Whoever commits, the offence of criminal intimidation shall be punished with imprison­ment of either description for a term which may extend to two years, or with fine, or with both;

If threat be to cause death or grievous hurt, etc.—And if the threat be to cause death or grievous hurt, or to cause the destruction of any property by fire, or to cause an offence punishable with death or 1[imprisonment for life], or with imprisonment for a term which may extend to seven years, or to impute, unchastity to a woman, shall be punished with imprison­ment of either description for a term which may extend to seven years, or with fine, or with both.

CLASSIFICATION OF OFFENCE
Para I
Punishment—Imprisonment for 2 years, or fine, or both—Non-cognizable-Bailable—Triable by any Magistrate—Compoundable by the person intimidated.
Para II
Punishment—Imprisonment for 7 years, or fine, or both—Non-cognizable—Bailable—Triable by Magistrate of the first class—Non-compoundable.

இவற்றில் cognizable - Non-cognizable என்றால் என்ன? http://en.wikipedia.org/wiki/Cognizable_offence

As defined by first schedule of Code of Criminal Procedure in criminal justice system of India, a cognizable offence is a criminal offence in which the police is empowered to register an FIR, investigate, and arrest an accused without a court issued warrant.[1]

A non-cognizable offence is an offence in which police can neither register an FIR, investigate, nor effect arrest without the express permission or directions from the court. [2][3]

Compoundable offence and non Compoundable offence http://www.law4thepeoples.com/?page_id=134
Compoundable offence

Compoundable offences are those which can be compromised by the parties to the dispute. The permission of the court is not necessary. When an offence is compounded, the party, who has been aggrieved by the offence, is compensated for his grievance. Suppose your car accidentally hits a person on the road and he is injured. Though you may be guilty of rash and negligent driving, you can settle the matter by paying some money to the victim.

non compoundable offence
no compromise is allowed

offences having following charecterstics are known as non compoundable -
1. offences affecting entire society along with private parties.
2.parties cant compromise after filling petition .i mean complain or petition cant be withdrawn.
3. trial cant be stopped and continued till come to verdict .

வடிவேலு பேசும் இம்சை அரசன் 23வது புலிகேசி திரைப்பட காமெடி வசனம்
அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா? ம்ம்ம் கிளப்புங்கள். என்று 39ஆவது நொடியில் வருவதைப் பாருங்கள்.

சின்மயியாலேயே அது வெறும் ஜோக்கு என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட விஜயகோபால்சாமியின் தாரை தப்பட்டை வசனம் அதுவும் மார்ச் 18ஆம் தேதியில் நடந்த கோயமுத்தூர் நிகழ்ச்சியோடு காலாவதியாகிப்போன ஸ்கிரீன்ஷாட், அக்டோபர் மாதம் ஏன்  உயிர்த்து எழுகிறது? 

funeral instrumentஆகப் புகாரில் கொடுக்கப்பட்டிருந்தாலும் பாருங்கள் சின்மயி இது பெயில் கிடைக்கக் கூடிய குற்றம்தான். ஆனால் மெய்நிகர் உலகில் இணையத்தில் நடந்த குற்றத்திற்கு மெய்யுலகின் 506 ( i ) யின் கீழ் குற்றமாகப் பதியப்படுவதற்குக் காரணம் நீங்கள் போலீஸ்துறையின் மேலிடத்தில் கொடுத்த அழுத்தமன்றி வேறு என்ன? 

நீங்கள் அழுத்தம் கொடுத்ததிலோ அல்லது போலீஸ் இதற்குத் தீவிரமாய் அதீத துரிதமாய் நடவடிக்கை எடுத்ததிலோ எனக்கு ஆட்சேபணையே இல்லை. இது உலக நடப்புதான் ஆளைக் காட்டு அதற்கேற்றார்போல் சட்டத்தைச் சொல்கிறேன் என்பதுதான் யதார்த்தம்.

எனக்கு எதிரியாய் வந்தவன் ஆதாரமின்றி என்மீது அவதூறுகளைத்  துப்பினால், வராக அவதாரமெடுத்து அவன் அடிவேர்வரைத் தோண்டி அவன் பரம்பரையை வெளியில் எடுத்துவிட்டுத்தான் மறுவேலை பார்க்கும் தீய குணமுடையவன்தான் நான். இலக்கியமோ அலுவலகமோ என் ஒவ்வொரு அடிக்கும் ஆதாரம் இருக்கவேண்டும் என்பது எனக்கு நானே விதித்துக்கொண்ட சட்டம். 

