October 2, 2016 maamallan 0Comment

இது சமீபத்தில் பெங்களூருவில், சென்னையில் கூட இல்லை பெங்களூரில் ஒரு பெண்ணிடம் ஏதோ ஒரு ஓலா ஓட்டுநர் தவறாக நடந்துகொண்ட நிகழ்ச்சியைப் பற்றிய செய்தி. இதற்கு இந்த அம்மாள் சென்னையில் இரண்டு மாதம் முன்பாக கூலி கொடுக்காததால் ஏற்பட்ட வாய்த் தகறாரினால் கைதாகிச் சிறைச் சென்றவனுக்கு உதவியவர்களைச் சாடுகிறார்.
பாவம் முத்திவிட்டது, நல்ல மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று காட்டுங்கள் என்று இவரது குடும்பத்தாரிடம்தான் கூற வேண்டும். 
ஏனென்றால் ஜூலையில் சென்னையில் நடந்த சம்பவம் பற்றி, சம்மந்தப் பட்ட நபர், அந்த டிரைவரைப் பற்றி, அவர்களது ஃபேஸ்புக் கவுன்சிலிடம், July 24 at 1:13am அன்று என்ன கூறுகிறார் என்று பாருங்கள். 
//ட்ரைவரின் மீது நடந்ததைக் கடந்து ஒரு அவதூறும் வைக்கவில்லை.// 
https://www.facebook.com/rajagopal.subramaniam.1/posts/10153734636882876
அந்த டிரைவர் மீது, பாலியல் ரீதியான துன்புறுத்தல் குறித்த புகார் எதுவுமே, சம்மந்தப்பட்ட நபராலேயே வைக்கப்படாதபோது, அந்த நிகழ்வை, நாட்டில் நடக்கும் ஒவ்வொரு ரேப்பையும் அந்த ஓட்டுநரின் மறுவாழ்வுக்காக உதவிய, பணமாக செய்த உதவிக்கு பெயர் தெரிவித்துக்கொள்ளா விரும்பாத நல்ல உள்ளங்கள் மீது, ரேப்பை ஆதரிப்பவர்கள் என்று அவதூறு செய்ய பயன்படுத்தும் இந்தப் பெண்மணியை, மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதைத் தவிர வேறு என்னவென்று சொல்வது. இதைக் கவனிக்காது விட்டால் இன்னும் ஜாஸ்தியாய்த்தான் ஆகும். இவரை இவரது கணவர்தான் ஜாக்கிரதையாய் பார்த்துக்கொள்ள வேண்டும். 
சரி இவர்தான் பாவம் இப்படி முத்திவிட்டார் என்றால், இதற்கு, முத்தான கமெண்ட் போட்டிருக்கும் இந்து பத்திரிகையின் இந்த முத்தின முத்தை என்னவென்று சொல்வது. 
அதாவது ஊரில் எந்த டிரைவரெல்லாம் ரேப் செய்ய முயற்சிக்கிறானோ அல்லது பெண்களிடம் யாரெல்லாம் பாலியல்ரீதியாய் தவறாக நடந்துகொள்கிறானோ அவனுக்கெல்லாம் மறுவாழ்வளிக்க பணம் திரட்டும் கமிட்டிக்கு நான் சேர்மனாக இருக்க வேண்டுமாம். இது இவர்கள் வீட்டு டிரைவருக்கும் பொருந்துமா. அல்லது இந்து பத்திரிகையில் இருக்கும் டிரைவர்களுக்கும் பொருந்துமா. அல்லது இந்து பத்திரிகை அலுவலகத்தில் இப்படி எதாவது ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தால் அதற்கும் நங்கள்தாம் காரணமாக ஆக்கப்படுவோமா. அதாவது, தனக்கு சேரவேண்டிய கூலியைக் கேட்ட டிரைவர் அநியாயமாக சிறை சென்று வாழ்விழந்தானே பாவம் என்று திரட்டப்பட்ட நிதிதான் சென்னை, பெங்களூரில் இருக்கும் எல்லா ஓலா டிரைவர்களையும் கற்பழிக்கத் தூண்டிக்கொண்டு இருக்கிறது என்கின்றன இரண்டு முத்தல்களும். 
