Sunday, August 27, 2017

பண்ணிட்டான் பண்ணிட்டான்

பண்ணிட்டான்டி

உன்னையுமா

என்னடி சொல்றே. அப்ப உன்னையும் பண்ணிட்டானாடி

என்னையெல்லாம் எப்பவோ பண்ணிட்டான்டி

உன்னை ஏற்கெனவே பண்ணிட்டான்னு எங்கிட்ட ஏண்டி சொல்லவேயில்ல

என்ன சொல்லி என்ன பண்ணறது. பண்ணினது பண்ணினதுதானே

என்னது உங்க ரெண்டு பேரையுமே பண்ணிட்டானா. சொல்லவேயில்ல. ஏன் எங்கிட்ட சொல்லாம மறைச்சிட்டீங்க. நாங்கள்ளாம் உங்களுக்கு அவ்வளவு அன்னியமா போயிட்டோமில்ல.  இப்படிதான் அவன் இண்ட்டர்நெட்ல எல்லாரையும் பண்ணிக்கிட்டு இருக்கான். அவனை இன்னிக்கு உண்டு இல்லேனு பண்ணிட்டுதான் மறு வேலை. வாங்க உடனே கமிஷ்னர் ஆபீஸுக்குப் போய் புகார் குடுப்போம். பிரதமருக்கு மெய்ல் குடுப்போம். அவன் ஆபீஸ் சீசிக்கு சிசி போடுவோம். இம்மீடியட்டா அவனை வேலைலேந்து சஸ்பெண்ட் பண்ணி பென்ஷன் வாங்கவிடாம பண்ணுவோம். நாங்க இருக்கோம் உங்க பின்னாடி. நீங்க வாங்க எங்க பின்னாடி.

அங்கிள்ஜி அவன் குடும்பத்தை நினைச்சாதான் பாவமா இருக்கு.

என்ன பாவம் வேண்டியிருக்கு இந்த மாதிரி நாய்ங்களுக்கெல்லாம். இவனையெல்லாம் உள்ள வெச்சி ப்ண்ணினாதான் புத்தி வரும்.

இந்த ஒரு தடவை மன்னிச்சி விட்டுருவோம். அடுத்த தடவை இது மாதிரி யார்கிட்ட பண்ணினாலும் நாங்களே முன்வருவோம்.

உங்களைப் பண்ணினது போதாதா. இன்னொருத்தரையும் பண்ணனுமா. என்ன மாதிரி ஆண்ட்டி நீங்க. இனி உங்களோட எனக்கு ஒட்டு உறவு எதுவும் வேணாம். அவனுக்குப் போய் இரக்கப்படற உங்களை ஐ யாம் சாரி ம். ம். -நெஞ்சுக்குள்ள ரத்தம் சொட்டச் சொட்ட சொல்றேன்- என் பேஸ்புக்லேந்தே உங்க ரெண்டு பேரையும் பிளாக் பண்றேன்.

என்ன அங்கிள் இதைப் போய் இவ்வளவு சீரியஸா எடுத்துக்கிட்டு இமோஷனலாகி அழறீங்க.

பின்ன என்னம்மா உங்களை மாதிரி ஆண்ட்டிகள் மேல உயிரையே வெச்சி லைக் கமெண்ட் போடற இந்த அங்கிள் வார்தையை அலட்சியம் பண்ணறீங்களே நான் அழாம வேற என்ன பண்ணமுடியும். உங்களைப் பண்ணினவனை ஒண்ணும் பண்ணாம திடீர்னு எனக்கு அட்டாக் வந்துட்டா அவ்வளவு சுலபத்துல என் நெஞ்சு வேகாது. என் ஆவி பேஸ்புக்ல உங்க சுவரையே சுத்திக்கிட்டு இருக்கும் தெரியுமா.

கூல் அங்கிள் கூல்.

என்ன கூல். உங்களைப் பண்ணிவனுக்கு சரியான பாடம் புகட்டாம என்னால எப்படி இதை கூலா எடுத்துக்க முடியும்.

என்னது எங்களை அவன் பண்ணினானா. இப்படி நீங்க இமோஷனலாகற அளவுக்கு அப்படி அவன் என்ன பண்ணிட்டான் அங்கிள்

என்னம்மா இது என்னையே கேக்கறீங்க. நீங்கதானே பண்ணிட்டான் பண்ணிட்டான்னு பேசிக்கிட்டு இருந்தீங்க.

ஆமா. இப்ப நீங்க கூட இமோஷனலாகி எங்களை பண்னிடுவேன்னு சொன்னீங்களே. அதைத்தான் அவனும் பண்ணினான்.

