July 23, 2016 maamallan 0Comment

ஒன்பதாவது பத்தாவது டிரிப் அடிக்கும் OLA ஓட்டுனரைப் போல் அசதியாக உள்ளேன். ஆனால் இந்த மார்க்ஸ் என்கிற மொக்கை, குஸ்திக்கு அழைத்துவிட்டார். அவர் போட்டிருக்கிற உறையோ இரவல். அதுவும் இன்னொரு இளம் மொக்கையுடையது. வேறு வழியில்லை. கோதாவில் இறங்கித்தான் ஆக வேண்டும். 
பாதி தூக்கத்தில் எழுந்து இங்கே என்ன நடக்கிறது நான் எங்க இருக்கேன் என்பது பொல ஒரு பதிவு.
ஊரில் என்ன நடந்துகொண்டு இருக்கிறது என்பதொன்றுமே அறியாத மனித உரிமை மொக்கையே உம்முடைய பிரச்சனை, களத்தில் இருப்பவர்களில் ஒருவர், அன்னாரின் சித்தாந்தம் ஆதரவு உழைப்பாளி வர்க்கத்தைச் சேர்ந்த, சிறையிலிருக்கும் OLA ஓட்டுனர். இன்னொருவர் இவரது வாஞ்சைக்குரிய இசுலாமியர். மற்றோருவன், அவ்வப்போது அண்ணாரின் மொக்கைத்தனத்தைக் கலாய்க்கும் எழுத்தாளன். இன்னொருவர், பாதிக்கப்பட்டதாய் பயங்கர நாடகமாடி எழுத்து – பதிப்பகத் தொழில் ரீதியாக இவருடன் கொடுக்கல் வாங்கலில் இருக்கும் விலாசினி ரமணி. மார்க்ஸ் மொக்கைக்கு, விலாசினியும் எழுத்தாளராய்த் தெரிகிறார். இதைப் படித்து விலாசினி ரமணியே கொஞ்சம் மெர்சலாகித்தான் போயிருப்பார். நாமே நம்மை பப்ளிஷர்/எடிட்டர் அட் பிரக்ஞை என்றுதானே ஃபேஸ்புக்கில் சொல்லிக் கொள்கிறோம், நாம் எப்போது எழுத்தாளர் ஆனோம் என்று. சைப் டைட்டில் எழுதுவதெல்லாம் எழுத்தில்லையா அதனால்தான் பரப்ரம்ம மொக்கை அந்தோணிசாமி அவரையும் எழுத்தாளர் ஆக்கிவிட்டார். ஆமாம் பின்னே அவரையும் எழுத்தாளராக ஆக்கினால்தானே எழுத்தாள ஐக்கியத்தைத் திரட்டி கமிசனர் அலுவலகத்துக்கு ஊர்வலம் செல்ல முடியும்.
இதனால்தான் நீர் எனக்கெதிராய் கிளர்ந்தெழுந்துள்ளீர்.
இப்படி என்னைத் தவிர இந்தப் பிரச்சனையில் இருக்கும் மற்றவர் யாவரும் உமக்கு வேண்டியவர்களே. ஆனால் அவர்களுக்குள் நிகழ்வதும் பாதிக்கப்பட்டதும் உமக்குத் தெரிந்திருந்தாலும் நீர் தலையிடாமல் இருந்ததற்குக் காரணம் எல்லாம் உமது நட்புச் சக்திகளுக்கிடையிலான சகோதரச் சண்டை என்பதுதானே. பாதிப்பும் இழப்பும் சகோதரச் சண்டையினால் உண்டான பாதிப்பு என்பதால்தானே. 
//பதிப்பாளர் விலாசினி அவர்களுக்கும் OLA ஓட்டுனருக்கும் இடையிலான பிரச்சினை குறித்த செய்திகள் பத்திரிகைகளில் வந்த பின்னரும் கூட நான் கவனிக்கவில்லை. இதற்கிடையில் எனது நூல் பிரதிகள் சில எனக்கு வேண்டும் என அவரிடம் தொலைபேசியில் கேட்டபோதும் கூட நான் இது குறித்துப் பேசவில்லை.//
நீர்தான் கவனிக்கவே இல்லையே அப்புறம் எப்படி அவரிடம் தொலைபேசியில் பேசியிருக்க முடியும். அப்புறம் ஏன் அவர்கூடத் தொலைபேசியில் பேசவில்லை என்கிற விளக்கம்.
கவனிக்கவில்லை என்பது உண்மை என்றால் கொட்டை எழுத்தில், Ola driver threatens woman passenger with physical harm என்கிற செய்தியைக் கவனிக்காத நீரெல்லாம் என்ன பெரிய பெண்ணியப் போராளி ஓய். என்னவோ பெரிதாக சவுண்டு விடுகிறீர், எழுத்தாளர்கள் எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து கமிஷ்னர் ஆபீஸ் போகலாம் என்று.