சட்டம் இருப்பது நிர்வகிக்க, நிர்மூலமாக்கவல்ல. 

நீங்களும் உங்கள் தாயாரும் செய்யும் இப்படியான வன்மத் திருகல்கள் ஒருபோதும் என்னிடம் கிடையாது. நான் கார்ட்டூனிஸ்ட் பாலாவுக்கு சொல்லி பல்லி என்று உங்கள் பிளாகில் புள்ளிக்கோலம் போட்டு வைத்திருக்கிறீர்களே அதைத் தனி கட்டுரையில் பார்க்கலாம் சின்மயி. 

என் மூதாதையர்கள் ரா.ராகவ ஐயங்காரோ மூனா ராகவையங்காரோ அல்லர். 

அலுவலகத்தின் கருப்பு ரூலரைத் தூக்கிக்கொண்டு டேபிள் டேபிளாய்த் தாவி சக ஊழியனும் நண்பனுமான, இப்போது ஓய்வுபெற்று இன்னும் பாண்டிச்சேரியில் வாழ்ந்துகொண்டிருக்கும் தணிகாசலம் அவர்களை 70களில் துரத்தியவர்தான், சாகும்வரை நெற்றியில் சாந்து பொட்டு வைத்துக்கொண்டு வாழ்ந்த, சாத்வீக மாத்வரான என் தந்தை சி.கே சக்ரபாணி ராவ். 

தலித்தான தனிகாசலம் அவர்களைப் பலகாலம் கழித்து தற்செயலாய் அலுவகத்தில் என் நண்பன் முரளி மூலமாய் சந்திக்க நேர்ந்து. 

சித்தப்பா இது யார்னு தெரியுதா என்று நமுட்டலாகக் கேட்டான்.

பாத்த மொகமா தெரியிது என்று பிடிகிடைக்காமல் தயங்கினார்.

சார் நாந்தான் நரசிம்மன், சிகேசி ராவோட பையன்.

அட்டடே ராவ் சார் பையனா நீயி. உன்னைக் குழந்தையா பாத்தது. அமுல் பேபி மாதிரி இருப்ப அப்ப. தாடிகீடிலாம் வெச்சு என்ன இது? உங்கப்பாவும் நானும் ரொம்ப திக் ஃப்ரெண்ட்ஸுங்கப்பா என்று சொல்லிக் கட்டிப்பிடித்துகொண்டார். 

பெரும்பான்மையான மனிதர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுகிறவர்கள்தாம். 

கலைஞர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அநேகமாக எவருமே விதிவிலக்கில்லை.கோபத்தில் ஒருவரையொருவர் அடித்துத் துவைத்து கிழித்துக் கொள்ளலாம், ஆஃப்டர் ஆல் நாம் எல்லோரும் மனிதர்கள்.

அவ்வளவு ஏன் இதை எழுதிக்கொண்டு இருக்கையில், இடையில் குறுக்கிட்டு,  காபிக்குக் கூப்பிட்டாள் மனைவி. டைனிங் டேபிளுக்குபோய் உட்கார்ந்தவன் ஐஃபோனில் ட்விட்டரைப் பார்த்துக்கொண்டே வந்தேன்.

