February 14, 2011 maamallan 10Comment

கூகுள் பஸ்ஸில்
ஸ்ரீதர் நாராயணன் – //புனைவு என்றால், மற்றவர்கள் பற்றி அவர் கூறுவது எப்படி எடுத்துக்கொள்வது, போகிற போக்கில் தூற்றுவது போலா? // 
அது எம்விவியோட நடந்த சந்திப்பை முன்வைத்து எழுதப்பட்ட கதைதானே. பிறகு வெளியிட்ட ஒரு கடித்த்தில் ‘இந்தக் கதை பல வருடங்களாக எழுதப்படாமல் ஏதோ குறைவது போலிருந்தது…. பிறகு அந்த ஆச்சி வந்து சேர்ந்த பிறகு நிறைவடைந்தது’ என்று எழுதியிருக்கிறார்.
***********
எனக்கு ஆரம்பத்தில் இருந்தே நெருடிக்கொண்டிருந்த விஷயங்கள். 
1.ஆச்சி உட்காரும் தார் ரோடு. திருச்சியில் தெப்பக்குளத்தருகில் 50ல் தார் ரோடு போடப்பட்டிருக்குமா? மெளண்ட் ரோடு தவிர மெட்ராஸிலேயே அப்படி இல்லாத போது மலைக்கோட்டை கோயில் தெப்பக் குளத்தை சுற்றி…? கூகுளில் எவ்வளவு தேடியிருப்பேன். 50களின் ஸ்ரீரங்கம் கிடைத்தது மெயின் கார்டு கேட் என்ற பெயரில் இருக்கிறது தார் ரோடு? இன்னமும் தெளிவாகவில்லை. திருச்சிக்காரர்களை அவர்களின் தாத்தாக்களைக் கேட்டுக் கொண்டுதானிருக்கிறேன். அதற்கு அவசியமெ இல்லை என்பது போல ஸ்ரீதர் நாராயணன் குரிப்பிடும் ஜெயமோகனின் கடித பதில்.
யோவ் கதையிலப் போயி இதெல்லாம் பார்க்கலாமா?
அடங்கோ இது இன்னா கப்பிக் கவுதாரி மாத நாவல் புக்கா? காலத்தால் அழிக்க முடியாத கலாச்சார பொக்கிஷம்.  வரலாற்றுப் பதிவுகள். இலக்கியம். 
தேவிடியா கிட்டப் போனதை ஜெயிலுக்கு லாக்கப்புக்கு சேரி குடிசைக்குள்ள போன ஜி.நாகராஜன் கதையிலையே இதெல்லாம் பார்க்கும் போது கடவுள் கிட்டப் போயி எழுதற கதைல ஏன் பார்க்கக் கூடாது?
எம்.வி.வியால் சொல்லப்படாத ஆச்சியை ’அறம்’ கதையில் கற்பனையில் உற்பவிக்க ராம கர்ப்பமாக 13 மாதமல்ல, 10 வருஷம். 
கொதிக்கும் தார் ரோட்டில் சப்பென உட்கார்ந்து சதை வழண்ட ஆச்சியின் சூத்தைக் கதையில் இருந்து தூக்கிட்டா கதை சூத்துத் தொடைக்கவாவது தேறுமா?
ஒரு மெலோ ட்ராமா படம் காட்ட பத்து வருஷம் கதை பண்ணுவோம். அதற்கு உண்மைக்கதையின் தோற்றத்தைக் கொடுக்க எம்.வி.வியின் வீக்கிப்பீடியா முலாம் பூசுவோம். இதைத்தானே மணியண்ணா செய்கிறார் சினிமாவில். 
கஷ்மீர் வெடிக்கத் தொடங்குதா ரோஜா குடு! கலவரம் நடந்து முடிஞ்சிருக்கா பம்பாய் எடு! கன்னத்தில் முத்தமிட்டு ஈழத்தைக் காசாக்கு! ஏழு சகோதரிகள் எரிகின்றனரா எடுடா உயிரை! எரியும் எல்லாப் பிரச்சனைகளும் எனக்கு நாடகமேடையின் பின்திரைச் சீலை. இயக்குநருக்கு ஏற்ற கதாசிறியர். செத்துப்போன இலக்கிய வாதிகளை பின்திரையாக்கி அரிதாரம் பூசி அவதாரம் எடு! 
ஒக்காளி சொன்னார்டா எங்க சுந்தர ராமசாமி! உழைப்பின்றி கற்பழிப்பில்லை. உழைப்பிற்குப் பின்னிருக்கும் பிரக்ஞையே முக்கியம் (ஜேஜே).
