January 1, 2012 maamallan 0Comment
பெண்ணாக இருந்தால் சாரு தானாக சாட் செய்து மாட்டிக்கொள்வார். ஆணாக இருந்தால் அடிப்பொடிகளை சாட் செய்யவிட்டு ரெக்கார்ட் ஆகாமல் தப்பிக்கப் பார்ப்பார். அடியிற்கண்ட பொடிசு போன்றதுகள் சாட்டில் வந்து அப்பாவி சாருவை மாட்ட வைத்துவிடும்.
டேய் சரியான ஆம்பளையா இருந்தா எங்க அண்ணங்கிட்ட ஒத்தைக்கொத்த மோதிப்பாருடா வாடா என்று வட்டச்செயலாளர் வண்டு முருகனின் அஜிஸ்டெண்டுகள், சவால் விடுவதைப்போல் எழுதியிருக்கிறார் திருதிருவாளர் பிச்சைஸ். 
சாருவுக்கும் எனக்கும் இடையில் சமீப அலைபேசி குறுஞ்செய்திப் பரிமாற்றங்களில், நடந்தது என்ன என்று இந்த சாரு பிச்சைக்குத் தெரியுமா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. வாசகர் வட்ட பொலிட் பீரோவில் இந்தப் பிச்சைஸும் ஒரு உறுப்பினரா? அராத்து போல இவரும் இன்னொரு பிரெண்டு கைடு பிலாசபரா? இல்லை பீடி சிகரெட் ஊறுகாய் மட்டும் வாங்கி வருவதற்கான எடுபிடியா? என்பது பற்றிய தெளிவான தகவல்கள் இல்லை. 
இது போக, தான் பாட்டுக்கும் ‘தேமே’ என தன் வேலையான பொறுக்கிமொழியில் புடுங்கிக்கொண்டு இருப்பவனிடம், சும்மா இல்லாமல் சாட்டில் வந்து வந்து, இந்த யானைக்கால் கொசு ஏன் ங்கொய் என வட்டமிடமிடவேண்டும்?
அதற்கடுத்து, எக்ஸைல் நாவலை படிக்கவே முடியவில்லை என்கிற எனது கட்டுரையை வெளியிட்டபிறகு, அதைப் படித்துவிட்டு, வெள்ளிக்கிழமை டிசம்பர் 30 மாலை 7.05 PMக்கு வந்து மன்றாடவேண்டியது ஏன்?
என் கட்டுரையை என்ன எத்தியோப்பிய மொழியிலா எழுதி இருக்கிறேன். அதைப் படித்தபோது நான் ஒரு பொறுக்கிமொழி எழுத்தாளன் என்று தெரியவில்லையா? இதே பிச்சைஸ் எப்படி வந்து கருணை மனுபோடுகிறது என்று பாருங்கள். 
  • பாதிக்கு மேல் நாவலை படிக்கவில்லை என எழுதி இருக்கிறீர்கள். ஆக இந்த விமர்சனம் முழுமையானது அன்று என சொல்லலாமா?
  • <படிக்கவில்லை > மன்னிக்கவும் இதற்குமேல் இதைப் படிக்க முடியவில்லை. படிக்கும் தருணம் என ஒன்று வாய்க்கக்கூடும் என்றும் தோன்றவில்லை.
   இது விமர்சனம் இல்லை அபிப்ராயம்.
  • <எக்ஸைலைப் படிக்க ஆரம்பித்த பிறகுதான், இதெல்லாம் நாவல் என்று தைரியமாக வெளியிடப்படும் சூழலில், அடடா நாம் ஏன் நாவல் எழுத முயற்சிக்கவில்லை என்று தோன்றியது. அதற்கு என் மனமார்ந்த நன்றி.> இது விமர்சனம்
  • முழுதும் படித்தால் அபிப்ராயம் மாறக்கூடும் அல்லவா?
  • அது உண்மைதான். ஆனால் படிக்க இழுக்கவே இல்லைல். காரணம் நாவலின் தொனி. இந்த வகைப்பட்ட ஆட்டோஃபிக்‌ஷன் போங்காட்டம் என்றே எனக்குப் படுகிறது. நீங்கள் ஹென்றிமில்லரின் ட்ராபிக் ஆஃப் கேன்ஸர் படித்திருக்கிறீர்களா? படித்துப் பாருங்கள். செக்ஸ்ஸோடு எண்ணங்களெல்லாம் ‘கண்ணீவெடி’ தரத்தில் இல்லாமல் எப்படி இருக்கும் என்று படித்தால் தெரியும்.
