August 13, 2016 maamallan 0Comment
அம்பேத்காரிஸம் பெரியாரிஸம் FBக்கு. அல்ட்டிமேட் நாடாரிஸம் தன் குடும்பத்துக்கு என புக்கு நக்கி போஸ்ட்டு போட்டு, கடலை போடவும் அம்பேத்கார் தலித் என்கிற வார்த்தைகளைக் கேட்டதுமே ஆ இதமாக இருக்கு இன்னும் கொஞ்சம் தடவிக்கொடு என கழுத்தைத் தூக்கும் அப்பாவிகளிடம் சமூக நீதி சிந்தனையாளராக ஃபார்ம் ஆகிக் கொண்டிருக்கும் இந்த அற்பப் பயல் தன்னை அறிவுஜீவியாய்க் காட்டிக்கொள்ள எவ்வளவு அயோக்கியத்தனமாய் ஒரு பொய்யை பக்கத்தில் இருந்து பார்த்ததைப் போல் அலசுகிறான் என்று பாருங்கள்.
அற்பப் பதரே இந்தா 2010 முதலான, மனுஷ்ய புத்திரனுடனான என் செண்ட் மெய்ல் பாக்ஸ். நீயே பார்த்துக்கொள் எங்கெல்லாம் இளித்திருக்கிறேன் என்று.
2012க்குப் பிறகு, குருவி சாமியார் சிறுகதையை, ஏப்ரல் 10ல் உயிர்மைக்கு அனுப்பும் வரை, இடையில் ஏதாவது மெய்ல் இருக்கிறதா. ஏன் இல்லை என்றால் தொடர்பிலேயே இல்லை. இடையில் ஒரே ஒரு முறை டிசம்பர் 11ல் கைபேசியில் அழைத்துப் பாராட்டியதோடு சரி. அதற்கடுத்த வருடம் சண்டையாகிவிடுகிறது.

குறைந்த அளவிலேயே எழுதியிருந்தும் எழுத்தாளர்களால் பாராட்டப்படும் எழுத்தாளனாக நிறுவி நிற்பதென்ன எட்டடிக் குச்சில் நடக்கும் ட்விட்டர் எழுத்தாளர் FB கவிஞர் திறனை ஆய்ந்துகொள்ளும் கூட்டம் என்று நினைத்தாயா. இது இன்று நேற்றல்ல நான் எழுதவந்த நாள் முதல் சுஜாதா தி.ஜா அசோகமித்திரன் என வரிசை பாராட்டி வைத்த வரிசை பெரியது. பாராட்டிவிட்டார்கள் என்பதற்காக விமர்சனம் என்று வருகையில் விசுவாசியாக இருந்ததும் இல்லை. என்னைத் தனிப்படப் பிடிக்காதவர்களாலும் என்னையும் சரி என் எழுத்தையும் சரி நிராகரிக்க முடியாதபடி வாழ்வதென்ன லேசான காரியம் என்று நினைத்தாயா.

மனுஷ்ய புத்திரனுடன் நல்ல உறவில் இருக்கையில், திறம் கதையை அனுப்பி மூன்று மாதங்கள் ஆகியும் பிரசுரிக்கவில்லை என்பதால் நான் அனுப்பிய மெய்லைப் பார். கதை பிரசுரமாவதற்காக இளிப்பவன் அனுப்புகிற மெய்லா இது.
1994ல் இலக்கியத்தைத் துறந்துவிட்டு 2010 ஆகஸ்ட்டு 17ஆம் தேதியன்று திரும்ப வந்த என்னை இந்தத் தலைமுறையில் யாருக்குமே தெரிய வாய்ப்பில்லை. 2010ல் மனுஷ்ய புத்திரனின் அந்தஸ்தென்ன, அவர் நமது புத்தகத்தைப் போட்டு இன்னும் இரண்டு மாதங்கள்கூட ஆகவில்லையே என்று கணக்கு வழக்குடன் யோசிப்பவன் இப்படி எழுதுவானா.

என் புத்தகம் உயிர்மையில் வெளியாகி ஒரு வருடம் கூட ஆகியிராத சமயத்தில் இப்படி நக்கலாய் எழுத எத்தனை எழுத்தாளர்கள் கிடைப்பார்கள் நீண்ட நெடிய தமிழிலக்கிய வரலாற்றில், பாரதி புதுமைப்பித்தனுக்குப் பின் என்று விரல் விட்டுச் சொல் பார்க்கலாம். 

தப்பும் தவறுமாய் எல்லாவற்றையும் பார்க்கிற சிறு பீ நீ என்று உன்னைப் பற்றி சிந்தனைச் சிற்பி என எழுதித் துவைத்த பின்னும் மானங்கெட்டு எதுவுமே நடக்காததைப் போல இன்னொரு பொய்யை அவிழ்க்கிறாயா.

உயிர்மையில் என் புத்தகம் வெளிவர நேர்ந்தது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் போய் கேள் அகநாழிகை வாசுதேவனை. புத்தகம் போடு எனச்சொல்லி போய் நின்றது நானா என்று. அது தானாக நடந்த ஒரு விஷயம்.

