September 26, 2016 maamallan 0Comment
பிறந்த வீட்டின் உறவு இன்னமும் நீடித்துக்கொண்டிருக்கும் ஐந்தாறு அலுவலக நண்பர்களுக்கு வெகுமதியாக சில லட்சங்கள், DDயாக வந்திருந்தன. அவற்றைப் பணமாக வங்கியில் மாற்றி, ருபயாகப் பார்க்கும் முன், ரெவின்யூ ஸ்டாம்பில் கையொப்பமிட்டு பிறந்த வீடான பூர்வ அலுவலகத்தில் கொடுத்து, சர்வீஸ் புக்கில் பதிவு செய்தாக வேண்டும். 
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒட்டுமொத்த, 30-35 ஆண்டு ஊழியக் காலத்துக்கும் சேர்த்து, வெகுமதி  20 லட்சம் என்று நியமிக்கப்பட்டு உள்ளது. இந்தத் தொகை ஒராண்டுக்கு முன்னதாகத்தான்  15 திலிருந்து 20 லட்சமாக உயர்த்தப்பட்டது. 
சேகரித்த ஆவணங்களுடன் பிறந்தவீடான, செண்ட்ரல் எக்ஸைஸ் அலுவலகத்துக்குச் சென்றேன். 
எல்லார் சர்வீஸ் புக்கையும் எடுத்து லிமிட்டுக்குள்ள இருக்கான்னு பார்த்துடுங்க என்றார் அங்கிருந்த அதிகாரி. 
பாருங்க மேடம். ஆனா ஒருத்தர் ரெண்டு பேரு கூட 15 லட்சத்தைத் தொட்டிருந்தாலே அதிகம். 2013ல போன நானே இப்பதான் 12 லட்சம் கிட்ட வந்திருக்கேன். மத்தவங்கள்ளாம் எனக்கு அப்பறம் வந்தவங்கதான் மேடம். 
எதுக்கும் ஒரு தடவை நாங்க பாத்துடறோமே. 
தாராளமா பாருங்க. தகவலுக்கு சொன்னேன். 
நான் கொண்டு சென்றிருந்த ரிவார்ட் DDகளுக்குரிய அதிகாரிகளின் சர்வீஸ் புக்குகள், அலமாரியிலிருந்து எடுத்து ஒரு பக்கமாக அடுக்கப்பட்டன. 
ஒருவர் ஒன்றை எடுத்துப் புரட்டிப் பார்த்துவிட்டு, மேடம் 2015க்கு அப்பறம் எட்ரியே இல்லையே என்றார்.
மேடம் இந்த மார்ச்சுல இதே போல, எல்லார்க்கிட்டையும் கையெழுத்து வாங்கி நானே உங்ககிட்டக் கொண்டாந்து குடுத்தேனே ஞாபகமிருக்கா. அதுல, கிட்டத்தட்ட 30-35 கேசுக்கு சேர்த்து எனக்கே 3.50 லட்சம் கிட்ட வந்திருந்துதே. வேணும்னா என் சர்வீஸ் புக்கை எடுத்துப் பாருங்க. 
ஆமாம். 
இல்லை சார் இவர் 15 லட்சத்தைத் தொட்டுட்டார்னு சொன்னீங்க ஆனா 4 லட்சத்துக்குதான் எண்ட்ரியே இருக்கு. 
மேடம் அவர் பத்து வருஷம் முன்னாடி ஒரு அஞ்சு வருசம் இதே ஆபீஸ்ல, திருச்சி தூத்துக்குடினு டெபுடேஷன்ல இருந்துருக்கார். அப்ப அவர் போட்டதெல்லாம் டிரக்கு கேஸ்கள். எல்லாத்துக்கும் சேர்த்தே ஒரு லட்சம் ரிவார்ட் வந்திருந்தாலே ஜாஸ்தி அந்த எண்ட்ரி இருக்கானு பழைய புக்குல பாருங்க. 
ஆமாம் 2000ல எண்ட்ரி இருக்கு. ஆனா எல்லாத்தையும் சேர்த்தாலும் இவருக்கு 4 லட்சம் கூட வரலையே. நீங்க 15ங்கறீங்க.
