March 26, 2017 maamallan 0Comment
வணக்கம் நான் ஜெயமோகன் பேசுறேன் ..
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழில் எழுதி வந்த எழுத்தாளர்களில் இருவரைத்தான் சந்தேகமில்லாமல் மேதைகள். உலக அளவில் எந்த மொழியிலும் எந்த காலத்திலும் எழுதிய மகத்தான எழுத்தாளர்களுக்கு சமானமானவர்கள் என்று நான் சொல்வேன். ஒருவர் புதுமைப்பித்தன், இன்னொருவர் 
அசோகமித்திரன். தமிழில் பொதுவாய் எழுதக்கூடிய எல்லா எழுத்தாளர்களும் ஒரு ராக்கெட் போல அவர்களுடைய ஆரம்ப விசையை கொண்டு மேலெழுவார்கள். 
அதன் பிறகு அந்த விசை கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து அவர்களுடைய எழுத்து ஒரு தேக்க நிலை அடையும். முதல் 15 வருடங்களுக்குப்பிறகு புதிதாக ஒன்றை எழுதிய எழுத்தாளர்கள் தமிழில் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் தான் .சிலருக்கு இன்னொரு தொடக்க காலம் இருக்கும் சுந்தர ராமசாமி போல. ஆனால் எழுத வந்த முதல் கதையிலிருந்து இன்று தனது 86ஆவது வயதில் இறக்கும் தருணம் வரை ஒவ்வொரு நாளும் மிகப்பெரிய  
படைப்பூக்கத்துடன் இருந்த படைப்பாளி என்று 
அசோகமித்திரனை சொல்ல முடியும். அவருடைய படைப்புலகில் ஏற்றமோ இறக்கமோ இருக்காது .தொடர்ச்சியாக எப்போதுமே அவர் ஊக்க நிலையில் இருந்தார். ஆனால், அதற்கான வாழ்க்கை முறை 
அவருக்கு அமையவில்லை .

1985ல தான் முதல்ல நான் அவரை பற்றி கேள்விப்படுறேன். அப்போது என்னுடைய நண்பர் ஒருவர் அவருடைய ‘வாழ்விலே ஒருமுறை’ என்ற சிறுகதை தொகுப்பை வாங்கி எனக்கு கொடுத்து படிக்க சொன்னார். ஒரு எச்சரிக்கை அவர் எனக்கு அளித்தார். நீ இதுவரைக்கும் படித்த படைப்புகளைப்போல இது விறுவிறுப்பாக இருக்காது. மிகக் சாதாரணமாக எழுதப்பட்டிருக்கும். மிகச்சாதாரணமான ஒரு மனிதரை 
சாதாரணமானவர் என நீ எடைபோட்டிருந்தால்  
எவ்வளவு பெரிய  தவறுகள் நிகழுமோ அதே தவறுகள் இந்த படைப்பில் நிகழும் உனக்கு படித்துப்பார் என்றார். ஆனால், 
எனக்கு நான் அதுவரைக்கும் படித்த பெரும்பாலான படைப்புகளை  விட விறுவிறுப்பான ஒரு புத்தகமாக இருந்தது. இரண்டு நாளில் மொத்த கதைகளையும் இரண்டு முறை நான் படித்து முடித்தேன். அதன் பிறகு அசோகமித்திரன் நூல்களை அன்றைக்கு வெளியிட்டுக்கொண்டிருந்த நர்மதா பதிப்பகம் சென்று அவருடைய இன்று, விமோசனம் ஆகிய சிறுகதை தொகுப்புகளை 
வாங்கிக்கொண்டு வந்தேன். 

அசோகமித்திரனை பார்க்க வேண்டுமென்ற ஒரு துடிப்பு ஏற்பட்டது .அன்று நான் இடவியல் துறையில் இருந்ததனால் எனது இடவியல் நண்பரொருவரிடம்
கேட்டு அவருடைய
விலாசத்தை வாங்கிக்கொண்டு, தாமோதரராவ் ரெட்டி தெருவிலிலிருந்த அவருடைய வீட்டுக்கு சென்றேன் டி நகரில். சற்று பெரிய ஒரு வளாகத்துக்குள் சிறிய ஒரு ஓட்டு வீடு அதை அவர் வாடகைக்கு விட்டிருந்தார். அதில் ஒரு சிறு பகுதியில் அவர் குடியிருந்தார்.

ஜெமினி ஸ்டூடியோவில் தயாரிப்பு உதவியாளராக வேலைப்பார்த்த அசோகமித்ரன், ஜெமினி அதிபர் ஒருபோது அவரிடம் தனது  காரை கழுவச்சொன்ன போது  ‘நான் ஒரு எழுத்தாளன்’ என்று பதில் சொன்னார். இதோ பார் நீ எழுத்தாளன் என்றால்  
இந்த மாதிரி வேலைகளைச் செய்துக்கொண்டு இருக்க மாட்டாய் என்று அவர் பதில் சொன்னபோது முதலில் கோபம் வந்தாலும் அது உண்மைதானே 
என்று உணர்ந்து அசோகா மித்ரன் அந்த வேலையை அன்றே விட்டார். அதன் பிறகு பல சிறு சிறு வேலைகளில்  அவர் இருந்தாலும் கூட நிரந்தரமான வருமானமோ வாழ்க்கைக்குரிய பின்புலமோ இல்லாதவராக  
ஒரு வகையில் கைவிடப்படட எழுத்தாளராகவே அவர் இருந்தார் .

பல பேருக்கு இன்று தெரியாதது தமிழில் புகழ்பெற்ற ஒரு பெண் எழுத்தாளரின் வீட்டில் கார் ஓட்டுநராக பல ஆண்டுகள் அசோகமித்திரன் வேலை பார்த்தார். ஒருமுறை அந்தப் பெண் எழுத்தாளருடைய மகனை எங்கோ காரில் அழைத்து செல்லும்  போது நான் அவரை பார்த்திருக்கிறேன்.

