March 5, 2017 maamallan 0Comment
நண்பர்களே நம் ஒலா டிரைவர் இன்று போன் பண்ணினார். 

ஒரு பேப்பர் அரியர் வைத்திருந்த MAவை முடித்துவிட்டார். இப்போது B.Ed சேர்ந்திருக்கிறார். வாரத்தில் சனி ஞாயிறு இரண்டு நாட்கள் வகுப்பு. இரண்டு வருட படிப்பு. பேசிக்கொண்டு இருக்கையில் பின்புலத்தில் எதோ சத்தம் கேட்டது. என்ன என்றேன். ஸ்டிரைக் சார் ரெண்டு நாளைக்கு என்றார். திங்கள் செவ்வாய் அல்லது செவ்வாய் புதனாக இருக்கலாம். அவர் இப்போது ஒலாவில் இல்லை. உபருக்கு வந்துவிட்டாராம்.
கிட்டத்தட்ட ஆயிரம் காரை ஒலாகாரங்களே சொந்தமா வாங்கிட்டாங்க சார். டூட்டிய அவங்கக் காருக்குதான் சார் குடுக்கிறாங்க. நம்பளமாதிரி ஒனர் டிரைவருக்கெல்லாம் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூவா கூடக் கிடைக்க மாடேங்கிது சார். 
ஏன் 
அவங்களுக்குக் கஸ்டமரும் கொறன்ஞ்சிட்டாங்க சார் 
எப்படி 
ரேட்டு சார். மினிமம் 40 ரூபா. அப்பறம் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 9, 11, 13. உபர்ல ஃபிளாட்டா ஆரம்பத்துலேந்தே பத்து ரூபா. ஆனா ஜாஸ்தி ஓட்டவேண்டி இருக்கு. 300 கிமீ ஓட்டினா ஒரு மூவாயிரம் வரும். அதுல 1200 ரூவா பெட்ரோலுக்குப் போயிட்டா, மத்த செலவும் போனா 1500 ரூவா நிக்கும். 
என்ன திடீர்னு பி.எட் 
மாமாதான் படிச்சி வைய்யிங்கிறார். பின்னாடி எப்பையாச்சும் யூஸாவும்ன்கிறார். 
கவர்ன்மெண்ட்ல வாத்தியார் வேலை கிடைச்சா பரவால்ல. இல்லாட்டி…
பிரைவேட்லதான் சார் போவணும் 
தனியார் இஸ்கூல்ல 7,000 கிடைச்சாலே ஜாஸ்தி. எக்ஸ்பீரியன்ஸ் ஆச்சினா 10,000 ரூபா. அதுக்கு மேல எவனும் தர மாட்டான் 
ஆமா சார் 
கஷ்டப்பட்டாலும் 40, 45,000 கிடைக்கிறதை விட்டுட்டு 7,000க்கும் 10,000க்கும் போய் கல்யாணம் பண்ணி எப்படிக் குடும்பம் நடத்துவே 
ஆமா சார் 
இதுவரை எவ்ளோ டியு கட்டியிருக்கே 
எழு சார். இன்னும் 25 இருக்கு சார் 
ரெண்டு வருஷம் பல்லைக் கடிச்சிக்கிட்டு ஒட்டு 
ஆமா சார் அப்பறம் வண்டி நம்முதாயிரும் டியூ கட்டத்தேவையில்லை 
இதப் பார் மாமால்லாம் கிராமத்துக்காரங்க. அவங்களுக்கு வாத்தியார் வேலை பெருசா படும். நீ கிராமத்துக்குப் போய் செட்டிலாகப்பொறியா இல்லையில்ல. எத்தினி நாள்தான் கார் ஒட்டறது ஆபீஸ் வேலைக்குப் போகணும்னு ஆசைப்பட்டினா SSC பேங்க் எக்ஸாம் எல்லாம் எழுதப்பாரு. 