தொடக்கத்தில் உங்கள் ஆதரவாளராய் இருந்த, உங்கள் தாயார் மீனவன் மேட்டரில் Mamallan செய்த திருகல் அம்பலப்படுத்தப்பட வேண்டும் என்று Maamallanனுக்கு பதில் தவறான பெயரில் குறிப்பிட்டதுகூட @itisprashanth என்கிற இவரிடம்தான். உங்களின் அண்டப்புளுகுகள் கொஞ்சம் கொஞ்சமாய் அம்பலப்படத் தொடங்கியதும் 28 அக்டோபரில் அவர் போடும் ட்விட்டைப் பாருங்கள்
காபி, டேபிளுக்கு வந்திருப்பதைப் பார்த்தும் அதில் கவனம் செலுத்தாமல்  ட்விட்டர் ஃபேஸ்புக் என்று நோண்டிக்கொண்டு இருந்ததில் காலையில் ஆன்மீகமும் வன்மமும் கட்டுரைக்கு அவர் பாராட்டியதற்கு நான் நன்றி தெரிவித்து ரீட்விட் செய்ததற்கு அவர் மதியம் போட்டிருந்த ட்விட்டைப் பார்க்கநேர்ந்தது.
இதிலிருக்கும் பிரதர் என்கிற சொல், 79-80க்கு என்னை விசிறிக் கடாசிற்று. குமுதத்தில் வந்திருந்த அசோகமித்திரனின் கதையில் வரும் பிரதர் கண்முன் தெரிய 32 வருடங்களுக்கு முந்தைய காட்சிகள் விரிய கண் துளிர்த்ததை உணர முடிந்தது. மூக்குக் கண்ணாடியின் தடுப்பையும் தாண்டி கலங்குவதைப் பார்த்து எதிரிலிருந்த மனைவி கலவரப்படுவதை அறிந்தாலும் அவளைப் பார்ப்பதைத் தவிர்த்தேன். கீழ்க்காணுவதை ட்விட்டரில் எழுதி இடம் காணாது ட்விட்லாங்கருக்குக் கொண்டுபோய் ஒட்டி சரிபார்க்கத் தொடங்கினேன். நீர் திரண்டு எநேரமும் உருளலாம் என்கிற தருணம், இந்த வயதில் இவன் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டால் மிஞ்சிய நாட்களுக்கு சங்கூதி விடுவானோ என்பதுபோல் அவள் பயத்துடன் பார்ப்பது தெரிந்தது. 

நான் 17/2 பீட்டர்ஸ் காலனிக்கு எப்போதோ போய்விட்டிருந்தேன் என்பது அவளுக்கு என்ன தெரியும்? ஞாநி வீட்டு ஜன்னலின் வெளிப்புறம் பத்மாவின் அண்ணன், மாரடைப்பில் மறைந்த வைத்தியநாதன் உட்கார்ந்திருப்பதும் அவர் அசோகமித்திரனின் அந்தக் கதையைப் பற்றி மனம்விட்டு சிரித்தபடி சிலாகித்துக் கொண்டிருபதும், சில நாட்களில் ஞாநியைத் திரும்ணம் முடிக்கும் முன் பத்மா இருந்த புதுத்தெரு வீட்டில் பார்க்க நேர்ந்த அவளது இன்னொரு அண்ணன் நட்ராஜும் அந்தக் கதை பற்றியே செம க்ளாஸ்யா என்று அரற்றிக் கொண்டிருந்ததும் சிலநாள் கழித்து சந்திக்க நேர்ந்த அசோகமித்திரனிடம் அந்தக் கதை பற்றி வரிவரியாக நான் விதந்தோதத் தொடங்கியபோது அவர் கூச்சத்தில் லேசாய் நெளிந்தபடி ஆமா இந்தக் கதைக்கு நெறைய லெட்டர் வந்துத்துன்னு **** சொன்னார். தியாகராஜன் இனிமே இப்டி ஹ்யூமரஸா  எழுதப் பாருங்கோ. சீக்கிரம் நன்னா வந்துருவேள்னு  தோள்ல தட்டிக்குடுத்தார் என்றார்.

நான் ஆவேசத்தில் பொங்கிவிட்டேன். காரணம் அமியின் தோளில் தட்டியவர் சினிமா பிட்டு வம்புகள் எழுதிக்கொண்டு இருந்தவர். கிளுகிளுப்பை மட்டுமே அடிபடையாகக் கொண்ட அவரது எழுத்து அமியின் கால் சுண்டுவிரல் தூசுக்குக் கூட சமானமாகாது. 

என்ன அசோகமித்திரன் என்ன அசோகமித்திரன் என்று பொங்கிக்கொண்டு இருந்த என்னை அசோகமித்திரன் அமைதிப்படுத்தினார். 

ஸீ.அவருக்கும் கதை புடிச்சிருக்குங்கறதுதான் அடிப்படை விஷயம். உங்குளுக்கு லிட்டரேச்சர் தெரியும்கறதால நுணுக்கங்களோட விஸ்தாரமா பேசறேள். அவருக்குத் தெரிஞ்ச விதத்துல அவர் பாராட்டறார். பாவம் இப்படி ஒருத்தன் அல்லாடிண்டு இருக்கானே இவனும் நன்னா இருக்கட்டுமேனு எதோ நல்ல வார்த்தை சொல்லி இருக்கார். இதுல அவர் மேல கோபப்பட என்ன இருக்கு?எடுத்ததுக்கெல்லாம் இப்படி இமோஷனலா ரியாக்ட் பண்ணிண்ட்ருந்தா நம்ப ஒடம்புதான் கெட்டுப்போகும். 