அவருக்கு ரிவார்டா வந்த அமெளண்ட்டையெல்லாம், தேதிவாரியா ஃபைல் நம்பர்வாரியா பெரிய எக்ஸெல் ஷீட்ல லிஸ்ட்டா போட்டு, நிலம் வாங்கினதுக்கு அதை ஸோர்ஸா காட்டி, இண்டிமேஷன் லெட்டரே குடுத்திருக்கேன்னாரே நல்லா பாருங்க மேடம்.  
அதை விஜிலன்ஸுக்குக் குடுத்துருப்பார் இதுல இல்லையே. 
மேடம் டெபுடேஷன்ல இருந்த வரைக்கும், எங்க ஆபீஸ்ல கரெக்டா ஒத்த பைசாக்கூடத் தவறாம எண்ட்ரி போட்டிருப்பாங்க. என் சர்வீஸ் புக்கை எடுத்துப் பாருங்க. 
எல்லார்துலையுமே 2015 அக்டோபர்தான் கடைசி எண்ட்ரியா இருக்கு. 
மேடம் 2013,14,15 கேஸெல்லாம் முடிஞ்சி ரிவார்டே கிட்டத்தட்ட 2015 எண்டுலதான் வர ஆரம்பிச்சது. என் ராசி. 2013 ஜனவரில போனேன். 2013 ஜூன்லேந்து தங்க மழை. 2014 வரை விடாம கொட்டிச்சி. இதுவரைக்கும் எனக்கு வந்திருக்கிற 12 லட்சமே பெரும்பாலும் அட்வான்ஸ் ரிவார்டுதான். இதுக்கெல்லாம் ஃபைனல் ரிவார்ட் போட்டாலே எல்லாரும் 20 லட்சத்தைத் தாண்டிடுவோம். 
என்ன சார் நீங்க இவ்ளோ சொல்றீங்க ஆனா இருக்கிற எண்ட்ரியைப் பார்த்தா 5-6 லட்சத்தையே தாண்டலையே. 
இங்க இருக்கிறவங்க எண்ட்ரி போடாட்டா நாங்க என்ன பண்ண முடியும் மேடம். ஜனாதிபதி அவார்டுக்கு புரொப்போஸல் அனுப்பும்போது கோயம்புத்தூர் ஆபீஸர், பேங்க் ரெக்கார்ட்ல எவ்ளோ ரிவார்ட் வந்திருக்கு சர்வீஸ் புக்குல இவ்ளோ கொறவா இருக்கே பிரெஸிடெண்ட் அவார்ட் கிடைச்சாப்பலதான்னு நொந்து போயிட்டார். அதுக்கப்பறம் உக்காந்து, பழைய சாங்க்‌ஷன் ஆர்டரையெல்லம் தேடி, ரிவார்ட்களை அப்டேட் பண்ணவேண்டியதா ஆச்சு.
எக்ஸஸா குடுத்து திரும்பப் பிடிக்கிறா மாதிரி ஆச்சுன்னா, அது பெரிய பிராபளம் ஆச்சே. 
அதெல்லாம் ஆக சான்ஸே இல்லை மேடம். குடுக்கற ஒவ்வொரு பைசாவுக்கும் அந்த ஆபீஸ்ல ரெக்கார்ட் இருக்கு பைல் இருக்கு. எல்லா சேங்க்‌ஷன் ஆர்டரும் இந்த மாதிரி ஒவ்வொரு பைலுக்கும் கேசுக்கும் எவ்ளோ ரிவார்ட்னு கிளியர் கட்டா எழுதி உங்களுக்குக் கூடவே அனுப்பிக்கிட்டு இருக்காங்க. 
பக்காவா எண்ட்ரி போட்டுறணும் பழசெல்லாம் கூடக் கொஞ்சம் குடுக்க சொல்லுங்க சார். அட்லீஸ்ட் இப்பையாச்சும் சரி பண்ணிடலாம். 
கண்டிப்பா மேடம். நானே கேட்டு வாங்கிக் கொண்டாந்து தரேன். இப்ப இந்த DDங்களை… 
அவர் கிட்ட வாங்கிக்கோங்க. 
உஸ்ஸப்பா, இவர்களுக்கு விளக்கி டயர்டான அளவுக்கு, பேய்போல ராப்பகலாய் உழைத்த, 2013-14, 15ன் முற்பகுதியின்போதுகூட,  டயர்டாகவில்லையே என்று எண்ணிக்கொண்டு, இந்திக்கார சிறுவனுக்காய் திரும்பினேன். மேடம்கள் வேறு பஞ்சாயத்தில் மூழ்கினார்கள். 