2000ல் இறந்து போன எம்.வி.வியுடனான சந்திப்பு (அப்படி ஒன்று நடந்ததா? என்பதே எனக்கு இப்போது சந்தேகமாக இருக்கிறது). தஞ்சைப் பிரகாஷ் பிரபஞ்சன் ஆகியோர் எம்.வி.வியை எடுத்த பேட்டி, கண்ணதாசன் பத்திரிகையில் வெளியாகிப் பின் அவரது  ”என் இலக்கிய நண்பர்கள்” என்கிற புத்தகதில் வெளியாகி இருக்கிறது என்பது நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து அறிய வந்த தகவல். (புத்தகம் கிடைத்தால் பேட்டி என் ஸ்கேனருக்குள் போய் பதிவேறும்). அந்த பேட்டியில் எம்.வி.வி லாசரா, மெளனி தி.ஜா என அவர் காலத்து இலக்கியவாதிகளைப் பற்றிக் நிறைய அபிப்ராயகங்கள் கூறியுள்ளார். சார் நன்றாக கவனியுங்கள் ஹேஷ்யங்கள் உண்டாக்கும் விதமாக, எம்.வி.வி கிசுகிசு கதை எழுதவில்லை. ஒரு பேட்டியில் நேரடியாகத் தன் அபிப்ராயத்தைக் கூறியுள்ளார். அதை வைத்து எம்.வி.வியை ஆஹா எனவும் சொல்லலாம் அடச்சீய் இவன் ஒரு ஆளா எனவும் படிக்கிற வாசகன் முடிவுக்கு வரலாம்.அதற்கு வாய்ப்பளித்து பொறுப்பேற்று எம்.வி.வி சொன்ன அவரது அபிப்ராயங்கள். அவை உண்மையோ பொய்யோ ஆண்டவனுக்கும் அவருக்கும் மட்டுமே தெரியும், இன்னொரு சமகாலத்தவர் சொல்லாதவரை.
அந்தப் புத்தகத்தை வீக்கிப்பீடியாவாக வைத்துக் கொண்டு புனைவும் கட்டுரையுமாக வாசகனை மயக்கமுற எழுத்தில் பின்னுகிற ஜெயமோகன், தன்னை முன்னிருத்துவதில் மட்டும் தெளிவாக இருக்கிறார். இப்போது கொஞ்சம் யோசியுங்கள். ”ஜெமோவின் செருப்பு தூக்கல்” மற்றும் ”இவருக்குன்னா எல்லாக் கதவும் திறக்கும்” இவை இரண்டுமெ ’உண்மையில் நடக்கவும் இல்லை எம்.வி.வி சொல்லவும் இல்லை’, ஆச்சியைப் போன்றே 10 வருட வெறும் கற்பனை எனில் ங்க்கொக்காமக்கா எங்கடா இருக்குது அறம். 
இதை சொல்வதற்காக என்னை இந்திய தேசத்தைத் துண்டாடுபவன் எனத் திட்டமாட்டீர்கள் என நினைக்கிறேன். மாமல்லனுக்கு மரை கிரை கழண்டுவிட்டதா இங்கெதற்கு சம்பந்தா சம்பந்தமில்லாமல் இந்தியா பற்றியெல்லாம் இழுக்கிறான் என வடக்கிலிருந்து ஏதேனும் ஒரு கரை, சொம்பு தூக்கக்கூடும். அதுகளின் அரோகரா காவடிக்குச்சலில்தான் காது கிழிகிறதே! 
இலக்கியம்தான் ஜெயமோகன்! ஜெயமோகன்தான் இலக்கியம்!
கொஞ்சம் ஜெயமோகன் போலவே கற்பனையைக் கட்டவிழ்த்தால்….
இந்தியாதான் ஜெயமோகன்! ஜெயமோகன்தான் இந்தியா!
மம்தா பேனர்ஜி அனுப்பிய ரயிலில் சென்னை வந்தேன். அவசரம் காரணமாக, பின்னொரு சமயம் அகமத் படேல் நிர்வகிக்கும் விமானத்தில் சென்னை வந்தேன் என்று மிஷ்கின் அனுப்பிய கார் அல்லது மணிரத்தினம் chauffeur ஆக ஓட்டி வந்த கார் என பீற்றிக் கொள்வது போல அல்லாமல் அறம் கதையில் ஜெயமோகன் ஜெயமோகனாகவே வருகிறார். பரவாயில்லையே என்று பார்த்தால், முதல் பத்தியிலேயே பார்த்தியா நான் எவ்ளோ பெரிய எழுத்தாளன்.சினிமாவிலேயெ ஓஹோவெனக் கொண்டாடப்படும் நான் உனக்கொரு ஏழை எழுத்தாளனின் கதை சொல்லுவேன் குக்கூ குக்கூ என பில்டப் கொடுத்தால் சரஸ்வதிகிட்ட ங்கா குடித்தவர் எனக் கூடிக் குலவையிடும் கும்பலின் நெம்பர் கூடாமல் போகுமா? 
வெட்கமோ கூச்சமோ இன்றி அவர் புட்டத்தை அவர் தூக்க, அதற்கு அரும் பொருள் பதவுரை சொல்லி பல்லக்குத் தூக்க ஒரு ஜால்ராக் கூட்டம்.
இப்படியான கதைகள் எழுதுகையில் ஜெயமோகன் கடவுளிடம் சென்று வருகிறாராம். அது உண்மை என்றால், ஜெயமோகனின் கடவுள் இருக்கும் பொந்து, சோனா கஞ்சின் சந்து.

