March 25, 2018 maamallan

துபாய் கம்பெனியொன்றில் தரையில் விரிசல் விட்டிருந்த டைல்களைப் பணியாளர்கள் பிடுங்கி எடுத்துக்கொண்டிருந்தார்கள். அந்த டைல்களைத் திரும்பப் பயன்படுத்தாமல் குப்பையில்தான் எறியச் சொல்லியிருந்தது கம்பெனி என்றாலும் அவர்கள் தமிழர்கள் என்பதால், வீசப்போவதாகவே இருந்தாலும் நன்றாக இருந்த டைல்களை முடிந்தவரையிலும் சேதாரமாகிவிடாமல் பெயர்த்து எடுத்து ஒரு ஓரமாக அடுக்கிக் கொண்டிருந்தார்கள்.  (more…)

March 18, 2018 maamallan

ஜெயமோகன் ஊரிலில்லை. பூட்டிய கதவின் முன் பலமாக சவுண்டு விட்டுக்கொண்டிருக்கிறார் காலச்சுவடு கண்ணன்.    எனக்கு ஜெயமோகன் ஒன்றும் ஜிகிரி தோஸ்த்தில்லை என்பது ஊரறிந்த விஷயம் -புனைவு என்னும் புதிர் eBook உரிமைப் பிரச்சனைக்கு முன்புவரை கண்ணனுடன் எனக்கு எந்தப் பிரச்சனையுமில்லை, அவர் எனக்கு ஜிகிரி தோஸ்த்தாக இருந்தவரில்லை எனினும், அவரது அப்பா சுந்தர ராமசாமி அளவுக்கு இல்லையென்றாலும் கண்ணன் எனக்கு நண்பரராக இருந்தவர்தான் என்பதும் யாவரும் அறிந்ததே. (more…)

March 11, 2018 maamallan

எல்லா கம்பெனியின் பேலன்ஸ்ஷீட்டிலும் ஏகப்பட்ட ரகசியங்கள் ஒளிந்திருக்கின்றன என்றபோதிலும் எந்த கம்பெனியின் இருப்புநிலை அறிக்கையும் யாரும் பார்க்கக்கூடாத தேவ ரகசியமில்லை.  இந்த பேலன்ஸ்ஷீட்டுகள் மத்திய அரசின் Ministry of Corporate Affairsஇன் அதிகாரபூர்வ  mca.gov.in என்கிற இணையதளத்திலேயே கிடைக்கின்றன. ஒரு கம்பெனியின் ஆவணங்களை எடுக்க, 100 ரூபாய் செலுத்தி 3 மணி நேரத்துக்கு, எத்தனை ஆவணங்களை வேண்டுமானாலும் தரவிறக்கிக்கொள்ளலாம். வெறும் இருப்புநிலை அறிக்கை மட்டுமின்றி அந்த கம்பெனியின் டைரக்டர்கள் பங்குதாரர்கள் அவர்களது முகவரிகள் உட்பட எல்லா விபரங்களையும், இணைப்பாக அரசுக்கு சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் அனைத்தையும் சட்டபூர்வமாகத் தரவிறக்கிக்கொள்ளலாம். இவற்றையெல்லாம் பொதுமக்களாகிய நாம் தரவிறக்கிக்கொள்கிறோம் என்பதற்காக அடுத்த ஆண்டு, இவற்றை இந்தக் கம்பெனிகளால் தராதிருக்கவும் இயலாது. ஏனெனில் இவையனைத்தும் கட்டாயமாகக் கொடுக்கப்பட்டாகவேண்டியவை. கொடுப்பதற்கான கெடு தேதிகூட உண்டு. இந்த ஆவணங்களைப் பெற, நாம் செய்யவேண்டியதெல்லாம், இலவசமாகப் பதிவு செய்துகொள்ள வேண்டியதுமட்டுமே. பப்ளிக் லிமிடட் கம்பெனி என்றில்லை, தனியார் நிறுவனங்களையும் பார்க்கலாம். சும்மா எட்டிப்…

