Friday, January 17, 2014

ராயல்டி ஜேப்படி

<விமலாதித்த மாமல்லனிடம் நான் சொன்னதெல்லாம் ஒரு புத்தகம் அச்சில் இருக்கும் போது அதை இலவச பிரதியாக வெளியிடும் முன்பு பதிப்பாளரிடம் குறைந்த பட்சம் அதைப் பற்றி ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே என்பதுதான்.> 

இலவசப் பிரதி PDFக்கு எப்போதிருந்து இந்தப் பெயர்? அச்சடித்த இலவச காப்பிகளை நான் விநியோகித்தது போலல்லவா திரிக்கிறார்.

PDF முழுக்க இணையம் சார்ந்தது அச்சு சார்ந்தது அன்று. எனவே அச்சுப் பிரதியின் தர்ம நியாயங்கள் அதைக் கட்டுப்படுத்தா. 

<இலவச பிரதியாக வெளியிடும் முன்பு பதிப்பாளரிடம் குறைந்த பட்சம் அதைப் பற்றி ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே என்பதுதான்.> 

500 அடித்தேன் 200 விற்கவில்லை என்பதல்லாவா ராயல்டி கொடுக்காத எழுத்தாளப் பிணந்தின்னியான உங்களது பொய்ப் புலம்பல். ஃபேஸ்புக்கில் நீங்கள் எழுதியதே இதுதானே <அச்சிட்ட 500 பிரதிகளில் 200 பிரதிகள் கையில் இருக்கின்றன. அவரது ராயல்டி தொகை போக மீதித் தொகையை செலுத்திவிட்டு அந்தப் பிரதிகளை அவர் பெற்றுச் சென்று அவரது புத்தகத்தின் சுமையிலிருந்து விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.>

அச்சிட்டது 600 என நீங்களே 2011ல் கூறியதை ஆதாரத்துடன் கூறிய பிறகல்லவா உண்மைக்கு நகர்ந்தீர்கள். 100 காப்பிக்கான ராயல்டியை ஜேப்படி செய்யப் பார்த்தது நீயா நானா?

2010 டிசம்பரில் வெளியான என் விமலாதித்த மாமல்லன் கதைகள் என்கிற புத்தகத்துக்கு நூலக ஆணை வந்ததா இல்லையா என்பதை பதிப்பாளன் என்கிற முறையில் எழுத்தாளனான என்னிடம் இதுவரை எந்த சந்தர்ப்பத்திலாவது கூறினீர்களா?

ஆனால் நான் மட்டும் PDF போட உங்கள் முன் அனுமதியைப் பெறவேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்?

<இதில் உள்ள பிரச்சினைகளைப் பற்றி புத்தக கண்காட்சியில் என்னிடம் வந்து பல்லைக் காட்டியபோது>

ஏன்யா செக்கோடு வந்திருக்கிறேன் புக்கைக் கொடைய்யா என்ற போது பல்லைக்கூடக் காட்டாமல் இளித்தது நீயா நானா? அந்தப் படத்தை உமது போட்டோகிராபர் எடுக்காதது என் தவறா?

உங்கள் வீட்டுக் கல்யாணம் புத்தகத் திருவிழா. எனவே உன் போட்டோக்காரர் உம் கண்ணசைவுக்குத்தானே போட்டோ எடுப்பார்.

<விலாவாரியாக ஒரு முட்டாளுக்குப்கூட புரியும் படி 1 மணி நேரம் விளக்கினேன்.>

என்ன எழவை விளக்கினீர்? எப்போதும் பாடும் அதே சோககீதம். 300 எழுத்தாளர்களது புத்தகங்கள் போட்டிருக்கிறேன் அவற்றில் பெரும்பாலானவை விற்கவில்லை. பல லட்சங்கள் அதில் நட்டம். இந்த எழவுக் கீர்த்தனைக்கு எதிர் கீர்த்தனைவேறு கேட்கிறதா?

