Saturday, July 16, 2016

கச்சிதம் கனகச்சிதம்

எவிடென்ஸ்  கதிர், மனித உரிமைக்குப் போராடுவதற்காக என்று ஓர் அமைப்பையே வைத்துக்கொண்டு செயல்படுபவரான இவர் ஏன் ஒரு ஜாதிக்கு இழைக்கப்படும் அநீதிகளைப் பற்றி மட்டுமே எப்போதும் பேசுகிறார் என்று ஆரம்பத்தில் இவரது ஃபேஸ்புக் பதிவுகள் பலமுறை என்னை எரிச்சலடைய வைத்திருக்கின்றன. 


ஒரு நாள் எதோ ஒரு தருணத்தில் நான் எழுதிய மூன்று தலித்துகள் பற்றிய திறம் என்கிற கதையில், உயர் அதிகாரி ஒருவரைப் பற்றி வரும்,  

எங்காளுங்களுக்கு நான்கூட செய்யாட்டா வேற யார் செய்வாங்கன்னு ஓப்பனா சொன்னவரில்ல அவுரு? 

என்கிற வரி சட்டென்று நினைவுக்கு வந்தது. அதில் இருந்து அவர் எழுதுவதில் ஒரு சில கோணங்கள் குறித்து விமர்சனம் இருந்தாலும் எரிச்சல் அகன்றுவிட்டது. 

*** 

நான்கைந்து நாட்கள் முன்பாக பேஸ்புக் பத்திரிகைகள் ஊடகங்கள் என்று பரபரப்பை உண்டாகிய சம்பவம் OLA வண்டியின் ஓட்டுனருக்கும் விலாசினி ரமணி என்கிற ஃபேஸ்புக் பிரமுகருக்கும் இடையில் நிகழ்ந்த பிரச்சனை. 

ஜூலை 11 அன்று அவர் எழுதிய பதிவு இது.
இரண்டு தினங்கள் முன்பு திருவான்மியூரிலிருந்து வளசரவாக்கம் வருவதற்கு (தனியாக) ஓலா கேப் கார்த்திக் பதிவுசெய்து கொடுத்தான். நல்ல வேளையாக வீட்டிலிருந்து ஏறாமல், பக்கத்தில் ஒரு கடையிலிருந்து ஏறினேன். கார் எடுத்த எடுப்பிலேயே படு வேகம். உடல் நலம் சரியில்லையென்று மெதுவாகப் போகச் சொன்னேன். ட்ரைவர் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. மத்ய கைலாஷ் கடந்து கிண்டி மேம்பாலத்தில் கார் மேலேறியதும், கீழிறங்கியதும் முன்பைவிட மோசமான வேகத்தில்தான். மீண்டும் ட்ரைவரிடம் நிதானமாகப் போகச் சொன்னதற்கு மரியாதையின்றி குரலை உயர்த்திப் பேசினான். நான் அதைச் சுட்டிக்காட்டி இப்படி வாடிக்கையாளரிடம் பேசுவது சரியல்ல, கம்பெனியில் புகார் செய்ய வேண்டிவரும் என்றதற்கு வண்டியை நிறுத்தி, பின்னாடி மாட்டு வண்டி ஓட்டிக்கொண்டு எவனாவது வருவான், அவனுடன் போ என்று ஒற்றையில் விளித்ததோடல்லாமல் இரவு பத்து மணிக்கு அண்ணா பல்கலைக்கழகம் எதிரில் வண்டியிலிருந்து இறக்கிவிட்டான். நானும் அவனுடன் வாக்குவாதம் செய்ய விரும்பாமல் இறங்கிவிட்டு வேறு வாகனத்திற்காகக் காத்திருந்தேன். 


இதற்கிடையில் கார்த்திக்கை அழைத்து நடந்ததை விவரித்து ஓலா அப்ளிகேஷனில் 'சேவை மோசம்' என்று புகார் அளிக்கச் சொன்னேன். இதெல்லாம் நடந்தபொழுதும் அந்தக் கார் அங்கேயே நின்றுகொண்டிருக்கவும் எனக்கு லேசாக பயமெழ ட்ரைவர் காரிலிருந்து இறங்குகிறானா என்று அடிக்கடி திரும்பிப்பார்த்துக்கொண்டிருந்தேன்.


