Monday, January 26, 2015

அறச்சிக்கலும் அரைச்சிக்கலும்

ஒல்லியாய் பாவமாய் தோற்றமளித்த பையன் சிறுகதை அருமை எழுத்தாளர் என்று கோர்வையில்லாமல் தள்ளாடிப் பேசிக்கொண்டிருந்தான் கால சுப்ரம்ண்யத்திடம். பக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த என் பைக்கின்மேல் ஐபோனை நோண்டியபடி உட்கார்ந்திருந்தேன்.  கால சுப்ரமண்யம் சொன்னார் இவர்தான் துறையூர் சரவணன் என்று. எதிரிலிருந்த சந்திரா தங்கராஜ் எதையோ சொல்ல என்னருகில் வரப்பார்த்தார். இடையில் இந்த இலக்கியத் தள்ளாட்டம். அவர் நகருங்க என்றார். வாழும் இலக்கியம் வழிவிட மறுத்தது. யாரோ ஒருவர் இலக்கியத்தைக் கைபிடித்து இழுத்ததில் இலக்கியம் பெயர்ந்து வெற்றிடமானதும் சந்திரா வந்து எஸ்.ரா டார்ச்சர் மெசேஜ் வந்துடுச்சி என்று அப்போது நான் போட்டிருந்த ட்விட் பற்றிக் குறிப்பிட்டு விழுந்துவிழுந்து சிரித்தார். அவர் போனதும் பாசிபோல் திரும்பப் படர்ந்தது இலக்கியம். சிறுகதை அருமை எழுத்தாளர் எனத் தொடங்கிற்று என்னிடம்.

குடிச்சிட்டுப் பேசினா எனக்குப் பிடிக்காது

உங்குளுக்குப் பிடிக்காட்டிப் போகட்டும் அதுக்கென்ன

அடிங்கோத்தா பெரிய பூளா நீயி. போடா மயிறு. ஓத்த எங்க வேணா எப்பிடி வேணா இருந்துக்கோ. எங்கிட்ட என்னா மயிறுக்கு வரே

போதை இறங்கிவிட்டிருக்க வேண்டும். அமைதியாய் போய் ஒரு நாற்காலியில் உட்கார்ந்துகொண்டது, சற்று நேரத்துக்குமுன் சூராவளியாய் சுழன்றுகொண்டிருந்த இலக்கியம்

இப்படி யாராவது சொன்னாதான் கேக்கிறார் என்றார் அருகிலிருந்தவர்.

நாங்கள்ளாம் இலக்கியக் கூதியான்கள் எப்படி வேணும்னா இருப்போம். அடுத்தவன் உரிமையைப் பத்தி எங்களுக்கு எந்தக் கவலையுமில்லை. எங்கள் அக்கறை எங்கள் உரிமை பாதிக்கப்படுவது பற்றி மட்டுமே. 

நூறு கோடிக்கு இறக்குமதியாக இருக்கும் ஜெர்மன் இயந்திரத்தில் அச்சேறப்போகும் இலக்கியப் பத்திரிகையின் பொறுப்பாளரை வெற்றிகரமாய் எதிரியாக்கிக் கொண்டாயிற்று. இன்று மதியம் உண்ட உணவு செரித்தது.

M 80 வாங்கிய 89க்கு முன் குடித்துக்கொண்டிருந்த சைக்கிள் காலத்தில் கூட, தள்ளாடியபடி வழி கேட்பவனுக்கு பதில் சொல்வதைத் தவிர்ப்பேன். எம்ப்பா இப்படி மனிதாபிமானமே இல்லாம நடந்துக்கிறே என்று நம்பிராஜன் கேட்பார். சககுடிகாரன்கற பாசமா. அவனை மொதல்ல மனுஷன்கற கவுருதையோட இருக்கச் சொல்லுங்க அப்பறம் பாக்கலாம் அபிமானம் காட்டறதைப் பத்தி என்பேன்.

