Sunday, October 28, 2012

க்ஷமிக்கணும் சின்னப்பயலின் சின்னத்தனமான கேள்விகள்

ஏதோ சின்ன பொண்ணு,தெரியாம ரீட்விட் பண்ணிடுத்து. நம்பாத்துக் கொழந்தை, தானா ஒண்ணும் பப்ளிக்குல சொல்லிடலியே. யாரோ டைரக்டர் கடங்காரன் சொன்னதை ரீட்வீட் பண்ணிடுத்து.  ஃப்யூச்சர்ல பாட சான்ஸ் கெடைக்குமேன்னு ஒரு ப்ரொஃபெஷனல் சபலம். ஆருக்கும் இருக்கறதுன்னா இது. இந்த சாதாரண பிஆர் ஒர்க்கா பண்ணின ரீட்வீட் காரியத்தப்போய் பெரிய கொலைபாதகம் மாதிரி, இது வன்கொடுமை சட்டத்தின் கீழ வராதான்னு போல்ட் லெட்டர்ஸ் போட்டுண்டு கேக்கறதெல்லாம் ரொம்ப துஷ்டத்தனம். இது துஷ்டாள் நெறஞ்ச லோகம். இதுல நம்பளவாள்ளாம் பேசவேப்படாதுன்னு கோந்தைக்குத் தெரியல. பாவம் கொஞ்சம் அசடாட்டம் தத்துபித்துன்னு ராப்பகலா பேஷிட்றது. இதப்போய் ஊதி ஊதி பெருசாக்கறதெல்லாம் ரொம்ப அக்ரமம். நான்சென்ஸ். இன்சென்ஸிடிவ் ஃபெலோஸ்.

Friday, October 26, 2012

ட்விட்டு - ரீட்விட்டு - ரிவிட்டு

கீழ்வெண்மணியில் கூலி உயர்வு கேட்டுப்போராடிய 44 தலித்துகள் உயிரோடு 1968ல் எரித்துக்கொல்லப்பட்டார்கள்.

அதைப் பற்றி நிறைய பேர் எழுதி உள்ளார்கள்

Tuesday, October 23, 2012

ஒரு ஸ்கிரீன் ஷாட்டும் அதன் நோய்க்கூறுகளும்

கீழ்க்காணும் ஸ்கிரீன்ஷாட்டை, ஷோபா சக்தியின் ஃபேஸ்புக்கில் பார்க்க நேர்ந்தது. அவரிடமிருந்து இதைச் சிலர் தத்தம் சுவர்களில் பகிர்ந்துகொண்டும் இருந்தனர். 

Saturday, October 20, 2012

அறியாத முகங்களை அறிந்த முகங்கள்



இந்த வசதி எனக்கு இல்லை என்பது வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. கடந்த காலம் பற்றி இஷ்ட்டத்துக்கும் நான் அள்ளிவிட முடியாது. 

Monday, October 8, 2012

கள்ளமிரட்டல்காரன் - சிறுகதை

மதிய வெயிலும் மாடிப்படிகளும் இணைந்து பொங்கவைத்த வியர்வையை, வீட்டுக்குள் நுழைந்ததும் பாதி குளியலாய் கழுவி முரட்டுத் துண்டால் துடைத்துக்கொண்டு கைலிக்கு மாறினார். மதியத் தூக்க சோம்பலில் கதவைத்திறந்த அகண்ட மனைவி அறைக்குள்போய் கதவை மூடிக்கொண்டு கட்டிலில் அயர்ந்தார்.  

Friday, October 5, 2012

மனுஷ்ய புத்திரனின் ராயல்டி கவிதைகள்

உயிர்மை பதிப்பகத்தின் உரிமையாளரும் கவிஞருமான மனுஷ்ய புத்திரன் தமது பேஸ்புக் சுவரில், கீழ்க்காணும் இரண்டு சிறந்த கவிதைகளை சிறப்பாக எழுதியுள்ளார்.

Tuesday, October 2, 2012

இணையப்புலி

கூடங்குளம் போரட்டத்தின் பகுதியாக 29.09.2012ல் நாகர்கோவிலில் நடந்த உண்ணாநிலைப் போராராட்டத்தின் சில  படங்களை காலச்சுவடு கண்ணனின் பேஸ்புக்கில் பார்க்க நேர்ந்தது.