Thursday, November 24, 2016

தவிப்பு [சிறுகதை]

எவ்வளவு அடித்தும் யா அல்லா அல்லா என்கிற வார்த்தையைத் தவிர வேறு எதுவும் அவன் வாயிலிருந்து வரவில்லை. சின்னப் பையன். இன்றெல்லாம் இருந்தால் இருபது இருபத்தியிரண்டு வயது இருந்தாலே அதிகம். இப்போதுதான் கல்யாணமாகி மனைவி முழுகாமலிருக்கிறாள் என்று திரட்டப்பட்டத் தகவல்கள் கூறின. இளசுக்கு இப்படி ஒரு வைராக்கியமா என்று விசாரணை அறையைவிட்டு வெளியில் போன பின்பு வியக்காதவர்கள் இல்லை. 

Sunday, November 20, 2016

வரவேற்கப்பட வேண்டிய ஆவேசமும் வழக்கம்போல சில அபத்தங்களும்


//மூன்றாவதாக, ஹவாலா. இந்தியாவின் மிகப்பெரும் செல்வம் மானுட உழைப்பு. முதன்மையாக நாம் ஏற்றுமதிசெய்வதே கைகளையும் மூளையையும்தான். அந்தப்பணம் எங்கும் பதிவாகாமல் வரிகட்டப்படாமல் இங்கே வரும்போது நம் பொருளியல் பெரும் இழப்பை சந்திக்கிறது.// 

அடக் கொடுமையே இதுவா ஹவாலா. 

Monday, October 24, 2016

கள்ள உறவும் நல்ல உறவும்

இன்று மதியம் 3:12க்கு ஐபோனில் ஓர் அழைப்பு வந்தது. தான் இன்னார் பேசுவதாக சுய அறிமுகம். முழுப்பெயரைக் கூறி, அவர்தானா என உறுதிசெய்துகொண்டேன். பிறகு அவருக்கேன் செலவு பாவம் என்று என் ஓஸி ஜியோ போனிலிருந்து நானே அழைத்தேன். இதற்கு மேல் அதை விவரிக்கத் தொடங்கினால், அடையாளம் வெளிப்பட்டு சொந்த வீட்டிலேயே அவருக்கு சோற்றுக்கேத் திண்டாட்டமாகிவிடும் எனவே இத்தோடு நிறுத்திக் கொள்வோம். 

Sunday, October 23, 2016

கிளிஞ்சல்கள்

அந்தக் கடற்கரையை ஒட்டிய நகரத்தின் கடைத்தெருவில் அண்ணனும் தங்கையுமாக இரண்டு குழந்தைகள் வேடிக்கை பார்த்தபடி நடந்து வந்துகொண்டு இருந்தனர். அண்ணனுக்கு ஆறு வயதும் தங்கைக்கு நான்கு வயதும் இருக்கக்கூடும்.

Thursday, October 20, 2016

பிரேதத்தைக் கிளப்பிவிட்ட பிதாமகருக்கு

சி.என். அண்ணாதுரையை விட நான் மோசமான எழுத்தாளன் இல்லை என்பதை திரு கருணாநிதியே ஒப்புக் கொள்வார் என்று நினைக்கிறேன். மாமல்லனிடமும் நேரடியாகக் கேட்கிறேன். அண்ணாத்துரையை விட நான் மோசமான எழுத்தாளர் இல்லைதானே? 
- சாரு நிவேதிதா அந்நியன் - 2

Sunday, October 16, 2016

அடடே ஓலாவைப் போலவே கூப்பிட்ட உடனே வருகிறதே போலீஸ் பெட்ரோல்

நேற்றிரவு ஏர்போர்ட்டில் ஏதோ பஞ்சாயத்தாக இருக்க வேண்டும். முன் தின நெடுந்தூர பைக் அலைச்சலில் அசந்து தூங்கிக்கொண்டிருந்தவனை எழுப்பியது அதிகாரியிடமிருந்து வந்த அழைப்பு. 

Wednesday, September 28, 2016

ஆல் தி பெஸ்ட் ஆண்ட்டீஸ்

இன்று மதியத்தைத் தாண்டி 4 மணி வாக்கில் கைபேசியில் அழைத்த பெண்மணி கூறினார், என்ன அநியாயம் நடக்கிறது எனப் பாருங்கள் என்றார். 

