Thursday, January 29, 2015

ஈகோ சார் வெத்து ஈகோ

லக்ஷ்மியின் அருள் பெற்று இயற்றப்பட்ட புனித நூலான மாதொருபாகனுக்காக சரஸ்வதி கடாக்ஷம் பெற்ற பெருமாள்முருகனை நியாயப்படுத்த, பாவம் இன்னும் எத்தனை எடுத்துக்காட்டுக்கள் மெத்தப் படித்த மேதாவிலாசிகளால் காட்டப்படுமோ தெரியவில்லை. 

<சரித்திர நாவல்கள் நமக்கு என்ன தருகின்றன எங்கெங்கே அழைத்துச் செல்கின்றன என்பதை ஆராய சுவராசியமாக இருக்கிறது. டெல்லியை நிர்மாணித்த லுட்யென்சின் மனைவி ஜே கிருஷ்ண மூர்த்தியுடன் நெருக்கமாக இருந்தார்.பின்னர் அவரைப் பற்றி பல நூல்கள் எழுதிய மேரி லுட்யென்சின் தாய்தான் இவர் என்பது குஷ்வந்த் சிங் சொல்லும் வரை எனக்கு உறைக்கவில்லை>
https://m.facebook.com/boganR/posts/950627218290249

ஜிட்டு கிருஷ்ணமூர்த்திக்கு எவளுடன் தொடர்பிருந்தது அவளுடைய மகளுக்கும் அவருடன் தொடர்பிருந்திருக்கலாம் என்கிற தனி நபர்கள் பற்றிய அவள் ஒரு தொடர்கதை டைப் அம்மா பொண்ணை ஒருத்தனே போட்ட குஷ்வந்த் சிங்கின் அனுமானக் கற்பனை வரலாற்றுப் புனைவும் திருச்செங்கோடு கலாச்சாரத்தை ஆராய்ந்து பதிவுசெய்கிறேன் பேர்வழி என்று நல்கை பெற்று அந்த ஊர் மக்கள் பலரிடமும் 'கதை' கேட்டு ஆராய்ச்சி செய்து எழுதப்பட்டதாய் முன்னுரையிலேயே அறிவிக்கும் நாவலும் ஒன்றாகுமா. 

போகிற போக்கைப் பார்த்தால், பெருமாள்முருகனுக்காக இணையத்தில் கல் சுமப்பவர் மண் சோறு உண்கிறவர்களெல்லாம் ஒன்றுகூடி இயக்கம் தொடங்கி, அடுத்து லேடி மவுண்ட்பேட்டனுக்கும் நேருவுக்கும் இருந்த தொடர்பு முதல் அவருக்கிருந்த வைப்பாட்டிகள் மூலமாய் டெல்லியில் குறிப்பிட்டப் பகுதியில் ஒரு சந்ததியே உருவாகியிருப்பதாய் எழுதியிருப்பதற்கெதிராய் அந்தப் பகுதி மக்களைக் காங்கிரஸ் பேரியக்கமும் காஷ்மீர உத்திரப் பிரதேச பார்ப்பனர்களும் தூண்டிவிடவில்லை பார்த்தீர்களா என்று நிரூபிப்பதற்காகவேண்டி புத்தம் புதிதாய் வரலாறும் கைச்சரக்குமாய் கலந்த நாவலொன்றை எழுதச் சொல்லி புன்னகைத்தபடி உண்டிகுலுக்கி ஜெயமோகனிடம் அடுத்த ப்ராஜெக்டாய் பதிவு செய்துகொள்வார்கள் போல இருக்கிறது. 

<டெல்லி நாவலில் காந்தி கொலையும் விவரிக்கப்படுகிறது.பாகிஸ்தானிலிருந்து விரட்டப்பட்டு டெல்லிக்கு ஓடி வந்த ஒரு சீக்கியர் ஆர் எஸ் எஸ் சில் சேருகிறார்.அவருக்கு காந்தியைக் கண்காணிக்கும் பொறுப்பு அளிக்கப்படுகிறது .சீக்கியருக்கு காந்தியுடனேயே வரும் சுஷீலா நாயரை ரொம்பப் பிடித்திருகிறது .கொஞ்சம் வயதாகிவிட்டாலும் இவர் அவருடன் உடலுறவு கொள்ள விரும்புகிறார் ! ஆம்!இப்படித்தான் குஷ்வந்த் சிங் எழுதி இருக்கிறார் .நிஜமான பெயருடைய அமைப்பு.ஒரு நிஜப் பெண்மணி .இவற்றையெல்லாம் பயன்படுத்துவதில் குஷ்வந்த் சிங்குக்கு எந்தத் தயக்கமும் இருக்கவில்லை என்பது வியப்பையளிக்கலாம் 

ஆனால் அது அந்தக் காலம்>

இதில் நிஜமான பெயருடைய பெண்ணுடன் நிஜமான இயக்கத்தைச் சேர்ந்தவர் உடலுறவுகொள்ள 'விரும்புவதாய்' வந்திருப்பதும்

திருச்செங்கோட்டில் 60-70 வருடங்களுக்குமுன்னால் வரை 'சாமி குழந்தை' 'சாமி கொடுத்த குழந்தை'யாகக் கோவில் திருவிழாவில் பிறந்த தேவடியாப் பையர்களின் சந்ததியே உண்டு என்று நல்கை அராய்ச்சியின் முடிபாய் அப்பட்டமாய் அறிவிக்காமல், எழுத்தாளர் போகனும் குஷ்வந்த் சிங்கும் இதை ஆதரிக்கும் வாசக மேதைகளிடம் உதட்டோரப் புன்னகையைத் தோன்றவைக்கும் அளவுக்கு பூடகமாய் எழுதுவது போல பெருமாள்முருகனை எழுதவிடாமல் தடுத்தது எது? ஆராய்ச்சி செய்ய வாங்கிய நல்கையின் நிர்பந்தமா அல்லது மாதொருபாகன் எழுத்தாளரின் இயல்பான நுட்பமின்மையா என்பதை எண்ணிப் பார்த்தால் இதை வாசிப்பவரின் உதட்டோரம்கூட புன்னகை மலர வாய்ப்புண்டு. 

