September 15, 2016 maamallan 0Comment
வாணிஶ்ரீ பற்றிய தன் கவிதையை, எவ்வளவு தேடியும் என் ஃபேக் ஐடியில்கூடத் தென்படவில்லை என்பதால் பப்ளிக்காகவின்றி தம் நண்பர்களுக்கு மட்டுமே பகிர்ந்திருக்க வேண்டும் வாணிஶ்ரீ. 

இப்படி வாணிஸ்ரீ கவிதை மேட்டரொன்று ஃபேஸ்புக்கில் ஓடிக்கொண்டு இருக்கிறது என்பதே,
என்று, ஓலா ஓட்டுநருக்கான ‘பெண் வெறுப்பு கார்’ வாங்க உதவி நிதி அளித்த நணபரான சிங்கப்பூர் உபர் டிரைவர் வந்து, வாட்ஸப்பில் கேட்டதற்குப் பிறகுதான் எனக்குத் தெரியவே வந்தது. 
ஒலா விவகார போலிப் பெண்ணீய அம்பலப்படுத்தலை, வக்கிர தாக்குதலாய் திரித்து சித்தரிக்கப்பட்ட புகார் காரணமாக, என் ஃபேஸ்புக்,  பிளாக் ஆகி இருப்பதால், ஃபேஸ்புக் மெஸஞ்சரில் வழக்கமாய் வந்து ‘சேதி’ சொல்லி உதவும், ட்விட்டர் கூகுள் பிளஸ் பரிச்சயமற்ற நண்பர்கள் கையறுநிலையில் இருக்கிறார்கள். 
இந்த வாட்ஸப்ப்பைப் பார்த்தபின், என் ஃபேக் ஐடி வழியே ஃபேஸ்புக்கில் வாணிஸ்ரீ எனப் போட்டுத் தேடிப்பார்த்தேன். அதில் தென்பட்ட ஓரிரு ஐயிட்டங்களில் ஒன்று, ’மேக்கப் அய்ட்டங்களா’ என்று நான் கூறியதைப் போய், அதை அயிட்டம் எனச் சொன்னேன் எனத் திரித்து ஊரைக்கூட்டியதால், நான் ஏற்கெனவே பிளாக் பண்ணியிருக்கும் அயல்நாடு வாழ் இந்திய வெறுப்பாள போலிப் புலி ஃபேக் பெண்ணீயமொன்றின் பதிவாகும்.  அதிலிருந்துதான் தெரியவந்தது வாணிஸ்ரீயும் வாணிஸ்ரீ கும்பமேளாவில் தன் பங்கிற்கு ஒரு வாணிஸ்ரீ கவிதையை எழுதி வைத்திருப்பது.
வாணிஶ்ரீ ஃபேஸ்புக்கில் எழுதியிருந்த ஏதோ ஒன்றை, வழக்கம்போல ‘கையைப் பிடித்து இழுத்து’ நக்கலடித்தேன். ஃபேஸ்புக் மெஸ்ஞ்சரில் வந்த கோட்பாட்டிலக்கிய வாணிஶ்ரீ கோபமாய் ஏதோ கூறிவிட்டு, பெண்ணீய அடக்கத்துடன் என்னை அன்ஃபிரெண்ட் செய்தார். என்னது நீ என்னை அன்பிரெண்ட் செய்வதா, இப்போ பார் என்று நான் ஆண் திமிரில் வாணிஸ்ரீயை பிளாக்கே செய்துவிட்டேன். ஆனாலும் பெருமாள்முருகன் போல ஏதாவது அவல் கிடைக்காதா என அவ்வப்போது ஃபேக் ஐடியில் வாணிஸ்ரீயை எட்டிப் பார்த்துக்கொண்டு இருக்கத் தொடங்கினேன். 
ஜூன் புக்ஃபேரில் தற்செயலாய் வாணிஸ்ரீ தட்டுப்படவே சிரித்தேன். அப்ப, ஃபேஸ்புக்கிற்கு வெளியே நாம் இன்னும் நண்பர்கள்தானா என்று கை குலுக்கினார். தத்துவார்த்த அறச்சீற்ற அவஸ்தைகள் கொண்ட அறிவுஜீவிகளாக ஏன் நக்ஸலைட்டாகவே இருந்தாலும்கூட, எலக்சன் என்று வந்தால், மேற்கூறிய கேட்டகரியில் பிராமணப் பெண்களாக இருப்பவர்கள் ஜெயலலிதாவுக்கு ஓட்டுப்போட்டு விடுவதில்லையா அதைப் போல, நம் வாணிஶ்ரீயும் பெரிதாக சரி தப்பெல்லாம் பார்த்து மெனக்கெடாமல் ஓலா பிரச்சனையில் பெண்ணீய சாலிடாரிட்டி காட்டி லெக் வலேஸா ஆனார். 
