February 23, 2011 maamallan 2Comment
@சென்ஷி senshe

<அதிகப்படியான வெள்ளப்போக்கு இருக்கறதாலதான் அணை அங்க கட்டலாமுன்னு முடிவு செய்யப்படுது. 
அணை கட்டப்போகும்போது ஏற்படும் வெள்ளச் சேதங்களை கதைசொல்லி புனைவுல அரக்கத்தனமான சேதமா பதிவு செய்யறான்.> 
யோசித்துதான் எழுதப்பட்டதா?

பேச்சிப்பாறை அனை என்கிற பெயரையே சொன்ன பிறகு 
<வண்ணத்துப் பூச்சிகளின் படுகை பேச்சிப்பாறை அணைக்கும் ஏரிக்கும் அப்பால் பன்றிமலைச் சரிவிலே இருப்பதாக சிங்கி சொல்வார்.> 
அந்த அணை கட்டப் போகையில் இவ்வளவு பேர் செத்துதான் இந்த அணை கட்டப்பட்டு உள்ளதா எனக் கேட்பது தவிர்க்க முடியாதது அல்லவா?
23 வருஷமாகவே இந்த ’அரம்’ இப்படித்தான் அறுத்துக் கொண்டு இருக்கிறதா? இல்லை தற்போதைய காலகட்டத்தில் ஒரு முன்னேற்றமாக. இப்படி மெயின் மேட்டருக்குப் பெயர் சொல்லிக் கமிட் பண்ணிக் கொள்ளாமல் துணைப்பாத்திரங்களுக்கு மட்டும் பெயர் சொல்கிறதா?
இப்படி ஒரு வெள்ளத்தால் ஆன பேரழிவு எப்படி சரித்திரத்தில் பதிவு பெறாமல் போயிற்று?
புனைவு என்பதற்காகப் பூணூலைத் தாம்புக்கயிரிலா போட்டுக் கொள்ள முடியும். 
இங்குதான் ஜெயமோகனின் மாயாஜால தந்திர வித்தையே இருக்கிறது.
நாட்டில் நர்மதா அணை கட்டுவதால் உண்டாகப்போகும் அழிவுகளை கிராமம் கிராமமாக மூழ்கப்போவதை எதிர்த்துப் போராட்டம் நடந்து கொண்டு இருக்கிற காலம் 1987. அதற்கான போராட்டத்தை ஆரம்பத்தில் கையில் எடுத்துப் போராடிக் கொண்டிருந்தவர்கள், வாழ்வாதாரம் பாதிக்கப் படப்போகும் ஆதிவாசிகள். அவர்களுக்காகக் குரல் கொடுக்கப் புறப்பட்டவர்கள், தொண்டு நிறுவனங்களும் சமூக ஆர்வலர்கள் மேதா பட்கர் போன்றவர்களளும். அவர்களுக்கு தார்மீக மற்றும் நேரடி ஆதரவு அளிக்க -ஊடகங்களில் – தயாரான அறிவுஜீவிகள். பிற்பாடு சில ஆண்டுகளிலேயே பாபா ஆம்தே போன்ற காந்தியவாதிகளும் நேரடிப் போராட்டத்தில் ஜலசமாதி ஆகிறோம் என அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாகப் போராட்டக் களத்தில் இறங்குனர். கிராமங்கள் மூழ்கும் போது நாமும் சேர்ந்து நேரடியாக மூழ்குவோம் என நீரில் வந்து நின்றனர்.
இவர்கள் பிற்காலத்தில் தேஷ் பேமானிகளால் எப்படி எல்லாம் இழித்துரைக்கப்பட்டனர் என்பது சரித்திரம். 
விஞ்ஞான பூர்வமான முன்னேற்றம் வேண்டாமா மூடர்களே! என படித்த நகரத்தான்கள் எதிர் கூப்பாடு போடத் துவங்குகின்றனர்.
ஏண்டா நீ தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதற்காக எண்ணற்ற இயற்கைச் செல்வங்களை, மலைவாழ் மக்களை, இந்த மண்ணில் நம்மைப் போலவே நமக்குக் கிஞ்சித்தும் குறைவில்லாத உரிமை கொண்ட இந்த தேச மக்களை அவர்களின் நிலங்களை மூழ்கடிப்பாயா?
அவர்களுக்குதான் மாற்று வாழ்வு இடங்கள் கொடுக்கப் பட்டிருக்கின்றனவே!
ஆதிவாசி மக்கள் காலாகாலமாக வாழ்ந்து வரும் நிலத்தை வளர்ச்சி என்பதன் பெயரால் பூண்டோடு ஒழிக்கப் புறப்படுகிறீகளே!. நாங்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்லர். மாபெரும் அணைகள் அன்றி சிறு சிறு நீர்த்தேக்கங்களை உருவாக்குங்கள். யாருக்கும் பெரிய பாதிப்பு வராமல் எல்லோரையும் வாழவிடுங்கள் என்கிற நர்மதையின் நண்பர்களின் குரல் எவர் காதிலும் ஏறவில்லை.
25 ஆண்டுகளாகியும் போராடிக்கொண்டு மட்டுமே இருக்கிறார்கள். காரணம் அவர்கள் ஏதுமற்ற ஆதிவாசிகள். போபாலின் சுவாச குற்றம் இழைத்த மனிதகுலம் போல.
இப்படியான கொந்தளிப்பின் தொடக்கப் பின்னணியில் படுகை கதை எழுதப்படுகிறது என்பதை நினைவு கூர்ந்து கொள்ளுங்கள்.
இந்தக் கதையை தமிழ் இலக்கியத்தின் உண்மையான பேராளுமைகளில் ஒருவரான சுந்தர ராமசாமி, அந்தக் காலத்தில் அவரது அபிமானத்திற்கு உரிய, புளியமர நிழலில் வளர்ந்து கொண்டிருந்த இளங்க்கன்றுதான் ஜெயமோகன் என்கிற 25 வயது இளைஞர். அவர் எழுதிய கதையைத் தன் பத்திரிகையில் வெளியிட மறுக்க சுந்தர ராமசாமிக்கு என்ன காரணம் இருக்கக்கூடும். யோசிக்க வேண்டிய விஷயம்.
அதே சமயம் ஒரு முற்போக்காளரான, கலை மதம் கவிதை கம்யூனிஸம் என்கிற கோவை ஞானி இந்தக்கதையை ஏற்றுப் பிரசுரிப்பதோடும் அல்லாமல் சுந்தர ராமசாமி நிராகரித்த கதையை எப்படி விளங்கிக் கொள்கிறார் எனவும் பாருங்கள்
<கேரளாவில் பேச்சிப்பாறை அணை கட்டப்பட்டபொழுது ஆதிவாசிகளின் அவலம் குறித்து ஜெயமோகன் எழுதிய அருமையான கதை இது. அணைக்கட்டு முதலிய அறிவியல் ஆக்கங்களை மறுக்கக் கூடாது என்பது சு. ராவின் பார்வையாக இருந்தி ருக்கலாம். அணைக்கட்டு முதலிய நவீன ஆக்கங்கள் மனித வாழ்வில் ஏற்படுத்தும் அவலம் குறித்தது ஜெய மோகனின் பார்வை. இதில் எனக்கும் உடன்பாடு.>
சுத்தம். இது ஜெயமோகனின் கதையில் எங்கே இருக்கிறது? அனை கட்ட வருகிற செம்பன்துரை பற்றிய சிலாகிப்புதானே இருக்கிறது. மனித வாழ்வில் ஏற்படுத்தும் அவலம் இது கோவை ஞானியின் மனதில் இருக்கிறதா? அல்லது அவர் படித்த ஆங்கில தினசரிகளில் இருந்ததா? கதையில் இருப்பதெல்லாம்  அணை கட்ட ஒருவன் வருகிறான் என்று தெரிந்ததுமே பேசிப்பாறை பிசாசாகி பிரளயம் செய்கிறது என்றல்லவா இருக்கிறது.
கோவை ஞானி தொடர்கிறார்
<நிகழில் இக்கதை வெளியானதை ஜெயமோகன் குறிப்பிட்டபொழுது ஞானிக்கு இலக்கியம் தெரியாது என்று சு. ரா கூறினாராம். ஞானிக்கு இலக்கியம் தெரியாது, ஜெயமோகனுக்கும் தெரியாது. சு. ராவுக்கு மட்டுமே தெரியும்>
இது ஒரு சிம்பிள் வவ்வவ்வே! இதைக் கோவை ஞானி காலச்சுவடு இதழில் 2008ல் சிற்றிதழ் இயக்கம்: நிகழ் என் அனுபவம் என்கிற தலைப்பின் கீழ் எழுதுகிறார்.
விமலாதித்த மாமல்லன் வெற்றுக் காழ்ப்புடன் 25 வருடங்களுக்கு முந்தைய கதையை எடுத்து இன்றைக்குக் குதறுகிறான் என்கிற குரல்களுக்கு என் பதிலாக ட்விட்டரில் சொன்னது. 
 kavirajan 