உண்மையும் கற்பனையும் கலந்து எடுக்கப்பட்ட ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்டில், வதைக்கப்பட்ட யூதர்களின் வாழ்க்கை பற்றிக் காட்டுவது தங்களை அவமானப்படுத்துவதாய் அந்த யூதர்களின் சந்ததியினர் கொதிப்பார்களா அல்லது நன்றி கூறுவார்களா. 

உண்மையும் வரலாறும் கலந்து எடுக்கப்பட்டதை அந்த யூத சந்ததி பார்த்துவிட்டு சும்மா இருக்கிறதே திருச்செங்கோட்டு திருவிழா சந்ததி ஏன் கொதிக்கிறது என்று லா பாயிண்டு காட்டி மடக்குவது என்ன சும்மாவா. இதற்கெல்லாம் எவ்வளவு வாசிப்பறிவு வேண்டும்.

கோவிலுள்ள எல்லா தலங்களிலும் சுவாமி தரிசனத்துக்கு வருவோரின் வசதிக்காக ஏராளமான லாட்ஜ்கள் கட்டப்பட்டிருக்கும் 'உண்மை' எல்லோருக்கும் தெரியும். தரிசனத்துக்காக வந்து தங்கி இருப்பது போன்ற பாவனையில் சில லாட்ஜ்களில் பிராத்தல் நடபெறும் 'உண்மையும்' எந்த ஆராய்ச்சியும் செய்யாமலே எல்லோருக்கும் தெரியும். 

திருப்பதியிலோ சபரிமலையிலோ இருக்கும் லாட்ஜில் 'ஒருவன்' பக்தன் போல் போய் சாமான் போட்டதாய் எழுதப்பட்ட கதையை யாராவது ஒருவன் எதிர்க்க வாய்ப்புண்டு ஊர்கூடி எதிர்ப்பதாய் தோற்றமாவது காட்ட வழியுண்டா. 

திருப்பதி சபரிமலையில் உள்ள லாட்ஜ்களில் எல்லாம் சாமி பார்க்கப்போவதாய் சொல்லிக்கொண்டு சாமான் போடுவது மட்டுமே நடக்கிறது என்று கடவுளை வழிபடும் மூட நம்பிக்கையை எதிர்ப்பதற்கென்றே இருக்கும் விடுதலை பத்திரிகைகூட கருத்துச் சுதந்திரம் என்கிற பெயரில் எழுதத் துணியாது இல்லையா.

இல்லை இந்த 'குறிப்பிட்ட லாட்ஜில் பிராத்தல் நடக்கிறது' என்று பெயர் போட்டு ஆதாரத்துடன் எந்த சார்புமற்ற பத்திரிகை எழுதினால், திருப்பதி தேவஸ்தானமோ அல்லது பக்த ஜன சபையோ அதை எதிர்க்குமா. 

அப்படி அதை அம்பலப்படுத்த அந்தப் பத்திரிகையில் எழுதியவன் மீது வட்டாட்சியர் நடவடிக்கை எடுப்பாரா. அப்படியே தனிஉப்பட்ட காழ்ப்பில் நடவடிக்கை எடுத்தால் இணையமல்ல கோர்ட்டே அதற்கெதிராய் சுயேச்சையாய் வழக்கை தொடுக்க வாய்ப்புண்டா இல்லையா

தனி நபர் கதைகளில் ஊர் அடையாளத்தைப் பயன்படுப்படுவதற்கும் ஒட்டுமொத்த ஊரை பற்றிய கதையில் ஊர் அடையாளத்தைத் தவிர்ப்பதற்குமான பொறுப்புணர்வு பூடகம் பற்றியெல்லாம் அரிச்சுவடி வகுப்பெடுத்தாகவேண்டிய லட்சணத்திலா இருக்கிறது இலக்கிய உலகம்.

சாதாரண மனிதர்களால் சாதாரணமாய் தவறு செய்துவிட்டு சாதாரணமாய் சாரி சொல்லிவிட முடியும். இலக்கியப் புடுங்கிகளுக்கு சாதாராணமாய் தங்களை சாதாரண மனிதர்களாக நினைத்துக் கொள்வதே கனவிலும் கற்பனை செய்துபார்க்க முடியாத காரியம். ஆனால் சர்வ சாதாரணமாய் தவறை மட்டும் செய்துவிட்டு அதை பிறப்புரிமைபோல் தமக்குள் எழுதிப் புன்னகைத்துக்கொள்ள மட்டும் சாதாரணமாய் முடியும். இதுவரை எழுத்தாளர்களுக்கு இருந்த இந்த வியாதி இப்போது வாசகர்களுக்கும் தொற்றிக்கொண்டுவிட்டது.

இந்த வியாதியின் பெயர் ஈகோ சார் வெத்து ஈகோ.