Tuesday, August 13, 2013

வாம்மா அறச்சீற்ற அபிநய சரஸ்வதி!


//பொதுவாக என்னை நான் ஒரு மேடைப்பேச்சாளனாக முன்வைப்பதில்லை. //

எந்தப் படுக்காளிப்பய உன்னையுமொரு பேச்சாளன்னு முன்வெச்சான் சொல்லு பிச்சிப்புடறேன் பிச்சி.

//என்னுடைய குரல் மேடைப்பேச்சாளனுக்குரியதல்ல.//

பாடகருக்கு உரியதா பாஸ்?

//என் உச்சரிப்பில் பல பிசிறுகள் உண்டு.//

ஜே ஜே சில குறிப்புகளையே ஜெ ஜெ சில குறிப்புகள். ’கெ.’ கங்காதரன்னு மலையாள வாடையோடதான எழுதிகிட்டு இருந்தோம் பலகாலம். லூஸ்ல உடு.

//மேடைப்பேச்சுக்கு ஓரளவு அவசியமான நடிப்பு என்னிடம் வெளிப்படுவதில்லை.//

வாழ்க்கை ஃபுல்லாவே நடிச்சிகிட்டுதான் இருக்கே? மேடையில வேற ஏன்ங்கற அடக்கமா?


//ஆகவே மிகமிகக்குறைவாகவே நான் மேடைகளில் பேச ஒத்துக்கொள்கிறேன்.//

ஆமா டெய்லி எட்டு பேரு உன் மேடைப் பிரசங்கத்துக்கு டேட்டு கேட்டு அலையிறாங்க பாரு.

//ஆனால் ஓர் எழுத்தாளனாக என்னுடைய மேடைப்பேச்சு ஓர் அடிப்படை ஈர்ப்புடன் மட்டுமே இருக்கும்.//

ஈரு மட்டும்தான் இருக்குமா? ஈரை பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கறவந்தானே மிஸ்டர் எழுத்தாளன்? நைசா டபாய்க்கிறியே நைனா!

//இந்தியாவிலும் வெளிநாடுகளிலுமாக நான் பேசிய உரைகளைக் கேட்டவர்கள் பல ஆயிரம்பேர் இருபபர்கள்.//

மச்சி போட்ட மீட்டிங்குலாம் சீரணி அறங்கம் பேரணி அரங்கம் லெவலா என்ன? எல்லாம் எல்.எல்.ஏ பில்டிங் மீட்டிங்கு. அதுல ஆளைவிட, எத்தினி சேர் காலியா இருந்துதுனு எண்றதுதான் கஸ்ட்ம். எல்லா மீட்டிங் போட்டோவையும் கூட்டிப்பாத்தே எத்தினி ஆயிரம்னு சொல்லிடலாமே.

//இணையத்திலும் பல உரைகள் உள்ளன. சில உரைகளை ஐந்தாயிரம்பேருக்குமேல் இணையத்தில் கேட்டிருக்கிறார்கள்.//

தோடா நெட்ல லேட்டதுக்குதான் இவ்ளோ பெரிய பிட்டா? 

//என் மேடை உரைகளுக்கு என நான் சில கொள்கைகளை வைத்திருக்கிறேன். ஒன்று, அந்த குறிப்பிட்ட அரங்குக்காக பேசக்கூடாது என்பது. பேச்சாளர்கள் எப்போதும் அரங்கைக் கவனிக்கிறார்கள். அங்கே எந்தவகை பேச்சு எடுபடும் என்பதை ஊகித்து அதற்கேற்பப் பேச்சுமுறையை மாற்றிக்கொள்கிறார்கள். சில அரங்குகளில் வெறும் நகைச்சுவைக்கதைகளை மட்டுமே சொல்லிவிட்டுச்செல்வார்கள். அதை எழுத்தாளன் செய்யக்கூடாதென்றே நினைக்கிறேன். எழுத்தாளன் அப்படி மேடைக்குமேடை மாறக்கூடாது. மாறினால் அவன் எழுத்தாளனுக்குரிய அடையாளத்தை இழந்துவிடுவான்.//

ஆரம்பிக்கும்போது இன்னா சொன்னே? //பொதுவாக என்னை நான் ஒரு மேடைப்பேச்சாளனாக முன்வைப்பதில்லை. // பேச்சாளனாவே உன்னை நீ நெனைக்கிலீனா ஏன் இவ்ளோ நேரம் காய வெக்கிறே?

//இரண்டாவதாக, ஒருபோதும் பேச்சை எளிமைப்படுத்தி சுவாரசியப்படுத்திப் பேசுவதில்லை என்பது.//

எவ்ளோதான் முக்கினாலும் முக்கினது மட்டும்தான் நமக்கு சுவாரசியம். மத்தவனுக்கு சுவாரசியமா இருக்கறாப்புல ஒன்னியும் வராதுங்கறதை கொஞ்சம் ஸ்டைலா சொல்றியா?

