September 10, 2016 maamallan 0Comment
நமக்குப் பாடம் எடுக்கிறார் வன்முறையை போதிக்கும் நக்ஸலைட் காம்ரேட்

இவர் சொல்லிய மார்க்ஸீய லெனினீய பெண்ணீய ஜோசியம் என்ன. 
//அந்த மாமல்லன் சேகரித்து வரும் தொகை ஒன்றரை லட்சத்தை தாண்டி விட்டது என அறிகிறேன். இன்னும் தொகை குவிந்த வண்ணமே உள்ளதாம், இது அனைத்தும் இனி பெண்கள் மீது நிகழவிருக்கும் வன்முறைகளை நியாயப்படுத்துவதாக, அவற்றுக்கு பலம் சேர்ப்பதாகவே இறுதியில் அமைய போகிறது. //
உணமையில் நடந்தது என்ன. 
திரட்டப்பட்ட 2.43 லட்சத்தில் ஒரு பைசா குறையாமல் அப்படியே அந்த ஓலா ஓட்டுநருக்குக் கொடுக்கப்பட்டதும் அதை முன்பணமாகச் செலுத்தி அவர் கார் வாங்கியதும்தானே உண்மையில் நடந்தது. 
//கார் ஓட்டுநர் மீதான கருணை என்கிற பெயரில், ஒட்டுமொத்த பெண் சமூகத்திற்கு எதிராக அவர்கள் நபர்களையும், நிதியையும் வெளிப்படையாக திரட்டி கொண்டிருக்கிறார்கள்.// 
ஆனால், இந்திய இறையாண்மையைத் தூக்கியெறி போலீசைக் கொல் என போதிக்கும் இந்த நக்ஸலைட் போராளி குறி சொன்னதைப் போல் பெண் வெறுப்புக்கு இந்தப் பணம் எவ்விதத்தில் பயன்பட்டது. மனசாட்சி என்று ஒன்று இருந்தால், நம் மீது கொட்டிய இந்த அவதூறுக்காக மன்னிப்புக் கேட்க வேண்டியது இவர்களல்லவா.
//இந்த அற்பர்களுக்கு எதிராக கடுமையான கண்டனங்களை உரிய நேரத்தில் பதிவு செய்யாமல் கடந்து சென்றால், நாளை நான், மறுநாள் நீங்கள், அதற்கு அடுத்த நாள் உங்கள் தோழி என வரிசையாக இந்த கழிசடைகளின் தாக்குதலுக்கு உள்ளாக போவது மட்டும் நிச்சயம்.// 
ஒரு போலியை அம்பலப்படுத்தியதைத் தவிர என்ன தாக்குதல் எந்தப் பெண்கள் மீது நடந்தது விரல்விடுங்கள் பார்ப்போம். 
தொழிலாளி ஒருவனின் உழைப்பைப் பெற்றுக்கொண்டு அவனுக்குக் கூலியைக் கொடுக்காமல் ஏமாற்றுவதுதான் நீங்கள் கற்ற மார்க்ஸீயமா. ஏமாற்றியது போதாதென்று அவன் மீது பொய் வழக்கு தொடுத்து 16 நாட்கள் சிறைக்கு அனுப்பி வைத்ததை ஆதரித்து நீங்கள்தான் உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்று வாய் கிழியக் கூவுகிறவர்கள் இல்லையா. வெட்கக் கேடு.
பெண் வெறுப்பு எங்களுக்கில்லை. உங்களுக்கு இருப்பது ஆண் வெறுப்பு. அதுதான் உண்மையைப் பார்க்க விடாமல் உங்கள் பார்வையை மறைக்கிறது. 
அடுத்து வரும் அம்மையப்பர் நிலவுமொழி செந்தாமறை சொல்கிறார். 
//ஆனால், விலாசினியோடது சாதரண ஒரு போஸ்ட்.// 
சவாரிக் கூலியைக் கொடு என்று கேட்ட சம்பவத்தை, அந்த டிரைவர் எதோ கத்தியால் குத்த வந்ததைப் போல ஜோடித்துப் போட்ட சந்திரமுகி போஸ்டு இவர்களுக்கு சாதாரண போஸ்ட்.
//அவர்க்கு நேர்ந்த ஒரு சின்ன தடங்கல் பற்றிய போஸ்ட்.// 
அந்த சின்ன தடங்கலை ஊதி பூதாகாரமாக்கிப் போட்டதால்தானே உங்களைப் போன்றே எந்த அறமுமற்ற இன்னொரு பெண்மணியான நிருபர் பூர்வஜா அதை இந்து நாளேட்டில், மாற்றுத் தரப்பு என்ன என்று விசாரிக்க வேண்டும் என்கிற குறைந்தபட்ச பத்திரிகைக் தர்மம்கூட இல்லாது அப்படியே ஆங்கிலத்தில் வாந்தியெடுத்து வைத்தார். அதுதானே, அந்த ரிப்போர்ட் கொடுத்த அழுத்தம்தானே அந்த டிரைவர் கைது செய்யப்படவே காரணமாக அமைந்தது. அதைப் பற்றியக் குற்ற உணர்ச்சி, மேட்டுக்குடி வாசியான அந்தப் பெண்மனிக்குதான் இல்லை என்றால் பிறவிப் போராளிகளாக ஒடுக்கப்பட்டவர்களின் ஆதரவுக்காக அன்ன ஆகாரமின்றி ஃபேஸ்புக்கில் அல்லும் பகலும் உழைத்துக் கொட்டிக்கொண்டிருக்கும் உங்களுக்குக் கூடவா இல்லை. அட ஒரு ஒப்புக்குக் கூட இல்லையே.
//அதுக்கு இந்த சோ கால்ட் முற்போக்கு அலப்பறைகள் எல்லோரும் ஒன்னுகூடி பணம் வசுலீப்பதுதான் கொடுமை. அதுவும் ஒன்றரை இலட்சத்துற்கு மேல். எவ்வளவு வன்மம் இருந்தால் இதனை செய்யமுடிகிறது இவர்களால் ??// 
உன்மையிலேயே கூலி கேட்ட பாவத்துக்கு ஜெயிலுக்கு அனுப்பப்பட்ட தொழிலாளிக்கு நாங்கள் உதவியது வன்மம் என்றால், நீங்கள் இரக்கமற்ற காய்ந்துபோன ஆப் பாயில்கள் என்பதைத் தவிர இதற்கு வேறென்ன பதில் இருக்கிறது. 
உண்மையில் நடந்தது என்ன என்று இப்போதாவது கேட்டுப் புரிந்து கொள்ளுங்கள், மனசாட்சி இல்லாத உங்களுக்குக் குறைந்தபட்சம் காதாவது இருக்கும் என்றால். 

Leave a Reply