இன்றுகூட எனக்கு அந்த குமுதத்தில் சினிமா பிட்டு எழுதிக்கொண்டிருந்த ஜந்து அசோகமித்திரனுக்குப் பண்ணியது அவமானம் என்றே என் அடிமனதில் தங்கி இருக்கிறது. 

இவையெல்லாம் நிமிடங்களில் புயலாய் மோதியறைந்து ஊற்றுப் பீறிட விளிம்புதாண்டி கன்னத்தில் வழிந்தது. துடைத்துக் கொண்டபடி, இந்த ட்விட்லாங்கரை ட்விட்டர் ஃபேஸ்புக் கூகுள்+இல் போட்டுவிட்டு மனைவியிடம் நாக்குழற இதைப் படித்துக் காட்டினேன்.
கலைஞன் ஆவேசத்தால் ஆன பிண்டம். அது ஒரு போதும் கன்னைவ் பண்ணாது ஆனால் தர்மத்தின் ஒவ்வொரு அடியும் மூர்க்கமாகத்தான் விழும் என்பதை உங்கள் அம்மாவுக்குப் புரிய வையுங்கள்.

அசோகமித்திரனைப் பாராட்டினால் என்ன கிடைக்கும் மாலனைக் காக்காய் பிடித்தால் என்ன லாபம் கல்யான் ராமன் பற்றிய விமர்சனத்தை கதுப்போரம் அதக்கிக்கொண்டால் காரவானில் நம் கதை மொழிபெயர்ப்பாக வெளிவருமா என்கிற கணக்கு வழக்குக் கருமாந்திரங்களுக்கெல்லாம் என் கபாலத்தில் இடமில்லை. 

பிராபல்ய ஏணியில் ஏற முற்படுவோர்தான் அக்கம்பக்கம் பார்த்து ஏற வேண்டும் கல்லோடும் மண்ணோடும் மண்கிளப்பும் புழுதியில் பிரமிள் சொல்லிய மனப்புரவி ஓட்டுபவனுக்கு எவன் புட்டத்தையும் தலையில் ஏந்தவேண்டிய அவசியம் ஏது. பதினாறு வருடங்கள் எழுதாமலே கிடந்தவனுக்கு எவனை அனுசரித்து என்ன ஆகப்போகிறது. எழுதாத காலத்திலும் உள்ளூர எழுத்தாளனாகத்தான் இருந்துகொண்டிருந்தேன். அத்துனை உணர்ச்சிகளையும் அழித்துக்கொண்டு பிரபலத்திற்காக எல்லோர் பின்னாலும் முகர்ந்து கொண்டு போன சரித்திரத்தை சட்டைப்பயில் வைத்துக்கொண்டு வரலாற்றில் என் இடம் வரலாற்றையும் தாண்டியது என வாய்ச்சவடாலில் பிதற்றியபடி சகல சமரசப் பிணங்களையும் சுமந்து வாழ சபிக்கப்பட்டவனில்லை நான்.

மன்னிக்கவும் பாரதிராஜாபோல கொஞ்சம் இமோசனல் ஆயிட்டேன். 

ஆமாம் இதுவரை உங்கள் இணைய வாழ்க்கையில் காரியம் சாராதோர் யாரிடமேனும் சாரி கேட்டிருக்கிறீர்களா சின்மயி? 

எனக்குத்தெரிந்து நீங்கள் செய்த அனைத்துப் பிதற்றல்களுக்கும் உங்கள் அம்மா வந்து வந்து சால்ஜாப்பு சாக்குபோக்கு சொல்லிக்கொண்டு இருக்கிறார்களே தவிர அடுத்தவர் உணர்வுகளை மதித்து, ஒருவேளை இவர்களது உணர்வுகளைப் புண்படுத்தி இருப்போமோ என்று கிஞ்சித்தும் எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா சின்மயி?

நாயாவளந்தான்களின் தூப மோகத்தில் கிறங்கி கொட்டுப்பறையைக் கொலைக்கருவியாய் சித்தரித்து இப்படி சூனியம் வைத்து குடும்பங்களை ஒருபோதும் நசுப்பிக்கலாகாது சின்மயி. 

