Thursday, January 16, 2014

நாய்நரி


விமலாதித்த மாமல்லன் சமீபத்தில் எழுதிய பதிவில் என்னைக் குறித்து இப்படி குறிப்பிட்டிருக்கிறார். //அந்த ஆள், துட்டை வைத்துவிட்டு 200 புக்கை எடுத்துக்கொண்டு போ என்று ஃபேஸ்புக்கில் சொன்னதை 'லைக்' பண்ணிய கே.என்.சிவராமன் போன்ற, எச்சிற்கலைக்காக வாலோடு சேர்த்து சூத்தையும் ஆட்டும் நாய்கள் எல்லாம், செக்கு இங்கே புக்கு எங்கே என்று நீதி கேட்டு, நான் செக்கோடு உயிர்மைக்குப் போனபோது, எவன் மயிரைப் பிடுங்கப் போனான்கள்?//

இது குறித்து ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆண்டுக்கு ஒருமுறை என்னைக் குறித்து இப்படி ஏதாவது முத்துக்களை உதிர்ப்பது அவர் வழக்கம். இதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அதற்கு அவசியமும் இல்லை. நேரமும் இல்லை.

மாமல்லன் சுட்டிக் காட்டும் பிரச்னையின் ஆணிவேர் அவர் வெளியிட்ட சிறுகதைகளின் பிடிஎஃப் தொடர்பானது. இதை கடுமையாக எதிர்க்கிறேன். இந்த விஷயத்தில் மனுஷ்ய புத்திரனை நான் ஆதரிக்கிறேன். இவர் பக்கம்தான் நிற்கிறேன்.

உடனே மாமல்லன் இது சென்ஷி - எஸ்.ராமகிருஷ்ணன் - டிஸ்கவரி புக் பேலஸ் - நிகழ்வுடன் தொடர்புடையது என்று சொல்வார். இதையும் தெளிவு படுத்திவிடுகிறேன். இந்த நிகழ்விலும் நான் எஸ்.ராமகிருஷ்ணன் - டிஸ்கவரி புக் பேலஸ் பக்கம்தான் நிற்கிறேன்.

’நேர்மை’னா ‘ஹமாம்’ சோப் என்று நினைக்கும் மாமல்லனுக்கு ’அறம்’ என்றால் என்ன என்று வகுப்பு எடுக்கும் அளவுக்கு நேரமில்லை. 

பல பத்தாண்டுகளுக்கு முன், சொந்த செலவில், தன் சிறுகதை தொகுப்புகளை வெளியிட்டு அதையும் முழுமையாக விற்க முடியாமல் தவித்தவர் மாமல்லன். இன்றுவரை அந்தப் பிரதிகள் முழுமையாக விற்கவில்லை. ஏட்டிக்கு போட்டியாக இப்போது அந்தப் பிரதிகளை புத்தக கண்காட்சியில் விற்பனைக்காக வைத்திருக்கிறார்.

இந்நிலையில் கிட்டத்தட்ட மறந்துபோன அவரை மீட்டெடுத்து இன்றைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தி கொண்டுபோய் சேர்த்தவர் மனுஷ்யபுத்திரன். இதற்கான ராயல்டி பிரச்னையை தாராளமாக பதிப்பாளருடன் அவர் பேசித் தீர்க்கலாம்.

அதை விட்டுவிட்டு பிடிஎஃப் வெளியிட்டதை எப்படி நியாயப்படுத்த முடியும்? 

தொடர்ச்சியாக இளையதலைமுறை எழுத்தாளர்கள் புதினங்களை எழுதி வருவதும், அவரது சமகால படைப்பாளிகள் அவரைத் தாண்டிச் சென்றதையும் அவரால் ஜீரணிக்க முடியவில்லை. அதன் வெளிப்பாடுதான் இந்த காழ்ப்புணர்வு.

இப்படி சொன்னதாலேயே என் வேலைக்கு வேட்டு வைக்கப் பார்ப்பார்... அலுவலகத்துக்கு மொட்டை கடுதாசி எழுதுவார்... என்று எனக்கு தெரியும். அப்படி செய்யக் கூடியவர்தான் மாமல்லன். எனக்கு தெரிந்த நண்பர்களுக்கு அப்படி செய்தும் இருக்கிறார். 

இப்படியான அதிகார போதையில் தனக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை நசுக்கப் பார்க்கும் மாமல்லனால் இனி ஒருபோதும் படைப்பு சார்ந்த தளத்தில் இயங்க முடியாது என்ற என் எண்ணம் நாளுக்கு நாள் வலுப்பட்டு வருகிறது.

தெளிவாகவே சொல்லிவிடுகிறேன். இந்த விஷயத்தில் I Support Manushya Puthiran. இந்த நிலைத்தகவலை வைத்து இன்னும் எத்தனை பதிவு எழுத முடியுமோ அத்தனை பதிவுகளை எழுதுங்கள். ஆனால், அதற்கெல்லாம் பதில் சொல்வேன் என்று மட்டும் எதிர்பார்க்காதீர்கள். 

