Monday, July 8, 2013

பாட்டும் நானே பாவமும் நானே! ஆடும் உனை நான் ஆட்டுவித்தேனே! - ஜெயமோகன்

எந்தத் தருணத்திலும் பாட்டாளி மக்கள் கட்சியை நான் ஏற்றுக்கொண்டதில்லை. அருவருப்பூட்டும் ஒரு பழமைவாதக்கும்பல் என்பதற்கு மேலாக அவர்களைப்பற்றிச் சொல்ல என்னிடம் சொற்கள் இல்லை. ஒரு நாகரீகமான சிவில்சமூகம் கடுமையாக முரண்படவேண்டிய, வெறுத்து ஒதுக்கவேண்டிய எதிர்மறைச் சக்தி அவர்கள். ஒரு நேர்மையான அரசால் ஒடுக்கி அழிக்கப்படவேண்டிய சமூகவிரோதக்கும்பல். எந்தவித அடிப்படை அறமும் இல்லாத அந்த ஒட்டுண்ணிக்கும்பலின் மிகப்பெரிய இரை வன்னிய மக்கள்தான். இன்று அவர்களே அதை புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்றே நான் நினைக்கிறேன்.


இந்தத் தளத்தில் இதற்கு முன்னரே இதே கருத்தைத்தான் எழுதியிருக்கிறேன். தமிழ் எழுத்தாளர்கள் அந்த அமைப்பின் பண்பாட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டபோது, அந்தத் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டபோது அதை வன்மையாகக் கண்டித்திருக்கிறேன். ஏன், இருபதாண்டுகளுக்கு முன்னால் அவ்வமைப்பை இங்குள்ள பெரியாரியர்களும் இடதுசாரிகளும் சிற்றிதழ் கலகக்காரர்களும் தூக்கிப்பிடித்தபோது என் வன்மையான கண்டனத்தை பதிவுசெய்து அதற்காக வசைபாடப்பட்டிருக்கிறேன்.

இப்போதுள்ள அரசியல்வாதிகளில் சமூகத்தைப்பற்றி கொஞ்சமாவது சிந்திக்கும்தன்மை கொண்டவர் ராமதாஸ் என்றே எண்ணுகிறேன்.பல சமூகப்பிரச்சினைகளை அவரன்றி பிற தமிழ் அரசியல்வாதிகளில் பலரும் புரிந்துகொள்ள மாட்டார்கள் என்றே எண்ணுகிறேன். மிகவும் பின்தங்கி நிலைத்துக்கிடந்த தருமபுரி போன்ற பல பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி ஓர் வளர்ச்சியசைவை உருவாக்கியிருக்கிறது என்றுதான் நம்புகிறேன்.

தமிழினி ஜூன் 2008 இதழில் கண்மணி குணசேகரனின் நூல்வெளியீட்டுவிழாவைப்பற்றி ஓர் அறிக்கை இருக்கிறது. அன்பழகன் எழுதியது. கண்மணி குணசேகரனின் இரு நூல்களை தமிழினி வெளியிட்டிருக்கிறது.‘நடுநாட்டுச் சொல்லகராதி’[வட்டார வழக்கு] என்ற நூலும் ‘காலடியில் குவியும் நிழல்வேளை’ என்ற முழுக்கவிதை தொகுதியும் வெளியிடப்பட்டிருக்கின்றன. இவற்றின் வெளியீட்டை பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிகழ்த்தியது. 28-6-08 அன்று. பாட்டாளி மக்கல் கட்சி தலைவர் மருத்துவர்.ராமதாஸ் அவர்கள் கலந்துகொண்டார். பழமலை தலைமைவகித்தார்.