இப்போது என்ன திடீர் கிளம்பல், //இது தொடர்பாக விலாசினி அவர்கள் கொடுத்துள்ள புகாரின் மேல் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையானால் இது தொடர்பாக ஒரு எழுத்தாளர் குழு காவல்துறை ஆணையரைச் சந்திக்க வேண்டும்.// என்று.
என் கட்டுரைக்கு எதிராய் ஊரைக் கூட்டுகிறீரே அதிலேயே என்ன நடந்தது என்பதனைத்தும் தெளிவாகவும் விரிவாகவும் உள்ளனவே. 
//இது தொடர்பாக விலாசினி அவர்கள் கொடுத்துள்ள புகாரின் மேல் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.// 
”உரிய நடவடிக்கை” என்பதன் பேரில்தானே ஓய் அந்த ஓலா டிரைவர் பதினோரு நாளாக பெய்ல் இல்லாமல் ரிமாண்டில் இருக்கிறான். 
வாய்த் தகறாருக்காக, ஒருவன் பதினோரு நாட்கள் ஜெயிலில் இருப்பது உமக்கு மனித உரிமை மீறலாகத் தெரியவில்லை. ஏன் அவன் நக்ஸலைட் இல்லை வெறும் ஓலா காரோட்டிதானே என்பதாலா அல்லது காஷ்மீரி தீவிரவாதியில்லை அப்பனில்லாத லோக்கல் தமிழன் என்பதாலா. அவன் ஒரு நக்ஸலைட்டாகவோ காஷ்மீரத் தீவிரவாதியாக இருந்து, இவனைப் போல வெறும் வாய் வார்த்தையில் கழுத்தை அறுத்துடுவேன் என்று சொல்லாமல், நேரடி வன்முறையில் ஈடுபட்டுக் கழுத்தை அறுத்திருந்து ரிமாண்டில் இருந்திருந்தால் மனித உரிமை பாதிக்கப்பட்டதாய் புழல் சிறை எதிரில் இநேரம் மறியல் செய்துகொண்டு இருப்பீர் இல்லையா நீர்.
//இன்று விமலாதித்த மாமல்லன் எனும் ஒரு எழுத்தாளன் விலாசினிஅவர்கள் குறித்து செய்துள்ள பதிவுகளை என் கவனத்திற்கு என் நண்பர் ஒருவர் சற்று முன் கொண்டு வந்தபோது திடுக்கிட்டேன்.// 
ஃபேஸ்புக் போஸ்டு போடுபவன் சப் டைட்டில் எழுதுபவரெல்லாம் எழுத்தாளனாகத் தெரியும் உமக்கொரு சிறிய விண்ணப்பம், என்னை எழுத்தாளன் என்று விளிக்காதீர் வெறும் பொறுக்கி என்றே குறிப்பிடும். என் பிறவி அதன் பயனை எட்டிவிடும்.
அந்தக் கட்டுரை வெளியிடப்பட்ட 19ஆம் தேதி இரவு 11:14 முதல் இன்றைய இந்த நிமிடம் வரை 41,000 பேரால் படிக்கப்பட்டுள்ளது. அநாதரவாக சிறையிலிருக்கும் அந்த இளைஞன் தனக்கிழைக்கப்பட்ட அநீதியின் காரணமாக மனம் வெறுத்து வன்முறைக்குப் போய்விடலாகாதே என்கிற மனமார்ந்த அக்கறையில் உண்மையை வெளிக்கொண்டு வந்திருக்கும் அந்தக் கட்டுரை, படித்தவர் பலரது மனதையும் தொட்டிருக்கிறது. ஆகவேதான் 19ஆம்தேதியிலிருந்து 22ஆம் தேதிக்குள் ரூபாய் 1,50,000/-த்தைத் திரட்டியிருக்கிறது. இதெல்லாம் உமக்குத் தெரியாததைப் போல, என்னவொரு செவாலியே நடிப்பு நடிக்கிறீர். உமக்கும் விலாசினிக்கும் இடையிலான எழுத்தாள – பதிப்பாள உறவு, அதைப் பற்றி ஒரு வார்த்தைகூடக் கூறவிடாமல் உம்மைத் தடுக்கிறது இல்லையா. எழுத்தாளன் வன்புணர்வு செய்துவிட்டான் என்று அலறி போஸ்ட்டு போட்ட முன்னாள் கிரிமினல் லாயரே, தம் அலறலை முடித்துக்கொள்கையில் இறுதியாக, என் போன்ற ஒரு கிரிமினல் செய்திருக்கும் காரியத்தைப் பற்றி சொல்லியிருப்பதைப் பாரும். அதுதான், பழைய வாய்க்கால் தகறாரைத் தாண்டிய வன்மம் மீறிய மனசாட்சியின் குரல். 