பத்து நிமிடங்களுக்குப் பிறகு ஒரு ஆட்டோ வரவும் அவருடன் சவாரி பற்றி பேசிக்கொண்டிருந்தபோது அந்த ட்ரைவர் என்னருகில் வந்து நின்றதை கவனிக்கவில்லை. வந்தவன் எந்த மரியாதையுமின்றி 'காசு எவ தருவா' என்று ஆரம்பித்தான். நான் அவனிடம் சற்று கடுமையாக 'இறக்கிவிட்டது நீதான். ஒழுங்காகவும் வண்டி ஓட்டவில்லை. கம்பெனியில் புகார் அளித்தாகிவிட்டது, வம்பு செய்யாமல் போய்விடு,' என்றதற்கு அசிங்கமாக என்னைப் பார்த்துக் கை ஓங்க வந்தான். உடனே நான் அந்த ஆட்டோக்காரரிடம் வண்டியை வேகமாக எடுங்கள் என்று சொல்லிக்கொண்டே ஏறுவதற்குள் , 'கழுத்தை அறுத்துடுவேன், தெரியுமா?' என்று படு பயங்கரமாக முகத்தை வைத்துக்கொண்டு மிரட்டினான். அவன் கையில் ஆயுதம் எதுவும் இருந்ததா என்றுகூட கவனிக்கத் தெம்பில்லாமல், அந்த அரையிருளில் கவனிக்கவும் முடியாமல், 'அப்படி எதுவும் செய்துவிட முடியாது, நான் நேராக போலீசிடம் புகார் அளிக்கப்போகிறேன்,' என்றதற்கு, என்ன வேண்டுமானாலும் செய்துகொள், போடி என்று அசிங்கமாக சைகை காண்பித்தான். அதற்குள் ஆட்டோவில் ஏறி கிளம்பிவிட்டேன். பின்னாலேயே அவனும் காரைக் கிளப்பி வந்துகொண்டிருந்தான். மணி பத்தரை போல் இருக்கும். வழியில் தென்படும் பேட்ரோலிங் போலீஸ் யாராவது கண்ணில் பட்டால் உடனே அங்கேயே புகார் அளிக்கலாம் என்றால் ராமாவரம் சிக்னல் வரை யாரும் கண்ணில் படவில்லை. வீடு வரை தனியாகச் செல்வது பாதுகாப்பில்லை என்று போலீஸிடம் சென்றால் அவர்களும் அக்கறை இருப்பதுபோல் பத ட்டமடைந்து உடனேயே என்னை பத்தரை மணிக்கு நந்தம்பாக்கம் காவல் நிலையத்திற்கு போகச் சொன்னார்கள். அங்கு சென்றால், 'சம்பவம் நடந்த இடம் கிண்டி, நீங்கள் இப்பொழுதே அங்கு செல்லுங்கள்' என்று ஆட்டோ ட்ரைவரிடம் வழியெல்லாம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். எனக்கும் கிண்டிக்கும் எத்தொடர்புமில்லை, ஏன் அந்த கார் ட்ரைவரும்கூட அங்கிருக்க மாட்டான் என்று கெஞ்சியும், நடந்த விஷயத்தின் பயங்கரத்தை எடுத்துரைத்தும் எப்பலனுமில்லை. துணைக்கு ஒரு ஏட்டை வீடு வரை அனுப்புகிறோம் என்று கடைசியாகக் கூறிவிட்டு ஆட்டோ ட்ரைவரிடம் ஏட்டை மறுபடியும் ஸ்டேஷனில் கொண்டுவந்துவிட கட்டளையிட்டார்கள்.

கிட்டத்தட்ட பதினோரு மணிக்கு 'கழுத்தை அறுத்துடுவேன்' என்கிற வார்த்தைகள் மீண்டும் மீண்டும் காதில் ஒலித்துக்கொண்டேயிருக்க வேறு ஏதேதோ கடந்தகால செய்திகளும் சம்பவங்களும் மண்டைக்குள் குடைய அவனை மாதிரி கிரிமனல்களை கோர்ட் கேஸ் என்று அலைந்து திரிந்து எஞ்சியிருக்கும் வாழ்க்கையையும் தொலைக்க மனமில்லாமல் ஒருவித அருவருப்புடனும் மனக்கொந்தளிப்புடனும் எஞ்சிய இரவு கழிந்தது.

