October 30, 2016 maamallan 0Comment

இந்தப் பதிவின் முற்பகுதியில் சாரு பற்றி கூறியிருப்பவற்றை இணையத்தில் முந்தாநாள் பிறந்த குழந்தைகூட ஒப்புக்கொள்ளும். ஆனால் அவற்றிலிருந்து வந்து சேருமிடம் என்ன. இதற்கான ஆதாரம் சாருவின் மேற்கோள் குறிக்குள் இப்பதிவில் இருக்கிற வாக்கியங்களில் இருக்கிறதா அல்லது சாரு எழுதிய ஒட்டுமொத்தப் பதிவிலாவது இருக்கிறதா. 
//சமையலுக்கு மட்டுமாவது ஆள் போடலாம் என்றால் அங்கேயும் கலாச்சார அனாச்சாரம்.// 
இது சாருவின் கமெண்ட். இந்த அனாச்சாரம் என்பது பிராமண அப்பிராமணர் இருவருக்கும் பொதுவான கமெண்ட் என்பதை அடுத்துச் சொல்லப்படும் சம்பவம் உறுதிப்படுத்துகிறது.
//பிராமணப் பெண்கள் நான் வாங்கி வரும் மீனைக் கண்டு அலறி ஓடுகிறார்கள்.// 
//சரி, அப்பிராமணப் பெண்ணை அமர்த்தலாம் என்றால் அவர்கள் செய்யும் காரியங்களைப் பார்த்து அவந்திகா அலறி ஓடுகிறாள்.//
சரி அடுத்து வருவது என்ன யாருடைய வார்த்தைகள். அவந்திகா என்கிற சாருவின் பிராமண மனைவி கூறும் வார்த்தைகள்.
//சமைக்கும் போதே மூக்கு சிந்தினால் என்ன சாரு செய்வது?// 
பிராமண மனைவியின் இந்த வார்த்தைகளை அப்பிராமணரான சாரு அப்படியே அங்கீகரிக்கிறாரா. ஆமோதிக்கிறாரா ஆட்சேபிக்கிறாரா.
//மிளகாய் நெடியில் மூக்கிலிருந்து ஜலம் ஓடியிருக்கும் அம்மு என்பேன்.// 
சாருவின் இந்த சமாதானத்துக்கு சாருவின் மனைவி என்ன சொல்கிறார். எப்படி ஆட்சேபிக்கிறார்.
//அது சரி சாரு, கையை உடனே சோப்புப் போட்டுக் கழுவ வேண்டாமா? அப்படியே புடவையில் சிந்தி விட்டு அதே கையால் சமைப்பதா?// 
இது ஐயங்கார் மாமியின் ஆதங்கம். சரி இதே காரியத்தை பிராமண மாமி செய்திருந்தாலும் அவர் சகஜமாக ஏற்றுக்கொண்டு இருப்பாரா இல்லையா என்பதெல்லாம் ஊகத்தின்பாற்பட்டது. நம் சட்ட மேதை தரவுகளின் அடிப்படையில் மட்டுமே பேசக்கூடியவர். போகவும், பிராமண சமையல்காரி மூக்கு சிந்துகிறவராக இருக்கமாட்டார் என்று ஒரு பிராமணப் பெண்மணி மூட நம்பிக்கையில் இருக்க சாத்தியமுண்டுதான். ஆனால் நம் சட்ட மேதையின் டார்கெட்டே சாருவின் பிராமணீய சிந்தனைதானே. அப்படி ஏதும் இந்தப் பதிவில் சாரு சார்ந்து இருக்கிறதா என்பதே கேள்வி.
இது போன்ற சிந்தனைதான் “100% பிராமணா ஸ்வீட்ஸ்” என்று விளம்பரம் செய்யத் தூண்டுவது என்று தம் சிந்தனை முடிபாகப் பதிவை முடிப்பது சாருவின் ஐயங்கார் மனைவி பற்றிய விமர்சனமாக அல்லவா இருந்திருக்க வேண்டும்.
