February 24, 2011 maamallan 3Comment

ஆயிரமாயிம் பக்கங்கள் எழுதின பேராளுமையின் எழுத்தாய்யா இது. காண்ட்ராஸ்ட் தூக்கறதுக்காக, இவ்ளோ கண்ட்ரைவ்டாவாய்யா எழுதுவான் ஒருத்தன். 
//’சார், இங்க எல்லாம் முனிசிபாலிட்டியிலே இருந்து கொண்டு வந்து போடுற ஆளுகளாக்கும்.  பிச்சைக்காரங்க, நரிக்குறவனுங்க இந்தமாதிரி’ என்றார் 

டாக்டர். நான் ‘ம்’ என்றபின் ‘மூணாவது ஷெட் எங்க?’ என்றேன். ‘காட்டுறேன் சார்’ என்றபடி டாக்டர் கூடவே வந்தார் தயக்கமாக ‘எல்லாம் அத்துப்போன கேஸுங்க சார்… ட்ரீட்மெண்டெல்லாம் குடுக்கிறதில்லை. கொஞ்சம் தீனிகீனி குடுத்து ஜெனரல் ஆண்டிபயாட்டிக் குடுத்துப் பாப்போம். சிலசமயம் தேறும். மிச்சம் ஒருநாலஞ்சுநாளிலே போயிடும். ஃபண்ட்ல்லாம் ரொம்ப கம்மிசார். ஸ்டாஃபும் கெடையாது. இதுகளை தோட்டிங்க தவிர மத்த ஸ்டாஃப் தொட்டு எடுக்க மாட்டாங்க…’ என்றார்
நான் பேசாமல் நடந்தேன். ‘ இப்ப ஏகப்பட்ட கிரௌட் சார். மழைக்காலம் பாத்தீங்களா, அங்க இங்க ஈரத்திலே கெடந்து காய்ச்சலும் ஜன்னியும் வந்தெதெல்லாம் இங்க வந்திரும்… இதுகள்லாம் அனிமல்ஸ் மாதிரி. ஒண்ணு விளுந்தா இன்னொண்ணு கவனிக்காது. அப்டியே விட்டுட்டு போயிடும்.தோட்டிங்க தூக்கி இங்க கொண்டு போட்டிருவாங்க…’ //

இவ்ளோ வலிந்த மெலோட்ரமேட்டிக் ரைட்டிங்கை இதுக்கு மேலையும் தொடர்ந்து வாசிக்க, 
பப்பரப்பாவின் பஜனை கலா மண்டலி உறுப்பினர்களாலதான் முடியும். 
தொடர்ந்து எழுதற பயிற்சியால கையெழுத்து நல்லாறாப்புல எழுத்தில் சரளம் வந்ததுக்கே வாயப் பொளந்துட்டா, இலக்கியத்தை எப்பப் பிடிக்கப் போறே!
வலிஞ்சி சொல்லப்படறதை எல்லாம் நுட்பமாகப் பார்க்கிற வாசகக் கண் தெறக்க ரொம்ப வளரணும். முதல் தடவை பாக்கற ஆபீசர்/பெரிய அதிகாரி/ கலைக்டர் இல்லை என்னவோ ஒரு மயிரு கிட்ட, முன்னப்பின்ன தெரியாத ஒரு டாக்டர் ஆஸ்பிடல் அவலத்தைப் பத்தி ஜெயமோகனாட்டமே லொள லொளன்னு பேசிகிட்டே போவானா? 
இவன் எதுக்கு திடீர்னு வந்துருக்கான். இது சர்ப்ரைஸ் விஸிட்டா என்னென்ன கேக்கப் போறானோன்னு பதட்டமா இருப்பானா இல்லை, கொண்டக்க மண்டக்க எங்கப்பன் குதுருக்குள்ள இல்லேன்னு ஒளறிக் கொட்டுவானா?
கஷ்டப்பட்டு இதையெல்லாம் தாண்டிப் படித்துப் பார்த்தால் இது சிறந்த கதையாகக் கூட இருக்கலாம். ஆனால் சிறப்புத் தள்ளுபடி கொடுத்துப் பரவாயில்லை எனக் கஷ்டப்பட்டுப் படிக்க, இவரென்ன ஆரம்ப எழுத்தாளரா? தற்காலத் தமிழின் தன்னிகரற்ற பேராளுமை அல்லவா!
கதை என்னை இழுக்கணும், அது பின்னாடி நாயாட்டம் மூச்செறைக்க நான் ஓட முடியாது – கிருஷ்ணன் நம்பி அடிக்கடி சொல்லுவார் என நேர்ப்பேச்சில் சுந்தர ராமசாமி சொன்னது.
ஜெய் போலோ ஜெயமோகனானந்த ஸ்வாமீஜிக்கி *கோய்ந்தோ! கோ யிந்தோ!!*

3 thoughts on “மன்னிக்கவும் மேற்கொண்டு படிக்க முடியாமைக்கு சிறு விளக்கம்!

 1. மாமல்லன்,
  உங்களின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது.. அதுவும் ஜெயமோகனின் கதைகளுக்கு நீங்கள் எழுதும் பாஷ்யம் பிரமாதம்.. ஒரு கதை எப்படி
  இருக்க வேண்டும் என்று அக்கு வேறு ஆணி வேறாக நீங்கள் பிரித்து மேய்வது சூப்பர் ..

  இவ்வளவு உழைப்பை கோனார் நோட்ஸ் எழுதுவதற்கு பதிலாக நீங்களே நல்ல கதைகளாக எழுதினால் என்ன.. (23 + 4 + 3 )க்கு மேல் எழுத
  விருப்பமில்லையா.. இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்கி இருவத்தி இரண்டு
  மணி நேரம் எதற்கு வெறும் அக்கப்போர்.. ?

  கதைகளும் (இப்போது.. பழங்கதை வேண்டாம்..) எழுதி விமர்சனும் செய்தால் ஒரு நியாயம் இருக்கும் என நினைக்கிறேன்..

  என்ன சொல்கிறீர்கள்.. ?

  அம்பி.

  பி.கு. – பப்பரப்பா என்ன எழுதினாலும் பதில் போடுகிறார்.. சைட்டிலும் போடுகிறார்..
  நீங்கள் உங்களுக்கு வரும் விமர்சனங்களை கண்டு கொள்வதில்லை ஒரு பேச்சு..

 2. @Sivan said…

  உங்கொப்பன் ஆத்தா பேரு ஊரு அட்ரஸோட வா! உங்கூட சகவாசம் வெச்சிக்கிறதா இல்லியான்னு எங்கத்தாளக் கேட்டுச் சொல்றேன்.

  அது வரிக்கும் உனக்கொரு போடாங்கோத்தா!

Leave a Reply