February 20, 2018 maamallan 0Comment
2012ல் பதிப்பகங்கள் தொடர்ந்த, The Chancellor, Masters & Scholars of the University of Oxford & Ors. v. Rameshwari Photocopy Services & Ors. [DU Photocopying Case] என்கிற காப்புரிமை வழக்கில், 2016ல் வெளியான தீர்ப்பில் தில்லி ஹைகோர்ட் என்ன சொல்லியிருக்கிறது என்று பாருங்கள்.
80. Copyright, specially in literary works, is thus not an inevitable, divine, or natural right that confers on authors the absolute ownership of their creations. It is designed rather to stimulate activity and progress in the arts for the intellectual enrichment of the public. Copyright is intended to increase and not to impede the harvest of knowledge. It is intended to motivate the creative activity of authors and inventors in order to benefit the public.
முழு தீர்ப்பு: https://indiankanoon.org/doc/135895592/
படைப்பென்பது பரவலாக சென்றடைந்து மக்களுக்குப் பயன்படவேண்டிய ஒன்று என்பதே காப்புரிமை சட்டத்தின் நோக்கம் என்று, உலகளாவிய பதிப்பகங்களின் தலையில் குட்டி, கூறிய வாசகங்கள் இவை.
இந்த வழக்கு நடந்துகொண்டிருக்கையில், 2013ல் வழக்கு தொடுத்த இந்த உலகளாவிய பதிப்பகங்களுக்கு எதிராகவும் மாணவர்களுக்கு ஆதரவாகவும் உலகளாவிய எழுத்தாளர்களில் 309பேர் களமிறங்கினார்கள். அவர்களில் 33 பேரின் புத்தகங்கள் இந்தப் பதிப்பகங்களால் வெளியிடப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் சொல்லிக்கொள்ளலாம், தங்களை எழுத்தாளர்கள் என்று.
More than 309 eminent writers and academicians from all over the world, in March 2013, also wrote a letter to the publishers asking them to withdraw the suit. Interestingly, 33 out of these 309 signatories had a direct association with the Plaintiff-Publishers and were authors of works, the copyright in which was allegedly infringed by Delhi University and its photocopier. The signatories included eminent scholars such as Thomas Blom Hansen, Partha Chatterjee, Ayesha Jalal, Christophe Jaffrelot, Veena Das, Pratap Bhanu Mehta, Marc Galanter and Professors Richard Falk, Arjun Appadurai, Jonathan Parry, Ramachandra Guha, Farid Esack, TN Madan, Ian Copland, Tanika Sarkar and Uma Chakravarty.
ஆனால், கொத்தடிமை ஒப்பந்தத்தை எழுத்தாளர்களிடமும் எழுத்தாளர்களின் வாரிசுகளிடமும் எழுதி வாங்கிக்கொண்டு எல்லாம் என் கதைகள் என் கதைகள் என்று வாய்க்குவாய் சொல்லிக்கொள்ளும் காலச்சுவடு கண்ணனைப் பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.
போகட்டும், கண்ணன் முதலாளி வர்க்கம் அவர் அப்படித்தான் இருப்பார் என்று பார்த்தால், சட்டமும் தெரியாமல் தர்மமும் புரியாமல், நாகரீக வாசக கனவான் கும்பலொன்று காலச்சுவடுக்கும் கண்ணனுக்கும் காவடி தூக்கிக்கொண்டிருக்கிறது.
யோவ் அக்ரிமெண்ட்டுனு ஒன்னைப் போட்டு ஒழுங்கா கணக்குக் காட்டி ராயல்டினு ஒன்னத் தரவங்களே காலச்சுவடுவும் கிழக்கும்தான். அவங்களைப்போய் இந்த அடி அடிக்கிறியே நியாயமா என்கிற எழுத்தாள வாசக நியாயஸ்தர்களே, இவர்கள் ராயல்டி விஷயத்தில் நியாயமாக நடந்துகொள்வதால் உங்களை சுரண்ட அனுமதிப்பது உங்கள் விருப்பம். விருப்பப்படாத எழுத்தாளர்களையும் நான் அச்சுப் புத்தகம் போடவேண்டுமென்றால் நீ எல்லா உரிமைகளையும் எனக்கு மட்டுமே எழுதிக்கொடுத்துவிட்டு என்னிடம் நிரந்தர அடிமையாக இருக்கவேண்டும் என்று எழுத்தாளர்களைக் காலச்சுவடு கட்டாயப்படுத்துவது ரேப் இல்லையா.  