Tuesday, September 27, 2016

சாயியே நை சாயியே

பிறந்த வீட்டின் உறவு இன்னமும் நீடித்துக்கொண்டிருக்கும் ஐந்தாறு அலுவலக நண்பர்களுக்கு வெகுமதியாக சில லட்சங்கள், DDயாக வந்திருந்தன. அவற்றைப் பணமாக வங்கியில் மாற்றி, ருபயாகப் பார்க்கும் முன், ரெவின்யூ ஸ்டாம்பில் கையொப்பமிட்டு பிறந்த வீடான பூர்வ அலுவலகத்தில் கொடுத்து, சர்வீஸ் புக்கில் பதிவு செய்தாக வேண்டும். 

Sunday, September 25, 2016

ஆத்மாநாம் - 2083

கைபேசியில், தம் பெயர் கல்யாண்ராமன் என்றும் ஆத்மாநாம் பற்றிக் காலச்சுவடுவில் கட்டுரை எழுதியவர் எனவும் தம்மை அறிமுகப்படுத்திகொண்டவர், ஆத்மாநாமின் வெளிவராத கவிதைகள் ஏதும் என்னிடம் இருக்குமா என்று கேட்டுக்கொண்டு இருந்தார். என்னிடம் இருந்த ஆத்மாநாம் தொடர்பான ஓரிரண்டு கடிதங்களை ஏற்கெனவே என் பிளாகில் பதிவேற்றிவிட்டதாக நினைவு என்று கூறிவிட்டேன். ஆனால் அவரோ விடுவதாக இல்லை. திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டே இருந்தார். சமயத்தில், அவரிடம் எரிச்சல்கூடப் பட்டிருக்கிறேன். 

லும்ப்ப முனி

Friday, September 16, 2016

வாணிஶ்ரீயும் வாநீஶ்ரீயும்

வாணிஶ்ரீ பற்றிய தன் கவிதையை, எவ்வளவு தேடியும் என் ஃபேக் ஐடியில்கூடத் தென்படவில்லை என்பதால் பப்ளிக்காகவின்றி தம் நண்பர்களுக்கு மட்டுமே பகிர்ந்திருக்க வேண்டும் வாணிஶ்ரீ. 

Wednesday, September 14, 2016

ஆப் பாயில் லாலிபாப் செய்துவரும் அவதூறு

சரக்கடித்தபடி சாராய எதிர்ப்பை ஆதரித்ததோடு மட்டுமின்றி, மகான் போல போஸ்கொடுத்துக் கொள்ளும் மனநல மருத்துவர், குடியை எப்படி சிலாகித்து ஆராதிப்பவர் என்பதை அவர் எழுத்தையே ஸ்கிரீன்ஷாட் சாட்சியமாக்கியதும், தம் போலித்தனம் பொதுவெளியில் அம்பலமாகிவிட்டதே என பதறிப்போய் என்னை அவர் கழுவி ஊற்றுவது நியாயமான காரியம். ஜனநாயகத்தில் அதற்கு அனுமதியும் உண்டு. அதைச் செய்ய அவருக்கு உரிமையும் உண்டு. 

Monday, September 12, 2016

குழப்பவாத பெண்ணீய கும்மி

இந்தப் பெண்ணீய ஆப் பாயில்களின் பிரச்சனையே ஆத்திலே ஒரு கால் சேத்திலே ஒரு கால் என விளையாடிக்கொண்டு இருப்பதுதான். 

Sunday, September 11, 2016

கூலி இல்லாத வேலையும் ஓஸி விருந்து ஓம்பலும்

இதை வாசிக்கும் எழுத்தாளர்கள் இதை ஒரு பிரச்சினையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். என் மீது உங்களுக்கு ஆயிரம் விமர்சனம் இருந்தாலும், இதை ஒரு பொதுப் பிரச்சினையாகக் கொள்ளவும் - சாரு நிவேதிதா

