October 29, 2016 maamallan 0Comment

இது, ராஜ ராஜேந்திரன் என்னும் ’கண்ணிய மொழியில்’ எழுதி கனவான் வேஷம் கட்டிக்கொள்ளும் இணையத்தின் சிந்தனைச் சிற்பியான இன்னொரு காலி டப்பா, சாருவின் TAG செண்ட்டர் நிகழ்வைப் பற்றி ஃபேஸ்புக்கில் எழுதியிருப்பது.
என்ன சம்பவம் நடந்தாலும் அதை வேறு ஏதாவதொன்றாக ஆக்கி அலப்பறை செய்து விளம்பரமாக்கிக் கொள்பவர் சாரு. எனவே, சாருவின் சர்க்கஸ்களை நன்கு அறிந்த எவரும் அவரை சத்தியசந்தர் என எண்ணுவதும் இல்லை அவர் வார்த்தைகளை அப்படியே அச்சு அசலான உண்மை என்று சீரியஸாக எடுத்துக் கொள்வதும் இல்லை.
ஆனால் சாருவை இழிவு படுத்த இந்த மூஞ்சூரு செய்திருக்கும் காரியத்தைப் பாருங்கள். 
டாக்டர் ஸ்ரீராம் சோமசுந்தரம் என்கிற முழுப் பெயருடைய ஸ்ரீராம் எனும் இளைஞரின் மூதாதையரில் எவரும் எந்தத் துறையிலும் பிரபலங்களே இல்லை. இவரைப் புதுமைப் பித்தனின் பெயரராக ஆக்கிவிட்டது, ராஜ ராஜேந்திரன் என்கிற இந்தப் பெண்ணீயப் பெரும் பொடுகு. 
இந்த மூஞ்சுரு மண்டையில் இந்தப் ’புதுமைப்பித்தனின் பெயரன்’ என்கிற கண்டுபிடிப்பு எப்படி சுரந்தது என்று வியப்பாக இருக்கிறதா.
//என்னுடைய நண்பர்களில் ஒருவர் ஸ்ரீராம். நாய்கள் நலம் பேணுவதில் நாங்கள் ஒன்று சேருவோம். நான் எழுதிக்கொண்டிருக்கும் தமிழ் இலக்கிய முன்னோடிகள் குறித்த கட்டுரைக்காக ஒருமுறை அவரோடு பேச வேண்டியிருந்தது. அவர் மௌனியின் பேரன். அப்போது குறுக்கிட்ட ஸ்ரீராமின் புதல்வி (பள்ளி மாணவி) “நம் தாத்தா ஒரு எழுத்தாளரா?” என்று கேட்டாள். //
இந்த ஸ்ரீராம் பற்றி எழுதியிருப்பதும் இவரது மகள் பற்றி எழுதியிருப்பதும், ராஜ ராஜேந்திரன் என்கிற இந்த இணைய சிந்தனைச் சிற்பியின் தலைக்கு மேல் போய்விட இதனுடன் வெளியிடப்பட்ட இந்தப் படம்தான் பாவம் இந்த மூஞ்சூரின் மூளையில் நிரந்தரமாகப் பதிந்துவிட்டது. 
சாருவின் ‘தற்காலிக வலதுகை’ என மூஞ்சூருவால் குறிப்பிடப்படும் ஸ்ரீராம் டாக்டர் என்பது மட்டுமன்று, இந்த ஸ்ரீராமுக்கு இன்னும் கல்யாணமே ஆகவில்லை என்பதே உண்மை. 
உண்மையெல்லாம் யாருக்கு வேண்டும். அதிலெல்லாம் இந்த மூஞ்சூருக்கு உண்மையான நாட்டமிருந்தால், வஞ்சத்தால் சூழ்ச்சி செய்து இருவரை ஜெயிலுக்கு அனுப்பிய சின்மயி விவகாரம் முதல், உப்புப் பெறாத ஒரு வாய்த் தகறாரை கொலைமுயற்சி போல் ஃபேஸ்புக்கில் சித்தரித்து 16 நாட்கள் ஜெயிலில் போட்டதைப் பெரிய பெண்ணீய சாதானையாய் நுண்ணர்வற்று பீற்றித் திரியும் ஓலா விவகாரம் வரை சத்தியத்தின் பக்கமல்லவா நின்றிருக்கும்.
படித்து அல்ல இப்படிப் படம் பார்த்து அரைகுறையாய்ப் புரிந்து கொள்ளும் தரத்தில் இருக்கும் இது போன்ற ஆப் பாயில்கள் சரிக்கு சமமாய் என்னுடன் மோத ஆசைப்படுவதுதான் ஆகப் பெரிய காமெடி. 
சாருவை இழிவுபடுத்த வேண்டும் அதற்குத் தேவையே இல்லாமல் புதுமைப் பித்தனையும் சேர்ந்தே இழிவுபடுத்தினாலும் பரவாயில்லை என்கிற அளவுக்கு வாழ்கிற மாபெரும் இலக்கிய உறை இது. அதாவது புதுமைப் பித்தனின் பேரன் சாருவின் ‘சோற்றுக் கையாய்’ இருக்கிறார் என்று சொல்கிற, சாருவின் முன்னாள் அல்லக்கைக் கரும்புலியாய் இருந்த இந்தக் கபோதியின் காழ்ப்பு எப்படி இருக்கிறது பார்த்தீர்களா.
எந்த ஸ்ரீராம் என்பதோ அவர் மெளனியின் பேரனா புதுமைப்பித்தனின் பேரனா என்பதோ இதற்கு முக்கியமில்லை. சாருவைத் தாக்கவேண்டும் அதுதான் முக்கியம். இது காழ்ப்பில்லாமல் வேறு என்ன. இதை ஏன் கேட்கிறேன் என்றால்,
ஓலா சம்பவத்துக்கு முன் அவரைப் பற்றி ஒரு வார்த்தை கூட எழுதியிராத என்னை, விலாசினி ரமணி மீதான காழ்ப்பிலேயே அந்த ஓலா டிரைவரை நான் ஆதரிக்கிறேன் என்று அவதூறாய்க் குறைத்த நாய்களின் கும்பலில் முன்னணியில் நின்று குரைத்த நாய் இது. 

Leave a Reply