தமிழில் வெளிவந்த இரண்டு பத்திரிகைகளில் அவர் வேலை பார்த்திருக்கிறார். கணையாழி என்ற சிறு பத்திரிக்கையில்
அவர் ஆசிரியராக இருந்தார். தமிழ் இலக்கியத்தில் 
மிக முக்கியமான ஒரு மாற்றத்தை உருவாக்கிய சிற்றிதழ் அது. அதில் தான் எனது ஆரம்ப கால கதைகள் வெளிவந்து இருக்கின்றன. என்னை அடையாளம் கண்டு பாராட்டி ஊக்கு வித்தவர் அசோகமித்திரன். அப்படி 
பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு அசோகமித்திரனின் பாராட்டும் ஊக்குவிப்பும் கிடைத்திருக்கும். ஆனால், சாவி என்ற பத்திரிகையில், அசோகமித்திரன் அலுவலக உதவியாளராகத்தான் வேலை பார்த்தார். இன்னும் சொல்லபோனால் டீ கொண்டு வரக்கூடிய வேலையைத்தான் அவருக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஏனென்றால் 1960கள் முதலே எழுதத் தொடங்கிய அசோகா மித்திரனுடைய படைப்புகளுக்கு பரவலான வாசிப்போ, அங்கிகாரமோ 
எப்போதும் கிடைத்தது கிடையாது. 

அவருடைய ‘வாழ்விலே ஒரு முறை’  என்ற தொகுப்பு 
வெளிவந்து 15 ஆண்டிகளுக்குப் பிறகுதான் நான் ஒரு பிரதியை வாங்குகிறேன். அந்த 15 ஆண்டுகளும் 500 பிரதிகள் விற்காமல் தேங்கியிருந்தன. நான் வாங்கிய பிரதி வெறும் ஐந்து ரூபாய், ஆறு ரூபாய் நினைவிருக்கு. அதை வெளியிட்ட  நர்மதா ராமலிங்கம் என்கிட்ட சொன்னார் ,ஒரு வருடத்திற்கு 30 பிரதிகள் அவருடைய நாவல், புத்தகங்கள் விற்றுக்கொண்டிருக்கின்றன. 

எந்த வகையிலும் கவனிக்கப்படாமல் முழுமையான புறக்கணிப்பை மட்டுமே பெற்றுக்கொண்டு கடுமையான வறுமையில் அசோகமித்திரன் வாழ்ந்தார். அவரது மனைவி பல வேறு தொழில்களை செய்து அதில் ஈட்டிய மிக சொற்பமான வருமானத்தில்தான் அவர் வாழ்ந்தார். வீடு வீடாக சென்று அப்பளம் விற்றிருக்கிறார் என்கிறார்கள். இருந்து எழுதுவதற்கு ஒரு இடம் அவருக்கு அமைந்ததில்லை. அவர் இல்லத்தில் அருகே இருந்த நடேசன் பூங்கா என்ற இடத்தில்தான் வெயில் வருவதற்கு முன்னால் சென்று உட்கார்ந்து எழுதி முடிப்பார். அவரே அதை பத்திரிக்கைகளுக்கு சென்று கொண்டு கொடுப்பார். 

அவர் அதிகம் சிறு பத்திரிக்கையில் தான் எழுதினார். நடுக்காலத்தில் அவரது சில கதைகள் குமுதம் எஸ்.ஏ.பி அவர்களின் ஆதரவினால் 
குமுதத்தில் வெளிவந்தன. 

எழுத்து மூலமாக அவருக்கு எந்த வருமானமும் வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆகவே, தமிழ் சூழலுடைய முழுமையான அசட்டையை எதிர் கொண்டு ஆனால், தான்   நம்பியுடைய லட்சியவாதத்தை முழுக பிடித்துக்கொண்டு அவர் வாழ்ந்து முடித்தார் .

பாரதியை தமிழ் சமுதாயம் உதாசீனம் செய்தது என்று சொல்கிறோம். அதற்கு நிகரான உதாசீனத்தை தான் நாம் புதுமைப்பித்தனுக்கு அளித்தோம். மீண்டும் இரண்டு தலைமுறைகளுக்கு பிறகு அசோகமித்திரனுக்கு அளித்தோம். அடுத்த தலைமுறை இன்று தேவதேவனுக்கும் அதே உதாசீனத்தைத்தான் அளித்துக்கொண்டிருக்கிறோம்.

எங்கெல்லாம் தமிழன் இருக்கிறானோ, அங்கெல்லாம் ஆம் எங்களுக்கொரு படைப்பாளி இருக்கிறார் என்று நிமிர்ந்து சொல்லும் தகுதிக்கொண்ட படைப்பாளிகள் இவர்கள். ஆனால், தமிழ் சமூதாயத்திற்கு இவர்களைப்பற்றி தெரியாது. எவர்களையெல்லாம் தங்களுடைய பெருமிதமாக தமிழ் சமுதாயம் வெளிவிக்கிறதோ அவர்கள் அனைவருமே குஷ்ட நோயைப்போல பொத்தி வைக்கப்படவேண்டிய இழி மகன்கள் என்பதுதான் உண்மை.

இந்த இழிவிலிருந்து அடுத்த தலைமுறைக்காவது ஒரு விடிவு ஏற்பட வேண்டும் என்ற எண்ணம் இன்று அசோகமித்திரனுடைய மரணத்தை ஒட்டி என்னுள் ஏற்படுகிறது.

பல் ஆண்டுகளாக அவருடன் நான் மிக நெருக்கமான தொடர்பில் நான்  இருந்தேன். மிக உணர்சசிகரமான கடிதங்களை எனக்கு அவர் அனுப்பி இருக்கிறார். அவரது படைப்புகளுக்கு வெளியே அவருடைய ஆளுமை சற்று வித்தியாசமானது. அவருடைய படைப்புலகில் அவருடைய கடவுள் பக்தியோ, மத நம்பிக்கையோ வெளிவருவதில்லை. அவர் தனி வாழ்க்கையில் ஆழமான மத நம்பிக்கை கொண்டவராக இருந்தார் . நான் ஒரு பெரிய மனச் சோர்வில் இருந்தபோது ஆஞ்சநேயரை வழிபடும் படி ஆலோசனை செய்து எனக்கு அவர் ஒரு கடிதம் எழுதியிருந்தார். சோஃபிஸ் சாய்ஸ் என்ற 
நாவலை படித்து விட்டு தற்கொலை மன நிலைக்கு சென்ற அனுபவத்தை ஒரு கடிதத்திலே அவர் சொன்னார்.

