January 15, 2017 maamallan 0Comment
Aravindan Kannaiyan Suresh எழுதிய பதிவை இப்படியா திரித்துப் புரிந்துக் கொள்வது? தமிழ் நாட்டில் சமூக நீதிப் போராளியாக காண்பித்துக் கொள்ள எளிய வழி பிராமணர்களை மனிதக் குல சமத்துவத்தின் ஒரே எதிரியாக சித்தரித்து எழுதுவது. உங்கள் பதிவில் சிலவற்றை மறுத்து எழுதுகிறேன் கொஞ்சம் அவகாசம் கிடைக்கும் போது.

விமலாதித்த மாமல்லன்
விமலாதித்த மாமல்லன் அந்தச் சுட்டியையும் கொடுத்திருக்கிறேனே. நீங்கள்தான் என் பதிவை இப்படித் திரிக்கிறீர்கள். நான் பிராமணர் திராவிடர் எல்லோரையும் பற்றி என் அலுவலக அனுபவத்தை அடிப்படையாய்க் கொண்டு எழுதியதை இப்படி உங்களது பிராமண ஆதரவு பெரியார் எதிர்ப்பு நிலைப்பாட்டிற்காக அற்பப் படுத்துகிறீர்கள் அமேரிக்காவில் அமர்ந்து கொண்டு உள்ளூர் நிலவரம் ஒன்றுமே தெரியாமல். சரியாகப் படியுங்கள் திறந்த மனதுடன்
சில வார்த்தைகளைப் பார்த்தால் மிரண்ட மாடுபோல ஆகிவிடுவது திகவினரின் இயல்பு. ஆனால் அவர்களை எதிர்ப்பதாய்ச் சொல்லிக் கொள்பவர்களும் இதே மோடில்தான் இருக்கிறீர்கள். என்ன, உங்களுக்குப் படிப்பாளி அரிதாரம்.
Aravindan Kannaiyan ஒகே வீட்டிற்கு வந்துவிட்டேன். விரிவான பதில். —Part 1
முதலில் சுரேஷின் பதிவில் முன் வைக்கப்பட்டது இரண்டு கருத்துகள். ஒன்று, 
//இடைநிலை தேர்வுகள் ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் என்று இருப்பது பல தமிழ் வழிக் கல்விப் படித்தோரை அத்தேர்வுகளை எதிர்கொள்ள முடியாமல் செய்கிறது. அதன் விளைவாக இடைநிலை வேலைகளில் பெரும்பாலோர் வட இந்தியர்களாக இருக்கிறார்கள்.//
இதே விஷயத்தைதானே 80-90களில் தமிழக மக்கள் (பிராமணர்கள் கொஞ்சம் சதவிகிதத்தில் குறைவான அளவில் இடைநிலை சாதியினர்) வடநாட்டு மாநிலத்தைத் தேடிப்போய் தேர்வெழுதி, தில்லியில் போய் உட்கார்ந்தனர், அந்தத் தொடர்புகளை இன்றுவரை பயன்படுத்தி இப்போதும் பயில்வான்களாய் இருக்கின்றனர் என்றேன். இதற்கு ஆதாரமாய் எங்கள் அலுவலகத்தில் இருந்து எத்தனை பெயர்கள் வேண்டும். பிராமணனை ஆதாரத்தோடு கூட எடுத்துக்காட்டாகச் சொல்லக்கூடாதா. 
வட இந்தியர்கள் அவன் மாநிலத்தில் இந்தியில் எழுதி, பொஸ்டிங் இங்கு போடப்பட்டதால் தண்டக் கருமாந்திரமே என்று அவன் இங்கு வருவதையும், இங்கிருந்து, இங்கே இருக்கும் சூப்பர் பிராமணர்களுடன் போட்டியிட முடியாத சற்றே மாற்றுக் குறைந்த பிராமணர்கள், மற்றும் குறைந்த சதவிகித இடைநிலை சாதியினரும், இங்கிலீஷ் தெரியாத வட மாநிலங்களாய் தேடிப்போய், ஆங்கிலத்தில் ஈசியாக தேர்வெழுதி வென்று அவன் வயிற்றில் அடித்து டெல்லியில் போய் உட்கார்ந்து கொண்டதையும் ஒன்றாக வைக்க முடியுமா. ஆனால் நான் சொன்னதில் இருக்கும் அடிப்படையைக்கூடப் புரிந்துகொள்ள முடியாமல் //தமிழ் நாட்டில் சமூக நீதிப் போராளியாக காண்பித்துக் கொள்ள எளிய வழி பிராமணர்களை மனிதக் குல சமத்துவத்தின் ஒரே எதிரியாக சித்தரித்து எழுதுவது.// என்று, நியாயம் கேட்பவனைப் பார்த்து, அதி மேதாவியாய் அற்பப் படுத்தி உங்கள் மூடிய மனதை வெளிப்படுத்திக் கொள்கிறீர்கள்.
