Sunday, March 5, 2017

அது

மாதர்சங்கத்தை வைத்து என் வீட்டு முன்னால் ஆர்பாட்டம் செய்யச் சொன்னது மூஞ்சூறு 

எனக்கு லைக் போடும் மகளிர்தம் இன்பாக்ஸில் போய் மண்டியிட்டு லைக் தடுக்கும் பொராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார் ஜாதி ஒழித்த அம்பேத்கர் நாடார்

மாமல்லன் என்கிற பெயரைக்கூட டைப்படிக்காதே எனக்கு நண்பனாய் இருக்க வேண்டும் என்றால் ஆவேசமாய் நண்பர்களைக் கொட்டுகிறது கொடுக்கிறது கருந்தேள் 

என்னைப் போலீஸ்ல புடிச்சிக் குடுத்து என் வேலை போயி நடுத்தெருவுல நிக்க வெக்கணும்னு பாரம் சுமந்து, கண்ணீரும் கம்பலையுமா ஸ்டேஷன் ஸ்டேஷனா ஏறி இறங்கி ஆப் பாயிலால செய்ய முடிஞ்சதெலாம் என் ஃபேஸ்புக் அக்கவுண்ட்டை முடக்கினதுதான்

ஏண்டா வெளங்காதவன்களா உங்க சாரு ஜெயமோகனாட்டம் நான் என்ன கும்பலாடா சேத்து வெச்சி கொஞ்சிக் குலாவிக்கிட்டு இருக்கேன். எனக்குத் தோணறதை எழுதறேன். எவந்தா இருந்தாலும் பின்விளைவுகளைப் பத்திக் கவலைப் படாம, எழுத்துல போலி புடுக்கை வெட்டறேன். எனக்கு சரினு படறதை எந்த கைமாறும் எதிர்பார்க்காம செய்யறேன் -சின்மயி விவகாரம் மாதிரி, ஓலா டிரைவர் பிரச்சனை மாதிரி. 

இப்படி இருந்தும் நான் பொறுக்கியா திரியிறதே உங்களுக்காகதான். உங்களை மாதிரிப் போலிப் புண்ணாக்குங்களை -இந்த வார்த்தை இடக்கரடக்கல். உங்களை நான் செல்லமா எப்படிக் குறிப்பிடுவேன்னு உங்களுக்கே நல்லா தெரியும் - தப்பித் தவறியும் அண்டவிடக்கூடாதுனுதானேடா செல்லங்களா

இப்படில்லாம் பேஸ்புக் பொதுஜனங்களோட கைல கால்ல விழுந்து குட்டிக்கரணம் அடிச்சி என்னை ஒழிச்சிட முடியும்னு நிஜமாவே நினைக்கிறீங்களா. 

உங்களால என்னை ஒரு மயிரும் புடுங்க முடியாது, நானே ஒழியறதுனு முடிவு பண்ணினால் தவிர. நான் ஒழியறது நான் சாகற அண்ணைக்கிக் கூட நடக்காது. என் எழுத்து சாகற அண்ணைக்கிதான் நடக்கப்போற விஷயம் அது. இல்லாட்டி பதினாறு வருஷம் செத்துக் கிடந்தவன் ஏண்டா உயிர்த்தெழுந்து வரப்போறேன்.