காவிரி கர்நாடகாவைப் போலில்லாது, சண்டையும் சச்சரவும் ஆயிரம் இருந்தாலும் பிளாக்கே செய்துகொண்டாலும் ஃபேக் ஐடிகளில் எட்டிப்பார்த்து, நக்கலடித்துக்கொண்டு சமாதான சகவாழ்வுடந்தானே ஃபேஸ்புக்கில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 
வாழச் சகியாமல் டைவர்ஸே செய்து கொண்டாலும், முன்னாள் கனவன் மனைவியர், நாங்கள் இப்போதும் நல்ல நண்பர்கள்தான் என பத்திரிகையில் தம்பதி சமேதராய் போஸ் கொடுத்துக் கொள்வதைப் போலத்தானே இதுவும்.
’தென்னங்கிளைக் கிளி’ பதிவில் என்னை நாயாக்கி, கமெட்டில் எனக்குப் பொறை போட்டதாய் எழுதிநாயே என பெட்ரோல் கேனுடன் சாமியார் மடம் நோக்கியா போய்விடப் போகிறான், மிஞ்சி மிஞ்சிப் போனால் பழைய சம்பவங்களை தூசு தட்டி ஒரு கட்டுரைதானே எக்ஸ்ட்ராவாக எழுதிவிடப் போகிறான் எழுத்தாளன், ’பிடிக்காவிட்டால் படிக்காதே’ என்பது பெருமாள்முருகன் விவகாரத்துக்குப் பின் கேஸ்லாவாகவே ஆகிவிட்ட பின்பு, அதுவும் 66Aவை உச்சநீதிமன்றமே சட்டத்துக்குப் புறம்பானது என தீர்ப்பளித்துவிட்ட பின்பு,  ஃபேஸ்புக் அக்கவுண்ட்டை ‘சந்தேகத்துக்குரிய நடவடிக்கை’ என்று முடக்கிவைத்திருக்கும் சைபர் கிரைமுக்கு இதையெல்லாம் எப்படிச் சொல்லிப் புரிய வைப்பது. 
கோட்பாட்டாளர்களை இஷ்ட தெய்வங்களாகக் கொண்டிருக்கும் வாணிஶ்ரீ எழுதியிருக்கும் வாணிஶ்ரீ கவிதையில் என் பிரச்சனைக்கு ஏதாவது தீர்விருக்குமா என்றுதான் அதை ஃபேக் ஐடியில் தேடிக்கொண்டு இருக்கிறேன். ஆக இப்போது வாணிஶ்ரீ எழுதிய வாணிஶ்ரீ கவிதையைப் படித்தாக வேண்டும் என்பதே என் வாழ்வின் தலையாய வேட்கை. இதை, தன் வாநீஸ்ரீ என்கிற ஃபேக் ஐடியில் படிக்கப்போகும் வாணிஶ்ரீ, அட்லீஸ்ட் வாட்ஸப்பிலாவது வந்து அந்த வாணிஸ்ரீ கவிதையைக் காப்பி பேஸ்ட் செய்யாமலா இருந்துவிடப் போகிறார்.
பிகு: இதைப் படித்து எதுவும் புரியாமல், ஏற்கெனவே எண்ணை வைக்காது மண்டை காய்ந்து கிடக்கும் எண்ணற்ற பெண்ணீய ஆப் பாயில்களில் ஏதாவதொன்று, வாணிஶ்ரீ ஏன்கிற ஃபேக் பதிவாக தன்னைத்தான், நான் வக்கிரமாகத் தாக்குவதாக, பேக்குத்தனமாய் அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷலில் புகார் கொடுக்க ஆட்டோ பிடிக்க இருப்பது நிச்சயம். இதற்கு லைக் கமெண்ட் போட்டு ஷேர் செய்து, உங்களையும் தாக்கு லிஸ்ட்டில் கோர்த்துவிட கண்ணைக் கசக்கப்பொகும் அப்பீலற்ற பேரபாயமும் கதையல்ல நிஜம். நீங்கள் இதை பேஸ்புக் விசிறி பேஜ் மூலம் படித்தாலும் அந்தப் பேஜை லைக் செய்து தடம் பதித்து மாட்டிக்கொள்ளாமல், மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு கடந்துவிடுங்கள் நண்பர்களே

Leave a Reply