நாட்டாமை விஜயக்குமார் மாதிரி @ சார் – எழுதுறா கதை சொல்றண்டா தீர்ப்பு’ங்கிற மாதிரியே இருக்கு 🙂

 ஜ்யோவ்ராம் சுந்தர் 

@ அப்படி இருந்தாக்கூட பரவாயில்லை. 25 வருசத்துக்கு முன்னாடி எழுதின கதைக்கெல்லாம் இப்படி தீர்ப்பு சொன்னா எப்படி 🙂 @

 விமலாதித்த மாமல்லன் 

@ ஆனா படுகை, தன் சிறந்த கதைகள்ல ஒண்ணுன்னு ஜெமோவே சொல்லி இலக்கிய லோகமும் என்னான்னு கேக்காமல் அழியாச்சுடரா ஆக்கினா @

 விமலாதித்த மாமல்லன் 

@ ஆகச்சிறந்த படைப்பென காலவரையறையற்றுக் கொண்டாடப்படும் போது அலசலுக்கு மட்டும் காலவேலி நியாயமா? @

 விமலாதித்த மாமல்லன் 

ஜெயமோகனின் நதிக்கரையில் எந்த ஆண்டு எழுதப்பட்ட கதை? தகவல் ப்ளீஸ்

 விமலாதித்த மாமல்லன் 

நல்லதை மட்டும் சொல். அல்லாததைக் கடந்து செல். இது அம்மாஞ்சி ஆட்டிட்யூட். நமக்கு ஆவாது.