செய்கிற ஏவல்களைச் செய்துவிட்டு, உங்கள் தாயார் உலகத்துக்குக் கொடுக்கும் அறிவுரைகளை அவரது செயலோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தேவையில்லையா சின்மயி?
மேலோட்டமாய்ப் பார்த்தால் 32 வருடங்கள் முன்னால் அசோகமித்திரன் கூறியதற்கும் இம்மூன்று ட்விட்டுகளுக்கும் பெரிய வித்தியாசமில்லை. என்கிற தோற்றப்பிழை உண்டாகலாம். ஆனால் அசோகமித்திரனின் அறிவுரைக்குப் பின்னால் ஐம்பது வயதிலேயே அவருக்கு இருந்த முதிர்ச்சி 62வயதாகும் உங்கள் தாயாரிடம் எங்கே சின்மயி?

ராஜன் என்கிற அநாமதேயத்தை ஆவேசமாய் எதிர்த்து மகேஷ்மூர்த்தியிடம் பொதுவெளியில் நீங்கள் மூக்குடைபட்டதற்கு கெக்கலித்தவர்கள் முகங்களுக்கெல்லாம் ஆன்மீக அறிவுரையாக ஒட்டுப் பிளாஸ்திரி போடும்  உங்கள் தாயார் உங்கள் வீட்டின் தனியறையிலாவது உங்களுக்கு அறிவுரைத்து இருக்கிறாரா சின்மயி?சண்டைபோட உனக்கு தராதரம் கிடையாதா? நீ ஒரு நிகழ்ச்சித்தொகுப்பாளராய் விஜய் டிவியின் ‘டிடி’யைப் பார்த்து வயிறெரிந்தால் அதில் அர்த்தம் இருக்கு. டப்பிங்கில் சுசீத்ரா பாட்டில் பலர். அவர்களோடு மனதிற்குள் போட்டி போட்டால் உன் துறையில் நீ இசையரசியாகலாம். அதைவிடுத்து ஏன் இவர்களோடு போய் சரிக்கு சரியாய் மல்லுக்கட்டுகிறாய் என்று எப்போதாவது சொல்லி இருப்பார்களா?

பிராமணர்களின் இன்றைய நிலையை, அசோகமித்திரன்கூடத்தான் அவுட்லுக்கில் மூக்கு சிந்தியபடி யூதர்களோடு ஒப்பிட்டு வாங்கிக் கட்டிக்கொண்டார். அதற்காக என்னையாடா திட்டினீங்க, வாங்கடா உங்க எல்லாரையும் ர்ர்ர்ர்ரவுண்டப் பண்ணிட்டுத்தான் மறு வேலை என்று சிண்டை அவிழ்த்து சிலுப்பிக் கொண்டாரா?

இல்லை பிராமின் டுடே சபலத்துடன் சப்புக்கொட்டிக்கொண்டே வந்து நம்பளவாளுக்காக அவுட்லுக்குல அவுட்ஸ்போக்கனா அழுதவா என்று ஈஷிக்கொண்டதற்கு சற்றே விலகி நில் என்று அவர் சொன்னதாவது தெரியுமா? அசோகமித்திரனுக்கும் பாடகி பிரச்சனைக்கும் ஷோபா சத்தி போடும் தந்திர முடிச்சு

மன்னிக்கவும் சின்மயி நீங்களும் உங்க தாயாரும் போடும் புத்தர் வேடம் புத்தருக்கு அவமானம்.

நீங்கள் பொய்யைப் புனைந்து கொடுத்த அதீத அழுத்தம் காரணமாகவே, 506 ( i )ல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 

Ganesan vs State Rep.By on 21 December, 2011
Showing the contexts in which section 506 ipc appears in the document

Criminal Law Amendment Act, 1932 gives power to the State Government to declare certain offences including Section 506, I.P.C. to be cognizable and non-bailable and on issuance of the said notification the Code of Criminal Procedure, 1898 shall stand amended accordingly. 7. Section 10 of the Criminal Law Amendment Act, 1932 does not give power to the State Government to amend by a notification any part of the Criminal Procedure Code 1973. Since the Cr.P.C. of 1898 has been repealed by Section 484 of the Cr.P.C. Act, 1973 we are of the opinion that Section 10 of the Criminal Law Amendment Act, 1932 has become redundant and otiose. Hence in our opinion no notification can now be made under Section 10 of the Criminal Law Amendment Act, 1932. Any such notification is illegal for the reason given above. Hence we declare notification No. 777/VIII-9 4(2)-87, dated July 31, 1989, published in the U.P. Gazette, Extra Part 4, Section (kha), dated 2nd August, 1989 by which Section 506, I.P.C. was made cognizable and non bailable to be illegal.Section 506, I.P.C. has to be treated