//முக்கியமான பின் குறிப்பு 3: அந்த டிரைவர் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. தெரியாமல் செய்யும் தவறு தான். மாமல்லன் சொந்த வன்மத்தை முன்னிட்டு செயதிருந்தாலும், அவர் செய்த ஒரே நல்ல காரியம் குரான் வசனம்லாம் போட்டு சென்டிமென்டல் டிராமா நடத்தி பணம் வசூல் செய்தது. இந்த பணத்தை வைத்து அவர் மறுவாழ்வு வாழ வாழ்த்துக்கள்.// 
ஐயையோ தப்பு செய்து விட்டொமே நம் ஃபேஸ்புக் நண்பர்களையெல்லாம் போட்டு இந்தத் தாக்கு தாக்குகிறானே என்று அவர் ஜகா வாங்கியது வேறு விசயம்.
உங்கள் கோஷ்டியின் அவரவர் உறவு லாப நஷ்ட கணக்கின் கதை இப்படி என்றால் எனக்கோ நேற்றுவரை அந்த இளைஞனின் கார் முதலாளியான காஜா ஷெரீஃப் யாரென்றே தெரியாது. போலீஸ்காரர்கள் அவரது நற்குணம் பற்றிச் சொல்லக் கேட்டதுதான். அதன் பிறகு அவருடன் கைபேசியில் பேசியதுதான். ஆனால் அவர் வார்த்தைகள் என் மனதைத் தொட்டன. அதை அப்படியே எழுதினேன். நான் எழுதியது படித்தோர் அனைவர் மனதையும் தொட்டது. அது எழுத்திலிருக்கும் சத்தியத்தின் வலிமை. உம்மைப் போன்ற வரட்டுச் சிந்த்தாந்த மொக்கைகளுக்கு ஒருபோதும் அது சாத்தியமில்லை. அதை உணரக்கூட உம்மைப் பொன்ற மொக்கைகளுக்கு உணர்வுக் கொம்புகளில்லை அதனால்தான் அது உமக்கு கண்டணத்துக்கு உரியதாகத் தெரிகிறது. 
உம்மால் முடிந்த அதிகபட்சமே, அம்பேத்கார் பெரியார் ஜெபக்கூட்ட மணியடிப் பதிவை, யாரோ எடுத்துக் கொடுத்த ஸ்கிரீன் ஷாட்டை, ”யாரோ வரைந்துவிட்ட மீசை”யைப் போல் பகிர்வது மட்டுமே.
//வாழ்க்கையோடு போராடிக் கொண்டுள்ள ஒரு பெண் எழுத்தாளரை இத்தனை வக்கிரமாகவும் ஈனத்தனமான ஆணாதிக்க வெறியுடனும் ஒரு மனிதப் பிறவி எழுத இயலுமா என்ன?// 
வாய் வார்த்தையாக, தன் உழைப்புக்கானக் கூலி மறுக்கப்பட்டவன், பொறுக்கி என்கிற வசவையும் பெற நேர்ந்தபோது, வயிறெரிந்து வெறும் மிரட்டலாய்ச் சொன்ன இரண்டு வார்த்தைகளுக்காக அவன் வாழ்க்கையையே தன் ஊடகத் தொடர்புகள் மூலம் வேட்டையாடிய வன்மம் என் நெஞ்சைத் தொட்டதால் வந்து விழுந்தவை அவை.
விலாசினியின் வாழ்க்கை எனக்கு மட்டுமே பிரத்தியேகமாகத் தெரிந்ததா என்ன. ஃபேஸ்புக்கில் அக்கவுண்ட் வைத்திருக்கும் அத்தனைப் பேருக்கும் தெரிந்த விசயம்தானே. நான் குறிப்பிட்டிருக்கும் அனைத்தும் ஃபேஸ்புக்கில் அவரே எழுதிக்கொண்டு பிரபலமாக உதவியவைதாமே. 5000 பேர் தம் நட்பு வட்டத்திலும் 7000 பேர் தம்மைத் தொடர்வோராகவும் உள்ளனர் என்று விலாசினியே கூறிக்கொண்டதைப் போல அனைவரின் பார்வையிலும் படும் படியாக திறந்தே இருக்கிறது அவரது சுவர். இதுவரை அவர் இரண்டு மூன்று முறை அக்கவுண்டை மூடுவதும் திறப்பதுமாய் இருந்தது முதல் சில வருடங்களில் அவர் எழுதிய ஃபேஸ்புக் பதிவுகள் அவரது அவ்வப்போதைய மன நிலையை மூடைப் பிரதிபலிப்பதாய் இருந்தவைதாமே. அவரது முன்னாள் கணவரின் படங்கள் உட்பட, இவையெல்லாம் முந்தைய கணக்குகளில் இருந்து பலராலும் லைக்கும் கமெண்ட்டும் போடப்பட்டவைத்தாமே.
//வக்கிரமாகவும் ஈனத்தனமான ஆணாதிக்க வெறியுடனும்// 
அப்படி என்ன எழுதிவிட்டேன் இதில். வக்கிரம் எங்கிருந்து வந்தது என்பதைக் கூறும். அவனை உள்ளே தள்ளுவதற்கான காரியங்கள் அனைத்தையும் தமது ஊடகத் தொடர்புகளை வைத்துக்கொண்டு செய்து முடித்துவிட்டு, போலீசை வீடு தேடி வரவைத்தும் விட்டு, இனிப் போலீசே நினைத்தாலும் அவனைக் கைது செய்யாது இருக்க முடியாது என்கிற அளவுக்குத் தாம் கொடுத்த அழுத்தத்தை உறுதி செய்துகொண்டபின், புகாரையும் அளித்துவிட்டு, கோர்ட்டு கேசு என்றெல்லாம் தன்னால் அலைய முடியாது என்கிறார். 