//இரண்டு, மாநிலத்தின் பொழி ஆறியாததாலும் வெளி மாநிலத்தவராக இருப்பதாலும் இடை நிலை அலுவலர்களால் உள்ளூர் சமூகத்திடம் ஓரு விலக்கம் கொண்டே பணி செய்கிறார்கள் என்பது.// 
இதைப் பற்றி நான் எதுவுமே சொல்லவில்லை. மாறாக டெல்லிக்குப் போன நம் பிராமணப் பையன்கள், தொடர்புகளைப் பயன்படுத்தி இன்றுவரை பயனடைந்துகொண்டிருக்கும் புத்திசாலிகளாய் இருக்கிறார்கள் என்றேன். இதெல்லாம் உள் விஷயங்கள் உங்களுக்குத் தெரிய நியாயமில்லை. சொன்னால் வாய் மூடி கேட்டுக்கொள்வதொன்றே உங்களுக்கு வழி.
//உங்கள் பதிவின் தலைப்பே “காலச்சக்கரமும் சமூகநீதியும்”. எடுத்த எடுப்பிலேயே, எழுதியவர் பிராமணர் என்பதால், அரசுப் பணியில் பிராமணர்களின் ஆதிக்கம் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டீர்கள். //
சமூகநீதி என்று தலைப்பில் பார்த்தே தடுக்கி விழுபவனெல்லாம் என்னைய்யா பெரிய அறிவாளிபோல் வேடமிட்டுக்கொண்டு விவாதிக்க வேறு வருகிறீர்கள், திரித்துவிட்டேன் முறித்துவிட்டேன் என்று அவதூறு வேறு செய்கிறீர்கள். உங்களது மூடிய மனதுக்கு சமூகநீதி என்கிற வார்த்தைப் பிரயோகமே என்னைப் பெரியாரிஸ்ட் போலத்தான் தோன்ற வைக்கும். நானோ எந்த கொள்கை தத்துவ வெங்காயமும் படிக்காத தெரியாத, நிஜ வாழ்க்கை மட்டுமே அறிந்த அதிலிருந்து கிடைத்தத் தரவுகளை மட்டுமே வைத்து வாழ்ந்துகொண்டு இருப்பவன். அதன் காரணமாகவே நான் எந்த கும்பலைச் சேர்ந்தவனாகவும் இல்லை. 
//உங்கள் பதிவில் மிகவும் சிக்கலானப் பகுதி இது தான்: “80-90களில் இங்கே இருக்கும் கடுமையான போட்டியில் தேர்வாவது சிரமம் என்று எண்ணிய எத்தனை பிராமணர் மற்றும் ஆதிக்க சாதியினர் மாநிலம் மாநிலமாகப் போய் இங்கிலீசில் வீக்கான வட இந்திய மாணவர்களுடன் தேர்வெழுதி எவ்வளவு ஈஸியாக வென்றார்கள் என்கிற கணக்கையும் எடுத்துப் பார்க்கவேண்டும்.”
1980-இல் எம்ஜியார் ஒதுக்கீட்டின் சதவீதத்தை 50%-இல் இருந்து தூக்கியடித்து 68% ஆக்கினார். இது பிராமணர்களை மட்டுமன்றி “முன்னேறிய” வகுப்பினர் அனைவரையும் வெகுவாக பாதித்தது. தமிழ் நாட்டில் அப்போதிருந்த 5-7 அரசாங்க பொறியியல் கல்லூரி அல்லது 5-7 அரசாங்க மருத்துவக் கல்லூரி இடங்களுக்கு முன்னேறிய வகுப்பினரை வெகுவாக பாதித்தது. பிராமணர்கள் தமிழகத்தை விட்டு வேறு மாநிலங்கள் நோக்கி நகர்ந்ததற்கு வேறொருக் காரணமுண்டு. பிராமணரல்லாத முன்னேறிய வகுப்பினர் பலர் போலி ஜாதிச் சான்றிதழின் மூலமாக இட ஒதுக்கீட்டின் ஓட்டைகளில் நுழைந்தனர். தொண்டைமண்டல முதலியார்கள் செங்குந்த முதலியார்கள் ஆவது எளிது. அத்தகைய வசதி பிராமணர்களுக்கில்லை. இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல், “கடுமையான போட்டியில் தேர்வாவது சிரமம் என்று எண்ணிய எத்தனை பிராமணர்” என்று போகிறப் போக்கில் எழுதி விட்டீர்கள். தேர்வுக்கும் போட்டுக்கும் பயந்தா பிராமணர்கள் வெளியேறினார்கள்? // 