ஏனெனில், எனக்கு நிறைய வேலை இருக்கிறது - உண்மையாகவே 

***

<விமலாதித்த மாமல்லன் சமீபத்தில் எழுதிய பதிவில் என்னைக் குறித்து இப்படி குறிப்பிட்டிருக்கிறார். //அந்த ஆள், துட்டை வைத்துவிட்டு 200 புக்கை எடுத்துக்கொண்டு போ என்று ஃபேஸ்புக்கில் சொன்னதை 'லைக்' பண்ணிய கே.என்.சிவராமன் போன்ற, எச்சிற்கலைக்காக வாலோடு சேர்த்து சூத்தையும் ஆட்டும் நாய்கள் எல்லாம், செக்கு இங்கே புக்கு எங்கே என்று நீதி கேட்டு, நான் செக்கோடு உயிர்மைக்குப் போனபோது, எவன் மயிரைப் பிடுங்கப் போனான்கள்?//

இது குறித்து ஒன்றும் சொல்வதற்கில்லை.>

சால நன்று. கையதுகொண்டு வாயது பொத்தி இருக்க வேண்டியதுதானே. எதற்கு நானும் உள்ளேன் ஐயா என்று எம்பிக் குதிக்கிறாய் தம்பி?

<ஆண்டுக்கு ஒருமுறை என்னைக் குறித்து இப்படி ஏதாவது முத்துக்களை உதிர்ப்பது அவர் வழக்கம். இதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அதற்கு அவசியமும் இல்லை. நேரமும் இல்லை.>

உனக்கென்ன தம்பி ஆண்டுக்கொருமுறை திவசமா கொண்டாடுகிறார்கள்?

<அதற்கு அவசியமும் இல்லை. நேரமும் இல்லை.>

அப்பறம் என்ன திதி பார்த்து இந்தப் பதிவு?

அங்குதான் இருக்கிறது இந்த சொறித்திரரின் நரித்தனம். அதை முற்றிலிலுமாய் அம்பலப்படுத்தத்தான் இதை எழுதியாகவேண்டி இருக்கிறது.

<மாமல்லன் சுட்டிக் காட்டும் பிரச்னையின் ஆணிவேர் அவர் வெளியிட்ட சிறுகதைகளின் பிடிஎஃப் தொடர்பானது.>

ஆணிவேர் PDF இல்லை அம்பி. உனக்கு என்னுடனான பிரச்சனையின் ஆணி வேர் நேர்ப்பேச்சில், இங்கு உள்ளது.

அபிராமபிரம் கீர்த்திலால் நகைக்கடைக்கு எதிரிலுள்ள எதிரிலுள்ள சாட் கடையில் சுண்டல் சாப்பிட்டபடி, சுந்தர ராமசாமி பிரமிள் போன்ற பெரிய ஆளுமைகளுடனெல்லாம் நேரில பழகிய  உங்களைப் போன்ற, ஆளுமை என்றெல்லாம் எனக்கு ஐஸ் வைத்துவிட்டு,வினவை நத்திப் பிழைத்துக்கொண்டிருந்த 2011ல், நேரில் நீ பேசியதைப் போட்டு இணையத்தில் உன் முகத்தைக் கிழித்தேன் என்கிற கோபத்தில்  “அற்பவாதி” என்று என்னைக் குறிப்பிட்டு நீ விட்ட கூகுள் Buzz நினைவிருக்கிறதா. PDF அல்ல. அதுதான் உனக்கும் எனக்குமான் பிரச்சனையின் ஆணிவேர். சிதைந்த மனிதனாய் உன் சீழ் பிடித்த இரட்டை முகம்.

மேற்படி அரஹரி, என்னை அற்பவாதி என்ற போது, நேரடியாக நான் பதில் சொல்லப் போனபோது, சார் நீங்கள் எல்லாம் சாரு ஜெமோ போல் ஓரமாய் இருக்க வேண்டும். அதுதான் உங்களுக்காக நாங்கள் இருக்கிறோமே உங்களுக்காக? இதையெல்லாம் நாங்கள் பார்த்துக்கொள்ள மாட்டோமா என்று போனில் சொல்லிவிட்டு, கால்வீக்கம் பொருட்படுத்தாத இணைய திராவிட துரோணாச்சாரி களத்தில் இறங்கினார். இவருக்கு, ரஜினியும் ராக்குடியும் இலக்கியமும் திமுகவும் ஆபாசப் பொய்களை எழுதியெழுதி கலைப்பதும் இவருக்கு பஞ்ச பாண்டவர்கள். துரோரணரும் மேற்படி சிவராம பீஷ்மரும் இணைய இலக்கியத்துக்கு இணைபிரியா பட்டுக் குஞ்சலங்கள் என்பது ஊரர்ந்த ரகசியம்.

