July 26, 2016 maamallan 0Comment
அஞ்சு அஞ்சா மனுஷ வாழ்வை பிரிச்சிக்கோ. அதில் உட்டாலகடிப் பதிவுகளை நீ உரிச்சிக்கோ. 

எப்பங்க சார் அந்த அஞ்சு வருஷம். நான் கேக்கலை. நான்லாம் சூப்பிரெண்டெண்டெண்ட் இல்லே கான்ஸ்டபிள் கண்ணாயிரம். அறிவே இல்லாத அடிமடையன். லாயர் தோழர் கேக்கிறார் அதுக்குப் பேர் கொத்த முன்னாள் கிரிமினல் லாயரே சொல்றார் பாத்துக்குங்க.
ஷார்ட் டிண்ட்னா கொஞ்ச காலம் இல்லையானு நான் கேக்கலை FB ஜெத்மலானியே சொல்றார் 205-06லை பிரக்டீஸ்  பண்ணினதா. 
2005-06ல ஆரம்பிச்சு செஞ்ச தொழில் எப்படி நடந்துது. அதை என் வாயால சொல்லுவானேன். அவரே சொல்றார் கேட்டுக்குங்க.
அண்ணே ஓ அப்படியா. இந்த உத்தப்புரம் பிரச்சனை எப்பண்ணே. 
2008 அக்டோபர். இதுலதான் நம்ப சார்வாளை ஜாதிவெறி பிடிச்ச அவிங்க உறவுக்காராளான பிள்ளைவாள்கள் முன்ஜாமீன் வாங்கிக்குடுங்கோனு அப்ரோச் பண்ணியிருக்கா. சார்வாள் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டார் நான்லாம் சோட்டா லாயர் நீங்க வேற சீனியர் வழக்கறிஞரை பார்த்துக்கொள்ளுங்கள் என்று நாசூக்காக ஒதுங்கிவிட்டார் அதுவும் வழக்கே இல்லாமல் ஈ ஓட்டிண்டு இருந்தப்போ. இதெல்லாம் சாதாரான மணுஷா செய்யற காரியமா. ஈ ஓட்டிண்டு இருக்கச்சையே இப்படிச் சொல்ல எவ்ளோ பெரிய மனசு வேணும். 
ஆக 2005-06ல ஆரம்பிச்சு 2008 வரைக்கும் ஈ ஓட்டிண்டு இருந்தவர், எம்ஜிஆர் ஒரே பாட்ல தண்ணி சேந்தும்போதே பணக்காரர் ஆயிடுவாரே அது மாதிரி, 2009 – 2010ல பயங்கரமா பிராக்டீஸ் தலையப் பிச்சிண்டு ஓட ஆரம்பிச்சதும் 2011ல நாம எங்கையாவது கே கே வேணுகோபாலாவோ இல்ல ஃபாலி நாரிமனாவோ ஆகிடப்போறோம், அதெல்லாம் வேண்டாம்னு காக்னிஸண்ட்ல போய் தேமேனு வேலைக்கு சேந்துட்டார். 2011ல காக்னிஸண்ட் போனார்னு எப்படிச் சொல்றேனு கேக்கறேளா. அதையும் சார்வாளே இன்னத்திய FB புல்லட்டின்ல சொல்லியிருக்கார். 
2005-06ல செஞ்சிண்டிருந்த வேலையை பிடித்தும் அனுபவித்தும் செஞ்சிண்டு இருந்ததாலதான், பருப்பு புளி எதுவும் வேகாம 2008 வரைக்கும் ஈ ஓட்டிண்டு இருந்துட்டு, இதுக்கு மேலையும் இந்த ஈயோட தாக்குப் பிடிக்க முடியாது ஒரே ஈயை எப்படிதான் வருஷக்கணக்குல ஓட்டிண்டு இருக்கறதுன்னுதான் காக்னிஸண்ட்ல சேந்துட்டேங்கறார்.