எச்சிற் பிண்டமே, முதல் தொடர்பைப் போலவே மனுஷ்ய புத்திரனுடனான மறு தொடர்பும் எவ்வளவு தற்செயல் என்பதற்கான தடயம் ஃபேஸ்புக்கிலேயே இருக்கிறதே. எதுவுமே தெரியாதது போல நடிப்பதே உன் பிழைப்பா.
இதே மார்ச் 10ஆம் தேதியில் மனுஷ்ய புத்திரனின் பதிவு. 
கலாப்ரியாவுக்கும் எனக்கும் தொடர்பே இல்லை என்பதற்கு இருவரின் FB சுவர்களுமே சாட்சி. இருவர் மொபைலையும் எடுத்து CDR பார்த்தால் கூட ஒரே ஒரு முறை பேசியிருப்பதாய்க் காட்டும் – எந்த வருடம் என்றுகூட நினைவில்லை – ஜி நாகராஜன் பற்றி, அவரிடம் ஏதோ கேட்டதாக நினைவு. என்னைப் போன்ற தொடர்பில் இல்லாத ஒரு போக்கிரிப் பயலுக்கு நெகிழ வேண்டும் என்று அவருக்கு என்ன வந்தது. அவருக்குப் பத்துப் பதினைந்தாண்டுகள் பின்னால் வந்த நான் எக்கேடு கெட்டால் என்ன.
பிசாசுகளால் விரட்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஆன்மாக்களான எழுத்தாளர்கள்  பரஸ்பரம் மனஸ்தாபம் கொள்வதும் சண்டையை மறந்துத் திரும்பத் தேடிப் போவதும் லாபம் கருதி மட்டுமேவா. ஆம் மண்ணாந்தைகளுக்கு அப்படி மட்டுமேதான் தோன்றும். இவன் வேறு எவனிடம் போவான் உன்னைப் போன்ற மொக்கை நாயிடம் போய் என்ன எழவைப் பேச முடியும். அப்படியே பேசினாலும் இது போன்ற நேர்மையின்மையை அல்லவா எதிர்கொள்ள வேண்டி வரும்.
பிரமிளுக்கும் ஞானக்கூத்தனுக்கும் ஜென்மப் பகை. பிரமிள் சாதாரண சண்டைக்கே பஸூகா எடுப்பவர் என்பதற்கு அவர் எழுத்துக்களே சாட்சி.
ஆத்மாநாம் ஞானக்கூத்தன் கோஷ்டியைச் சேர்ந்தவர். ஆத்மாநாம் தற்கொலை செய்துகொண்டுவிட்டார். அஞ்சலிக் கூட்டம் திருவல்லிக்கேணி தெற்கு மாடவீதியில் கலர் கண்ணாடி ஜன்னல்கள் பொறுத்தப்பட்ட ஒரு மாடியில் நடந்தது. ஆத்மாநாமின் வெளியேற்றம் கவிதையை வாசித்துவிட்டு பிரமிள் வெடித்து அழுதார். அங்கிருந்த ஞானக்கூத்தன் ராஜகோபால் என்று ஆத்மாநாமுடன் நெருங்கிப் பழகிய அனைவரையும் அது பாதிக்க பலர் அழுதுவிட்டனர். 
இந்த சம்பவம், நான் திரும்ப இணையத்துக்கு வரும் முன்பாகவே இங்கும் விவரிக்கப் படுகிறது. 25.5.10 நான், பிரமிள், விசிறிசாமியார்……12. இரவல் வாந்தியே இதில் என் பெயர் இருப்பதென்ன நான் இட்டுக் கட்டிய கதையா. என் பெயரை உச்சரிக்க தட்டச்சக் கூட உனக்கெல்லாம் அருகதை உண்டா.
பிரமிளின் அந்தத் தருணம் மாசற்றது. அது கடந்த பின் பழைய புழுதி மூடிக்கொண்டு விடுவது வேறு விஷயம். எழுத்தாளர்களுக்குள்ளான இப்படியான எவ்வித எதிர்பார்ப்புமற்ற நெகிழ்ச்சியான தருணங்கள் நிகழக்கூடும் என்பதெல்லாம் அம்பேத்கார் பெரியார் என்று ஜல்லியடித்துக் கொண்டிருகிற மேனா மினுக்கிகளுக்குக் கற்பனைக்குக்கூட எட்டாத அனுபவங்கள்.