ஆங்கிலத்தில் மிகச்சிறப்பாக எழுதும் தன்மை கொண்டிருந்தார். தொடர்ந்து ஆங்கிலத்திலேயே எழுதி இருந்தால் ஒருவேளை அவருக்கு மறுக்கப்பட்ட பெரும் புகழும், பணமும் அவருக்கு வந்திருக்கலாம் .ஆனால், தமிழ் மீது கொண்ட பற்று, தன் படைப்பிலக்கியத்தின் மீது கொண்ட பற்று காரணமாக தமிழிலே தான் அவர் தொடர்ந்து அவர் எழுதினார். அது தமிழுக்கு மிகப்பெரிய பேறு. ஆனால் , தமிழ் சமுதாயம் அவருக்கு எதையும் திருப்பி அளிக்கவில்லை. நெடுங்காலம் ‘சாகித்திய அகாடமி’ போன்ற சாதாரண பரிசுகளே அவருக்கு மறுக்கப்பட்டன. அதற்கு வெளிப்படையான ஒரே காரணம் என்பது அவர் ஒரு பிராமணர் என்பதுதான். எனது காது படவே கல்வித்துறையில் இருக்கக்கூடிய கீழ் மகன்கள் பல பேர் ஒரு பார்ப்பனனுக்கு  
விருது கொடுக்க நாங்கள் ஒத்துக்கொள்ள மாட்டோம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஒருவருடைய சட்டையைப் 
பிடித்து சுவரோடு சாய்த்து அடிக்க போயிருக்கிறேன் நான். 

தமிழகத்தினுடைய இழிவனைத்தையுமே தாங்கி நம்மை மேலான ஒரு படைப்புலகுக்குக் கொண்டு சென்று நமக்கொரு எதிர்கால தலைமுறை நினைத்துப்பார்க்கும் ஒரு அடையாளமாக மாறி இந்த அசோகமித்திரன் காலத்திற்குள் மறைந்திருக்கிறார். எனது வீட்டில் இரண்டே இரண்டு படங்களைத்தான் நான் வைத்திருக்கிறேன் ஒன்று காந்தியுடைய படம், இன்னொன்று அசோகமித்திரனுடைய படம். 

பல ஆண்டுகளுக்கு முன் படிப்பறை படங்கள் என்ற பேரிலே இதைப்பற்றி ஒரு கட்டுரை எழுதினேன். அதில் சொன்னேன், தன்னுடைய லட்சியத்திற்காக வாழ்வதென்பது இருவருக்கும் பொதுவானது. காந்தி மகத்தான ஒரு ஆளுமை, ஒரு தேசத்திற்காக அவர் வாழ்ந்தார் .ஆனால் எவருமே அறியாமல் இருந்தாலும் கூட தாம் நம்பும் ஓன்றிற்காகவாவது
வாழும் வாழ்க்கை உன்னதமானது என்பதை அசோகமித்திரன் எனக்கு அடையாளம் காட்டுகிறார். ஒவ்வொரு நாளும் அந்த முகத்தில் விழிக்கும் போது அவர் அடைந்ததற்கு பல மடங்கு நாம் அடைந்திருக்கிறோம் .அவர் அளித்ததற்கு குறைவாகவே அளித்திருக்கிறோம் என்பதை அந்த முகம் எனக்கு நினைவூட்டியது.

பெரிய படைப்பாளிகள் இறப்பதில்லை. ஒரு ஐம்பது ஆண்டுகள் கடக்கும் போது 
அரசியல்வாதிகள் , தொழிலதிபர்கள், மேடைப்பேச்சாளர்கள் , மதத் தலைவர்கள் அனைவருமே மறக்கப்படுவார்கள். புதுமைப்பித்தன் காலக்கட்டத்தில் வாழ்ந்த ஐந்து மத தலைவர்களின் பெயரை சொல்லுங்கள் , ஐந்து அரசியல்வாதிகளின் பெயரை சொல்லுங்கள். உங்களால் சொல்ல முடியாது . புதுமைப்பித்தன் என்றும் வாழ்வான். எழுத்தாளன் தன்னுடைய இறப்பிலிருந்து புதிய ஒரு வாழ்க்கையை ஆரம்பிக்கிறான்.

அசோகமித்திரன் மறுபடியும் வாழத்தொடங்கியிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்.

நன்றி. 

***************************************** 

பொதுவாகவே ஜெயமோகனுக்கு உலகமே கருப்பு வெளையாக மட்டுமே தெரியும். ஆனால் உலகம் இருப்பதோ இரண்டுக்கும் இடையில் என்பது கொஞ்சம் முதிர்ச்சியும் பட்டறிவும் உள்ள எந்த மனிதனுக்கும் தெரியக்கூடிய எளிய விஷயம் இவருக்குத் தெரியாது. இவர்தான் தமிழின் தலைசிறந்த ஆளுமை. இதை இவரே வேறு சொல்லிக் கொள்வார். இந்த, இருந்தால் இந்தக் கோடி இல்லையேல் அந்தக் கோடி என்கிற கிறுக்குத்தனம்தான் கலைஞனின் குணம் என்பார். இந்தக் கலைக் குணம் எல்லாம் இலக்கியத்தில் மட்டும்தான். இவர் வாழும் வாழ்க்கை மிகப் பாதுகாப்பானது. செய்யும் ஒவ்வொரு செயலும் மிகக் கவனமாக மிகுந்த கணக்குவழக்குகளுடன் செய்யப்படுவது. 

பத்மஸ்ரீ விவகாரம் 

இவர் ஏன் தமக்கு அளிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை மறுத்தார்.