ஆனால் புதியவர்களுக்கான சுய புராணத்திலோ, 
//சென்னையின் பிரபல குற்றவியல் வழக்கறிஞரிடம் தொழில் பயின்று நண்பருடன் இணைந்து தனியாகவும் தொழில் செய்து வந்தேன்.// 
தொழில் பயின்றது பிரபல சென்னை குற்றவியல் வழக்கறிஞரிடம். 
இணைந்தும் தனியாகவும் ஈ ஓட்டித் தொழில் செய்தது மதுரையில் என்று நாமாகப் பிரித்துப் பார்த்துப் படித்துப் பொருள்கொள்ள வேண்டும்.  
//எனக்கிருக்கும் சட்ட அறிவிலும் (ஆங்கில) மொழிப்புலமையிலும் எனக்கு பெருமிதம் உண்டு. இதற்காக என் சீனியர்கள் உட்பட சக வழக்கறிஞ நண்பர்களாலும் பாராட்டப்பட்டிருக்கிறேன்.// 
இதெல்லாம் நம் பரிசீலணைக்கு அப்பாற்பட்டவை என்பதால் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான். 
சரி அப்பால:
//முதல் தலைமுறை வழக்கறிஞருக்கு இருக்கும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாகவும், குற்றவியல் வழக்குகளில் ஆஜராவதால் என்னுடைய அறிவும் திறமையும் தவறானவர்களுக்கு பயன் படும் போது ஏற்படும் குற்ற உணர்ச்சியினாலும் தொழில் செய்வதிலிருந்து வெளியேறி தற்போது கார்ப்பரேட் வழக்கறிஞராக இருக்கிறேன். // 
வெறி குட். 
2007லையே காக்னிஸண்ட்ல சம்பளத்தை கட்டையாக்கி சகாய விலைல வந்தவாளைப் பிடிச்சுப் போட ஆரம்பிச்சிட்டோம்கறார் ஆனந்த் பூஷன். நம்ம பிள்ளைவாள் சார் கூட இருக்கார் பாருங்கோ. http://www.legallyindia.com/In-house-interview/cognizant-inhouse-interview-legal-team
சட்ட சாம்ராட் சொல்கிறார், மாமல்லன் போல் ஒன்றும் தெரியாமல், ஊடகத்தில் வந்ததன் அழுத்தம் காரணமாக, 7 வருடங்களுக்குக் குறைவான தண்டணை உள்ள குற்றங்களுக்குக் கண்ணை மூடிக்கொண்டு கைது செய்யாதே என்று, சுப்ரீம் கோர்ட் சொன்னதையும் கேட்காமல், காவல்துறையும் நீதித்துறையும் கைது செய்திருக்கிறது என்று கேஸ் லாவைக் கொடுக்கிறார். ஆனால், இந்த ஆனால் மிகவும் முக்கியம் கவனமாக மனதில் இருத்துங்கள். கீழ்க்கண்ட பகுதியை எழுதியது Rajagopal Subramaniam July 22 at 6:13pm எழுத்தாளன் செய்த வன்புணர்வு-2
//சரி, இந்த கைது நடவடிக்கை அவசியமா..? அவ்வளவு சீரியஸான விஷயமா இது..? அது தான் எந்த சம்பவமுமே நடைபெற வில்லையே என்று கேட்டிர்களானால், கைது என்பது காவல் துறையின் தனிப்பட்ட அதிகார வரம்பு. 7 வருடங்களுக்கு குறைவான தண்டனை உள்ள வழக்குகளில் கைது நடவடிக்கை தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்திருக்கிறது. எனவே காவல்துறை தான் முடிவு செய்யமுடியும். காவல் துறை ஊடக அழுத்தங்களுக்கு பயந்து மாமல்லன் போல சட்டம் உட்பட ஒரு இழவும் தெரியாமல் கைது செய் தால் விலாசினி என்ன செய்வார்?