நேற்றிரவு கூட என்னைப் பற்றி, ‘இவன் லஞ்சம் வாங்கியதை என்னிடமே கூறி இருக்கிறான் என்று, என் ***** கூட்டிக் கொடுத்ததாய் என்னிடமே இவர் கூறி இருக்கிறார் என்கிற தரத்தில் கையால் எழுதி நான்கே நிமிடங்களில் அதை நாவால் கலைத்து விட்டார் எனக் கேள்விப்பட்டேன். நல்லது நம்பிராஜன் கவிதையில் குறிப்பிட்ட, “நக்கவவும் துழாவவும்” போக நாக்கிற்கு இப்படியும் ஒரு உபயோகம் உள்ளதென்பதை என்பிலா இலக்கிய குருஜி எத்துனமுறை செயல்முறை விளக்கமாய் இணையத்தில் வகுப்பெடுப்பாரோ யான் அறியேன்.

போகட்டும். திருவாளர் சிவராமன், “அற்பவாதி” என்று ஒருவரைக் குறிப்பிடுவது, அவருக்குத் தொட்டிலிட்டு பெயர் சூட்டுவதா என்ன? அது கேடுகெட்ட வசவில்லையா? அதைக் காரணப் பெயராக்கும் அளவுக்கு அவரிடம் தகுந்த ஆதாரங்கள் இருப்பின் அதன்படியே அந்த நபரை அற்பவாதியாக மட்டுமே நடத்துவதுதானே நியாயம். அற்பவாதியான இவருடன் பொற்புவாதியான நமக்கென்ன வேலை என்று முகத்தைமுறித்துக் கொள்வதுதானே நேர்மை? அடிப்படை அறம். வாசக இலக்கியவாதியாகிய சிவராம பண்டிதரின் - வார்த்தைகளில் ஆபாசம் இல்லை - என்பது ஆபாசமே இல்லை என்பதாக ஆகிவிடுமா? நாய்க்குக் குஞ்சு வெளியே நாகத்துக்கு நஞ்சு உள்ளே. எது உயிரின் வாதை?

யாரும் ஒட்டிப் பிறக்கவில்லை - பிரியவே முடியாத அளவுக்கு.

உறவு ஒத்துவரவில்லை என்றால் ஒதுங்கிப் போவது உத்தமம். இணையப் பொதுவெளியில் விரோதக் குதறல் நேர் வெளியில் நெஞ்சுக் காம்போடு காம்பு உரச மனித நேயம் என்பது ஆபாசம் இல்லையா? இதுதான் கே.என்.சிவராமன். இந்தக் கீழ்மையை ஆமோதிப்பது போல் ஆபாசம் வேறில்லை. கடுமையான கருத்து முறண்பாடுகள் வேறு தனிமனித நட்பு வேறு என்று இதற்கு விளக்கம் தருவது ஆபாசத்தின் உச்சம். ஒரு மனிதனின் அடிப்படை இருப்பையே கேள்வி கேட்டுவிட்டு, அவனுக்குப் பந்தி விரித்துப் பாயசம் பரிமாறுதல் நாகரிகமல்ல. பார் நான் பகைவனுக்கும் அருளும் பகவான் எனக் காட்டிக்கொள்ளும் ஆபாசம். இந்த ஆபாசமே கே.என்.சிவராமன். இன்று நேற்றல்ல 90களில் இருந்தே இருக்கிறது  இந்த பொதுவெளியில் குரைத்து தனிவெளியில் குழையும் நாய்நரித்தனம்.

<இதை கடுமையாக எதிர்க்கிறேன். இந்த விஷயத்தில் மனுஷ்ய புத்திரனை நான் ஆதரிக்கிறேன். இவர் பக்கம்தான் நிற்கிறேன்.>

தொனியை பார்த்தீங்களா? கே.என். சிவராமனுக்கு தினமணி ஆசிரிர் சிவராமன் என்று உள்ளூர நெனப்பு. ஆனால் வெளியில், ஐயா நான் உங்கள்முன் நாயினும் கடையேன் என்கிற கூழைக் கும்பிடு. கைகூப்பி வாய் பொத்திய பவ்வியம். இருண்மை கலந்த இந்த இருமையையே நாய்நரித்தனம் என்கிறேன். ஆனால் பாவம் ஒரு தரித்திரம் சிவராமனை நாயாகவும் தன்னை நரியாகவும் சொல்லிவிட்டதாய் நினைத்து, எழுதிக் குரைத்துத் தன் குரைப்பைத்  தானே நக்கிக் கலைத்துவிட்டது நேற்றைய சரித்திரம்.

