March 25, 2018 maamallan 0Comment

துபாய் கம்பெனியொன்றில் தரையில் விரிசல் விட்டிருந்த டைல்களைப் பணியாளர்கள் பிடுங்கி எடுத்துக்கொண்டிருந்தார்கள். அந்த டைல்களைத் திரும்பப் பயன்படுத்தாமல் குப்பையில்தான் எறியச் சொல்லியிருந்தது கம்பெனி என்றாலும் அவர்கள் தமிழர்கள் என்பதால், வீசப்போவதாகவே இருந்தாலும் நன்றாக இருந்த டைல்களை முடிந்தவரையிலும் சேதாரமாகிவிடாமல் பெயர்த்து எடுத்து ஒரு ஓரமாக அடுக்கிக் கொண்டிருந்தார்கள். 

அந்தப் பக்கமாகச் சென்ற, தமிழரான அந்தக் கம்பெனியின் வைஸ் பிரெசிடெண்ட்டு, என்னப்பா என்ன பண்றீங்க என்று கேட்டார். 

டைல்ஸ் மாத்தச் சொல்லியிருக்காங்க சார் என்றனர். 

நல்லாயிருக்கிறதுல நாலை நம்ம வீட்டுக்கு அனுப்பிவைங்கையா, அவசரத்துக்கு யூஸாகும் என்றார் நகைச்சுவையாக. 

அங்கிருந்த யார் மூலமாகவோ அவர் சொன்னது, எந்த நல் ஆத்மாவின் காதிலோ விழுந்திருக்கிறது. அந்த நல் ஆத்மா -பேஸ்புக்கில் பலர் இல்லையா, சார் அங்க உங்களைப் பத்தி அவன் இப்படி சொல்லியிருக்கான் என்றும் அவனிடம் நாம் அப்படி சொல்லியிருப்பதாகவும் இரண்டு பக்கமும் கொளுத்திவிட்டு குளிர்காய்கிற நல் ஆத்மாக்கள் – அதுபோல ஒரு புண்ணியாத்மா, டாப் மேனேஜ்மெண்ட்டின் காதில் வி.பி. அடித்த ஜோக்கை, சீரியஸாகக் கசியவிட்டிருக்கிறது. அன்றுவரை பல்லாண்டுகளாக அந்தக் கம்பெனிக்கு வி.பியாக இருந்த அவர், மறுநாள் காலை, முதல் வேலையாக கட்டாய ராஜினாமா கடுதாசியைக் கொடுக்க நேர்ந்தது. 

இந்தியா அல்ல துபாய். அமேரிக்காவும் ஐரோப்பாவும் துபாயைவவிட 'மோசம்'.  இந்தக் கம்பேனி, பப்ளிக் டாக்குமெண்ட்டான பேலன்ஸ்ஷீட்டிலேயே ஓப்பனாகக் கோளாறுகள் செய்பவர்கள் என்று ஸ்கிரீன்ஷாட் எடுத்து மெய்லில் உலகம் பூரா அனுப்ப, பேஸ்புக்கில் இருக்கும் நல் ஆத்மாக்களுக்குக் கண் சிமிட்டும் நேரமாகுமா. 

இல்லாத மேட்டரையே ஈரைப் பேனாக்கி பேனைப் பெருமாளாக்கி என் மீது புகாராய் பிரதமருக்கே அனுப்பிவைக்கவில்லையா பேஸ்புக் பேலியோ ஆண்ட்டி. அதைப் போல அமேரிக்காவுக்கும் துருக்கிக்கும் ஃப்ரேங்க் ஃபர்ட்டுக்கும் நலம்விரும்பிகள் அனுப்பிவைக்க மாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதமுண்டா.

அதி உயர் அரசு பதவிகளில் இருக்கும், இருந்து ஓய்வுபெற்ற அதிகாரிகளைப் பங்குதாரர்களாக வளைத்துப் போட்டிருப்பதெல்லாம் இந்தியாவுக்கு உள்ளே ஓரளவுக்கு செல்லுபடியாகும்.  அதுகூட எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருக்கும்வரைதான். எதாவது பிரச்சனை என்று வந்தது என்றால், ஏரியாவிலேயே இருந்ததில்லை என்பதுபோல் முதலில் பறக்கிறவர்கள் அதி உயர் அதிகாரிகள்தாம். அவர்கள் நிலை அப்படி. அனாவசியமாகத் தங்களது பெயர் ஊடகங்களிலோ சோஷியல் மீடியாவிலோ அடிபடுவது அவர்கள் வகிக்கும் பதவிக்குத் தேவையே இல்லாதத் தலைவலி. என் 36 வருட அரசு உத்தியோகத்தில் எத்தனையோபேரைப் பார்த்தாயிற்று. உள்நாட்டிலேயே உதவிக்கு உற்றமும் சுற்றமும் வராது என்றால். வெளிநாட்டைப்பற்றிச் சொல்லவே தேவையில்லை.

