1960ல் கன்னட – மராத்திய தாய் தந்தையருக்கு சென்னையில் பிறந்த விமலாதித்த மாமல்லன், தமது 21வது வயதில் கணையாழியில் வெளியான இலை சிறுகதை மற்றும் பெரியவர்கள் குறுநாவல் வழியே இலக்கிய உலகின் பரவலான கவனத்தை ஈர்த்தவர். 1994 முதல் 16 வருடங்கள் இலக்கிய உலகுடன் தொடர்பற்று இருந்தவர். 2010லிருந்து, விமர்சனம் படைப்பு என்று இணையத்தில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பவர். மூன்று கதைத் தொகுதிகளும் ஒரு முழு தொகுப்பும் வெளியாகி உள்ளன. சரக்கு மற்றும் சேவை வரி துறையில் கண்காணிப்பாளராகப் பணிபுரிகிறார்.

விமலாதித்த மாமல்லனின் கதைகள் ஆங்கிலம் இந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.