10 thoughts on “ஜெயமோகனின் கடவுள் இருக்கும் பொந்து சோனா கஞ்சின் சந்து

  1. Mamallan – தெப்பக்குளத்தை சுற்றிய நான்கு தெருக்களும் தார் சாலை தமிழகத்துக்கு வந்த காலத்தில் இருந்தே தார் சாலையாக தான் இருந்து வந்துள்ளதாம். ஆறு வருடங்களுக்கு முன்பு எனது 20 வது வயதில் எனது தாத்தா சொன்ன தகவல். பழனியப்பா பிரதேர்ஸ் இருந்த இடம் அங்கு தானே.

  2. //கூகுளில் எவ்வளவு தேடியிருப்பேன்.// நிறையத் தேடுங்க மாமல்லன். ஏதாவது கிடைத்தாலும் கிடைக்கும் 🙂

    //வெட்கமோ கூச்சமோ இன்றி அவர் புட்டத்தை அவர் தூக்க, அதற்கு அரும் பொருள் பதவுரை சொல்லி பல்லக்குத் தூக்க ஒரு ஜால்ராக் கூட்டம்.//

    வெகு ஆபாசமா இருக்கு. வேற வழியில்லை. உங்களை வருத்தத்துடன் தாண்டிப் போகிறேன்.

  3. @ஸ்ரீதர் நாராயணன்:
    //வெகு ஆபாசமா இருக்கு. வேற வழியில்லை.//

    கரெக்ட் அதனாலதான இந்தப் பதிவே எழுத வேண்டி வந்தது.

    //உங்களை வருத்தத்துடன் தாண்டிப் போகிறேன்//

    நீங்க எங்கியோ கடவுளை ஏள பண்ணிகிட்டு இருக்கீங்கன்னில்லே நெனச்சிகிட்டு இருக்கேன். இப்பதான் என்னையே தாண்டறீங்களா!

    தாண்டிட்டீங்களா! மிக்க நன்றி.

