Friday, January 18, 2013

மோர்க்குழம்பும் வடைகறியும்

அளவுக்கு அதிகமாய் தயிர் மீந்துபோனதற்கு மறுநாள் வீடுகளில் மோர்க்குழம்பு வைக்கப்படுவதும் விற்காது தங்கிவிட்ட வடைகள் மறுநாள் கிண்டப்பட்டு வடைகறி ஆகிவிடுவதும் சகஜம்.

வீணாகிப்போக இருப்பதை விவேகத்துடன் புதிதுபோல் விநியோகிக்கும் சாமர்த்தியமாகவும் இதைப் பார்க்கலாம் அல்லது கைக்குக் கிடைத்ததைக் கிண்டி நளபாகத்துக்காகவே தவமிருந்ததுபோலவும் இதைக் காட்டிக்கொள்ளலாம்.

முன்னுரை என்கிற பெயரில் முக்கி முக்கி எப்படியாவது நல்லதாக நான்கு வார்த்தை சொல்கிற கூச்சமெல்லாம் போய் அணிந்துரை என்று அப்பட்டமாகவே அட்சதை போடுவதென்பது அமலுக்கு வந்தே பல்லாண்டுகள் ஆகிவிட்டன. 

ஆள் நடமாட்டம் அநேகமாய் அருகிவிட்ட இன்றைய புத்தகக் கண்காட்சியின், இறுதிக்குச் சற்றுமுன் கீழைக்காற்று வாயிலில், குவிந்த முஷ்டியுடன் பட்டாணியோ வேர்க்கடலையோ ரஜினி சிகரெட் போடும் ஸ்டைலில் சாப்பிட்டப்படி வீராச்சாமி இருந்ததை தொலைநோக்குப் பார்வையில் பார்க்கிற பாக்கியம் கிடைத்தது. அது போலவே உயிர்மை கடைக்குச் சற்று தொலைவில் வரும்போதே திரும்பி உட்கார்ந்திருந்த மனுஷ்ய புத்திரன் அருகில் அடக்கத்தின் உருவமாய் அமர்ந்திருந்த நர்சிம்மையும் மூவரணியாக அதை ஆக்கிக்கொண்டிருந்த அபிலாஷையும் பார்க்க நேர்ந்தது. முதலில் நரசிம் வந்து கொஞ்சம் பேசிக்கொண்டு இருந்தார். அடுத்து அபிலாஷ் வந்தார். 

எங்க புத்தகத்தையெல்லாம் கொடுத்தாலும் படிக்க மாட்டீர்கள். நாங்கள் மட்டும் நீங்கள் எழுதியதைப் படிக்க வேண்டுமா என்றார்.

நீ எங்கப்பா குடுத்தே என்றேன்.

நீங்கதான் படிக்கும் மனநிலையில் இல்லைனு சொல்லிட்டீங்களே கூட்டத்துக்கும் வரமாட்டேன் என்று மறுத்துவிட்டீர்களே என்றார்.

படிக்கவே மாட்டேன் என்பது பெரும்பாலும் உண்மை என்றாலும் பிரதானமாய்  எழுத்தாளக் கூட்டத்திடம் இருந்து தப்பிக்கப் பலவருடங்களாய் நான் கையாளும் உத்தி என்பதை பொதுவில் உடைத்துச் சொல்ல முடியுமா?

என் புத்தகம் வந்துருக்குன்னுதான் தொடர்ந்து சொல்றேனே தவிர அதை வாங்கு படினு யார் கால்லையும் விழலை. வாங்கறதும் படிக்கிறதும் அவங்கவங்க விருப்பம் என்றேன். 

தான் எழுதியது வெளிவந்திருக்கிறது என்பதைத் தெரிவிப்பது எழுத்தாளனின் உரிமை. அதை வாங்குங்கள் என்பதோ படித்துதான் தீரவேண்டும் என்பதோ அதைப்பற்றிக் கருத்து சொல்லித்தான் ஆகவேண்டும் என்று வலியுறுத்துவதோ வன்முறை என்பது என் அபிப்ராயம். இதைவிட எதிரில் அகப்படும் வாசகனை நாலு அப்பு அப்பி நம் கோபத்தைத் தணித்துக்கொள்வதில் பெரிய தப்பில்லை.

காலச்சுவடின் 25ஆவது ஆண்டு நிறைவுக்காக பில் போடும் மேசையில் வைக்கப்பட்டிருந்த தட்டில் இருந்த சாக்லேட்டை அங்கேயே எடுத்துப் பிரித்து வாயில் போட்டுக்கொண்டதைப் போன்ற சிரமத்தைக் கூடக் கொடுக்காமல், நர்சிம் ஒரு புத்தகத்தோடு வந்து என் கையில் தொங்கிக்கொண்டிருந்த கிழக்கு பையில் அதைப் போட்டார். 