நான் உங்களது அச்சுப் புத்தகத்தை வெளியிடவேண்டுமென்றால், எழுத்தாளர்களே சூரியனுக்குக் கீழிருக்கும் உங்களது சகல உரிமைகளையும் என்னிடமே எழுதிக்கொடுத்துவிடவேண்டும் என்கிற காலச்சுவடின் ஒப்பந்தம் எப்படி இருக்கிறது என்பதை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.
கூலி எடிட்டர்களுக்கு எலும்புத்துண்டுகளை வீசி, இதுபோன்ற கொத்தடிமை ஒப்பந்ததைப் போட்டு எழுத்தாளக் கூலிகளை உருவாக்கி இலக்கியத்தை வளர்க்கமுடியுமா. 
அமேஸான் கார்ப்பரேட் கம்பெனி அவனைப்போய் ஆதரிக்கலாமா. அவனுக்கு வாசிப்பு பற்றிய எந்த அக்கறையும் கிடையாது. அத்தனைப் பாதிப்பாளர்களும் ஒன்று சேர்ந்து அமேஸானை ஐரோப்பாவுக்கு உள்ளேயே நுழையவிடவில்லை தெரியுமா என்று என்னிடம் தீவிரமாய் வாதிட்ட காலச்சுவடு கண்ணன், அமேஸானைப் புறக்கணிக்காமல் அவனிடம்போய் அச்சுப் புத்தகத்தை விற்பதோடும் நிற்காமல் கூடுதலாய், eBookக்கும் விற்றுக்கொண்டு, அதையும் நீயே நேரடியாய் விற்கக்கூடாது நான் மட்டுமே விற்பேன், அந்த உரிமையையும் நீ எனக்கே தந்தாகவேண்டும் என்று ஒப்பந்தத்தைப் போட்டுக்கொண்டு தானே விற்று, வாசிப்புக் கலாச்சாரத்தையே அழித்துவிடும் அமேஸானை ஏன்  விருட்சமாக்கிக்கொண்டிருக்கிறார்.
உலகின் அத்தனை அடக்குமுறை ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதான பிம்பத்துடன் பத்திரிகையை நடத்தும் பதிப்பக நிறுவனம், உலக நடைமுறை இதுதான் என உலகம் தெரியாத எழுத்தாளர்களின் தலையில் மிளகாய் அரைத்து இவ்வளவு மோசமாகவா அவர்களது உரிமையைப் பறிப்பது. 
நியாயமான உரிமைப்போரை உறுதியுடன் தொடர்ந்தால், அது நிச்சயம் வெல்லும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த வழக்கிலேயே இருக்கிறது.

Withdrawal of the Suit by Plaintiff-Publishers
On March 9, 2017, the plaintiff-publishers surprisingly withdrew the suit. The public statementreleased by them on withdrawal read as follows:
“We have taken a considered decision not to pursue the Delhi University Photocopy shop case further in the courts and will today be filing an application with the Delhi High Court to withdraw as plaintiffs. In addition, we will not be submitting an appeal to the Supreme Court of India, following the Delhi High Court Division Bench appeal decision of 09 December, 2016. 
We continue to stand by our principles stated throughout this case. We support and seek to enable equitable access to knowledge for students and we understand and endorse the important role that course packs play in the education of students. We support our authors in helping them produce materials of the highest standard and we maintain that copyright law plays an important part in balancing the interests of those creating, curating, and disseminating learning materials with those requiring access to them. 
We look forward to working even more closely with academic institutions, teachers and students to understand and address their needs, while also ensuring that all those who contribute to and improve India’s education system—including authors and publishers—continue to do so for the long term.”  
இதை காலச்சுவடுக்கும் கிழக்குக்கும் ‘உணர்த்தவேண்டியது’, சுரணையுள்ள ஒவ்வொரு எழுத்தாளருக்கும் வாசகருக்குமான அடிப்படைக் கடமையாகும்.

Leave a Reply