March 9, 2017 maamallan 0Comment
‪பொறுக்கி என்று முதலில் ஆண்ட்டி சொன்னார்கள். அதனால்தான் ஓலா டிரைவர், ஆண்ட்டி கழுத்தை அறுத்துடுவேன் என்று அடுத்து சொன்னான் என்கிற ‘பொய்’யைச் சொல்லி ஊரை ஏமாற்றினான் மாமல்லன். ஏனென்றால்,

‘விலாசினி ரமணி என்னை பொறுக்கி என்று திட்டவுமில்லை; நான் விலாசினி ரமணியை கழுத்தை அறுத்துருவேன் என்று மிரட்டவும் இல்லை’

என்று அந்த ஓலா டிரைவரே சொல்லி விட்டார் எனவே மாமல்லன் ஒரு புளுகு மூட்டை என்கிறது ஆல் பர்பஸ் அங்கிள் கும்பல் இப்பொழுது.

இது ஏதும் இவர்களின் புதிய கண்டுபிடிப்பா. புதிய சாட்சியமா. இது, அந்த ஓலா ஓட்டுனர் பெயிலில் வெளியில் வந்த சில நாட்களில் வளர்மதி எடுத்த இந்த நேர்காணல் வெளியாகி 7 மாதங்களாகிவிட்டனவே. இதை ஏதோ புதிய தரவு போல வைத்துக்கொண்டு செய்கிற கோட்டிக்காரப் பயலுக்கு பதில் வேறு ந்வேண்டுமா.

சட்டம் படித்த முட்டாளுடைய புட்டத்தின் பின்னே லைன் கட்டி நின்று கூவும் இந்த ரயில் பெட்டிகள் தர்க்கத்தில் எவ்வளவு பெரிய முட்டைகள் என்று பார்த்துவிடலாமா.
‪சுவாதி வீச்சறிவாளால் கொலையுண்ட சமயத்தில் இருந்த மக்களின் மனநிலையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள ‘கழுத்தை அறுத்துருவேன் என்று சொன்னான்’ என்பதை முதல் முதலாகப் பயன்படுத்தியது யார். உங்கள் ஆண்ட்டியா மாமல்லனா. ‬
‪ஆண்ட்டி போட்ட நாடகத்திற்கு அப்புறம்தானே அந்த சொற்கோர்வையை மாமல்லன் பயன்படுத்த நேர்ந்தது. அது ஒன்றும் மாமல்லனின் கண்டுபிடிப்பு இல்லையே. ‬
‪அன்று ‘கழுத்தை அறுத்துருவேன் என்று சொன்னான்’ என்று ‘ஆண்ட்டி சொல்வதே உண்மை’ என ஆவிபோகக் கூவிய அதே ஆல் பர்பஸ் குஞ்சாமணிகள்,

இன்று மாமல்லன் ஒரு புளுகு மூட்டை என நிரூபிக்கவேண்டி, ‘கழுத்தை அறுத்துருவேன்’ என்று சொல்லவில்லை என அந்த ஓலா ஓட்டுனரே சொல்லிவிட்டார். ஆகவே அதுவே உண்மை என்கின்றன.
இதை அப்படியே உண்மை என்று எடுத்துக்கொண்டால், முதலில் இதை வைத்துப் பிலாக்கணப் போஸ்ட்டு போட்ட விலாசினி ரமணி அல்லவா புளுகு மூட்டை ஆகிறார். 
இது உண்மை என்று ஆனால், இந்த சத்தியவதி அம்மையார் தமிழில் சொன்னதை, உண்மையா பொய்யா என்று சீர்தூக்கிப் பார்க்காமல் அதை அப்படியே இந்துவில்‬ ஆங்கிலத்தில் வாந்தியெடுத்து வைத்த பூர்வஜா சுந்தர் என்கிற நிருபரை, எழுத்தாளன் எப்படி முண்டம் என்று எழுதலாம் என நியாயம் கேட்டு கோர்ட்டு வளாகத்தையாவது எட்டிப் பார்க்க முடியுமா இந்து பத்திரிகை. 
இந்த ஆல் பர்பஸ் அங்கிள்களின் வாதப்படி, கழுத்தை அறுத்துருவேன் என்பது மாமல்லனின் கட்டுக்கதை என்றானால், அதை மாமல்லன் சொல்லக் காரணமாக இருந்த விலாசினி ரமணியும் விலாசினி ரமணியின் புகாரின் பேரில் போடப்பட்ட FIRஉம் பொய் தவறு என்று ஆகிவிடாதா. 
பொய்ப் புகாரின் பேரில் தான் உள்ளே செல்ல நேர்ந்ததற்கு, அந்த ஓலா ஓட்டுனர் நட்ட ஈடு கேட்டால், விலாசினி ரமணி சார்பில், அவரை ஆதரித்த ஆல் ஆல் பர்பஸ் அங்கிள்களும் ஆப் பாயில் ஆண்ட்டிகளும் அல்லவா என்னைப்போலவே இன்னொரு நிதியைத் திரட்டவேண்டி இருக்கும். கனிசமான தொகையை இந்து நிறுவனமும் அல்லவா கொடுத்தாக வேண்டும். அதை பூர்வஜா சுந்தரின் சம்பளத்திலல்லவா இந்து பிடிக்கப் பார்க்கும். அப்படி நடந்தால் பூர்வஜா சுந்தரின் மறுவாழ்வுக்காக இவர்கள் இன்னொரு நிதியை வேறு நம்மைப் போலவே திரட்டியாகவேண்டும்.
அடேய் காரியார்த்த செவிடுகளே, அந்த டிரைவர் சொல்வதை, 3:10 நிமிடத்திலிருந்து சரியாகக் காது கொடுத்துக் கேட்பவர்களுக்கு, அவர் சொல்வது இதுதான் என்று தெரியாது போய்விடுமா என்ன