March 3, 2018 maamallan

கு. ப. ராஜகோபாலன் காலமானது 1944-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ம் தேதி. கடைசி ஒரு வார காலம் என் மனதில் இருள் சூழ்ந்து கிடந்தது. அவருடைய உயிர்பற்றி ஒரு அச்சமும், ஏக்கமும், வயிற்றில் நம நமவென்ற கலக்கமும் சுமந்து அழுத்திக் கொண்டிருந்த ஞாபகம். என் தகப்பனார், மனைவி – இருவரிடமும் அடிக்கடி நான் அவரைப் பற்றி ஏதாவது சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்த ஞாபகம். ‘கரிச்சான் குஞ்சுவும்’ என்னோடு சேர்ந்து அழுது கொண்டிருந்தான். அவன் என்னைவிட உணர்ச்சி வசப்படுகிறவன். இந்த பயமும் கரையலும் ஏப்ரல் 21-ம் தேதிக்குப் பிறகு என்று நினைக்கிறேன். ராஜகோபாலன் கிடந்த கிடையும், பட்ட சித்திரவதையும் ஒரு அநிச்சயத்தையும், கலவரத்தையும் எங்கள் இருவர் மனதிலும் மூட்டியிருந்தன. நாங்களும் கையாலாகாமல் தவித்த ஞாபகம். அவருக்கு முழங்காலுக்குக்கீழ், ஆடுசதை கல் சதையாக இறுகிக் கிடந்தது. கடுகுப் பத்துப் போட்டிருந்தார்கள். அந்த எரிச்சல் வேறு. காலுக்குள், வெளியே – இரண்டு பக்கமும் எரிச்சல்….

February 22, 2018 maamallan

திரு. எஸ். ஆர். சுந்தரம் (காலச்சுவடு பதிப்பக உரிமையாளர்) அவர்களுக்கு,  வணக்கம்.  தங்கள் பதில் கண்டேன். புனைவு என்னும் புதிர் புத்தகத்தை 300 பிரதிகள் அச்சிடப்போவதாக அச்சுக்குப் போகும் முன்பாகவே கூறியிருந்தீர்கள். புத்தகம் வெளியாகி புக்ஃபேரும் தொடங்கியபின்னும் 300 பிரதிகள் அச்சிட்டிருப்பதாய் உறுதிசெய்திருந்தீர்கள்.  புத்தகக் கண்காட்சியில் இந்தப் புத்தகம் 165 காப்பிகள் விற்றிருந்தது. அதில் 70 பிரதிகளை நானே நேரடியாக விற்று உங்கள் கணக்கில் பணமும் செலுத்திவிட்டேன். அதற்குப்பின் 30 காப்பிகள் என் மூலமாகவே விற்று கழிவு போக அதற்குரிய பணத்தையும் காலச்சுவடுக்கு செலுத்திவிட்டேன். இந்த 100 போக மேலும்  20 பிரதிகளைக் கேட்டேன். அவையும் வந்து சேர்ந்துவிட்டன.  300 பிரதிகளில், இன்னமும் தங்கள் கைவசம் இருப்பவை எவ்வளவு என தெரியப்படுத்தினால், இந்த 20ஐயும் சேர்த்து அவற்றுக்குரிய 40% கழிவு போக தலா 120 ரூபாய் கொடுத்து, நானே வாங்கிக்கொள்கிறேன். என் புத்தகத்தை வெளியிட்டமைக்கு மிக்க நன்றி.  எந்த வியாபாரத்திலும் தொடங்குவதற்கு…