Arnesh Kumar vs State Of Bihar & Anr on 2 July, 2014
…Our endeavour in this judgment is to ensure that police officers do not arrest accused unnecessarily and Magistrate do not authorise detention casually and mechanically. In order to ensure what we have observed above, we give the following direction:
All the State Governments to instruct its police officers not to automatically arrest when a case under Section 498-A of the IPC is registered but to satisfy themselves about the necessity for arrest under the parameters laid down above flowing from Section 41, Cr.PC;
All police officers be provided with a check list containing specified sub- clauses under Section 41(1)(b)(ii);
The police officer shall forward the check list duly filed and furnish the reasons and materials which necessitated the arrest, while forwarding/producing the accused before the Magistrate for further detention;
The Magistrate while authorising detention of the accused shall peruse the report furnished by the police officer in terms aforesaid and only after recording its satisfaction, the Magistrate will authorise detention;
The decision not to arrest an accused, be forwarded to the Magistrate within two weeks from the date of the institution of the case with a copy to the Magistrate which may be extended by the Superintendent of police of the district for the reasons to be recorded in writing;
Notice of appearance in terms of Section 41A of Cr.PC be served on the accused within two weeks from the date of institution of the case, which may be extended by the Superintendent of Police of the District for the reasons to be recorded in writing;
Failure to comply with the directions aforesaid shall apart from rendering the police officers concerned liable for departmental action, they shall also be liable to be punished for contempt of court to be instituted before High Court having territorial jurisdiction.
Authorising detention without recording reasons as aforesaid by the judicial Magistrate concerned shall be liable for departmental action by the appropriate High Court.
We hasten to add that the directions aforesaid shall not only apply to the cases under Section 498-A of the I.P.C. or Section 4 of the Dowry Prohibition Act, the case in hand, but also such cases where offence is punishable with imprisonment for a term which may be less than seven years or which may extend to seven years; whether with or without fine.
We direct that a copy of this judgment be forwarded to the Chief Secretaries as also the Director Generals of Police of all the State Governments and the Union Territories and the Registrar General of all the High Courts for onward transmission and ensuring its compliance.
By order dated 31st of October, 2013, this Court had granted provisional bail to the appellant on certain conditions. We make this order absolute.
விலாசினி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி கைது செயது அவர் வாழ்க்கையை அழித்து விட்டார் என்ற மாமல்லன் கூற்றில் ஏதேனும் உண்மை இருக்கிறதா? இருந்தால் சொல்லுங்கள் உங்களுடன் சேர்ந்து நானும் பணம் கொடுக்கிறேன்.?// 
இதை எழுதியது எப்போது. விலாசினியுடன் நேரடியாகப் பேசி திரைக்கதை வசனத்தைத் தயாரித்து எழுதி இயக்கி, விலாசினியைக் கமெண்ட்டில் நடிக்க வைக்கும் முன். 
அப்போது சொன்ன உச்சநீதி மன்ற கேஸ் லா, அதாவது மாமல்லன் என்கிற எதுவும் தெரியாத தண்ட முடத்துக்கு, சுப்ரீம் கோர்ட் சொல்லியும் கேட்காமல் ஊடக அழுத்தம் காரணமாக போலீசும் நீதிபதியும், ரிமாண்ட் தேவையில்லை என்று சொல்லியும் குறிப்பிட்ட கேஸ் லாவில் கூறியிருந்தும், சிறையில் அடைத்தால் விலாசினி என்ன செய்வார் பாவம் என்கிற அந்த வாய் இப்போது எப்படி நாற வாய் ஆகிறது என்று கூர்ந்து பாருங்கள். Rajagopal Subramaniam July 23 at 8:13pm எழுத்தாளன் செய்த வன்புணர்வு- இறுதி பகுதி
//முதல் முறையாக விலாசினியிடம் பேசினேன். பேசிய பின்பு தான் நடந்த முழு விபரமும் தெரிந்தது.// 
//இந்த பிரச்சினையில் 294(பி) மற்றும் 506 (1) பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். இதில் 506 (1) புகார் தாரர் நினைத்தால் சமரசம் செய்து கொண்டு வழக்கை வாபஸ் பெறலாம். ஆனால் 294 (பி) பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல் பிரிவு விலாசினியே நினைத்தாலும் சமரசம் செய்ய முடியாது. இது ஊடகங்களில் வந்து விட்டதால் கண்டிப்பாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வார்கள். பெண்களுக்கு எதிரான குற்றம் என்பதால் கண்டிப்பாக நீதிமன்றம் கடுமை காட்டவே செய்யும். இருக்கும் ஒரே வாய்ப்பு டிரைவரும் அந்த முதலாளியும் விலாசினியிடம் சமரசம் செயது நீதிமன்றத்தில் விலாசினி பிறழ் சாட்சியாக மாறுவது ஒன்று தான்.// 
294(பி) என்ன சொல்கிறது அதற்கு என்ன தண்டனை.
