September 12, 2016 maamallan 0Comment
இந்தப் பெண்ணீய ஆப் பாயில்களின் பிரச்சனையே ஆத்திலே ஒரு கால் சேத்திலே ஒரு கால் என விளையாடிக்கொண்டு இருப்பதுதான். 

ஒருவரை விமர்சிப்பதென்று வந்துவிட்டால் குறைந்தபட்ச அறம் அதை சம்மந்தப்பட்டவரின் பெயரைப்போட்டு எழுதுவதன் மூலம் தனது விமர்சனத்தை அவருக்குத் தெரியப்படுத்துவது. இந்த அம்மிணி செய்திருப்பது கண்டனம் கூட இல்லை சாபம் என்பதால் எனக்குத் தெரியப்படுத்தவில்லை போலும். இது தற்செயலாய் இப்போதுதான் கண்ணில் பட்டது. இவர் ஆங்கிலம் தெரிந்த மிகப்பெரிய ஆப் பாயில் ஆயிற்றே. இவர் எப்படி நம்மைப் பற்றி எதுவுமே சொல்லாமல் இருக்க முடியும். அதுவும் இவரது ஆம்படையான் அந்தப் பக்கத்தில் வீரபாகுத் தேவராக ஒவர்டைம் பார்த்துக் கொண்டு இருக்கும்போது என்று தேடிப் பார்த்ததில் இது தட்டுப்பட்டது. 
கவின்மலர் என் பெயர்போட்டு ஆனால் நான் படிக்க முடியாதபடி தன் நணபர்களுக்கு மட்டும் பகிர்ந்தார். அவராவது, நான் இணையத்துக்கு வந்த பின்னரே அறிமுகமானவர். 
ஆனால் இங்கே நான் எழுத இருக்கிற நபரோ, வெங்கடேஷ் சக்ரவர்த்தியின் மனைவியான ப்ரீதம் கே சக்ரவர்த்தி. இவர் ஜுலை 20ஆம் தேதியன்றே என் கட்டுரை வெளியானவுடனேயே சூட்டோடு சூடாக என்னைப் பற்றி ஒரு பதிவு போட்டிருக்கிறார். தமிழ்கூறு நல்லுலகைப் பற்றி ஆங்கிலத்தில் சிந்தித்து ஆங்கிலத்திலேயே பதிவு போட்டுக்கொண்டிருப்பவர் எங்கே என் போன்ற தற்குறிக்குப் புரியாமல் போய்விடுமோ என்று, ஸீரோ டிகிரியை ஆங்கிலத்துக்குக் கொண்டு சென்றவர் தமிழிலேயே போட்டிருக்கும் பதிவு இது. கூகுளும் இவருடன் சேர்ந்து தமிழ் எழுதியுள்ளதைப் பெரிதுபடுத்த வேண்டாம். என்ன இருந்தாலும் ’பால்யகால’ சிநேகிதி இல்லையா.
//35 ஆண்டுகளுக்கு பின் பயணிக்கிறேன். // 
ஒ ஒல்ட் சிநேகிதி 35 ஆண்டுகள் பின்னோக்கி பயணிக்கிறீர்கள் என்று நாங்களாகப் புரிந்துகொள்ள வேண்டுமா. சரி சரி. 
//இந்த நன்பர் தான் என்னை க்ரியாவிற்கு அழைத்து சென்று அம்பையின் ‘சிறகுகள் முறியும்’ புத்தகதை வாங்க வைத்தவர்.
அதில் ஒரு சிறுகதை தான் ‘அம்மா ஒரு கொலை செய்தாள்’.// 
மிக்க நன்றி நண்பர் என்று குறிப்பிட்டமைக்கு மட்டுமின்றி ஆண்டி ஒரு கொலை செய்தாள் என ஏன் அந்தக் கட்டுரைக்குத் தலைப்பைக் கொடுத்தேன் என்று புதிய தலைமுறை வாசகர்களுக்கு விளக்க வாய்ப்பேற்படுத்திக் கொடுத்ததற்கும். 