<அப்போது பதில் சொல்ல முடியாமல் திரு திருவெனெ விழித்துவிட்டு >

அடேயப்பா! அந்த 300 பேர் புக்குல அவங்க முதலீடு எவ்ளோ உன் முதலீடு எவ்ளோ என்று எப்படிக் கேட்க முடியும்? திருதிருவென்றுதானே முழித்துதானே ஆக வேண்டும். நீர் போட்டிருக்கும் மொத்த புத்தகங்களிலும் உமது முதலீடு எத்துனைப் புத்தகங்களுக்கு? இளம் எழுத்தாளர்களின் முதலீடு எத்துனைப் புத்தகங்களுக்கு?

<தன்னுடைய புத்தக விற்பனை தொடர்பாக விதவிதமான கற்பனைகளுடன் சவடால் அடிப்பது யாருக்காகவோ கூலிக்கு வேலை செய்யும் செயல்.>

உண்மையான கணக்கு ஆண்டவனுக்கே வெளிச்சம் என்றாலும் தமிழ் இலக்கிய உலகின் ஹாட் செல்லர் என அழைத்துக்கொள்ளும் சாரு நிவேதிதாவின் ராச லீலாவே ஒரு வருடத்தில் 80 பிரதிகள்தான் விற்றிருக்கிறது எனும்போது, 600 பிரதிகள் போட்ட புத்தகம் மூன்று வருடங்களில் 400 பிரதிகள் போயிருக்கின்றன என்றால், இது என் புத்தக விற்பனை பற்றிய விதவிதமான கற்பனையா?

கற்பனைக்கே இடம் வேண்டாம் ஐயா உம்மிடம் இவ்வளவு விற்ற புத்தகங்கள் எத்துனை எழுத்தாளர்களுடையவை என்று பட்டியல் கொடும். குறைந்தபட்சம் சாரு ஜெயமோகன் எஸ்.ரா என்று விலாவாரியாக பட்டியலிடும். அடக்கம் அமரருள் உய்க்கும் என்பதற்காகவே பதிப்பாளர் அறை தவிர எங்குமே வாய் திறக்காத பண்பாளர் எஸ்.ரா தவிர பதிப்பித்த புத்தகம் பற்றிய எந்த  கணக்கு எழவையும் கொடுப்பதில்லை என்று புலம்பாத எழுத்தாளன் யாராவது உண்டா?

என் புத்தக விற்பனை தொடர்பாக நான் யதார்த்தமாக அல்லவா இருக்கிறேன். 200 பிரதிகள் கொடெளனில் இருக்கின்றன என்றால் செக்குடன் வந்தவனிடம் கொடுக்க வேண்டியது தானே. 

200 பிரதிகளுக்கான விலையைக் கொடுத்து என்னை உன் புத்தக சுமையிலிருந்து விடுவி என சவால் சவடால் எல்லாம் விட்டது யார்? நீயா நானா?

<பெர்வர்ட்டுகள் எப்போதும் புரிந்ததுபோல நம் முன்னால் நடிப்பார்கள். தனது மறைவிடங்களுக்குப் போனதும் தனது கருவிகளை வெளியே எடுப்பார்கள்.>

நான் பெர்வர்ட் நீ பெர்ஃபெக்ட்தானே புக்கைக் குடுடா புண்ணாக்கே! என்று வந்து நின்றால் இரண்டாவது பதிப்பில்தான் நான் கொஞ்சமாச்சும் பிராஃபிட் பாக்க முடியும் என்று இளித்தது நீயா? நானா? முதல் பதிப்பில் அச்சிட்ட எண்ணிக்கையைக்கூட ஒழுங்காகச் சொல்லாமல் ராயல்டி உட்பட ஒட்டுமொத்தமாய் ஜேப்படி செய்பவன் பெர்ஃபெக்ட் நான் பெர்வர்ட் இல்லையா?

<இரண்டாவதாக மாமல்லன் என்னிடம் போனில் தன்னுடையை புத்தக பிரதிகளை வாங்கிக்கொள்ள தயாராக இருப்பதாக சொன்னபோது>

நீயே ஒத்துகிட்டியா ரொம்ப நல்லது.