நாளை அவனை மாதிரி பொறுக்கி எவனாவது நிஜமாகவே கழுத்தை அறுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்தக் கொடிய சாவின் பயத்தை விடவும் சாவுக்குப் பின்னான காரணங்களை கட்டவிழ்த்துவிடவிருக்கும் கற்பனைகள் அதைவிடவும் கோரமானதாக இருக்கப்போகிறதோ என்றெல்லாமும் சிந்தனைகள் சிதறிய வண்ணம் இருக்கிறேன். ஒவ்வொரு ஆணுடனுமான, தெரிந்தவன், தெரியாதவன் யாராயினும், வாக்குவாதங்களில் எந்தளவு உடலளவிலும் மனதளவிலும் காயப்பட்டிருக்கிறேன் என்று நினைத்தால் சோர்ந்துதான் போகிறது மனம்.

இங்கு காவற்துறை இருக்கிறதுதான். தன் கடமையையும் செய்கிறதுதான். ஒருவேளை அவர்கள் அகராதியில் கடமையென்பது செத்ததற்குப் பிறகான அக்கறையாக இருக்கலாம். நான் அதற்கு இன்னும் எத்தனை நாட்கள் காத்திருக்கவேண்டும் என்று தெரியவில்லை.

*** 
எழுதப்பட்ட அன்று, படிக்கிற எவரையும் சட்டென துணுக்குறவும் பதட்டமடையவுமே செய்யக்கூடிய நிகழ்ச்சிதான் இது. சென்னை போன்ற நகரில் இது எந்தப் பெண்ணுக்கும் நடந்திருக்கக்கூடியதுதான் என்றும் கூடத் தோன்றும். 

ஆனால் ஆண்கள் பற்றிய இவரது ஆழ்மன வெறுப்பும் இந்த சம்பவத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது, இவரது ஃபேஸ்புக் பதிவுகளைப் பொருட்படுத்தி இளிப்புப் பாரபட்சமின்றி படித்து இருப்பவர்களுக்குத் தெரிந்திருக்கும். சாதாரண செக்ஸ் ஜோக்குகளை எவரேனும் பதிவாகப் போட்டாலே அவனை செக்ஸ் வக்கிரன் ரேப்பிஸ்ட் என்கிற ரேஞ்சிற்கு பிரபலத்துக்காக ரத்தக் கொதிப்பை ஏற்றிக் கொள்ளும் ஹிஸ்டீரிக் பேஷண்ட்டோ என சந்தேகப்பட வைக்கிற அளவிலான குணவதி. இதற்கான ஆதாரத்தைத் தேடி வேறு எங்கும் செல்ல வேண்டியதில்லை. இந்தப் பதிவிலேயே இருக்கிறது. அனுதாபத்தை உருவாக்க எழுதப்போய் இவரையே அகப்பட வைத்துவிட்டது. 

//ஒவ்வொரு ஆணுடனுமான, தெரிந்தவன், தெரியாதவன் யாராயினும், வாக்குவாதங்களில் எந்தளவு உடலளவிலும் மனதளவிலும் காயப்பட்டிருக்கிறேன் என்று நினைத்தால் சோர்ந்துதான் போகிறது மனம்.// 


கோளாறின் மூல ஊற்றை நம்மிடம் வைத்துக்கொண்டு எதிர்க்காற்றில் ஊரைக் காறித்துப்பி என்ன பயன். 

நடந்தது என்ன. 