 ஜ்யோவ்ராம் சுந்தர் 

@ சார், உங்களோட அந்த விமர்சனத்தைப் படித்த யாராவது ஒருத்தர் – ஒரே ஒருத்தர் – காட்டுங்க பார்ப்போம் 🙂 @

 விமலாதித்த மாமல்லன் 

@ படிச்சா சந்தோஷம். படிக்கலேன்னா உன் தோஷம். இதையெல்லாம் எதிர்பார்த்தா ரெண்டு மணி நேரம் மட்டுமேத் தூங்கி எழுதினேன் @

 kavirajan 

@ தேவர் மகனில் ஒரு வசனம் “நான் கொடுத்த பாலெல்லாம் ரத்தமாப் போகுதே” – இரவெல்லாம் கண்விழித்த உழைப்பு இப்படியா ஆகவேண்டும்! @

 விமலாதித்த மாமல்லன் 

@ சரி படுகை நல்ல கதையா இல்லையா? ஆம் எனில் ஏன்? இல்லை எனில் ஏன்?

 arulselvan 

<ஆம் எனில் ஏன்? இல்லை எனில் ஏன்?> நியாயமான கேள்வி @ .@ யும் @ யும் விரிவஞ்சி டுவிட்டரிலேயே கூடச்சொல்லலாம் 🙂

 விமலாதித்த மாமல்லன் 

@ உருவக ஆர்பாட்டம் கட்டங்கடைசியாகச் சொல்ல வருவது என்ன? ஒர் அணை கட்டப்பட்டதை. வெறும் மொழி ஆட்டம் தவிர வேறென்ன இருக்கிறது கதையில்?

 விமலாதித்த மாமல்லன் 

@ வெள்ளப் பெருக்கு வீணாவதால் அணைகள் கட்டப் படுகின்றனவா? அணை கட்ட வருகிறார்கள் என்பதால் வெள்ளம் சீறுகிறதா? @ @

 anathai 

@ சார் பட்டய கிளப்புறீங்க; அம்மாஞ்சிகளின் பதட்டம் இதை இன்னமும் interstingஆக்குது அந்தாளோட விசத்தெளிப்ப சரியா தொடுறீங்க தூள்

 anathai 

@ இன்னமும் இரண்டு கதை இருக்கு; கிழிச்சு சாத்தி அதை நான் படிச்சா எனக்கு ஜன்மசாபல்யம்; மாடன் மோட்சம்; திசைகளின் நடுவே