shall, while such notification remains in force, be deemed to be amended accordingly. (2) The State Government may, in like manner and subject to the like conditions, and with the like effect, declare that an offence punishable under Section 188 or Section 506 of the Indian Penal Code shall be non-bailable.&quot; 13. It had also been noted that, in exercise of the powers conferred, underSection 10 of the Criminal Law Amendment Act, 1932, the Government of Tamil Nadu has issued G.O.Ms.No.S/4118-1/70, Public (S.C.), dated 03.08.1970. The relevant portion of the Government order reads as follows: &quot;In exercise of the powers conferred by sub-section (2) of section10 of the Criminal Law Amendment Act, 1932 (Central Act 23 of 1932), the Governor of Tamil Nadu hereby declares that an offence punishable under Section 188 or section 506 of theIndian Penal Code (Central Act 45 of 1860), when committed in any place in the State of Tamil Nadu shall, notwithstanding anything contained in the Code of Criminal Procedure, 1898 (Central Act 5 of 1898), be non- bailable.&quot; 14. At this juncture, we may state

been amended. Instead, the offence falling under Section 506 (i) of the Indian Penal Codehad been declared to be non-bailable, in exercise of the powers conferred under Section 10 of the Criminal Law Amendment Act, 1932. The said declaration would hold good until the same is withdrawn by the Government of Tamil Nadu, under the said Act. Therefore, in spite of the fact that the offence falling under Section 506(i) of the Indian Penal Code has been classified as bailable, in the Code of Criminal Procedure, 1973, the notification issued, under Section 10 of the Criminal Law Amendment Act, 1932, would hold good. As such, the declaration that the offence,under Section 506(i) of the Indian Penal Code, is non-bailable and cognizable shall have the necessary statutory force and the same shall have an over-riding effect over the Code of Criminal Procedure, 1973. 17. It is an admitted fact that the notification issued by the Government of Tamil Nadu, in G.O.Ms.No.S/4118-1/70, Public (S.C.), dated 03.08.1970, had not been challenged by the petitioners. The said notification has not been declared to be invalid, till date. Since

necessities of the hour and vicissitudes of time. 19. As such, unless the situation really warrants the declaration of an offence, under Section 506(i) of the Indian Penal Code, as cognizable and non- bailable, by the state Government, by exercising its power, under Section 10 of the Criminal Law Amendment Act, 1932, any such declaration would place the fundamental right of life and personal liberty in substantial peril. Thus, we are of the opinion that it is for the state Government to consider as to whether to keep the Government order in force any further or to withdraw the same. 20. In view of the above, this Court answers the reference, stating that the Government order, issued by the Government of Tamil Nadu, in G.O.Ms.No.S/4118-1/70, Public (S.C.), dated 03.08.1970, in exercise of the powers conferred, under Section 10 of the Criminal Law Amendment Act,1932, continues to be in force. Therefore, an offence committed, underSection 506(i) of the Indian Penal Code, is non-bailable in nature, as per the said Government order. 21. The Criminal Original Petition is directed to be placed before the appropriate Court, for further orders.

//Therefore, an offence committed, underSection 506(i) of the Indian Penal Code, is non-bailable in nature, as per the said Government order.//

வடிவேலுவின் காமெடி வசனத்துக்குக் காவல்துறை இவ்வளவு வன்மக் காமெடியாக நடவடிக்கை எடுக்குமா, நீங்கள் தீவிரமான அழுத்தம் கொடுத்து இருக்காவிட்டால், சொல்லுங்கள் சின்மயி. 

FIRல் நீங்கள் பொத்தாம் பொதுவாய்க் கூறி இருக்கும்,

தவறு செய்தவர்கள் கட்டாயம் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை. ஆனால் இப்படித்தான் பொய் சொல்லி அளவுமீறிய தண்டனையை வாங்கிக் கொடுப்பீர்களா.

தெலுங்கு டப்பிங்பட டயலாக் போல விவேக் பேசும் தனுஷ்படக் காமெடி போலல்லவா இருக்கிறது. சில நபர்கள் என்னைக் கொலை, வன்புணர்வு மற்றும் தாக்குவோம் என மிரட்டினார்கள்.