வண்டி ஓட்டுனர் வேகமாகச் சென்றிருக்கிறார். வேகம் என்பது ஆளுக்கு ஆள் வேறுபடக் கூடியது. எவ்வளவு வேகத்தில் அந்த ஓட்டுனர் வண்டியை ஓட்டினார் என்பதை இவர் குறிப்பிடவேயில்லை. இளவட்டப் பெண்களைத் தவிர நடுத்தரவயதை அடைந்தவர்களுக்கு பைக்கில் 60ல் செல்வதுகூட வேகமாகத்தான் தெரியும். இப்போதெல்லாம் சகதர்மினியை அழைத்துக்கொண்டு வெளியில் செல்ல வாய்ப்பு கிடைப்பதே அபூர்வமாகிவிட்டது. அதிலும் திருவிக பாலத்திலோ பீச் ரோடிலோ கொஞ்சம் காற்றோட்டமாக வண்டியை முறுக்கினால், நீதிபதிகள் வலுக்கட்டாயமாகக் கவிழ்த்த ஹெல்மெட்டு போக கொஞ்சூண்டு மூஞ்சில் கொஞ்சமாய்க்கூட காற்று பட விடாமல் மொள்ளமாப் போ மொள்ளமாப் போ என்று பின்னாலிருந்து எட்டியெட்டிப் பார்த்து தர்மத்துக்கும் சொல்லிக்கொண்டிருந்தால், இந்த ஒரே காரணத்துக்காகவே தர்மபத்தினியை டைவர்ஸ் செய்துவிடலாமா என்று என்னைப் போன்றவனுக்குத் தோன்றுவது இயல்புதானே. இவளில்லாமல் ஒரு நிமிடம் கூட என் வண்டி ஒடாது என்பதால் அமைதியாய் இருக்க வேண்டி இருக்கிறது. 

விவாதம் என்று வந்துவிட்டால் நாம் இரண்டு தரப்பையும் கணக்கிலெடுத்துக்கொள்ள வேண்டியதுதானே நியாயம். 

இவருக்கு ஆவி போகிற வேகமாகத் தோன்றுவது கால் டாக்ஸிக்காரருக்கு என்ஜின் இடிக்கிற அளவிலான வேகமாகத் தோன்றியிருக்கலாம்.  கால் டாக்ஸிக்காரர் கஸ்டமர் உறவென்ன எங்களுக்கிடையிலானதைப் போன்ற காலாதீத பந்தமா. இது என்னடா எரிச்சல் எழவிடம் வந்து மாட்டிக்கொண்டோம், இன்று மினிமம் ட்ரிப் அடித்தாற்போல்தான் என்று தோன்றி, அவர் தான் ஓட்டும் இயல்பான வேகத்தைக் குறைக்காமல் சென்றுகொண்டு இருந்திருக்கலாம். 

லாம் லாம்கள் எல்லாம் பெண்னாதிக்கப் பெரும்புலிகள் மற்றும் ஆதரவு ஆண் சிங்கங்களுக்கு அனுமானமாகத் தோன்றலாம். ஆனால் அவர்களுக்கு அம்மையாரின் பதிவின் கடைசியில், 

//அவன் கையில் ஆயுதம் எதுவும் இருந்ததா என்றுகூட கவனிக்கத் தெம்பில்லாமல்,// 

கிளவராக விதைத்திருப்பதும் அனுமானமாகத் தோன்றுமா என்பதுதான் நியாயமான கேள்வி. 

தான் சொல்லியும் கேட்காத அந்த ஆள் ஒட்டுமொத்த ஆணாதிக்கத்தின் குறியீடாகத்தான் அம்மையாரின் பிரக்ஞையில் பட்டிருப்பான். இதுவரையிலான தம் ஒட்டுமொத்த வாழ்வில் துன்புறுத்திய அத்தனை ஆண்களின் ஒட்டுமொத்த வடிவமாக அவன் தோன்றியிருந்தாலும் வியப்பில்லை. 

இந்துவில் வந்ததைப் படித்த மாம்பலம்வாசியான அலுவலக நண்பரிடம் அவரது அபிப்ராயம் என்னவென்று கேட்டேன். 

அது ஒவர் எக்ஜாஜிரேஷன். OLA டிரைவர்ஸ் எல்லாம் எவ்ளோ ப்ரஷர்ல ஒர்க் பன்றாங்க. ஒரு நாளைக்கு இத்தனை ட்ரிப் அடிக்கலைனா இயர்னின்ஸ் ரொம்பக் கம்மியாயிடும். 

எங்கள் அலுவலகத்தில் OLA ஆப்பை டவுன்லோட் செய்து இன்னமும் பதிவுசெய்துகொள்ளாத ஆள்அநேகமாக நான் ஒருவனாகதான் இருப்பேன். 


விலாசினி ரமணி (விலாசினி) அவர்கள் அப்படியொன்றும் உலக நடப்பு தெரியாதவரல்ல. இன்னும் சொல்லப்போனால் உலக அரசியலையே கரைத்துக் குடித்து அவ்வப்போது ஆங்கிலத்திலேயே பதிவு போடும் பகிரும் தமிழ் பதிப்பாளர். 