நுண்ணறிவின் ஊற்றுக் கண்ணான இந்த அஃ மார்க் ஆல் பர்பஸ் அங்கிள் பெண்களைப் பற்றி அப்படியெல்லாம் கனவிலும் விமர்சித்துவிடமாட்டார்.  
ஆக சாருவின் மனைவிக்கு உரித்தான சாத்துப்படியையும் ‘எழுத்தாளனாக’ இருப்பதால் சாருவே வாங்கியாக வேண்டும். 
எது எழுத்தாளனின் கூற்று, எது பாத்திரத்தின் மன ஓட்டம். எது எழுத்தாளனின் விமர்சனம். என்பவற்றையெல்லாம் பிரித்துப் பார்க்கும் அறிவற்று ஒரு கூட்டமே நிறம் சிறுகதைக்காக என்னைத் தூற்றித் திரிந்தது இணைய வரலாறு. 
அதில் வரும் பிராமண கதாபாத்திரத்தின் மன ஓட்டத்தை எழுத்தாளனின் நிலைப்பாடாகக் கொள்வதைவிட அபத்தம் வேறு இருக்க முடியுமா. இதே கதையை பிராமணரல்லாத வேறொருவர் எழுதியிருந்தாலும் இணைய இலக்கிய ஜாம்பவான்களுக்கு இப்படியேதான் தோன்றுமா அல்லது இதே போன்ற நிலைப்பாடைத்தான் எடுப்பார்களா. 
ஒரு விஷயத்தை அம்பலப்படுத்தப் புனைவின் வழிகள் அநேகம். அக்கினிபுத்திரனின் வானம்பாடிகள் வகையறா இதை துண்டு நோட்டீஸு போல எழுதி வைக்கும்.
ஒரு சாதாரண பிராமணன், அவன் மன உலகிற்குள் இந்த வெளியுலகைப் பற்றிய எந்த ஒட்டுறவுமற்று எப்படி சிந்திப்பான் என்பதை இது போல் தத்ரூபமாய் சித்தரிக்க இங்கே எத்தனை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். என்னைப் போல் உள்ளிருந்தே கொல்லும் வியாதிக்கு எல்லா பக்கமிருந்தும் இடி. 
அடுத்து, ஒரு கதையில் ’ஒரு’ தலித் பொறுக்கித்தனமாக நடந்துகொள்வதாய் சித்தரிப்பதே அநியாயம் என்கிற அபத்தமான கூக்குரல். அதை ஒட்டுமொத்த தலித்துகளுக்கும் எதிரானது என இலக்கியம் அறிந்த எந்த தலித்துமே எடுத்துகொள்ளாதபோது, தலித்தல்லாதவர் தாவிக் குதிப்பதைக் காமெடியாகவன்றி வேறு எப்படி எடுத்துக் கொள்வது. 
தலித் எனப் பொதுவெளியில் காட்டிக் கொண்டால் எங்கே பிராமண பிராமணத்திகளுடன் ஃபேஸ்புக் மூலமாக நூல்விட்டு நேரடியாய் ஈஷிக் கொள்ள முடியாது போய்விடுமோ என்று பிராமண சீந்தலுக்காக ஏங்கித் திரிந்தபடி, நேரில் கண்ட ஒரே சந்தர்ப்பத்தில் ’நான் பறையன் சார்’ என்று சொல்லிகொண்ட இந்த இலக்கிய மேதைக்கு, துளசிச் செடியை வளர்க்கப் பார்த்த முயற்சியில், ஊர் பேர் தெரியாத செடி உரம்பெற்று வளர்வதில், பிராமண அம்மா மகனுக்குள் வரும் மோதல்கள் பற்றிய இந்த செடி சிறுகதை கி.மு காலத்துப் புண்ணாக்காகத் தோன்றுகிறது. 
அந்த ஊர் பேர் தெரியாத செடியைத் தூக்கி எறி, என அம்மாவானவள் சாப்பிட மறுத்து அடம் பிடிப்பதில், அம்பேத்காரின் கோரிக்கைக்கு எதிரான காந்தியின் உண்ணா விரதம் இருப்பதை அறிய தலித் சான்றிதழ் வைத்திருப்பதொன்று மட்டுமே தகுதியாகிவிடுமா என்ன. கொஞ்சமாவது இலக்கியத்தின் நுட்பங்கள் தெரிந்திருக்க வேண்டாமா. 