<உடனே மாமல்லன் இது சென்ஷி - எஸ்.ராமகிருஷ்ணன் - டிஸ்கவரி புக் பேலஸ் - நிகழ்வுடன் தொடர்புடையது என்று சொல்வார். இதையும் தெளிவு படுத்திவிடுகிறேன். இந்த நிகழ்விலும் நான் எஸ்.ராமகிருஷ்ணன் - டிஸ்கவரி புக் பேலஸ் பக்கம்தான் நிற்கிறேன்.>

நான் இதைப் பற்றி நான் என்ன பெரிதாய் கருத்து கூறிவிட்டேன் பிரஸ் மீட் வைத்து. அதற்குள் ஏன் இந்த ஊகம். ஒன்றுமில்லாததை ஊதிப் பெரிதாக்கி தன்னை விரிக்கும் தந்திரம்

<’நேர்மை’னா ‘ஹமாம்’ சோப் என்று நினைக்கும் மாமல்லனுக்கு ’அறம்’ என்றால் என்ன என்று வகுப்பு எடுக்கும் அளவுக்கு நேரமில்லை.>

சார் போடாமல் நேர் பேச்சில் மூச்சே விடாத நாயின் தொனியைப் பார்த்தீர்களா? இவன் நேர்மையற்றவன் என்பதுதான் உன் முடிவு எனில் என்னை நிராகரி. பின் அதற்க்குத் தக நில். இல்லையேல் நீ நாயாய் பிறந்து நரியாய் வாழ்பவன் என்பதே என் முடிவு சிவராமா!

<பல பத்தாண்டுகளுக்கு முன், சொந்த செலவில், தன் சிறுகதை தொகுப்புகளை வெளியிட்டு >

நான் என்ன பிறக்கும்போதே பேனாவுடனா பிறந்தேன். 54 வயதுக்குள் எழுதி புத்தகம் பதிப்பித்து பல பத்தாண்டுகளாகிவிட?

<அதையும் முழுமையாக விற்க முடியாமல் தவித்தவர் மாமல்லன்.>

1983ல் ஆதிமூலத்தின் அட்டைப் படத்தோடு வெளியிட்ட அறியாத முகங்கள் முதல் பதிப்பு 1984கிலேயே நூலகத்துக்கும் போய் முழுவதும் விற்றும் போயாயிற்று என்கிற உண்மைகூட அறியாத உளறல்.

<இன்றுவரை அந்தப் பிரதிகள் முழுமையாக விற்கவில்லை.>

இந்தப் பொய்தான், இணைய இலக்கிய பீஷ்மப் பிதாமகருக்கும் - யுவகிருஷ்ணா போன்ற உண்மைக்கு உரத்து குரல் கொடுப்போர் சங்கநாதர்களுக்கும் கீதத்தின் சாரம்.

<ஏட்டிக்கு போட்டியாக இப்போது அந்தப் பிரதிகளை புத்தக கண்காட்சியில் விற்பனைக்காக வைத்திருக்கிறார்.>

அதந்தப் புத்தகங்களை எடுத்துப் பார்க்கும் எவருக்கும் உயிர்த்தெழுதல் முதல் பதிப்பு டிசம்பர் 1994 என்பதும் அறியாத முகங்கள் முதல் பதிப்பு டிசம்பர் 1983 மற்றும் இரண்டாம் பதிப்பு டிசம்பர் 1994 என்பதும் தெளிவாகத் தெரியும்.

<இந்நிலையில் கிட்டத்தட்ட மறந்துபோன அவரை மீட்டெடுத்து இன்றைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தி கொண்டுபோய் சேர்த்தவர் மனுஷ்யபுத்திரன்.>

ஆமாம் சார் யார் இல்லையென்று சொன்னார்கள்? அதற்காக நான்கு கால்களில் நாய்நரிபோல் தவழந்தபடி உங்களைப்போல், எழுத்தாளன் நக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா சிவராமன்?

உறையில் கிடக்கிற போர்வாள் ஒரு போதும் துரு பிடிப்பதில்லை. உறங்கிக்கொண்டிருப்பதாய் நினைத்து வாலாட்டினால் துண்டிக்கப்படுவது உன் தலையாய்தான் இருக்கும்.

<இதற்கான ராயல்டி பிரச்னையை தாராளமாக பதிப்பாளருடன் அவர் பேசித் தீர்க்கலாம்.>

நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல நீ யார்? சுமந்த கூலியை கூலிக்காரன் வாய் திறந்து கேட்டால்தான் கொடுப்பதுதான் வீராச்சாமி மருதையனிடம் நீ கற்ற மார்க்சிய லெனினிய நக்ஸல்பாரி தத்துவமா?

<அதை விட்டுவிட்டு பிடிஎஃப் வெளியிட்டதை எப்படி நியாயப்படுத்த முடியும்?>
வசந்தத்தில் ஓர் நாளும் பொதுவுடமை தத்துவ ஆணிகளைப் புடுங்குவதில்லை போலும்.