இந்தப் பிரிவுக்கு அதிகபட்ச தண்டனையாக என்ன போட்டிருக்கிறது. மூன்று மாதம். மனதில் இருத்துங்கள். 
கீழே இருப்பது 2012ல் சின்மயி விவகாரத்தில் இருவர் கைதின் போது நான் எழுதியது. சிசுக்களும் கொசுக்களும் படித்துக் கொள்ள வசதியாத இம்சை அரசி கட்டுரையின் சுட்டி இதோ http://www.maamallan.com/2012/12/blog-post_8.html அப்பாவிகளின் வாழ்வைக் குலைக்க இம்சை அரசிகள் வந்துகொண்டே இருக்கிறார்கள். அதற்கு நம் மொட்டபாஸ் போன்ற சட்ட மேதைகள் வக்காலத்து இப்போது புதிதாக சேர்ந்திருக்கிறது.
//Section 506. Punishment for criminal intimidation 
http://www.vakilno1.com/bareacts/indianpenalcode/s506.htm
Whoever commits, the offence of criminal intimidation shall be punished with imprison­ment of either description for a term which may extend to two years, or with fine, or with both;
If threat be to cause death or grievous hurt, etc.—And if the threat be to cause death or grievous hurt, or to cause the destruction of any property by fire, or to cause an offence punishable with death or 1[imprisonment for life], or with imprisonment for a term which may extend to seven years, or to impute, unchastity to a woman, shall be punished with imprison­ment of either description for a term which may extend to seven years, or with fine, or with both.
CLASSIFICATION OF OFFENCE
Para I
Punishment—Imprisonment for 2 years, or fine, or both—Non-cognizable-Bailable—Triable by any Magistrate—Compoundable by the person intimidated.
Para II
Punishment—Imprisonment for 7 years, or fine, or both—Non-cognizable—Bailable—Triable by Magistrate of the first class—Non-compoundable.
506(1) என்ன சொல்கிறது அதற்கு என்ன தண்டனை. இதையும் மனதில் நிறுத்துங்கள். 
காக்னிஸண்ட் சட்ட மேதை சொல்கிறார். 2 வருட தண்டணை உள்ள பிரிவை, 
//இதில் 506 (1) புகார் தாரர் நினைத்தால் சமரசம் செய்து கொண்டு வழக்கை வாபஸ் பெறலாம்.// 
ஆனால் பார் அட் லா சொல்கிறது 
//ஆனால் 294 (பி) பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல் பிரிவு விலாசினியே நினைத்தாலும் சமரசம் செய்ய முடியாது.// 
எதை அதிகபட்ச தண்டனையே மூன்று மாதங்கள் உள்ள பிரிவை விலாசினியே நினைத்தாலும் வாபஸ் பெற முடியாது. ஆனால் 2 வருடம் உள்ள பிரிவை விலாசினி மனது வைத்தால் வாபஸ் வாங்கிவிட முடியும். 
கேட்கிற கிரிமினல் வக்கீல்களெல்லாம் சிரிக்கிறார்கள் ஏன் அவரு தலைகீழ சொல்றாரு என்று. மாமல்லன் என்கிற இந்த தண்ட முண்டத்தின் மீது மரியாதை வைத்திருக்கும் வக்கீல் நண்பர்களும் ஜட்ஜ் நண்பர்களும் எத்தனைப்பேர் என்று பல் குத்திகளுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அலுவலக எல்லையை மீறக்கூடாதென்கிற சுயக் கட்டுப்பாட்டில் வெறும் எழுத்தாளனக மட்டுமே இதில் நின்று கொண்டிருக்கிறேன். 