FB லேடீஸுக்கு லீடிங் பரோபாகாரியாக பிரபலாமாக இருப்பவர் வெங்கடேஷ் சக்ரவர்த்தி என்பதனால் அவரது மனைவியான ப்ரீதம் என்று குறிப்பிடவேண்டி வந்தது. உண்மையில் பரீக்‌ஷா நாடகங்களில் நடித்த என் கல்லூரிக் காலத்திலிருந்தே ப்ரீதம் எனக்குப் பழக்கம். அப்போது அவர்கள் குரோம்பேடையில் வசித்துவந்தனர். சைதாப்பேட்டைக்கு வீடு மாறிய பின்பு, மஞ்சள் சுண்ணமடித்த அந்த வீட்டின் குட்டித் திண்ணையில் அமர்ந்திருந்தபடி அருகில் அமர்ந்திருந்த வெங்கடேஷ் சக்ரவர்த்தியைத் தான் திருமணம் செய்யவிருப்பதாக அறிமுகப்படுத்தினார் ப்ரீதம் அவர்கள்.
//இந்த குறிப்பை படித்த பிறகு இவர் அவர் தானா என்ற வினா மட்டும் தான் எழுகிறது.// 
ஏன், பெஸண்ட் நகரில் நீங்கள் குடியிருந்த வீட்டுக்கு வந்தது நினைவில்லையா அல்லது 2013 அக்டோபர் 4-5 தேதிகளில் உங்களிடம், ‘சுயத்தைக் கண்டடையும் முயற்சியில் ஓர் ஆய்வாளன்’ என்கிற என் அலுவலகக் கட்டுரையை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க மெயிலில் கேட்டு, திருத்தங்கள் செய்துகொண்டது நினைவில்லையா. 
ஓ நட்புரீதியாக இங்கே பேசவில்லை. இலக்கியரீதியாகப் பேசுகிறீர்கள். அன்று அந்த பெமினிஸ்ட் கதையை கண்டிப்பாகப் படிக்க வேண்டியது என்று சொல்லி வாங்க வைத்தாயே இன்று என்ன ஆயிற்று உன் பெண்ணியம் என்று கேட்கிறீர்களா. 
கொஞ்சம்கூட மாறாமல் அது அப்படியேதான் இருக்கிறது. 
அம்மா ஒரு கொலை செய்தாள் கதை என்ன சொல்கிறது, தான் பெற்ற பெண்ணின் மனதைப் புரிந்து கொள்ளாமல், தன்னுடைய நுண்ணுணர்வற்ற, உனக்கென்னடி இப்ப அவசரம் என்கிற சொற்களால், மகளை மனதளவில் கொலை செய்ததைச் சொல்கிறது. 
காரோட்டிக்குக் காசு கொடுக்காததோடு மட்டுமின்றி, தன் கூலியைக் கொடுக்கச் சொல்லிக் கேட்ட அவனை, சுவாதி கொலையுண்ட பிண்ணனியைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, ஏதோ கொலை செய்ய வந்ததைப் போல சீன் போட்டு அவனை  ஜெயிலில் தள்ளி மனதளவில் அவனைக் கொலை செய்ததைச் சொல்கிறது என் கட்டுரை எனவேதான், ஆண்ட்டி ஒரு கொலை செய்தாள் என்கிற இந்தத் தலைப்பு. மனதளவில் கொலை செய்யப்பட்ட அவனை உயிர்த்தெழ வைக்கவே அந்த நிதி திரட்டல். மற்றபடிக்கு எல்லா ஆப் பாயில்களும் ஒரே குரலில் கத்தியதைப் போல, அதிலிருந்து ஒரு பைசா கூட எந்தப் பெண்ணுக்கு எதிராகவும் செலவழிக்கப்படவில்லை என்பதே சத்தியம்.
பெண்ணியத்தின் முன்னோடியாகத் தமிழில் போற்றப்படும் ஒரு கதையின் தலைப்பை, போலிப் பெண்ணீயத்தின் விளைவைக் குறிக்கப் பயன்படுத்தினேன். இதில் என்ன தவறு.