<தொடர்ச்சியாக இளையதலைமுறை எழுத்தாளர்கள் புதினங்களை எழுதி வருவதும், அவரது சமகால படைப்பாளிகள் அவரைத் தாண்டிச் சென்றதையும் அவரால் ஜீரணிக்க முடியவில்லை. அதன் வெளிப்பாடுதான் இந்த காழ்ப்புணர்வு.>

விநாயக முருகனும் அராத்துவும் தங்கள் ப்ருஷ்டத்தத்தைத் தாங்களே தாங்களே தாங்கிப் பிடித்துப் புரொமோட் செய்வது போதாதென்று நீ வேறு ஒரு கை கொடுக்கிறாயா சிவராமா?

எது காழ்ப்புணர்வு? ”கையை ஒடைக்கணும்” என்று மனுஷ்ய புத்திரன் எழுதியதற்கு எதிராக தார்மீகக் கோபத்துடன் 

“நெட்டை மரங்களென நின்று புலம்பினார்
பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ” என்று நேரடியாய் செயலில் இறங்கியது காழ்ப்புணர்வா தோழர் பைத்தியக்காரன்?

<இப்படி சொன்னதாலேயே என் வேலைக்கு வேட்டு வைக்கப் பார்ப்பார்... அலுவலகத்துக்கு மொட்டை கடுதாசி எழுதுவார்... என்று எனக்கு தெரியும் அப்படி செய்யக் கூடியவர்தான் மாமல்லன். எனக்கு தெரிந்த நண்பர்களுக்கு அப்படி செய்தும் இருக்கிறார்.>

//வாழ்க சிறுபத்திரிகை இலக்கியம். வளர்க கேரக்டர் அசாசினேஷன். ஓங்குக தனி மனித தாக்குதல்கள். அழியட்டும் மனிதப் பண்புகள். நசுங்கட்டும் சக மனிதன் மீதான நேசம். பரவட்டும் வசைச் சொற்கள்.//

இதைச் சொன்ன வாய் எது என்று நினைக்கிறீர்கள்? ’மொட்டைக் கடுதாசி போடுபவர்’ என்று ஆதாரமின்றி என்னை கேரெக்டர் அசாசினேஷ்ன் செய்துள்ள இதே கே.என்.சிவராமன்தான்.


தான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் தன்மீதே RTI போட்டு, தன் மீது ஏதும் புகார் உள்ளதா என்று ‘முட்டாள்தனமாய்க்’ கேட்கும் தைரியம் உங்களில் எத்துனைப் பேருக்கு இருக்கிறது என்று ஒரு கணம் நெஞ்சைத் தொட்டுக் கேட்டுக் கொள்ளுங்கள். கொடுத்தால் மரணஅடி கொடு! இல்லையேல் மன்னித்துவிடு!

இவன்தான் மொட்டை போடுபவனா?

இன்று நேற்று என்றில்லை. 1992ல் குமாஸ்தாவாக இருந்தபோதே இப்படித்தான் இந்த ஜென்மம். எந்த ஆதாயத்தையும் எதிர்நோக்கி எதையும் செய்ததில்லை. சரி சரியில்லை என்று மனசுக்குப் பட்டால் சாதக பாதகங்கள் எதிர்காலம் என எதையுமே மூளையின் கணக்குக்கு ஒப்படைத்ததே இல்லை. எதிலும் நானே நேரடியாய் பாதிக்கப்பட்டிருக்கவேண்டிய அவசியம்கூட இல்லை. சின்மயி விவகாரம் உட்பட, இன்றைய “கையை ஒடிக்க வேண்டும்” வரை இதுதான் என் விதை.

தீக்குள் விரலை வைத்தால்...

இவன்தான் மொட்டை போடுபவனா?
சொந்த அலுவலகத்தில் நடந்த கொள்ளைகளை, கொள்ளிவாய்ப் பிசாசுகளைப் பற்றி CVCக்கும் CBIக்கும் சொந்த மெய்ல் ஐடியுடன் கையெழுத்திட்டு புகார் கொடுத்தவன் நான். அதற்காத சந்திக்க நேர்ந்த பழிவாங்கல் கொஞ்சநஞ்சமல்ல. ஒரே வருடத்தில் சென்னைக்குள்ளாகவே எத்துனை இட மாற்றல்கள். அதை எதிர்த்து,ஓய்வுபெறுகையில் சில லட்சங்களாகப் பணமாய் பெறக்கூடிய  விடுப்பை ஆறுமாதம் அநாயாசமாய் எழுதிக்கொடுத்துவிட்டு இணையத்தில் எழுதத்த் தொடங்கியவன். இவனைப் பார்த்துக் கூசாமல் சொல்கிறாய் மொட்டைக் கடுதாசி போடுபவன் என்று. 