  • இது காமம் மட்டும் சம்பந்தப்பட்ட நாவல் அல்லவே.. காமத்திலிருந்து கடவுளுக்கு என்ற தொனி முழுதும் படித்தால் பிடிபடும்… இன்னொரு முறை படித்து விட்டு, விரிவாக எழுதுங்களேன்
  • நம்பகத்தன்மை பற்றிய பிரச்சனையை நீங்கள் கண்டுகொள்ளவே இல்லைல். அது உங்கள் பிரச்சனை இல்லை.என் பிரச்சனைதான். ஆனால் படிப்பது அல்லது படிக்க வேண்டியது நானல்லவா:)))
  • என்னவோ முழுமையாக இல்லாத விமர்சனமாக தோன்றுகிறது
  • பார்ட் 2 விமர்சனம் வந்தால் , மாபெரும் வரவேற்பு கிடைக்கும்
இந்தத் துண்டுமாலை வீசல் கிடக்கட்டும். இதற்கு முன்பாக சபரிமலை சாஸ்தாவால் வீசப்பட்ட தூண்டில்கள் எவ்வளவு என்று தெரியுமா திரு பிச்சைஸ் அவர்களே?
எக்ஸைல் வெளியீட்டு விழாவுல உன் ”சிறுமி கொண்டுவந்த மலர்” சிறுகதைக்கு விருதுகொடுக்கலாம்னு வாசகர்வட்ட நண்பர்கள் முடிவு செய்திருக்காங்க.
ஏம்பா 1984ல எழுதின கதைக்கு 2011ல விருதுன்னா காமெடியா இருக்காதா? அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.
அப்ப, ஜெயமோகனோட மாடன் மோட்சத்தை வரிக்குவரி கோட்பண்ணி பிரமாதமா விமர்சனம் செஞ்சிருந்தியே, அட்டகாசமா இருந்துது. சிறந்த பிளாகுன்னு உன்னோட தளத்துக்கு விருது குடுக்கலாமா?
நான் என்ன இன்னக்கி நேத்து எழுதவந்த பிளாகரா? தப்பா எடுத்துக்காத இதெல்லாம் ஒண்ணும் வேணாம். நீ லிங்க் குடுக்கறதே போதும். ஆயிரக்கணக்குல வரவங்கள்ல அஞ்சாறு பேரு நிரந்தரமா படிக்க ஆரம்பிச்சா அதுவே போதும்.
நண்பர்கள் சிலர் சொன்னாங்க நீ கண்டிப்பா ஒத்துக்க மாட்டேன்னு, ஒரு குரூப்போட ஐடெட்டிஃபை பண்ணிக்கறாப்புல இருக்கும்கறதால ஒத்துக்க மாட்டேன்னு சொன்னாங்க.
அப்பிடில்லாம் ஒண்ணுமில்லை. எனக்கு சரின்னு பட்டுதுன்னா எதைப்பத்தியும் கவலைப்பட மாட்டேன்னு உனக்குத் தெரியாதா? வெளியீட்டு விழாவுக்குக் கண்டிப்பா வறேன்.
இதற்கடுத்து, எக்ஸைல் வெளியீட்டுக்குப் பிறகு, டிசம்பர் 8, 2011 1.24 PMக்கு ஒரு குறுஞ்செய்தி.
அதற்கடுத்து அநேகமாய் தினமும் ஒரு ஃபோன்கால். எக்ஸைல் பற்றியே பேசாமல் வேறு எதையாவது சாக்கிட்டு. அப்புறம் சமீபத்தில் ஒரு நாள் 

மாமல்லா! அப்பறம் ஒரு விஷயம். 4ஆம் தேதி எல் எல் ஏ பில்டிங்குல வாசகர் வட்டம் சார்பா எக்ஸைல் விமர்சனக் கூட்டம் வெச்சிருக்கோம் நீ பேசறே.
ஐயையோ அதெல்லாம் முடியாது.
இல்லையில்லை நீ கண்டிப்பா பேசறே.
சான்ஸே இல்லை. 
ஃப்ரெண்ட்ஸ் சொன்னாங்க நீ ஒத்துக்க மாட்டேன்னு. கரெக்டா நீயும் சொல்றே.