//யார் மீது இத்தனை காழ்ப்பு// 
இதில் எங்கிருக்கிறது காழ்ப்பு. அம்மா தனது பெண் வயதடைந்ததன் மனநிலையை கிலேசத்தைப் புரிந்துகொள்ளாமல் கொலை செய்து விட்டாள் என்று கதையில் எழுதினால் அது பெமினிஸம். 
நடந்ததைத் திரித்து, பெண்ணீய போராளியாய்க் காட்டி விளம்பரம் தேடிக்கொள்ள ஒரு அப்பாவியை நிஜ வாழ்க்கையில் ஜெயிலுக்கு அனுப்பி வைத்தார் என்று எழுதினால் அது காழ்ப்பா. 
இந்த ஓலா பிரச்சனைக்கு முன்பாக அவர் பற்றி நான் எழுதிய ஏதாவது ஒரு பதிவைக் காட்டுங்கள் பார்ப்போம். முன்விரோதம் இருந்தால்தானே காழ்ப்பென்ற பேச்சே வரும். அந்த அம்மாளுடன் எனக்கு ஸ்நானப் ப்ராப்தியே கிடையாது எனும்போது எங்கிருந்து வருகிறது காழ்ப்பு.
//மத்தய அரசு நிருவனத்தில் வேலை செய்யும் ஒருவர் வேலை விடுப்பு எடுத்து இவ்வளவு ஆறாய்ச்சி செய்ய என்ன தூண்டியது// 
விமலாதித்த மாமல்லனுக்கும் மத்திய அரசு நிறுவனத்துக்கும் என்ன சம்மந்தம். உண்மையில் இது அல்லவோ காழ்ப்பு. பெண்ணீயர்களின் விளம்பர வெறியை அம்பலப்படுத்திவிட்டானே என்று நீங்களல்லவா இவன் இன்ன வேலை செய்கிறான் என்று இப்போது போட்டுக் கொடுத்து வேலைக்கு உலை வைத்துவிடுவோம் என்று பூச்சாண்டி காட்டிக்கொண்டு இருக்கிறீர்கள்.
அட்ரா சக்கை, அந்த அம்மிணி, போலீசில் என்னைப் பற்றிக் கொடுத்த புகாரில், இந்த அரசு நிறுவனத்தில் இன்ன பதவியில் வேலை பார்க்கும் இவன் என்று பிராது தொடங்குவது இதிலிருந்து பிடித்த நூல்தானா. நூலில்லா பெண்களிடையிலும் நூலோர்தான் மேலோரா. வாழ்க வளமுடன். 
66A சட்டத்துக்குப் புறம்பானது என்று உச்சநீதி மன்றம் கூறிவிட்டதால், FB விவாதங்களை விமர்சனங்களை வைத்து இவனை ஒன்றும் செய்ய முடியாது என்பதால் அரசு ஊழியன் என்று சொல்லி உள்ளே தள்ளப் பார்ப்பது காழ்ப்பின்றி வேறு என்ன. 
35 வருடங்களாக இலக்கியத்தில் இருக்கும் விமலாதித்த மாமல்லன் என்கிற எழுத்தாளன் எழுதியதற்கு, நரசிம்மன் என்கிற அரசு ஊழியனைப் பொறுப்பாக்குவதுதான் பெண்ணீய அறமா. புனைபெயரில்கூட அரசை விமர்சிக்கும் உரிமை அரசு ஊழியனுக்குக் கிடையாது என்பதுதானே சட்டம். போலிகளை விமர்சிக்கக் கூடாது என்று எந்த சட்டம் சொல்கிறது. இதுதான் பெருமாள் முருகனின் எழுத்துரிமையை கருத்துரிமையை நீங்கள் ஆதரித்த லட்சணமா. அவர் எழுதியது கொங்கு வேளாளர் பற்றி உங்களைப் பற்றியல்ல என்பதுதான் உங்கள் கருத்துச் சுதந்திரக் கதறலுக்கான அடிப்படையா. மதவெறியர்கள் சாதி வெறியர்களிலிருந்து நீங்கள் எந்த விதத்தில் உசத்தி. வேறு ஜாதியினரைப் பற்றி எழுதியிருந்தால் அவர்களும்தான் பேசாதிருந்திருப்பார்கள். பெண்ணீயத்தைப் புதிய ஜாதியாக ஆக்கிக்கொண்டு இருக்கிறீர்களா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். 
