Sunday, August 14, 2016

கிழிஞ்சிடுத்து


என்ன பாட்டி நேத்துக்கூட நன்னான்னா இருந்தே இப்படி திடீர்னு ICUல அட்மிட் ஆயிட்டே

ஹிப்-தை ஜாய்ண்ட்ல கிராக்காம்

இப்படி திடீர்னு கிராக் ஆகறாப்பல அப்படி என்ன ஸ்பெஷலா பண்ணிண்டே

அது ஒண்ணுமில்லடா... FBல ஒருத்தன் பெண்ணீயத்தைக் கிண்டல் பண்ணினான்...

அதானே பார்த்தேன் நீ ஒரு பெண்ணீய பார்ன் கிராக்காச்சே பாட்டி

டேய் முடியாம கிடக்கிறாங்கற திமிரா

சேச்சே பாட்டி சும்மா ஜோக்கு நீ மேல சொல்லு

பெண்ணீயம்னா என்னான்னு அவன் நக்கலா கேட்டானா...

தமிழ்ல நீதானே பாட்டி அதுக்கு அத்தாரிட்டி. உங்கிட்டையே கேக்க அவனுக்கு என்னா தைரியம் இருக்கணும். எப்படிப் பாட்டி மொதல்ல அவன் உன் எதிர்ல வந்து நின்னான்.

இல்லடா அவன் மெட்ராஸ்லதான் இருக்கான்

நீ ஆம்ச்சி மும்பைலனா இருக்கே பாட்டி

இதெல்லாம் நடந்தது Facebookலடா. நீயென்னதான் கதை கேக்கறியோ போ

சாரி சாரி சரி பாட்டி மேல சொல்லு

பெண்ணீயம்னா என்னான்னு அவனுக்குத் 'தெள்'ளெனப் புரிய வைக்க ஓங்கி ஒரு உதை விட காலைத் தூக்கினனா...

ஐயையோ புதுசா வாங்கிக்குடுத்த லெக்கின்ஸ் கிழிஞ்சுடுத்தா பாட்டி

அது போனா என்ன, FBல ஒரு போஸ்ட்டு போட்டா அமேரிக்கா ஹைதராபாத்னு லெக்கின்ஸ் அனுப்ப ஆம்பள சிஷ்யாளே ஏகப்பட்ட பேரிருக்காளே. பெண்ணீய சிஷ்யைகளைப் பத்திக் கேக்கண்டாமே. எப்பவும் ரொம்பல் கேல்க்குலேட்டிவா இருக்கறவ இதுல கொஞ்சம் இமோஷனலாகிட்டேன்...

ஆகி...

நன்னா வலிக்கிற இடமா பாத்து உதைக்க சட்னு காலைத் தூக்கினேனா... 

தூக்கி... 

செண்ட்டர்ல புது லெக்கின்ஸு கிழிஞ்சிடுத்து. கூடவே தை-ஹிப் ஜாய்ண்ட்டும் கிழிஞ்சிடுத்துங்கறார் டாக்டர். அதான் இப்படி ICUல...

எவ்ளோ பெரிய ரைட்டர் நீ இப்படி இலக்கியம் தெரியாத டாக்டர் கிட்ட வந்து எப்படி சேந்தே

ஏண்டா என்னாச்சு. அவருக்கு நன்னா சர்ஜரி பண்ணத் தெரிஞ்சா போறாதோ. இலக்கிய எழவெல்லாம் எல்லாருக்கும் தெரிஞ்சாகணுமா என்ன. 

இது பாய்ண்ட்டு. இலக்கியமே எல்லாருக்கும் வாண்டான்னப்பறம் பெண்ணீயம் மட்டும் எல்லாருக்கும் தெரிஞ்சாதான தின்னது செரிக்குமானு எவனாவுது கேட்டுறப்பொறான்...

அதிகப் பிரசங்கி...

அது போட்டும் பாட்டி. சரி எலும்பு எப்படிக் கிழியும் பாட்டி. முறிஞ்சிடுத்து இல்லை உடைஞ்சிடுத்துனு எலும்பைச் சொல்றதுதானே சரி. ஒரு டாக்டரே இப்படித் தப்புத்தப்பா பேசினா நீ எலும்பை எண்ணிட மாட்டியோ.

ஏண்டா என் வயித்தெரிச்சலக் கொட்டிக்கறே. 72 வயசுல பேப்பராட்டம் ஆகிட்ட எலும்பு எப்பிடிடா உடையும். கிழியத்தானேடா செய்யும்

அப்பா ஒரு வழியா உனக்கு 72 வயசுன்னு ஒத்துண்டியே, என்னதான் பர்முடாஸ் போட்டுண்டு சிங்கப்பூர் கட்டில்ல போஸ் குடுத்தாலும் 😂😂😂

கிட்ட வாடா கம்மனாட்டி. எங்கடா ஓடறே. இரு இரு டிஸ்சார்ஜ் ஆகி வந்ததும் உனக்குத் தெள்ளெனப் புரிய வெக்கிறேன் பாரு

கிழிஞ்சிது போ பாட்டி