சரி கிட்டப் போய்ட்டு டிரைவருக்கு முன்னாடியேதான் நின்னுருந்தேன் நான். ம் இன்னா மேம் ஃபைனலா கேக்கறேன். இன்னா மேம் குடுக்குறீங்களா இல்லையாண்ட்டுனு. இல்ல என்னாலல்லாம் குடுக்க முடியாதுனாங்க. சரிங்க மேம் உடுங்க மேம் இன்னா நூத்தியிருவதேள்ருவா குடுக்கல்னாகுட நான் இன்னா என் ஃபேமிலியோட கழுத்தறுத்துகினு செத்றவா போறேன்னு சொல்ட்டு நான் வந்துகினே இருண்ட்ட
https://soundcloud.com/valar-mathi-1/driver-interview

ஆக, தன் உழைப்புக்கான கூலி மறுக்கப்பட்ட அந்த அப்பாவி  கழுத்தறுத்துகிணு செத்துறவா போறேன் என்று கூறியதை, திரித்து என் கழுத்தை அறுத்து விடுவேன் என்று அவன் கூறினான் என இலவச அனுதாப விளம்பரம் அடைவதற்காக, பிராமண சாதுரியத்துடன், இதை சுவாதி கொலையின் மீது சூப்பர் இம்போஸ் செய்தது விலாசினி ரமணிதான் இல்லையா.

வக்கீல் எடுத்த வாந்தியை எல்லாம் வாரியெடுத்துக் கீற்றில்  வைத்தது சேம் சைட் கோல் போட்டு, விநியோகித்து இருப்பது கடைசியில் விலாசினி ரமணியை புளுகு மூட்டை என்று நிரூபிக்கத்தானா. அதற்குதான் எங்களைப் போன்ற உண்மை விரும்பிகள் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

இதில் பெரிய காமெடி என்னவென்றால், தன்னைப் பொய் சொல்பவள் என்று ஆரம்பத்திலிருந்தே மாமல்லன் சொல்வது உண்மை என ஆக்கிவிடுமே என்கிற அறிவு கூட இல்லாமல், இந்த முட்டாள்தனமான எட்டு வீட்டு வாந்தியை, விலாசினி ரமணியே ’உண்மை இதோ’ என்று சுட்டி கொடுத்து தட்டி வைத்துக் கொடுத்ததோடு இல்லாமல், இதைச் சொன்னதற்காக இந்த ஆக்ங்கெட்டக் கூவைகளான ஆல்பர்பஸ் அங்கிள்களுக்கு நன்றி வேறு தெரிவித்து இருப்பதுதான்.
‪அடேய் அசத்து வக்கீல்களா, அடுத்து டைவர்ஸுக்குத் தயாராகிற, சவுகரியத்துக்குப் பெண்ணியம் பேசும் எந்த  ஆப் பாயில் ஆண்ட்டியாவது உங்களை அட்வகேட்டாக வைத்துக்கொண்டால், பழைய ஜீவனாம்ச செட்டில்மெண்ட்டைக்கூட கடன் வாங்கியாவது ரீபண்ட் கொடுக்க வைத்துவிடுவீர்கள் போல இருக்கிறதே உங்களது வாதத் திறமையால்.
‪ஆக, சொட்டை மாமா கட்டை மாமா நெட்டை மாமா என்கிற மூன்று தெய்வங்களும் சேர்ந்து, சட்டத்தைக் கொட்டி, டெக்னிகலாக ரைட்டி, திரைக்கதையை நொட்டி  விலாசினி ரமணியையும் மாமல்லனையும் பொய்யர்கள் என நிரூபித்து விட்டனர். ஆனால்…‬
‪விலாசினி ரமணி பொய் சொல்லி ஒரு அப்பாவிக்கு வாங்கிக் கொடுத்தது 16 நாள் சிறை வாழ்க்கை

மாமல்லன் பொய் சொல்லிக் காசு திரட்டி ஓலா டிரைவருக்கு வாங்கிக் கொடுத்தது எதிர்கால வாழ்க்கை

இந்த உண்மையை உங்கள் எவராலும் எத்தனையெத்தை வாந்தி எடுத்தாலும் மறைக்கவோ மாற்றவோ திரிக்கவோ முடியாது. ஏனென்றால் இந்த அயோக்கியதனமான, பேஸ்புக்கின் பெருங்களங்கமான இந்தக் கைது சம்பவத்துக்கு, ஒரு களங்கமற்ற குழந்தையைப் போல் சாட்சியாக நிற்கிறது, நீங்கள் உங்கள் சட்ட அறிவைக் காட்டிக் கருவிலேயே கலைக்கப் பார்த்த அந்தக் கார். அவன் வசம் இப்போதிருக்கும் அவனது சொந்தக் கார்.

Leave a Reply