இதுக்கு ஸ்பெஷலா வேற எந்த காரணமும் கிடையாது. எனக்கு மேடைலப் பேச வராது. இன்ஃபார்மலா நாலு நண்பர்கள் கிட்ட மணிக்கணக்கா பேசலாம். மேடைல ஏத்திவுட்டா கோர்வையா வராது. இத்தனைக்கும் காலேஜ் டேய்ஸ்ல  பேச்சுப்போட்டிகள்ல கலந்துகிட்டவன்னு பேரு. அதையெல்லாம் எப்பையோ வுட்டாச்சு.
என்னையா நீ இப்புடி எதுக்கெடுத்தாலும் ரெஃப்யூஸ் பண்றே.
இல்லையில்லை. கண்டிப்பா 4ஆந்தேதி வறேன். ஆனா மேடைக்கு வர மாட்டேன். 
சரி சரி இந்தா ஒரு நண்பர் பேசணும்கறாரு.
சார். என்ன சார் வறமாட்டேங்கறீங்க. வந்து பேசுங்க சார். கூட்டத்துல எல்லாரும் சாருவோட நாவலை ஆஹாஓஹோன்னுதான் சொல்லுவாங்க, நீங்க மேடைல ஏறி ஒரு பத்து நிமிஷம் உங்க பாணில நாலு காட்டு காட்டித் திட்டினா எவ்ளோ நல்லாருக்கும்.
ஏம்பா நான் இன்னும் நாவலே படிக்க ஆரம்பிக்கலை. அதுக்குள்ள அது நல்லா இருக்காதுன்னு ஏன் முடிவு செய்யணும்? எனக்குப் பிடிக்குதா இல்லையான்னு நான் படிச்சாதானே எனக்குத் தெரியும்.
இல்ல சார். பொதுவாவே ஜெயமோகன் எஸ்.ரா மாதிரி இல்லாம சாருவை நீங்க சாஃப்ட்டா டீல் பண்றீங்கன்னு ஒரு அபிப்ராயம் இருக்கு. அது அப்படி இல்லேன்னு காட்ட இது ஒரு சான்ஸ் இல்லையா?
ஏம்பா! ஜெயமோகனையும் எஸ்.ராவையும் பத்தி எழுதறேன்னா அவங்க கட்டுரை எழுதறாங்க இல்லாட்டா சிறுகதை எழுதறாங்க. அதைப் படிச்சா எனக்கு ஏதாவது சொல்ல இருக்கு. சாருவோட தளத்துல அப்பிடி என்ன இருக்கு? அப்படி இருந்து சொல்லாமப்போனாதான நான் சாருவை மட்டும் சாஃப்ட்டா டீல் பண்றதா சொல்லலாம்?
சார். இப்படி எனக்குத்தோணவே இல்லை. இருங்க சாரு பேசறாரு.
டேய் நீ என்ன பெரிய புடுங்கின்னு நெனப்பா? 4ஆந்தே தேதி நீ வறே. நாவலைப்பத்திப் பேசறே.
கூட்டத்துக்கு வறேன் ஆனா பேச மாட்டேன். நீ பாட்டுக்கும் திடீர்னு மேடைக்கு வான்னு கூப்டா, கூட்டத்துலேந்து எழுந்து, அப்பிடியே எதிர்பக்கமா நடந்து வெளிய போயிடுவேன்.
இல்லையில்லை அப்பிடில்லாம் கம்ப்பெல் பண்ணமாட்டேன். என்னோட அடிப்படையான விஷயமே யாரையும் கம்ப்பெல் பண்ணக்கூடாதுங்கறதுதான். ஓகே. ஓகே.
ஓகே. கூட்டத்துக்கு கண்டிப்பா வறேன். பை.
நடந்த கதை இப்படி இருக்க கழற்றிப்போட்ட இந்த பிச்சைஸ் குப்பி கிடந்து ஏன் இந்த அல்லாட்டம் அல்லாடுகிறது? 
கல்கியில் தொடங்கி ஜெயகாந்தன் சுஜாதா பாலகுமாரன் உட்பட அநேக இடைநிலை எழுத்தாளர்கள் தம்மைவிடவும் மொக்கையான எழுத்தாளர்களிடம் இருந்து வாசகர்களை ஈர்த்து குறைந்தபட்சம் கனிசமான வாசகர்களையேனும் தங்களைத்தாண்டி தீவிர இலக்கியத்தை நோக்கிச்செல்ல ஏணியாய் இடைவழிப் பாலமாய் இருந்திருக்கிறர்கள்.