இதைப்பற்றி நம் சூழலில் நிலவும் ஆழமான மௌனமும் வியப்புக்குரியது. இந்த மாநாடு நடந்து இரண்டுமாதம் தாண்டியிருக்கிறது. உயிர்மை,காலச்சுவடு, உயிர் எழுத்து, தீராநதி, வார்த்தை,தமிழினி என எந்த இதழும் இதில் ஏதேனும் பிரச்சினை இருப்பதாக காணவில்லை. இந்தியாவின் எந்த மூலையில் எது நடந்தாலும் குரல்கொடுக்கும் இச்சிற்றிதழ்களுக்கு இந்த விஷயம் பற்றி சொல்ல ஒன்றுமில்லை, அதாவது அவை இதை மௌனமாக அங்கீகரிக்கின்றன. இணையத்தில் எல்லா விஷயங்களுக்கும் இருபதுமடங்கு குமுறல்கள் எழுவது வழக்கம். இன்றுவரை ஒரு சிறு குறிப்பைக் கூட நான் வாசிக்க நேரவில்லை. இணையத்தில் பினாமிபேரில் தலித்துகளுக்காக அனல்கக்குபவர்கள் கூட வாய்திறக்கவில்லை. காரணம் நமது சூழலில் உண்மையான அதிகாரம் பிற்படுத்தப்பட்டோர் அரசியலில் மையம் கொண்டிருப்பதுதான். சாதிய எதிர்ப்பு என்பதெல்லாம் மேல்பூச்சுச் சொற்கள் மட்டுமே.

நானறிந்து தலித் எழுத்தாளர்கள் சிலர் மட்டுமே தங்கள் அச்சத்தைப் பதிவுசெய்திருக்கிறார்கள். இத்தகைய கூட்டமைப்புகள் மேல்பேச்சுக்கு எப்படியிருந்தாலும் அடிப்படையில் சாதிக்கட்டுமானத்தை இறுக்கவும் அதன் மூலம் தலித்துக்களுக்கு எதிரானதாக சூழலை மாற்றவுமே உதவும் என்று அவர்கள் எண்ணுவது சரியானதே. இவ்வாறு கருத்துச் சொல்ல முன்வந்த தலித் படைப்பாளிகள் தலித் எழுத்தாளர்கள் தலித் அடையாளத்துடன் அமைப்புகளாக திரண்டபோது அதில் கலந்துகொள்ளாது விலகி நின்ற படைப்பாளிகள் என்பதும் கவனத்திற்குரியது. உதாரணமாக அமிர்தம் சூர்யா போன்ற இளம்படைப்பாளிகளின் குரலை சுட்டிக்காட்டலாம்.

மருத்துவர் ராமதாஸ் அவர்களின் தமிழ்ப்பற்று, மக்கள்த் தொலைக்காட்சியின் செயல்பாடு இரண்டியிலும் மரியாதை கொண்டவன் என்பதை இங்கே சொல்லிக் கொள்கிறேன்.

‘தீண்டாமைக்கு உரிமைகோரி’ கட்டுரையில்கூடத் தெளிவாகவே சொல்லியிருக்கிறேன், எனக்கு ராமதாஸின் அரசியல் மீது நம்பிக்கை இல்லை, அவரை ஆதரித்தது இல்லை என.

இன்றைய கடும் கசப்புக்குக் காரணம் அந்த ஏமாற்றம்தான். இப்போதுகூட மிகக்கடுமையான நிலைப்பாடாக எதையும் எடுக்கக்கூடாது, கூடுமானவரை புரிந்துகொள்ளவே முயலவேண்டும் என நினைக்கிறேன். முடியவில்லை.

டைமிங்கா சவுண்டு உடற நீங்க மிகத்தேர்ந்த அரசியல்வாதினு நானும் பல காலமா சொல்லிகிட்டுவறேன் ஆனா உங்க இடமே இல்லாத இலக்கியத்துல  ஒக்காந்து நீங்களும் லொளப்பிகிட்டேதான் இருக்கீங்க, எவனெவனோ சினிமாவுக்குப் போனா என்னென்னவோ ஆகலாம்னு கனவுகாண்றான். சும்மாவா நீங்க சுக்கானை புடிச்சிருப்பீங்க? சினிமாலேந்து சீக்கிரம் அரசியலுக்கு ரூட்டு போட்டு அவனையிவனைப் புடிச்சி எப்பிடியாச்சும் எம்பி, ராஜ்ய சபா எம்ப்பியாகப் பாருங்க எதிர்காலம் பிரகாசமா இருக்கும். 

மேரா பாரத் துக்கான்!