முதலில் அது ’அளிக்கப்பட்டதே’ இல்லை. விண்ணப்பிக்கப்பட்டது என்பதுதான் உண்மை. எவரும் விண்ணப்பிக்காமல் இந்த விருதுகள் எல்லாம் வழங்கப்படுவதே இல்லை. இந்த வின்ணப்பமும் சிபாரிசுக் கடிதங்கள் வாங்கப்பட்டதும் இவருக்கு நன்கு தெரிந்தே நடந்தேறியவை. ஜெயமோகன் முயற்சித்தது, பத்மபூஷன் விருதுக்காக. ஜெயகாந்தன் போல பத்மஸ்ரீ விருதே வாங்காமல் நேரடியாக பத்மபூஷன் வாங்க வேண்டும் என்று தலையால் தன்ணீர் குடித்தார். அதெல்லாம் முடியாது முதலில் பத்மஸ்ரீதான் கொடுக்க முடியும் என்று சொல்லிவிட்டார்கள். அதிலேயே இவர் சோர்ந்துவிட்டார். அதற்கு இடதுசாரிகள் மகாபாரத வெண்முரசு எழுதுவதே இதற்காகத்தான் என்று கொச்சைப் படுத்திவிடுவார்கள் என்கிற நாடகம். இல்லையா பின்னே. வெண்முரசை எழுதிக்கொண்டு இருப்பது ஞானபீடத்துக்காக அல்லவா.

கமல் கொடுத்த சிபாரிசுக் கடித சீரழகு

கமல்ஹாசனிடம் இவரது பத்மஸ்ரீ விருதுக்கு சிபாரிசுக் கடிதம் கொடுக்கும்படி இவர் சார்பாகக் கேட்டுக் கொண்டவரிடம், அய்யங்கார் குசும்புடன் கமல் சொன்னதைக் கேட்டால் விழுந்து புரண்டு சிரிப்பீர்கள்.

லெட்டர்தான வேணும். அதுக்கென்ன குடுத்தாப் போச்சு. நாம என்ன பத்மஸ்ரீயேவா குடுக்கப் போறோம்.

வேண்டாம் எனச் சொல்லி பந்தா காட்டிக்கொள்வதற்காக எவனாவது இவ்வளவு கேவலப்படுவானா.

ஜெயமோகனின் நெருங்கிய நண்பர் வட்டத்திலேயே இது ஒரு பெரிய அடித்தொண்டை நகைச்சுவை.

பாரீன் பயணங்களின் விருந்தோம்பல் 

முந்தைய பயண அனுபவத்தின் காரணமாக – இது ஜெயமோகனை விருந்தினராக தங்க வைத்துக் கொண்டவர்களின் ‘சுகமான’ அனுபவத்தின் காரணமாக – தங்கள் வீட்டில் தங்கவைத்துக்கொள்ளவோ சுற்றிக்காட்ட அழைத்துச் செல்லவோ எவருமே  முன்வரவில்லை இந்த முறை பயணத்தில் என்பதுதான் உண்மை.

இவையெல்லாம் ஆதாரமற்ற வெறும் வம்பு என்கிறீர்களா.

ஜெயமோகன் இருக்கும்போதே, சம்மந்தப்பட்ட நபர்களும் வாழ்ந்துகொண்டு இருக்கும்போதே அல்லவா சொல்லி இருக்கிறேன். மனசாட்சி இருந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மறுக்கட்டுமே.

நானொன்றும் ஜெயமோகன் போல அசோகமித்திரன் மறைந்த உடன் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லவில்லையே.

***************************************

எந்தக் கோர்வையுமின்றி இந்தப் பேச்சில் வாய் ஏன் இவ்வளவு குளறுகிறது என கேட்பவர் எவருக்கும் தோன்றும். மொத்தமும் பொய். எழுத்தில் தட்டிவிட்டுப் போய்விடலாம் குரல் காட்டிக்கொடுத்து விடாதா என்ன.

//ஆனால் எழுத வந்த முதல் கதையிலிருந்து இன்று தனது 86ஆவது வயதில் இறக்கும் தருணம் வரை ஒவ்வொரு நாளும் மிகப்பெரிய படைப்பூக்கத்துடன் இருந்த படைப்பாளி என்று  அசோகமித்திரனை சொல்ல முடியும்// 

படைப்பூக்கம் என்பது என்ன. ஜெயமோகன் அகராதியில், சாகும் வரை எழுதிக்கொண்டே இருப்பது என்பது போலும். அசோகமித்திரன், 60களிலும் 70களிலும் தொட்ட உயரங்கள் என்ன. 80க்குப் பின் எழுதித் தள்ளியவற்றில் எவ்வளவு அவற்றைத் தொடும் என்பதல்லவா நேர்மையான அணுகுமுறையாக இருக்கும். இதை அசோகமித்திரனே ஏற்றுக் கொள்வாரே. 

தமிழில்தான் எழுதினால் அசோகமித்திரனுக்குப் பணமே கிடைக்காதே அப்புறம் ஏன் அவர் எழுதிக்கொண்டே இருந்தார். 

முதல் மரியாதையில் சிவாஜி நடந்து வரும் ஷாட் எடுக்கும் போது, சிவாஜி திருவிளையாடல் போல அரக்கி அரக்கி நடந்திருக்கிறார். இன்னோரு விதமா நடந்து வாங்கண்னே என்று நிறைய முறை நடக்க வைத்து திரும்பத் திரும்ப எடுத்துக் கொண்டு இருந்திருக்கிறார் பாரதிராஜா. சிவாஜியும் சளைக்காமல் பல விதங்களில் நடந்து காட்டியிருக்கிறார். 

கடைசியில், அண்ணே ஒரே ஒரு ஷாட் எனக்காக ஒரே ஒரு தடவை சும்மா நடந்து வாங்கண்ணே என்றிருக்கிறார். 