வெறும் வார்த்தை ஜாலத்தை அகற்றி விட்டால், இந்தக் கதையில் என்ன இருக்கிறது? கொஞ்சம் சிந்தியுங்கள். வெள்ளைக்காரன் வந்தான் இயற்கையை அடக்கி மதமதவெனத் திமிறி நிற்கும் ஒரு வாட்டசாட்டமான வள்ளி என்கிற ஆற்றை பெண்ணைப் பெண்டாளுவதைப் போல வசப்படுத்தி அடக்கி அணை கட்டினான். 
அவன் அணை கட்ட வந்தது கண்டு அதாவது அவளது மகளான ஆற்றை வசப்படுத்தி அணை கட்ட வந்துவிட்டான் என்கிற கோபத்தில் பேச்சிப்பாறைக் காற்றாக சுழன்று மழையாகப் பொழிந்து ஆதிவாசி மக்களின் வீடு கூரை எல்லாவற்றையும் நாஸ்தி பண்ணி அவர்கள் உயிரைக் கவர்ந்தது. கஞ்சிக்கு கதியற்ற மக்களுக்கு கூலி உயர்த்திக் கொடுத்து வெள்ளைக்காரன் அணை கட்ட அழைத்துச் செல்கிறான். அனை கட்டும் போதும் அவர்கள் கொத்துக் கொத்தாய் சாகிறார்கள். 
தீவிர இலக்கிய மாணவர்களுக்கு மட்டும். தயவு செய்து கீழ்க்காணும் பத்தியை மட்டும் ஒரு முறை வாசியுங்கள். வார்த்தை வார்த்தையாய் வாசியுங்கள்.
<அதற்கு மேல் தாங்க துரைக்கும் திராணி இருக்கவில்லை. பேச்சி காலில் விழுந்தான். “பிழை பொறு பேச்சி” என்று கண்ணீர் விட்டான். கொடுங்காட்டில் யாக குண்டம் கட்டி தபஸ் செய்தான். ஆடும் கிடாயும் வெட்டி அவிஸாக்கினான். கூடப் பிறந்த பூத கணங்களையெல்லாம் கூட்டி வைத்துப் பேச்சிக்குக் கொடை போட்டான். பேச்சி மசியவில்லை. கெஞ்சி அழுதான். வழிமூட்டியபோது உடைவாளை உருவிக் கழுத்தில் வைத்து துரை கர்ஜனை செய்தான். “பூதத்தலை இண்ணா பேச்சி. பிரம்மாமேல சத்தியம்! பலிய எடுத்துக்கிட்டு அடங்கிப் போடு.” வாளை ஓங்கிய தருணம் பேச்சி மனமிரங்கினாள். ஓமத்தீயில் உருக்கொண்டு கூத்தாடினாள். காற்றாக வந்து திசை அதிரச் சிரித்தாள். “கொண்டா, பலிகொண்டா” என்று ஆர்ப்பரித்தாள். “நரபலி கொண்டா, சூடுசேர கொண்டா” என்று ஆட்டம் போட்டாள். “எம்பிடு வேணும் ? அத மட்டும் செல்லு” என்றான் துரை. “ஆயிரத்தொண்ணு” என்றாள் பேச்சி. “அதுக்கென்ன தாறேன்” என்றான் துரை சற்றும் அயராமல். “எங்க ? எங்க ?” என்று பறந்தாள். “பன்னிமலைச் சரிவிலே ஆயிரம் குடிலிருக்கு எடுத்துக்க பேச்சி. ஆயிரமில்லடி மூதி அய்யாயிரம். எடுத்துக்கிட்டு அடங்கிப் போடு” என்றான் துரை. அக்கக்கா என்று காடதிரச் சிரித்தாள். “சத்தியம் பண்ணு, குடிச்ச சோரைக்க கட்டுப்படுவேன் எண்ணு சத்தியம் பண்ணு” என்றான் துரை. பேச்சி வெறி கொண்டு ஆடினாள். கூந்தலைச் சுழற்றி நிலத்தில் அறைந்து சத்தியம் செய்தாள்.
அடுத்தநாள் விடியும் முன்பே பேச்சி பசி தீர்த்தாள். ஆயிரம் குடிசைகளும் அடிவயிற்றில் அடங்கின. அன்றுமுதல் பத்துநாள் ஆடி ஆர்ப்பாட்டம் செய்து வெறி தீர்த்தாள். பத்தாம்நாள் வாக்குத் தந்தபடி வந்து துரை முன் நின்றாள். துரை அவளை இரும்பாணியில் ஆவாகனம் பண்ணி, வேங்கை மரத்தடியில் அறைந்து நிறுத்தினான். வருஷம் தோறும் கொடையும், பவுர்ணமி தோறும் பூசையும் ஏற்பாடு செய்தான். மூடோடே மஞ்சளும், மூத்த கருங்கிடாயும், வெட்டி பூசித்து வேலையைத் தொடங்கினான். வள்ளியின் கஷ்ட காலம் தொடங்கியது. பேச்சி அடங்கிய பிறகு கேட்க நாதியில்லை. கூந்தலைச் சுழற்றிப் பிடித்து மடக்கி அவள் கொட்டத்தை அடக்கினான் செம்பன்துரை.>

இதை எழுதியவன் ஜீனியஸ். இவனை ஜீனியஸ் என்பவன் இலக்கியக் கபோதி.
சென்ஷி senshe <கதைசொல்லிக்கு நாட்டுப்புற கதைப்பாட்டு வடிவுல அணைகட்டல் விவரிக்கப்படுது.>
கொடுங்காட்டில் யாக குண்டம் கட்டி தபஸ் செய்தான்ஆடும் கிடாயும் வெட்டி அவிஸாக்கினான். 
இவை நாட்டுப்புறக்கலை வடிவ சொல்லாடல்கள். வழிச்சி நக்கத்தான் வேணும். 
இதைச் செய்பவன் ஹிந்துத்வ வெள்ளைக்காரன் போலும்  
இது கதை சொல்லிக்குத் தெரிய வருவது எப்படி? சிங்கிப் ”பற்ற்ற்றையன் ” சொல்லிதானே. அப்படியெனில் அவனுக்கு சரஸ்வதியின் சமஸ்க்ருத கடாக்ஷம் பரிபூரண சித்திரஸ்துவாகி இருக்கிறது இல்லையா?
கோவை ஞானி அவர்களே நோபல் பரிசென்ன பாண்டிபஜாரில் விற்கிற ரெண்டுக்கு ஒண்ணு ஃப்ரீ ஜாமானா? ஜெயமோகனுக்கு ஒன்று உங்களுக்கு ஒன்று என வாங்கிக் கொண்டால் எனக்கு ஒண்ணு ஃப்ரீயா?
“கொண்டா, பலிகொண்டா” என்று ஆர்ப்பரித்தாள். “நரபலி கொண்டா, சூடுசேர கொண்டா” என்று ஆட்டம் போட்டாள்.