February 20, 2018 maamallan

2012ல் பதிப்பகங்கள் தொடர்ந்த, The Chancellor, Masters & Scholars of the University of Oxford & Ors. v. Rameshwari Photocopy Services & Ors. [DU Photocopying Case] என்கிற காப்புரிமை வழக்கில், 2016ல் வெளியான தீர்ப்பில் தில்லி ஹைகோர்ட் என்ன சொல்லியிருக்கிறது என்று பாருங்கள். 80. Copyright, specially in literary works, is thus not an inevitable, divine, or natural right that confers on authors the absolute ownership of their creations. It is designed rather to stimulate activity and progress in the arts for the intellectual enrichment of the public. Copyright is intended to increase and not to impede the harvest of knowledge. It is intended to motivate the creative…

January 16, 2018 maamallan

ரமேஷ் பிரேதனிடமிருந்து மெய்ல் வந்திருக்கிறது. இதுகள் இவ்வளவு பெரிய சாக்கடை என்பது தெரிந்திருந்தால் உதவிசெய்ய நான் இறங்கியிருக்கவே மாட்டேன். நான் இறங்கியதோடு அல்லாமல் உங்களையும் இழுத்துவிட்டு உங்களது பணத்தை வீணடித்தமைக்காக என்னை மன்னியுங்கள் நண்பர்களே.  ஜெயமோகனும் நண்பர்களும் தெருவில் நின்ற தனக்கு, இரண்டு லட்சத்தில் ஒத்திக்கு வீடு பார்த்துத் தங்க வைத்திருக்கின்றனர் என்று மட்டுமே திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார் ரமேஷ் பிரேதன்.  அது இரண்டல்ல நாலரை லட்சம் என்பது எனக்குத் தெரியவர நான் பொதுவில் போட்டு உடைத்ததும் முதல் முறையாக டாக்டர் நண்பரிடம் நாலரை என்று அவர் வாயாலேயே சொல்லியிருக்கிறார் உலகளாவிய வாசகர்களைக் கொண்ட படைப்பாளியான ரமேஷ் பிரேதன். இவரது பிஸியோதெரப்பிக்கு, ஆறுமாதங்களுக்கு மாதா மாதம் 2000 தர முன்வந்த நண்பர் இவரிடம் போனில், ஃபிக்சடில் போடுங்கள் என்று அறிவுரை கூறியதற்கு, என்னைப் பற்றிக் கேவலமாகப் பேசியிருக்கிறார். மாமல்லன் திரட்டியது 1.5 லட்சம்தான் மீதி 1.25 லட்சம் எஸ். ராமகிருஷ்ணனின் வாசகர்களும் ஜெயமோகனின்…

January 14, 2018 maamallan

நீங்க வெளியிட்ட புத்தகத்தை நீங்களே அனுப்பி வைக்கிறதைக்கூட ஓரளவுக்கு நியாயம்னு ஒத்துக்கலாம். ஆனா வேற பதிப்பகங்கள் வெளியிட்ட உங்க புத்தகங்களையும் நீங்களே வாங்கி நீங்களே பேக்பண்ணி நீங்களே போய் போஸ்ட்டுல அனுப்பறதெல்லாம் ஒரு எழுத்தாளரா நல்லாவா இருக்கு.  எழுத்தாளனா ஒன்றரை வருசம் கழிச்சு பதிப்பாளர்கள் குடுக்கப்போற ராயல்டியைவிட, விற்பனையாளரா இதே பதிப்பாளர்கள் எனக்கு புக்ஃபேர் முடிஞ்ச உடனே குடுக்கற கமிஷன் ஜாஸ்தி தெரியுமா.  இவங்க வெச்சிருக்கிற விலையைவிடக் குறைஞ்ச விலைல தபால் செலவையும் நானே ஏத்துக்கிட்டு அனுப்பியும் எனக்கு ஓரளவு லாபம் நிக்கிதுங்கறது உனக்குத் தெரியுமா. இத்தனைக்கும்  ரெகுலரா புக் அனுப்பறதால அரசு குடுக்கற செம குறைவான தபால் கட்டணச் சலுகை இவங்களுக்கு உண்டு. கூரியர்லையும் அப்படித்தான். ஆனா எப்பையாச்சும் அனுப்பறதால எனக்கு எங்கையும் எந்தச் சலுகையும் கிடையாது. இருந்தும் எனக்கு லாபம் நிக்கிது.  இதுபோக நானே விக்கிற இந்த புத்தகங்களுக்கும் எனக்கு ராயல்டி உண்டு. ஆக எழுத்தாளனா இருக்கிறதைவிட, அட்லீஸ்ட் புத்தகக் கண்காட்சி சீசன்லயாச்சும் புத்தக…

