August 6, 2016 maamallan 0Comment
அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்.
யோவான் 20:29 

இந்த நிமிடம் வரை நான் அந்த ஓலா ஓட்டுநரை நேரில் சந்திப்பதைத் தவிர்த்தே வருகிறேன். விசேஷ காரணம் எதுவுமில்லை. நன்றியுணர்வை எதிர்கொள்ளும் தர்மசங்கடத்தைத் தவிர்ப்பதற்காகத்தான். கைபேசியில் பேசுவதோடு சரி. இந்தக் காரியத்தில் எனக்கு உதவியவர்களில் சிலரைத் தவிர, பலரை எனக்கு இணையம் வாயிலாகக் கூடத் தெரியாது. ஆனாலும் என் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கும் 80 பேரையேனும் சம்பாதித்து இருக்கிறேன் என்பதை என்னாலேயே நம்பமுடியவில்லை. 
என்னை யார்னே தெரியாம இவ்ளோ தூரம் உதவி செஞ்சிருக்கீங்க. ரொம்பக் கூச்சமா இருக்குது சார். 
தம்பி. இது நான் செஞ்ச உதவி இல்லே. எனக்கே யார்யார்னு தெரியாத எத்தனையோ பேர் செஞ்சிருக்கிற உதவி. நீ சொல்ல வேண்டிய நன்றியெல்லாம் அவங்களுக்குதான். 
கண்டிப்பா சார். 
ஆனா யாருமே உங்கிட்ட நன்றியை எதிர்பார்க்கலை. உண்மையில அவங்க செஞ்ச உதவி சரியா போய்ச் சேரணும். போய்ச் சேர்ந்துருக்கானு கவனிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் எனக்கு இருக்கிறதாலதான் நான் ஒவ்வொரு விஷயத்தையும் உனக்கு இஞ்சின்ச்சா கேட்டுக்கிட்டும் சொல்லிக்கிட்டும் இருக்கேன். 
ஆமா சார். இவ்ளோ பேர் செய்த உதவி கரெக்டா பயன்பட்டாதான சார் அவங்களுக்கும் ஒரு திருப்தியா இருக்கும். 
உதவி கேட்டு என் வங்கிக் கணக்கை வெளியிடும் முன், மனைவியிடம் என் அனுமானமாகக் கூறியதென்னவோ குறைந்தபட்சம் 50,000/- அதிகபட்சம் 1,00,000/- என்பதுதான். நிஜமாகவா அவ்வளவு கொடுப்பார்களா என்றாள் அவநம்பிக்கையுடன். 
22 ஜூலையில் பணம் கொடுக்காதீர்கள் என்கிற அற்பப் பிரச்சாரத்தைக் கணக்கில்கூட எடுத்துக்கொள்ளாமல் வந்து சேர்ந்த உதவியைப் பார்க்கப் பார்க்க பிரமிப்பாக இருக்கிறது. 
20-Jul-16
1
5000
20-Jul-16
2
500
20-Jul-16
3
3000
20-Jul-16
4
500
20-Jul-16
5
2000
20-Jul-16
6
6642
20-Jul-16
7
6642
20-Jul-16
8
5000
20-Jul-16
9
1000
20-Jul-16
10
5000
20-Jul-16
11
2000
20-Jul-16
12
4000
20-Jul-16
13
1000
20-Jul-16
14
1000
20-Jul-16
15
1000
20-Jul-16
16
1000
20-Jul-16
17
5000
20-Jul-16
18
5000
20-Jul-16
19
5000
20-Jul-16
20
1000
20-Jul-16
21
1000
20-Jul-16
22
1000
20-Jul-16
23
1000
20-Jul-16
24
5000
20-Jul-16
25
5000
20-Jul-16
26
2000
20-Jul-16
27
8000
20-Jul-16
28
5000
20-Jul-16
29
2000
20-Jul-16
30
2000
20-Jul-16
31
5000
20-Jul-16
32
1500
20-Jul-16
33
3000
20-Jul-16
34
5000
20-Jul-16
35
2000
20-Jul-16
36
1000
20-Jul-16
37
1000
20-Jul-16
38
1000
20-Jul-16
39
5000
20-Jul-16
40
1500
20-Jul-16
41
1000
20-Jul-16
42
1000
20-Jul-16
43
500
20-Jul-16
44
1000
21-Jul-16
45
1000
21-Jul-16
46
1000
21-Jul-16
47
10000
21-Jul-16
48
4000
21-Jul-16
49
1500
21-Jul-16
50
1500
21-Jul-16
51
1000
21-Jul-16
52
2000
21-Jul-16
53
5000
21-Jul-16
54
2000
21-Jul-16
55
2000
21-Jul-16
56
500
21-Jul-16
57
1000
22-Jul-16
58
1500
22-Jul-16
59
1000
22-Jul-16
60
1000
22-Jul-16
61
2000
22-Jul-16
62
500
23-Jul-16
63
1000
23-Jul-16
64
1000
23-Jul-16
65
1000
24-Jul-16
66
1500
25-Jul-16
67
5000
25-Jul-16
68
2001
25-Jul-16
69
5000
26-Jul-16
70
2000
26-Jul-16
71
2000
27-Jul-16
72
1000
27-Jul-16
73
10000
27-Jul-16
74
3000
28-Jul-16
75
13270
29-Jul-16
76
1500
29-Jul-16
77
7000
30-Jul-16
78
5000
30-Jul-16
79
3000
04-Aug-16
80
1000
226555