பெருமாள்முருகன் எழுதியது புத்தகம். இங்கே நடந்தது நிஜம். ஒரு மனிதன் உள்ளே போயிருக்கிறான் அதைப் பற்றி உங்களுக்கு எள்ளளவும் கவலையில்லை. ஏனென்றால் உள்ளே அனுப்பியது ஒரு பெண். அதுவும் உங்களது பெண்ணீய ஜாதியைச் சேர்ந்த ஒரு பெண் எனவே கண்ணை மூடிக்கொண்டு அதை ஆதரிப்பீர்கள் இல்லையா.
உண்மையில் உங்களுக்கு இருப்பதுதான் காழ்ப்பு. அதற்கான காரணம் உங்கள் கணவரின் அபத்தமான கமெண்ட்டை நான் கைகொட்டிச் சிரித்தது. அதனால்தான் நான் உங்களுக்கு எதிரியாகிவிட்டேன் என்பதுதானே அரசு ஊழியன் என்று என்னை இழுத்து விடுவதன் பின்னே உள்ள வஞ்சகம். 
இதை நான்
//இது போல இனி என்ன எமெஜன்ஸினாலும் என்னைக் கூப்பிடுமா எங்கிட்ட வண்டியும் இருக்கு நான் நிஜமாவே வேகமாவும் ஓட்டுவேன் 
தாத்தா, ஆண்ட்டியோட பிரச்சனையே டிரைவர் ஸ்பீடா ஓட்டினான்கறதுதான். பாவம் உங்குளுக்குக் கை வேற நடுங்குது
ஆங். கொஞ்சம் கிட்ட வந்து சொல்லு//
இப்படிக் கிண்டலடித்துவிட்டேன் என்பதுதானே என் மீது உங்களது காழ்ப்பு.
வியாபாரம் என்று எழுதினால் அதை விபச்சாரம் என்று எழுதியதாகத் திரித்து, அவன் வயிற்றிலடிக்க வேலை பார்க்கும் பத்திரிகைப் படி ஏறுவது பெண்ணீயப் பாரம்பரியத்தில் இருப்பதுதானே.
இந்திய சுதந்திர தினத்தை இழிவு படுத்திய புலி ஆதரவாளரான தமிழ் நதியை எதிர்த்ததால் வந்த விவாதத்தில், நான் காபரா என்றதை காபரே என்று சொன்னேன் என்று திரித்தும் மேக்கப் அய்ட்டமா என்று உதாரணமாகச் சொன்னதை, என்னை அய்ட்டம் என்று சொல்லிவிட்டான் என்று திரித்தும் தலைவிரித்து ஆடிக்காட்டியது ஃபேஸ்புக் பெண்ணீய வரலாறில்லையா.
படித்துக் களியுங்கள். 
போலிப் பெண்ணீயத்தை ஆப் பாயில் என்கிறேன் என்று என் ஃபேஸ்புக்கை முடக்கி இருக்கிறீர்கள். இப்போது நக்ஸலைட் பெண்ணீயமும் புலிப் பெண்ணீயமும் கைகோர்த்துக் கொண்டு, போலீஸ் சைபர் கிரைம் என்று படிப்படியாய் ஏறி என் வலைதளத்தையும் முடக்கப் போகிறீர்களா. முடிந்தால் அதையும் செய்யுங்கள்.