January 11, 2018 maamallan

                                                              11.01.2018                                                               புதுச்சேரி திருமிகு மாமல்லன் அவர்களுக்கு வணக்கம். நான் பொதுவெளிக்கானவன் அல்லன். துரோகங்களை மட்டுமே வாழ்நாள் எல்லாம் எதிர்கொண்டவன். சாவின் எல்லைவரை சென்று திரும்பியவன். உயிரோடு புதைக்கப்பட்டவன்; முளைத்துவந்ததால் உயிர்த்திருக்கிறேன். உறவுகளென்றோ நண்பர்களென்றோ சொல்லிக்கொள்ளும்படி யாருமற்றவன். ஜெயமோகன் என்ற அறவான் என் உயிர்காத்து உறங்க இடமும் உண்ண உணவும் நான் சாகும்வரை கிடைத்திட வழிசெய்தார். எனக்கு வயது ஐம்பத்து மூன்று. எனது அரைநூற்றாண்டு வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட மாமனிதன் அவர். தமிழ்ச் சூழலில் அந்த விஷ்ணுபுரத்தானின் கலாமேதைமையை மட்டுமே நான் மதிப்பவன்; பிறர் எனக்குப் பொருட்டல்லர். எனவே, அவர் தாமே முன்வந்து எனக்குச் செய்த உதவியை…

January 9, 2018 maamallan

சில நாட்கள் முன்பாக விமலாதித்த மாமல்லன் கதைகள் புத்தகத்தை வடிவமைத்த Aadhi Ads அடவி முரளிக்குபுத்தகத்தின் பிரதியைக் கொடுக்கப் போயிருந்தேன்.  POD அச்சடிப்பில் வரும் குளறுபடிகளைப் பற்றியும் அப்படியில்லாமல் அடிப்பது எப்படி என்பது பற்றியும் விசாரித்துக்கொண்டு இருந்தேன். குறிப்பாக பைண்டிங்கில் அட்டையை ஒட்டிய பக்கங்கள் விடைத்துக்கொண்டு இருப்பது. அட்டையில் சில வண்ணங்கள் சரியாக வராதிருப்பது என்று என் சந்தேகங்களை அடுக்கிக் கொண்டே இருந்தேன்.  பொதுவாக நான் கேள்வி கேட்பதே இல்லை. அல்லது அடுத்தவர் பேசுவதைக் கேட்பதே இல்லை. நானே பேசிக்கொண்டு இருப்பேன் என்பதுதான் எல்லோரின் அபிப்ராயமும். இதுபோல, ஆதாரமற்ற அவதூறுகள் என்னைப்பற்றிப் பல உண்டு. உண்மை என்னவென்றால், நான் கேட்கும்படியாக நீங்கள் பேசினாலோ அல்லது தெரிந்துகொள்ள வேண்டும் என்று நான் எண்ணிவிட்டாலோ எதிரிலிருப்பவர் விட்டால் போதும் ஓடிவிடலாம் என்கிற அளவுக்குக் கேள்விகேட்டு அவரைக் கொன்றேவிடுவேன்.  80களில், என் BSA SLR சைக்கிளில் டபுள்ஸ் வராத இலக்கியவாதிகள் மிகக் குறைவு. ஜெயகாந்தன் அசோகமித்திரன்…