இதில் ஈனத்தனம் எது. நான் செய்ததா இல்லை அவர் செய்ததா என்று கேட்கிறேன். யாருமற்ற அந்த ஒலா ஓட்டுனனின் தரப்பில் நின்று இப்போது விலாசினி பின்வாங்கக் காரணம் என்ன என்று பார்க்கிறேன். பெருமாள்முருகனின் ஆராய்ச்சி முடிபாக, இது விலாசினி ரமணியின் ஈனத்தனம் மட்டுமே இதற்கானக் காரணம் என்று ஒரு எழுத்தாளனாய் சொல்கிறேன். அதில் என்ன தவறு. 
இது தவறு என்றால் பெருமாள் முருகன் புனைவு என்ற பெயரில் செய்ததும் தவறு அல்லவா. அது தவறு எனில், உயர்நீதி மன்றம், உனக்குப் பிடிக்கவில்லை என்றால் படிக்காதே, அரசியல் நிர்ணயச் சட்டம் அனுமதிக்கும் வரையறைக்குள்  எதை வேண்டுமானாலும் எழுதுவது எழுத்தாளனின் உரிமை என்று எப்படிச் சொன்னது. கருத்துச் சுதந்திரத்தின் வெற்றி என்று அதை வரவேற்றவர் இல்லையா நீர்.
இல்லையில்லை இது அதற்குப் பொருந்தாது. இது தனிநபர் பிரச்சனை. நீ எழுதியிருப்பதும் புனைவல்ல கட்டுரை என்கிறீரா. 
மாதொருபாகனும் புனைவல்ல ஆராய்ச்சி முடிபை அடிப்படையாகக் கொண்டது என்றுதானே பெருமாள்முருகன் ஆரம்பத்தில் டாடா காட்டினார். 
இது தனி நபர் தாக்குதல் ஆணாதிக்க வெறி என்கிறீரா.
விலாசினி பற்றிய அலசலையே அவர் எழுதியவற்றை வைத்துதானே செய்திருக்கிறேன். அனைத்துத் தகவல்களும் அவரது ஃபேஸ்புக் பதிவுகளில் இருப்பவைதாமே. குடும்பத்தையே ஃபேஸ்புக்கில் நடத்திக் கொண்டு, இருப்பதை எழுதாதே என்றால் எப்படி. அதுவும் எப்போது எழுதுகிறேன். சும்மா ஜாலிக்காகப் பொழுது போக்கிற்காக அவர் வாழ்க்கையை, பின்னணியை அலசி எழுதினேனா. அவரது பெண்ணாதிக்க வன்மத்தால் ஒரு இளைஞனின் வாழ்க்கை சிதைந்து சின்னாபின்னப்பட்டிருக்கையில் கூட அவரே கொடுத்தத் தகவல்களை அடிப்படையாக வைத்து அவர் எப்படிப்பட்ட மனோபாவம் உள்ளவர் என்பதை விமர்சிக்காமல் உம்மைப் போல் ’கவனிக்காமல்’ போனால் நானும் உம்மைப் போன்ற இன்னொரு சந்தர்ப்பவாத மொக்கையாக அல்லவா ஆகிவிடுவேன். 
அவ்வளவு ஏன், அம்பேத்கார் பெரியார் என்று பூச்சாண்டி காட்டி சாமியாடும் சமூகநீதிப் பூசாரியின் ஸ்கிரீன்ஷாட்டுகளை போட்டு இப்போது நீர் என்னை விமர்சித்தது எதில் சேரும். அந்த மொக்கை விளக்கமளிப்பதாய் சொன்னதை வைத்து, நீர் எனக்கு செய்திருப்பது எந்த ஆதிக்கத்தின் கீழ் வரும்.
ஆம் விலாசினியை விளாசினேன். ஏன். அவர் நோக்கங்கள் அப்படியொன்றும் பெண்ணியம் சார்ந்தவையல்ல அது வெறும் தன்-இயம் சார்ந்தவை மட்டுமே என்பதை ஆதாரபூர்வமாய் நிறுவுவதற்காக. 
குஸ்திக்கென்று வளையத்துக்குள் இறங்கியபின் ஆணென்ன பெண்ணெண்ன இதில் நீயென்ன நானென்ன அந்தோணிசாமி மார்க்ஸே.
//விலாசினிக்கும் ஓட்டுனருக்கும் நடந்த பிரச்சினையின் உண்மைகள் என்ன என்கிற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும்.// 
ஏன் ஒருபுறம் இருக்கட்டும். ஏனென்றால் விலாசினி ரமணியால், ஜெயிலில் கிடந்து பெயில் கிடைக்காமல் செத்துக்கொண்டிருப்பவன் எவனோதானே. உம் பதிப்பாளர் இல்லையே. நல்ல மனித உரிமைப் போராளியைய்யா நீர். 