சாரு நிவேதிதா தம் இணைய சாம்ராஜ்ஜியத்தில் நான்கே நான்கு உருப்படியான வாசகர்களையாவது உருவாக்கியிருக்கிறாரா? அப்புறம் என்ன இலக்கியத்திற்கு அவரது பங்களிப்பு. மெளனிக்கு வாசகர்களாக இருந்தோரில்  பெரும்பாலோர் எழுத்தாளர்கள். அது உச்சபட்சம். அதை எல்லோரிடமும் எதிர்ப்பார்ப்பது முடியாத காரியம். குறைந்தபட்சமாய் நான்கு விஷயங்களைப் பற்றி விவாதிக்கும் அளவிற்கு நல்ல வாசகர்களை உருவாக்குவதுதான் எந்த எழுத்தாளனின் இலக்கியப் பயன்பாடுமாய் இருக்கவேண்டும். சும்மா கும்பலைக் கூட்டி வைத்துக்கொண்டு சூடத்தைக் கையில் ஏந்தி தன் முகத்துக்கே தீபாராதனை காட்டிக்கொள்வதறகுப் போய்க் கொண்டாடு கொண்டாடு என ஏனிந்தக் கொலைவெறிக் கூப்பாடு?
அரசியல்வாதிக்குக்கூட தனக்குப்பெருங்கும்பல் கூடுகிறது என்பதில் என்ன பெருமை? கூடியக் கூட்டத்தில் எத்துனை ஓட்டாக மாறுகிறது என்பதல்லவா முக்கியம்? அரசியல்வாதிக்கு எப்படி ஓட்டில் குறியோ அதுபோல் இந்த எழுத்தாளருக்கு புத்தக விற்பனையில்தான் குறி. எதிரில் இருப்பவனெல்லாம் நோட்டாக மட்டுமே தெரிகிறான். 
பதிவுகள் சிலவற்றில் பகடி பிரமாதமாக வருகிறது என்பதால்.பகடி மட்டுமே  இலக்கியம் என்று நினைக்கிறது பாமர கும்பல். வெறும் பகடி கொணஷ்டைக் காமெடி மட்டுமே. இதுதான் இலக்கியம் அறிவார்த்த சிந்தனை என்று கொண்டாடும் கும்பலை சேர்த்து வைத்திருப்பதில் இந்த எழுத்தாளருக்கு ஏன் உள்ளூர திருபதியில்லை? ஏனிந்த யானைக்கு இலக்கிய ஜிகினாத் தோரணமாய் ஒரு பொறுக்கிமொழி கொசு தேவைப்படுகிறது?
யானை உண்மையிலேயே யானையா கொசு உண்மையிலேயே கொசு மட்டும்தானா என்பது வெட்டவெளிச்சமாக ஒருவருடம்கூடத் தேவைப்படவில்லையே.
வாலியைக் கொல்ல ராமன் ஏன் மறைந்து நின்று அம்பெய்தான்? எதிரில் வந்தால், வாலிக்கு இருக்கும் சுயபலம் போக எதிரியின் பலத்தில் பாதிவேறு வாலிக்குப் போய்விடும் என்பதால்தானே? சாரு மறைந்துகொள்ளக் கிடைத்த பாழ்மரம்தான் இந்தப் பிச்சைக்காரனா?
பிராண்டு அம்பாசிடராய் கிடைத்ததே இதுபோன்ற பிச்சைக்காரன்தான் எனும்போது இணையத்தில் சாரு நிவேதிதா ஆற்றியிருக்கும் இலக்கிய சாதனையை என்னவென்று சொல்வது?
சும்மா இப்படி வம்புக்கிழுத்து அடிதடி சண்டையாய் அக்கப்போர் செய்து இந்த புக்ஃபேரை ஓட்டலாம் என்பதுதான் உங்கள் உள்நோக்கம் எனில் மன்னிக்கவும். நான் சண்டைக்காரன்தான். ஆனால் எதை நம்புகிறேனோ அதற்காக எவ்வளவு அடிவிழுந்தாலும் பரவாயில்லை என்று தன்னந்தனியனாய் மல்லுக்கு நிற்கும் சண்டைக்காரன். சாதகமாகவோ பாதகமாகவோ எவனுக்கும் அடியாள் அல்ல. எதைக் காட்டியும் என்னை விலைக்கு வாங்க இதுவரை எவனும் பிறக்கவிலை.

வெற்றுப் பரபரப்பே உங்கள் கும்பலின் நோக்கம் எனில் இனி என் எதிர்வினை மெளனம். மெளனம் மட்டுமே.

Leave a Reply