ஏய் அப்படி நடந்தா தியேட்டர்ல கிளாப்ஸ் கிடைக்கும்யா அதுல ஒன்னை வெச்சுக்கோ என்றிருக்கிறார் 

அண்ணே, நீங்க அப்படி நடந்தா நான் ரசிப்பேண்ணே என் பையனுக்கா இன்னோரு ஷாட் சும்மா நடந்து வாங்கண்னே என்று கேட்டிருக்கிறார் 

சரி உன் இஷ்டம் என்று சும்மா நடந்து வந்த பிறகு ஓகே என்றிருக்கிறார் பாரதிராஜா 

இதைப் பற்றிய சிவாஜியின் கமெண்ட் என்ன தெரியுமா. அதுதான் பிரமாதம். 

அவருடன் கூடவே இருக்கும் சிறிய குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் ஒருவரிடம், 

ஏம்ப்பா இந்தக் காலத்துப் பயலுகள்ளாம் என்னா புத்திசாலியா இருக்கானுங்க. என்னா சொன்னான் பத்தியா. இவன் ரசிப்பானாம் இவன் பையனுக்காக ஒரு ஷாட்டாம். ஜெனரேஷன் மாறிப்போச்சுங்கறான் திருட்டுப் பய புரியுதா. இத்தனை ஷாட் எடுத்தானே, அப்பல்லம் பிலிம் ரோலைக் கூடப் போடாம சும்மா ஓடவிட்டு எடுத்தானோ என்னவோ என்று கூறிச் சிரித்திருக்கிறார். இதை, 90களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சீரியல் ஒன்றில் நடித்த மகளுக்காகக் கூட வந்த அந்த நடிகர் கூறினார்.

எந்தக் கலைஞனுக்கும் அவன் படைப்பு அவனை மீறி தன்னிச்சையான விசையுடன் உச்சம் பெறுவதும். தன் பழைய உச்சத்தின் வெளிர்ந்த நிழலாக நின்றுவிடுவதையும் எளிதாகக் கணித்துவிட முடியும். 

கண்ணதாசனின் கடைசி காலத்தில் எதோ ஒரு பேட்டியில் கூறியிருந்தார். என்னிடம் பாடல் கேட்டு வருபவர்கள், மலர்ந்து மலராத போல ஒரு பாடலை எழுதிக் கொடுங்கள் எனக் கேட்கிறார்கள். ஒ எனக்கு நானே உவமையாகிப் போனேன் என்றார். சட்டென மேலோட்டமாகப் பார்ப்போருக்கு அவர் பெருமையடித்துக் கொள்வதைப் போல் தோன்றக்கூடும். உண்மையில் அது உள்ளார்ந்த வலியின் வெளிப்பாடு. 

சிவாஜிக்கும் கண்ணதாசனுக்கும் தெரிந்த விஷயம் அசோகமித்திரன் போன்ற நுட்பமான கலைஞருக்குத் தெரியாதா என்ன. 

ஒரு முறை என் நண்பரொருவர் அசோகமித்திரனிடம் கேட்டார். ஏன் சார் கொஞ்சம் இடைவெளி விட்டு உங்களோட பெஸ்ட்டை மட்டும் எழுதலாமே என்று. 

என்ன பண்றது கதை கேக்கறவாளண்ட போய் தர முடியாதுனு எப்படி சொல்றது. 

ஒருவர் இறந்துவிட்டார் என்பதற்காக, அவரை தெய்வமாக்குவதற்காக இல்லாததையும் பொல்லாததையும் அவர் மீது சுமத்த வேண்டிய அரிப்பு தேவையில்லாதது. அதிலும் குறிப்பாக எப்போதுமே சாதாரண மனிதர்களைப் பற்றி மட்டுமே சித்தரித்துக் கொண்டிருந்த கலைஞரை வாராது போல வந்த மாமணி போலக் காட்ட முற்பட்டால் குளோசப்பில் ஈறு தெரிய சிரிப்பவர் அவராகத்தான் இருப்பார். எவ்வளவு உயிர்ப்புடன் இருந்த மனிதர் அவர் என்பது அவருடன் நேரில் பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும். உண்மை வேட்கை என்று அதையே கிண்டலாகப் பார்த்த ஒருவரை உயர்த்துவதற்காகக் கூட பொய் சொல்வது உண்மையில் அவரை அவமதிப்பதாகும். 

//1985ல தான் முதல்ல நான் அவரை பற்றி கேள்விப்படுறேன். அப்போது என்னுடைய நண்பர் ஒருவர் அவருடைய ‘வாழ்விலே ஒருமுறை’ என்ற சிறுகதை தொகுப்பை வாங்கி எனக்கு கொடுத்து படிக்க சொன்னார்.//

//அவருடைய ‘வாழ்விலே ஒரு முறை’  என்ற தொகுப்பு  வெளிவந்து 15 ஆண்டிகளுக்குப் பிறகுதான் நான் ஒரு பிரதியை வாங்குகிறேன். அந்த 15 ஆண்டுகளும் 500 பிரதிகள் விற்காமல் தேங்கியிருந்தன. நான் வாங்கிய பிரதி வெறும் ஐந்து ரூபாய், ஆறு ரூபாய் நினைவிருக்கு.// 

இந்த இரண்டில் எது உண்மை ஜெயமோகன். குழறிய வாய் இப்படி உளறவும் செய்தால் இந்த உலகம் எப்படித் தாங்கும். 

//நான் இடவியல் துறையில் இருந்ததனால் எனது இடவியல் நண்பரொருவரிடம்// 

இது என்ன புது சரடு ஜெயமோகன் இடவியல் தடவியல் என்று. 

//1984ல் கேரளத்தில் காஸர்கோடு தொலைபேசி நிலையத்தில் தற்காலிக ஊழியராக வேலைக்குச் சேர்ந்தேன்.// 

இதுதானே உங்கள் தளத்தின் அறிமுகம் பகுதியில் இருக்கிறது திருவாளர் நரிமுகம் அவர்களேங். 1984ல் காஸர்கோடு தொலைபேசி நிலையத்தில் சேர்ந்தது முதல் 2008ல் விருப்ப ஓய்வு பெறும் வரை வேலையே செய்யாமல் இலக்கியக் குப்பையைக் கொட்டிக்கொண்டு இருந்தது அதே துறையில் என்றுதானே உமது அறிமுகம் சொல்கிறது. 