Saturday, September 10, 2016

நக்ஸலைட் ஜோசியம்

நமக்குப் பாடம் எடுக்கிறார் வன்முறையை போதிக்கும் நக்ஸலைட் காம்ரேட்

Thursday, September 8, 2016

ஆன்மாவற்ற முண்டங்களே மூடிக்கொண்டு கிடங்கள் - கூலிக்கு மாரடிக்க வந்தவனில்லை நான்

சின்மயி விவகாரம்: மறுபக்கத்தின் குரல் - டிசம்பர் 2012

காட்பாடி காட் பாடி கோட்பாடு கோட் போடு

இறைநம்பிக்கையிலிருந்து விடுபட்டவர்கள் மனிதனை பீடத்தில் ஏற்றாமல் இருக்கவேண்டும் என்று ஆல்பர்ட் காமு எச்சரித்தார். பட்டம் குடுத்தே பழகிவிட்ட நமது சூழலில் இப்பொழுது படைப்பாளியை பீடத்தில் ஏற்றி பூஜை செய்கிறார்கள். ஆனால், யாருக்கும் ஒளிவட்டம் தேவையில்லை. ஏனென்றால் அது ஒரு மாய வர்ணிப்பு என்பது ஒரு கோட்பாடு நிலை. சிக்கல் எங்கிருக்கிறது என்றால் அந்த மாயத்தில் தங்கள் உணர்ச்சிகளை முதலீடு செய்துவிட்டவர்களுடன் தர்க்கரீதியான ஒரு உரையாடலில் ஈடுபடுவது கடினம்.

- வெங்கடேஷ் சக்கரவர்த்தி

Sunday, August 14, 2016

கிழிஞ்சிடுத்து


என்ன பாட்டி நேத்துக்கூட நன்னான்னா இருந்தே இப்படி திடீர்னு ICUல அட்மிட் ஆயிட்டே

Saturday, August 13, 2016

எரிகிறபோதே தெரியாத முண்டத்துக்கு இருட்டில் என்ன தெரியும்

அம்பேத்காரிஸம் பெரியாரிஸம் FBக்கு. அல்ட்டிமேட் நாடாரிஸம் தன் குடும்பத்துக்கு என புக்கு நக்கி போஸ்ட்டு போட்டு, கடலை போடவும் அம்பேத்கார் தலித் என்கிற வார்த்தைகளைக் கேட்டதுமே ஆ இதமாக இருக்கு இன்னும் கொஞ்சம் தடவிக்கொடு என கழுத்தைத் தூக்கும் அப்பாவிகளிடம் சமூக நீதி சிந்தனையாளராக ஃபார்ம் ஆகிக் கொண்டிருக்கும் இந்த அற்பப் பயல் தன்னை அறிவுஜீவியாய்க் காட்டிக்கொள்ள எவ்வளவு அயோக்கியத்தனமாய் ஒரு பொய்யை பக்கத்தில் இருந்து பார்த்ததைப் போல் அலசுகிறான் என்று பாருங்கள்.

Saturday, August 6, 2016

புத்துயிர்ப்பு

அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்.

யோவான் 20:29 

Sunday, July 31, 2016

போயாவும் பாயாவும்

நேற்றும் இன்றுமாக, பிணையில் அந்த ஓலா ஓட்டுநர் வெளியில் வரவேண்டுமே என்கிற கவலையும் காரியங்களுமாகவே கழிந்தன. நேற்று மதியமே கிடைத்திருக்க வேண்டிய பெயில் வழக்கத்துக்கும் அதிகமான எண்ணிக்கை காரணமாக தாமதமாகி பாண்டு மூவ் ஆகி, ஆலந்தூர் கோர்ட்டிலிருந்து புழலை நோக்கிப் புறப்படவே, ஏறக்குறைய ஏழு மணி ஆகிவிட்டது. சிறையின் உயர்மட்டத் தொடர்புகள் வரை தனிப்பட்ட ரீதியில் கைபேசி வழியே தொடர்புகொண்டும் தயார் நிலைக்குத் முன்னேற்பாடுகள் செய்தும்கூட, யதார்த்தத்தில் காலையில்தான் வெளியில் வர முடியும் என்றாகிவிட்டது. 

Saturday, July 23, 2016

சிந்தனைச் சிற்பி

பிரபல ஃபேஸ்புக் அம்பேத்கார் பெரியார் மொக்கை வெறும் மொக்கை மட்டும் இல்லை இணையத்திலேயே என்ன நடக்கிறது நடந்தது என்பதைக் கூட சரிவரத் தெரிந்துகொள்ள துப்புகெட்ட மொக்கை மட்டுமல்ல எதையாவது எதனுடனாவது தப்புத்தப்பாய் முடிச்சு போட்டு தன்னை ஒரு சிந்தனைச் சிற்பியாக முன்னிருத்திக்கொள்ள ஃபேஸ்புக்கில் முண்டியடிக்கும் மெண்ட்டல் என நிரூபித்து இருக்கிறது. 