<இப்படியான அதிகார போதையில் தனக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை நசுக்கப் பார்க்கும் மாமல்லனால்>

மொட்டைக் கடுதாசி போடுவது அதிகார போதையா? அல்லது கவட்டைக்கிடையில் வாலைச் சொருகிக் கொள்ளும் கள்ளத்தனமா? இவ்வளவு புத்திசாலியான அவதூறாளர் கே.என்.சிவராமன் தமிழ் பத்திரிகைத் துறையில் தவித்துக் கொண்டிருப்பது நியாயமில்லை. ஓசியில் படிக்க வேண்டிய ஒன்றரைப் பக்க இலவச இணைப்பிலிருந்து, NYTக்குத் தவ்வினால் புலிட்சர் பரிசு நிச்சயம் இவருக்குதான்.

இரண்டே இரண்டு வரி கோர்வையாக அர்த்தபூர்வமாக அறிவார்த்தமாக சொல்லி முடிப்பதற்குள், குங்குமப் பிரசாதம் கொடுக்கும் அர்ச்சகர் போல விரலைக் குவித்து ’சூப்பர்’ என எந்த மொக்கையைப் பார்த்தாலும் வாயாலேயே கமெண்ட்டு போடும் சிவராமப் பெருந்தகை ’உரையாடல்’ நடத்தியது சாலப் பொறுத்தம்.

பிரீமியர் ஏஜென்சிக்களில் வேலை செய்பவர்கள் “அதிகார போதையில்” எவனை வேண்டுமானால் பழிவாங்கலாம் என்று எழுதுவதே அறியாமையில் செய்யும் அவதூறு.

இதற்கு இணையத்திலேயே ஆதாரம் இருக்கிறது.

சிபிஐ அதிகாரி ஒருவர் தம் அதிகாரத்தைத் தனிப்பட்ட பழிவாங்கலுக்குப் பயன்படுத்தப்போய் காலில் விழாத குறையாய் மன்னிப்புக் கேட்க நேர்ந்த விவகாரத்தைப் பற்றி தமிழச்சி எழுதியுள்ள இதைப் படித்துப் பாருங்கள்.

//சரியாக ஒரு வாரத்திற்கு பின் நமது தோழருக்கு போன் வருகிறது. சிபிஐ ஆபீசில் இருந்து பேசுவதாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, "நாங்கள் இணையத்தளத்தையும், பேஸ்புக் பக்கத்தையும் கண்காணிப்பவர்கள். நீங்கள் வன்முறையை தூண்டும்படி பேசிக் கொண்டிருக்கிறீர்கள். மற்றும் பிரபலமான ஒருவரை கடுமையாக தாக்கி பேசி இருக்கிறீர்கள். உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம். இனி இதுப்போன்ற கருத்துக்களை தொடந்தால் நடவடிக்கை எடுப்போம்" என்று கூறி இருக்கிறார்.

போலீஸ்காரன் பேசுகிறான் என்றாலே வெலவெலக்கும் பலர் இருக்க இந்த தோழரோ, "சார் என்ன கருத்து பதிவு செய்திருக்கிறேன்? எந்த பிரபலத்தை தாக்கி பேசி இருக்கிறேன் என்று முதலில் சொல்லுங்கள். சும்மா மிரட்டற வேலையெல்லாம் வேண்டாம்" என்று பேசி இருக்கிறார்.

மேலும் பல பேச்சுக்களுக்கு பின் இத்தோழர் போன் நம்பர் சிபிஐ ஆபீசில் இருந்துதான் வந்திருக்கிறதா என்பதை உறுதி செய்தி கொண்டு முக்கிய அதிகாரி ஒருவரிடம் சென்று இதுவரை நடந்த சம்பவங்கள் அனைத்தையும் குறிப்பிட்டிருக்கிறார். சிபிஐ மிரட்டலுக்கும் மீனா கந்தசாமிக்கும் தொடர்பு இருக்கக் கூடும் என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார்.

அந்த அதிகாரி சிபிஐ ஆபீசுக்கு போன் செய்து சம்பந்தப்பட்டவரை விசாரித்தார். அவர் இதற்கும் யாருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் நாங்கள் பேஸ்புக் கண்காணிப்பில் இருப்பவர்கள். நாங்கள் தான் பேசினோம் என்று கூறி இருக்கிறார்.

"தனிமனித எழுத்து சுதந்திரத்தில் தலையிடும் உரிமை உங்களுக்கு இல்லை. அப்படியே வன்முறை தூண்டும்படி பேசி இருப்பதாக நீங்கள் சொன்னாலும் எந்த இடத்தில் அப்படி பேசி இருக்கிறார் என்பதை நீங்கள் சுட்டிக்காட்ட வேண்டும். இல்லாவிட்டால் பெண்கள் அமைப்பு மூலமாக உங்கள் மீது வழக்கு தொடர நேரிடும்" என்று இந்த தோழர் எச்சரித்து இருக்கிறார்.