//ஒரு வளாகத்துக்குள் சிறிய ஒரு ஓட்டு வீடு அதை அவர் வாடகைக்கு விட்டிருந்தார். அதில் ஒரு சிறு பகுதியில் அவர் குடியிருந்தார்.// 

முதல் முறை அசோகமித்திரனை சந்திக்கும் போதே கொல்லைக்குப் போய்விட்டீர்களா ஜெயமோகன். வருவோர் உட்காருவதற்காக என்று மர நாற்காலியொன்று, கம்பிகள் போட்ட வெளிர் நீல முன் கதவைப் பார்த்தபடி, உள் கதவுக்கும் முன் கதவுக்கும் இடைப்பட்ட மூன்றடி அகலமுள்ள பகுதியில் எப்போதும் அமர்ந்திருக்கும். முன் கதவைத் திறந்ததும் உடனே இடப்பக்கத்தில் மாடிக்குப் படி ஏறும். வலப்பக்கம் தான் அசோகமித்திரனின் எழுத்து சம்ராஜ்யம். மர நாற்காலியில் உட்கார இதமாக, சின்னதாக ஒரு சிவப்பு நிற துணி போடப்பட்டிருக்கும். எதற்காகவோ எடுத்துச் செல்லப்பட்டிருந்த விருந்தாளிகளுக்கான மர நாற்காலியை, இரும்புக் கம்பிகள் வேய்ந்த மாடியிலிருந்து எடுத்து வந்து கீழே போட்டு உட்கார்ந்திருக்கிறேன். எங்கிருந்து வந்தது ஒரு சிறிய ஓட்டு வீடு ஜெயமோகன். 

அந்த முன் கதவுக்கு முன்பாக இருந்த இரண்டு படிக்கட்டுகளின் பக்கவாட்டில், சைக்கிள் கேரியர் அளவுக்கு கடப்பைக் கல் போடப்பட்டிருக்கும். அதை இந்த எழுத்தாளர் திலகம் திண்ணை என்று ஓரிடத்தில் எழுதியிருந்தார். ஞாநியை போன் பண்ணிக் கேட்டேன். அசோகமித்திரன் வீட்டில் ஏது திண்ணை என்று. 

ஞாநி சொன்னார். சமயத்துல நம்மள வழியனுப்ப கதவுக்கு வெளிய வந்து நின்னுப்பாரே சின்ன கல்லு அதைத்தான் திண்ணைங்கறான்பா அவன் என்று. 

//அசோகமித்ரன், ஜெமினி அதிபர் ஒருபோது அவரிடம் தனது  காரை கழுவச்சொன்ன போது  ‘நான் ஒரு எழுத்தாளன்’ என்று பதில் சொன்னார்.// 

நினைவிலிருந்தே எதையும் டைப்பிஸ்ட் இப்படித்தான் என்னத்தியாவது தத்துபித்தென எழுதி வைக்கும். 

இங்கே கார் கழுவச் சொன்னபின் அதன் தொடர்ச்சியாக நனவோடை பிய்த்துக்கொண்டு ஓடத் தொடங்கிவிடது கட்டுக்கடங்காமல் 

//பல பேருக்கு இன்று தெரியாதது தமிழில் புகழ்பெற்ற ஒரு பெண் எழுத்தாளரின் வீட்டில் கார் ஓட்டுநராக பல ஆண்டுகள் அசோகமித்திரன் வேலை பார்த்தார். ஒருமுறை அந்தப் பெண் எழுத்தாளருடைய மகனை எங்கோ காரில் அழைத்து செல்லும்  போது நான் அவரை பார்த்திருக்கிறேன்.// 

மணிரத்னம் சங்கர் போன்ற பெரிய பட்ஜெட் எழுத்தாளரில்லையா எனவே எதையுமே பிருமாண்டமாய் செய்தால்தான் ஜெயமோகனுக்கு முழு திருப்தி எனவே ஒரே போடாகப் போட்டுவிட்டார். பல ஆண்டுகள் டிரைவராக வேலை பார்த்தார் என்று. 

ஆனால் அவர் மூன்றாவது மகன் என்ன சொல்கிறார் என்று பாருங்கள்.