பிறவி மொக்கையும் பிரபல ஃபேஸ்புக் மொக்கையும்

Tuesday, July 19, 2016

ஆண்ட்டி ஒரு கொலை செய்தாள்

உழைப்பவர்களின் கூலியை அவர்களது வியர்வை உலரும் முன்பே கொடுத்து விடுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இப்னுமாஜா ஹதீஸ் எண்: 2443

Saturday, July 16, 2016

கச்சிதம் கனகச்சிதம்

எவிடென்ஸ்  கதிர், மனித உரிமைக்குப் போராடுவதற்காக என்று ஓர் அமைப்பையே வைத்துக்கொண்டு செயல்படுபவரான இவர் ஏன் ஒரு ஜாதிக்கு இழைக்கப்படும் அநீதிகளைப் பற்றி மட்டுமே எப்போதும் பேசுகிறார் என்று ஆரம்பத்தில் இவரது ஃபேஸ்புக் பதிவுகள் பலமுறை என்னை எரிச்சலடைய வைத்திருக்கின்றன. 

Wednesday, July 13, 2016

மொக்கை சூழ் இணைய உலகு

பெருமாள்முருகன் விவகாரத்தில் உன்னத இலக்கியம் ஒடுக்கப்பட்டுவிட்டதாய், ஊரே ஊளையிட்டுக் கதறியபோதுதான், 1994க்குப் பிறகு  உண்மையிலேயே எழுதுவதற்கான உந்துதலைப் பெற்றேன்.

Friday, June 24, 2016

அறிந்தோ அறியாமலோ

தெரிஞ்சோ தெரியாமையோ, நான் உங்களை ஏதாவது தப்பாப் பேசியிருந்தா மன்னிச்சிக்கோங்க அண்ணே என்றார் ஓடிவந்து கைகுலுக்கிய நண்பர். 

Thursday, June 23, 2016

இந்த சாமி நம்ம சாமிடா

நல்லி குப்புசாமிக்கடுத்து எல்லோரையும் மதிப்பவராகவும் எல்லோராலும் மதிக்கப்படுபவருமாகவும் நம் காலத்து FB நாயகனாக இலக்கியத்தில் வலம் வரும் இன்னொரு ஆளுமை மொழிபெயர்ப்பாளர் ஜி குப்புசாமிஜி அவர்கள். 

Sunday, June 19, 2016

நெறியும் சொரியும்

//'இலக்கியச் சிறார்' என்பதெல்லாம்,தன்னைத் தவிர பிறர் எவரையும் ஏற்காத காழ்ப்போடு் கூடிய நச்சுச்சொற்கள்.// 

Wednesday, April 20, 2016

எழுத்துக் கலை - வெந்ததும் வேகாததும்

கதைக்கும் கட்டுரைக்கும் சரியான போட்டி, எது சிறந்த மொக்கை என்று.
http://tamil.thehindu.com/general/literature/கதாநதி-14-கமோகனரங்கன்-புதிர்களை-ஆராயும்-கலைஞன்/article8492917.ece

Tuesday, March 22, 2016

மகாமுத்ராவில் செல்ஃபி எடுத்துக்கொள்ள நேர்ந்த கதை

நேற்று விடியற்காலை ஆள் தூக்கும் வேலை. வேலை முடித்துத் திரும்பும்போது 7 மணி. QMC சிக்னலில் நாகேஸ்வர ராவ் பூங்காவிற்குச் சென்றால் என்ன என்கிற யோசனை வந்தது. நேரே செல்ல பச்சை விழவே, சரி வேண்டாம் போ என வண்டியை பெஸண்ட்நகர் நோக்கி முடுக்கினேன். 

Sunday, January 10, 2016

சுயமரியாதை

விமர்சனம் வேறு. அவதூறு செய்வதென்பது வேறு. நக்கலாக இருப்பதன் காரணமாய் விமர்சனம் ஒருபோதும் அவதூறு ஆகிவிடாது. அடிப்படையோ எவ்வித ஆதாரமோ இன்றி செய்யப்படுவது கட்டாயம் அவதூறு மட்டுமே.

Friday, January 1, 2016

வரிக் குதிரைகள் [சிறுகதை]

வரி வசூலிப்பதற்காகவும் வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காகவும் என்றே, வெள்ளைக்கார துரைகள் ஆண்ட காலத்திலேயே பிரத்தியேகமாய் உருவாக்கப்பட்டிருந்தது அந்த அரசுத் துறை. நகரத்தின் மத்தியில் இருந்தது அதன் பிரதான அலுவலம்.