பார் அட் லா கூறியதும் பார்றா என்று சிறந்த மனிதாபிமானியாக ஓடோடி வருகிறார், ஊடக அழுத்தம் கொடுத்து போலீசைத் தம் வீட்டுக்கே வரவைத்து, அந்த ஓலா டிரைவர் மீது புகாரைக் கொடுத்த விலாசினி அம்மையார். அதுவரை வாய் மூடி இருந்தவர்,  பார் அட் லா சாரின் பதிவில் கமெண்ட் போடுகிறார். 
//ட்ரைவரின் பெயரைக்கூட எங்கும் சொல்லவில்லை.// 
புகாரே அந்த டிரைவரின் மீதுதானே அப்புறம் ஏன் இந்த நடிப்பு.
//என் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கிக்கொண்டேனே தவிர// 
என்ன பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கிக் கொண்டீர்கள். நல்லா டீவில கீவில வந்து நல்லாதானே சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறீர்கள். 
//ட்ரைவரின் மீது நடந்ததைக் கடந்து ஒரு அவதூறும் வைக்கவில்லை.//
ஆயுதம் வைத்திருந்தானா என்று கவனிக்கவில்லை என்கிற, மனதறிந்த பச்சைப் பொய் ஒன்று போதாதா. நடத்தை கடந்து வேறு அவதூறு செய்யவில்லை என்பதற்காக உங்களுக்கு பட்டம் கிட்டம் ஏதாவது கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா.
//போகட்டும். உங்கள் பதிவிலிருந்து ட்ரைவர் வெளிவர நான் மட்டுமே உதவ முடியும் என்று தெரிகிறது.// 
நான் மட்டுமே. இந்த சட்ட மேதை, 2 வருட தண்டனை ஈசிங்க. இந்த மூணு மாசப் பிரிவு இருக்கே அது நீங்க நினைச்சாலும் நெம்பக் கஷ்டமுங்க என்று சொல்வது போல இவர் சொல்வார். அவர் போனில் பேசிக்கொண்டதுபடி எழுதுவார். சொல்லிக் கொடுத்ததுபடி மகத்தான மனிதாபிமானியாக அவர் கமெண்ட் போடுவார் ’நீங்கள் சொல்வதைப் பார்த்தால் நான் மட்டுமே உதவ முடியும் என்பது போலத் தெரிகிறது என்று.
//இதுகுறித்து ‘தகுதியானவர்கள்’ சட்டப்படி என்னை அணுகினால் உரையாடத் தயாராக இருக்கிறேன் என்பதைச் சொல்லி// 
’தகுதியானவர்கள்’ உங்கள் தகுதிக்கு இவ்வுலகில் எவரேனும் இருக்கிறார்களா என்ன. அப்படி நினைப்பதே உங்கள் தகுதிக்கு இழுக்கல்லவா. 
ஓ இப்போதும் உரையாடத்தான் தயாராய் இருக்கிறீர்கள் இல்லையா. 
எப்படி வாய்த் தகறாரை ஏதோ கொலை முயற்சி போல் மெலோ டிராமா பண்ணிவிட்டு மகத்தான மனிதாபிமானியாக சிலை வைத்துக்கொள்ள முயல்கிறீர்களா. 
அவன் பாவம் எதோ தெரியாமல் சொல்லிவிட்டான் இவ்வளவு நாள் உள்ளே இருந்ததற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், அவன் மீது புகாரைக் கொடுத்து இதைத் தொடங்கி வைத்தவள் என்கிற முறையில் நானே இதற்கு மூல காரணம், தார்மீகமாய்ப் பொறுப்பேற்க வேண்டியவள் எனவே புகாரை எப்படி வாபஸ் வாங்கலாம் என யோசித்து போலீசைக்கூட இன்னமும் தொடர்புகொள்ளாத நீங்கள்தான் மாபெரும் மனிதாபிமானி. வாழ்க வளமுடன். 