  4. மாமல்லன் ஐயா… உஙக்ளோட இலக்கிய விசாரத்தில் என்னைப் போன்றவர்கள் பங்கெடுக்க முடியாததற்கு வருந்துகிறேன். இதற்கு காரணம் உங்கள் வெறுப்பும், உங்கள் மொழியும் மட்டுமே. உங்களுடைய மறுமொழிகள் என்னைக் கிண்டல் செய்வது போல் இருப்பதனால் நான் இதை இங்கே பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. மன்னிக்கவும்.

  5. அன்புள்ள மாமல்லன்,

    நீங்கள் ஜெயமோகன் என்ற பேரைப் பார்த்ததும் புட்டம், சூத்து என்று ஒரு இலக்கிய விவாதத்தில் இறங்கிவிடுவீர்களோ என்று ஒரு சின்ன தயக்கம் இருக்கிறது. இருந்தாலும் நீங்கள் அப்படி sidetrack ஆகாமல் இருந்தால் நிறைய உருப்படியாக பேசுவீர்களே என்ற ஆசையும் இருக்கிறது. அதனால்தான் எழுதுகிறேன்.

    அறம் சிறுகதையையே எடுத்துக் கொள்ளுங்கள். கதையில் வரும் பெரியவர் எம்.வி.வி. இல்லை. எம்.வி.வி.யை ஒரு template ஆக வைத்து உருவாக்கப்பட்டவர். சாமிநாதனுக்கும் ஒரு நிஜ template இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். அதில் வரும் ஜெயமோகனும் அப்படித்தான். கதையில் வரும் திருச்சி என்ற நகரமும் அப்படித்தான் ஒரு template வைத்து உருவகிக்கப்பட்ட ஒரு கற்பனை நகரம். அதில் எவ்வளவுக்கெவ்வளவு template பொருந்துகிறதோ அவ்வளவுக்கவ்வளவு நம்பகத்தன்மை அதிகரிக்கும், அவ்வளவுதான். நிஜ திருச்சியில் அப்போது தார் ரோடு இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். எம்.வி.வி.யின் வெற்றிலை செல்லம் வெள்ளியில் செய்திருக்கலாம், பித்தளையில் செய்திருக்கலாம். அந்தக் காலத்தில் கோலப்பொடி விற்பவர்கள் "கோலாப்டீ" என்று கூவாமல் "கொலப்டி" என்று கூவி இருக்கலாம். அந்த விவரங்கள் எல்லாம் வெறும் அலங்காரம்தானே! கதை விளைவிக்கும் உணர்வை மாற்றுவதில்லையே? திருச்சி நகரமே பனியில் மூழ்கி இருந்தது, அந்த பனியில் உட்கார்ந்து ஆச்சிக்கு ஜன்னி என்று எழுதினால் நம்பகத்தன்மை என்பது துளியும் இல்லை, எழுத்தாளர் என்ன மயக்கத்தில் இதை எழுதினார் என்று கேட்கலாம். இப்போது நீங்கள் நுன்விவரங்களைப் பற்றி எழுப்பும் ஆட்சேபணை எல்லாம் அருமையான விருந்து சாப்பிடும்போது தலைவாழை இலையை இடம் வலமாக மாற்றி வைத்துவிட்டாரே என்பது போல இருக்கிறது. அப்புறம் ஜெயமோகன் என்ற பாத்திரத்தின் செருப்பை ஒருவர் தூக்கிக்கொண்டு போனார், புகழ்ந்து இரண்டு வார்த்தை பேசினார் என்பது நடக்க முடியாத விஷயமா என்ன? செருப்பை தூக்கிப் கொண்டு போவது எல்லாம் நானே பார்த்திருக்கிறேன், செய்திருக்கிறேன். சாமிநாதன் எழுத்தாளர்களை தெய்வமாக வணங்கும், உயர்த்திப் பிடிக்கும் ஒரு பாத்திரம், அவர் வீட்டுக்கு வந்த ஒரு புகழ் பெற்ற எழுத்தாளரை ஐஸ் வைத்து இரண்டு வார்த்தை பொய்யாகவாவது பேசமாட்டாரா?