நேரம் கிடைக்கும்போது படித்துப்பாருங்கள். முடிந்தால் உங்கள் கருத்தைக் கூறுங்கள் என்றார். 

உஷாராய் மையமாய் சிரித்து மட்டும் வைத்துவிட்டு, பிரமிளுக்கு என்னை ஆற்றுப்படுத்திய எழுத்தாள நண்பரைக் குறிப்பிட்டு, யாருமற்ற சமயத்தில் ”யப்பா, படிச்சிப் பாத்து நல்லா இருந்தா ஃபேஸ்புக்குல எழுது பிடிக்கலேனா பேசாம இருந்துடு” என்றார் என்பதையும் கூறினேன்.

வீட்டுக்கு வந்து பையிலிருந்து நர்சிம் கொடுத்த அவரது சாக்லேட்டைப் பிரித்தேன்.

அது என்ன றாவுகிற கண்ணோ என்னுடையது!எந்தப் புத்தகத்தைப் பிரித்தாலும் கரெக்டாகக் கண்றாவி மட்டுமே படுகிறது.
ஆண்டுகள் கணக்கில்  எவ்வளவு வயதானவராக இருந்தாலும் இது மட்டும் இணையத்தில் எழுதப்பட்டிருந்தால், இப்படிப் பொதுவில் போடாமல் தனிச் செய்தியாகக்கூடக் கூறியிருப்பேன்.

’கல்கி’ வார இதழ் என்று பார்த்ததும் செம்ம கடுப்பாகிவிட்டது. ’தனிப்பட இவரல்ல’ எனினும் இது போன்ற நிரக்‌ஷர குக்ஷிகள்தான், இலக்கிய எழுத்தாளர்களிடம் கதையும் கேட்பார்கள். சுய மரியாதையுடன், ‘எடிட் பண்ணக்கூடாது என்கிற முன் நிபந்தனை போடுவதற்காகவே’ அதை பக்கப் பிரச்சனை லே அவுட் பிரச்சனை என்று அவர்களுக்கு இருக்கும் பக்கவாதப் பிரச்சனைகளை மூடி மறைத்து, கதையை வெட்டிக் கடித்துக் குதறித் துப்புவார்கள்.

முன்னுரை எழுதுகிற அரைவாளிக்கு, அந்தப் படம் யாருடையது என்று கூடவா தெரியாது? நினைவுப்பிழை என்று ஜெயமோகன் போல ஜகா வாங்கக்கூடாது. நினைவிலிருந்து எழுது என்று எவரேனும் கையைப் பிடித்து இழுத்தார்களா? அச்சில் பதிவாகிறது என்கிற குறைந்தபட்ச பொறுப்புணர்வுகூட இல்லாமல் எஸ்.ராமகிருஷ்ணன் போல கைக்கு வந்ததை எழுதுபவர் இணையத்தில் மட்டும் இல்லாமல் பத்திரிகையில் துணையாசிரியராகவும் வேறு இருக்கிறார்.  கடும் தவம் புரிந்து ஆராய்ச்சி மேற்கொண்டு எழுதி செண்ட்ரல் ஜெயிலில் இருந்த எம்.கே.டி பாகவதரை தீராக்காதலியில் அந்தமானுக்கு அனுப்பிவைத்த, 35 வருடமாய் இலவசமாய் இலக்கிய தொண்டு செர்வீஸ் செய்துவரும் பழுத்த எழுத்தாளர் சாரு நிவேதிதா போலவே, சம்பளத்துக்கு மாரடிப்பவரும் எழுதுவது நியாயமா?

ஐயா சாமியோவ்! அம்மா மாமியோவ்! இந்த அமிர்தம் சூர்யா ஆணோ பெண்ணோ யாமறியோம் என்று நான் எழுதினால் அது எத்துனைப் பொறுப்பற்ற தனம்?

படத்தின் பெயரும் தெரியாது.
இயக்குநர் பெயரும் தவறு.
படத்தின் கதைச் சுருக்கமும் தப்பு.