மத சாதியவாதிகளிடம் பெருமாள்முருகன் அனுபவித்ததைவிட மேடையில் அமர்ந்திருந்த எஸ்.ரா அதிக டார்ச்சரை அனுபவித்துக்கொண்டிருந்தார் என்று தோன்றியது. என்னதான் கருத்துரிமைக்காக என்றாலும் ஏறக்குறைய நான்கைந்து மணி நேரம் ஒரே விசயத்தை திரும்பத்திரும்ப எல்லோரும் பேசுவதை ஒன்றுக்குக்கூட போக வழியின்றி ஒருவர் கேட்டுக்கொண்டிருப்பது என்பது எவ்வளவு பெரிய துயரம்.  உலகத்தில் உள்ள அத்தனை மனிதர்களின் சக்தியையும் திரட்டி ஒருவனுக்கேக் கொடுத்து அமர வைத்தாலும் ஒருவனால் தாங்கிக்கொள்ளக்கூடிய காரியமாகத் தோன்றவில்லை. ஒரே மாதிரி அவர் எழுதுவதை நாம் அனுபவித்துக் கொண்டிருப்பதைவிட இது அதிகம் என்று தோன்றுகிறது தானில்லையா.

யூமா வாசுகியாய் இருக்கவேண்டும். சற்றுத் தள்ளி நின்றிருந்தவரைச் சுற்றிச் சிறிய கூட்டம். அவரிடம் வந்தது ஒரு பரட்டை சுருட்டைமுடித் தள்ளாட்டம்.

யாரவுரு பெரிய ரவுடியா

சிறுகதை...

யாரு, மூஞ்சைக் காட்டாம முதுகைக் காட்டிகிட்டுப் படம் போட்டுகிட்டு இருக்காரே அந்த ஆளா. தொப்பையப் பாரு...

ஜாடை பேச்சை இதுவரைக் காதால் பார்த்துக்கொண்டிருந்தவன், ஐபோனிலிருந்து தலையைத் திருப்பிப் பார்த்தேன்

என்னா தீர்க்கமா பாக்குறாரு...

என் முகத்தில் சிரிப்பில்லை என உறுதியானதும்

என்னா மொறைக்குறாரு...

என்ன சொன்னே

அருகில் வந்து நின்றது பெரிய உருவத்திலிருந்த சின்னப்பையன்

என்ன சொன்னே

என்ன சொன்னேன்

போ. போயிடு.

இதற்காகவே காத்திருந்ததைப்போல் உடனே போய்விட்டது

7:30க்கு உள்ளே நுழைந்து கூட்டத்தின் விளிம்பில் நின்றபோதே யாரோ அவதூறு கிளப்பிவிட்டிருக்கவேண்டும் இவர் இன்னார் என. ஒருவர் கேட்டார் பேசச் சொல்லி. இல்லை வேண்டாம் என்றேன் கூச்ச சிரிப்புடன். இல்லை ஓரிரு வார்த்தைகள் என்றார். இதற்கு மேலும் வற்புறுத்தினால் இப்படியே வெளியேபோய்விடுவேன் என்றேன் சிரித்தபடி சீரியஸாய். விட்டுவிட்டார்.

பேசியிருக்கலாம். கண்டித்துப் பேசியிருந்தால் பிரியாணி கிடைத்திருக்கும். குறைந்தபட்சம் பிரியாணிக்காகவாவது கண்டித்துப் பேசியிருக்கலாம்.

கண்டனக் கூட்டத்தில் பேசியவர்கள் எல்லாம் பிரியாணிக்காகப் பேசினார்கள் என அவதூறு செய்துவிட்டதாய் ஏதாவதொரு கருத்து சு இதைத் திருச்செங்கோட்டுக்காரர்களாய் திரித்துப் பொங்கக்கூடும். பெருமாள்முருகனைப் போலவே எரிக்க என்னிடம் இருப்பது pdf மட்டுமே.

கிராம் 570 ரூபாய் விற்ற 2005ல் வாங்கிய 3,28,500/-க்கு  190 பக்கத்துக்கு காதுப்பணி ஆராய்ச்சி செய்து நாவல் என்று 2010ல் ஒப்பேற்றலாம் எனும்போது பிரியாணிக்காகக் கண்டித்துப் பேசுவதிலென்ன பெரிய அறச்சிக்கல். சிக்கனோ மட்டனோ, ஒசியில் நல்கையாய்த்தானே கிடைக்கிறதென்று ஒவராய் தின்றிருந்தால் காலையில் மலச்சிக்கல் வந்திருக்கும் என்பதுதான் யதார்த்தம்.

கைக்காசு செலவழித்து சங்கீதாவில் சாப்பிட்ட நெய் வெங்காய ரவா நன்றாகவே இருந்தது. நாளைக் காலை சிக்கலிருக்காது.