போஸ்ட் போட்டவர், ஏப்ரல் 20 அன்று,  24 வருட திருமண வாழ்வை வெற்றிகரமாக முடித்தவர் என்று சொல்லிப் போஸ்ட் போட்டுக்கொண்டு ஏகப்பட்டபேரால் வாழ்த்தப்பட்டவர். வயது கொடுத்த முதிர்ச்சியையோ அல்லது வாழ்வின் அனுபவும் கொடுத்த குறைந்தபட்ச முதிர்ச்சியையோக் கூட காணவில்லையே இவரிடம். 
மேற்படி கமெண்ட் போட்ட அம்மாளும் ஒன்றும் முதிராச் சிறுமியல்ல. இந்து பத்திரிகையில் அவ்வப்போது அறிவியல் தொடர்பான கட்டுரைகள் எழுதுபவரென்று கேள்வி. சம்மந்தா சம்மந்தமில்லாதுக்கெல்லாம் எல்லோர் மீதும் சகட்டுமேணிக்கு சாணியடிப்பது அளவின்றி ஆன வயதுக்காவது பொருந்துமா. 
இது, அந்த ஓலா ஓட்டுநர் பெயிலில் வெளியில் வந்த பிறகு, இந்த அம்மிணி வேலை பார்க்கும் இந்துவே வெளியிட்ட செய்தி. 
11ஆம் தேதி ஃபேஸ்புக் அலறலைப் பார்த்து அலறிப்புடைத்து ஓடிவந்து உடனடியாய் செய்தியை வெளியிட்ட கற்றுக்குட்டி ரிப்போர்ட்டர், அந்த டிரைவரைத் தொடர்புகொண்டு இந்தச் செய்தியையும் சேர்த்து வெளியிட்டிருந்தால், 14ஆம் தேதி அந்த டிரைவர் கைதே ஆகியிருக்கமாட்டார் என்பதே உண்மை. 12ஆம் தேதி சம்மந்தப்பட்ட நபரை சந்தித்த கற்றுக்குட்டி, சம்மந்தப்பட்ட நபரிடமே டிரைவரின் கைபேசி எண்ணைக் கேட்டிருக்கலாம், ஒலா நிறுவனத்திடம் கேட்டிருக்கலாம், அல்லது அந்த ஒலா வண்டியை புக் செய்தவரிடம்கூடக் கேட்டிருக்கலாம். ஆனால் என்னவோ அவசரம் பாவம் இந்து கன்றுக்குட்டிக்கு, ஃபேஸ்புக்கில் பப்ளிக்காக பொடப்பட்டு இவ்வளவு பரபரப்பாகி இருக்கிறதே வேறு எதாவது பத்திரிகை முந்திக்கொண்டுவிட்டால் ‘ஹாட் ஸ்டோரி’ அபேஸ் ஆகிவிடுமே என்கிற ஆத்திர அவசரம் அந்த ஓலா டிரைவரின் வாழ்க்கையில் விளையாடிவிட்டது. 
இதுதான் இந்து பத்திரிகையில் அறிவியல் கட்டுரை எழுதுபவரின் தரம் பொகட்டும் என்று பார்த்தால், இந்த அம்மாளின், கற்பழிப்பாளர்களுக்கு உதவி நிதி திரட்டும் கமிட்டிக்கு என்னைச் சேர்மனாக்கும், மேற்குறிப்பிட்ட கமெண்ட்டுக்கு, இரண்டு அம்மாள்கள் லைக் போட்டிருக்கிறார்கள். 
அதாவது கற்பழிப்பாளர்களுக்கு உதவும் கமிட்டிக்கு என்னைச் சேர்மனாக நியமிக்கும் இந்து பத்திரிகையாளரின் பரிந்துரையை இவர்களிருவரும் ஆமோதிக்கிறார்கள். கிட்டத்தட்ட என்னை ரேப்பிஸ்ட்டுகளின்  தலைவன் என்கிறார்கள். நான் செய்த காரியமெல்லாம் கூலி மறுக்கப்பட்டவனுக்கு நிதி திரட்டியதைத் தவிர வேறில்லை. எனக்கும் ரேப்புக்கும் என்ன சம்மந்தம். ஒரு உளுவுளாயி புகாரைக் காரணம் காட்டி, 66Aவையே உச்சநீதிமன்றம் நிராகரித்த பின்பும், ஏதோ ஐஎஸ் பயங்கரவாதிபோல என் ஃபேஸ்புக் கணக்கை, முடக்கிவைத்திருக்கும் சைபர் கிரைம் போலீஸ் சீர் தூக்கிப் பார்க்க வேண்டும். 