//அதற்காக ஒரு பெண் எழுத்தாளரை அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இத்தனை பண்பு கெட்டத் தனமாக ஒரு மனிதப் பிறவி எழுத முடியுமா என்ன?//
காசு வாங்கிக்கொண்டா எழுதினேன். கைக்காசைப் போட்டுவிட்டுதான் எழுதுகிறேன்.
பண்பைப் பற்றி நீர் பேசுகிறீரா. கிச்சுகிச்சு மூட்டாதீர். பார்க்கிறீரா உமது நாஜி பண்பின் பல்லிளிப்பை.
அதெப்படி ஐயா,
ஹிட்லர் ஒட்டுமொத்த யூத குலத்தையே வெறுத்ததைப் போல;
RSSகாரன் ஒட்டுமொத்த முஸ்லீம்களையே வெறுப்பதைப் போல;
காஷ்மீரத் தீவிரவாதி, பாரம்பரிய காஷ்மீரக் குடிகளான ஒட்டுமொத்த பண்டிட்களையே வெறுப்பதைப் போல;
பால்தாக்ரே 70-80களில் ஒட்டுமொத்தத் தென்னிந்தியர்களையே “சாலா மதராசி” என்று வெறுத்ததைப் போல
ஒட்டுமொத்த பிராமண சாதியையே உம்மால் ’மிக வெறுக்க’ முடிகிறது. 
//இந்த உலகில் என்னோடு வாழ்ந்து கொண்டிருக்கும் அத்தனை பார்ப்பனர்களும் ஏதோ ஒரு வகையில் பார்ப்பனீயத்தைக் காப்பாற்ற முனைந்து கொண்டிருக்கும் நிலையில்// 
இதைவிட சூர மொக்கையான வரியை, அறிவும் பண்பும் உள்ள எவராலும் எழுதிவிட முடியுமா. 
இப்பேர்ப்பட்ட பாசிஸ்ட்டான நீர் பேசுகிறீர் என் பம்பைப் பற்றி. முதலில் வாயைக் நன்றாகக் கொப்பளித்துக் கழுவும். 
என்னை ஒரு மனிதப் பிறவியா என்று கேட்கிறீரே, அந்த இளைஞனுக்காக 1.5 லட்சத்துக்கும் மேல் கொடை வந்து குவிந்திருக்கிறதே அது யாரை நம்பி. பிறவி மொக்கையான உம்மை நம்பியா இல்லை உண்மையான மனிதப் பிறவியான என்னை நம்பியா. 
அந்த அம்பேத்கார் பெரியார் அரைவேக்காட்டின் ஸ்கிரீன்ஷாட்டை எடுத்துப் போட்டு என் ஜாதி வெறிக்கு ஆதாரமாய்க் காட்டுகிறீரா.
அந்த அம்பேத்கார் பெரியார் வழிபாட்டுச் சுடர், புத்தகக் கண்காட்சியில் நான் என்ன சொன்னேன் என்பதையே சுத்தமாய்ப் புரிந்துகொள்ளாமல் அல்ப்பையாய் இப்படி எழுதி வைத்தது.
உமது மேற்குறிப்பிட்ட சூர மொக்கை வரியைத் திரும்ப நினைவுபடுத்திக்கொள்ளும். 
உமது கூற்றுப்படி,
//இந்த உலகில் என்னோடு வாழ்ந்து கொண்டிருக்கும் அத்தனை பார்ப்பனர்களும் ஏதோ ஒரு வகையில் பார்ப்பனீயத்தைக் காப்பாற்ற முனைந்து கொண்டிருக்கும் நிலையில்// 
நீர் சொல்வதைப் போல தடாலடியாக எல்லோரையும் சொல்ல முடியாவிட்டாலும் என் அனுபவத்தில் இருந்து பெற்ற, உயர்ஜாதி வெறி கொண்டோர் பற்றி, “அதை ஏன் கதையில் மறைக்கணும்” அதை எழுதி அம்பலப்படுத்து என்கிற அர்த்தத்தில் கூறினால் அதை இப்படித் திரிக்கிறது தலித்துகளை ஏணியாக்கி ஃபேஸ்புக்கின் உச்சாணியை அடைந்துவிடத் துடிக்கும் இந்த அல்ப்பை. 
அன்றே இதனிடம் இன்னொன்றையும் கூறினேன் அதற்கு அதுவும் மண்டையை மண்டையை ஆட்டிற்று. ஆனால் இன்றுவரை எழுதவில்லை. என்றாவது எழுதுமா என்பதற்கும் எந்த அறிகுறியும் இல்லை. தீவிர பாப்பார எதிர்ப்பு பஜனையில் ஈடுபட்டிருப்பதால் சொந்தக் குண்டியைக் கழுவிக்கொள்ள நேரமில்லை அதற்கு. 
