July 23, 2016 maamallan 0Comment
பிரபல ஃபேஸ்புக் அம்பேத்கார் பெரியார் மொக்கை வெறும் மொக்கை மட்டும் இல்லை இணையத்திலேயே என்ன நடக்கிறது நடந்தது என்பதைக் கூட சரிவரத் தெரிந்துகொள்ள துப்புகெட்ட மொக்கை மட்டுமல்ல எதையாவது எதனுடனாவது தப்புத்தப்பாய் முடிச்சு போட்டு தன்னை ஒரு சிந்தனைச் சிற்பியாக முன்னிருத்திக்கொள்ள ஃபேஸ்புக்கில் முண்டியடிக்கும் மெண்ட்டல் என நிரூபித்து இருக்கிறது. 

கடுமையாக எழுதுகிறேன் என்று சொல்பவர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள். தகுதியற்றவர்களுக்கும் தராதரம் தெரியாத மூடர்களுக்கும் பதில் சொல்லிக்கொண்டு இருப்பது எவ்வளவு பெரிய மரணாவஸ்தை என்பதைப் படைப்பு தளத்தில் தளத்தில் இருப்பவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.
எனக்கும் மனுஷ்ய புத்திரனுக்கும் இடையில் என்ன பிரச்சனை. ஏன் சண்டை வந்தது. 
இந்த மொக்கை சொல்கிறது, என் புத்தகத்தை சரியா டிஸ்ப்பிளே செய்யவில்லை என்பதற்காக சண்டை வந்தது என்கிறது. இப்படி ஒரு அடிப்படைத் தப்பை வைத்துக்கொண்டு, வழக்கம்போல சிந்தனைச் சிற்பி கொசு வத்திச் சுருளாய் நினைவலைகளை சுழல விட்டு அப்போது என்ன நடந்தது அதுக்கு முன்னால் தனக்கு பஸ்ஸில் என்ன நடந்தது என்று சிந்தனை வாலைச் சுழற்றிபடிப் போய்க் கொண்டே இருக்கிறது. அப்போது உனக்கு வலித்த வலியைப் போன்றதுதானே விலாசினிக்கு நேர்ந்த வலியும் என்று அனுமார் வால் சிம்மாசனம் அமைத்து, அதில் ஏறி உட்கார்ந்து கொள்கிறது அம்பேத்காரீய பெரியாரீய சமூகநீதி சிந்தனைச் சிற்பி.  
அடப் புண்ணாக்கே. 
எப்படி எனக்குத் துளிகூட சம்மந்தமே இல்லாத பிரமீள் – வசந்தகுமார் பிரச்சனையில், பிரமிளுக்கு உதவப் போனதைத்தவிர ஒரு பாவமும் அறியாத வசந்தகுமார், பிரமிளின் பேராசையால் அநியாயமாகக் காயப்படுத்தப்பட்டதைக் காணச் சகியாது  பிரமிளிடம் நீர் செய்தது சரியா என நியாயம் கேட்டு அவரது பகைக்கும் பொய்க்கும் ஆளானேன். அது போலீஸ் ஸ்டேஷன் பஞ்சாயத்தாக, 1988ல் அவரால் கொண்டு செல்லப்பட்டதோ அதைப்போல,

2012ல், ட்விட்டரில் இணையத்தில் இருக்கிறேன் என்பதைத் தவிர, எப்படி எனக்கு எந்த விதத்திலும் சம்மந்தமில்லாத சின்மயி விவகாரத்தில் இருவர் கைதுக்காகக் கட்டுரைகள் எழுதத்தொடங்கிக் கைக்காசைச் செலவழித்து புத்தகமே வெளியிடப்போனேனோ அதைப் போல,