DDகளைக் கையில் கொடுத்தபின் எதோ நினைவுக்கு வந்தவன் போல, இந்தியும் இங்கிலீஷும் கலந்து கூறினான். 
இதற்கு விஜிலன்ஸ் கிளியரன்ஸ் வேண்டுமே என்று.
எதற்கு விஜிலன்ஸ் கிளியரன்ஸ் வேண்டும்.
அதுதான் புரொஸீஜர். ரிவார்ட் கொடுக்கும் முன், பெறுபவர் மீது எந்த ஒழுங்கு நடவடிக்கையோ கேஸோ இல்லை என்பதற்கு விஜிலன்ஸ் கிளியரன்ஸ் வேண்டுமே சார். 
விஜிலன்ஸ் கிளியரன்ஸ் யார் கொடுக்க வேண்டும். 
இங்கிருக்கும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு. 
ஆனால் நாங்கள் தற்போது பணிபுரிந்துகொண்டிருப்பது இங்கில்லையே. அங்கு பார்த்துக் கொண்டிருக்கும் வேலைக்கு, அங்கே நாங்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறோம் என்பதே தெரியாத, இங்கிருக்கும் விஜிலன்ஸ் எப்படி கிளியரன்ஸ் தர முடியும்.
ஓ ஆமாம் இல்லையா. ஆமாம் அங்கிருந்து விஜிலன்ஸ் கிளியரன்ஸ் கொண்டு வரவேண்டும். 
அங்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் வேலை செய்து அரசாங்கத்துக்கு ஏகப்பட்ட வருவாயை ஈட்டித் தந்திருப்பதற்கு ஊக்குவிப்பகத்தானே இந்த வெகுமதியே எங்களுக்கு அளிக்கப் பட்டு இருக்கிறது. அங்கு நாங்கள், சுங்க வரியை வரியை ஏய்க்கும், கடத்தும் கிரிமினல்களைப் பிடிப்பதற்கு பதில், கிரிமினல் செயல்பாடுகளில் இறங்கினால், வெகுமதியாக அடுத்த நிமிடம் எங்கள் கழுத்தைப் பிடித்தல்லவா இங்கே தள்ளி இருப்பார்கள். ரிவார்ட் எப்படிக் கொடுத்திருப்பார்கள். 
இல்லை சார் உங்கள் அலுவலகத்திலிருந்து, மாற்றலாகி வந்த உயர் அதிகாரி திரு அருண்காந்த்துக்கே விஜிலன்ஸ் கிளியரன்ஸ் கிடைத்த பிறகுதான் சார் ரிவார்ட் கொடுத்தோம். 
அருண்காந்த் சார் அங்கிருந்து மாற்றலாகி, சர்வீஸ் டாக்ஸ் வந்து, பிறகு செண்ட்ரல் எக்ஸைஸுக்கு வந்து எவ்வளவு காலம் ஆகியிருக்கும். 
உங்களுக்கே நன்றாகத் தெரியுமே. உங்கள் அதிகாரியாகத்தானே அவர் இருந்தார். 
ஆமாம். அவர் அங்கு நான்கு வருடங்களுக்குமேல் இருந்தார். வாரத்திற்கு மூன்று நாட்கள் வீட்டிற்கே போகாமல், ஆபீஸிலேயே தங்கி பிசாசு போல் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். எங்கள் அடிஷனல் கமிஷனராக அப்போதிருந்த பாலாஜி மஜும்தார் சாரும் டெபுடி டைரக்டராக இருந்த அருண்காந்த் சாரும் இட்ட ஆணைகளின்படி பணியாற்றி வெற்றிகரமாகப் பிடித்து முடிந்த கேஸ்களுக்குதான் இதற்கு முன்பும் இப்போதும் கிடைத்துக் கொண்டிருக்கின்றன ரிவார்டுகள். 
அவருக்கே விஜிலன்ஸ் கிளியரன்ஸ் தேவைப்பட்டதே சார்.