நீங்க அண்ணாச்சிதானே. 
ஆமா 
நாடார்களின் ஜாதி அபிமானத்தைப் பத்தி இதுவரை எதாவது எழுதி இருக்கீங்களா. நாடார்களின் ஜாதி வெறியைப் பத்தி, உங்க சொந்தக்காரங்க தலித்துகளை எப்படிப் பாக்கிறாங்கங்கிறதைப் பத்தியெல்லாம் எழுதி இருக்கீங்களா. 
ஆரம்பத்துல ஒன்னுரெண்டு எழுதினேன். வீட்ல்லையே கடுமையான எதிர்ப்பு எழுந்துது. 
தலித்துகள் பற்றி உங்கக் குடும்பப் பெண்கள் எப்படி நினைக்கிறாங்க தலித்துகளை எப்படி நடத்துவாங்க 
கரெக்டு சார். (அக்கா தங்கைங்க வீட்டுப் பெண்கள்) கிட்டயெல்லாம் தலித்துகள் பத்திப் பேசினா அவங்களையெல்லாம் அப்படிதான் மட்டமாதான் நடத்தனும்ங்கற மாதிரிதான் அவங்க பார்வை. அதை மாத்தறத்துக்குப் பேச்சை எடுத்தாலே அவங்களுக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்காது. அப்பறம் தலித்துகளைப் பத்திக் குடும்பத்துலப் பேசறதையே விட்டுட்டேன்.  
வீட்டில் குடும்பத்தில் இப்படி ஒரு புண்ணாக்கும் ஆட்ட முடியாதவன்கள்தாம், ஃபேஸ்புக்கில் தலித் ஸ்டேட்டஸ் போட்டு செல்ஃபி எடுத்துக் கொள்பவர்கள். இந்தப் போலிக்குதான் அருமை. சூப்பர் பதிவு என்று கமெண்ட் போட்டு தலித் எழுச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன தலித் கம் பெண்ணிய மொக்கைகள்.
வறுமைக்கு ஆட்பட்டதே எனினும் சரியான கட்டுப்பெட்டி சனாதன குடும்பப் பின்னணியில் வளர்ந்து வந்த என் மனைவிக்கு முதல் அதிர்ச்சி, திருமணம் முடிந்து சோளிங்கரில் இருந்து, அப்போது நண்பராக இருந்த சங்கிலி மஸ்தான் பாவாவின் காரில் திரும்பிக் கொண்டிருக்கையில், கல்யாணத்துக்கு மூன்று நாட்கள் முன்பு போட்ட பூணூலைக் கழற்றி, ‘வேலை முடிஞ்சிது வெச்சுக்கோ’ என்று கூட இருந்த என் அம்மாவின் முன்பாகவே நான் கொடுத்தது. திருமணத்துக்கு முன் கொஞ்சநாட்கள் பழகியதிலேயே, ஜடாமுடியுடன் சங்கிலி அணிந்து கொண்டு சதா சிகரெட் பிடித்துகொண்டிருந்த  கோவளம் பாவாவிடம் அழைத்துச் சென்றதே அவள் வாழ்க்கையில் கண்டிராத கலாச்சார அதிர்ச்சி. ஆரம்பத்தில், நான் பிராமணனைத்தான் மணமுடித்து இருக்கிறேனா என அவ்வப்போது என்னிடம் கேட்டுக்கொண்டிருந்தவள் தற்செயலாய்த் தன் தங்கையிடம் ஒருமுறை சொன்னதைக் கேட்டு ஆச்சரியப்பட்டுப் போனேன். 
டிவியில் கொட்டு சூட்டணிந்த தடிமனான உதடுகளைக் கொண்ட ஒரு ஆப்ரிக்கப் பெண்மணியைப் பார்த்து ஐயே எப்படி இருக்கா பாரேன் என்றாள், மைசூரிலிருந்து எங்கள் விட்டுக்கு வந்திருந்த என் மச்சினி.
தற்செயலாக சமையல்கட்டிலிருந்து வந்த என் மனைவி, ஏன் அவங்க மனுஷங்க இல்லையா என்றாள். 
வீட்டுப் பெண்மணிகளின் மூளைகளைப் பொதுக் கழிப்பிடம்போல வைத்துக் கொண்டு, ஃபேஸ்புக்கில் வந்து எல்லோரையும் ஜாதிவெறியன் என்று ஹிஸ்டீரிக்காகக் கத்திக்கொண்டு இருப்பதே அம்பேத்காரிஸம் பெரியாரிஸம் என் எண்ணிக்கொண்டிருக்கும் இந்த பிரகஸ்பதி சொல்கிறது மாமல்லன் ஜாதி வெறியன் என்று. 
அந்தோணிசாமி இதோ பாரும் என் ஜாதிவெறி எப்படிக் கொழுந்து விட்டு எறிகிறது என் எழுத்தில் என்று. 
