Thursday, July 9, 2015

அலைகள் ஓய்வதில்லை

படம் முழுக்க செக்ஸைக் காட்டி கடைசி சீனில் அதன் தீமையைக் காட்டி சென்சாரில் செக்ஸ் எஜுகேஷன் படம் என்று சான்றிதழ் பெறும் பிட்டுப் படங்களைப் போல பத்திரிகையில் செக்ஸ் பட நடிகை பற்றிய கட்டுரை எனக் கிளுகிளுப்பாய் பரபரப்பாய் மார்காட்டும் படத்தைப் போட்டு தலைப்பில் சிவப்புக் கட்டமிட்டு அதன் உள்ளே பெரிதாய் A போட்டு வாசகனை வா வா என அழைத்து இறுதியில் ரெண்டு வார்த்தை அறிவுரைபோல் கூறும் பம்மாத்துக் கட்டுரையைத் தன் குழந்தையின் பெயரில் வெளியிடும் கேவலத்தை சுட்டிக் காட்டுபவன் மனநோயாளி என்றால், அதை எழுதி வெளியிட்டவனை என்னவென்று அழைப்பீர்கள். 


இப்படியொரு A மேட்டரை, நான் உட்படப் உங்களில் பலர் படிக்கக்கூடும் ஆனால் உங்களில் எத்தனைபேர் இதை எழுத முன்வருவீர்கள். ஒருவேளை உங்களது தொழில் நிர்பந்தம் காரணமாய் எழுத நேர்ந்தாலும் உங்களில் எத்தனைபேர் உங்கள் பெண் குழந்தையின் பெயரில் அதை வெளியிடுவீர்கள் என, என்னை மனநோயாளி என்று கட்டம்கட்டும் முன்பாக அவரவர் மனதுக்குள் கேட்டுக் கொள்ளுங்கள் 

அலைகள் ஓய்வதில்லை 
- வெள்ளை ஆடை கட்டிய நீலப் படம். 
வயதுக்கு வராதவர்கள் செய்வதும் அதை வயதுக்கு வந்தவர்கள் பார்ப்பதும்
- ஜெயகாந்தன் 

ஜெயகாந்தன் தமது தனி வாழ்வில் ரொம்ப ஒன்றும் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தவரில்லை என்பது ஊரறிந்த ரகசியம். அதற்காக அவருக்கு இதைச் சொல்ல உரிமையில்லை என்று சொல்லிவிடமுடியுமா.

எழுத்தாளனின் வேலை வெட்கங்கெட்ட சமூகத்துக்கு சொறிந்து கொடுத்துக் கொண்டிருப்பதன்று. கேவலத்தைக் காண நேர்கையில் எட்டி உதைப்பது.