//விலாசினியின் மீது தனிப்பட்ட கோபமா,// 
தமிழ்நதியிடம், இந்திய சுதந்திர தின வாக்குவாதத்துக்கு முன் எனக்கென்ன வாய்க்கால் தகறாரு என்று காட்டுங்களேன் பார்ப்போம். போலவே நக்ஸலைட் அம்மிணி திவ்யா பாரதியுடனோ அல்லது நிலவுமொழி செந்தாமைரையுடனோ ஏதாவதொரு சண்டையோ சச்சரவோ இருந்திருக்கிறதா என்றும் காட்டுங்கள். மனசாட்சியே இல்லாமல் என்னைப் போய் பெண் வெறுப்பாளன் என்கிறீர்கள் எல்லோரும் ஒன்றாய்க் கூடி.
சின்ன வயதிலிருந்தே, பெண்களுடன் பேசினால் காதறுந்துவிடும் என்று என் அம்மா சொல்லிக்கொடுத்தபடி எந்த வம்புக்கும் போகாமல் அஞ்சி நடுங்கி வாழ்ந்துகொண்டிருப்பவன் நான். நிஜ வாழ்வில் காது மட்டும்தான் அறுந்துவிடும். இணையத்திலோ பெண்ணீய ஆப் பாயில்களைப் பற்றிய பேச்சை எடுத்தாலே வேலை போய்விடும் ஜெயிலுக்குப் போக வேண்டி வரும் என்று இப்போதல்லவா தெரிகிறது. 
பெண்ணீயம் பெண்ணீயம் என்று வாய்க்கு வாய் வீறாப்பு பேசிக்கொண்டு, விமர்சித்தால் அதற்கேற்ற பதிலடி கொடுக்காமல் போலீஸில் போய் கண்ணைக் கசக்கி, ’எதிரியின்’ வாழ்வை நசுக்கப் பார்ப்பதுதான் பாரதி சொன்ன நேர்கொண்ட பார்வையும் நிமிர்ந்த நன்னடையுமா. நன்றாக இருக்கிறது. 
//அல்லது தாய் என்ற பிம்பத்தின் மீது ஒரு தனி மரியாதையா// 
வெங்கடேஷ் சக்ரவர்த்தியின் பல இறக்குமதிக் கோட்பாடுகளில் ஏதோ ஒன்றின்படி பேசுகிறீர்கள் என்று எண்ணுகிறேன். சத்தியமாகப் புரியவில்லை.
//சொந்த வாகனத்தில் பயணிப்பள் தான் நான்.//
வாகனம் சொந்தம் சரி. வாகன ஓட்டி வெங்கடேஷ் சக்ரவர்த்திதானே 
//75 கி. மீடர் என்பது சாவை தேடுவது.// 
என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள். வெங்கடேஷ் சக்ரவர்த்தி என்னடாவென்றால் நரேன் கார்த்திகேயனைவிட தான் வேகமாகக் கார் ஓட்டுபவர் என்று சொல்லிக் கொள்கிறார். ஒ அது சும்மா பெண்களின் பதிவுகளில் போடும் கமெண்ட் மட்டுமேவா. நீங்களோ வீட்டிலேயே விஸ்கி குடிப்பவர். அதை உங்கள் கணவரே பெருமையாய் ஃபேஸ்புக்கில் போட்டோ வேறு போடுமளவுக்குப் பெண்ணீயவாதி. உங்களுக்குத் தெரியாத பார்ட்டியில்லை. நிஜமாகவே சொல்லுங்கள் சனி இரவு 9-9.15 மணிக்கு, காலியாகக் கிடக்கும் ராஜீவ் காந்தி சாலையில் 75 கிலோமீட்டர் வேகத்தில் (நான் போட்டத் தப்புக் கணக்கையே நீங்களும் அப்படியே எடுத்துக் கொண்டு எழுதியிருக்கிறீர்கள். உண்மையில் அது 45 கிலோமீட்டர் வேகம்தான்), குடிக்காத நபர் ஓட்டுவது சாவைத் தேடுவதா. 75 கிலோமீட்டர் ஸ்பீடு கூட ஓட்டாமல் சாவைத் தேடாத உங்கள் கணவர், எப்படி தான் நிஜமாகவே ஒரு வேகக் காரோட்டி என்று சொல்லிக் கொள்கிறார் என்று கேட்டுப் பாருங்களேன். அந்தக் காரோட்டி சொல்வதைக் கொஞ்சம் கேட்டுப் பாருங்கள் அவர் வந்த வேகம் என்பதை அவர் வாயேலேயே கேளுங்கள். கூடவே என்ன நடந்தது என்பதையும். https://soundcloud.com/valar-mathi-1/driver-interview 
//நானும் அந்த ஓட்டுனரை குறைக்க சொல்வேன். 