அதேப்போல் மறுநாள் வக்கீல் நோட்டீஸ் சிபிஐ ஆபீசருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அந்த சிபிஐ ஆபீசர் அந்த அதிகாரியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டிருக்கிறார்.//

http://tamizachi.com/articles_detail.php?id=257

சிபிஐ அதிகாரிகள் தங்களது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்களா என்பதைக் கண்காணிக்க SU எனப்படும் சிறப்புப் பிரிவு உள்ளது. அவர்களின் வேலையே களத்தில் நிற்கும் சிபிஐ அதிகாரிகளைக் கண்காணிப்பதுதான்.

என் அலுவலகத்தை நான் எந்தக் காலத்திலும் CENTRAL EXCISE / SERVICE TAX என எங்கு பணியாற்றிய போதும் எனது தனிப்பட்ட விஷயங்களுக்காக பயன்படுத்திக் கொண்டதில்லை.

தனி நபராக, மாமல்லனுக்கு இருக்கும் சாம தான பேத தண்ட வல்லமையுள்ள வாயை ஒருபோதும் குறைத்து மதிப்பிட வேண்டாம்.

அலுவலகத்தைத் தனிப்பட்ட காரனங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ளவும் முடியாது. அது கொள்ளிக் கட்டையால் தலையை சொறிந்துகொள்வதற்கு சமம்.

அவ்வளவு ஏன், இங்கு வந்த பிறகு அடிக்கடி சுங்க இல்லம் சென்று வரவேண்டி இருக்கிறது. ஆனால் பர்மா பஜாரில், மலிவுவிலை டிவிடிகளுக்காகக்கூட அடியெடுத்து வைப்பது இல்லை. ரிச்சி தெருவிலேயே நண்பர்களாகிவிட்ட கம்ப்யூட்டர் உதிரி பாகக் கடைகளிலேயே கிடந்தவன், அந்தப் பக்கமே எட்டிப் பார்ப்பதில்லை.

இந்த அலுவலகத்தில் இருக்கிறோம் என்பதற்காக எங்களில் யார் வேண்டுமானாலும் நினைத்த மாத்திரத்தில் விமான நிலையம் சென்றுவிட முடியாது. எனக்குத் தனிப்பட அங்கே சென்று வரச்சொல்லி அதிகாரி ஆணையிட்டாலன்றி தன்னிச்சையாக எங்கு வேண்டுமானாலும் அறிவிக்காமல் சென்றுவிட முடியாது.

இதைப் பார்த்துக்கொண்டு வா என்கிற இடத்தைத் தவிர, எதற்கும் இந்த இடத்தையும் ஒருமுறை எட்டிப்பார்த்து விடலாமே என களத்தின் காரணிகள் மனதுக்குச் சொன்னாலும் மேலதிகாரியைத் தொடர்புகொண்டு அறிகுறிகள் இப்படி இப்படி இருக்கின்றன சென்று வரவா என்று தெரிவித்து, அனுமதி கிடைத்த பின்னரே அடுத்த எட்டு எடுத்து வைக்க முடியும்.

குற்றம் நடக்கிறதா என வேவு பார்ப்பவர், குற்றம் செய்துவிடாதிருக்க தொடர்ந்த கண்காணிப்பில் இருக்கிறார் என்பதுதான் ஏஜென்சிக்களை சாதாரண காவல் அமைப்புகளிலிருந்து வேறுபடுத்துகின்றன. களத்தில் நிற்பவன் மீது பூரண நம்பிக்கையும் அதிகாரிகளின் அன்பும் ஆதரவும் அவருக்கு எதாவது சிறு அபாயம் ஏற்பட வாய்ப்பிருப்பினும் உடனே காப்பாற்ற முன்வந்து அரணாய் நிற்கும் பரிவும் அதிகாரத்தை, அவன்  துஷ்பிரயோகம் செய்ததாய்த் தெரிந்த மறுகணமே ஆவியாகிவிடும். தாய் வீட்டைப் பார்க்க நட என்று நள்ளிரவில் ஆணையிடப்பட்டு அனுப்பப்ட்ட சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

எனவே ’மொட்டைக் கடுதாசி’ அவன் அலுவலகத்தை ரெய்டு செய்வது போன்றவையெல்லாம் ஒருபுறம் கிடக்க, அதிகாரிகளின் ஆணையின்றி எவன் ஆபீஸ் படியைக் கூட என்னால் மிதித்துவிட முடியாது என்பதுதான் யதார்த்தம். இந்த நிறுவனம் தவறு செய்திருக்கிறது என்கிற தகவல் அறிக்கையை, ஆதாரங்களுடன் முதலில் மேலதிகாரிக்கு சமர்ப்பித்தாக வேண்டும். அதைத் திரட்டி அவர்முன் வைக்கும் முன்பாகவே நமக்கு பெண்டு கழண்டுவிடும். அதில் ‘முதல் பார்வைக்கே, தவறு நிகழ்ந்திருக்கிறது, சுங்கச் சட்டம் இன்னின்ன வகைகளில் மீறப்பட்டிருக்கிறது. இத்துனை சுங்கவரி அரசுக்கு நட்டமேற்பட்டுள்ளது’ என்று அதிகாரிகளை ஒப்பவைப்பது அவ்வளவு சுலபமில்லை. காரணம், நாம் தொடுக்கும் வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கே போனாலும் தோற்கவே கூடாத அளவுக்கு சட்டரீதியாய் வலுவாக இருக்க வேண்டும் என்பதில் கறாராகவும் செய்யும் வேலையில் கர்வமும் கொண்ட அதிகாரிகளைக் கொண்ட அலுவலகம் இது. அதில் கடைக்கோடி களப்பணி சேவகன் நான்.