//எங்கோ காரில் அழைத்து செல்லும் போது நான் அவரை பார்த்திருக்கிறேன்.// 
கார்ல போறவங்க எங்கையோதான் போவாங்க. அங்கையே இருக்கிறதுக்கு அவங்க ஏன் பாஸ் கார்ல போவணும் நின்ன இடத்துலையே நிக்கலாமே. அவருக்குக் காரே ஓட்டத் தெரியாதாம். கத்துக்க முயன்றதோட சரி. முயன்றதை வெச்சு, ’திருப்பம்’ னு  ஒரு கதையும் எழுதியாச்சு அப்பறம் எதுக்கு அதைக் கத்துக்கிட்டுனு கூட விட்டுட்டு இருக்கலாம். 
//சாவி என்ற பத்திரிகையில், அசோகமித்திரன் அலுவலக உதவியாளராகத்தான் வேலை பார்த்தார். இன்னும் சொல்லபோனால் டீ கொண்டு வரக்கூடிய வேலையைத்தான் அவருக்கு அளிக்கப்பட்டிருந்தது.// 
இது எப்போ. இப்படி அந்தரத்துல தொங்க விட்டா எப்படி பாஸ். சாவி வந்தப்ப நான் பாண்டிச்சேரில இருந்தேன். முதல் இதழ்ல எம்.எஸ் படம். திசைகள் வரும்போதெல்லாம் நான் பச்சையப்பாஸ். ஸ்டிரைக் வந்தா நான் கல்லடிக்கப் போயிருவேன். இயக்குநர் வஸந்த் அப்போ இராம.வீரப்பன், அதே பூந்தமல்லி ஹைரோட்ல கூவம் பக்கத்துல இருந்த திசைகள் ஆபீசுக்குப் போயிருவான். திசைகள் ஆசிரியர் மாலனைக் கேப்போமா இல்லை சாவி ஆபீஸே பழியாக் கெடந்த பாலகுமாரனைக் கேப்போமா. ரெண்டு பேரும்தான் புத்தரும் சித்தருமா பேஸ்புக்லையே இருக்காங்களே. அசோகமித்திரன் வாங்கிட்டு வந்த டீயை இவங்கக் குடிக்காம இருந்திருக்க முடியுமா. 
உன் ஒயர் அந்து ஒரு வாரமாச்சு ஜெயமோகா. இங்க ஒருத்தன் இருக்காங்கிறதை மறந்துட்டு ஒரேடியா ஓட்டறே.
//அவருடைய ‘வாழ்விலே ஒரு முறை’  என்ற தொகுப்பு  வெளிவந்து 15 ஆண்டிகளுக்குப் பிறகுதான் நான் ஒரு பிரதியை வாங்குகிறேன். அந்த 15 ஆண்டுகளும் 500 பிரதிகள் விற்காமல் தேங்கியிருந்தன. நான் வாங்கிய பிரதி வெறும் ஐந்து ரூபாய், ஆறு ரூபாய் நினைவிருக்கு. அதை வெளியிட்ட  நர்மதா ராமலிங்கம் என்கிட்ட சொன்னார்// 
வாழ்விலே ஒரு முறையை வெளியிட்டது நர்மதா ராமலிங்கமா அடப்பாவி. அது அவர் நிதியுதவி பெற்று சொந்தமாகப் போட்டது இல்லையா. நான் போய்விட்டால் நீ இன்னும் என்னவெல்லாம் ரீல் விடுவாயோ தெரியவில்லை. 
இந்தா வைத்துக்கொள். 
//எந்த வகையிலும் கவனிக்கப்படாமல் முழுமையான புறக்கணிப்பை மட்டுமே பெற்றுக்கொண்டு கடுமையான வறுமையில் அசோகமித்திரன் வாழ்ந்தார்.//
நான் உலக பேமஸ். தினம் என்னைப் படிக்க ஒன்றரைக் கோடி பேர் வராங்க. எனக்கு சினிமால எழுதினா காசு வருது அசோகமித்திரனுக்கு பணமே இல்லே.
//அவரது மனைவி பல வேறு தொழில்களை செய்து அதில் ஈட்டிய மிக சொற்பமான வருமானத்தில்தான் அவர் வாழ்ந்தார்.// 
என் பொண்டாட்டி கவர்ன்மெட் ஆபீசர் அசோகமித்திரன் மனைவி. ஆனாலும் நான் என் சொந்த சம்பாத்தியத்துல வாழறேன். அசோகமித்திரன் மனைவி ரொம்பப் பாவம் அசோகமித்திரன் மனைவி அதைவிடப் பாவம் அவங்க சம்பாத்தியத்துல வாழ்ந்தார். 
//வீடு வீடாக சென்று அப்பளம் விற்றிருக்கிறார் என்கிறார்கள்.// 
யாரு பாஸ் கே.வி. அரங்கசாமியா
//இருந்து எழுதுவதற்கு ஒரு இடம் அவருக்கு அமைந்ததில்லை. அவர் இல்லத்தில் அருகே இருந்த நடேசன் பூங்கா என்ற இடத்தில்தான் வெயில் வருவதற்கு முன்னால் சென்று உட்கார்ந்து எழுதி முடிப்பார்.// 
சார் வாக் போக பார்க்குக்குலாம் போறதில்லையோ. நான்லாம் டிரைவின்லதான் எழுதியிருக்கேன். அதுக்காக எனக்கு வீடே இருந்ததில்லேனு அர்த்தமா. 
//அவரே அதை பத்திரிக்கைகளுக்கு சென்று கொண்டு கொடுப்பார்.// 
ஆமா நீங்க டெலிபோன்ஸு அவர் போஸ்டல் டிபார்ட்மெண்ட்டு. 
//சில கதைகள் குமுதம் எஸ்.ஏ.பி அவர்களின் ஆதரவினால்  குமுதத்தில் வெளிவந்தன.// 
ஆமாமா எஸ்.ஏ.பி ஆதரவுலதான் அசோகமித்திரன் குடும்பமே ஓடிச்சி. நானும் ஜே ராமகிருஷ்ணராஜுவும் சேர்ந்து எடுத்த சினிமாப்படம்ங்கிற நீளமான கதையை ரெண்டு வாரமா போட்டாங்க. ஆனா ஒரு பேமெண்ட்டுதான் குடுத்தாங்க ரூ 250/-ஐ. லெட்டர் போட்டுக் கேட்டு எதுவும் பேரலை. இது நேத்து அவர் மூத்த பையனோட முக்கால் மணி நேரம் போன்ல பேசிக்கிட்டு இருந்ததுலதான் தெரியவே வந்துது. இதையெல்லாம் அசோகமித்திரன் மூச்சே விட்டதில்லே உன் சினிமா பேமெண்ட்டு மாதிரியே. 
//எழுத்து மூலமாக அவருக்கு எந்த வருமானமும் வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆகவே, தமிழ் சூழலுடைய முழுமையான அசட்டையை எதிர் கொண்டு ஆனால், தான்   நம்பியுடைய லட்சியவாதத்தை முழுக பிடித்துக்கொண்டு அவர் வாழ்ந்து முடித்தார்.// 