<அவை கோடோனில் இருந்து எடுக்க வேண்டும். இப்போது உயிர்மை ஊழியர்கள் எல்லோரும் கண்காட்சியில் பிஸியாக இருக்கிறார்கள் என்று தெரிவித்தேன்.>

உயிர்மை ஊழியர்கள் 9 மணிக்குக் கடையை மூடிவிட்டு வீட்டுக்கே போகாமல் புத்தகக் கண்காட்சியிலேயே படுத்துத் தூங்கி விடுகிறார்களா?

ஒரு நாள் முடிவில் விற்றுத் தீர்ந்து போன புத்தகங்களை, மறு நாள் காலை 10.30 மணியளவில் அல்லது இடையில் கொண்டுவந்து நிரப்புவது எங்கிருந்து? கொடெளனிலிருந்தா இல்லை உங்கள் ஆயா வீட்டிலிருந்தா? அப்படி தினமும் கொடெளன் செல்லும் போது என்னை கிடங்குக்கே வரச்சொல்லி விற்காது தங்கிப்போனதாய் தம்பட்டமடிக்கும் 200 பிரதிகளைக் கொடுப்பதில் என்ன சிக்கல்? 

<இவ்வளவுதான் இந்த ஃப்ராடுக்கும் எனக்கும் நடந்த உரையாடல்>

நான் PDFஆக என் கதைகளை வெளியிட்டுவிட்டதால் உனக்கு ஏற்பட்ட நட்டத்தை ஏற்கத் தயார் என்று முன்வருபவனுக்குப் பெயர் உன் அகராதியில் ஃப்ராடா? இந்திய சரித்திரத்தில் எந்த எழுத்தாளன் இதைச் செய்ய முன்வந்திருக்கிறான்? என்னைப்போய் ஃப்ராடு எனச்சொல்லும் உன் வாதத்தை எந்த நீதிமன்றம் ஏற்கும்?

<ஆனால் தமிழ் இலக்கிய வெளியில் எப்போதோ செத்துப்போன இந்த எழுத்தாளன்>

செத்துப்போன இந்த எழுத்தாளனின் பிணத்தை, முந்தைய வருட கண்காட்சியில்கூட விற்றுத் தின்றுகொண்டுதானே இருந்தாய்?நூலக ஆர்டராய் பசியாறியது தனிக்கணக்கு. பிணத்தின் வாய்க்கரிசியான ராயல்டியையும் தின்ற உலகின் ஒரே சவுண்டி நீயாகத்தான் இருப்பாய்.

<சின்மயி, சாரு, ஜெயமோகன், எஸ்.ரா எப்போதும் யாராவது ஒருவரின் எச்சங்களை தின்று வாழ்வதுபோல இப்போது எனது எச்சங்களில் பசியாறும் மூர்க்கத்தில் இறங்கியிருக்கிறார்.>

மூன்று வருடங்களில் விற்றிருந்த எனது 400 பிரதிகளுக்கான ராயல்டியைக்கூட எனக்குத் தராமல் என் எச்சத்தில் வாழ்ந்த எச்சை நீ சொல்கிறாய் நான் எச்சங்களில் வாழ்பவன் என்று. இரவல் விசிறி மடிப்பு, திருட்டு காபி டபரா என்று 1930களில் எழுதி கல்கியின் டவுசரையே அவிழ்த்தவன் கூட உன் கணக்குப்படி எச்சங்களில் வாழ்ந்தவன் இல்லையா?

மிரட்டலும் பாராட்டும்
<நீங்க எழுதியிருந்த விவகாரங்களும் விகாரங்களும் படிச்சேன். ரொம்பப் பிடிச்சி இருந்துது. ரொம்ப ஒழச்சி எழுதி இருக்கீங்க. கடந்த ஐந்தாறு வருடங்கள்ல நடந்தது அதுல இருக்கு.>

ஏம்லே இதை எழுதினது நீயா நானா? அப்ப நான் பிணமா இருந்தனா இல்லை உசுரோட இருந்தனா? அது உனக்கு ஆகாதவங்களைப் பத்தினது, குறிப்பா சாரு வினவு லீனா பத்தியெல்லாம் அம்பலப்படுத்தினதுங்கறதால அந்த எச்சம் இனிச்சுதோடே! நீயெல்லாம் டிவில வந்து வாய நீட்டி கருத்து சொல்றே!