//நான் எந்த மேடையிலானாலும் தீவிரமாகவும் செறிவாகவுமே பேசமுனைகிறேன். அதற்கான காரணம் ஒன்றுதான். //

எழுதினாலும் பேசினாலும் எப்பியுமே சுக்கா ரொட்டியாட்டம் வரட்டு வரட்டுனுதான் இருக்கும்கறதை நாசூக்கா சொல்றியா?

//தமிழ்ச்சூழலில் பெரும்பாலான பேச்சுகள் வெறும் மேடைவேடிக்கைகள். வருடக்கணக்காக அவற்றைக் கேட்டாலும்கூட புதியதாக எதையும் தெரிந்துகொள்ளமுடிவதில்லை. என் உரையும் அவற்றிலொன்றாக ஆகிவிடக்கூடாது. ஆகவே சிந்தித்து எழுதித் தயாரித்துக் கொள்ளாமல் நான் பேசுவதில்லை.//

சிந்திச்சி எழுதி தயாரிச்சி, அடேயப்பா வாயாலையே வட சுடற அப்பா டக்கராட்டம் இல்லே எப்பியும் காட்டிக்கிறே இது இன்னா புச்சா?

//என்னுடைய உரை மேடைமுன் இருக்கும் ஐநூறுபேரில் நூறுபேருக்காவது அவர்கள் அதுவரை அறியாத ஓர் உலகை, ஒரு சிந்தனைமுறையை அறிமுகம் செய்யும் என்றால் அதுதான் முக்கியம் என்று எண்ணுவேன். //

பொல்யூஷன் கண்ட்ரோல் போர்டு இல்லே கவலைப்படணும். மெஜாரிட்டி இந்துக்களுக்காகப் பேசினாலும் நான் மைனாரிட்டி சிற்றிலக்கியக்காரன்னு காட்டிக்கிறே. சினிமா டைரடக்கன்லாம் இதை எக்குதப்பா புரிஞ்சிகிட்டா தொழில் இன்னா ஆவறது. பீடி கட்டஞ்சாயா மலையாள சினிமாலதானே நாம பிசிங்கற தெகிரியம். தெலுங்கு டப்பிங் படத்துக்கு வசனம் எழுத டிரை பண்ணு. செம மாலு.

//பிறரைப்பற்றிக் கவலைப்படவேண்டியதில்லை. அவர்களின் அறிவுத்திறனும் கவனிப்புத்திறனும் மிகக் குறைவானவை.//

யாரு மீதி நானூறு பேருதா? 

//அவர்களுக்கும் எனக்கும் எப்போதும் தொடர்பு உருவாகப்போவதில்லை. //

தொடர்பு உருவாக்கிகிற ஆசைலாம் வேற இருக்கா?

//அந்த நூறுபேருக்குக்கூட ஒருவேளை உரையின் பெரும்பகுதி புரியாமல் போகலாம்.// 

இதுதான் நன்னம்பிக்கை.

//ஆனால் ஒரு ஆரம்பகட்ட திகைப்புக்குப்பின்னர் ஒரு புதிய திறப்பையும் தேடலையும் அவர்கள் அடைவார்கள்.//

உன் பேச்சு இன்னா ஹிட்ச்காக் படமா? இல்லை பிட்டு படமா? திகைப்பு - திறப்பு

//என் உரைகள் வழியாகவே நவீன இலக்கியத்தின் முதல் அறிமுகம் பெற்ற தமிழ் எழுத்தாளர்கள் இன்று உண்டு.//

யாரு? நீ போற எடத்துக்கெல்லாம் மோர்சிங் வாசிச்சுகினு உங்கூடக்கூட வரானுங்களே நிலைய வித்துவான்கள் அந்த அஞ்சாறு பேரா? 

//என் வாசகர்களில் பெரும்பாலானவர்கள் என் உரைகளின் வழியாக ஈர்க்கப்பட்டு தொடக்கத்தை அடைந்திருக்கிறார்கள்.//

எவனும் படிச்சி வரலைங்கறே. அது இன்னா தொடக்கத்தை அடைந்திருக்கிறார்கள். கிளைமாக்ஸ் வரும்போது மத்தவன் எவனோடையாச்சும் போயிடறாங்களோ?

//என் அனுபவம் என்னவென்றால் நான் வழக்கமான தீவிரத்துடன் செறிவாக கருத்துக்களைச் சொல்ல ஆரம்பிக்கும்போது சபையில் ஒரு திகைப்பு எழும். அவர்களில் பலர் நான் சொல்லும் எந்த ஆசிரியரையும் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். எந்த சிந்தனையையும் ஆரம்ப அறிமுகம்கூட செய்துகொண்டிருக்க மாட்டார்கள்.//

அடி முட்டாப்பயலானு செக் பண்ணிட்டுதான் சேர்ல ஒக்காரவே விடுவாய்ங்களோ குழும கமாண்டோக்கள்?

//ஆனால் சிலநிமிடங்களில் அவர்களில் பாதிப்பேர் கூர்ந்து கவனிக்க ஆரம்பிப்பார்கள்.//

யோவ் ஐநூறு பேர்ல நூறு பேர்னு கொஞ்சம் மின்னாடி சொன்னியில்ல அப்பிடினா 20 % தானே இப்போ கபால்னு பாதி பேர்னு சொல்லி 50 % க்கு ஆட்டையப் போடறே.