எனக்கு சினிமாவுல கோடில கொட்டிக் குடுக்கிறாய்ங்க.
எனக்கு மணிரத்தினம் கார் ஓட்டறார் அசோகமித்திரனே கார் ஓட்டிதான் பொழைச்சிக்கிட்டு இருந்தார் 
எனக்கு புக்கு விக்குது அசோகமித்திரனுக்கு புக்கே விக்கலை 
எனக்கு டீ குடுக்க ஷூட்டிங் ஸ்பாட்டுல ஆளிருக்கு அசோகமித்திரன் பத்திரிகை ஆபீஸுலையே டீ கொண்டாந்து குடுக்கிற வேலைதான் செஞ்சிக்கிட்டு இருந்தாரு 
ஆனா பாருங்க அசோகமித்திரன் ஒரு மேதை என்னைப் போலவே.
உண்மை என்னவென்றால், அசோகமித்திரன் இந்திய அளவில் இலக்கிய உலகில் எல்லோருக்கும் தெரிந்த மிகவும் மரியாதைக்குறிய எழுத்தாளராக இருந்தார். இதற்கு முக்கியக் கரணம் அவரே தம் கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் திறன் பெற்றவராகவும் இருந்தார். பல்கலைக் கழகங்கள் அழைத்து அவரை கெளரவித்தன. அவரளவுக்கு இந்திய அளவில் பரவலாக அறியப்பட்டவர் என இன்னொரு தமிழ் எழுத்தாளரைச் சொல்வது அரிது. 
என்னையே ஒரு முறை இது போன்றதொரு இலக்கிய மாநாட்டுக்கு அனுப்பி வைத்தார். நானும் போய் மீட்டிங்கில் உட்கார்ந்து பகபகாவென்று வாயை வாயைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு வேளா வேளைக்கு தின்றுகொண்டு அரசின் செலவில் போபாலைச் சுற்றிக் காட்டினார்கள் பார்த்துவிட்டு வந்து சேர்ந்தேன். ஒரே டையடித்த ஆண்ட்டிகள் மயம். சின்னப்பையன் என்பதால் ஓரிரு டெல்லி தமிழ் ஆண்ட்டிகள் கூட வாஞ்சையோடு நெருக்கமானார்கள். அங்கே  எல்லாம் ஒரே இலக்கிய மயம். வாசந்திதான் அங்கே தமிழர்களுக்கு உதவியாகவும் ஒத்தாசையாகவும் இருந்தார். ஆனால், நானோ அவர் இலக்கியவாதியில்லை என்பதால் அவரிடம் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் ரொம்ப ஆசாரமாக இருந்துவிட்டேன். அதுதான் எனக்கு முதலும் கடைசியும். 
எழுத்தில் அசோகமித்திரனால் ஈர்க்கப்பட்டு எழுத ஆரம்பித்தாலும் சுந்தர ராமசாமி எவ்வளவுதான் நெருக்கமானவராக இருந்தாலும் பிரமிள் தான் என்றைக்கும் எனது நாயகன். என்னதான் தங்கமென்றாலும் நானெப்படி எந்த கூண்டுக்குள்ளும் இருக்க முடியும்.
திரும்பி வருகையில், ஜான்ஸிக்கு முந்தைய ரயில் நிலைய ஓய்வரையில் ஒரு பையன் ஓவியங்களை சுவரோரம் திருப்பி வைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். முழுக்க மழித்து ஒட்ட வெட்டிய கூந்தலுடனும் முழுக்க மழித்த முகத்துடனும் களையாக ரொம்ப டிரிம்மாக இருந்தான். கொஞ்சம் பட்லர் இங்கிலீசு பெரும்பாலும் செய்கை என்று பேச்சுக் கொடுத்ததில் நெருங்கினான். அந்தக் கேன்வாஸ்களின் பக்கமிருந்த சேரில் உட்காரேன் என்றான். உட்கார்ந்தேன். இந்த ஓவியங்கள் என்னுடையவை என்றால் யாரும் நம்பமாட்டார்கள். நீதான் நிஜமான ஓவியனைப்போல் இருக்கிறாய் என்றான் இந்தி கலந்த இங்கிலீசில். என் முகம் சிவப்பதை நானே உணருமளவுக்குக் காது மடல்கள் சிலிர்த்தன. குளிக்காதிருப்பது எனக்கு பெரிய அதிர்ஷ்டம் என்பதை நான் உணர்ந்த தருணம் அது. இருவரும் ஒரே பெட்டியில் ஏறிக்கொண்டோம். பூரி சாப்பிட்டு முடித்ததும் தனது ஸ்கெட்ச் பேடை எடுத்து வைத்துக் கொண்டான். ஒரு கோணத்தில் என்னை உட்கார வைத்து ஒரு இடத்தைப் பார் என்றான். வேகமாய் ஓடும் ரயிலில் நாலு பேர் சேர்ந்து உலுக்குவது போல இருந்தது போதாதென்று அடிக்கடி அவனை வேறு பார்த்துக் கொண்டிருந்ததில் ஒவியத்தில் என் அழகான மூக்குக் கொஞ்சம் மூளியாகி விட்டது. ஜான்சியின் லலித் கலா அகாதெமியின் ஓவியக் கண்காட்சிக்குப் போய்க்கொண்டு இருந்த அந்த ஓவியனின் பெயர் Anil K Tato. இப்போது பெரிய ஓவியனாக இங்கெங்காவது பேஸ்புக்கில்தான் ஒருந்துகொண்டு இருப்பான். 
இதெல்லாம் கிட்டத்தட்ட நெட்வொர்க் போன்ற ஒழுங்கிற்குள் வருவது. நமக்கும் இதற்கும் சம்மந்தமே இல்லை. நாலு பேருடன் நன்றாகப் பழகும் திறமை இருந்து சரளமான ஆங்கிலமும் இருந்தால் இந்திய அளவில், இலக்கிய வட்டங்களில் ஆளுமை ஆவது சுலபம். காலச்சுவடு தேவிபாரதி எம்.டி.எம் போன்றவர்கள் பற்பல நாடுகளுக்கும் பறக்கும் முக்கிய இலக்கிய ஆளுமையாக இல்லையா அது போல. 
திறமையும் ஆங்கிலப் புலமையும் அடிப்படை ஒழுங்கும் இருந்த அசோகமித்திரனைப் போய் எதோ அனாமதேயமாக இருந்து இறந்தவரைப் போல் ஜெயமோகன் சித்தரித்து இருப்பது அயோக்கியத்தனம். 

Leave a Reply