தம் பிரச்சனைக்காக, ஆங்கிலத் தமிழ் பத்திரிகைகள் நாளேடுகள் டிவி அழைப்புகள் எனத் தாவித்தாவி முடித்தபின் நங்கூரமிட்டிருக்கும் பதிவைப் பாருங்கள். 
இந்த அளவுக்கு மனிதாபிமானியாக, பிரான்ஸில் நடப்பது உட்பட விரல் நுனியில் வைத்துக்கொண்டு இரங்கும் இவருக்கு பாவம் உள்ளூர் OLA டிரைவர்கள் பிரச்சனை என்ன என்பது மட்டும் தெரியாது என்றால் நம்ப முடிகிறதா.

இந்த அம்மையாருக்கு நண்பர்கள் இருக்கும் பத்திரிகைகளும் ஊடகங்களும் இந்த அளவுக்கு மாய்ந்து மாய்ந்து எழுதினீர்களே உங்களில் ஒருவருக்குக் கூட அந்த ஓட்டுனர் அப்படித்தான் நடந்துகொண்டாரா அவர் தரப்புதான் என்ன என்று ஏன் கேட்கத் தோன்றவில்லை. ஏனெனில் அவர் முகநூலில் உங்களுக்கு நண்பராக இல்லை என்பதுதான் ஒரே காரணம் இல்லையா. 

இந்த சம்பவம் நடந்து, இதை எப்படி எழுதினால் என்னென்ன சாதக பாதகங்கள் இருக்கும் என்று இரண்டு நாட்கள் தெளிவாக யோசித்து பதிவு போட்டிருக்கிறார். 

ஸ்வாதி நிகழ்ச்சியின் அனுதாப அலை தம்மை வெளிச்சத்தின் உச்சிக்குக் கொண்டு சேர்க்கும் என்கிற கனகச்சித கற்பனைப் பிரயோகமாகத்தான், கையை ஒங்கிக்கொண்டு அடிக்க வந்தான், ஆயுதம் வைத்திருந்தானா என்று கவனிக்கவில்லை, கழுத்தை அறுத்துடுவேன் என்பவையெல்லாம் நடப்பட்டிருக்கின்றனவோ என்று தோன்றுகிறது.

திருவான்மியூரில் எத்தனை மணிக்கு வண்டியில் ஏறினேன் என்பதை சாதுரியமாகக் கூறாமல் தவிர்த்துவிட்டார். 

//மத்ய கைலாஷ் கடந்து// 

அண்ணா பல்கலைக் கழகத்தின்முன் இறக்கிவிடுகையில் மணி பத்து இருக்கும் என்கிறார். 

//இரவு பத்து மணிக்கு அண்ணா பல்கலைக்கழகம் எதிரில் வண்டியிலிருந்து இறக்கிவிட்டான்.// 

திருவான்மியூரில் இவர் கிளம்பிய நேரம் இரவு 9:45 ஆக இருந்து, கார் ராஜீவ் காந்தி சாலை வழியாக வந்திருந்தால் ஓவர் ஸ்பீடிங் இல்லை நார்மல்தான் இல்லையா.

கிள்ம்பிய நேரம் 9:38 ஆக இருந்து LB வழியாக வந்திருந்தாலும் நார்மல் ஸ்பீடுதான். எதற்கும் மொபைலில் நேரத்தை சரிபார்த்த பின்புதான் யார் ரியலி ஃபாஸ்ட்டு என்பதைத் தீர்மானிக்க முடியும்.

அடுத்து இவர் கார்த்திக்குடன் பேசி புகார் அளிக்கச் சொல்கிறார். மணமுடிக்கப் போகிறவர் புகாரா அளித்துக்கொண்டு இருப்பார், நம்ம ஆள் இரவு பத்து மணிக்கு இப்படி நடுத்தெருவில் அநாதரவாக நிற்கிறது என்றால் அடித்துப் பிடித்து ஓடிவர மாட்டாரா. இந்தப் பதிவில், பாவம் தள்ளாத வயதிலும் ஒருவர் கமெண்ட்டிலேயே கார் ஓட்டிக்கொண்டுவரத் தயாராக இருந்தாரே. நம்பகத்தன்மைதான் இடிக்கிறது வேறொன்றுமில்லை. அப்படியெல்லாம் அவசியமில்லை இவர் தன்னந்தனியே தன்னைப் பார்த்துக்கொள்ளத் தெரிந்த தைரியமானவர் என்றால் இப்படியொரு பதிவு போட்டு ஆர்ப்பாட்டம் பன்ணவேண்டிய அவசியமே இல்லையே.