பிரபஞ்சனின் கதை அப்படி

<“என் அனுபவத்தில் இரு பதிப்பகங்கள் என்னை ஏமாற்றி யிருக்கின்றன. முதலாவது, இடதுசாரி இயக்கத்தோடு பிணைந்திருக்கும் ஒரு நிறுவனம். நான், எஸ். பொன்னுதுரை, வளர்மதி மூவரும் எழுதிய ஆறு நாடகங்களை எங்களது அனுமதி பெறாமலேயே அச்சிட்டு, 30 ஆயிரம் பிரதிகளுக்கு மேல் விற்றிருந்தது அது. கடைசியில், தோழர் நல்லகண்ணுவை அணுகி அவர் முன் பேச்சுவார்த்தை நடத்தி எங்களுக்குரிய பணத்தைப் பெற்றோம்.>

இடதுசாரிகள்டயாவுது கிடைச்சிடுச்சாமா! மனுஷ்ய புத்திரா உன் எச்சங்கள் பற்றிய கதையைப் பிரபஞ்சன் தி இந்துல சொல்றாரு கேட்டுக்கோ!

<இன்னொரு பதிப்பகம், இலக்கியப் பத்திரிகை நடத்திக்கொண்டு, தொலைக்காட்சிகளில் சர்வதேசப் பிரச்சினைகள் முதல் டிஎம்டி கம்பிகள் வரை எதுபற்றிக் கேட்டாலும் தொலைக் காட்சிகளில் அபிப்பிராயம் சொல்வாரே அவர் நடத்துகிற நிறுவனம். என் இரண்டு புத்தகங்களுக்கு அவர் எனக்கு ராயல்டியே தரவில்லை. எழுத்தாளர்களின் மரணத்துக்காகக் காத்திருக்கும் பதிப்பாளர்கள் உண்டு. ஏனெனில் அவர்கள் இறந்தவுடன் அவர்களது படைப்புகள் கிட்டத்தட்ட நாட்டுடைமையாகிவிடுவதைப் போல. அதற்குப் பிறகு ராயல்டி தொகையைத் தராமலேயே புத்தகங்களைப் பிரசுரிக்கலாம் என்பதுதான் காரணம் “ என்கிறார் பிரபஞ்சன்.>

என் எச்சையைத் தின்னு வாழ்ந்துகிட்டு இருக்கான் இந்த நியாயஸ்தன்னு சொல்றாரு பிரபஞ்சன்.

வாய்க்கு வாய் செருப்படி செருப்படினு பாட்டா கம்பெனி ஓனராட்டம் சொல்றியே இதைவிட செருப்படி வேற என்ன வேணும்?

எப்போதுமே இளைஞர்களுக்கு போலி இலக்கிய அந்தஸ்தையளித்து புத்தகம் போட்டு இலக்கியம் வளர்ப்பதாய் பிக்பாகெட் அடிக்கும் மோடி மஸ்தான் சொல்கிறான் நான் எச்சங்களில் வாழ்வதாய்.

தக்கார் தகவிலார் என்பதவரவர்தம்
எச்சத்தால் அறியப் படும் 

இலக்கியத்தில் புறம்தள்ளப்படவேண்டிய எச்சங்கள் எவை என விமர்சித்து எவனுக்கும் சொம்படிக்காது கெளரவமாய் வாழ்கிறேன் நான். 

எழுத்தாளனுக்கு சேரவேண்டிய ராயல்டி எனும் அவனது எச்சத்தை நக்கிக்கொண்டு கேவலமாய் வாழ்கிறாய்.நீ.

<இவருக்கு எதோ நான் பெரிய சதியில் ஈடுபட்டிருப்பதுபோன்ற தோற்றத்தை உருவாக்கி தனது பிராண்டல் வேலையை ஆரம்பித்திருக்கிறார்.>

திரும்பத் திரும்ப 600 ஐநூறு என்று மாற்றி மாற்றி பினாத்திக் கொண்டிருப்பது நீயா நானா?