//கண்களில் ஆழ்ந்த கவனம் தெரியும்.//

மேடைல நீ இருக்கே. பாக்கற கண்னாடியோ படிக்கிற கண்ணாடியோ எம்மாந்தூரம்யா உன் பார்வை? உன்னைப் புரிஞ்சிகிட்டவன்லாம் என்ன முன்பெஞ்சு பின்பெஞ்சுனு பிரிஞ்சா ஒக்காந்துருப்பான். எஸ்.ரா மேரியே ஒனக்கும் எலாஸ்டிக் பார்வையா?கூட்டத்துல எங்கெங்கியோ ஒகாந்துருக்குறவன் கண்லலாம் ஆழ்ந்த கவனம் தெரியுமா ஒனக்கு?

//மீதிப்பேர் சிலநிமிடங்களிலே புரிந்துகொள்வதை விட்டுவிடுவார்கள். ஆனால் சபைமரியாதைக்காக பேச்சு முடிவது வரை அமர்ந்திருப்பார்கள்.//

அதாரு 50%ஆ? பரவாயில்லை முட்டாளுங்க 80 % லேந்து 50 %க்கு இப்ப வந்துட்டங்களா. எல்லாம் தமிழ் சமுதாயத்துக்கு நாயர் ஆத்துற தன்னலமில்லா சேவைதான்.

//நான் சாதாரணமாக நாற்பது நிமிடங்களுக்குமேல் பேசுவதில்லை.//

இப்புடிலாம் மன்சறிய பொய் சொல்லக்கூடாது. நாலு நிமிசத்துக்குமேல நான் பேசாமலிருப்பதில்லைனு சொல்லு ஒத்துகறேன்.

//இந்த மனப்பதிவும் பேச்சுமுறையும் என்னைக் கைவிட்டதேயில்லை. //

இதான் உன் சக்ஸஸ் ஃபார்முலாவா!

//அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் என்ற என்னுடைய மிகச்செறிவான மிக நீளமான உரை [இரண்டுமணிநேரம்] மதுரையில் நிகழ்ந்தபோது மட்டும் சிறு ஐயம் இருந்தது.//

எது அவர்தான் முதற் சிந்தனையாளரா இல்லையானா?

//அரங்கிலிருந்த கணிசமானவர்கள் துப்புரவுத்தொழிலாளர்கள்.//

நீ முற்போக்கா ஆட்டிகினு திரிஞ்சப்போ தொழிலாளர் சங்கம் எதாச்சும் கூட்டிகிட்டு வந்து சேத்த கூட்டமா?

//ஆனால் உரையாற்றியபோது ஒருமுகப்பட்ட கண்களையே கண்டேன்.//

இப்பிடிலாம் விவரிச்சா, கூட்டமே ஒன்றகண்ல பாத்த விசுவல் இல்ல கெடைக்கிது. தமிழ்ல எவனுமே இப்படி ஒரு ஷாட்டை நெனச்சிகூடப் பாத்துருக்கமாட்டான். மணிகிட்ட சொல்லு இதை ஓப்பனிங் ஷாட்டா வெச்சே ஒரு மலையாளப்படம் எடுத்துடுவாரு.

//உரை முடிந்தபின்பு வந்த எதிர்வினைகள் அவர்களில் பெரும்பாலானவர்கள் பேச்சை நுட்பமாக புரிந்துகொண்டிருப்பது தெரிந்தது.//

ஒவ்வொரு துப்புரவுத் தொழிலாளியும் வரிசைல வந்து ஃபீட்பேக் குடுத்துட்டுப் போனாய்ங்களா?

//அந்த உரைக்கு இன்றுவரை எதிர்வினைகள் வந்தபடி உள்ளன. என் மிகச்சிறந்த வாசகர்கள் பலர் அந்த உரைவழியாக வந்தவர்கள்.//

அந்த ஒரையைக் கேட்ட துப்புரவுத் தொழிலாளிகள்ல எத்தினி பேர் உன்னோட ரெகுலர் வாசகர்கள்? சும்மா எங்கியோ ஆரம்பிச்சி எங்கியோ கூட்டிகினு போயி காக்கா கண்ணாடி கதையெல்லாம் சொல்லாதே. அன்னிக்கி அவ்ளோ கவனமா உன் மலைப் பிரசங்கத்தைக் கேட்ட துப்புரவுத் தொழிலாளிகள்ல எத்தினி பேர் உன் வாசகரா ஆகியிருக்காங்க? கரீட்டா சொல்லு.

//அந்த நம்பிக்கைக்குக் கிடைத்த மிகப்பெரிய அடி என்பது சென்ற ஆகஸ்ட் எட்டாம் தேதி ஈரோட்டில் நான் ஆற்றிய உரை.//

யோவ் உனக்கு மணி நாள் கணக்குலாம் தெரியாதா? இதை நீ எழுதறது August 10, 2013 ரெண்டு நாள் மின்னாடிதான் எட்டாம் தேதி. எதோ போன வருஷம் போனமாசம் மேரி சென்ற எட்டுங்கறே! 