    நுன்விவரங்களில் தவறு இருந்தால் ஒன்றும் பிரச்சினை இல்லை என்று சொல்ல வரவில்லை. பியூனுக்கு ஐம்பதுகளில் நூறு ரூபாய் சம்பளம் என்பது தவறே. (ஆனால் எம்விவி, சாமிநாதன் போன்ற பாத்திரங்கள் மிகைப்படுத்திக் கூறல் எப்போதும் நடக்கக் கூடியது) ஆனால் அது கதையையே நிராகரிக்கக் கூடிய அளவு பெரிய விஷயமா?

    நீங்கள் வாசகர் மட்டுமில்லை, திறமையான எழுத்தாளரும் கூட. எழுத்து இப்படி இருந்தால்தான் சரி, அப்படி இருந்தால் தவறு என்று ஏதாவது விதிகள் வைத்திருக்கலாம். அந்த விதிகளை இந்த கதைகள் சரியாக கடைப்பிடிக்காமல் இருக்கலாம். இரண்டு வகையிலும் உங்கள் எண்ணங்களை தெரிந்து கொள்ளவே இதை எழுதுகிறேன். ஜெயமோகன் என்ற மனிதருடன் உங்களுக்கு பர்சனலாக பல பிரச்சினைகள் இருக்கின்றன என்பது தெளிவு. ஜெயமோகன் என்ற எழுத்தாளருடன், அவருடைய கதைகளுடன், குறிப்பாக இந்த சமீபத்திய கதைகளுடன் உங்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் பற்றி மட்டுமே பேச விரும்புகிறேன். அப்படி விவாதிக்கக் கூடிய நிலையில் நீங்கள் இல்லாவிட்டால் அது என் துரதிருஷ்டம், உங்கள் நேரத்தை வீணடித்ததற்கு வருந்துகிறேன்.

  6. RV:

    பாஸ் உங்காத்துல எதை ஒண்ணையும் அலம்பறதா கழுவறதான்னு ஜெயமோகனப் பெருமாள் சொல்லிக் குடுப்பார். அது மாதிரி இருந்து வைகுண்டத்தை சேவிங்கோ.

    இப்படி கெக்கறே பெக்கறேன்னு விவாதிச்சி இலக்கிய மசுரெல்லாம் வளராது. அந்தாளு என்கிட்ட 10 கோடி ரூவா கைமாத்தா வாங்கிகிட்டு ஏமாத்திட்டான். அதான் என் கோவம்.

    ஆர்வி நீ இப்பதான் நேர் கதையே படிக்கிற அளவுக்கு எழுத்து கூட்டிண்டிருக்கேன்னு சொல்றதையும் லபக்கிண்டு இங்க அவனுக்கு வக்காலத்தா?

    அவனையும் படி என்னையும் படி நான் மித்தவனுங்க மாதிரி காத்துலக் கையடிக்கிறவன் இல்லை.

    ஒன்னு நல்லா இருக்குன்னா ஏன் நல்லா இருக்குங்கறதையும் நல்லா இல்லாததை ஏன் நல்லா இல்லேங்கறதையும் அக்குவேற ஆணிவேறையாப் பிரிச்சி சொல்ற மோட்டார் வண்டி மெக்கானிக்.

    வேலைக்காரன் சாமான் வெள்ல இருந்தா என்னா உள்ள இருந்தா என்னா?

    ஜெமோ பத்தி எழுதினதை மட்டும்னு இல்லாம நான் எழுதற எல்லாத்தையும் படி.

    க்ருஷ்ணா நீ பேகனே பாரோ என உருப்பட வாய்ப்புண்டு.

  7. RV

    இப்படியெல்லாம் சொல்லி என்னை சங்கடப்பட வைக்க வேண்டாம்.

    ”எழுத்து என்பது தன் சுனையைத் தானே தேடிக்கொள்ளும் முயற்சி” – சுரா

Leave a Reply