//Ambedkar himself had originally felt that with universal suffrage, reserved seats would be sufficient. But universal suffrage was not given, and the issues at the conference revolved around separate electorates. Gandhi was reconciled to giving these to Muslims; he had already accepted their identity as a separate community. Not so for Dalits. When the Ramsay MacDonald Award was announced giving separate electorates to Dalits, he protested with a fast to death. And this brought him into direct confrontation with Ambedkar.
For Ambedkar, the problem was simple. If Gandhi died, in villages throughout India there would be pogroms directed against Dalits and a massacre. Ambedkar surrendered, and the Poona Pact formalized this with reserved seats for Dalits – more than they would have had otherwise, but in constituencies now controlled by caste Hindus.
Ambedkar wrote, many years later, in What Congress and Gandhi have Done to the Untouchables, “There was nothing noble in the fast. It was a foul and filthy act. The Fast was not for the benefit of the Untouchables. It was against them and was the worst form of coercion against a helpless people to give up the constitutional safeguards [which had been awarded to them].” He felt that the whole system of reserved seats, then, was useless. For years afterwards the problem of political representation remained chronic. Ambedkar continued to ask for separate electorates, but futilely. By the end of his life, at the time of writing his “Thoughts on Linguistic States” in 1953, he gave these up also and looked to something like proportional representation. But the Poona Pact remained a symbol of bitter defeat, and Gandhi from that time on was looked on as one of the strongest enemies of the Untouchables by Ambedkar and his followers.// 
இதைப் படித்துவிட்டு இந்தக் கதையை எழுதவில்லை. இப்போது இந்தக் கட்டுரைக்காகவே இதை கூகுளில் தேடி எடுத்தேன். ஆனால் இந்த விஷயம், செ.கு.தமிழரசன் மூலமாக என் கல்லூரிக் காலத்திலேயே தெரிந்திருந்த ஒன்றுதான். 
கேள்விப்பட்டவையும் அனுபவங்களுமாக உள்ளூர பல்லாண்டுகளாய் உருண்டு திரண்ட வண்ணம் இருக்கும் ஏதேதோ விஷயங்கள் கலாதீதம் வெடிதெழும் தருணத்தில் படைப்பாக உருவெடுக்கிறது. படித்து வருவதல்ல கலை. படிப்பதால் மட்டுமே ஒருவன் கலைஞனாகிவிட முடியாது. அதிகபட்சம் தீவிர உழைப்பால் ஒருவன் எழுத்துக் கைவினைஞன் ஆக வாய்ப்புண்டு. முயற்சி தன் கூலி தரும். சம்பளம் தருமென்று வள்ளுவனே கூட உறுதியளிக்கவில்லை.
கதைக்குள் இருக்கும் இந்த உள்ளடுக்கெல்லாம் இந்த தலித் இலக்கிய மேதையின் தலைக்கு மீறிய சமாச்சாரமாக இருப்பதற்காக, எழுத்தாளன் புண்ணாக்காகிவிடவேண்டும் என்பது இனையத்தின்  விதி.
தவிப்பு 
கைபேசியில் நெடுநேரம் பேசிய, காலச்சுவடு கதை வாசிப்பு பொலிட் பீரோ உறுப்பினர் கூறியதையும் இங்கே எழுதி விடுவது, எனக்கிருக்கும் மிகச்சில இலக்கிய வாசகர்களில் ஓரிருவருக்கேனும் உபயோகமாக இருக்கக்கூடும். 
உங்க கதையைப் படிச்சேன். கதையோட இறுதிப் பகுதி. மெலோ ட்ராமாவா இருந்துது. தீவிரவாதிக்கு மனைவி குழந்தைங்கிற உணர்வெல்லாம் இருக்குமா என்ன. தன்னால அவங்க டார்ச்சர் படக் கூடாதுங்கறதுக்காக, ஒரு தீவிரவாதி உண்மையைச் சொல்லிருவானா. காட்டிக் குடுத்துருவானா என்ன. அதனாலதான் கதையை பிரசுரிக்க வேண்டாம்னு மெயில் அனுப்பி வெச்சேன் என்றார். 