// நானும் உளவியலாளர் ருத்ரனும் பேசுவதாக எனக்குச் சொல்லப்பட்டிருந்தது. ருத்ரன் வரவில்லை. //

மேடையில வெச்செல்லாம் பேஷண்ட்டை ட்ரீட் பண்றதில்லேனு சொல்லிட்டாராமா?

//கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்ந்து கிட்டத்தட்ட மூன்றாயிரம்பேர் அரங்கில் கூடியிருந்தனர்.//

எல்லாரும் உன்னைக் கேக்க வந்தவங்களா மாமே?

//ஏறத்தாழ ஐம்பதுநிமிடம் நீடித்த வரவேற்புரை. பின்பு சம்பிரதாயமான இரு சிறு உரைகள். அதன்பின் ஏதோ பேச்சுப்போட்டிப்பரிசு பெற்றவர்கள் என மூவர் மேடையேறினார்கள். இருவ அரைமணிநேரம் வீதம் பேசினர். கடைசியாக பேசியவர் கிட்டத்தட்ட முக்கால்மணிநேரம்//

மீட்டிங் ஆரம்பிச்சது எத்தினி மணிக்கு நைனா? 50+5+5+30+30+45 = 2.45 மணி நேரம் கழிச்சி நீ எந்திரிச்சி டிரெய்லரும் உட்டா அவனவன் டர் ஆவாம என்னா பண்ணுவான்? 

//மூன்று பேச்சுக்களையும் முழுமுட்டாள்தனத்தின் வெளிப்பாடுகள் என்றே சொல்லவேண்டும் . தங்கள் வாழ்நாளில் ஒருநூலையாவது அவர்கள் வாசித்திருப்பார்களா என்பது ஐயமே. ஆனால் தமிழகத்தின் அதிரடி மேடைப்பேச்சாளர்களிடமிருந்து பாவனைகளை, உதடு துருத்துவதை எல்லாம் நகல் செய்தார்கள். என்ன பேசினார்கள் என்பது அவர்களுக்கே தெரிந்திருக்காகது. வெறும் சொற்கள்.//

எவனாச்சியும் கூப்புடுவானான்னு பாத்துகினே இருக்க வேண்டிது. நா அங்க ஒர போடறேன் இங்க ஒர போடரேன்னு தளத்துல வெளம்பரம் வேற. 

//எனக்கு அதிர்ச்சியாக இருந்தது அவற்றுக்கு அந்த அரங்கு அளித்த எதிர்வினைதான். ஒருவர் சொன்னார், வரலாற்றில் உலகைவென்ற முதல் மன்னன் அலக்ஸாண்டர், அதன்பிறகு உலகத்தை வென்ற ஒரே மன்னன் ராஜராஜ சோழன் என்ற தமிழன்தான்! [உச்சக்குரல், கைதூக்கல்] அதற்கு உற்சாகக் கைதட்டல் எழுந்தது. சபை கொப்பளித்தது. ஒவ்வொரு கைதட்டலும் இவ்வகை அசட்டுத்தனத்துக்குத்தான். வழிவழியாக தமிழ் மேடைப்பேச்சுக்களில் சொல்லப்படும் அச்சுபிச்சுக்க்கதைகள், நகைச்சுவைகள். அனைத்துக்கும் ஆரவாரக் கைதட்டல்கள்.//

நீ அரட்டை அரங்கம் டிவில கேட்டதில்லையா? பக்கத்தூட்டுக்காரன் கூட கொறட்டை விட முடியாது. நடத்தறவரு விசுங்கறதாலையோ என்னவோ வீச்சு வீச்சுனு கத்துங்க. அதைப் பத்தி எப்பையாச்சும் கிரிடிசைஸ் பண்ணி இருக்கியா?

//உண்மையில் அந்தக் காக்காக்கூட்டத்துக்கு முன் எழுந்து பேசத்தான் வேண்டுமா என்றுதான் நினைத்தேன்.//

அப்பால ஏன் பேசின?  நப்பாசை நட்டுகிச்சா!

//என் அரங்கு அல்ல அது.//

குழுமம்தான் உன் அரங்கு. மீறிப் பேசினா ஆள அவுட்டாக்கிவிடும் பட்டன் அரங்கசாமி கிட்டல்ல இருக்கு.

//அவர்கள் என்னைப்புரிந்துகொள்ளப் போவதில்லை.//

எப்பியுமே மத்தவந்தான் நம்பளைப் புரிஞ்சிக்கணும். நாம ஒரு நாளும் மத்தவனைப் புரினிசிக்க மாட்டோம். ஏன்னா அதான் காக்கா கூட்டமாச்சே! 