ஆருங்க? உங்க பேச்சிங்களா? செரிங்கோ
 “பன்னிமலைச் சரிவிலே ஆயிரம் குடிலிருக்கு எடுத்துக்க பேச்சி. ஆயிரமில்லடி மூதி அய்யாயிரம். எடுத்துக்கிட்டு அடங்கிப் போடு” என்றான் துரை. அக்கக்கா என்று காடதிரச் சிரித்தாள்.
அட ஆமாங்கோ!
அடுத்தநாள் விடியும் முன்பே பேச்சி பசி தீர்த்தாள். ஆயிரம் குடிசைகளும் அடிவயிற்றில் 

இது என்னாங்கோ! சப்மெர்ஜென்ஸ் ஆஃப் வில்லேஜஸ் அப்பிடிங்களாங்கோ? சரிங்கோ!
வருஷம் தோறும் கொடையும், பவுர்ணமி தோறும் பூசையும் ஏற்பாடு செய்தான். மூடோடே மஞ்சளும், மூத்த கருங்கிடாயும், வெட்டி பூசித்து வேலையைத் தொடங்கினான். 
இது இன்னாங்கோ! இனிமேலத்தான் அணை கட்டற வேலையே ஆரம்பிக்குதாங்கோ?
அதாவுது அணை கட்டறதுக்கு அப்புறமா ஊர் மூழ்குமா? இல்லே ஊர் முழுகின பெறகு அணை கட்டுவாங்களா? 
ஆறை ஒட்டி ஊர் இருக்குமா? இல்லே ஆறுக்குள்ள ஊர் இருக்குமா?
காற்று வந்ததும் கொடியசைந்ததா?
மொடியசைந்ததும் காற்று வந்ததா?
இந்த ரேஞ்சுல இருக்குது வெவரனை! சூப்பர். பாண்டிபஜார் நோபல் ப்ரைஸ் புக்குடு அ.முத்துலிங்கத்துக்கும் எலவச நோபல் ப்ரைஸ் இங்கே ஒண்ணேய்!
மூடோடே மஞ்சளும், மூத்த கருங்கிடாயும், வெட்டி