<கிஷோர் கே சாமி போன்ற மனநோயாளிகளின் வரிசையில் இன்னொரு நபர். அவ்வளவுதான்.>

விருது வெளியீடு விழா மேடை என்று சொம்படிக்கவென்றே கேவலமான ஜந்து கும்பலை சேர்த்து வைத்துக் கொண்டு சுஜாதாவை காட்பாதர்போல காட்டிக்கொண்டு சுஜாதாவுக்கே ராயல்டி கொடுக்காமல் திருமதி சுஜாதாவையே புலம்ப வைக்கும் உன்னை ஆரோக்கியமானவன் என்றுதான் நாங்கள் ஏற்றுக் கொண்டாக வேண்டும்.

<மாமல்லனிடம் ஒரு பழக்கம் இருக்கிறது. அவர் வேலை செய்யும் கஸ்டம்ஸ் துறையில் பிடிபடும் தங்கம், கரன்ஸி, குற்றவாளிகளின் முகங்கள், கடத்தல் காரர்களின் மலக் குடலில் இருந்து தங்க நாணயங்களை வெளியேற்றுவது போன்ற ரகசிய விஷயங்களையெல்லாம் தன் செல்போன் காமிராவில் படம் பிடித்துக்கொண்டு வந்து போவார் வருவோர் இடம் எல்லாம் பெருமையாக காட்டிக்கொண்டிருப்பார்.>

எங்கள் துறையில் ஒன்று நடந்து முடியும் வரை மட்டுமே எங்களுக்கேக்கூட முழுமையாய் தெரியாதவகையில் கட்டிக் காக்கப்படும் ரகசியம். நடந்து முடிந்தபின் வெற்றிப் பெருமிதம். நூல் பிடித்தார்போல சாதித்ததன் களிப் பேருவகை, கட்டுப்படுத்தி செய்தி நிறுவனங்களுக்குக் கொடுக்கப்படும். அதற்கான காரணம் மக்களுக்கு செய்தியைச் சொல்ல வேண்டிய கடமை மட்டுமின்றி ஜனங்களிடம் குற்றங்கள் எப்படியெல்லாம் நடக்கின்றன என்கிற விழிப்புணர்வைன் ஏற்படுத்தி, இதுபோல நடப்பவை தெரியவந்தால் தகவல் தெரிவித்துக் குற்றங்களைத் தடுக்க பொது மக்களைத் தயார் படுத்தவும் துறையின் வெப்சைட்டிலேயே வெகுமதியும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. எங்கள் துறை வெளியிட்டிருக்கும் காபி டேபிள் புக் எனும் புத்தகத்திலேயே நான் எடுத்த சில படங்கள் வெளியாகி இருக்கின்றன. நிறைய பத்திரிகை நிறுவனங்களுக்கும் நூலகங்களுக்கும் சென்று 80களின் 90களின் துறை சார்ந்த சாதனைச் செய்திகளை சேகரிக்க நான் அனுப்பப்பட்டேன். பல தினங்கள் இந்த சேகரிப்பில் ஈடுபட்டதன் அங்கீகாரமாய் புத்தக உள் அட்டையில் என் பெயர் வெளியாகி உள்ளது.

மூடனே என்னைப் போட்டுக் கொடுப்பதாய் நினைப்போ? 

என் துறைப் படங்கள் எவ்வளவு வேண்டும் உனக்கு? கூகுளிலேயே கிடைக்கிறன. நான் ரகசியத்தை வெளியிட்டுவிட்டதாய் இவர் என்னைப் பெஞ்சு பேல் ஏற்றி நிற்க வைக்கப்போகிறாராம்.

சொம்பு சிவராமனே! பார்த்தாயா மனுஷ்ய புத்திரன் திருமதி சுஜாதாவின் பேட்டி டீசர்களை நீ போட்டுக்கொண்டிருக்கையில் உன்னை மறைமுகமாய் மிரட்டிய இவனை இப்போது நீ நக்கிக் கொண்டு என்னை மொட்டைக் கடுதாசி போடுபவன் என்று பொய் சொல்கிறாய். சந்தர்ப்பவாத நாய்கள்.