இந்த நிதி இரண்டு லட்சத்தை எட்டித் தொடப் பார்த்துக்கொண்டிருக்கிறது என்பது இந்துவின் மனசட்சியையோ நீதி மன்றத்தையோ கொஞ்சம்கூடத் தொடாதா என்ன. 
தெரிந்த போலீஸ்காரர் ஒருவர் கூறினார். இங்க ஏற ஏற அங்க வீக்காகிகிட்டேதான் போயாகணும் என்று. 
இந்துவின் உயர் மட்டத்திலேயே, எல்லோரும் ஆட்டோக்காரருடன் போடக்கூடிய ஒரு சாதாரண வாய்ச் சண்டைக்குப் போய் இவ்வளவு பெரிய முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு தவறு நிகழ்ந்துவிட்டது என்று வருந்துவதாய்க் கேள்விப்பட்டேன். மனசாட்சி உள்ளவர்கள் வருந்துவார்கள். 
//ட்ரைவர் மீது அன்றிரவு நடவடிக்கை எடுக்கக்கோரியது உண்மை. ஆனால் மறுநாளே என் எண்ணத்தைக் கைவிட்டு//
ஏன் விலாசினி இவ்வளவு அப்பட்டமாகப் புளுகுகிறீர்கள். சனியன்று சம்பவம் நடக்கிறது. இரண்டு நாட்கள் கழித்துத் திங்கள் அன்றுதான் பதிவே போடுகிறீர்கள். செவ்வாய் அன்றுதான் இந்து பெண் நிருபரே வந்து உங்களை சந்திக்கிறார். புதன் அன்று அது இந்துவில் வெளியாகிறது. 
புகார் என்று கொடுத்தீர்கள். 
மறுநாளே அந்த எண்ணத்தைக் கைவிட்டிருந்தால், நான்கு நாட்கள் கழித்து போலீஸ் வந்தபோது, அந்த ஓலா டிரைவர் மீது ஏன் நீங்கள் புகார் கொடுக்க வேண்டும். ஓலா மீது கொடுத்திருக்க வேண்டியது தானே. இன்னும் கொடுக்காமல் இருந்துகொண்டு பதிவில் மட்டும் பணத்திமிர்பிடித்த ஓலா என்று கோக்கோ கோலா குடிப்பதைப் போல் சும்மானாச்சிக்கும் சொல்லிக்கொண்டு இருப்பது ஏன்.
 //ஓலாவின் மீது அவர்களின் மெத்தனத்திற்காக அத்தனை கோபமும் வந்தது.// 
அதனால் அந்தப் பையன் மீது புகார் கொடுத்துவிட்டீர்களா. 
நிஜமாகவே மனப்பூர்வமாக நினைத்தால் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். நேராக ஆலந்தூர் கோர்ட்டுக்குப் போய் நீதிபதியை நேரில் சந்தித்து, வழக்கைத் தொடர விருப்பமில்லை. திரும்பப் பெற அனுமதியுங்கள் என்று சொல்வதுதான் சட்டரீதியான, தார்மீக ரீதியான காரியம். ஆலந்தூர் மாஜிஸ்ட்ரேட் ஐயா அவர்களைத் தகுதியானவர் என்று சொல்வதில் உங்களுக்கு ஆட்சேபணை ஏதும் இருக்காது என்று எண்ணுகிறேன்.
கார்ப்பொரேட் கவுன்சில் நெம்ப திறமைசாலிதான். சார்வாள் கிட்ட நிறைய விஷயத்தை இந்த மூணு நாள்லையே கத்துண்டுடுத்தாம் நம்ம அம்பேத்காரிஸ பெரியாரிஸம். அதுக்குப் பதிவெழுத ஆட்டோக்காரரே போறும். கார்ப்பரேட் கவுன்சிலே கிடைச்சா இனி நாலா பக்கமும் FBல கொழுந்துவிட்டு எரியப்போறது அறிவுத் தீ. அவா அவா சித்த எட்ட இருந்தே பீடி பத்த வெச்சுக்குங்கோ எரியற நெருப்புல.

Leave a Reply