அதுக்கு என்ன சார் எம்ப்ளாய்மெண்ட் எக்ஸ்சேஞ்சுல பதிவு பண்னிக்கணுமா சார் 
திரும்ப ஸ்டேட்டையே சுத்தி வராத. எக்ஸாம் பாஸ் பண்ணினதும் எவன் தூக்கிக் குடுக்கத் தயாரா இருக்கான். எவ்ளோ லட்சம்னு குடுப்பே. வெறும் டிரான்ஸ்பருக்கே எக்கச்சக்கமா செலவு செஞ்சி மினிஸ்டர் வரைக்கும் போவணும். செண்ட்ரல் கவர்மெண்ட் எக்ஸாம் எழுது. TA, UDC, STA, இன்ஸ்பெக்டர்னு நிறைய போஸ்ட்டுகள் இருக்கு, இன்கம் டாக்ஸ் கஸ்டம்ஸ்னு எதுலையாவுது எழுதி நுழையப் பாரு. எடுத்ததுமே 30,000 பக்கமா கிடைக்கும். 
எங்க சார் போய் விசாரிக்கணும். 
நெட்ல தேடு. பொட்டிக்கடைல SSC Examsனு அட்டை தொங்கும். மெட்ராஸ்லையே கிடைக்கும்னு சொல்ல முடியாது. எந்த ஊருக்குக் கிடைச்சாலும் போகத் தயாரா இரு. பீகார்லேந்தும் உபிலேந்தும் ஜார்க்கண்ட்லேந்தும் ஏகப்பட்டப் பசங்களும் பொண்ணுங்களும் வந்திருக்காங்க எங்க ஆபீஸ்ல. GST வந்தா ஸ்டேட்ல நிறைய பேர் தேவைப்படும் ஆனா திரும்பவும் சொல்றேன் காசில்லாம இங்க வேலை கிடைக்காது. 
ஆமா சார் 
இங்க ஒரு ஸ்டேட் கவர்மெண்ட் ஆபீஸுக்கு எங்க ஆபீஸ் வேலையா அடிக்கடி போய் வருவேன். அங்கப் பாத்தினா எல்லாம் 23, 25 வயசுப் பசங்க. பத்தாயிரம் ரூபாய்க்கு கம்ப்யூட்டர் முன்னாடி, காண்ட்ராக்ட்ல ஒக்காந்திருக்காங்க. ரவுண்ட்டா பத்தாயிரம். புரொமோஷன் கிடையாது ஒரு மண்ணும் கிடையாது. உக்காந்து உக்காந்தே கண்ணு கெட்டு, நரைச்சி முடி கொட்டி வழுக்கையானாலும் ரிடைர்மெண்ட் பெனிஃபிட்னு ஒன்னும் கிடையாது. அரசு வேலைல இட ஒதுக்கீடு மட்டும் 69%. கக்கூஸ் கழுவறதுலேந்து எல்லா வேலையையும் ஒவ்வொண்ணா காண்ட்ராக்ட்டுக்கு விட்டுக்கிட்டு வரான். ஓய்வடையிறதால உண்டாகற காலி இடத்தை நிரப்பவும் மாட்டேங்கிறான், கொஞ்சங்கொஞ்சமா அரசு வேலைகளைத் தனியார் காண்ட்ராக்ட்டுக்கு விடுவீங்கன்னா இது அர்ன்னாசு வேலை இல்லை, தனியார் நிறுவனம் பாக்கிற அரசாங்க வேலை.  இவன் அரசு ஊழியன் கிடையாது. சமூக நீதி காத்த வீராங்கணைனு வீரமணி குடுத்த பட்டத்தையும் விட்டுட்டு அந்தம்மாவும் போய் சேந்துடுச்சி. இருக்கும்போது மட்டும் என்ன கிழிச்சிது. போன அஞ்சு வருசத்துல காண்ட்ராக்ட்ல வந்தவங்கதான் மேல சொன்ன பசங்க. காண்ட்ராக்ட் விட்டு புது காண்ட்ராக்ட் மாறின போது பழைய ஒப்பந்தக்கார பாடுக் கம்மனாட்டி இந்தப் பசங்களோட ஆறு மாச சம்பளத்தைக் குடுக்காம முழுங்கிட்டான். இதை இந்து பத்திரிகைல வரவைக்க மேலிடத்துல பேசியே ஒரு வருசத்துக்கு மேல ஆவுது. அவங்களும் கண்டிப்பா செய்யறோம்னு ஒத்துக்கிட்டாங்க. ஆனா அம்மா எப்படி எடுத்துப்பாங்களோ, பத்திரிகைல வந்ததுனாலையே நம்ம கதை பொங்கலாயிடுமோனு அந்தப் பசங்க ரொம்ப தயங்கிச்சிங்க. இந்துலேந்தும் என்ன சார் ஆச்சி டீடெல்ஸ் குடுங்க ஸ்டோரி பண்ணலாம். ஆறு மாச சம்பளத்தைக் குடுக்காம இருக்கிறது ரொம்ப அநியாயம் சார்னாங்க. சம்மந்தப் பட்டவங்க முன்வராம நாம என்ன செய்ய முடியும். அது இப்ப கோர்ட்டு கேஸுனு புலிகூண்டுக்குள்ள தலைய விட்டாப்புல ஆகிருச்சி. இந்துல வந்ததுக்காகவேகூட அந்தம்மா எதாச்சும் செஞ்சிருந்தாலும் செஞ்சிருக்கும். இப்பப் பாரு பரபன்ன அக்கிரகாரத்துக்குதான் போய் அந்தக் காண்ட்ராக்ட்காரக் கம்மனாட்டி வூட்டுக்கு ஆட்டோ அனுப்பச் சொல்லணும். இந்த லட்சனமா இருக்கிற 69%ஐ வெச்சிக்கிட்டு நாக்கைக்கூட வழிக்க முடியாது. செத்து சுண்ணாம்பாயி தொழில் செய். சீக்கிரம் முதலாளியாகப் பாத்து நாலு பேருக்கு வேலை குடு. மத்தபடி நல்லாதானே இருக்கே. 