இவ்வளவு அறிவுக் கொழுந்தா நீங்கள். மத்திய அரசு வேலை போஸ்டிங் பற்றிய விவாதத்தில் போய் எம்ஜிஆர் இட ஒதுக்கீடு என்கிறீர்களே.
செண்ட்ரல் கர்மெண்ட்டில் இடைநிலை சாதியினருக்கு இட ஒதுக்கீடு வந்தது 97ல்தான். 
ஏன் வேறு மாநிலங்களுக்குச் சென்று தேர்வெழுதினார்கள் என்பதற்கு, பிராமணர்கள் அல்ல, பிராமணர் அல்லாத தேவர், பிள்ளைமாரின் வாக்கு மூலத்தையே கொடுத்திருக்கிறேன்.  அதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், சாதிச் சான்றிதழ் மோசடி காரணமாக பிராமணன் டெல்லிக்குப் போனான் என்று முட்டுக் கொடுக்கிறீர்கள். 
இன்கம்டாக்ஸில் TAவாக இருந்த பிராமணர் ஒருவர், (இன்று லாவில் பிஎச்டி பண்ணிக்கொண்டிருக்கிறார்) ஆனால் 90களின் தொடக்கத்தில் SSC தேர்வெழுத அவுரங்காபாத் போனது, இங்கே எம்ஜிஆர் கொட்டா கொண்டுவந்ததாலோ இல்லை இடைநிலை சாதியினர் திருட்டு சர்ட்டிபிகேட் தயாரித்ததாலோ இல்லை, இங்கு தேர்வெழுதினால் பப்பு வேகாது என்பதே காரணம். 
//அதுவும் அடுத்த வரி விஷம், பெரியாரிய விஷம், “இன்று வடவன், இவனைப் போல் நீர்நிலை தேடி ஓடாது தன் தாய் மொழியான இந்தியில் தன் சொந்த மாநிலத்தில் செய்கிறான்”. இது பிராமணர்கள் மீது பெரியார் தொடங்கி வைத்த நாஜிப் பிரச்சாரம்.//
விஷம் கஷாயம் என்றெல்லாம் உங்களுக்கு சவுகரியமாக வளைப்பது திரிப்பதெல்லாம் எதற்காக. வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்கிற வாய்ப்பாடு என்ன RSS உடையதா. அதன் எதிர்மறைதானே இது. இது எப்படி பெரியாரிய விஷமாகும்.
//அதாவது அவர்களுக்குத் தமிழ் பிடிக்காது, நீச பாஷை, என்றெல்லாம் பரப்புரை செய்ததை கையில் எடுக்கிறீர்கள்.//
இவ்வளவு முட்டாளா சார் நீங்கள். நான் எந்த எழவையும் கையில் எடுக்கவில்லை. இவையெல்லாம் பிராமணன் / சமூகநீதி என்கிற வார்த்தைகளில் மிரண்ட மனத்தின் பிரமைகள். நான் செய்ததெல்லாம், AG’s என்கிற மத்திய அரசு அலுவலகத்தைப் பற்றி எழுதியிருந்த ஒரு ஃபேஸ்புக் பதிவு கண்ணில் பட்டதால் அதற்கு, மற்றொரு மத்திய அரசுத் துறையான என் அலுவலகத்தின் அடிப்படையில் எதிர்க் கருத்தை வைத்தேன் அவ்வளவுதான். 
//வடவர்கள் என்ன தாய் மொழி அபிமானமுள்ளவர்களா?// 
மொழி அபிமானமல்ல வெறியே உள்ளவன். இந்தி மட்டுமே ராஷ்ட்ரபாஷா என்பவன். இந்தி தெரியாத நீ எப்படி இந்தியன் என்று நானே கேட்கப் பட்டிருக்கிறேன் 85-86 கன்யாகுமரி – காஷ்மீர் சைக்கிள் பயணத்தின்பொது. இப்படிக் கேட்பதுதான் பாரத் ஜோடோ என நீங்கள் சொல்லும் Knit-Indiaவா என்று நான் திருப்பிக் கேட்டேன். கேட்டவன் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவனில்லை. மராட்டிக்காரன். அவனே இந்தி தெரியவில்லை என்றால் இப்படி எதிர்வினையாற்றினால் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட உபிக்காரன் என்ன சொல்வான். இதுவல்ல விவாதம் எனவே இதைப் பெரிதுபடுத்த விரும்பவில்லை. அவனுக்கு ஆங்கிலம் பேச வரவில்லை என்கிற தாழ்வுமனப்பான்மையில் பேசுகிறான் என்று எடுத்துக் கொண்டு போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான்.