நானும் தாய், பாட்டி கூட.//
அப்பத்தாவுக்கு அவர் வண்டிய வேகமா ஓட்டினது மட்டும்தான் பிரச்சனையா. வம்படியா காசு குடுக்காமப் போனது பிரச்சனை இல்லையா. காசும் குடுக்காம கம்ப்ளெய்ண்ட்டும் குடுக்கிறதுதான் உங்க குல வழக்கமா.
//சமூக வளையில் நமது புற வாழ்வை பகிர்ந்து கொள்வது தான்.// 
இது அக நானூறுல வருமா புற நானூறுல வருமா அப்பத்தா
//ஒருவரின் அக வாழ்வை ஆராய்வது அல்ல.// 
அப்பத்தா நான் எங்க ஆராய்ஞ்சேன். அதுக்குல்லாம் இடமே குடுக்கலையே உங்காத்துக்காரர். அவரே வரலாற்றுப் பதிவா பப்ளிக்கா போட்டதுதானே இது. இதை எத்தனை அறிவுஜீவிகள் என்னென்ன விதமா சிலாகிச்சு பேசறாங்க பாருங்க. 
இந்த அறிவு சீவிகள் எல்லாருமே டாஸ்மாக்கை மூடணும்னு சொல்றவங்கதான் இல்லையா. சாம்பிள் பீஸாக இந்தக் காமாக்ஷி காமெடி பீஸு. 
//போற்றுவார் தூற்றலும் அவர் சொல்லும் ஆண்டவனுக்கே.//
அட இதையேதான் அப்பத்தா உங்கூட்டுக்காரரும் சொல்றாரு. என்னா அவுரும் ஒரு அறிவு சீவிங்கிறதால, ஆண்டவன்னு ஓப்பனா சொல்ல மிடில. 
பாட்டிம்மா ஏதோ பழைய நெனப்புல உரிமையோட கிண்டலடிச்சிட்டேன் தப்பா எடுத்துக்காதே. உங்கூட்டுக்கார் சொன்னது சும்மா ஃபேஸ்புக்குக்குதான் மெய்யாலுமில்லேனு சொல்லி, ஏடாகூடமா ஏதும் செஞ்சி வெச்சிறாதே. நக்ஸலைட்டு ஆதரவாளர்கள் காஷ்மீர் பிரிவினை ஆதரவாளர்கள் புலி ஆதரவாளர்களையெல்லாம் விட, அந்த ஒலா ஒட்டுநர் மேரியான இன்னொரு படுபயங்கர பயங்கரவாதி நான் அப்படின்னு நினைச்சி, அம்மிணி குடுத்த பிராது மேல ஏற்கெனவே என் பேஸ்புக்கை முடக்கி வெச்சிருக்கு போலீஸு. இப்ப நீ வேற, போலீஸ் ஸ்டேஷன் கமிஷ்னர் ஆபீஸ்னு டெய்லி ஆட்டோ பிடிச்சி போய், அவன் மேல ஆக்‌ஷன் எடுங்கன்னு ஆக்‌ஷன் எடுங்கன்னு கண்ணைக் கசக்கிக்கிட்டு கம்ப்ளெய்ண்ட் குடுத்துறாதே தாயி, பேத்தியோட பேரனும் பொறந்து நீ நெடுங்காலம் குடியும் குடித்தனமுமா நீ நல்லா இருப்பே.

Leave a Reply