மூடோடே மொளைச்ச மஞ்சள் அல்லது மஞ்சள் முளை போல அப்பிடிங்களா? சரிங்கோ. அது இன்னாதது மூத்த கருங்கிடா. ஓ பொயட்டிக் லிபர்டி. ஓகே ஒகே டேக்கிட்.  கலைஞர் வசனம் போல நல்லாத்தாங்கோ எழிதரீங்கோ! 
<வள்ளியின் கஷ்ட காலம் தொடங்கியது. பேச்சி அடங்கிய பிறகு கேட்க நாதியில்லை. கூந்தலைச் சுழற்றிப் பிடித்து மடக்கி அவள் கொட்டத்தை அடக்கினான் செம்பன்துரை.>
உம்மா உம்மம்ம உம்மம்ம உம்மா
கீஞ்சிது இப்பத்தா ஜெய்மோவ்னுக்கு வள்ளிங்கற ஆத்தோட் நென்ப்பே வருதா? நாங்கின்னமோ பேச்சிப்பாறியே ஆறாயிட்டப்புல இல்ல டமாஸு பாத்துக்கினு இர்ந்தோம். த் பார்ரா, இதி இன்னா கஜினி-மெமெண்டோ மேரி, உன்கு ஷார்ட் டெர்ம் மெமரி லாஸா நைனா? 
அப்ப பேச்சிப்பாறை எப்படி ஆயிரம் குடிசைங்ள வயித்துல அடக்கும்? யோவ் கேனை வயிரோ தயிரோ எப்பவுமே அந்த குடிசைங்கோ பேச்சி மேல தானே குந்திக்கினு கீது! இன்னா மெட்ராஸ்காரந்தானே கோத்தா கூவத்த உட்டா மூத்ரந்தானே இவம் பாத்தத் தண்ணீனு நென்ப்பா! அற்த்துருவே!
<பிரம்மா கொடுத்த அதிகாரம் பேச்சிக்கு . பேச்சி தந்த வரம் வள்ளிக்க. வள்ளியைக் கட்டுவது பேச்சியைக் கட்டுவது. பிரம்மசாபம் செகமழிக்கும். மலையரசி பேச்சி நாடு காக்கும் தெய்வம். நோய் தீர்க்க மருந்தும் நோம்புக்ககு வாசனையும் தந்து ரட்சிப்பவள். காட்டு மிருகங்களும் காணிக்காரர்களும் அவள் பிள்ளைகள். பேச்சியின் மடி தீண்டு அன்னியன் நடமாடலாகாது. அவள் பிள்ளைகளைத் தீட்டு செய்யலாகாது. >
நோய் தீர்க்க மருந்தும் நோம்புக்ககு வாசனையும் தந்து ரட்சிப்பவள். நோம்புக்கு வாசனை – என்ன எளவுய்யா இது. ஒரே ஃப்ளோவா ஊத்துது. ம்புக்கு ம்புக்கு எனக்கும் ஒரே ஃப்ளோவா வருது. ஆனாப் பொம்ப்ளிங்கொ மெர்ஸ்லாயிடுமேன் உப்ப் பாக்குறேன்.
<காட்டு மிருகங்களும் காணிக்காரர்களும் அவள் பிள்ளைகள். பேச்சியின் மடி தீண்டு அன்னியன் நடமாடலாகாது. அவள் பிள்ளைகளைத் தீட்டு செய்யலாகாது.>
ஓ வெள்ளைக் காரன் கால் பட்டுடிச்சி அதனால தன் பிள்ளைகள் தீட்டாயிடக் கூடாதுன்னு காத்தா மாறி ஆத்தா எல்லாரையும் கோவத்துலக் கொன்னாளா?
கன்னத்துல உம்மா குட்த ஒரே கார்ந்த்துக்காவ குட்த்தவ்னியேக் கட்டிகிட்ட சித்ரப்பாவை மாதிர்யேக்து.
உவமை உருவகம் படிமம் இதெல்லாம் சும்மாப் பாராவுக்குப் பாரா மாறிக்கொண்டே இருக்கலாகாது. இவற்றுக்குள் தர்க்க முரண் வரலாகாது. அடுக்குமொழியில் எழுதுகிறேன் பேர்வழி என்று கண்டமானத்திற்கு அர்த்தமற்ற வார்த்தைகளை அடுக்கக்கூடாது. கருணாநிதி இலக்கியவாதி இல்லைதான். ஆனால் அதற்காக இலக்கியவாதி என்கிற லேபிளில், அடுக்கு மொழி அழகுக்காக அவரை விடவும் அதிகமாக அர்த்தமற்ற வார்த்தைகளைப் போட்டு நிரப்புவனுக்கு என்ன பெயர்?
ஐடியா ஆயிரம் வரும் உடனே சப்புக் கொட்டி எழுதத்தொடங்கினால் இதுதான் கதி. அந்தப் பொறி தர்க்க நீட்சியில் தாக்குப் பிடித்துக் தங்கக் கம்பியாக நீளுமா என்பதை முழுமையாகக் மனத்தில் காட்சிரூபப் படுத்தி பார்க்காமல், நான் எழுதியதெல்லாம் சரஸ்வதி போன கக்கா, எனவே இதற்கு நீ சாஸ்திரம் எழுதிக் கொள் ,என் சாதனை சரித்திரத்தைத் தாண்டியது என கர்ஜிப்புக் கமறல்.
மேல்மாடி காலியான கேஸுகள் ஆலத்தி எடுக்கின்றன என்பதால் இலக்கியமாகிவிடுமா என்ன?
ஜெயமோகனிடம் விஞ்சி நிற்பது அடி முட்டாள்தனமா? மிகு தந்திரமா? என்று பட்டிமன்றம் வைத்தால் கண்டிப்பாகப் பின்னதே ஜெயிக்கும்.
எப்படி?