நல்லா இருக்கேன் சார். சார் வீடு மாறிட்டேன். இப்ப கோர்ட்லேந்து சம்மன் வந்தா என்னா சார் பன்றது. 
பழைய வீட்டுக்காரர்கிட்ட சொல்லிவை 
….. 
அட என்னப்பா எதோ சொத்துத் தகறாருனு சொல்லி வைப்பா 
சொல்லலாம். அவங்க எங்கனா போயிருக்கும் போது வந்துச்சினா அது எதுனா போலேனு பிரச்சனை ஆயிருச்சினா… 
யோவ் மொதல்ல இது கேஸா ஆவுதானு பாரு. ஊர்ல அவனவன் வெட்டிக்கினும் குத்திக்கினும் செத்துக்கினு இருக்கான் அதைப் பாக்கவே போலீஸுக்கு நேரமில்லை. இதுக்கு நடுவுல அவன் ஹெல்மெட் கேசை வேற மடக்கிக் காசு தேத்தியாவணும். இதுல உன் கேஸு பெரிய தீவிரவாத கேசு பாரு. அந்தம்மாவும் ஊர விட்டுப் போயிருச்சி. வேணும்னா யார் மூலமாவுது சொல்லிவிடறேன் பேஸ்புக் ஜெத்மலானியக் கூட்டிக்கிட்டுப் போயி காம்ப்ரமைஸ் பண்ணிக்கோ. அந்தாளு என்னிய நாலு திட்டு திட்டுவான் ஆமா ஆமானு தலையாட்டிக் கேட்டுக்கோ. இல்லாட்டி இதை இப்படியே விடு. மூணு வருசம் ஆச்சுனா, 506 (1)க்கு தண்டனையே ரெண்டு வருசம்தான் மூனு வருசம் ஆகியும் இன்னும் சார்ஜ் ஷீட்டே ஃபைல் பன்ணலைனு ஹைகோர்ட்ல போட்டு க்வாஷ் பண்ணிட்டுப் போயிரலாம். அதுக்குக் கொஞ்சம் சகாய ரேட்ல, முற்போக்கு கிற்போக்கு பேசாத நல்ல தொழில்முறை வக்கீல ஏற்பாடு பண்ணித்தர எங்க பிபியைக் கேட்டிருக்கேன். பாத்துக்கலாம். 