அயல்நாடுகளில் பேர் ரிப்பேரானால், மேற்குறிப்பிட்ட துபாய் கதைதான். இலக்கிய மொழிபெயர்ப்பு வியாபார காலட்சேபம் நடத்த முடியாது. தேங்காய் மூடிக் கச்சேரிகூட சாத்தியமில்லை எச்சரிக்கை. எனவே, குறைந்தபட்சம் பேலன்ஸ் ஷீட்டிலாவது கணக்கு வழக்கை, வெளியாரின் வெள்ளந்திப் பார்வைக்கேனும் கணக்காக வைத்துக்கொள்ளவும். எதோ பல்லாண்டுகளுக்குமுன் தின்ற உப்பின் பேரில் சொல்கிறேன். கேட்பதும் கர்வத்துடன் காதை அடைத்துக்கொள்வதும் அவரவர் விருப்பம்.

காசு காசு என்று பறப்பதிலேயே குறியாய் இருப்பவன், பொதுவாகக் காசே அவிழ்க்காத கஞ்சப் பிசினாறிப்பயலாகவே இருப்பான் என்பது, இரண்டு கோடி ரூபாய் டர்னோவர் காட்டும் நிறுவனம், சகாயவிலையில், 25,000/- ஃபீஸில் ஆடிட்டரைப் பிடித்திருப்பதிலிருந்தே தெரியவில்லையா. தாத்தா காலத்திலிருந்து ஜவுளிக் கணக்கு எழுதிக்கொண்டிருந்த ஃபேமிலி ஆடிட்டர் போலும். இலக்கியத்திலேயே பேமிலி எழுத்தாளர்களை வைத்திருக்கும் கம்பேனி, கணக்கெழுத மட்டும் வெளியிலிருந்து, ஆளுக்கேற்ற கூலி, வேலைக்கேற்ற சம்பளம் என்று கேட்கும் தொழில்முறை ஆடிட்டரையா வைத்துக்கொள்ளும். 

"தகரப் பட்டைகளை வெகு லாகவமாகக் கிழித்து, பண்டிலைப் புரட்டி உடைக்கிறான் மதுக்குஞ்சு. கைதேர்ந்தவன். எந்த இடத்தில் அடி விழ வேண்டும் என்பது எத்தனை துல்லியமாக அவனுக்குத் தெரிகிறது! சற்றுமுன், காலத்திற்கும் அசைந்து கொடுக்காது என்ற எண்ணத்தை ஏற்படுத்திய பண்டில், இதோ பரிதாபமாகச் சிதறிக் கிடக்கிறது."

பள்ளம் – சுந்தர ராமசாமி 

இந்த வருட பேலன்ஸ் ஷீட்டை பழைய பண்டில்போல அல்லாது, ஃபீஸ் கூடப்போனாலும் பரவாயில்லை என்று, மதுக்குஞ்சுவால் அவ்வளவு சுலபத்தில் அடித்து உடைத்துவிட முடியாதபடிக்குக் கெட்டியான பண்டிலாகத் தயாரிக்கக்கூடிய ஆடிட்டராகப் பார்த்து வைத்துக்கொள்ளவும். 

ஊதுகிற சங்கை ஊதிவைத்துவிட்டேன் அப்புறம் அவரவர் இஷ்டம். 

அப்படி என்னதான் சார் அந்த பேலன்ஸ் ஷீட்ல கோளாறாய் இருக்கு. 

ஒண்ணா ரெண்டா. ஏகப்பட்ட கோளாறு. அதுல சஸ்பென்ஸ் கோளாறு, திரில்லர் கோளாறு, காமெடி கோளாறுனு வெரைட்டியா இருக்கு. இப்போதைக்கு இந்தக் காமெடியை மட்டும் பாருங்க. 

ஆபீஸ் பணியாளர் வாங்கின சம்பள அட்வான்ஸ (-400) ரூவானு காட்டற ஒரே கம்பேனி இதுவாதான் இருக்கும். ஏம்ப்பா அப்பீஸ் ஊழியர், தன் சம்பளத்துலேந்து கம்பேனிக்கு 400 ரூவா தர லெவல்லதான் 2010-11ல இருந்துதா உன் கம்பேனி. அதையும் பேலன்ஸ் ஷீட்ல வேற காட்டிக்கிட்டு, சோ. தர்மனுக்கு 65,000/- குடுத்தேன் 65,000/- குடுத்தேன்னு எம்பி எம்பி குதிக்கிறே. இதெல்லாம்  லெட்ஜரையே தாண்டக்கூடாது புரிஞ்சிதா. 

தம்பி இதைப் பார்த்தா, US based publisher Grove/Atlantic மட்டுமில்லே, அந்த டீல முடிச்சிக்குடுத்த Priya Doraswamy at Lotus Lane Literaryயேகூட, வெளிய சொல்லிக்காட்டாலும் இதெல்லாம் தெரியவந்தா வெள்ளக்காரன் நம்பளப்பத்தி என்ன நினைப்பானோனு எண்ணிப்பார்க்க மாட்டாங்களா.

ஆள செட்பண்ணி, அடிச்சாலும் அடிப்பானே தவிர, எந்த அடிமுட்டாள் வியாபாரியும், எங்க வேணா பூந்து எதைவேணும்னா நோண்டற, இழக்க எதுவுமில்லாத, அதனால எதுக்கும் அஞ்சாத பெருச்சாளிகிட்டபோய் வாய் உதார் விடமாட்டான் -அதுவும் ஃபேஸ்புக்குல. 

அடுத்தது பெரிய ஆப்பு. கிரைம் த்ரில்லர். அது இந்தப் படத்துலையே இருக்கு. ஆனா அதை அப்பால பாப்போம்.

 at 8:07 PM 

Labels: ,