முன்னவர் சிறு வயதிலேயே பெரிய கம்பெனியில் பெரிய பதவி வகிப்பவர். 
தாம் வகிக்கும் பதவிக்கு இது அழகா என்பதை அவர்தான் முடிவு செய்யவேண்டும். இந்த அற்ப ஃபேஸ்புக் பிரச்சனைக்காகப்போய் அவரது கம்பெனிக்கு புகார் எழுதிக்கொண்டிருக்கிற அல்லது போலீஸில் புகார் செய்து, அவர் வேலைக்கு எதாவது பாதிப்பு உண்டாக்கலாமா என்று பார்த்துக் கொண்டிருக்கும் அல்ப்பமில்லை நான். இது அழிக்கும் கையல்ல. முடிந்தவரை வாழவைக்கும் கை. நான் வேலை செய்த எந்த அலுவலகத்திலும் இருக்கும் கக்கூஸ் கழுவும் ஊழியர்களிடம் யார் வேண்டுமானாலும் விசாரித்து சரி பார்த்துக்கொள்ளலாம். 
பின்னவர் பிரக்யாதி தமிழ் இலக்கிய உலகம் அறிந்தது. 72 வயதில் எப்படியாவது பீடாதிபதியாகிவிடும் பேராசையில், கிடைத்தவை பீடைகளாக இருந்தாலும் பரவாயில்லை என்று ஆதரித்து செய்துகொண்டிருக்கும் சமூக சேவைக்கே இன்னொரு கிராண்ட்டை ஃபோர்டு பவுண்டேஷன் அளிக்கலாம்.
பாவப்பட்ட ஆண்ட்டீஸைப் படுத்தாதீர் ஓய், இதுல பெரும்பாலான பேருக்கு நீர் என்ன சொல்றீர்னே புரியாது. அதுங்க எதோ சம்மந்தமில்லாம கெக்கெபிக்கேனு நானும் ஆர்க்யூ பண்றேன் பார்னு ஆத்துல பேசறாப்பல பேஷிண்டு இருக்கும்கள். இந்த அம்மாமிகளண்டயெல்லாம் சரி சரி நீ சொல்றதுதான் கரெக்ட்டுன்னுட்டு லைக் போட்டுட்டு நல்ல பேர் வாங்கிண்டு போவியா என்றார் நண்பர். அவர்தான் சரியோ என்று வர வர தோன்றத் தொடங்கிவிட்டது. 
பொறுமையாக பதில் சொன்ன, பெருந்தேவியும் காலச்சுவடு கண்ணனுமே ஏண்டா விளக்கம் கொடுக்கப்போனோம் என்று  அறிவுத் திறத்தை சமாளிக்க முடியாது ஓடியே விட்டார்களே. என்ன ஏது எனத் தெரிய இங்கே கிளிக்கவும்
இப்போது சொல்லுங்கள், நீங்களெல்லாம் பாவப்பட்ட ஆண்ட்டீஸா அல்லது பாவம் பட்ட ஆண்ட்டீஸா என்று. அதைத்தானே ஒவ்வொரு ரேப் அல்லது அதற்கான முயற்சி அல்லது பாலியல் அத்துமீறலின்போதும், எங்களைப் பழித்துப் பழித்து நிரூபித்துக்கொண்டு இருக்கிறீர்கள். 
இதை உங்கள் கணவர் பிள்ளை குடும்பத்தாரிடம் படிக்கக் கொடுங்கள். அவர்கள் சொல்லட்டும் நான் சொல்வதில் கொஞ்சமேனும் நியாயம் இருக்கிறதா இல்லையா என்று.

Leave a Reply