எதுக்குப் போனாலும் எந்த பார்மை பில்லப் பண்ணினாலும் போலீஸ் கேஸ் இருக்கானு கேக்கிறாங்க சார்
அதனாலதான் சொல்றேன் இப்பத்திக்கி, எதைப் பத்தியும் யோசிக்காம வெறும் வண்டியை மட்டும் ஒட்டிக்கிட்டு இரு. என்ன பண்றோம் ஏது பண்றோம் அதனால அடுத்தவனுக்கு என்ன பாதிப்பு வரும்னு கொஞ்சம்கூட யோசிக்காம, எவன் செத்தா எனக்கென்னானு, எடுத்தேன் கவுத்தேன்னு நடந்துக்கிறதாலதான் அதுங்களுக்குப் பேரு ஆப் பாயில். இதுங்கதான் இப்படினு இல்லே, வீராதி வீர சூராதி சூர பத்திரிகைக்கார நக்கீரன் காமராஜே அப்படித்தான் அக்கிரமத்துக்கும் ஷபீர் அஹமது மேல ஒரு கேசைப் போட்டு எட்டு வருஷம் அலைய விட்டாரு. மேல்மட்டத்துல இருந்தவங்களைத் தன் செலவுல வக்கீல் வெச்சு வழக்காட உதவின ஆனானப்பட்ட NDTVயும் பிரனோராயும் பெரிய பேக்கிரவுண்ட் இல்லாத ஷபீர் அஹமதை அம்போனு விட்டுட்டாங்க. பதினைஞ்சு நாளுக்கு ஒருக்கா கோர்ட்டுக்கு அலைஞ்சலைஞ்சே எட்டு வருஷகாலம் அவஸ்தைப் பட்டிருக்காரு அந்தாளு. காலேஜ் படிச்சி முடிச்சி, கடைகளுக்குப் பேப்பர் போடற பையனா 2004ல வாழ்க்கையை ஆரம்பிச்சு இன்னைக்கு Times Now டிவிக்கு சென்னை கரஸ்பாண்டண்ட்டா இருக்காரு. அதனால வாழ்க்கைல எதுவுமே எங்கையுமே முடிஞ்சி போயிடறதில்லை. முட்டு சந்தாட்டம் இருந்தா லைட்டா ரிவர்ஸ் எடுத்து வேற ரூட் எடுத்துக்க வேண்டியதுதான். ஓத்தா ஒரு மயிருமே செய்யாம 16 நாள் உள்ளையே இருந்துட்டு வந்தாச்சு இதுக்கு மேல என்ன மயிரு இருக்குனு நெனச்சுக்கிட்டு போய்க்கிட்டே இரு. உன்ன விட அந்தம்மாவுக்கு என் மேலதான் காண்டு. எதுக்கும் கட்டுப்படாம இப்படி ஒன்னு திரியிதே இந்த நாயை எப்படியாச்சும் கம்பி எண்ண வெச்சிறணும்னு ஒரு கும்பலே சுத்திக்கிட்டு இருக்குது பேஸ்புக்குல -என் ஜாதகம் என்னான்னே தெரியாம. என் இடதுகால் சுண்டு விரல் நகத்தைக் கூடத் தொடமுடியாதுனு பாவம் இதுங்களுக்கு எப்படித் தெரியும். 
ஆமா உனக்கு பேட் டைம்னு உங்கூரு ஜோசியர் சொன்னாரில்லே அது எப்போ முடியிது
ஆமா சார் ஒன்ற வருஷத்துக்குனு அப்ப சொன்னாரு சார் 
இந்த வண்டிக்கு டியூ முடியும்போது எல்லாம் சரியாயிருக்கும் எதுக்கும் கவலைப் படாதே 
சரி சார் ரொம்ப நன்றி சார். சார் உங்க வீடு பெஸண்ட் நகர் சர்ச்சாண்டையா சார் இருக்கு. 
இல்லை பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல் இருக்கிற சாஸ்திரி நகர் போலீஸ் ஸ்டேஷனுக்குப் பின்னால இருக்கிற குவார்ட்டர்ஸுக்குப் பின்னால இருக்கிற குவார்ட்டர்ஸு -செய்ண்ட் ஜோன்ஸ் ஸ்கூலை ஒட்டி இருக்கும். 
ஒரு நாள் வரணும் சார். 
நீ அங்கதான் வருவேனு தெரியும். அதான் ஒரு தடவை, ஷெரீப் வீட்டுக் கல்லாயணத்துல பாத்தாச்சில்ல அதுக்கு மேல என்னா சும்மா சும்மா பாத்து என்னாவப்போவுது. அது போக நா எப்ப வீட்ல இருப்பேன் எப்ப வெளிய இருப்பேன் எப்ப வேலை வரும்னு எதுவும் சொல்ல முடியாது. எப்படியும் உங்கிட்ட பணம் கொடுத்ததுக்குக் கையெழுத்து வங்கியாகணும் இன்கம்டாக்ஸுக்காக. நானே உன்னை வந்து பாக்கறேன். ஓகே பை.

Leave a Reply