நான் உங்களைப் பண்ணிடுவேன்னு ஒரு இமோஷனல் மோஷன்ல சொன்னது பேஸ்புக்ல பிளாக் பண்ணிடுவேன்னு. பேஸ்புக்கே அப்ரூவ் பண்ணினது. அது பேஸ்புக் ரூல்ஸ்லையே இருக்கு. அவன் பண்ணினது பலாத்காரம். ரேப். வன்புணர்வு. IPC sec.375 கிரிமினல் குற்றம். ரெண்டும் எப்படி ஒண்ணாகும்.

ச்சீய்ய்ய்ய். அவனும் எங்களை பேஸ்புக்லேந்து ப்ளாக்தான் பண்ணிட்டான். நீங்க உங்க மனசுக்குள்ள எங்களை என்னென்னவோ பண்ணி முடிச்சிட்டீங்களா அதுக்குள்ள.

சாரி வெறி சாரி. நீங்க இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்லியிருக்கலாமில்ல ஆண்ட்டி. சாரி வெறி வெறி சாரி.

இட்ஸ் ஓகே அங்கிள் கூல் கூல். இது நமக்குள்ள நடந்ததுதானே. வெளில யாருக்கும் தெரியாது. டோண்ட் டேக்கிட் டு ஹார்ட் அங்கிள்.

ஓகே ஓகே. அவன் உண்மைலயே உங்களை பண்ணிட்டானில்ல அப்பறம் என்ன. அவன் ஆக்சன் எடுக்கப்படவேண்டிய ஆள்தான். அதுல எனக்கு நோ செகண்ட் தாட்ஸ்.

எங்களுக்கும் அதுல செகண்ட் ஒப்பினியன் இல்லை அங்கிள். வெயிட் பண்ணுங்க இன்னும் வசமா மாட்டுவான். இருங்க அவனை ட்ரிகர் பண்றோம். 

பாத்து ஆண்ட்டி. அவனை பண்றோம் பண்றோம்னு அவன் உங்களைப் பண்ணிட இடம் குடுத்துடதீங்க.

சேச்சே நீங்கள்ளாம் இருக்கும்போது அவன் எப்படி எங்களைப் பண்ணிட முடியும். 

அதானே. எல்லாத்துக்கும் நாங்க இருக்கொம் அப்படி ஒண்ணும் அவனால பண்ணிட முடியாது. ஆனா அவன்தான் உங்களை ஏற்கெனவே பண்ணிட்டானே. 

என்னது...

பிளாக். அப்பறம் அவனை எப்படிப் பண்ண முடியும் ட்ரிகர். 

அப்பறம் நீங்க எதுக்கு இருக்கீங்க அங்கிள். நல்லா கெட்ட கெட்ட வார்த்தைல திட்டி போஸ்ட் போட்டு அவனை ட்ரிகர் பண்ணுங்க. 

என்னது நான் பண்ணனுமா. கெட்ட கெட்ட வார்த்தைலயெல்லாம் போஸ்ட் போட்டா, அப்பறம் கெளரவமான என் அங்கிள் போஸ்ட் என்ன ஆகறது. இல்லை லைக் கமெண்ட் போட்டு நான் உங்க பேக்லையே இருந்துக்கிறேன். உங்களுக்குதான் என் பேக் கிரவுண்ட் தெரியுமே.

எப்பவுமே நீங்க எங்க பேக்லதான் இருக்கீங்க. அது தெரியும் அங்கிள். ஆனா அவன்தான் எங்களைப் பிளாக் பண்ணிட்டானே. அப்ப நீங்கதானே பண்ணியாகனும் அவனை. 

நான் பண்ணலாம்னு வந்தது உங்களை வழிநடத்த. நீங்க என்னடான்னா அவனைப் போய் என்னையே பண்ணச் சொல்றீங்க. ஆம்பிளையும் ஆம்பிளையும் நடுத்தெருவுல கட்டிப் பொரண்டலும் மிஞ்சி மிஞ்சிப்போனா நியூசன்ஸ் கேஸாதான் ஆகும். எஃபெக்டிவா அவனை எதாவது பண்ணனும்னா அதை நீங்கதான் பண்ணியாகனும். 

இவர் என்னடி இப்படிச் சொல்லிட்டுப் போயிட்டாரு. 

அதானே. அவன்தான் நம்பளை ஏற்கெனவே பண்ணிட்டானேடி. நாம எப்பிட்றீ அவனைப் பண்றது. 

அங்கிளாம் அங்கிள் யூஸ்லெஸ் அங்கிள். தடுக்கி விழுந்தா ஆயிரம் அங்கிள்ஸ் இருக்காங்க பேஸ்புக்ல. வேற யாராவது அவனைப் பண்ண வராமலா போயிடுவாங்க. 

இந்த நாய்ங்க எதையும் எதிர்பார்க்காம, நாமளே அவனைப் பண்ணிடலாம்னு பாத்தா அவன் நம்பளை ஏற்கெனவே பண்ணிட்டானேடி.