//ஆனால் பேச எழுந்தமைக்குக் காரணம் இரண்டு. ஒன்று ஸ்டாலின் குணசேகரன் என்ற தன்னலம் கருதாத மாபெரும் மக்கள்சேவையாளர் மீது எனக்கிருந்த பெருமதிப்பு.//

மெய்யாலுமே அந்தாள் மேல சாதா மரியாதை உனக்கிருந்தா இந்தப் போஸ்ட்டே போட்டுருக்க மாட்டே. அவுரு யார்னுகூட எனக்குத் தெரியாது. தளத்துல இப்புடிப் பேண்டு அந்தாள நாஸ்தி பண்ணிட்டு, அது இன்னா மாபெரும் மக்கள் சேவையாளர்னு  சாணி மேல ஒரு சாமந்தி வெக்கிற.

//இன்னொன்று, என்னதான் இருந்தாலும் தீவிரமான ஒன்றைக் கேட்கையில் பெரும்பான்மையினர் ஓரளவு அமைதிகாப்பார்கள், ஒருசாரார் புரிந்துகொள்ள முயல்வார்கள் என்ற என் வழக்கமான நம்பிக்கை//

இந்த பர்சண்டேஜ் என்ன பாஸ்? 20 % ஆர் 50 %?

//பேச ஆரம்பித்தபோதே நான் வேடிக்கையாகப் பேசப்போவதில்லை, வெற்றுக்கதைகளைச் சொல்லப்போவதில்லை, தீவிரமாகவே பேசப்போகிறேன் என்று திட்டவட்டமாகவே சொல்லிவிட்டேன்.//

நீ காட்டின ட்ரெய்லர்லியே அவனவனுக்கும் பீதில பேதி ஆரம்பிச்சிருக்குமே.

//வழக்கமாக அது அரங்கில் உடனடியாக ஒரு கவனத்தை உருவாக்கும்.//

பேதி டெக்னிக்? பேட்டண்ட் பதிவு செஞ்சாச்சா?

//ஆனால் நேர் மாறாக ஈரோட்டில் அது நிகழவில்லை.//

அமாவாசையோ பெளர்ணமியோ எல்லா நாளும் வராது. 15 நாள் கேப்பு உட்டுதான் பாஸ் வரும்.

//பேச ஆரம்பித்த முதல் இரண்டு நிமிடங்களுக்குள்ளாகவே ஒவ்வொருவராக எழுது என் கண்முன்னாலேயே கலைந்துசெல்ல ஆரம்பித்தனர்.//

பாஸ் பொதுவா மேடை செவுத்தோரமாதான் போடுவாய்ங்க. செவுத்துக்குதான் பேச்சாளர் புட்டத்தைக் காட்டிகிட்டு நின்னாவணும். எதுர்ல இருக்கற ஜனம் எழுந்து போனா பேச்சாளன் கண்ணெதுரதான் அது நடந்தாவணும். இதைப் போய் பெரிய்ய மேட்டராட்டம் சொல்றியே!

//மழைத்தூறல் விழுந்ததும் காரணம் என்று பின்னர் சொன்னார்கள்.//

அதெல்லாம் சும்மா மரியாதைக்கு உன் மனசு புண்படக்கூடாதேன்னு மாபெரும் மக்கள் சேவையாளர் சொன்ன பொய். உளூளாயி. நம்பாதே மழைலாம் இல்லை. உலகத்துல எது நடந்தாலும் உனக்காகவே நடக்கும்போது இது மட்டும் எப்பிடி மழைக்காக நடக்கும், எழுந்து போன எல்லாரும் உனக்காகதான் எழுந்து போனாங்கன்னு கான்ஃபிடெண்டா இரு.

 //ஆனால் மேடையில் இருந்த என்னால் மழையை பார்க்கமுடியவில்லை.//

மேல கொட்டா போட்டிருந்துதா பாஸ்? மெரினா பீச்சுல ஜீசஸ் கால்ஸ் தினகரன் மீட்டிங்போல, ஆரம்பிக்கும்போது மூவா...யிரம்னு பில்டப் குடுத்தே. பெரிய கல்யாணச் சத்திரமாட்டம் இருக்கு.

//நான் தொழில்முறைப் பேச்சாளன் அல்ல.// 

ஆமா பாஸ் நீ தொழில் முறை ஆனா பேச்சாளன் இல்லைதான்

//என்னைக் கவனிக்கும் கண்களை நோக்கியே என்னால் பேசமுடியும். //

பேசறதுக்குக் கண்ணை நோக்கியே ஆகணும். யாருமில்லாம மாடில ஏக்ஜாடா எழுதித் தள்றதுக்கு தொகில்முறை எகுத்தாளனுக்குதான் எதையுமேப் பாக்காம எலுத முடியும்?:

//சபையில் கவனம் இல்லையேல் உடனே பேச்சு நின்றும் விடும்.//

நீ ஃப்ளூட் மாலி ரேஞ்சுங்கறே! 


//என்னை கவனிக்கும் சிலரை மட்டுமே கவனித்தபடி நான் சொல்லநினைப்பதைச் சொல்லமுயன்றேன்.//

அந்த சிலர் யாரு பாஸ்? ஏன் நம்ம வாத்திய விருந்தா, நாஞ்சில் நாடன், தேவதேவன், யுவன், வசந்த குமார்,  அரங்க சாமி எல்லாரும் ஒட்டுக்கா அவங்க டேட்ஸ் இல்லைனுட்டாங்களா?