//சாதனையாளர் பிரபலமானவர் என்றாலும் சமூக சிந்தனையளவில் பிராமண குடும்பத்தில் பிறந்து பொத்தி வளர்க்கப்பட்ட முதிற்சியற்ற மற்றுமொரு சிறுமி மட்டுமே சின்மயி. இதற்கு சாட்சியம் தேடி அலையவேண்டிய அவசியம் எனக்கில்லை. தடுக்கி விழுந்தால் என் சொந்தங்களில் அத்துனைபேரும் இப்படித்தான்.
இட்டுட்றி சூதர்த்தி பந்து தொகம்பாளு
இப்ப நீ சொன்னது அவுளுக்குப் புரியாதுன்னு நினைக்கிறியா?
நம்ம கன்னடம் நல்லா புரியுமே அவ ஏழெட்டு வருஷமா இங்கதான இருக்கா? 
இல்லை நீ அவளை சூதர்த்தின்னு சொன்னது அவ காதுல விழுந்தா என்னாகும் தெரியுமா?
ஏன் என்னாகும். அவ சூதர்த்திதானே!
அவள் வேலைக்காரி. கெலசதவளுந்தல்லா ஹேளபேக்கு. சூத்திரன் சூதரத்திங்கறது டிராகேட்டரி வார்த்தைகள். 
ஹாங்கியா?
இந்தப் பெண்மணி எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று கேள்விப்பட்டால் அதிர்ந்து விடுவீர்கள். ஈரோடு. 
84 தேர்தலில் தீப்பொறி ஆறுமுகம் பேசுவார்: தலைவர் சொல்றாரு ஊமையன்னு பேசாதேன்னு. ஏன்யா தெரியாமத்தான் கேக்குறேன், ஊமையனை ஊமையன்னு சொல்லாம வேற எப்பிடிய்யா சொல்றது? 
தான் செய்வது தவறு என்றோ அது அடுத்தவரைப் புண்படுத்தும் என்கிற அடிப்படை உணர்வோகூட இல்லாமல் இன்சென்சிடிவாக ஏகப்பட்ட ஜென்மங்கள் இருக்கின்றன. எல்லோரும் எல்லா நேரமும் புண்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்க முடியுமா என்ன? திருப்பி அடி கிடைத்தால், இரண்டாம் உலகப்போர் யூதர்களாக ஐயையோ பொதுவெளியில் கொல்றாங்களே என்று அசோகமித்திரன்போல அவுட்லுக்கில் அறற்றிக்கொண்டே கிடக்க வேண்டியதுதான்.// 
இது உங்கள் விலாசினி ரமணி அம்மையாரின் முத்து உதிர்ப்பான “பொறுக்கி”க்குப் பொருந்தாதா ஓய்.
இப்போது பொருத்திப்பார் அரை லூஸே, நான் 2012ல் என்ன எழுதி இருக்கிறேன் என்பதை, நான் இரண்டாம் தேதி ஜூன் மாதம் 2016 புத்தகக் கன்காட்சியில் உன்னிடம் என்ன சொன்னேன் என்பதுடன். 
இதைத்தான் சொன்னேன் உயர் சாதிக்காரனின் சாதி வெறி இயல்புதான், அதை ஏன் எழுத்தில் மறைக்கணும் என்று. இந்த இயல்புதான் என்பதை நியாயம்தான் என்பதாக நான் சொன்னதாகப் புரிந்துகொண்டு கூவத் தொடங்கி எனக்கு உம்மிடம் சமூகநீதி கிளாஸ் எடுத்துக்கொள்ள ரெக்கமெண்டு பண்ந்த்தொடங்கிவிட்டது இந்த மெண்ட்டல். 
நான் எழுதி பதிவு செய்திருப்பதைப் போல உன் குடும்பத்தில் நிலவும் ஜாதி வெறியை எழுதாமல் குண்டியடியில் மறைத்துக் கொண்டு என்ன மயிருக்கு யாரைப் பார்த்துக் கத்திக்கொண்டிருக்கிறாய் அம்பேத்கார் பெரியார் என்று. 
கார்ல் மார்க்ஸைக் கோட் பண்ணி கொஞ்சம் நஞ்சம் கெளரவமாக வாழ்துகொண்டிருந்த நீர், இந்தக் கபோதிப் பயலின் ஸ்கிரீன்ஷட்டையெல்லாம் போட்டு கழனிப்பானையில் கையை விட்டதுபோல் ஆகிப் போனீரே அ மார்க்ஸே.
போங்கடா புண்ணாக்குங்களா. இந்துவா முஸ்லீமா கிறிஸ்துவனா என்கிற எந்த வேறுபாடும் பார்க்காமல் எவர் புனித நூலின் வாக்கியங்களும் என் அறிவுகொவ்வாமல் இருந்தால் நக்கலடிப்பேன். எவனிடம் போலித்தனத்தைப் பார்க்க நேர்ந்தாலும் அதை அங்கேயே டாராகக் கிழிப்பேன். இதற்கு விலாசினி மட்டும் என்ன விதிவிலக்கா.