//பத்து நிமிடங்களுக்குப் பிறகு ஒரு ஆட்டோ வரவும்// 

ஆட்டோ டிரைவரின் வாதம் காரணமாக தாமதமாகிறது. ஆட்டோவில் ஏறிச் செல்கையில் என்ன மணி 10:10ஆ என்றால் அதுதான் இல்லை. 

//ஆட்டோவில் ஏறி கிளம்பிவிட்டேன். பின்னாலேயே அவனும் காரைக் கிளப்பி வந்துகொண்டிருந்தான். மணி பத்தரை போல் இருக்கும். // 

பத்து மணிக்கி இறக்கிவிட்ட பதட்டத்தில் இருப்பவர், ஆட்டோ வந்ததும் உடனே அந்த இடத்தைக் காலிபண்ணப் பார்க்காமல் 20 நிமிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருப்பாரா. 

கிண்டி அண்ணா பல்கலைக் கழகம் எதிரிலிருந்து ஆட்டோவில் பத்தரைக்குப் புறப்படவர் ராமாவரம் சிக்னல் வரை போலீஸ் கண்ணில் படவில்லை. ஆனால் திடீரென எழுதுகிறார்  

//என்னை பத்தரை மணிக்கு நந்தம்பாக்கம் காவல் நிலையத்திற்கு போகச் சொன்னார்கள்.//  என்று.

எந்த போலீஸ் எந்த காவல் நிலையத்தில் அப்படிச் சொன்னார்கள் என்கிற தகவல் ஏதுமில்லை. 
அண்ணா பல்கலைக் கழகம் எதிரிலிருந்து ராமாபுரம் சிக்னல் வர காரில் 17 நிமிடமாகும் என்கிறது கூகுள். ஆட்டோவில் என்றால் இன்னும் கூட ஆகும். 10:30க்கு அங்கேக் கிளம்பினால் இங்கே வர எப்படியும் 10:50 ஆவது ஆகியிருக்க வேண்டும். 

சரி இருப்பதையே ஆதாரமாக எடுத்துக் கொள்வோம் என ராமாவரம் சிக்னல் அருகில் என்றால் இருக்கிற போலீஸ் ஸ்டேஷன் R11 மட்டுமே. ராமாபுரம் சிக்னலில் இருந்து போலீஸ் ஸ்டேஷன் செல்ல 9 நிமிடம் பேச ஒரு நிமிடம் என்றாலும் 10 நிமிடங்கள். இங்கேயே 11:00 ஆகிவிட்டது. 


ஆனல் இவரோ 11:00 மணிக்கு வீட்டுக்கே வந்து சேர்ந்துவிட்டார். ஆனால் நிஜத்தில் இன்னும் இவர் நந்தம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷன் செல்ல வேண்டும். அவர்கள் இன்னும் இவரை கிண்டிக்குப் போகச் சொல்ல வேண்டும். அப்புற ஆட்டொ டிரைவருக்கு சொல்ல வேண்டும். அதற்குப் பிறகு இவர் S4 நந்தம்பாக்கம் காவலாளர் நிலையத்திலிருந்து வீடு வந்து சேர்ந்தாக வேண்டும்.

//கிட்டத்தட்ட பதினோரு மணிக்கு 'கழுத்தை அறுத்துடுவேன்' என்கிற வார்த்தைகள் மீண்டும் மீண்டும் காதில் ஒலித்துக்கொண்டேயிருக்க வேறு ஏதேதோ கடந்தகால செய்திகளும் சம்பவங்களும் மண்டைக்குள் குடைய அவனை மாதிரி கிரிமனல்களை கோர்ட் கேஸ் என்று அலைந்து திரிந்து எஞ்சியிருக்கும் வாழ்க்கையையும் தொலைக்க மனமில்லாமல் ஒருவித அருவருப்புடனும் மனக்கொந்தளிப்புடனும் எஞ்சிய இரவு கழிந்தது.//