இவற்றுக்கெல்லாம் நீங்கள் கொடுத்து இருப்பது ஒரு டிவிட்டு.அதுவும் வடிவேலுவின் காமெடி பிட்டு.

இவையெல்லாம் உண்மையா சின்மயி? எனில் இதற்கு அடிப்படையாய் என்ன ஆதாரத்தைக் கொடுத்திருக்கிறீர்கள்? ராஜனை எப்படியாவது உள்ளே தூக்கிப்போடவேண்டும் என்பது மட்டுமே உங்கள் நோக்கம். நெஞ்சில் கொழுந்து விட்டெரிந்த வன்மம். நீங்கள் மார்ச்சில் போலீசை நாடியபோது அவர்களை ஒன்றும் செய்துவிடாதீர்கள் என்று கேட்டுக்கொண்டவர் என்று எல்லோரும் நம்ப வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள் சின்மயி?

மகேஷ்மூர்த்தி நிகழ்ச்சி நடந்தது மார்ச்சில். எனக்குச் சமமாய் ராஜன் பெயர் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் வருவதா என்கிற கண்மூடிக் கோபத்தில். மகேஷ்மூர்த்தி என்கிற பத்திரிகையாளருடன் இணையப் பொதுவெளியில் மல்லுக்கு நிற்கிறீர்கள். அவர் ராஜன் பெயரை நீக்க முடியாது என்று உறுதியாகவும் இறுதியாகவும் சொல்லிவிடுகிறார். எல்லோர் முன்னிலையிலும் ராஜனுக்கு எதிராய் போராடி மகேஷ்மூர்த்தியிடம் அசிங்கப்படுகிறீர்கள்.

#அசிங்கப்பட்டாள் சின்மயி TAG போடப்பட்டது மார்ச்சில்தான் இல்லையா? அந்தக் கோபத்தில்தான் ராஜன்மீது புகார் கொடுக்க சைபர் கிரைமுக்குப் போகிறீர்கள். இதற்கெல்லாம் எப்படியம்மா ஆக்‌ஷன் எடுப்பது இன்னும் பலமாக எதாவது எடுத்துக்கொண்டு வாருங்கள் என்று நீங்கள் திருப்பி அனுப்பப்படுகிறீர்கள். இதுதான் உண்மையில் நடந்தது ஆனால் நீங்கள் ஒட்டுமொத்தமாக உங்களை நல்லவராகக் காட்டிக்கொள்ள இப்போது நாடகம் ஆடுவதாய் இணையத் தமிழன் நம்பினால், ராஜன் தரப்பு கூறுவதுபோல இப்படியும் நடந்திருக்கலாம் என்று மற்றவர்கள் நம்பினால், அதற்கு உங்களிடம் இருக்கும் மறுப்பு என்ன? அதற்கு எதிரான உங்களது தரப்பு வாதம், ஆதாரம் என்ன்?

எதற்கெடுத்தாலும் தோசையைத் திருப்பிப் போட்டுக்கொண்டே இருப்பது, உங்களுக்கும் உங்கள் தாய்வழிக் கொள்ளுப்பாட்டனார்கள் ரா.ராகவ ஐயங்கார்களுக்கும் முனா ராகவ ஐயங்கார்களுக்கும் பெருமை சேர்க்குமா? பெடிக்ரியைக் காப்பாற்ற வேண்டியாவது குதிரை குருட்டாம் போக்கில் ஓடக்கூடாது சின்மயி.

சரி தாரை தப்படைகள் funeral Instrumentsஆ? சாவுக்கொட்டு மட்டுமேவா? ஒருவருக்கு தமிழர் கலாச்சாரம் பற்றி ஒரு எழவும் தெரியவில்லை என்பதற்காக இழவு எடுக்க தமிழ் இணையம்தானா கிடைத்தது.