ராயல்டி ஜேப்படிக்காரனே! உன்னைப் போல், பிசினஸ் ஆதாயத்துக்காக எவனைப் பார்த்தாலும் இளித்துக்கொண்டிரா நேர்மையும் வெட்டிப் போட்டாலும் வெளியில் வரக்கூடாத ரகசியங்களை வராமல் பாதுகாக்கும் நெஞ்சுரமும்தான் எங்கள் நாளங்களில் ஓடிக்கொண்டிருக்கின்றன. உன் போன்ற சுள்ளான்களின் பொய்ப் புகார்களை பொழுது விடிந்து பொழுது சாய்ந்தால் சந்தித்துக் கொண்டுதானே இருக்கிறோம் நாங்களும் எங்கள் தலைமையும். 

உன் பிறவித் தொழிலான எழுத்தாளர்களைச் சுரண்டுவதை மட்டும் கண்ணுங்கருத்துமாகப் பாரடா என் கட்டித் தங்கமே!

புண்ணாக்கே போதுமா ரகசியம்? அவ்வளவும் கூகுளிலேயே கிடைக்கின்றன.


 <இப்போது அதே போல தனது புத்தகங்களையும் நினைத்துவிட்டார்.>

எதையும் நினைக்கவில்லை என் செல்லமே உன்னைத் துவைப்பதைத் தவிர.

<பிரிண்டிங்க் ஆர்டர்..லைப்ரரி ஆர்டர் என்றெல்லாம்>

கனம் கோர்ட்டார் அவர்களே, திரு. மனுஷ்ய புத்திரனுக்கு இப்போது கூட வாய்ப்பு தருகிறேன். நூலக ஆர்டரே என் புத்தகத்துக்கு வரவில்லை என்றும் நூலகத்துக்காக என்று பிரத்தியேகமாக 700ஓ 1000மோ பிரதிகள் அச்சடிக்கவில்லையென ஏன் திட்டவட்டமாய்க் கூற மறுக்கிறார்? அதனால்தானே அநாவசிய சந்தேகள் உண்டாகின்றன. வருட முடிவில் இத்தனை போடப்பட்டது. இத்தனை இந்த வருடம் விற்றது. இதற்கான ராயல்டி இவ்வலவு என்று எழுத்தாளர்களுக்கு கணக்கு வைத்துக் கொண்டால்தானேவருடாவருடம் சரியான வருமான வரியை செலுத்த முடியும். எந்தக் கணக்கும் யாருக்கும் கொடுப்பதில்லை என்றால், அரசுக்கு மட்டும் எப்படி சரியான கணக்கைக் கொடுக்க முடியும். 

<அடிக்கும் ஜல்லிகளுக்குப் பின்னே இருப்பதெல்லாம்>

புத்தகக் கணக்கு கேட்கையில் எல்லாம புலம்பல் ஜல்லியடிக்கும் இவர் சொல்கிறார் நான் ஜல்லி அடிப்பதாய். எதிரில் டிவி கேமரா இல்லை. இப்போதேனும் உண்மை பேசலாம்.

<ஒன்றே ஒன்றுதான்..உயிர்மைக்கு எதிரான ஆட்கள் கொஞ்ச நேரம் தன் பிருஷ்டத்தை சொறிந்துவிடுவார்கள் என்கிற அற்ப சுகம்..>

இதற்குப் பெயர்தான் திரு, மனுஷ்ய புத்திரன் குறிப்பிட்ட ”ஜல்லி” மைலார்ட். அடிப்படையே இல்லாமல் காரண காரியத் தொடர்பின்றி அச்சுபிச்சென உளறிக் கொட்டுதல்.