அவருக்கே அல்ல எவராக இருந்தாலும், ரிவார்ட் பெரும் முன் விஜிலன்ஸ் கிளியரன்ஸ் கட்டாயம் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன். அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததற்குதான் ரிவார்ட் என்றாலும் அந்தப் பணி முடித்து வெளியேறியபின், ஒருவேளை தவறு செய்திருந்தால், தவறிப்போய்க்கூட  ரிவார்ட் கொடுத்துவிடக்கூடாது என்கிற அரசாங்க முன்னெச்சரிக்கைதான் விஜிலன்ஸ் கிளியரன்ஸ் என்பது. 
எல்லாவற்ரையும் நீங்களே சொல்லிவிட்டீர்கள்… 
தம்பி, நான் தப்பான ஆள் என்றால். செய்த வேலைக்கு சம்பளம் கொடுத்தது போதாது என்று எனக்கு வெகுமதியை வேறு எப்படிக் கொடுக்கும் அந்த அலுவலகம். நான் பார்த்த வேலைக்கு வெகுமதி கொடுத்திருப்பதே நான் சரியான ஆள் என்பதற்கான சான்றுதானே. நான் இப்போது சரியாக இல்லை என்றால், இந்த வெகுமதி DDயை என்னிடமே வேறு எப்படிக் கொடுத்து அனுப்பி இருப்பார்கள். 
என்னைத் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் எதற்கும் ஒரு வார்த்தை மேடத்திடம் கேட்டுவிடுகிறேன் சார், 
தாராளமாக. 
மேடம் விஜிலன்ஸ் கிளியரன்ஸ் சாயியேனா. 
இவர்கள்தான் இன்னமும் அங்கேயே பணியில் இருப்பவர்களாயிற்றே இவர்களுக்கு விஜிலன்ஸ் கிளியரன்ஸ் நை சாயியே. 
வழங்கப்பட்ட வெகுமதியை வாங்கவே இவ்வளவு கஷ்டம் ஆனால், இந்த ரிவார்டுகளை எங்களுக்கு வழங்குவதற்காக இரவு இரண்டு இரண்டரை வரை கண் விழித்து அள்ளி வழங்கிய எம். எம். பார்த்திபன் சாரை என்னவென்று சொல்வது. இத்தனைக்கும் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் என்கிற காரணத்தால்,  அவருக்கு ரிவார்டே கிடையாது. 
இவர் இப்படி என்றால், நான் செய்த வேலைக்கு ஏற்கெனவே சம்பளம் வாங்கியாயிற்றே, இதென்ன எக்ஸ்ட்ராவாக என்று கிட்டத்தட்ட 22 லட்சத்தை வாங்க மறுத்து, இறந்து போன, கஸ்டம்ஸ் கமிஷனர் தயா ஷங்கர் சாரை என்னவென்று சொல்வது. 
Another least known fact, which reflects his extraordinary commitment to the call of his duty is his ‘BIG NO’ to a neat sum of Rs 22 lakh which has been standing against his name as ‘reward money’. Netizens may recall that upto certain levels, officers in the preventive formations are offered ‘Reward’ by the Department for having made not only good cases but also good recoveries. Over a period of time, the CBEC has sanctioned as much as Rs 22 lakh as reward money to him besides a lot more which has not been sanctioned as he said NO. Since mid-80s this sum has multiplied itself several times but our ‘nayak’ has politely declined to accept it as he thinks that accepting such reward goes against his commitment to respond to the call of his duty under all circumstances.
அரசாங்கம் கொடுக்கும் வெகுமதி வருமானம் இல்லை என்பதால் அந்தத் தொகைக்கு வரியும் இல்லை. ரிவார்ட் என்பது என் போன்ற சாமானியர்களுக்குப் பெரிய கெளரவம். ஆனால், எப்பேர்ப்பட்ட விதிவிலக்கான ஆளுமையாக இருந்திருந்தால் இப்பேர்ப்பட்ட கெளரவம் கிடைத்திருக்கும் தயா ஷங்கர் அவர்களுக்கு.
”one officer whom Dawood used to fear was Mr Daya Shankar! Once in an interview with The Illustrated Weekly, Dawood was quoted as expressing his wish to work with Mr Daya Shankar as an Inspector! So devastating was Mr Daya Shankar’s preventive aura among the smuggling syndicates along the Gujarat coast those days.”

Leave a Reply