படம் : ஏக் தின் பிரதிதின் http://mrinalsen.org/ek_din_pratidin.htm

இயக்குநர் : மிருனாள் சென்

படத்தின் முக்கியமான பிரச்சனையே, சுற்றியிருப்போர் அந்தப்பெண் இரவு வரவில்லை என்பதைப் பற்றிய கவலையிலிருந்து கேவலமாய்ப் பலவிதமாய்ப் பேசுவதையும் அவர்களது குடும்பமும் மதில் மேல் பூனையாய் அதை எதிர்கொள்வதையும் பற்றியது. இவர் எழுதியிருப்பது போல, அந்தப் பெண் காலையில் திரும்பி வந்ததும் “அந்த இரவுப் பிரச்சனை தடம் இன்றி மறைந்து போகும்” எனில் என்ன மயித்துக்கு இந்தப்படம் எடுக்கப்பட்டது என்று கேட்கத்தோன்றுகிறது. அவள் காலையில் வந்தபின் அவளது சொந்த குடும்பமே அவள் இரவு வராதது குறித்து அவளிடம் என்ன நடந்தது ஏன் என்று கேட்டு தெளிவு பெறாமல்,அவளது ‘நடத்தை’ சம்மந்தப்பட்டதான சந்தேகக்கண்ணோடு பார்க்கிறது என்பதுதான் படமே. 

மிருனாள் சென், கட்டுரைபோல கருத்து சொல்ல, வலிந்து ஓவராய் சுற்றுப்புறத்தாரின் வம்படி காட்சிகளிலும் குடும்பத்தார் இயல்பாய் கேட்பதற்கு அந்தப் பெண் பதில் கூறாமல் இருப்பதிலும் ஓவராய் டிராமா காட்டியிருப்பார் என்பதனால் இந்தப்படம் என்னை ஈர்க்கவில்லை என்பது வேறு விஷயம். 

ஒன்பது பகுதிகளாய் இணையத்தில் முழு படமே ஓசியில் கிடைக்கிறது http://www.youtube.com/watch?v=35DzW4hVK0w 1/9 

"யேய் நம்ம சின்மயியிடி" என்று சந்தோஷத்துடன் எதற்கு வாங்குகின்றோம். என்ன பிரச்சினைவென்று தெரியாமலேயே தீபாவளிக்கு தி.நகரில் விண்டோஷாப்பிங் செய்வதை போல மயிலாப்பூர் மாமிகள்தான் வாங்கிச் செல்கின்றார்கள்” என்று பக்கத்தில் இருந்து ஃபோட்டோ எடுத்தவர் போல விநாயக முருகன் எழுதவில்லையா http://www.facebook.com/vinayaga.murugan.7/posts/481609688541329 அதைப் போல, எந்தவித உண்மையான அக்கறையுமின்றி பெரிய கருத்து கந்தசாமியாய்த் தம்மைக் காட்டிக்கொள்ள, படத்தையே பார்க்காமல் அல்லது பார்த்திருப்பின் புரிந்து கொள்ளாது சுருட்டியவரை லாபம் என்று முன்னுரையில் சும்மா அடித்துவிட்டிருக்கிறார் கல்கியே துணை ஆசிரியர்.

யாரிந்த அமிர்தம் சூர்யா என்கிற சினிமா காவலர் என்று கூகுளில் தேடினால் , புரொஃபைலில்,
என்று சொல்லியதோடு நில்லாமல் போஸ்ட்டுக்குப் போஸ்ட்டு துணையாசிரியர் கல்கி வார இதழ் என்கிற சொந்த போர்டை தூக்கிக்கொண்டு திரிவதைக் கண்டுகளிக்க முடிந்தது.

வெகுஜன பத்திரிகையில் வேலை செய்வோர் குறைந்தபட்ச அறிவையேனும் வளர்த்துக் கொள்ளவேண்டும் என்பது கட்டாயம் இல்லை போலும். பத்திரிகையாளர் என்கிற அடையாள அட்டை இருந்தால் போதும். இவர்களைப் பிடித்துக்கொண்டு தொங்கத்தான் ஆயிரம் பேர் இருக்கிறார்களே அந்த அடிப்படைத் தகுதி போதாதா?


அது ரோகினி என்பது தெளிவாகத் தெரியாமல் போய்விட்டால்?


எந்த நிகழ்ச்சியானால்தான் என்ன?


https://plus.google.com/108551969005800638186/posts இது முழுக்கவும் இருக்கும் இவரது படங்களில் காணக்கிடைக்காத அபூர்வ காட்சி இது.

கொட்டையைப் பற்றி எழுதும் விளம்பரத்தில் ’மட்டும்’ பட்டையைப் போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம்.

”என்னைச் செதுக்க உங்க அபிப்ராயம் வேண்டும்.” என்று கேட்டு சொந்தக் காசில் சூனியம் வைத்துக்கொண்டிருக்கிறார். எனவேதான் ஏதோ என்னால் முடிந்தவரை செதிள் செதிளாய் செதுக்கிவிட்டேன்.