அதே சமயம் களத்தில் நிற்கிறான் என்றால் இவன் என்ன சாதாரண ஆள்தானே இலக்கியச் சண்டைக்கு, இவன் மீது ’மொட்டைக் கடுதாசி’ போட்டு பழிவாங்கிவிடலாம் என்றோ அரசியலில் ஆள் தெரியும் என்பதால் இவனை என்னவும் செய்துவிடலாம் எனவும் எவனும் மனப்பால் குடிக்கவும் வேண்டாம். ஆதாரமற்ற குற்றச் சாட்டுகள் மத்திய மந்திரிக்கே அனுப்பப்பட்டாலும் நடந்தது என்னவென்று விளக்கம் கொடுத்துக் காப்பாற்றத் தயங்காத அதிகாரிகளைக் கொண்ட அலுவாகம் இது.

இவ்வளவு நீண்ட விளக்கத்துக்குக் காரணம் இணைய வாய்க்கால் தகறாருக்காய், பரமார்த்த குருவை தொழில் ரீதியாய் ரெய்டு விட்டு மிரட்டி ஆஃப் செய்து விட்டேன் என்றொரு புரளி. எழுதிக் கலைப்பது என்பிலதன் இயல்பு அதற்கு நானா பொறுப்பு.

இந்தப் புரளியைக் கிளப்பி விட்டது எந்த நாய் என்று தெரியவில்லை. பரி நரியாகியது புராணம் நாய் நரியாவதும் நரி நாயாவதும் அன்றாட இணைய திருவிளையாடல்

<மாமல்லனால் இனி ஒருபோதும் படைப்பு சார்ந்த தளத்தில் இயங்க முடியாது என்ற என் எண்ணம் நாளுக்கு நாள் வலுப்பட்டு வருகிறது.>

இந்த ஆரூடம் எப்போது சொல்லப்பட்டது? January 16 at 10:11am

2010லேயே ப்ரச்னம் பார்த்து இந்த பலனைத்தானே சொன்னாய் சிவராமா!

இப்போது பார்மட் நியூராலஜியில போட்டுப் பார்த்தாயோ? உப்பரிகை கதையைப் பற்றி, ’சூப்பர்’ இதுதான் மாமல்லன் செய்ய வேண்டிய காரியம் என்று லக்கியிடம் சொன்னது இதே வாய்தானே. அப்போது 2010ல் சொன்ன, “மாமல்லனிடமிருந்து இனிமேல் உருப்படியாய் எதுவும் வர வாய்ப்பு இல்லை” என்ற குறி மறந்து போனதோ?

<தெளிவாகவே சொல்லிவிடுகிறேன். இந்த விஷயத்தில் I Support Manushya Puthiran.>

பிளக்ஸ் பேனர் வை சிவராமா அம்மா பேனர் சைசுக்கு - புத்தகக் கண்காட்சி முடிய இன்னும்கூட நாளிருக்கு

<இந்த நிலைத்தகவலை வைத்து இன்னும் எத்தனை பதிவு எழுத முடியுமோ அத்தனை பதிவுகளை எழுதுங்கள்.>

எனக்காகத் தோன்றினால் எழுதுவதே என் வழக்கம். நீ சொல்லி எல்லாம் எழுத முடியாது. பப்பப்பே ரப்பப்பே என்று ஏதாவது இலக்கியம் என்கிற பெயரில் சொம்பு தூக்கி எழுதிவை. ஊறுகாயாய்த் தேவைப்பட்டால் எழுதுகிறேன்.

<ஆனால், அதற்கெல்லாம் பதில் சொல்வேன் என்று மட்டும் எதிர்பார்க்காதீர்கள்.>

நான் கேள்வி கேட்கப் பிறந்தவன் உன்னைப் போல் கைகட்டி வாய் பொத்தி பதில் சொல்லப் பிறந்தவனில்லை.

<ஏனெனில், எனக்கு நிறைய வேலை இருக்கிறது - உண்மையாகவே>

என் மீசையை சுருட்டிவிடவே எனக்கு நேரம் போதவைல்லை இதில் நீ என்னடா பெரிய மசுரு?