மாபெரும் அணைகள் கட்டுவதால் உண்டாகும் வாழ்வாதார பாதிப்புகள் பற்றி ஒரு போராட்டம் எழுந்து கொண்டு இருக்கையில், அதைப் பின்னணியாகக் கொண்டு ஆதிவாசி ஒருவனே கதை சொல்வது போன்ற வடிவத்தில் அனை கட்டப் படுவதன் பெருமையை நாடகீயமாக்கி இயற்கை அவ்வப்போது சீறி மக்களை அழிக்கிறது அதன் அழிவைத் தடுக்க வேண்டியே 70 ஆண்டுகள் முன்னால் வெள்ளைக்காரன் வந்து அணை கட்டினான் என்று சரஸ்வதிக்கு அருள் வந்து ஆடும் பாஷையில் எழுதுகிறார். 
இலக்கிய அக்கறையற்ற அறிவற்ற மேம்பொக்கு ரசனையிலேயேத் தானும் ஒரு இலக்கிய அறிவுஜீவி என்பதை ஒரு பேட்ஜ் போல அணிந்து திரியும் அரைகுறைகளின் உள்ளீடற்ற மண்டைகளின் அதீத உணர்வுக் கொம்புகள், கதையில் இல்லாததையும் அதற்கு நேர்மாறானதையும் கூட வெற்று சாயல் கண்டே அதுவாக பாவித்து, ஆஹா ஓஹோவென சிலாகிக்கத் தொடங்கிவிடும்
இந்தப் பத்தி புரியாதவர்களுக்காக: 
பொதுவாக அறிவுப் போலிகள் தமக்கென வகுத்துக் கொள்ளும் அரசியல் இலக்கியப் பார்வைகளின் ஒரே நோக்கம் சுய முன்னேற்றம் மட்டுமே.  அவ்வப்போது எது எரியும் பிரச்சனையாக பரபரப்பாக இருக்கிறது, அதை எப்படிக் கலையாக்கலாம், கலையாக்கும் பாவனையில் காசாக்கலாம் இலக்கியத்தில் பெரிய காசில்லை என்பதால் எப்படிப் பேராக்கலாம் என்றே அலைவார்கள். 
நுண்ணுணர்வுக் கொம்புகளுக்கு, இது டக்கர் டைரக்‌ஷன் கே.பாலச்சந்தரில் தொடங்கும். என்னதான் ஷொல்லுங்கோ அந்த ஆள் மட்டும்தான் மண்டைல மசாலா உள்ளவன். அவரோட படங்கள் எல்லாமே பாருங்கோ இது வரைக்கும் ஒருத்தனும் அந்த ஆங்கிள்ல யோசிச்சேப் பாத்துருக்க மாட்டன்.
வித்தியாசமாகப் பண்ணுகிறேன் பேர்வழி என்கிற பேரில் குறக்களி வந்தவன் போல உலகப்படங்களின் மேலோட்டமான போஸ்களில் கைகால்களை முருக்கிக் கொண்டு நிற்கும்.
அபிராமபுரம் க்ரியா ராமகிருஷ்ணன் வீட்டில் காவி வேட்டியில், இருகால்களையும் ஒரு புறமாய் மடித்து உட்கார்ந்து இடது கையால் ஊன்றிய வண்ணம் வலக்கை சுட்டு விரலால் பாயில் கோலமிட்டபடி சுந்தர ராமசமி சொல்லிக் கொண்டிருந்தது, என் காதில் என்றும் ஒலித்துக் கொண்டு இருக்கும்.
மாமல்லன், தெருவோரத்துல கொறங்குக்கு சட்டை போட்டு வேடிக்கை காட்டிண்டு இருக்கானே அவனோட எனக்கென்ன பிரச்சனை? விட்டலாச்சார்யாவோட ப்ராப்ளமெ இல்லையே! அவரைப் பாக்கறவாளும் வேற, போகவும் அவாளே அவரை சும்மா வேடிக்கை மட்டுந்தான பாக்கறா! 
பிரச்சனை பாலச்சந்தரோடனா! அவர்தானே நம்ப வேலையைச் சிக்கலாக்கறார். நான் இங்க சீரியஸா மனுஷன், அவன் மனசுல எவ்ளோ சிடுக்கோட இருக்கான் அப்படி அவன் ஏன் இருக்கான்னு பேசிண்டு இருக்கும் போது, இந்த ஆள் குறுக்கால வந்து என் காரியத்தை சிடுக்காக்கிண்டேன்னா இருக்கார். அப்போ நான் செஞ்சிண்டிருக்கற செய்ய நெனக்கிற காரியத்துல மட்டும் கான்ஸண்ட்ரேட் பண்ணினா போறுமா! கூடவே இந்தாளோட குப்பையையும் வேற இல்ல வெலக்க வேண்டி இருக்கு. இவருக்கு எதைபத்தியாவுது – அது சரியா தப்பான்னுகூட சொல்ல வரலே – எதைப் பத்தியாவுது ஸீரியஸ் அக்கறை இருக்கா? அவருக்கு வேண்டிது ஒரு காண்ட்ராவெர்ஸி. கவனத்தைத் தன்பக்கம் ஈர்க்க என்னத்தையும் செய்யறது.  ஆனா இவர் எல்லாத்தப் பத்தியும் ஸீரியஸ் அக்கறை இருக்கறாப்பலையேப் பேசிண்டிருப்பார். 
மேடை போட்டு மைக் வத்து பாலச்சந்தர் பேசிக் கொண்டிருந்த காரியத்தையே இப்பொது காமிராவைத் தூக்கிக் கொண்டு மணிரத்தினம் காட்டிக் கொண்டு இருக்கிறார். 
