January 14, 2018 maamallan 0Comment
நீங்க வெளியிட்ட புத்தகத்தை நீங்களே அனுப்பி வைக்கிறதைக்கூட ஓரளவுக்கு நியாயம்னு ஒத்துக்கலாம். ஆனா வேற பதிப்பகங்கள் வெளியிட்ட உங்க புத்தகங்களையும் நீங்களே வாங்கி நீங்களே பேக்பண்ணி நீங்களே போய் போஸ்ட்டுல அனுப்பறதெல்லாம் ஒரு எழுத்தாளரா நல்லாவா இருக்கு. 

எழுத்தாளனா ஒன்றரை வருசம் கழிச்சு பதிப்பாளர்கள் குடுக்கப்போற ராயல்டியைவிட, விற்பனையாளரா இதே பதிப்பாளர்கள் எனக்கு புக்ஃபேர் முடிஞ்ச உடனே குடுக்கற கமிஷன் ஜாஸ்தி தெரியுமா. 
இவங்க வெச்சிருக்கிற விலையைவிடக் குறைஞ்ச விலைல தபால் செலவையும் நானே ஏத்துக்கிட்டு அனுப்பியும் எனக்கு ஓரளவு லாபம் நிக்கிதுங்கறது உனக்குத் தெரியுமா. இத்தனைக்கும்  ரெகுலரா புக் அனுப்பறதால அரசு குடுக்கற செம குறைவான தபால் கட்டணச் சலுகை இவங்களுக்கு உண்டு. கூரியர்லையும் அப்படித்தான். ஆனா எப்பையாச்சும் அனுப்பறதால எனக்கு எங்கையும் எந்தச் சலுகையும் கிடையாது. இருந்தும் எனக்கு லாபம் நிக்கிது. 
இதுபோக நானே விக்கிற இந்த புத்தகங்களுக்கும் எனக்கு ராயல்டி உண்டு. ஆக எழுத்தாளனா இருக்கிறதைவிட, அட்லீஸ்ட் புத்தகக் கண்காட்சி சீசன்லயாச்சும் புத்தக விற்பனைக் கமிஷன் ஏஜெண்ட்டாவும் இருந்தாதான் இங்க எழுதிப் பொழைக்க முடியும். இல்லாட்டி எழுதாத நேரத்துல கூட்டிக் குடுக்கப் போகனும். அதுக்கு என் புக்கை நானே பேக் பண்ணி நானே போஸ்ட் பண்றது கெளரவக்குறைவான காரியமானு நீயே சொல்லு. 
இதெல்லாம் ஒப்பந்தம் போட்டு ராயல்டி குடுக்கிற புண்ணியவான் தர்மவான்களைப் பத்தினப் பேச்சு. அக்ரிமெண்ட்டே போடாம, எவ்ளோ காப்பி அடிச்சாங்கற உண்மையையும் சொல்லாம டபாய்ஞ்சுக்கிட்டு இருக்கிற பன்னாடைப் பதிப்பாளப் பயலுவதான் நாட்டுல எக்கச்சக்கம். எம்.எல் வசந்தகுமாரி மாதிரி பாடகர்களுக்கு HMVகாரன் அந்தக் காலத்துல செஞ்ச அயோக்கியத்தனம் மாதிரி. 
ஆயிரம் சொன்னாலும் ஒரு எழுத்தாளன் போய் இதையெல்லாம் செய்யிறது நல்லா இல்லீங்க. 
அதெல்லாம் சரிதான். எனக்குக்கூட மத்த எழுத்தாளர்களைப்போல எழுதித் தள்ளிட்டு, அப்பப்ப ’ரெம்ப கஷ்டமா இருக்கு சாமி எதாச்சும் பாத்து செய்ங்க’னு போன் போட்டு தலையை சொறிஞ்சிக்கிட்டு அக்கடானு இருந்துட்டு, மீட்டிங்னா மட்டும் கெளரவமா ஜிப்பா போட்டுக்கிட்டு மேடையேறி கம்பீரமா கையை நீட்டி, இந்தக் கேடுகெட்ட அரசையும் அமேரிக்க ஏகாதிபத்தியத்தையும் நான் கேட்கிறேன்…னு மைக்ல நீட்டி முழக்கிப் பேசதான் ஆசை. சொல்லப்போனா இன்னும் பேராசை. ரெண்டு மூனு வருஷத்துக்கு ஒருக்கா ஒரு புக் எழுதிட்டு அப்பப்ப பேப்பர்ல டிவில இண்ட்டர்வியூ குடுத்துக்கிட்டு, உலகம் பூராலேந்தும் வர ராயல்டில ஜாலியா ஊர் சுத்தற பேராசை. ஆனா பிரச்சனை என்னன்னா நம்ம குண்டி இருக்கிற சைசுக்குக் கூட தமிழ் இலக்கியக் குளம் இல்லேங்கிறததுதான். இருந்தாலும் இருக்கிற திக்கினியூண்டு ஏரியாவுலையே, பதிப்பாளன் ஏப்படி கார்ல போறான். எவ்வளவு புக்கு எழுதினாலும் எழுத்தாளன் ஏன் ஊம்பிக்கிட்டிருக்கான்.
இதெல்லாம் கெடக்கட்டும் புதுமைப்பித்தன்ல ஆரம்பிச்சு இந்த எழுத்தாளப் பொலம்பல் என்னிக்கும் இருந்துக்கிட்டேதான் இருக்கு. சரி நான் ஆர்டர் பிடிச்ச புக்கையெல்லாம், என்னை கெளரவக் குறைச்சலுக்கு உள்ளாக்காம பேக் பண்ணித் தர நீ வரியா. ஒரு புக்குக்கு எவ்ளோ வேணும்னு சொல்லு தாராளமா தரேன். 
என்னது பிஸியா. அந்த ஆப் பாயில் ஆண்ட்டி போஸ்ட் போட்டிருக்கா. அதுக்கு லைக் ஆர்ட்டின் போட்டுட்டு வரதானே பொய்க்கிட்டு இருக்கே. விழிப்புநிலை ஸ்வப்பன ஸ்கலிதம். கிழிஞ்சிது போ தமிழ் இலக்கியமும் உன் வாழ்க்கையும் என்னைப்போலவே. 

Leave a Reply