பிளாக் செய்த பின்பும் எதிரில் பார்த்துவிட்ட தோஷத்துக்காக போகட்டும் பாவம் என்று பேசினாலும், யார் சண்டையிலோ ஸ்கோர் செய்ய பொய்யும் புளுகுமாய் புழுத்து நெளிகிற உனக்கேன் இவ்வளவு வன்மம். முந்தைய கட்டுரையில் உன்னைக் கழற்றிப் போட்டதில் உன் அம்மண சொரூபம் அம்பலப்பட்டு விட்டதே என்கிற பதட்டமா.
//”சார் ப்ளீஸ் பப்ளிஷ் பண்ணுங்க சார்” என்று சரணடைந்தார்.//
பார்த்துக்கொள் என் மெய்லை. நக்கித் துடை நீ எடுத்து வைத்த, எட்டு வீட்டுப் பிச்சைக்கார வாந்தியை. 
என்ன நடந்தது என்கிற உண்மையைச் சொல்லடா பேடி. அம்பேத்கார் பெரியார் என பெயர் உதிர்த்துக்கொண்டு பொய் சொன்னால் தின்ன பீ கூடக் கிடைக்காது உனக்கு. 
ஜூன் 2ஆம் தேதி புக்ஃபேரில் 3 மணி நேரம் குச்சி ஐஸை சப்பிக்கொண்டிருந்தாயே அப்போது இந்தக் குருவி சாமியார் கதை உயிர்மையில் வந்திருப்பதைப் பற்றிய உரையாடலைத் தொடங்கியது நீயா நானா என்று சொல்லடா நாயே.
உயிர்மைல கதை வந்திருக்கு போல. 
ஆமாம்
பார்த்தேன் இன்னும் படிக்கலை.
மனுஷ் சொல்லிதான் எனக்கே தெரியும். இந்த மாசம் வர வாய்ப்புண்டானுதான் கேட்டேன். இந்த இஷ்யூல வந்திருக்கேன்னார்.
இன்னைக்கி நைட்டு படிச்சிருவேன்
ஓகே
நீங்க உயிர்மைல எழுதணும் சார். ’நீங்க’ உயிர்மைல எழுதறது முக்கியம். உயிர்மை முக்கியமான பத்திரிகை.
எனக்கு இதுல எழுதலாம் இதுல எழுதக்கூடாதுனுலாம் எதுவும் இல்லை. எதுல எழுதினாலும் நான் எழுதறதைத்தான் எழுதுவேன். எழுதினதை எடிட் பண்ணக் கூடாது.
அது கரெக்டு ஆனா நீங்க உயிர்மைலையும் எழுதணும்னு நான் நினைக்கிறேன் ஆசைப்படறேன்.
இப்படி நீ பேசிவிட்டு கதை பிரசுரமாவதற்காக நான் இளித்ததாய் இப்போது சொல்கிறயே எந்த மாதிரியான ஜென்மமடா நீ.
நாம் சந்தித்த மறுநாள் மேலே இருப்பதை எழுதியது நீ தானே. கதை பிரசுரமாக நான் இளித்ததாய் இப்போது நீ சொல்லும் பொய்யின் நிழலின் தடயம் கூட இதில் இல்லையே ஏன். 
உன் பொய்க்கு லைக் போடும் புண்ணாக்குகள் என்ன படித்திருந்தால்தான் என்ன எவ்வளவு சம்பாதித்துக் கொண்டு இருந்தால்தான் என்ன இதுகளெல்லாம் வெட்டிப்போட்ட என் இடதுகால் சுண்டுவிரல் நகத்துக்கு ஈடாகுமா.

உன் போன்ற பிறவிப் பொய்களெல்லாம் சேர்ந்துகொண்டு ஒரு புளுகு மூட்டைப் பொம்பளையை ஆதரிப்பதே சரியானது. பொய்யரைப் பொய்யரே காமுறுவர்.

எது குறித்தும்
எனக்கொன்றும் வெட்கமில்லை
வெட்கப்பட
நானொன்றும் குழந்தையில்லை
வெட்கப்பட வேண்டியதும்
நானில்லை

நான்
பெய்யும் மழை
வீசும் காற்று
எரியும் தீ
வழங்கும் பூமி
கவியும் வானம்

இங்கே
இடங்கெட்டுக் கிடக்கலாம்
சூழல் நாறித் தொலைக்கலாம்
இயல்பு அழிந்திருக்கலாம்
தன்மை மாறியிருக்கலாம்
முறைமை திரிந்திருக்கலாம்

முட்டாள்களுக்கும்
முரடர்களுக்கும் மத்தியில்
மூளையையும்
மனத்தையும்
முழுசாகக் காப்பாற்ற முடியாமல் போகலாம்

சுட்டு விரல் நீட்டி
கொட்டி முழக்கி
எத்தைக் காட்டி
வித்தகம் பேசுகிறீர்கள்
செத்தபிறகு
சிவனென்றும்
சுயம்புலிங்கமென்றும்
சொல்லிக்கொண்டிராதீர்கள்

எரிகிறபோதே
தெரியாத முண்டத்துக்கு
இருட்டில் என்ன தெரியும்

நரம்பில்லாத நாக்கு
நாலும் பேசும்தான்
நல்லது
நக்கவும் துழாவவும் மட்டுமே
நாக்கை வைத்துக்கொண்டால் போதும்…

– விக்ரமாதித்யன்

Leave a Reply