//ஆனால் சத்தம்போட்டு பேசி கூச்சலிட்டுக் கலைந்துசென்றபடியே இருந்த கூட்டத்தை நோக்கி ஒருமுகப்பட்டுப் பேச என்னால் முடியவில்லை.//

பின்ன இப்புடி கலவரம் பண்ணாத குறையா ’கண்ணெதுர்ல’ கூட்டம் கலஞ்சி போனா ரோபோவா இருந்தாக்கூட அழுக்காச்சி வராம என்ன செய்யும்?

//நான் நினைத்திருந்த எதுவும் வளரவில்லை. நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு தயாரித்துவைத்திருந்த உரையை இருபது நிமிடங்களுக்குள் வெறும் முன்வரைவாக பேசிமுடித்தேன். அதற்குள் 90 சதவீத அரங்கும் காலியாகிவிட்டிருந்தது.//

பாட்டு சீன்ல தம்மடிக்கப் போறாமேரி, தன்மானமுள்ள தமிழன்லாம் உன்னிய வெறுப்பேத்தவே இனி கூட்டமா வந்து ஒக்காந்து கும்பல் கும்பலா எந்திரிச்சி வெளிய போவானே அதை நெனச்சா எனக்கு இப்பியே அழுக்காச்சி வருது.

//என் இதுவரையிலான அனுபவத்தில் நான் பேசிய ஏழெட்டு தேசத்து அரங்குகளில் மிகமிகக் உதாசீனமான அரங்கு ஈரோட்டில் சந்தித்ததுதான். //

இன்னாது உதைக்கிற சீன்லாம் வேற, அரங்குல வேணுமா?

//அவர்களை குஷிப்படுத்த என்னால் முடியவில்லை.//

ஒவ்வொருத்தர் கிட்டையா போயி உருவி விட்டா எப்பிடி பாஸ் குசியாவாம இருப்பாங்க. நேரத்துக்குத் தகுந்தப்புல நைசா உருவறதுல நமக்கோ ஏகப்பட்ட முன்னனுபவம் இருக்கு. நாம ஆளான ரூட்டே அதான பாஸ்.

//அவர்கள் தங்களைக் குஷிப்படுத்தாத எதையும் கேட்கத் தயாராகவும் இல்லை.//

நீ தயாரா? இல்லை நான்தான் தயாரா? நம்பளைக் குசிப்படுத்தாத எதையும் நாம என்னிக்காச்சும் செஞ்சிருக்கமா இல்லை கேட்டிருக்கமா மேன்? துக்கப்பட்டு டிப்ரஃசன்ல மெண்டலாகிறதுக்கு எவனாச்சும் மெனக்கெடுவானா? பெரிய லொத்தை சிந்தனையாளன்னு வேற உன்னிய சொல்லிக்கிற. 

//உண்மையில் ஈரோட்டில் நான் அவமதிக்கப்பட்டேன். எனக்கு அத்தகைய அவமதிப்பு அதுவே முதல்முறை.//

எதிர்காலம் நிறைய வைத்துள்ளது கவலையே படவேண்டாம்.

//என்ன காரணம் என யோசித்தேன்.//

பொதுவா எதுக்கெடுத்தாலும் சிந்திக்கிறது தானே உன் வழக்கம். இது  என்ன யோசிக்கிற புதுப்பழக்கம்.

//மிகமிக அடித்தட்டு மக்களிடையே நான் தீவிரமாகப் பேசியிருக்கிறேன். //

அவிங்க கேக்கும்போது பீரங்கிகளோட சுத்தி ராணுவம் நின்னுகிட்டு இருந்திருக்கும்.

//அதிகமாகத் தமிழ் உரைகளையே கேட்காத மலேசியாவின் கல்வியமைப்புகளில் பேசியிருக்கிறேன். அங்கெல்லாம் கவனக்குறைவைக் காணநேர்ந்ததில்லை. அவமதிப்பையும் உணர்ந்ததில்லை.//

வடிவேலு போனா இதே மலேசியா கல்வியமைப்புகள் செம களைகட்டி இருக்கும். 

//ஈரோடு மிக அதிகமாகச் சொற்பொழிவுகள் நிகழும் இடம் என்பதுதான் காரணம் என்றார்கள்.// 

உன் ஒத்தத் தலைவலியை ஏன்யா எங்குளுக்கு டிரான்பர் பண்றே. எதோ ஒரு நாளு உப்புமா ஊசிப்போச்சினு ஈசியா உடுவியா?

//தொடர்ந்து சொற்பொழிவுகளைக் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இன்றைய தமிழ்ச் சொற்பொழிவுகளுக்குரிய நையாண்டி, குட்டிக்கதை பாணிக்கு மிகவும் பழகிவிட்டிருக்கிறார்கள். ஆகவேதான் சொற்பொழிவுக்கு அவ்வளவு கூட்டம் சேர்கிறது. அவர்கள் வேறு எதற்கும் தயாராக இல்லை.//

அவங்க ஒண்ணு சொன்னா வழக்கம்போல ஒம்போது ரீசனை நியாவே கட்டிக்கிற பாத்தியா?