<சொறிந்துவிடட்டும்..அந்த இடத்தில் சூடு வைக்கும் நேரம் விரைவில் வரும்.>

ஏன் தென் சென்னையின் ராஜ்யசபா எம்பியாகத் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகிவிட்டதா? ஆனால் அது ராயல்டி ராப்பிச்சை அளவுக்கு எளிதாக கபளீகரம் செய்யக்கூடிய காரியமில்லை.

<இலக்கிய ரீதியாக எப்போதோ செத்துபோன ஒரு பிரேதத்திற்கு>

பிணந்தின்னியின் பேய்ப்பசியுடன் அந்தப் பிணத்தின் ராயல்டியையும் கடந்த மூன்று வருடங்களாய் தின்னவன் மனுஷ்ய புத்திரனாகிய நாந்தான் என்பதையும் சேர்த்துச் சொல்லுங்கள் டிவி உபாசகரே! 

<சர்ச்சைகளின் வழியாக சாரு உயிர் கொடுத்தார்.>

ஆமாம். விமலாதித்த மாமல்லன் என்கிற பிணம், மனுஷ்ய புத்திரனுடன் ஞாயிறு 12 ஜனவரியிலிருந்து மல்லுகட்டிக்கொண்டு இருக்க, இரண்டு நாட்கள் கழித்து அதன் நீட்சியாய், தி இந்துவில் சர்ச்சைகளின் வழியாக உயிர் கொடுத்தார்.

“ஒரு விஷயம் சொல்லட்டுமா? எனக்குப் பதிப்பாளர்கள் தரும் ‘ராயல்டி’ தொகை செல்பேசி டாப் அப் செய்வதற்கு மட்டுமே உதவுகிறது. என்னுடைய சிறந்த நாவலான ‘ராச லீலா’ 80 பிரதிகள்தான் போயிருப்பதாகச் சொல்கிறார் பதிப்பாளர். என்னைப் போன்ற பிரபல எழுத்தாளர்களுக்கு வருடத்துக்கு 20 ஆயிரம் பிரதிகள் விற்க வேண்டும். அப்போதுதான் ‘ராயல்டி’ கௌரவமாக இருக்கும். அதுவரை இதுபற்றிப் பேசுவதே அபத்தம்” என்கிறார் சாரு நிவேதா.]

சாருவின் ராச லீலாவை போட்டது யார்? - மனுஷ்ய புத்திரன்


80 பிரதிகள்தான் போயிருப்பதாகச் சொல்கிறார் பதிப்பாளர். அவர் யார் - மனுஷ்ய .புத்திரன்

<ஒரு புத்தகத்தைப் போட்டு நான் உயிர் கொடுத்தேன்.>

ஆதாயமின்றி தன்னலமின்றியா? நான் படித்து வளந்த எழுத்துக்கள் இவை என்று அன்று சொன்னது எந்த வாய்?

<இப்படி மயானத்தில் அது கூக்குரலிடுவதைத் தவிர அதற்கு செய்ய என்ன ஒரு காரியம் இருக்கிறது? வேடிக்கை பார்ப்பவர்கள் கொஞ்ச நேரம் நின்று அதை வேடிக்கை பார்த்துவிட்டுப் போங்கள்.>

என் காரியம் என்ன என்பதை காலம் சொலும் என் காலம் முடிந்தபின்.

<அந்த ஆவிக்கு இப்போது வேலை கொடுக்கிறேன். எனது ஒவ்வொரு எழுத்தையும் இனி படிக்க வேண்டும்..எனது ஒவ்வொரு டிவி நிகழ்ச்யையும் இனி பார்க்க வேண்டும் அதைப் பற்றியெல்லாம் இனி தொடர்ந்து எழுத வேண்டும்..பொறுக்கிகளோடு கூட்டுசேர வேண்டும். தினம் ஒரு அவதூறு அவர்களோடு சேர்ந்து எழுத வேண்டும்..நான் சொல்கிறவரை இதையெல்லாம் நிறுத்தக் கூடாது. உத்தரவு...>

அதற்குத்தான் புத்தகச் சோறு போட்டு வளர்க்கும் ஃபேஸ்புக் சொம்புகள் உள்ளனவே நான் வேறு எக்ஸ்ட்ராவாய் எதற்கு?