//மனித நேயமுள்ளவர்களும், பெண்ணியச் சிந்தனையாளர்களும் இதைப் பொது வெளியில் கண்டிக்க வேண்டும்.//
எதை பதினோரு நாளாகியும் பெயில் கிடைக்காமல் ஜெயிலில் கிடக்கும் அவனுக்கு நிகழ்ந்த அநியாயத்தைதானே. ரொம்பச் சரி.
//இது தொடர்பான சட்ட நடவடிக்கைகளில் பூரணமாக நாம் ஒத்துழைக்க வேண்டும்.//
ஒய் எல்லா சட்ட நடவடிக்கைகளும் நடந்து முடிந்துவிட்டன ஓய். மிச்சமிருப்பவை அவனை பெயிலில் வெளியில் கொண்டுவர வேண்டியதும் சார்ஜ்ஷீட் போட்டு கேஸ் கொர்ட்டுக்கு வருகையில் மேதகு பதிப்பாளர் விலாசினி அம்மையாரை கூண்டிலேற்றி குறுக்கு விசாரணை செய்ய வேண்டியதும்தான் பாக்கி. அப்போது என்ன நடக்கும், அவர் எப்படி ஓர் ஆண் வெறுப்பாளர், எனவேதான், செய்த சவாரிக்கான காசசைக் கொடு என்ற எனது கட்சிக்காரரின் வினைக்கு, மெத்தப் படித்த பண்பாளரான விலாசினி ரமணி அவர்கள் ஏன் பொறுக்கி என எதிர்வினையாற்ற வேண்டும் அதற்கான காரணங்கள் அவர் பதிவிலேயே இருக்கின்றன என்று நான் எழுதியது எப்படி வக்கிரமாகும் அந்தோண்சாமி.
//இது தொடர்பாக விலாசினி அவர்கள் கொடுத்துள்ள புகாரின் மேல் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.// 
இதுவரை என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்று எந்தப் புண்ணாக்காவது தெரியுமா ஒய் உமக்கு. பாதி தூக்கத்தில் எழுந்து வந்ததைப் போல இது என்ன பேக்கு மாதிரி கேள்வி. நீர்தான் செய்தியைக் கவனிக்கவே இல்லையே. 
கழுத்தை அறுத்துடுவேன் என்றவன் கழுத்தை, லிட்டரலாய் பதினோரு நாளாய் உங்கள் கோஷ்டி, உங்கள் சார்பாய் வரவைத்த இந்து செய்திதான் அறுத்துக்கொண்டு இருக்கிறது என்பதுதானே ஓய் உண்மை.
பணக்கொழுப்பெடுத்த கார்ப்பொரேட் ஓலா ஓலா ஓலலா என்று ஃபேஸ்புக்கில் கத்திக்கொண்டிருக்கிறார் உங்கள் விலாசினி ரமணி. ஆனால் ஓலா எப்போதோ காரை தங்கள் இணைப்பிலிருந்து துண்டித்துவிட்டது. இதனால் நேரடியாக பாதிக்கப்பட்டு இருப்பவர், எந்தப் பாவமும் அறியாத காரின் முதலாளியான காஜா ஷெரிஃப்தான். அவருக்குப் பின்னால் இஸ்லாமியர்கள் திரளத் தொடங்கி இருக்கிறனர். ஆமீனா எழுதியிருக்கும் இதைக் கொஞ்சம் வாசித்துப் பாரும். ஒலா விவகாரம் (?!) அடையாளங்காட்டிய ஹீரோ   இப்போது பட்டது போதாதென்று விலாசினி, இன்னும் என்னை என்ன செய்யப்போகிறார் என்று கேட்கிறார் அந்த நல்லவர். 
ஐயையோ இதில் இஸ்லாமியர் வேறு இருக்கிறாரா என்று முதல் ஆளாய் நீர் இதோடு ஜகா வாங்கி, பின்னங்கால் பிடரியில்பட ஓடப் போகிறீர் இல்லையா சிறுபான்மை மனித உரிமையின் ஒட்டுமொத்த குத்தகையாளரே. ஆனால் காஜா அப்படியில்லை, அவர் எங்கும் ஓடவில்லை, இவ்வளவு நாட்களாக தம் வண்டியை தானேகூட எல்லா நாளும் ஓட்டமுடியாததால் உண்டான இழப்புகளை மனிதபிமானத்தின் பேரில்தாங்கிக் கொண்டு, அவன் பின்னால் உறுதியாய் நின்றுகொண்டு இருக்கிறார். 
//தேவையானால் இது தொடர்பாக ஒரு எழுத்தாளர் குழு காவல்துறை ஆணையரைச் சந்திக்க வேண்டும்.// 
ஒஸியில் ஆளுக்கொரு டீ கிடைக்கும். போய் வாருங்கள், எழுத்தாளர் படையைத் திரட்டிக் கொண்டு, மறக்காமல் இரண்டு மொக்கைப் பயல்களையும் கூட்டிச் செல்லுங்கள் வளரும் ஃபேஸ்புக் எழுத்தாளர்கள் என்று.

Leave a Reply