//ஈரோட்டு ஆசாமி ஒருவர்//

கடுப்பை வேற எப்படித்தாண்டா ஒரு மனுசன் காட்டுவான்.

//இணையப்பதிவொன்றில் என்னுடைய உரை பெரும் வதையாக இருந்தது என்று எழுதியிருந்தார் என்றும், அதில் ஏராளமான ஈரோட்டு வாசகர்கள் வந்து அது தாளமுடியாதபடிச் சலிப்பூட்டியமையால் தப்பி ஓடியதாக எதிர்வினையாற்றியிருந்தனர் எனவும் எழுதியிருந்தனர் என்று சொல்லி என்ன ஆயிற்று என்று கேட்டு சிலர் எனக்கு எழுதியிருந்தனர்.//

ஐ நைசா போய் ஒன்னுவிடாம எல்லா கமெண்டையும் படிச்சியா இல்லியா உண்மையச் சொல்லு. நீ நடந்தால் நடையழகு நீ தடுக்கி உழுந்தால் அதுவும் அழகுங்கற பயலுவதானே விசனம் விசாரிச்சது?

//அந்த ஈரோட்டுவாசிகளின் துயரை நான் புரிந்துகொள்கிறேன். எனக்கு அவர்கள் எவ்வாறு ஒவ்வாமையை அளித்தார்களோ அவ்வாறே அவர்களுக்கு நானும் ஒவ்வாமையை அளித்திருக்கலாம்..//

இவ்ளோதூரம் கரிச்சி கொட்டிட்டு இந்த கீதாசாரம் என்ன மயித்துக்கு? ஹேமநாத பாகவதர் ஜடாயுகிட்ட ஷொட்டு வாங்கவா?

//ஆனால் என் கொள்கைகளை மாற்றிக்கொள்ளப்போவதில்லை. எந்த அரங்கிலும் நான் சொல்லவேண்டியதை, என்னுடைய மொழியில்தான் பேசப்போகிறேன். பாண்டிச்சேரியிலும் மதுரையிலும் திருச்சியிலும் குவைத்திலும் கலிஃபோர்னியாவிலும் பினாங்கிலும் செல்லுபடியாகக்கூடிய அந்த நம்பிக்கைக்கு இப்படிச் சில விதிவிலக்குகள் அமையலாம். //

ரியல் ரியலைசேஷன்?

//விதிவிலக்குகள் பெருகுமென்றால் பேசுவதை நிறுத்திக்கொள்ளவேண்டியதுதான்.//

நெஞ்சைத் தொட்டு சொல்லு அது உன்னால் ஆகக்கூடிய விஷயமா? சுத்தி இருக்கறவன் காதெல்லாம் அறுந்து விழுந்தாலும் வாய் எதையாவுது மென்னுகிட்டுதான் இருக்கும் பழக்க தோஷத்துல.

//என்னுடைய ஈரோட்டு உரையின் ஒளிப்பதிவைக் கேட்டேன். மேடைப்பேச்சாளர்களுக்குரிய கட்டை – கணீர்க்குரல் , ஆணியடிக்கும் உச்சரிப்பு, உடற்சைகைகள் இல்லையே ஒழிய மிகத்தெளிவாக முக்கியமான ஒரு விஷயத்தை, அனேகமாக தமிழகத்திலுள்ள ஒவ்வொருவரும் உணரக்கூடிய ஒரு நுட்பமான வரலாற்றுத் தன்னுணர்தலை, பற்றிப்பேசியிருக்கிறேன்.//

ஓகே நமக்கு நாமே ஆலாத்தியும் ஆட்டி எடுத்தாச்சி. போய் அமைதியா தூங்கு.

//இவ்வடிவிலேயே கூட அது நலல உரைதான்.// 

ரையன்னா ஸ்பெல்லிங் மிஷ்டேக் இல்லியே

//பரவாயில்லை, இன்னும் கவனமான அரங்கு கொண்ட இன்னொரு மேடையில் அதைப் பேசுகிறேன். அதன்பின் பதிவிடுகிறேன்.//

விடாது கறுப்பு

//வரும் ஆகஸ்ட் 15 அன்று திருப்பூரில் பேசவிருக்கிறேன்.//

விடுதலையே கிடையாது.

***

சரி இதே ஜெயமோகனின் நுண்ணிய உரையை நுட்பமாகக் கேட்டு, விவாத நேரத்தில் கேள்விகளும் கேட்ட ‘காக்காய்கள் அல்லாத’ கூட்டத்தைப் பற்றி எதாவது எழுதி பதிவு செய்து இருக்கிறாரா என்று பார்ப்போம்.

கேணி சந்திப்பு February 8, 2010 இது கேணி கூட்டத்துக்கான முதல் அறிவிப்பு

கேணி கூட்டம் February 14, 2010 இது கேணி கூட்டம் பற்றிய அன்றைய அறிவிப்பு

உலோகம் 1 குறுநாவல் February 14, 2010 கேணி கூட்டம் நடக்கிற தினமாகப் பார்த்து டைமிங்காகக் குறுநாவல் ரிலீஸ் ஆகிறது அவரது தளத்தில்.