பத்தரை மணிக்கு அண்னா பல்கலைக்கழகம் எதிரில் கிளம்பி ராமாவரம் சிக்னலுக்கு எப்படி பத்தரை மணிக்கே வர முடியும். அட வந்தாங்கையா என்று பெண்ணாதிக்க ஆதரவாளர்கள் எரிச்சல் பட்டால் ஆட்டோக்காரர் OLA காரைவிட வேகமாகப் போயிருந்தால்தானே முடியும். பாவம் அம்மையாருக்கு உடம்பு சரியில்லாதபோதே வேகம் ஒத்துக்கொள்ளாது இப்போது மனமும் சரியில்லாதபோது அதுவும் ஆட்டோவில் இந்தளவுக்கு ஜெட் வேகம் தாங்குமா.

வேகம் வேகம் போகும் போகும் மேஜிக் ஜர்னி 

ராமாவரம் R11 போலீஸ் ஸ்டேஷனில் இருந்து நந்தம்பாக்கம் S4 வந்தால் 8 நிமிடம். ராமாவரம் சிக்னலில் இருந்து நந்தம்பாக்கம் ஸ்டேஷனுக்கு வந்தால் 2 நிமிடம் என்கிறது கூகுள். 
ஆக 11:10க்கு நந்தம்பாக்கம் S4 காவல் நிலையம் வந்து அங்கொரு ஐந்து நிமிடம் செலவழித்துவிட்டு வீட்டை நோக்கிக் கிளம்புகிறார். இப்போது மணி இரவு 11:15 என்று வைத்துக் கொண்டால், அங்கிருந்து வளசரவாக்கம் வீட்டுக்குச் செல்ல எவ்வளவு நேரமாகும். இன்னொரு 17 நிமிடம் என்கிறது கூகுள்.


ஆக நந்தம்பாக்கத்திலிருந்து அவர் வீடுவந்து சேர குறைந்த பட்சம் 11:30ஐத் தாண்டியிருக்கும். 

அவர் 11:00 என்கிறார் நீர் 11:30 என்கிறீர் அரை மணியில் என்ன பெரிதாய் நிரூபித்துவிட்டாய் அடேய் முழுலூசு என்கிறீர்களா. 

இவர் கணக்கு வழக்கின்றி போலித்தனமாகப் பேசுபவர் என்பதைத்தான் இது காட்டுகிறது. தமக்கு சாதகமாக அடுத்தவர் இரக்கத்தைத் தூண்டும்படி உணர்ச்சிகரமாக கழுத்தை அறுட்ப்ன்த்துடுவேன் என்று சொன்னது ஏன் பொய்யாக இருக்கக்கூடாது. அப்படி அந்த OLA ஓட்டுனர் சொன்னதும் அடிக்க வந்ததும் மிரட்டியதும் உண்மை என்றால் இவை அனைத்துக்குமான சாட்சியமாக இருந்த அந்த ஆட்டோ டிரைவர் போலீஸ் ஸ்டேஷன் வாயிலிலேயே நிற்கிறாரே அவரை வேண்டுமானால் கேட்டுப்பாருங்கள் என்று கண்ணகிபோல் தேரா போலீஸ் என அந்த ஆட்டோவையே ஒற்றைக் கையால் தூக்கியிருக்க மாட்டாராஇந்தப் பெண் புளி.

ஆள் தேளற்ற அப்பாவி தலித்துகள் ஊர்ப்புறங்களில் கொடூரமாகக் கொல்லப்படும்போதுகூட கொடுக்காத முக்கியத்துவத்தை  ஊதிப் பெரிதாக்கப்பட்ட ஒரு சாதாரன தகராறுக்குக் கொடுத்திருக்கின்றன ஊடகங்கள். 

கச்சிதமாக இவர் போட்ட கணக்கை நண்பர்கள் தொடர்புகள் தோலின் நிறம் என எல்லாம் சேர்ந்து மேற்கண்ட எந்த கேள்வியையும் கேட்காமல் கனகச்சிதமாக நிறைவேற்றிக் கொடுத்து விட்டன.

பாவம் ஸ்வாதி. அவளை வைத்துத் தங்கள் அரிப்பைத் தீர்த்துக்கொள்ள இன்னும் எத்தனை பக்கிகள் வாயைப் பிளந்துகொண்டு காத்திருக்கின்றனவோ.