எப்படி எனக்கு எந்த விதத்திலும் தொடர்பே இல்லாத விலாசினி – ஓலா டிரைவர் பிரச்சனையில் இப்போது ஓலா டிரைவருக்காக நின்றுகொண்டு இருக்கிறேனோ அதைப் போல,
மனுஷ்ய புத்திரனுக்கும் எனக்கும் இடையில் வந்த மோதலும் எனக்காக அல்ல, எனக்குக் கொஞ்சம்கூட சம்மந்தமே இல்லாத ஒரு பொது விஷயத்துக்காக உண்டானதுதான். 
எஸ்.ரா பட்டியலில் இருக்கும் 100 கதைகளையும் தேடித் திரிந்து சேகரித்து முதன்மையாய் சென்ஷியும் இன்னும் பலரும் தட்டச்சு செய்து ஏற்றி இணையத்தில் நிரந்தரமாக இருக்க உருவாக்கியதுதான் அழியாச்சுடர்கள் தளம்.
டிஸ்கவரி பேலஸ் வேடியப்பன் அதை புக்காகக் கொண்டு வருகிறார், தேடிச் சேகரித்து உழைத்த சென்ஷி முதலானோருக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கப்படாது அது எஸ்.ராவின் தொகுப்பாக விற்பனைக்கு வருகிறது எனத் தெரியவரவே, இணையத்தில் குறிப்பாக ஆசிஃப் மீரான் பொன்றவர்கள் சென்ஷிக்கு இழைக்கப்பட்ட அநீதியாக எண்ணிக் கொதிக்க, பிரச்சனை கிளம்பிப் பெரிதாகிறது. இல்லை உரிய அங்கீகாரம் சென்ஷிக்கும் மற்றவர்களுக்கும் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்று வேடியப்பன் கூறியும், தனது தேர்வில் 100 சிறந்த சிறுகதைகள் என்று எஸ்.ரா கொடுத்த பட்டியல் எப்படி எஸ்.ராவின் புத்தகமாக முடியும், அதுவும் 100 கதைகளும் சேகரித்து முடிக்கப்பட்டன என்றவுடன் அதைப் புத்தகமாக்கிக் காசு பார்க்க வேடியப்பனும் எஸ்.ராவும் முனைகின்றனர் என்கிற குமுறலுடன் பிரச்சனையாக வெடிக்கிறது. இதில் என் கதையும் இருந்தாலும் அதுவரை நான் அந்தப் பிரச்சனையில் இறங்கவே இல்லை. அதை முழுக்க எஸ்.ரா புத்தகமாகச் சொல்லவும் முடியாது அதே நேரம் அதை எஸ்.ராவின் புத்தகம் இல்லை என்றும் சொல்லிவிட முடியாது என்பதே என் நிலை. கோபத்தில், அழியாச்சுடர் தளத்தில் இருக்கிற 100 கதைகளையும் PDFஆக ஆக்கி இணையத்தில் போட்டுவிடுகிறார் ஆபிதீன்.
இவ்வளவு முதலீடு செய்து ஒரு பதிப்பகக்காரர் புத்தகம் வெளியிடும்போது, இப்படி அதை PDFஆக்கி வெளியிட்டு நட்டமடைய வைப்பது நியாயமா என மனுஷ்ய புத்திரன் கோபப்படுகிறார். இதற்காக மனுஷ் கோவப்பட்டதில்கூட எந்தத் தவறும் இல்லை. புத்தகக் கண்காட்சிக்குப் புத்தகம் வெளிவரும் தருணத்தில் அதை PDFஆக வெளியிட்ட அந்தக் கையை உடைக்க வேண்டும் என்றோ முறிக்க வேண்டும் என்றோ ஏழுதுகிறார் மனுஷ்ய புத்திரன்.
இதில் நான் எங்கே வந்தேன். எனக்குத் தனிப்பட முறையில் அதுவரையில் மனுஷ்ய புத்திரனோடு எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லையே.
ஆனால் ஆபிதீன் கையை முறிக்க வேண்டும் என்று எழுதினதைப் பார்த்ததும் சுர்ரென ஏறிற்று கோபம்.
இதோ இதுவரையிலான என் கதைகள் அனைத்தையும் PDFஆக வெளியிடுகிறேன், எங்கே என் கையை முறி பார்ப்போம் என விமலாதித்த மாமல்லன் சத்ரபதி PDF வெளியீடு என்கிற பெயரில் வெளியிட்டேன். அப்படி நான் செய்தபோது, அதுவரை ராயல்டி கொடுக்காததைக் கூட நான் பிரச்சனையாக்கவில்லை. என் செயலைப் பார்த்து மனுஷ் எழுத நான் எழுத என்று இருவரிடமும் வார்த்தைகள் தடித்து பிரச்சனை பெரிதானது. PDFஆக நீ வெளியிட்டதால் எனக்கு நட்டம். எனவே இன்னும் விற்காதிருக்கும் புத்தகங்களுக்கான துட்டைக் கீழ வைத்துவிட்டு, உன் புத்தகங்களை திரும்ப எடுத்துக்கொண்டு போ என்றார் மனுஷ்ய புத்திரன். இந்தா துட்டு என்று செக்கோடு  காலங்க்காலையில் அவர் வீட்டு முன்னால் போய் நின்றேன்.
இதைத்தான், இந்த நிகழ்வைத்தான், இந்த அம்பேத்கார் பெரியார் பெயரைச் சொல்லியே ஆளாகிவிடாலாம் என்று திரிகிற இந்த மொக்கை, இவன் புக்கை புத்தகக் கண்காட்சியில், மனுஷ்ய புத்திரன் சரியாக டிஸ்பிளே பண்ணாததால் வந்த சண்டை என்று சொல்லி, அப்ப இனி இவனால உருப்படியா எழுதவே முடியாதுனு உயிர்மை கோஷ்டி உன்னை சொன்னப்போ நான் உன்னை சப்போர்ட் பண்ணினேனே, அப்ப உனக்கு எப்படி வலிச்சிருக்குமோ அப்படிதானே விலாசினி ஆண்ட்டிக்கும் வலிச்சிருக்கும் என தனது சிந்தனை சரக்கைக் கடை பரப்புகிறது இந்த சிந்தனைச் சிறுபீ.
ஏடுகொண்டலவாடா வெங்கட்ரமணா ஃபேஸ்புக்கை இந்த மொக்கை கிட்டேந்து காப்பாத்துறா கோயிந்தா கோயிந்தா. 
பிகு: அப்போது என் புத்தகங்களை நானே விலைக்கு வாங்க செலவழித்த பணத்தை – எழுத்தாளன் நட்டப்படக் கூடாது எனக்கூறி அந்தப் புத்தகங்களை அப்படியே தான் வாங்கிக்கொள்வதாகப் பணம் கொடுத்தவர் சிங்கப்பூர் வாசகர் மணிவேலன். இத்தனைக்கும் அவர் மனுஷ்ய புத்திரனுக்கும் நன்கு தெரிந்தவர். இப்போதும் இந்த ஓலா ஓட்டுனருக்குத் தன்னாலான உதவியைச் செய்யத் தயாராய் இருக்கிறார்.

ஆதாயம் எதிர்பார்த்து எதையும் செய்யா மேன்மக்கள் எப்போதும் மேன்மக்களே சிறுபீக்கள் எப்போதும் சிறுபீக்களே. 

Leave a Reply