ஞாநி February 16, 2010 கேணி கூட்டத்துக்கு ரயிலில் வந்து சேரும் பல்லவி

//சென்னைக்கு பிப்ரவரி 3 சனிக்கிழமை காலை வந்துசேர்ந்தேன்.// 

அபிஷ்ட்டு அது 3 இல்லே 13. ஞாயிறு 14 தானே கூட்டம்?

அசோகமித்திரன் February 18, 2010 அமியிடம் சரணம் முடிந்ததும் கேணி தொடக்கத்துக்கான முஸ்தீபுகளோடு மங்களம் பாடி முடிக்கப்படுகிறது.

//வெயில் நன்றாகவே ஏறிவிட்டிருந்தது. அன்று மாலை மூன்றரை மணிக்குத்தான் கேணி இலக்கியச் சந்திப்பு. ஞாநியின் இளம்நண்பர்கள் வந்து கொல்லைப்பக்கத்தைச் சுத்தம் செய்துகொண்டிருந்தார்கள். பாஸ்கர் சக்தி வந்தார். கேணி அமைப்பை அவரும் பாஸ்கர் சக்தியும் சேர்ந்துதான் நடத்துகிறார்கள்.

புத்தகங்கள் முன் வாசலில் அடுக்கப்பட்டன. கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் வந்து வீடெங்கும் குரல்கள் எதிரொலிக்க ஆரம்பித்தன.//

ம.பொ.சி February 20, 2010 ஒற்றைப் பெண் காகத்தின் குரல் 

கேணி, கடிதங்கள் February 21, 2010 காக்காய்க் கூட்டத்தின் குயிலோசை

//உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. ஞாநி கூட்டம் மிகச் சிறப்பாக நடந்தது. கருத்து வேற்றுமைகளுடன் உரையாடுவதென்பதே ஒரு அறிவியக்கத்தின் ஆரோக்கியமான நிலை

அந்தக் கூட்டத்தில் பேசியவர்கள் பலர் என்னைப் போலவே சமகாலத்தில் எழுதி வருபவரக்ள். ஆகவே அவர்களின் தரப்பும் வலுவாகவே இருக்கும். இரு சாராரும் கருத்துக்களைச் சொல்லி முடிக்கும்போது விவாதம் நிறைவு பெற்று விடுகிறது/ 

ஆனால் அதைப் பற்றி நடந்தது நடந்தபடி எழுதுவதை எது தடுத்தது?

முட்டுசந்தில் கொண்டுபோய் பதிமூன்று பேர் அடித்தது போல் ஆகிவிட்டது ஜெயமோகனின் நிலமை. அவரும் வலிக்கவே வலிக்காதது மாதிரி எவ்வளவு நேரம்தான் நடிப்பார் பாவம். 

ஞாநியின் கேணி கூட்டத்துக்காக ரயிலேறி ஊர்விட்டு ஊர் வந்து, அவர் வீட்டில் இரண்டு நாட்கள் தங்கி இருந்துவிட்டு, ஞாநியின் முன்னாள் மனைவி பத்மா சமைத்த வெஜிடெபிள் பிரியாணி, தயிர்சாதம் தின்றது, ஞாநியின் ஆஞ்சியோ பிளாஸ்ட், கே.ஆர்.அதியமானின் ஞாநியுடனான் நெருக்கம், அசோகமித்திரன் வீட்டைத் தேடிக்கொண்டு போனது என்று சென்னைக்குச் சுற்றுலாப்பயணம் வந்ததுபோல நூல் திரித்துப் பதிவெழுதி அதில் அமுக்கு குசு அளவுக்குக் கூட கேணி கூட்டத்தில் நடந்த சர்ச்சைகள் பற்றி மூச்சுகூட விடாத அறச்சீற்ற அபிநய சுந்தரி அவர்கள்தான் ஈரோட்டில் அவர் பேசப்பேச கலைந்த கூட்டத்தைக் காக்காய்க் கூட்டம் என்கிறார் முற்றம் கோணல் என்பதைப் போல.

கூட்டத்தில் பலரும் கிடுக்கிப் பிடி போட்டு மடக்கிப் பிடித்ததுதான் அந்தக் கேணி கூட்டம் பற்றி தன் தளத்தில் பதிவு செய்யாததன் உண்மையான காரணமா இல்லையா என்பதை சுய மரியாதை உள்ள அவரது லட்சக்கணக்கான எழுத்தாள வாசகர் அல்லது வாசக எழுத்தாளர்களில் ஒருத்தனாவது ஜெயமோகனைக் கேட்கட்டும். 

கேணியில் தான் ஆற்றிய உரையை அந்த நிகழ்வை ஏன் தமது தளத்தில் பதிவு செய்யாமல் உண்மையை மறைத்தார் தனக்கு பாதகமாக இருந்தது என்பதால்தானே என, கடுகளவாவது சுய மரியாதை இருந்தால் ஆம் என ஜெயமோகன் உண்மையை ஒத்துக்கொள்ளட்டும்