                                 +5000

                          =   231555
எனக்கும் விலாசினி ரமணிக்கும் என்ன தனிப்பட்ட தகறாரு என்று யாரேனும் அருள்கூர்ந்து சொல்லுங்கள். அவரிடம் எனக்கு ஏதோ வன்மம் என்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்கித் தப்பிக்கப் பார்க்கிறது இந்தப் போலி கும்பல். போலிகளைத் தோலுரிப்பது எனது இயல்பு. இதில் பெண்ணியப் போலிக்கு என்ன விசேஷ விலக்கு வேண்டிக் கிடக்கிறது, மார்க்சிய நாத்திகப் போலிகளே.
ஓரு பெண்ணியப் போலி தன் ஈகோவைத் திருப்திப் படுத்திக் கொள்ளும் விளம்பர வெறியில் ஒரு குடும்பத்தையே அழித்து நாசமாக்கிவிட்டு, அய்யையோ பாவம் ஏழைகள். ஐயோ பாவம் தலித்துகள் என்று பசப்பிப் போட்டுக்கொள்ளும் ஃபேஸ்புக் போஸ்ட்டுக்கெல்லாம் மானங்கெட்டு லைக் போட்டுக் கொண்டிருக்க நான் என்ன படிப்பாளியா உங்களைப் போல. இதே போலித்தனத்தை ஒரு ஆண் செய்தால் என்ன ட்ரீட்மெண்ட் கிடைக்குமோ அதே அளவில்தான் ஒரு போலியான பெண்ணையும் விமர்சிப்பேன் எவ்விதப் போலி சலுகையும் காட்டாமல்.
நீங்கள் விரதம் இருக்கும்போது, வெளிவேஷக்காரர்களைப் போல் முகத்தை வாட்டமாய் வைத்துக்கொள்ளாதீர்கள்; தாங்கள் விரதம் இருப்பது மற்றவர்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காக அவர்கள் தங்களுடைய முகத்தை அவலட்சணமாக வைத்துக்கொள்கிறார்கள். உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், மனிதர்களால் புகழப்படுவதைத் தவிர வேறெந்தப் பலனையும் அவர்கள் பெற மாட்டார்கள். 
மத்தேயு 6:16 
சகலவிதமான போலிகளுக்கும் சொல்லிக்கொள்ள எனக்கு ஒன்றுண்டு.
எல்லாவற்றுக்கும் மேலாக, ஒருவருக்கொருவர் ஆழ்ந்த அன்பு காட்டுங்கள்; ஏனென்றால், அன்பு திரளான பாவங்களை மூடும் 
பேதுரு 4:8 
வாடகைக்கு இருக்கும் இப்படியான வீட்டில்கூட இருக்க விடாமல் அழித்து ஒழிக்கப் பார்ப்பது அவர்கள் காரியம். கொஞ்சமேனும் சிமிட்டிப் பாலைப் பூச முடியுமா என்று பார்த்தது உங்கள் காரியம். இப்போதைக்கு உங்கள் பணம்தான் அவர்களிடம் போயிருக்கிறது. அது வாடகைக் காராக ஆனபின் அறிவிக்கிறேன். மனமார்ந்த நன்றி நண்பர்களே. 

Leave a Reply