இந்தக் கலைப் போலிகளுக்கு பொதுவாக இருக்கிற மத்தியதரவர்க்க நுனிப்புல் அரசியல் போக, தயிர்வடை ஹிந்துத்வத்தின் மேல் இலக்கிய பூந்தியைத் தூவினால் ஜெயமோகன் ரெடி என சொல்லிவிடலாமா? அது அவ்வலவு சுலபமில்லையா?
கண்ணதாசன் திரையிசைக் கவிப்பாடல்களுக்காகக் கொண்டாடப்படுவதைக் காட்டிலும் அர்த்தமுள்ள இந்துமதத்திற்காக அல்லவா கொண்டாடப்படுகிறார். குறிவைத்தே, இறந்தபின் பெருவாழ்வுக்காய் அந்த மொண்ணையை எழுதிக்கொண்டார்
சட்டை பேண்டைக் கழற்றி மொட்டை போட்டு வெள்ளை ஜிப்பாவுடன் கிரிவலம் வரதொடங்கிய பின்னாலேயே இளைய ராஜாவிற்கு அருள் பார்வை.
எதனால் அறியப்படுகிறார் ஜெயகாந்தன்? அவரது ஆக்கங்களிலேயே ஆகச்சிறந்த ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகத்தாலா? அல்லது ஜெயஜெய சங்கர எழுதியதாலா?
இந்த சூத்திரத்தின் சூக்ஷுமத்தை இலக்கிய உலகத்திற்குள் அடி எடுத்து வைக்கையிலேயே மிகச் சரியாகப் புரிந்து கொண்டவர் ஜெயமோகன். இல்லையென்றால் ஒரு ஆதி வாசியின் வாயில் த்ஊடையதும் அல்லாத  விசேஷ வேத பாஷையை நுழைப்பாரா? கேட்டால் அது கேரளா பார்டர் தமிழ் மலையாளம் கலந்த மொழி என்பார் அதற்காக இவ்வளவு மேட்டுக்குடி சமஸ்கிருதமா? இல்லே மயிலை வடமொழிக் கல்லூரியில் தபால் மூலம் பயின்றவரா சிங்கி மஹான். 
பிரம்மபுத்திரி பேச்சி மலைக்கு அரசி
பிரம்மா கொடுத்த அதிகாரம் பேச்சிக்கு . பேச்சி தந்த வரம் வள்ளிக்க. வள்ளியைக் கட்டுவது பேச்சியைக் கட்டுவது. பிரம்மசாபம் செகமழிக்கும். 
துரை அவளை இரும்பாணியில் ஆவாகனம் பண்ணி,
நம்புங்கள் இவை யாவும் நாட்டுப்புற கதைப்பாட்டு வடிவுல பேச்சிப் பாறை ”பற்ற்ற்றையன்” சொல்லக் கேட்டு ஜெயமோகன் அருளியது.
என் பள்ளிப் பருவத்தில், பாண்டிச்சேரியில் நிறைய ஓட்டல்களின் பெயர்ப் பலகைகள் பிராமணர்கள் சாப்பிடும் இடம் என்று இருக்கும். திமுக ஆட்சியைப் பிடித்த பின்னும், ஓரிரு அண்டுகள் கழித்தே சைவ ஓட்டல் அல்லது உணவகம் என மெல்ல மாறின. அப்போதெல்லாம் சண்டை வராத தருணங்களில் நான் வெள்ளைப் பல்லியாகவும் சண்டை போட்டுக் கொண்ட காலங்களில் சக மாணவர்களுக்கு வெள்ளைப் பன்னியாகவும் உரு மாறித் தெரிவேனாயிருக்க வேண்டும், அவ்வாறே ஜாடையாக அழைக்கப் படுவேன். கூடவே தவறாமல் குறிப்பிடப்படும் ஒரு சொற்றொடர் பிராமணர் கள் சாப்பிடும் இடம். 
ஆனால் இப்போது இணையத்தில் அடிக்கப்படும் கூத்துகள்லைப் பார்க்கையில்  அதைப் போல் ஒரு வாக்கியம் உருவானது. பிராமணர் கள் சாப்பிடும் இடம் சாதியுடன் புழங்கும் ஜெயமோகனின் டீஸ்டால்.
ஆகவேதான் மேலோட்டமாகப் புரட்டியபடி நுண்ணுர்வுக் கொம்புகள் விடைத்துக் கொள்ள ஆஹா சூப்பர் அட்டகாசம் காடெழுந்து பேசுது ஆறெழுந்து ஓடுது என்னா மொழியாளுமை என்று கூத்தாடத் தொடங்கிவிடுகிறர்கள் போலும். பிராமணண்னா பிராமணனாப் பொறந்தவன் மட்டும்தான் பிராமணனா என்ன? கிறிஸ்துவ பிராமணாள் இஸ்லாமிய பிராமணாள்ளாம் கூட உண்டில்லையோ!
ஒரு செல்லம் சொல்லிற்று ’ஆராயக்கூடாது அனுபவிக்கணும்’.
கரெக்ட். ஆம்பிடையாளை ஈரடி தூரத்துல வெச்சுண்டு ஆராயாம அனுபவிக்க நீ என்ன ஆப்ரிக்கனான்னு கேக்கத் தோண்றது. தப்புத்தான் என்ன பண்றது என் வாய் அந்த மாதிரி.

2 thoughts on “தயிர்வடை ஹிந்துத்வத்தின் மேல் தூவப்பட்ட இலக்கிய பூந்தி

  1. நல்லதை மட்டும் சொல், பார் . அல்லாததைக் கடந்து செல், பார் . இது அம்மாஞ்சி ஆட்டிட்யூட். நமக்கு ஆவாது.

    பாசிடிவ் ஆட்டிட்யுட் இருக்க வேண்டும் என்று சொல்லியே பள்ளிகளில் எங்களை மழுங்கடித்து விட்டார்கள்.

Leave a Reply