//அவர்கள் மாநிலங்களில் ஆங்கில வழிக் கல்வி தமிழ் நாட்டில் பரவிய அளவு பரவவில்லை அவ்வளவே. தமிழ் நாட்டில் ஆங்கில வழிக் கல்வி பரவியதற்கு வேறு காரணங்களுண்டு. இன்று தமிழ் நாட்டிற்கு பிழைக்க வட மாநிலங்களில் இருந்து வருகிறார்களே தொழிலாளர்கள் அவர்களும் நீர் நிலைத் தேடித்தான் வருகிறார்கள். நான் அமெரிக்கா வந்ததும் அதற்காகத் தான். திரகலோடி திரவியம் தேடினான் தமிழன் அப்படீன்னு திராவிட மேடகளில் தமிழர் பெருமைப் பேசுவார்கள். பிராமணன் செய்தால் தவறா? -// 
சமூகநீதி என்று வைக்கப்பட்ட ஒற்றைப் பச்சைமிளகாய், ஒட்டுமொத்த விஷயத்தையும் பிராமண எதிர்ப்பாய் நான் எழுதியிருப்பதாக உங்களைப் பார்க்க வைத்து விட்டது. யார் நாஜி நானா நீரா. சந்தோஷம்.
//Aravindan Kannaiyan
Aravindan Kannaiyan Part 2:
”ஏதோ தங்கள் வீட்டில் இழவு விழுந்து விட்டதைப்போல் சுற்றியிருந்த, சில பிராமணப் பையன்கள், ‘என்ன இப்படி ஆகிவிட்டதே’ என தங்களுக்குள் மருகி அடித்த கூத்து உண்டாக்கிய கடுப்பு காரணமாகவே, இதை இப்படியே எழுதாமல், 1994ல் அப்படி ஜாதி மாற்றி எழுதினேன் என்பது வேறு விஷயம். ” — நான் அடிக்கடிச் சொல்வது தான், ஜெயகாந்தன் மட்டும் ‘ரிஷிமூலம்’ கதையை வேறெந்த சமூகத்தை வைத்து எழுதியிருந்தாலும் அவர் உயிருக்கு 
மேற்சொன்னவைகளுக்கும் சுரேஷின் பதிவின் மையக்கருத்துகளுக்கும் ஸ்நானப் பிராப்திக் கூட கிடையாது.//
என்ன எளவைய்யா இது. நான் என்ன சுரேஷ் பதிவுக்குப் பாய்ண்ட் டு பாய்ண்ட் கமெண்ட் போடவா இதை எழுதினேன். அதை முகாந்திரமாக வைத்து எனக்குத் தோன்றையதை எழுதினால். அதற்கு சம்மந்தமில்லாததை எழுதுகிறாய் என்று இது என்ன வகையான பாசிசம்.
ஜெயகாந்தன் பூச்சாண்டியெல்லாம் யாரிடம் காட்டுகிறீர். 
//உத்தரவாதம் இருந்திருக்காது. நீங்கள் வண்ணியர் பெண் தலித் ஆணோடு ஓடுவதுப் போல் கதை எழுதிப் பாருங்களேன். மாட்டீர்கள்.// 
இதைவிட மெண்ட்டல்தனமான அனுமானம் வேறு ஏதேனும் இருக்கக்கூடுமா. பெருமாள்முருகன் பிரச்சனை பூதாகாரமான பின்பு எழுதி, அதே காலச்சுவடில், இந்துத்வர்களுக்கு வைத்த இன்னொரு பச்சைமிளகாய்தான் ’கோபுரம்’ இஸ்லாமிய தீவிரவாதம் பற்றி எழுதப்பட்டதுதான் ‘தவிப்பு’ பிராமணனை தலித் இழிவுபடுத்தி அடிப்பதைப் பற்றிய கதைதான் ‘நிறம்’ அரசு அலுவலகத்திற்குள் மூன்று தலித்துகளுக்கிடையே நிகழும் நியாய அநியாயம் பற்றிய கதைதான் ’திறம்’ யாரிடம் பேசுகிறோம் என்பதை யோசித்துப் பேசும். என்னையென்ன உம் ஜெயமோகனைப்போல மூசுண்டை விற்கவந்தவன் என்று நினைத்தீரா.
//”காலச்சக்கரம் எப்போதும் நமக்கு சாதகமாக மட்டுமே சுற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஒருபோதும் சமூகநீதியாகாது.”– சுரேஷ் என்ன ஒருப்பக்கத்துக்கு சாதகமானச் சூழல் வேண்டுமென்றோ ஒரு ஜாதியினருக்கு வேண்டுமென்றோவா எழுதினார்?//