அதுதானே அய்யா தீவிரவாதியும் உள்ளூர மனுசனாதான் இருக்கிறாங்கிறதுக்கான அடையாளம். அது தானே அய்யா கதையே என்றேன். 
காலச்சுவடின் இந்தக் கதை வாசிப்பாளரை ஒப்பிட்டால் விகடன் ஆசிரியர் குழு எவ்வளவோ தேவலாம். அவர்கள் பயந்தது நடைமுறைச் சிக்கலை எண்ணி. 
எனக்குத் தனிப்பட்ட முறைல இந்தக் கதைல எந்தப் பிரச்சனையும் இல்லை. நல்ல கதை சார் ஆனா, மசூதில தொழுவும்போது இது நடக்குது, அங்கேந்து அவன் பிராத்தல் ஹவுஸுக்குப் போறான்ங்கறதெல்லாம் கொஞ்சம் சென்ஸிடிவ் விஷயம் சார். 
என்னங்க பத்தம்பது பேர் விகடன் ஆபீஸ் முன்ன நின்னு கோஷம் போட்டு கண்டனம் தெரிவிப்பாங்க. தெரிவிச்சிட்டுப் போகட்டுமேங்க. 
இல்ல சார் இணையத்துல வெச்சி கும்மிடுவாங்க சார். 
இதுவே தீவிரவாதம் போல இல்லை. இணைய தீவிரவாதம். 
அதிலும் நான் சம்மந்தப் பட்டது என்றால் அரலூஸு ஆப் பாயிகள் வேறு சேர்ந்துகொள்ள இன்னும் கலர்ஃபுல்லாக இருக்கும். 
ஆனால், இதை எந்தப் பத்திரிகையும் பிரசுரிக்காது போய் இணையத்தில் என் பிளாகிலேயே வெளியிடப்பட்டாலும் எதுவுமே ஆகாது என்பதே என் நம்பிக்கை – கதை எழுதப்பட்டிருக்கும் விதம் காரணமாக, 
ஐந்து வேளை தொழுதாலும் ஒரு ஹார்ட்கோர் தீவிரவாதி, அடிப்படையில் கிரிமினல். அவனுக்கு இலக்குதான் முக்கியம். அதில் வெற்றிபெற பிராத்தல் ஹவுஸில் பதுங்கி இருப்பது, இண்டெலிஜென்ஸ் ஏஜென்ஸிக்கு சந்தேகத்தை உண்டாக்காது என்றால் கண்டிப்பாக அந்த இடத்தைப் பயன்படுத்திக்கொள்ள அவன் ஒருபோதும் தயங்கமாட்டான். 
என்ன வேடிக்கை என்றால் கதையில் இந்த கேரெக்டர் கண்ணுக்கே தெரியாத பாத்திரம். இவர்களின் நெட்வொர்க்கைக் கண்டுபிடிக்க, பிடிபட்ட – அடிபட்டு உதைபட்டு சித்திரவதைக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் பாத்திரமோ இந்த அளவுக்கு நேரடித் தீவிரவாதியுமில்லை. ஆனால் இந்த நுட்பங்களை எல்லாம் கவனிக்க வாசகனுக்குப் பயிற்சி வேண்டும். இங்கே கதையைப் பிரசுரத்துக்குத் தேர்ந்தெடுக்கும் அதி உயர் அதிகாரம் பெற்றவர்களுக்கே துரதிருஷ்டவசமாக நுண்ணர்வுக் கொம்புகளில்லை.
இலக்கியத்தை இணைய தீவிரவாதிகளிடமிருந்தும் இக்கால இலக்கியப் பத்திரிகைகளிடமிருந்தும் கப்பாற்று இறைவா என வேண்டுவதைத் தவிர எழுத்தாளனுக்கு வேறு கதியில்லை.

Leave a Reply