நீங்களோ பரமக்குடி மறவர் சீமையைச் சேர்ந்த தமிழச்சி என்கிறீர்கள். உங்கள் அம்மா என்னடாவென்றால் என் தோப்பனார் பரமக்குடி பள்ளக்குடி குடிசைல கேழ்வரகு கஞ்சி குடிச்சவர் என்கிறார். பரமக்குடி பறை மேளம் பற்றி ஒரு ஆவணப்படம் இருக்கிறது பார்க்கலாமா சின்மயி. உங்கள் பொன்னான நேரத்தை அதிகம் எடுத்துக்கொள்ள எண்ணமில்லை. ஆறு நிமிடங்களுக்கும் குறைவான ஆவணப்படம்.
தாரை தப்பட்டை அடித்து உங்களைக் கொல்லப்பார்த்ததன் பழி ஆறுபேர் மேலும். அதில் இருவர் பத்துப்பண்ணிரண்டு நாட்கள் உள்ளேயும் போய்விட்டு வந்தாயிற்று. ஒருவர் முன் ஜாமீனில் இருக்கிறார். அமெரிக்காவில் இருக்கும் இருவரின் முகவரிகளை மாயவரத்தான் கொண்டுபோய் எக்மூரில் கொடுத்தும் ஆயிற்று. பட்டாயா போகும் வழியில் ஒரு எட்டு அமெரிக்காவுக்கும் போய் அவரே அவுட்சோர்சிங்காகக் கைதுபண்ணிக் கொண்டுவர ஏற்பாடுகள் பண்ணியாயிற்றா?

இவையெல்லாம் கிடக்கட்டும். Funeral instrumentகளான தாரை தப்பட்டைகள் கிழிய உங்களைக் கொல்லப்பார்த்த @VG_S என்கிற விஜயகோபால்சாமிக்கு ஒரு தண்டனையும் இல்லையா? புகாரில் இருக்கும் அவர் ஏன் குற்றாம்சாட்டப்பட்டவராக அக்யூஸ்ட்டு 1 லிருந்து 6 வரை எங்குமே ஃபிகராகவில்லை? நமக்கு வேண்டியது கொலைத் தாக்குதல் என்று காட்ட ஒரு ட்விட்டு. எழுதிய ஆளா முக்கியம்?

ராஜனுக்கு சாவுக்கொட்டு கொட்டத்தான் தாரைதப்பட்டைகள் மீது இத்துனை காலமாக வன்ம நெருப்பை உள்ளூர ஊதிக்கொண்டே இருந்தீர்கள். ஆனால் அது எவ்வளவு ஊதியும் அதனிடம் உங்கள் ஜம்பம் சாயவில்லை.ஒரு பொறி ஷரன்கே ரூபத்தில்,ஜோக்கடிப்பதாய் நினைத்து லூஸ்டாக்கில் வந்து உங்களிடம் மாட்டிக்கொண்டது தாரை தப்பட்டைகளைக் கொட்டி இரண்டு குடும்பங்களைப் பொசுக்கித் தொலைத்துவிட்டீர்கள். தலாய்லாமாவின் ட்விட்டுகளையெல்லாம் தயவுசெய்து இனியாவது ரிட்விட் செய்து அவரையும் அமைதியையும் அவமதிக்காதீர்கள் சின்மயி.

உங்களிடம் ஆயிரம் குறைகள் இருந்தாலும் உங்களிடம் இருக்கும் திறமை அளப்பறியது.

ஆனால் இன்று இம்சை அரசியாக இருக்கும் நீங்கள் இசை அரசி ஆவது உங்களிடம்தான் உள்ளது. முன்னதுக்கு என் கண்டணங்கள். பின்னதற்கு வாழ்த்துக்கள்.

அப்புறம் ஒரு ச்சோ ச்வீட்டான விஷயத்தைச் சொல்ல மறந்துவிட்டேன். 

தமிழகத்தின் மான்புமிகு முதல்வர் அவர்களின் நல்லாட்சி ஓராண்டு முடிந்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, கோட்டைக்கு வந்த அம்மா அவர்களை, நெஞ்சில் வைத்துப் பூஜிக்கும் அதிமுகவினர் வழிநெடுக எப்படி வரவேற்பு அளித்தனர் என்று தினமலர் வெளியிட்டு உள்ள செய்தியையும் ஒரு முறை பார்த்துவிடுங்கள்.


பொய்யின் கூன்முதுகில்
விட்டெறிந்த மண்ணுருண்டை
மோதிச் சிதறிற்று பட்டாபிஷேகம்.

மண் வளர்ந்து
கானகப் பாதையாயிற்று...

நிகழ மறுத்த அற்புதம் - பிரமிள் கவிதையின் ஒரு பகுதி. முழு கவிதை படிக்க http://www.maamallan.com/2011/02/blog-post_3141.html