அடப் பைத்தாரா. நான் சொன்னதில் எங்கே ஜாதி இருக்கிறது. சமூகநீதி என்பதாலா. ஒரு காலத்தில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நாம் போனோம் இப்போது அவன் வருகிறான் என்று கூலாக எடுத்துக்கொள் என்றல்லவா சொல்ல வந்தேன். ஒ மாநிலங்களுக்கு இடைப்பட்ட விஷயங்களைப் பேசுகையில் சமூகநீதி என்று பேசக்கூடாதா அல்லது சமூகநீதி என்கிற பதப் பிரயோகமே விஷம் கிஷம் என்று கஷ்க்கத்தில் கைவைத்து காற்றெழுப்ப வைத்துவிடுமோ. நல்லா படிச்சிக் கிளிச்சீங்க போங்க.

//இந்தியில் அவர்கள் எழுதுவது பிரச்சனையில்லை. எங்கள் வாதம் தமிழனுக்கும் தமிழில் எழுத வாய்ப்புக் கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான் என்றால் சரிதான்.// அவ்வளைவு சம்பந்தப்படாதவைகளை எழுதிவிட்டு போனால் போகிறதென்று அவர் சொன்னை மையக்கருத்துக்கு வருகிறீர்கள்.//

என்ன வொரு ஈன புத்தி இருந்தால் நீர் இவ்வளவு சிறுமைப்படுத்தி விவாதிப்பீர். இதைச் சொன்னால் காழ்ப்பு வன்மம் என்று ஆரம்பித்து விடுவீர் இல்லையா.

//தமிழக அரசு அலுவலகத்தில் கட்டை சம்பளமாய் 10,000 வாங்கிக் கொண்டிருக்கும் கருப்புச் சிறுவர்களிடம் நானும் தலைப்பாடாய் அடித்துக் கொள்கிறேன், ஓய்வு நேரத்தில் செண்ட்ரல் எக்ஸைஸின் இன்ஸ்பெக்டருக்கான எக்ஸாம் எழுதத் தயாராகுங்கள் என்று. வெளிமாநிலத்துக்குப் போகவேண்டியிருக்கும் என்பதாலோ என்னவோ ஆர்வம் காட்டுவதாகவே இல்லை. // — இது உங்கள் ஊகம். அவ்வளவு தான். ஏன், வடக்கேச் சென்றால் இந்தி தெரிந்திருக்க வேண்டுமென்பதும் இந்தி ஒழிக்கப்பட்ட மாநிலத்திலிருந்து சென்றால் அது முடியாது என்று அறிந்த தயக்கமாகக் கூட இருக்கலாமே?//

அட்டைக் கருப்பனான எங்கள் கீழ் வீட்டு தலித் பையனுக்கு, இரண்டு வடநாட்டு ஐஐடிக்களில் கிடைத்தது, தைரியமாக அனுப்பி வையுங்கல் நல்ல எக்ஸ்போஷர் கிடைக்கும் என்று எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் திருச்சி RECக்குப் போனான். அவன் வடநாட்டைத் தவிர்த்ததற்கு மொழி மட்டுமே காரணமோ. இல்லை என்பதைத்தான் ஐஐடி தற்கொலைகள் நிரூபித்துக்கொண்டு இருக்கின்றன.

//அமேரிக்காவில் அமர்ந்து கொண்டு உள்ளூர் நிலவரம் ஒன்றுமே தெரியாமல். //– என் ஜாகை ஜகம் அறியும். இன்றைய தலைத் தொடர்பு இணைய உலகில் தஞ்சையில் உட்கார்ந்துக் கொண்டு அமெரிக்க அரசியலை அமெரிக்கர்களை விட ஆழமாக அறிந்தவர்களைப் பார்த்து இருக்கிறேன். இந்திய வரலாறு பற்றிய புத்தகங்களில் பல அற்புதமானவை அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் இருந்து தான் வெளி வருபவை.//

அமேரிக்காவில் அமர்ந்திருந்தால் எங்கள் அலுவலகத்தில் கடந்த 30 வருடங்களில் என்னென்ன நடந்திருக்கிறது என்பதுகூடத் தெரியுமோ. என்ன பேத்தல். 

Leave a Reply