Thursday, August 15, 2013

மானுடமும் தொப்புள் கொடியும்

FB @Shah Jahan
//காபரா என்பது கபராஹட் என்ற உருதுச் சொல்லின் திரிபு. கபராஹட் - பயம், கபராகயா - பயந்து விட்டான்.//


//நீங்களே இவ்வளவு ஈழ காபரா காட்டினால், எல்லாக்காலன்களிலும் இலங்கையிலேயே வசிக்கும் லட்சக்கணக்கானோர் எவ்வளவு கேபரே ஆடிக்காட்ட வேண்டும்?//

நான் காபரா என்று சொன்னால் அதை கேபரே என்று புரிந்து கொள்கிறார் ஈழ  தேசத்தின் சுய நியமண ஓல்ட் அம்பாசிடர். 

//எட்வர்ட் செய்த்தும் மஹ்மூத் தார்வீசும் பாலஸ்தீனியர்களுக்காகப் பேசக்கூடாது. சுபையிர் ஐதிர் குர்திஷ்களுக்காகப் பேசக்கூடாது. டென்சின் ட்சு+ண்டு (கவிஞர்) திபெத்தியர்களுக்காகப் பேசத் தகுதியற்றவரில்லை//

இன்னாடா ஓவரா பீட்டர் உடுதே என்று மிரண்டுபோய், 

//வெத்து புலி வேச சீன் போட, உலக எழுத்தாளர்கள் சிந்தையாளர்களெல்லாம் மேக்கப் அயிட்டங்களா தமிழ்நதி மேடம்?// மேடம்  என்று ஓவர் மரியாதை கொடுத்து கேட்டால், என்னை அய்ட்டம் என்று சொல்லிட்டான் என்று, ஊரைக் கூட்டி என்னப்பெத்த ஆத்தா டைப், மாய்மால கண்கசக்கல் காரிய மெண்டல்களுக்கே சாத்தியம்.

அய்ட்டம் என்பதற்கு பதில் மெட்ராஸ் மொழியின் இன்னொரு வார்த்தையான ‘மேக்கப் ஜாமான்களா’ என்று, ”அயிருங்க சாமானத்தையெல்லாம் நீ ஏண்டா தொடறே” என்ற பாக்கியராஜ் அளித்த ‘கொடை’யில் சொல்லியிருக்க வேண்டுமா? 

மெட்ராஸ் மொழியில் இருக்கும் பல சொற்களும் ’காபரா’ ’அய்ட்டம்’ ’ஜாமான்’ போல பல மொழிகளின் பிஞ்ச கொடைகள்தாம்.

அந்த நிலைத்தகவலுக்கு வந்த முதல் எதிர்வினையே, “என்ன சொல்ல வாரியல்?” என்கிற (’ள்’ என்பது ‘ல்’ ஆகிவிட்ட ஷிஃப்ட் கீ அழுத்தாத டைப்போ தவறுதானே)இலங்கையர் ஒருவருடையதுதான். (என்ன சொல்ல வருகிறீர்கள்?)

தமிழ் நாட்டில் திருநெல்வேலிப் பகுதியில், வாரியள் என்றால், துடைப்பம், விளக்குமாறு. இனமானத் தமிழர்கள் வீட்டுக்கு வந்தோரை இலங்கைத் தமிழில் சென்னையில் வரவேற்றுப் பார்க்கட்டும். விருந்தாளியிடமிருந்து செம மறுவிருந்து கிடைக்கும்.

ஒர்த்தனுக்கு ஒர்த்தன் பேசிக்கிறதே தமிழ்தானான்னு ஒர்த்தனுக்கு ஒர்த்தன் பிரியிலியாம். இதுல ஈழத் தமிழனும் தமிழ்நாட்டுத் தமிழனும் தொப்புள்கொடி உறவுனு ஒரு கூட்டம் கல்லா கட்டிகிட்டு திரியிது. 

இனி நோ சினிமா. ஈழத் தமிழ் இனத்துக்கு உழைப்பதே இனி என் தொழில்னு, புலிக் காசு மாசம் தவறாம வந்துடுதுங்கற தெகிரியத்துல உதார் உட்ட இனமானம்லாம் திரும்ப கோடம்பாக்கத்துக்கு ஆட்டோ புடிச்சி போய்க்கிட்டு இருக்கற நிலைமையை ஒடச்சி சொன்னா, உண்மையான தொப்புள்கொடி உறவு என்பது காசு, பணொம், துட்டு, மணி, மணி...தான்னு தெளிவாயிடும்.

1983 (யூலை) ஜூலை கலவரம் நடந்து முடிந்து, தமிழகமே உணர்ச்சிபூர்வமாகக் கொந்தளித்துக்கொண்டு இருந்த சமயத்தில் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்தது. 

உச்சரிப்பு காரணமாய், தமிழ்தான் பேசுகிறான். அவன் இலங்கைத் தமிழந்தான் என்பது அறியாமல், சிங்களவன் என்று எண்ணி, கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி அருகில் தமிழகத் தமிழர்கள் கும்பலாய்க்கூடி அடி பின்னி எடுத்துவிட்டனர் என்பது, என்ன கும்பல் என்று என் BSA SLR சைக்கிளை நிறுத்திக் கேட்கப்போய் தெரியவந்தது.

தினந்தோறும் சந்தித்துக் கொண்டிருந்த காலம் என்பதால்,  இந்த நிகழ்வை பிரமிளிடம் கூறினேன். அவரது பாணியில் பகபகவென சிரித்துவிட்டார். அந்த நிகழ்வுகூட ’மானுடம்’ கவிதைக்குத் தூண்டுதலாய் இருந்திருக்கலாமோ என்று இப்போது தோன்றுகிறது. முதலில் சுமுகமான விலகலாகத் தொடங்கியது, (தமிழினி) வசந்தகுமாருக்காக நியாயம் கேட்கப்போய் 1987 வாக்கில் போலீஸ் ஸ்டேஷன்வரை (பிரமீள்) போகுமளவுக்கு சண்டையாகி ஒரேயடியாய் உறவு முறிந்துவிட்டது. மேதைகளைத் தூர நின்று பூஜிப்பதே சாலச் சிறந்தது.

இலங்கையின் வரலாற்றில் தீவிரவாதம் பயங்கரவாதமாகப் பரிணாமவளர்ச்சி அடைந்துகொண்டிருந்த காலகட்டம். மூன்று வருடங்களில் மேற்குறிப்பிட்ட சாதாரன தனிமனித சம்பவம். தமிழன் - சிங்களவன் அடையாளக் குழப்ப ’நிகழ்ச்சி’ உருமாறி 1986ல் எப்படி கவிதையாக உயர் நிலையில் வெளிப்படுகிறது என்று பாருங்கள். 

1986ல் எழுதப்பட்டு, 1993ல்தான் மீறல் இதழில் பிரசுரமாகி இருக்கிறது.

மானுடம்

ஒரு ஜூலை 
ஒன்பது நாள்
சிங்கள வெறியின் 
குதறலில் சிக்கி இ 
லங்கையில் அலறிற்று 
தமிழ்ச்சனம்.
அலறலைக் கேட்ட
உலகத்துக்கு
இலங்கைத்தமிழ் 
விளங்கவில்லை.
ஆயினும் மானுடம்
ஒரே இனம்.

அலறல் மெஷின்கன் 
உறுமலாய் மாறிற்று -
ஒர்ர்ரே பொணம்!

*

(1986)
மீறல், அக்டோபர், 1993.

பக்கம் 262.
பிரமிள் கவிதைகள். அடையாளம். 
விலை ரூ.165